காஷ்மீர் மக்களின் 20 ஆண்டு கால கனவை நனவாக்கும் திட்டம்: குமரியில் இருந்து கடைக்கோடி வரை ரயிலில் பயணிக்கும் காலம் கனிந்தது  https://ift.tt/XBGcdk8

இமயமலையில் அமைந்துள்ள குன்றுகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள் ஆகியவற்றுக்கு மத்தியில் 272 கி.மீ. தொலைவுக்கான ரயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இவற்றில், மீதமுள்ள 17 கி.மீ. ரயில் பாதை அமைக்கும் பணி ஓரிரு மாதங்களில் நிறைவடைய உள்ளது. இதன்மூலம்,காஷ்மீர் மக்களுக்கு விரைவில் தடையின்றி நேரடி ரயில் சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பாதையில், செனாப் ரயில் பாலம் மிகப்பெரிய சாதனை மைல் கல்லாக அமைந்துள்ளது. நாட்டின் வடகோடியில் அமைந்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தில் உலகின் மிக உயர்ந்த பனிமலையான இமயமலை மட்டுமின்றி, சிறிய, பெரிய அளவிலான மலைகள், ஏற்ற, இறக்கத்துடன் கூடிய பள்ளத்தாக்குகள், ஆறுகள் குறுக்கும் நெடுக்குமாக செல்கின்றன. இதனால் இங்கு மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை செய்து தருவதே சவாலான காரியமாக உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD