மகா கும்பமேளாவில் 2,000 டிரோன்களில் வானில் வண்ண மயமான லேசர் கண்காட்சி https://ift.tt/fs8vQ1R
மகாகும்ப நகர்: உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் அடுத்த மாதம் ஜனவரி 13-ம் தேதி முதல் பிப்ரவரி 26-ம் தேதி வரை மகா கும்பமேளா நடைபெறுகிறது. இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகிறது.
கும்பமேளாவின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சியின் போது, சங்கம் முனைப் பகுதியில் இரவு நேரத்தில் ட்ரோன்கள் மூலம் லேசர் கண்காட்சிக்கு உத்தர பிரதேச சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி அபரஜிதா சிங் கூறியதாவது: மூன்று நதிகள் சங்கமிக்கும் சங்கம் முனைப் பகுதியில் இரவு நேரத்தில் வானில் ஒளிரும் ட்ரோன் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2,000-க்கும் மேற்பட்ட ஒளிரும் ட்ரோன்கள், கடலில் அமுதம் கடையும் ‘சமுத்ர மந்தன்’ நிகழ்ச்சியை வானில் நடத்தி காட்டும். இது தனிச்சிறப்பான அனுபவமாக இருக்கும். இவ்வாறு அபரஜிதா சிங் கூறினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக