சத்தீஸ்கரில் 30 நக்சலைட்கள் சரண்: மத்திய அமைச்சர் அமித் ஷா மகிழ்ச்சி https://ift.tt/yEFRamB
ஜக்தால்பூர்: சத்தீஸ்கர் மாநில காவல்துறையின் 25 ஆண்டுகால தன்னலமற்ற சேவை மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரித்து, நேற்று முன்தினம் ‘குடியரசுத் தலைவரின் காவல் வண்ண' விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. நக்சல்களுக்கு எதிரான காவல்துறையின் நடவடிக்கை, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அவர்கள் மேற்கொண்ட அயராத முயற்சிகளை அங்கீகரித்து இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜக்தால்புருக்குச் சென்று, சரணடைந்த 30 நக்சல்கள் மற்றும் அங்கு வசிக்கும் மக்களைச் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ‘‘வரும் 2026 மார்ச் மாதத்துக்குள் நக்சலைட்டுகளை மாநிலத்தில் இருந்து ஒழிக்க உறுதி பூண்டுள்ளோம். என் வாழ்வில் இன்று மிகவும் மகிழ்ச்சியான நாளாகும். சரணடைந்த உங்களை விட, உங்கள் குடும்பத்தாரை விட நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’’ என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக