பெரம்பூர் - வில்லிவாக்கம் இடையே 4-வது ரயில் முனையத்துக்கு ரயில்வே அமைச்சரிடம் திமுக எம்.பி கோரிக்கை https://ift.tt/log5hQV
புதுடெல்லி: பெரம்பூர் – வில்லிவாக்கம் இடையே சென்னையின் 4 ஆவது முனையம் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான கோரிக்கை மனுவை இன்று மத்திய ரயில்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் திமுக எம்பி இரா.கிரிராஜன் டெல்லியில் அளித்தார்.
இது குறித்து மாநிலங்களவை எம்பியான கிரிராஜன் மத்திய அமைச்சர் அஸ்வினிக்கு அளித்த மனுவின் விவரம் பின்வருமாறு: “சென்னை மாநகரத்தில் பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக ரயில் போக்குவரத்து அனைத்து தரப்பு மக்களுக்கும் அவசியமாக உள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிக்கணக்கான மக்கள் மருத்துவ தேவை, வியாபாரம், கல்வி, வணிகம், கோவில் தரிசனம், சுற்றுலா ஆகிய தேவைகளுக்காக வருகிறார்கள். இதனால் அதிக வழி தடங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளிருந்து ரயில்கள் இயக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக