திருமணம் நின்றது, வேலையும் பறிபோனது: சயீப் அலிகான் வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதானவர் கண்ணீர் https://ift.tt/0H9Tb32

மும்பை: கடந்த 15-ம் தேதி மும்​பை​யில் உள்ள நடிகர் சயீப் அலிகான் வீட்​டில் புகுந்த மர்ம நபர், அவரை கத்தி​யால் குத்​தி​விட்டு தப்பியோடி​விட்​டார். இது தொடர்பாக, சத்தீஸ்​கரை சேர்ந்த ஆகாஷ் கைலாஷ் கனோஜியா கடந்த 18-ம் தேதி சந்தேகத்​தின்​ பேரில் கைது செய்​யப்​பட்​டார். பிறகு அவர் விடுவிக்​கப்​பட்​டார்.

இதுகுறித்து ஆகாஷ் கைலாஷ் கனோஜியா கூறிய​தாவது: நான் மும்​பை​யின் கொலாபா பகுதியை சேர்ந்​தவன். எனக்கு திரு​மணம் நிச்​சயம் செய்​யப்பட்டு இருந்​தது. எனது வருங்கால மனைவியை நேரில் பார்க்க மும்​பை​யில் இருந்து சத்தீஸ்​கரின் பிலாஸ்​பூர் நகருக்கு ரயிலில் சென்று கொண்​டிருந்​தேன். துர்க் நிலை​யத்​தில் ரயில் நின்​ற​போது ரயில்வே பாது​காப்பு படை போலீ​ஸார் என்னை வலுக்​கட்​டாயமாக ராய்ப்​பூருக்கு அழைத்​துச் சென்​றனர்.

அங்கு மும்பை போலீ​ஸார் என்னிடம் விசாரணை நடத்​தினர். அப்போது அடித்து உதைத்து துன்​புறுத்​தினர். நடிகர் சயீப் அலிகானை கத்தி​யால் குத்​தி​யதாக குற்றம் சாட்​டினர். எனது விளக்​கத்தை போலீ​ஸார் ஏற்க​வில்லை. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 19-ம் தேதி வங்கதேசத்தை சேர்ந்த ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் என்பவர் கைது செய்​யப்​பட்​டார். அதன்​பிறகே என்னை விடு​வித்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD