மகா கும்பமேளாவில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் https://ift.tt/X4LKH8M
மகா கும்பமேளாவில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக மூத்த வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 1954-ம் ஆண்டு பிரயாக்ராஜ் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 800 பக்தர்கள் உயிரிழந்தனர். கடந்த 1986-ம் ஆண்டு ஹரித்வார் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 200 பேர் உயிரிழந்தனர். கடந்த 2003-ம் ஆண்டு நாசிக் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். தற்போது பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்து உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக