அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 116 இந்தியர்கள் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்: இது 2-வது பேட்ச் https://ift.tt/c9qi5lJ
அமிர்தசரஸ்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களில் இரண்டாவது கட்டமாக 116 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த விமானம் சனிக்கிழமை (பிப்.15) பின்னிரவு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தது.
அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமலும் சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தி வருகிறார் அந்த நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அந்த வகையில் கடந்த 5-ம் தேதி சி-17 என்ற ராணுவ விமானத்தில் நேற்று 104 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் கை மற்றும் கால்கள் விலங்கிட்ட நிலையில் அழைத்து வரப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக