நில மோசடி வழக்கில் சித்தராமையாவுக்கு எதிராக ஆதாரம் இல்லை: லோக் ஆயுக்தா போலீஸார் தகவல் https://ift.tt/0ix1bPT
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில மோசடி வழக்கில் லோக் ஆயுக்தா போலீஸார் 11 ஆயிரம் பக்க அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில் சித்தராமையாவுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்பதால், இவ்வழக்கை விசாரிக்க தேவையில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம் கடந்த 2016ம் ஆண்டு கையகப்படுத்தியது. இதற்கு மாற்றாக அவருக்கு மைசூருவின் பிரதான இடத்தில் 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது. கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட இடத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக