மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்: காவல் துறை, சிஆர்பிஎஃப் படையினருடன் ஆளுநர் அவசர ஆலோசனை https://ift.tt/zSTV6Wo
புதுடெல்லி: மணிப்பூரில் ஆளுநரின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடி அந்தஸ்து கோரும் மைதேயி சமுதாய மக்களுக்கு எதிராக குகி, நாகா உள்ளிட்ட பழங்குடியின மக்கள் போர்க்கொடி உயர்த்தினர். இதன்காரணமாக கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மைதேயி, குகி சமுதாயங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்து இதுவரை 250 பேர் உயிரிழந்துள்ளனர். 1,500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 32 பேரை காணவில்லை. 5,000-க்கும் மேற்பட்ட வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கோயில்கள், தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டன. சுமார் 65,000-க்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்தனர். இதில் பெரும்பாலானோர் நிவாரண முகாம்களிலேயே வசிக்கின்றனர். மாநிலம் முழுவதும் 11,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக