இடுகைகள்

மார்ச், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சத்தீஸ்கரில் ரூ.25 லட்சம் அறிவிக்கப்பட்ட பெண் மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை https://ift.tt/gpMibEH

படம்
தண்டேவாடா: சத்தீஸ்கரில் ரூ.25 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட பெண் மாவோயிஸ்ட் ஒருவர் என்கவுன்ட்டரில் பாதுகாப்பு படையால் கொல்லப்பட்டார். சத்தீஸ்கரில் தண்டேவாடா, பீஜப்பூர் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள கீடம் மற்றும் பைராம்கர் வனப் பகுதியில் மாவோயிஸ்ட்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் நேற்று காலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு படையினர் - மாவோயிஸ்ட்கள் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இந்த மோதல் முடிவுக்கு வந்த பிறகு பெண் மாவோயிஸ்ட் ஒருவரின் உடலை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். இவர் தெலங்கானா மாநிலத்தின் வாரங்கல் பகுதியை சேர்ந்த சரஸ்வதி மற்றும் சாய்தே என அழைக்கப்படும் ரேணுகா என அடையாளம் கண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒவ்வொரு மழை துளியையும் சேமிக்க வேண்டும்: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அழைப்பு https://ift.tt/lgRnEdw

படம்
ஒவ்வொரு மழை துளியையும் சேமியுங்கள் என்று மனதின் குரலில் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையான நேற்று 120-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பொதுத் தேர்வு, ஆண்டு இறுதித் தேர்வுகள் நிறைவடைந்து கோடை விடுமுறை காலம் தொடங்க இருக்கிறது. இந்த கோடை விடுமுறை நாட்களில் ஏதாவது ஆக்கப்பூர்வமானதை செய்ய வேண்டும். நம்முடைய திறன்களை மேலும் கூர்மைப்படுத்த வேண்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இடிபாடுகளுக்குள் பிணவாடை வீசுகிறது: மியான்மரில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம்

படம்
மியான்மரில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 1,700 ஆக அதிகரித்துள்ளது. கட்டிட இடிபாடுகளுக்குள் பிணவாடை வீசுவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிகிறது. மியான்மரில் கடந்த 28-ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கத்தால், மண்டாலே நகரில் பல கட்டிடங்கள் இடிந்தன. மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. கட்டிட இடிபாடுகளை அகற்றுவதற்கு அங்கு போதிய வசதிகள் இல்லை. இதனால் உள்ளூர் மக்கள் கைகளால் இடிபாடுகளை அகற்றி உள்ளே யாரும் சிக்கியுள்ளனரா என தேடி வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவுடனான வரி விதிப்பு பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கிறது: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தகவல்

படம்
வாஷிங்டன்: இந்தியாவுடனான வரி விதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கிறது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் கூறியதாவது: இந்திய பிரதமர் மோடி சமீபத்தில் இங்கு வந்திருந்தார். நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இது கொடுமையானது. அவர் (மோடி) புத்திசாலியான மனிதர், உண்மையில் எனது சிறந்த நண்பர். அவருடனான பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எல்விஎம்-3 ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் செமி கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை https://ift.tt/nABIwiT

படம்
பெங்களூரு: எல்விஎம்-3 ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் செமி கிரையோஜெனிக் இன்ஜினை, வெற்றிகரமாக பரிசோதித்து இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. எல்விஎம் 3 ராக்கெட்டில் தற்போது எல்110 என் திரவ எரிபொருள் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 4 டன்கள் எடையுள்ள செயற்கை கோள்களை புவியிசைவு சுற்றுவட்டபாதைக்கு கொண்டு செல்ல முடியும். 5 டன்கள் எடையுள்ள செயற்கை கோள்களை கொண்டு செல்லும் வகையில் எல்விஎம்-3 ராக்கெட்டில் செமி கிரையோஜெனிக் இன்ஜினை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எய்ம்ஸ் மருத்துவமனையில் தரமான சுகாதார சேவை: மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தகவல் https://ift.tt/OVGmPvL

படம்
எய்ம்ஸ் மருத்துவமனையில் தரமான சுகாதாரச் சேவை வழங்குவதில் எந்த சமரசத்தையும் மத்திய அரசு செய்துகொள்ளாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார். மக்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கலந்துகொண்டு பேசும்போது கூறியதாவது: மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (ஏபி-பிஎம்ஜேஏஒய்) திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறும் மக்களின் எண்ணிக்கை 62 கோடியாக உள்ளது. மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அதிகப்படியான மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். இருந்தபோதிலும், எய்ம்ஸ் மருத்துவமனையில் தரமான சுகாதாரச் சேவை வழங்குவதில் எந்த சமரசத்தையும் மருத்துவமனைகள் செய்து கொள்வதில்லை. உலகத் தரத்தில் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மியான்மர் பூகம்பம், பாங்காங் நிலநடுக்க உயிரிழப்பு 144 ஆக அதிகரிப்பு; காயம் 730+

படம்
மியான்மர், தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தில் இதுவரை 144 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 730+ பேர் காயமடைந்துள்ளனர். மியான்மர் நாட்டில் இன்று மதியம் 11.50 மணிக்கு ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகின. இந்த பூகம்ப பாதிப்புகள் அண்டை நாடான தாய்லாந்திலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.பி.யில் 4 குழந்தைகளைக் கொன்று தந்தை தற்கொலை https://ift.tt/Ziz2C0g

படம்
4 குழந்தைகளைக் கொன்று தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டம் ரோஸா போலீஸ் சரகத்துக்குட்பட்ட மான்பூர் சச்சாரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜீவ் குமார் (36). இவருக்கு ஸ்மிருதி (12), கீர்த்தி (9), பிரகதி (7) ஆகிய 3 மகள்களும், ரிஷப் (5) என்ற மகனும் இருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.10 லட்சம் கோடி செலவில் 25,000 கி.மீ நெடுஞ்சாலைகள் நான்கு வழி சாலைகளாக மாற்றம் https://ift.tt/ZzOqxur

படம்
சாலை விபத்துக்களை குறைக்க ரூ.10 லட்சம் கோடி செலவில் 23,000 கி.மீ நீளமுள்ள இருவழி நெடுஞ்சாலைகள் 4 வழிச் சாலைகளாக அகலப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். மக்களவை கேள்வி நேரத்தின் போது மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதிகட்கரி கூறியதாவது: இருவழி நெடுஞ்சாலைகள் ரூ.10 லட்சம் கோடி செலவில் 25,000 கி.மீ தூரத்துக்கு நான்கு வழிச் சாலைகளாக அகலப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்டங்கள் தயாராகி வருகின்றன. இத்திட்டங்களுக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இப்பணிகள் 2 ஆண்டுகளில் முடிக்கப்படும். இப்பணிகள் முடிவடைந்ததும், விபத்துக்கள் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடக ஹனி டிராப் விவகாரத்தை விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/aPHswdi

படம்
பெங்களூரு /புதுடெல்லி: கர்​நாட​கா​வில் எம்​எல்​ஏ.க்​களை குறி வைத்து ஹனி டிராப் செய்​வ‌​தாக எழுந்த புகாரை விசா​ரிக்க உச்ச நீதி​மன்​றம் மறுத்​து​விட்​டது. கர்​நாடக சட்​டப்​பேர​வை​யில் கடந்த 21-ம் தேதி கூட்​டுறவுத் துறை அமைச்​சர் கே.என்​.​ராஜண்ணா பேசுகை​யில், ‘‘48 எம்​எல்​ஏ.க்​களை அரசி​யல் ரீதி​யாக ப‌ழி வாங்க பெண்​களை வைத்து பாலியல் புகாரில் சிக்க வைக்க சிலர் முயற்​சிக்​கின்​றனர். என்​னை​யும் ஹனி டிராப்​பில் சிக்க வைக்க‌ சதி செய்​த‌னர்” என குற்​றம் சாட்​டி​னார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்ப்பிணிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு: மாநிலங்களவையில் சோனியா கேள்வி https://ift.tt/N1CgbcX

படம்
மத்திய அரசின் கர்ப்பிணிகள் நிதியுதவி திட்டத்துகாகன நிதி ஒதுக்கீட்டை குறைத்தது ஏன் என மாநிலங்களவையில் சோனியா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி நேற்று பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் கொடுமை; உ.பி முதலிடம் - மக்களவையில் மத்திய இணை அமைச்சர் தகவல் https://ift.tt/4RkXVbu

படம்
புதுடெல்லி: இந்தியாவின் மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் கொடுமை உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிகமாக உள்ளது. இந்த தகவலை நாடாளுமன்றத்தில் மத்திய மருத்துவ நலத்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் இதன் மீதான ஒரு கேள்விக்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சரும் உ.பியை சேர்ந்தவருமான அனுப்பிரியா பட்டேல் கூறியதாவது: 2024 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 33 புகார்கள் பதிவாகியுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரம்: விசாரணை குழு ஆய்வு தொடக்கம் https://ift.tt/a10i7db

படம்
எரிந்த நிலையில் பண மூட்டைகள் சிக்கிய விவகாரம் தொடர்பாக, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் உள் விசாரணைக்குழு நேற்று ஆய்வை தொடங்கியது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இவரது அரசு இல்லத்தில் உள்ள பொருட்கள் வைக்கும் அறையில் கடந்த 14-ம் தேதி இரவு தீப்பிடித்தது. அங்கு எரிந்த நிலையில் பண மூட்டைகள் சிக்கிய விஷயம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கொலீஜியத்தில் ஆலோசனை நடத்தி, யஷ்வந்த் வர்மாவை, அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உபாத்யாய், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அறிக்கை தாக்கல் செய்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வெனிசுலாவில் இருந்து எண்ணெய், எரிவாயு இறக்குமதி செய்தால் 25% வரி: அமெரிக்காவின் அறிவிப்பால் இந்தியாவுக்கு பாதிப்பு?

படம்
வெனிசுலாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த ஜனவரியில் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அப்போது முதல், பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு புதிய வரி விதிப்புகளை விதித்து வருகிறார் ட்ரம்ப். இந்நிலையில் வெனிசுலா மீது அமெரிக்கா 2-வது தவணையாக கூடுதல் வரி விதிப்பை அமெரிக்கா அறிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“காஷ்மீரில் இருந்து பிரிவினைவாதம் தூக்கி வீசப்பட்டுள்ளது; பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றி” - அமித் ஷா பெருமிதம் https://ift.tt/PnTrYoq

படம்
புதுடெல்லி: அனைத்து கட்சி ஹுரி​யத் மாநாடு கூட்​ட​ணி​யில் இருந்து 2 அமைப்​பு​கள் விலகி உள்​ளன. இது, பிரதமர் நரேந்​திர மோடிக்கு கிடைத்த மிகப்​பெரிய வெற்றி என்று மத்​திய அமைச்​சர் அமித் ஷா தெரி​வித்​துள்​ளார். ஜம்மு காஷ்மீரில் கடந்த 1993-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி, ‘அனைத்து கட்சி ஹுரி​யத் மாநாடு’ என்ற கூட்​டணி உரு​வாக்​கப்​பட்​டது. இதில் பல்​வேறு அரசியல் கட்​சிகள், மத அமைப்​பு​கள், பிரி​வினை​வாத அமைப்​பு​கள் இணைந்​தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்க தூதரகங்களில் 41% மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிப்பு

படம்
உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் கடந்த ஆண்டு 41 சதவீத மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. கடந்த 2024-ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி அமெரிக்காவில் சுமார் 11 லட்சம் வெளிநாட்டு மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். மிக அதிகபட்சமாக 3.31 லட்சம் இந்திய மாணவர்கள் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் கல்வி பயில்கின்றனர். இதற்கு அடுத்து 2.77 லட்சம் சீன மாணவர்கள். 43,149 தென்கொரிய மாணவர்கள் அமெரிக்காவில் பயில்கின்றனர். கனடா, வியட்நாம், தைவான், சவுதி அரேபியா, பிரேசில், மெக்ஸிகோ நாடுகளை சேர்ந்த மாணவ, மாணவியரும் அமெரிக்காவில் கணிசமாக உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்களவை தேர்தலுக்கு பிறகு 6 கட்சிகளின் கையிருப்பு ரூ.4,300 கோடி அதிகரிப்பு https://ift.tt/wobj5mk

படம்
கடந்த 2024 மக்களவை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் திரட்டிய பணத்தை முழுமையாக செலவிடவில்லை. இதனால் பாஜக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட 6 கட்சிகளின் இருப்பு நிதி தேர்தலின் தொடக்கத்தில் இருந்ததை விட தேர்தலின் முடிவில் ரூ.4,300 அதிகரித்துள்ளது. கடந்த 2024 மக்களவைத் தேர்தலுக்கான செலவு அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்துள்ளன. இந்த அறிக்கைகளை காமன்வெல்த் மனித உரிமைகளுக்கான நடவடிக்கை (சிஎப்ஆர்ஐ) என்ற தன்னார்வ அமைப்பு பகுப்பாய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்திய பண்பாட்டுக்கு எதிரானவர்கள் அடையாள சின்னங்களாக்கப்பட்டனர்: ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் https://ift.tt/MfhV5Zt

படம்
நாட்டின் பண்பாட்டுக்கு எதிராக செயல்பட்டவர்கள் எல்லாம் அடையாள சின்னங்களாக மாற்றப்பட்டனர் என அவுரங்கசீப் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அகில பாரதிய பிரதிநிதிசபா கூட்டம் பெங்களூருவில் முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில் பேட்டியளித்த ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரள பாஜக தலைவராகிறார் ராஜீவ் சந்திரசேகர்  https://ift.tt/jvXYPeE

படம்
திருவனந்தபுரம்: கேரள பாஜக தலைவராக இருக்கும் சுரேந்திரனின் பதவிக் காலம் முடிவடைகிறது. அவர் இந்த பதவியை தொடர விரும் பவில்லை என கட்சி மேலிடத் திடம் தெரிவித்துவிட்டார். இதையடுத்து மாநில தலை வர் பதவிக்கு தேர்தல் நடத் தப்படுகிறது. இதில் போட்டி யிட முன்னாள் மத்திய அமைச் சர் ராஜீவ் சந்திர சேகர் நேற்று மனுத்தாக்கல் செய்தார். வேறு யாரும் இப்பதவிக்கு போட்டியிட வில்லை. அதனால் அவர் கேரள பாஜக தலைவராக தேர்வு செய் யப்படும் முறையான அறிவிப்பு பாஜக மாநில கவுன்சில் கூட்டத் தில் இன்று அறிவிக்கப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கணவரை கொலை செய்தது குறித்து உ.பி. பெண் திடுக்கிடும் வாக்குமூலம் https://ift.tt/lBMUFIp

படம்
மீரட்: உத்தர பிரதேசத்தின் மீரட் பகுதியை சேர்ந்தவர் சவுரப் ராஜ்புத். அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் மஸ்கன் ரஸ்தோகி. இருவரும் பள்ளி பருவம் முதல் ஒன்றாக படித்து வந்துள்ளனர். 13 வயது முதலே இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 12-ம் வகுப்புக்கு பிறகு சரக்கு கப்பல் சார்ந்த படிப்பை நிறைவு செய்த சவுரப், லண்டனை சேர்ந்த பிரபல சரக்கு கப்பல் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். இதன்பிறகு சவுரப் ராஜ்புத்தும் மஸ்கன் ரஸ்தோகியும் செல்போன் மூலம் காதலை வளர்த்து வந்தனர். கடந்த 2016-ம் ஆண்டில் லண்டனில் இருந்து மீரட் திரும்பிய சவுரப் திடீரென காணாமல் போனார். அவரும் மஸ்கன் ரஸ்தோகியும் ரகசிய இடத்தில் வாழ்ந்தனர். மூன்று மாதங்களுக்கு பிறகு மீரட் போலீஸார் இருவரையும் கண்டுபிடித்தனர். இதேபோல அடுத்தடுத்து 2 முறை சவுரபும், மஸ்கனும் காணாமல் போயினர். கடந்த 2016-ம் ஆண்டு இறுதியில் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘எனது பணத்தை கொடுப்பேன்’ - சுனிதா வில்லியம்ஸுக்கு கூடுதல் சம்பளம் குறித்து ட்ரம்ப்

படம்
வாஷிங்டன்: 9 மாத கால காத்திருப்புக்கு பின்னர் அண்மையில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பினார் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். அவரது 8 நாள் பயணம் 9 மாத கால பயணமாக மாறிய நிலையில் அவருக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதில் அளித்துள்ளார். “யாரும் என்னிடம் அது குறித்து எதுவும் சொல்லவில்லை. அப்படி இருந்தால் எனது சொந்த பணத்தை கொடுக்க தயார்” என ட்ரம்ப் தெரிவித்தார். பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு ட்ரம்ப் இப்படி பதில் அளித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன் டன்னை தாண்டியது: பிரதமர் மோடி பெருமிதம் https://ift.tt/WL7QrUg

படம்
நாட்டின் நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன் டன்னைத் தாண்டி சாதனை படைத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: நாட்டின் நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன் டன்னை தாண்டியுள்ளது. இது இந்தியாவுக்கு மிகவும் பெருமைமிகு தருணம். இந்த குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனை எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா உறுதியுடன் இருப்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. மேலும், பொருளாதார வளர்ச்சி மற்றும் சொந்த வளங்களின் மூலம் தன்னிறைவு அடைவதற்கு மத்திய அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு இது ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. இந்த துறையுடன் தொடர்புடைய அனைவரின் அர்ப்பணிப்பையும், கடின உழைப்பையும் இந்த சாதனை பிரதிபலிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 118-வது இடத்தில் இந்தியா https://ift.tt/hOxj5Kc

படம்
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா 118-வது இடத்தில் உள்ளது. பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஐ.நா. சபை, அமெரிக்காவின் முன்னணி கருத்து கணிப்பு நிறுவனமான கேலப் ஆகியவை இணைந்து உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாங்கம்” - யோகி ஆதித்யநாத் அரசு மீது உ.பி. பாஜக எம்எல்ஏ குற்றச்சாட்டு https://ift.tt/HFypv7J

படம்
உத்தர பிரதேச அரசுதான் நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாங்கம் என லோனி தொகுதி பாஜக எம்எல்ஏ-வான நந்தகிஷோர் குர்ஜார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய குர்ஜார், “உத்தர பிரதேசத்தின் தலைமைச் செயலாளர்தான் நாட்டிலேயே ஊழல் மிகுந்த அதிகாரி. அவர் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் மூளையை வசியப்படுத்தி வைத்திருக்கிறார். அயோத்தி நிலத்தை உ.பி. அதிகாரிகள் சுரண்டுகின்றனர். மாநிலத்தில் அதிகமான பசுக்கள் கொல்லப்படுகின்றன. போலி என்கவுன்ட்டர்களில் பொதுமக்கள் கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அதிகாரிகள் தவறான தகவல்களின் மூலம் திசை திருப்புகின்றனர்” என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

போதைப் பொருள் கடத்தல் குற்றத்துக்காக கனடாவைச் சேர்ந்த 4 பேருக்கு சீனாவில் மரண தண்டனை

படம்
நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களில் போதைப் பொருள் கடத்தல் குற்றத்துக்காக கனடாவைச் சேர்ந்த 4 பேருக்கு சீனா மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. இதுகுறித்து கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் மெலனி ஜோலி கூறுகையில், “ கனடாவைச் சேர்ந்த 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது கடும் கண்டனத்துக்கு உரியது. இந்த விவகாரத்தில் நான் ஏற்கெனவே தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோரினேன். ஆனால், அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் சீனா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட 4 பேரும் இரட்டை குடியுரிமை வைத்திருப்பவர்கள். வெளிநாட்டில் மரணை தண்டனையை எதிர்கொள்ளும் கனடியர்களுக்கு கனடா தொடர்ந்து கருணையை கோரி வருகிறது. நான்கு நபர்களின் அடையாள விவரங்களை மறைக்குமாறு அவர்களது குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்" என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

25 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ள ஐக்கிய அரபு அமீரகம் https://ift.tt/gqFe1Xc

படம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் 25 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும் தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்திவர்தன் சிங் நேற்று எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாக்பூர் கலவரத்தை தூண்டியதாக சிறுபான்மை ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர் கைது https://ift.tt/0NOGy9r

படம்
மும்பை: மகாராஷ்டிராவில் நாக்பூர் கலவரத்தை தூண்டியதாக கூறி சிறுபான்மை ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முக்கிய நபரை போலீஸார் நேற்று கைது செய்தனர். இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், “ நாக்பூரில் கலவரம் ஏற்பட காரணமாக இருந்த சிறுபான்மை ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பகீம் கான் என்பவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். உள்ளூர் அரசியல்வாதியான இவரை வெள்ளிக்கிழமை வரை காவலில் வைத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடகாவில் அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினருக்கு 4% இடஒதுக்கீடு மசோதா தாக்கல் https://ift.tt/hTSGjEz

படம்
கர்நாடகாவில் அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் திருத்த மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் மத சிறுபான்மையினருக்கு 2பி பிரிவில் ரூ.2 கோடி வரையிலான ஒப்பந்த பணிகளில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு பாஜக ஏற்கெனவே கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தானில் மோசடி கால் சென்ட்டரில் புகுந்து கம்ப்யூட்டர், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்த மக்கள்

படம்
பாகிஸ்தானில் போலீஸார் ரெய்டு நடத்திய மோசடி கால் சென்ட்டரில் இருந்த கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் பர்னிச்சர்களை பொது மக்கள் கொள்ளையடித்துச் சென்றனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் சீனாவைச் சேர்ந்த சிலர் கால் சென்ட்டர் நடத்தினர். இதில் வெளிநாடு மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த நபர்கள் பணியாற்றினர். இந்த கால் சென்ட்டர், உலக முழுவதும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது. இது குறித்து பாகிஸ்தான் அரசுக்கு புகார் அளிக்கப்பட்டதும், அந்த கால் சென்ட்ரில் போலீஸார் சோதனை நடத்தினர். மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, அங்கு பணியாற்றிய 24 ஊழியர்களை கைது செய்தனர். சிலர் தப்பிச் சென்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

9 மாதங்களுக்குப் பிறகு பாதுகாப்பாக பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!

படம்
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் உள்ளிட்டோர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு திரும்பினர். இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 3.27 மணிக்கு புளோரிடா கடலில் டிராகன் ஸ்பிளாஷ் டவுன் ஆனது. சுனிதா மற்றும் வில்மோருடன் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் இருவரும் டிராகன் விண்கலம் மூலம் பூமி திரும்பினர். உலகம் முழுவதும் உள்ள மக்கள் பலரும் இவர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்த வண்ணம் இருந்தனர். ஸ்பிளாஷ் டவுன் ஆகும் காட்சியை நாசா, ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனங்கள் நேரடி ஒளிபரப்பு செய்து வந்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அவுரங்கசீப் சமாதியை இடித்தால் ரூ.21 லட்சம் வெகுமதி: ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி தலைவர் அறிவிப்பு https://ift.tt/Tr6i8E1

படம்
மகாராஷ்டிராவில் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள முகலாய பேரரசர் அவுரங்கசீப்பின் சமாதியை இடித்து அகற்றுபவர்களுக்கு ரூ.21 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி சங்கர்ஷ் நியாஸ் அமைப்பின் தலைவர் தினேஷ் பல்ஹரி அறிவித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னர் அவரங்கசீப் சமாதியை அகற்ற வலியுறுத்தி விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு நேற்றுமுன்தினம் அழைப்பு விடுத்திருந்தன. இதில் வன்முறை வெடித்தது. இருப்பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் வீடு, வாகனங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டன. ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதற்றமான சூழல் நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India &...

உக்ரைன் போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை தவிர்க்க அதிபர் புதினிடம் வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி

படம்
உக்ரைன் போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார் என போலந்து அமைச்சர் தெரிவித்துள்ளார். போலந்து நாட்டின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் விலாடிஸ்லா டோபில் பார்டோஸெவ்ஸ்கி தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“கடினமான காலங்களில் பகவத் கீதையே என்னை வழிநடத்துகிறது” - அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் https://ift.tt/1cS9uKi

படம்
அமெரிக்க உளவுத் துறை தலை​வர் துளசி கப்​பார்ட் 3 நாட்​கள் பயண​மாக நேற்று முன்​தினம் இரவு டெல்லி வந்​தார். தனியார் தொலைக்காட்சி சேனல் மற்றும் தனியார் செய்தி நிறுவனத்துக்கு துளசி கப்பார்ட் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: வங்கதேசத்தில் அடிப்படைவாத தீவிரவாதம் தலைதூக்குவது கவலை அளிக்கிறது. குறிப்பிட்ட மதத்தை முன்னிறுத்தி செல்படும் தீவிரவாதிகள், பிற மதங்களை சேர்ந்தவர்களை கொடூரமாக கொலை செய்கின்றனர். இதுபோன்ற அடிப்படைவாத தீவிரவாதம் வேரறுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதிபட தெரிவித்திருக்கிறார். நான் சிறு வயது முதலே பகவத் கீதையை படித்து வருகிறேன். எனது கடினமான காலங்களில் பகவத் கீதையே என்னை வழிநடத்துகிறது. இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் போர் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் வழங்கிய உபதேசங்களை நினைவுகூர்கிறேன். கிருஷ்ணரின் உபதேசங்களைபின்பற்றினால் மோசமான சூழலையும், சாதகமான சூழலாக மாற்ற முடியும். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பரஸ்பர வரி விதிப்பு நடைமுறையை அமல்படுத்தி உள்ளார். இதுகுறித்து அமெரிக்காவும் இந்தியாவும் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதி...

‘ட்ரூத்’ சமூக வலைதளத்தில் இணைந்த பிரதமர் மோடி: ட்ரம்ப்புக்கு நன்றி சொன்னார்! https://ift.tt/GW8sSzp

படம்
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ‘ட்ரூத்’ சமூக வலைதளத்தில் திங்கள்கிழமை (மார்ச் 17) அன்று இணைந்தார். தனது ட்ரூத் பதிவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி சொல்லி உள்ளார். அமெரிக்காவை சேர்ந்த லெக்ஸ் பிரிட்மேன், கடந்த 2018-ம் ஆண்டு முதல் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களை நேர்காணல் செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி உடனான அவரது நேர்காணல் அண்மையில் சமூக வலைதளத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஏமனில் அத்துமீறும் ஹவுதி தீவிரவாதிகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 31 பேர் உயிரிழப்பு

படம்
ஏமனில் ஹவுதி தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அமெரிக்க கடற்படை நேற்று நடத்திய வான் வழி தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர். செங்கடலில் அத்துமீறினால் குண்டு மழை பொழியும் என ஏமன் மற்றும் ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செங்கடல், சூயஸ் கால்வாய், ஏடன் வளைகுடா ஆகியவை வழியாக செல்லும் வர்த்தக கப்பல்கள், இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்கள் ஆகியவற்றின் மீது ஏமனில் உள்ள ஹவுதி தீவிரவாதிகள் கடந்த 2 ஆண்டுகளாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தி வந்தனர். இதனால் வணிக கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதித்தது. 4 மாதங்களுக்கு முன்பாக செங்கடல் வழியாக சென்ற அமெரிக்க போர்க்கப்பல் மீதும் ஹவுதி தீவிரவாதிகள் பலமுறை தாக்குதல் நடத்தினர். இதனால் கடந்த ஓராண்டாக அமெரிக்க வணிக கப்பல்கள் உட்பட பல நாட்டு கப்பல்கள் செங்கடல், ஏமன் வளைகுடா வழியாக செல்வதில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாணவர்கள் முன் 50 தோப்புக்கரணம் போட்டு நன்றாக படிக்க மன்றாடிய தலைமை ஆசிரியர் https://ift.tt/lbp84GM

படம்
விஜயநகரம்: ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், பொப்புலி அருகே உள்ள பெண்ட கிராமத்தில் ஜில்லா பரிஷத் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 150 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். என்றாலும் இவர்களில் பலர் முறையாக பள்ளிக்கு வருவதில்லை, சரிவர படிப்பதில்லை என கூறப்படுகிறது. 2 நாட்களுக்கு முன்பு அனைத்து மாணவ, மாணவியரையும் வழக்கம்போல் பள்ளி மேடைக்கு முன் தலைமை ஆசிரியர் ரமணா வரச்சொன்னார். பிறகு மாணவர்கள் முன் தரையில் விழுந்து வணங்கியதுடன் 50 தோப்புக்கரணமும் போட்டார். பிறகு, "இனியாவது உங்களுக்காக நீங்கள் படியுங்கள். வாழ்க்கையில் முன்னேறுங்கள்" என வருத்தத்துடன் கூறிவிட்டு தனது அறைக்குச் சென்று விட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வாக்காளர் பிரச்சினை குறித்து ஏப்.30-க்குள் ஆலோசனை கூறலாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு https://ift.tt/aZ6Kinm

படம்
வாக்காளர் பிரச்சினை குறித்த ஆலோசனைகளை அரசியல் கட்சிகள் வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும் ஒன்றாக இருந்தது தெரியவந்தது. இதை சுட்டிக்காட்டிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, போலி வாக்காளர்கள் உள்ளதாக குற்றம்சாட்டினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பச்சையா? காவியா? ஜாமியா மசூதிக்கு எந்த வண்ணம் பூசுவது? - உ.பி. சம்பல் பகுதியில் புதிய மோதல் https://ift.tt/Lc8fa6A

படம்
உத்தர பிரதேசம் சம்பல்வாசிகள் இடையே ஜாமியா மசூதிக்கு எந்த வண்ணம் பூசுவது என்பதில் புதிய மோதல் துவங்கி உள்ளது. இதில், முஸ்லிம் தரப்பு பச்சை நிறமும், இந்து தரப்பு காவி நிறமும், அரசு நிர்வாகம் வெள்ளை நிறமும் பூச வலியுறுத்தி வருகின்றனர். உ.பி.யின் சம்பலில் 1526-ல் ஷாயி ஜாமியா மசூதி கட்டி முடிக்கப்பட்டது. முகலாய மன்னர் பாபர் ஆட்சியில் கட்டப்பட்ட வட இந்தியாவின் முதல் மசூதியாக இது கருதப்படுகிறது. இதை அங்கிருந்த ஸ்ரீஹரி எனும் சிவன் கோயிலை இடித்துவிட்டு கட்டியதாக சர்ச்சை எழுந்தது. இதன் மீதான சம்பல் மாவட்ட நீதிமன்ற வழக்கில் மசூதியில் கள ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது. இந்தக் கள ஆய்வு நடைபெற்ற நவம்பர் 24-ல் கலவரம் ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கள ஆய்வுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆயுஷ்மான் பாரத் திட்ட காப்பீட்டை ரூ.10 லட்சமாக உயர்த்த பரிந்துரை https://ift.tt/Vb8HedK

படம்
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கான மருத்துவக் காப்பீட்டை ரூ.10 லட்சமாக உயர்த்த சுகாதாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாட்டில் மிகவும் ஏழ்மையான 40% குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் மருத்துவக் காப்பீட்டு அளிக்கப்படுகிறது. இத்திட்டம் கடந்த ஆண்டு, பொருளாதார நிலையை கணக்கில் கொள்ளாமல் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது இந்த வயதை 60 ஆக குறைக்க சுகாதாரத்துக்கான நாடாளுன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகா கும்பமேளாவில் ரூ.30 கோடி சம்பாதித்த படகோட்டிக்கு ரூ.13 கோடி வரி கட்ட வருமான வரித் துறை நோட்டீஸ் https://ift.tt/wP7CgaW

படம்
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற மகா கும்பமேளாவில் ரூ.30 கோடி சம்பாதித்த படகோட்டி குடும்பத்துக்கு ரூ.13 கோடி வரி செலுத்த கோரி வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிவேணி சங்கமத்தை ஒட்டியுள்ள அரயில் கிராமத்தைச் சேர்ந்தவர் பிண்ட்டு மெஹ்ரா. படகோட்டும் தொழில் செய்து வருகிறார். கடந்த ஜனவரி 13-ல் துவங்கி 45 நாட்கள் மகா கும்பமேளா விழா நடைபெற்றது. இதில், உள்நாடு மற்றும் வெளிநாட்டிலிருந்து 60 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹோலி பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து https://ift.tt/AURTVyj

படம்
ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஹோலி பண்டிகை நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது. இதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் தாமதம்

படம்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மீண்டும் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் போயிங் நிறுவனம், அந்த நாட்டின் விண்வெளி அமைப்பான நாசா இணைந்து போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலத்தை உருவாக்கியது. இந்த புதிய விண்கலத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகாராஷ்டிரா தாய்ப்பால் வங்கியால் 3,800 பச்சிளம் குழந்தைகளுக்கு பலன் https://ift.tt/bzPj1Bh

படம்
மகாராஷ்டிர மாநிலம் அகோலா நகரில் உள்ள தாய்ப்பால் வங்கியால் இதுவரை 3,800 பச்சிளம் குழந்தைகள் பயன் அடைந்து உள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறும்போது, “ அகோலா நகரில் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டது. மாவட்ட பெண்கள் மருத்துவமனையில் அமைக்கப்பட்ட இந்த தாய்ப்பால் வங்கியின் மூலம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 3,816 பச்சிளம் குழந்தைகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மியான்மரிலிருந்து மீட்கப்பட்ட மேலும் 266 இந்தியர்கள் தாயகம் திரும்பினர் https://ift.tt/zhE67TR

படம்
புதுடெல்லி: மியான்மரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த ஆன்லைன் மோசடி மையங்களில் பணிபுரிந்த மேலும் 266 இந்தியர்கள் மீட்கப்பட்டு விமானம் மூலம் தாயகம் திரும்பினர். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விளையாட்டு மற்றும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு தென்கிழக்கு ஆசியாவில் அதிக அளவில் ஆன்லைன் மோசடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனை நடத்துவது பெரும்பாலானோர் சீன நாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எஸ்சி, எஸ்டி, ஓபிசி கல்வி உதவித் தொகைக்கான வருமான உச்சவரம்பை உயர்த்த கனிமொழி எம்.பி கோரிக்கை https://ift.tt/H43Ep5x

படம்
புதுடெல்லி: எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான வருமான உச்சரவரம்பை அதிகரிக்க கோரப்பட்டுள்ளது. மக்களவையில் கனிமொழி எம்.பி இதற்காக அவசர கோரிக்கை விடுத்தார். பொது அவசரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களை மக்களவையில் எழுப்ப விதி எண் 377 அனுமதிக்கிறது. இதன் அடிப்படையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி புதன்கிழமை ஒரு கோரிக்கை எழுப்பினார். எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களுக்கான இந்த கோரிக்கை மீது தூத்துக்குடி தொகுதி எம்.பியான கனிமொழி பேசியதாவது: பட்டியல் சமூகம், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புகளில் ஏற்றத் தாழ்வுகள் நிலவுகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்திய விவகாரம்: கேஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் அனுமதி https://ift.tt/c8pK9ja

படம்
புதுடெல்லி: டெல்லியில் விளம்பரப் பலகை வைக்க அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. டெல்லியில் 2019-ல் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியின்போது துவாரகா முழுவதும் பெரிய விளம்பர பலகைகள் வைக்கப்பட்டன. இதற்கு எதிராக டெல்லி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஆம் ஆத்மி முன்னாள் எம்எல்ஏ குலாப் சிங், துவாரகா கவுன்சிலர் நிதிகா சர்மா ஆகியோருடன் இணைந்து அரசு நிதியை அப்போதைய முதல்வர் கேஜ்ரிவால் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக புகாரில் கூறப்பட்டிருந்தது. எனினும் புகார் தொடர்பாக போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: 30 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டதாக தீவிரவாதிகள் அறிவிப்பு

படம்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் க்வெட்டாவில் இருந்து 400-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெஷாவர் நகர் நோக்கி சென்றுகொண்டிருந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை தீவிரவாதிகள் செவ்வாய்கிழமை கடத்தினர். இதற்கு பலூச் விடுதலை படை (Baloch Liberation Army-BLA) எனும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பலூச் விடுதலை படை வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் இதுவரை 30 பாதுகாப்புப் படை வீரர்களை தாங்கள் சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருந்த கேரள இளம்பெண் உயிரிழப்பு https://ift.tt/mPqGCS2

படம்
உடல் எடையைக் குறைப்பதற்காக அதிக உணவு கட்டுப்பாட்டு எடுத்துக்கொண்டு `டயட்'டில் இருந்த 18 வயதான கேரள இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் தலச்சேரியைச் சேர்ந்தவர் ஸ்ரீநந்தா(18). இவர் சற்று அதிகமான உடல் எடையுடன் இருந்தார். இதனால் இன்டர்நெட், சமூக வலைதளங்களில் வரும் உடல் எடைக் கட்டுப்பாடு வீடியோக்களைப் பார்த்து `டயட்'டில் இருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மியான்மர் மோசடி மையங்களில் பணிபுரிந்த 300 இந்தியர்கள் மீட்பு: தாய்லாந்து வழியாக தாயகம் திரும்பினர் https://ift.tt/gnACohi

படம்
மியான்மர் ஆன்லைன் மோசடி மையங்களில் வேலை செய்த 300 இந்தியர்கள் மீட்கப்பட்டு தாய்லாந்து வழியாக நேற்று தாயகம் திரும்பினர். இந்தியாவில் ஆன்லைன் வழியாக நடைபெறும் மோசடிகளுக்கு பெரும்பாலும் மியான்மரில் இருந்து நடத்தப்பட்டு வரும் சட்டவிரோதமான மையங்களே முக்கிய காரணம் என்பது புலன் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதனை நடத்துவபர்கள் பெரும்பாலும் சீனாவைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மார்ச் 16-ல் பூமிக்கு திரும்புகிறார்

படம்
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் கடந்த 9 மாதகால காத்திருப்புக்குப் பிறகு வரும் மார்ச் 16-ல் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் பூமிக்கு திரும்ப உள்ளனர். சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு 10 நாள் பயணமாக சென்றனர். இந்தநிலையில், விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் சர்வதேச விண்வெளி மையத்திலேயே தங்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்