அறங்காவலர்கள் என கூறி வக்பு கடைகளுக்கு 17 ஆண்டுகளாக வாடகை வசூலித்த 5 பேர் கைது https://ift.tt/qi2PpNn

அகமதாபாத்: குஜராத்தில் வக்பு நிலத்தில் அமைந்துள்ள கடைகளுக்கு அறங்காவலர்கள் என்று கூறிக்கொண்டு 17 ஆண்டுகளாக வாடகை வசூலித்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வக்பு வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட காஞ்சினி மஸ்ஜித் அறக்கட்டளை மற்றும் ஷா பாதா காசம் அறக்கட்டளைக்கு சொந்தமாக நிலம் உள்ளது. இதில் சிலர் சட்டவிரோதமாக 5 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 100 வீடுகள் மற்றும் கடைகள் கட்டியுள்ளனர். இந்த அறக்கட்டளைகளின் அறங்காவலர்கள் என கூறிக்கொண்டு இவர்கள் கடந்த 2008 முதல் 2025 வரை வாடகை வசூலித்து வந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக