இடுகைகள்

ஜூன், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தந்தை பேச்சை கேட்காத மனோஜித் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ளன: கொல்கத்தா போலீஸ் தகவல்   https://ift.tt/PX37zok

படம்
கொல்கத்தா: மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக வழக்கறிஞர் மனோஜித் மிஸ்ரா, அவரது நண்பர்கள் ஜைப் அகமது, மிரமித் முகர்ஜி, கல்லூரியின் பாதுகாவலர் பினாகி பானர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு குறித்து கொல்கத்தா போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: கைதான 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்ட விசாரணையில், பிரதான எதிரி மனோஜித் மிஸ்ரா, சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. மானபங்கம், திருட்டு, அடிதடி என அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தெலங்கானா ரசாயன ஆலை வெடிவிபத்து: உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு - நடந்தது என்ன? https://ift.tt/oatVfiS

படம்
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் பஷமைலாரம் பகுதியில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ளபஷமைலாரம் பகுதியில் சிகாச்சி ரசாயன தொழிற்சாலை கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு மைக்ரோ கிறிஸ்டலைஸ் செல்லுலாஸ் எனும் ரசாயன பவுடர் தயாரிக்கப்பட்டு வருகிறது. 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முதல் கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு வரும் 2026 ஏப்ரல் 1 முதல் தொடக்கம் https://ift.tt/5wj9zeK

படம்
புதுடெல்லி: ஒவ்வொரு வீட்டின் நிலைமைகள் உடன் கூடிய முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2026 ஏப்ரல் 1 முதல் தொடங்கும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரும் பதிவாளர் ஜெனரலுமான மிருத்யுஞ்செய் குமார் நாராயண் தெரிவித்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தில் வீட்டின் நிலைமை, சொத்துகள் மற்றும் வசதிகள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும்: ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தல்

படம்
வாஷிங்டன்: “​காசா விவ​காரத்​தில் இஸ்​ரேல் - ஹமாஸ் தீவிர​வா​தி​கள் இடை​யில் போர் நிறுத்​தம் ஏற்பட வாய்ப்​புள்​ளது. பிணைக் கைதி​களை ஹமாஸ் விடுவிக்க வேண்​டும்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​து உள்​ளார். கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் 7-ம் தேதி இஸ்​ரேலில் நடை​பெற்​றுக் கொண்​டிருந்த இசை நிகழ்ச்​சி​யில் ஹமாஸ் தீவிர​வா​தி​கள் திடீர் தாக்​குதல் நடத்​தினர். இதில் 1,200 பேர் கொல்​லப்​பட்​ட​தாக இஸ்​ரேல் தெரி​வித்​தது. மேலும், இளம்​பெண்​கள் உட்பட 251 இஸ்​ரேலியர்​களை ஹமாஸ் தீவிர​வா​தி​கள் பிணைக் கைதி​களாக பிடித்து சென்​றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வசிரிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதலுக்கு வழக்கம் போல் இந்தியா மீது குற்றம் சுமத்துகிறது பாகிஸ்தான்

படம்
இஸ்லாமபாத்: ​பாகிஸ்​தானின் வடக்கு வசிரிஸ்​தான் மாவட்​டத்​தில் உள்ள கைபர் பக்​துன்​குவா பகு​தி​யில் நேற்று முன்​தினம் ராணுவத்​தினரின் வாக​னங்​கள் சென்று கொண்​டிருந்​தன. அவற்​றின் மீது வெடிகுண்​டு​கள் ஏற்​றிவந்த வாக​னம் மோதி​ய​தில் பாக். ராணுவ வீரர்​கள் 16 பேர் உயி​ரிழந்​தனர். இத்​தாக்​குதலுக்கு தெக்​ரிக் - இ-தலி​பான் என்ற பாகிஸ்​தான் தலி​பான் அமைப்​பின் தற்​கொலைப்​படை பிரி​வான ஹபிஸ் குல் பகதூர் பொறுப்​பேற்​றது. ஆனால், பாகிஸ்​தானின் ராணுவம் விடுத்​துள்ள செய்​தி​யில், ‘‘இந்​தி​யா​வின் ஆதரவு பெற்ற தீவிர​வா​தி​கள், வெடிகுண்டு வாக​னத்தை ராணுவத்​தினர் வாக​னங்​கள் மீது மோதி தாக்​குதல் நடத்​தினர்’’ என தெரி​வித்​துள்​ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கையின்படி அரசின் நல திட்டங்களால் 95 கோடி பேர் பயன்: பிரதமர் மோடி பகிர்வு https://ift.tt/4kmfeLG

படம்
புதுடெல்லி: அரசின் நலத் ​திட்டங்களால் நாடு முழுவதிலும் 95 கோடிக்கும் மேற்பட்டோர் பயன் அடைகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மாதத்​தின் கடைசி ஞாயிற்​றுக்​கிழமை ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்​களிடம் பிரதமர் மோடி உரை​யாற்றி வரு​கிறார். அதன்​படி 123-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்​பானது. இதில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: நீண்ட காலத்​துக்​கு பிறகு, கைலாஷ் மானசரோவர் புனித யாத்​திரை மீண்​டும் தொடங்​கியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் அழிக்கப்பட்ட தீவிரவாத முகாம்களை மீண்டும் கட்டுகிறது பாகிஸ்தான்

படம்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்த தீவிரவாத முகாம்களை, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் லுனி, புத்வல், திபு போஸ்ட், ஜமில் போஸ்ட், உம்ரன்வாலி, சப்ரார் பார்வர்ட், சோட்டா சாக் மற்றும் ஜங்லோரா ஆகிய இடங்களில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு வீசி அழித்தன. தற்போது இந்த இடங்களில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் தீவிரவாத முகாம்களை கட்டும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. ரேடார் மற்றும் செயற்கைகோள் கண்காணிப்பில் சிக்காத வகையிலும், தெர்மல் மாஸ்க் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“உங்கள் தலைமையால் இந்தியாவின் கனவுகள் நனவாகி வருகின்றன” - பிரதமர் மோடியுடன் சுக்லா பேசியது என்ன? https://ift.tt/APSnBLw

படம்
புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். கடந்த 25-ம் தேதி அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா சென்றார். அங்கு அவர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கொமேனியை அழிக்கும் திட்டம் இருந்தது: இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் கருத்து

படம்
ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனியை அழிக்கும் திட்டம் இருந்தது என்று இஸ்ரேல்பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்து உள்ளார். இஸ்ரேல், ஈரான் இடையே 12 நாட்கள் தீவிர போர் நடைபெற்று முடிந்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:அணு ஆயுதங்களை ஈரான் தயாரிப்பதை தடுக்க கடந்த 13-ம் தேதி அந்த நாட்டின் மீது தாக்குதல் தொடுத்தோம். 12 நாட்கள் நீடித்த போரில் எங்களது லட்சியங்களை அடைந்துவிட்டோம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்க விசா பெற சமூக வலைதள விவரம் கட்டாயம்: இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் அறிவிப்பு https://ift.tt/uAjslMr

படம்
அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்போர் சமூக வலைதளங்களின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த நாட்டு தூதரகம் அறிவித்துள்ளது. அமெரிக்க அரசு சார்பில் சுற்றுலா விசா, வர்த்தக விசா, மாணவர் விசா, பணி விசா, உறவினர்களை சந்திக்க சார்பு விசா என பல்வேறு வகையான விசாக்கள் வழங்கப்படுகின்றன. இந்த விசாக்களை பெற டிஎஸ்-160 படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேர்தலில் போட்டியிடாத 345 அரசியல் கட்சிகள் நீக்கம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை https://ift.tt/ka5gWMp

படம்
புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டு அங்கீரிக்கப்படாமல் இருக்கும் 345 அரசியல் கட்சிகளை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாமல் 2,800-க்கும் அதிகமான அரசியல் கட்சிகள் உள்ளன. இவற்றில் பல கட்சிகள் இந்த நிலையை தொடர்வதற்கு தேவையான நிபந்தனைகளை இதுவரை பூர்த்தி செய்யவில்லை. இது தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்திருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்காததால் எஸ்சிஓ கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுப்பு

படம்
குயிங்தவோ: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுத்துவிட்டது. இதனால் கூட்டறிக்கை வெளியிடப்படவில்லை. கடந்த 2001-ம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. எஸ்சிஓ அமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாடு சீனாவின் குயிங்தவோ நகரில் கடந்த 25, 26-ம் தேதிகளில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘தேசத்தில் பெரும்பாலானோர் பேசும் இந்தியை முற்றிலுமாக புறக்கணிக்க முடியாது’ - சரத் பவார் https://ift.tt/zuR9FkL

படம்
மும்பை: தேசத்தில் பெரும்பாலானோர் இந்தி மொழி பேசி வருவதால் அதை முற்றிலுமாக நாம் புறக்கணிக்க முடியாது. ஆனால், 5-ம் வகுப்புக்கு மேல் மாணவர்கள் விரும்பினால் அந்த மொழியை கற்பிக்கலாம் என மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் சரத் பவார் கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்புகளுக்கு மூன்றாவது மொழியாக, இந்தி கட்டாயம் என அம்மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவித்துள்ளது. புதிய கல்விக் கொள்கை 2020-ன் படி வெளியான இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் மராத்தி மட்​டுமே கட்​டாய மொழி என அம்​மாநில முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ் தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பி-2 விமான வடிவமைப்புக்கு உதவிய இந்தியர்: உளவு பார்த்த வழக்கில் சிறையில் இருப்பவரின் பின்னணி https://ift.tt/uSl7tjd

படம்
புதுடெல்லி: உலகின் மிகச் சிறந்த போர் விமான​மாக அமெரிக்​கா​வின் பி-2 விமானம் கருதப்​படு​கிறது. மொத்​தம் 172 அடி அகலம், 69 அடி நீள​முடைய இந்த விமானத்தை ரேடாரில் கண்​டறிய முடி​யாது. அணு குண்​டு​களை சுமந்து செல்​லும் திறன் கொண்​டது. தொடர்ந்து 11,000 கி.மீ. வரை தரை​யிறங்​காமல் பறக்​கும். இந்த பி-2 ரகபோர் விமானங்​கள் வேறு எந்த நாட்​டிட​மும் இல்​லை, அந்​தளவுக்கு உலகிலேயே மிக சக்தி வாய்ந்த பி-2 ரக விமான வடிவ​மைப்​பில் இந்​தி​யர் ஒரு​வர் உதவி செய்​து, பின்​னர் உளவு பார்த்த வழக்​கில் சிறை தண்​டனை பெற்​றுள்​ளார். ஈரான் மீது பி-2 விமானம் தாக்​குதல் நடத்​திய நிலை​யில், தற்​போது அவருடைய தகவல்​கள் மீண்​டும் வலம் வந்​துள்​ளன. அதன் விவரம் வரு​மாறு:கடந்த 1944-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் 11-ம் தேதி மும்​பை​யில் பிறந்​தவர் நோஷிர் ஷெரி​யார்ஜி கவுடி​யா. பார்சி குடும்​பத்​தில் பிறந்த கவுடியா சிறு வயதிலேயே மிக​வும் புத்​தி​சாலி​யாக இருந்​தார். தனது 15-வது வயதிலேயே பிஎச்​.டி பட்​டத்​துக்கு நிக​ரான பட்​டம் பெற்​றுள்​ளார். அதன்​பிறகு 19-வது வயதில் ஏரோ​நாட்​டிக்​கல் இன்​ஜினீயரிங் படிப்​ப​தற்​காக அமெரிக்கா​வுக்கு செ...

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனா பயணம் https://ift.tt/wBH7cD0

படம்
புதுடெல்லி: சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் மாநாடு சீனாவின் கிழக்கு ஷான்டாங் மாகாணம் குவிங்டாவ் நகரில் நேற்று தொடங்கியது. இந்த அமைப்புக்கு தற்போது தலைமை வகிக்கும் சீனா, இந்த மாநாட்டை நடத்துகிறது. இதில் பங்கேற்பதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று சீனா புறப்பட்டுச் சென்றார். ஏற்கெனவை சீனா சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங் இ மற்றும் துணை அதிபர் ஹான் ஜெங் ஆகியோரை சந்தித்துப் பேசினார். மேலும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாட்டிலும் தோவல் பங்கேற்க உள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

41 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளி செல்லும் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா: பால்கன்-9 ராக்கெட் மூலம் 4 பேர் குழு பயணம்

படம்
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா (39) உள்ளிட்ட 4 வீரர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வுப் பணிக்காக டிராகன் விண்கலத்தில், ஃபல்கான் 9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு (ஐஎஸ்எஸ்) நேற்று புறப்பட்டு சென்றனர். அமெரிக்காவில் உள்ள ஆக்ஸியாம் ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம், நாசா, இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை இணைந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மற்றும் ஃபல்கான் 9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு 4 விண்வெளி வீர்களை அனுப்பி ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளும் திட்டத்தை தயாரித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஈரான்- இஸ்ரேல் எக்காரணத்தை கொண்டும் இனி தாக்குதல் நடத்தக் கூடாது: ட்ரம்ப் எச்சரிக்கையும் பின்னணியும்! 

படம்
டெஹ்ரான்: உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த நிலையில் ஈரான்-இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அணுகுண்டு தயாரிக்க ஈரான் முயற்சிப்பதாக அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், கடந்த 13-ம் தேதி ஈரானின் அணுசக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் திடீர் தாக்குதல் நடத்தின. இதில் 4 அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. கடந்த 22-ம் தேதி அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் ஆகிய முக்கிய அணுசக்தி தளங்களை குறிவைத்து தாக்கின. இதில் 3 அணுசக்தி தளங்களும் முழுமையாக தகர்க்கப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆபரேஷன் சிந்தூர் சிறந்த உதாரணம்: பிரதமர் மோடி https://ift.tt/I1MsyNu

படம்
தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை ஆபரேஷன் சிந்தூர் உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளதாக பிரதமர் நேரந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆன்மீக குருவும் சமூக சீர்திருத்தவாதியுமான ஸ்ரீ நாராயண குரு மற்றும் மகாத்மா காந்தி இடையிலான உரையாடலின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து மேலும் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி இந்தியாவின் மிகப்பெரிய சொத்து: காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மீண்டும் புகழாரம் https://ift.tt/yUS9Bce

படம்
புதுடெல்லி: ‘பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் மிகப்பெரிய சொத்து’ என்று காங்கிரஸ் எம்.பி.சசிதரூர் மீண்டும் புகழாரம் சூட்டியுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசி தரூர். இவர், மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது பாராட்டு தெரிவித்து வருகிறார். இதனால், காங்கிரஸ் மேலிடத்துக்கும் சசி தரூருக்கும் இடையே பனிப்போர் நிலவுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கத்தாரில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதலை தொடங்கியது ஈரான்!

படம்
ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை நோக்கி ஈரான் ஆறு ஏவுகணைகளை வீசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏவுகணைகள் வீசப்பட்ட சிறிது நேரத்திலேயே கத்தார் தலைநகர் தோஹாவில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக நேரில் கண்டவர்களை தெரிவிக்கின்றனர். பாதிப்பு அல்லது உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஐஎன்எஸ் தமால் போர்க்கப்பல் ஜூலை 1-ல் கடற்படையில் சேர்ப்பு https://ift.tt/dG0C8Bz

படம்
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் ஜூலை 1-ம் தேதி இந்திய கடற்படையுடன் இணைக்கப்படுகிறது. இதுகுறித்து இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறியுள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்க தாக்குதலால் ஆவேசம்: இஸ்ரேலை நோக்கி சீறும் ஏவுணைகள் - ஈரானின் புது ‘வியூகம்’ என்ன?

படம்
தெஹ்ரான் / டெல் அவிவ்: இஸ்ரேலுக்கு ஆதரவாக தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா மீதான கடும் கோபத்தில் உள்ள ஈரான் பல்வேறு புதிய வியூகங்களை வகுத்துள்ளது. இதனிடையே, ஆவேசத்தின் உச்சமாக, இஸ்ரேல் நகரங்கள் மீது சக்தி வாய்ந்த ஏவுகணைகளை வீசி கடும் தாக்குதல் நடத்தி வருகிறது ஈரான். அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக உள்ளது என கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் கடுமையாக பதிலடி தந்து வந்ததால் இரு நாடுகளுக்கும் இடையே போர் தீவிரம் அடைந்தது. இந்த நிலையில், ஈரான் நாட்டின் 3 முக்கிய அணுசக்தி தளங்களை அமெரிக்கா குண்டு வீசி அழித்தது, இந்தப் போரை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஈரானில் இருந்து நேபாளம், இலங்கை மக்களை மீட்கும் இந்தியா https://ift.tt/PTl5fXg

படம்
அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் இலங்கையின் கோரிக்கையை ஏற்று அந்த நாடுகளின் குடிமக்களையும் ஈரானில் இருந்து இந்தியா மீட்டு அழைத்துவர உள்ளது. ஈரான் - இஸ்ரேல் போரை தொடர்ந்து ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்காக ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் மத்திய அரசு மீட்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி ஈரானின் மஷாத் நகரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு விமானம் மூலம் 290 இந்திய மாணவர்கள் டெல்லி அழைத்துவரப்பட்டனர். இதையடுத்து துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாத் நகரில் இருந்து இந்தியர்களுடன் புறப்பட்ட இரண்டாவது சிறப்பு விமானம் நேற்று காலை டெல்லி வந்து சேர்ந்தது. இதன்மூலம் ஈரானில் இருந்து இதுவரை 517 இந்தியர்கள் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஈரான் அணு சக்தி தளம் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 3 மூத்த தளபதிகள் உயிரிழப்பு

படம்
ஈரானின் இஸ்பஹான் அணு சக்தி தளம் மீது இஸ்ரேல் விமானப் படை நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்களின் தாக்குதலில் ஈரானின் 3 ராணுவ தளபதிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, டான் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடகாவில் போலி செய்திகளை பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை: விரைவில் புதிய சட்டம் அமலுக்கு வருகிறது https://ift.tt/Vm69lIF

படம்
கர்நாடகாவில் போலிச் செய்திகள், தவறான தகவல்களை பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவர அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. கர்நாடகாவில் கடந்த சில ஆண்டுகளாக ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களால் மோதல் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் 10-க்கும் மேற்பட்ட உயிர் சேதமும், கோடிக்கணக்கில் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க தனிச் சட்டம் கொண்டுவர அம்மாநில அரசு முடிவெடுத்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற யோகா தின விழா: மோடி தலைமையில் 3 லட்சம் பேர் கின்னஸ் சாதனை https://ift.tt/wsuWHzl

படம்
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பிரம்மாண்ட யோகா தின நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்று, யோகாசனங்கள் செய்தார். இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. உலகில் அமைதி நிலவ, ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு நாடும், சமுதாயமும் யோகாவை தங்கள்வாழ்வில் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். உலகம் முழுவதும் 11-வது ஆண்டு சர்வதேச யோகா தினம் நேற்று மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட யோகா தின விழாநடைபெற்றது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்வில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆம் ஆத்மி ஆட்சியின்போது வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி ஊழல்: அமலாக்கத் துறை தீவிர விசாரணை https://ift.tt/UHegOjm

படம்
ஆம் ஆத்மி ஆட்சியின்போது டெல்லியில் வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடத்தியபோது 12,748 வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதுதொடர்பாக டெல்லி ஊழல் தடுப்புப் பிரிவு அண்மையில் விசாரணை நடத்தியது. அப்போது வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் ஊழலில் தொடர்புடைய 322 வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டு உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.7.42 கோடி மோசடி வழக்கு: மகாராஷ்டிர ஐபிஎஸ் அதிகாரியின் கணவர் கைது https://ift.tt/o2if7LX

படம்
ரூ.7.42 கோடி மோசடி வழக்கில் மகாராஷ்டிர ஐபிஎஸ் அதிகாரியின் கணவரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர ஐபிஎஸ் அதிகாரி ராஷ்மி கரந்திகரின் கணவர் புருஷோத்தம் சவான். இவர் மும்பை, தானே மற்றும் புனே நகரில் அரசு ஒதுக்கீட்டு குடியிருப்புகளை சலுகை விலையில் வாங்கித் தருவதாக கூறி பலரிடம் ரூ.24.78 கோடி மோசடி செய்ததாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இஸ்ரேல் மீது ஈரான் அதிபயங்கர தாக்குதல்: கொத்து குண்டுகளை வீசியதால் பெரும் சேதம் - பாதிப்பு எத்தகையது?

படம்
டெல் அவிவ் : இஸ்​ரேல் - ஈரான் போர் நேற்று 8-வது நாளாக நீடித்த நிலை​யில், இஸ்​ரேல் மீது ஈரான் கொத்து குண்​டு​களை வீசி அதிப​யங்கர தாக்​குதலை நடத்தியது. இதனால், தலைநகர் டெல்​அ​விவ் உட்பட பல்​வேறு நகரங்​களில் பிரம்​மாண்ட கட்​டிடங்​கள் சேதமடைந்​தன. அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்​படுத்​து​வ​தாக கூறி, அந்​நாட்​டின் மீது இஸ்​ரேல் தாக்​குதலை தொடங்​கியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வரு​கிறது. இரு நாடு​கள் இடையி​லான போர் நேற்று 8-வது நாளாக நீடித்​தது. இந்த தாக்​குதல்​களால் இருதரப்​பிலும் அதிக அளவில் உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்​பட்​டுள்​ளது. ஈரானில் ராணுவ உயர் அதி​காரி​கள், மூத்த அணு விஞ்​ஞானிகள் உட்பட 224 பேர் உயி​ரிழந்​தனர். இஸ்​ரேலில் 25 பேர் உயி​ரிழந்​தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

3-ம் உலகப் போர் மூளும் அபாயம்: அமெரிக்காவுக்கு ரஷ்ய அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை

படம்
வாஷிங்டன்: இஸ்ரேல், ஈரான் போரால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் எழுந்திருக்கிறது. ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. சக்திவாய்ந்த அணு குண்டுகளை தயாரிக்க ஈரான் தீவிர முயற்சி செய்து வருவதாக மேற்கத்திய நாடுகள் நீண்ட நாட்களாக குற்றம் சாட்டி வருகின்றன. தற்போது 87 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் வைத்திருப்பதாகவும் இதை 90 சதவீதம் செறிவூட்டினால் அணு குண்டுகளை தயாரிக்க முடியும் என்றும் சர்வதேச அணு சக்தி நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியா - பாக். போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை: முதல்முறையாக ஒப்புக்கொண்ட ட்ரம்ப் - பின்னணி என்ன?

படம்
வாஷிங்டன்: ‘இந்​தியா - பாகிஸ்​தான் இடையி​லான போர் நிறுத்​தத்​துக்கு நான்​தான் காரணம்’ என்று தொடர்ந்து கூறிவந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், முதல்​முறை​யாக ‘இரு நாட்டு தலை​வர்​களே போர் நிறுத்​தத்​துக்கு காரணம். இதில் அமெரிக்கா​வுக்கு எந்த பங்​கும் இல்​லை’ என்று உறு​திபட தெரி​வித்​துள்​ளார். இந்தியாவின் கருத்தை பிரதமர் மோடி தெரிவித்ததை தொடர்ந்து, அவர் இவ்வாறு கூறியுள்ளார். காஷ்மீரின் பஹல்​காம் பகு​தி​யில் கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தினர். இதில் 26 சுற்​றுலா பயணி​கள் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதலுக்கு பதிலடி​யாக பாகிஸ்​தானில் உள்ள தீவிர​வாத முகாம்​கள் மீது ஆபரேஷன் சிந்​தூர் என்ற பெயரில் இந்​திய ராணுவம் மே 7-ம் தேதி துல்​லிய தாக்​குதல் நடத்​தி​யது. இதையடுத்​து, இந்​தியா மீது பாகிஸ்​தான் ராணுவம் ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்​தி​யது. இதை இந்​தியா முறியடித்​தது. இருதரப்​புக்​கும் இடையே நடை​பெற்ற சண்டை மே 10-ம் தேதி முடிவுக்கு வந்​தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World,...

கேரளா, குஜராத், பஞ்சாப், மேற்கு வங்கம்: 4 மாநில இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது https://ift.tt/7t3bG1X

படம்
புதுடெல்லி: கேரளா, குஜராத் பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. கேரள இடைத்தேர்தலில் அதிகபட்சமாக 73 சதவீத வாக்குகள் பதிவானது. கேரளாவில் நிலம்பூர், மேற்கு வங்கத்தில் காலிகஞ்ச், பஞ்சாபில் மேற்கு லூதியானா, குஜராத்தில் விசாவதர், காடி ஆகிய 5 தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. நிலம்பூரில் சுயேச்சை எம்எல்ஏ பி.வி.அன்வர், விசாவதரில் ஆம் ஆத்மி எல்ஏ புபேந்திர பயானி ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் அவசியமானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு ரத்து - வேறு நீதிபதிக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் https://ift.tt/sUNV7Xl

படம்
சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம், விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு களாம்பாக்கத்தை சேர்ந்த சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ, முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், நீதிமன்றத்தில் ஆஜரான ஆயுதப்படை ஏடிஜிபி எச்.எம்.ஜெயராமை கைது செய்து விசாரிக்கவும், ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் உத்தரவிட்டார். அதன்படி, நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம், விசாரணைக்கு பிறகு மறுநாள் மாலை விடுவிக்கப்பட்டார். அவரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்கா தலையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்கும்: சரணடைய மறுத்து அயதுல்லா அலி கொமேனி எச்சரிக்கை

படம்
டெஹ்ரான்: ஈரான் ஒருபோதும் சரணடையாது என்றும் அமெரிக்கா தலையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்கும் என்றும் அந்நாட்டு மதத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல், ஈரான் இடையே கடந்த 6 நாட்களாக தீவிர வான்வழி போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஈரான் சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் கூறியிருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘நான் என்ன செய்வேன் என்று யாருக்கும் தெரியாது’ - ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை குறித்து ட்ரம்ப்

படம்
வாஷிங்டன்: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலில் ஈரானுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் களமிறங்குமா என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் பதில் அளித்துள்ளார். கடந்த 13-ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டது. அணுகுண்டு தயாரிப்பில் தீவிரம் காட்டுவதாக கூறி ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இந்த தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்தது. இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. ஈரானுக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சி படை உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

படம்
அல்​பாட்டா: கனடா​வில் நடை​பெற்ற ஜி7 உச்சி மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். பிரதமர் நரேந்​திர மோடி, 3 நாடு​களுக்​கான 5 நாள்​கள் அரசு​முறைப் பயணத்​தின் முதல் கட்​ட​மாக, மத்​தி​ய தரைக் கடல் பகுதியில் அமைந்​துள்ள தீவு நாடான சைப்​ரஸுக்கு கடந்த 15-ம் தேதி சென்​றார். இதைத் தொடர்ந்து அங்​கிருந்து திங்​கள்​கிழமை மாலை புறப்​பட்​டார். இந்​நிலை​யில், நேற்று காலை கனடாவுக்கு பிரதமர் மோடி சென்​றடைந்​தார். கனடா​வின் அல்​பாட்டா நகரிலுள்ள கால்​கரி விமான​ நிலை​யத்​தில் அந்​நாட்டு அரசுத் தரப்​பில் சிறப்​பான வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. இதில் கனடா நாட்​டின் உயர் அதி​காரி​கள் கலந்​து​கொண்​டனர். இதைத் தொடர்ந்து அங்கு வசிக்​கும் இந்​திய வம்​சாவளி​யினர் பிரதமர் மோடியைச் சந்​தித்​தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கமலை​ மன்னிப்பு கேட்க சொல்வதுதான் நீதிபதியின் பணியா? - ‘தக் லைஃப்' வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டனம் https://ift.tt/dclobpN

படம்
துடெல்லி / பெங்களூரு: நடிகர் கமல்​ஹாசனின் ‘தக் லைஃப்' படத்தை கர்​நாட​கா​வில் வெளி​யிட அனு​மதி அளித்த உச்ச நீதி​மன்​றம், கமல்​ஹாசனை மன்​னிப்பு கேட்க வலி​யுறுத்​திய நீதிபதிக்கு கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. ‘த‌மிழில் இருந்து கன்னட மொழி பிறந்​தது’ என்று `தக் லைஃப்' பட இசை வெளி​யீட்டு விழா​வில் கமல் பேசி​யதற்கு எதி​ராக க‌ர்​நாடகா உயர் நீதி​மன்​றத்​தில் தொடரப்​பட்ட வழக்கை விசா​ரித்த நீதிபதி நாகபிரசன்​னா, ‘‘கமல்​ஹாசன் கருத்​தால் கன்னட மக்​களின் மனம் புண்​பட்​டுள்​ளது. அவர் மன்​னிப்பு கேட்​கா​விட்​டால் படத்தை திரை​யிட முடி​யாது''என்று கூறி, மன்​னிப்பு கேட்​கு​மாறு வலி​யுறுத்​தி​னார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இஸ்ரேல் தொடர் தாக்குதலால் டெஹ்ரானில் அணுக்கதிர் வீச்சு அபாயம்: ஈரானின் புதிய ராணுவ தளபதி உயிரிழப்பு - பின்னணி என்ன?

படம்
டெஹ்ரான்: இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஈரானின் புதிய ராணுவத் தளபதி அலி ஷத்மானி உயிரிழந்தார். அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டி வரும் நிலையில், அந்நாட்டின் மீது இஸ்ரேல் விமானப்படை கடந்த 13-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், ஈரான் ராணுவத் தளபதி முகமது பகேரி, ஐஆர்ஜிசி படை தளபதி உசைன் சலாமி, ஈரான் போர் கட்டளை தலைமையக தளபதி கோலாம் அலி ரஷீத் ஆகியோர் உயிரிழந்தனர். தொடர்ந்து, ஈரானின் புதிய தளபதியாக அலி ஷத்மானி நியமிக்கப்பட்டார். இவர் ஐஆர்ஜிசி படை, போர் கட்டளை தலைமையக தளபதி பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில், இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று முன்தினம் நள்ளிர வில் டெஹ்ரானில் உள்ள ரகசிய இடத்தை குறிவைத்து தாக்கின. இதில் புதிய ராணுவத் தளபதி அலி ஷத்மானி உயிரிழந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“இப்போதைக்கு கமேனியை கொல்லப் போவதில்லை” - ஈரானுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

படம்
"ஈரானின் உச்சபட்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் அவரை இப்போதைக்கு கொல்லப் போவதில்லை” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில், “ஈரானின் உச்சபட்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் எங்களுக்கு ஒரு எளிதான இலக்கு. ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். நாங்கள் அவரை கொல்லப் போவதில்லை. குறைந்தபட்சம் இப்போதைக்கு இல்லை. ஆனால் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உலகின் 50% டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவில் நடைபெறுகிறது: சைப்ரஸ் கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதம் https://ift.tt/z0qGxrc

படம்
லிமாசோல்: உலகின் 50% டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவில் யுபிஐ மூலம் நடைபெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி சைப்ரஸில் நடைபெற்ற கூட்டத்தில் பெருமிதத்துடன் தெரிவித்தார். இந்தியா-சைப்ரஸ் சிஇஓ அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி இதுகுறித்து மேலும் கூறியதாவது: இந்தியாவில் ஜிஎஸ்டி, கார்ப்பரேட் வரி மற்றும் பல ஆயிரம் சட்டங்களை குற்றமற்றதாக்குதல் மூலம் வரி சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசு தெளிவான மற்றும் நிலையான கொள்கைகளை உறுதிப்படுத்தியுள்ளது. அதைத்தவிர, வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கு தேவையான முதன்மையான முக்கியத்துவத்தையும் அரசு அளித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு வீசும்: ஈரான் எச்சரிக்கையும், பாக். மறுப்பும்

படம்
டெஹ்ரான் : ஈரான் மீது இஸ்ரேல் அணுகுண்டு வீசினால், இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு வீசும் என்று ஈரான் ராணுவ அதிகாரி தெரிவித்தார். அப்படி எந்த உறுதியும் அளிக்கவில்லை என்று பாகிஸ்தான் அரசு உடனடியாக இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. ‘ஈரானின் அணுசக்தி திட்டம் ஆபத்தானது. அது இஸ்ரேலுக்கு மட்டுமன்றி உலக நாடுகளுக்கும் அச்சுறுத்தலானது’ என்று கூறி, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஈரான் இஸ்லாமிய புரட்சி படை மூத்த அதிகாரியும், ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினருமான ஜெனரல் மோசென் ரீஸி, ஈரான் அரசு தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது: எங்களுக்கு எதிராக இஸ்ரேல் அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தினால், பதிலடியாக இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு வீசும். ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தான் எங்களுக்கு உறுதி அளித்துள்ளது. ஈரானுக்கு பக்கபலமாக இருப்போம். முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றுசேர வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது. ஈரானிடம் ரகசிய...

ஈரான் அரசு தொலைக்காட்சி அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் - நேரலையில் அதிர்ந்த கட்டிடம்

படம்
டெல் அவிவ் / தெஹ்ரான்: ஈரான் மீது தீவிர தாக்குதலை மேற்கொண்டுள்ளது இஸ்ரேல் ராணுவம். இதில், ஈரான் நாட்டின் அரசு தொலைக்காட்சி ஊடக நிறுவனமான ஈரானின் இஸ்லாமிய குடியரசு நியூஸ் நெட்வொர்க் அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலின்போது கட்டிடம் அதிர்ந்து கரும்புகை எழுந்தது, அந்த தொலைகாட்சி நிறுவனத்தின் ஸடூடியோவில் நேரலை நிகழ்ச்சியில் பதிவானது. முன்னதாக, இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஈரானின் அரசு ஊடகத்துக்கு சொந்தமான தொலைகாட்சி, வானொலி நிலையம் அழிக்கப்படும் என கூறி இருந்தது கவனிக்கத்தக்கது. இதனிடையே, ஈரானின் ராணுவ உள்கட்டமைப்பை தாக்கி அழிக்கும் வகையில் தெஹ்ரானில் உள்ள பொது மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரித்திருந்தது. இதையடுத்து அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியா - பாக். போல விரைவில் இஸ்ரேல் - ஈரான் இடையே அமைதி ஏற்படும்: ட்ரம்ப் உறுதி 

படம்
வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் இடையே என்னுடைய தலையீட்டால் அமைதி ஏற்பட்டதைப் போல விரைவில் இஸ்ரேல் - ஈரான் இடையே அமைதி ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: “ஈரானும் இஸ்ரேலும் ஒரு ஒப்பந்தத்துக்கு வரவேண்டும். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையே, அமெரிக்காவுடனான வர்த்தகத்தைப் பயன்படுத்தி, விரைவாக ஒரு நல்ல முடிவை எடுத்து, போரை நிறுத்த முடிந்த இரண்டு சிறந்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு ஒற்றுமையை நான் கொண்டு வந்தேன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி https://ift.tt/FtNGKpj

படம்
புதுடெல்லி: வயிறு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையின் இரைப்பை சிகிச்சை பிரிவில் அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப காங்கிரஸ் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் விழைவு தெரிவித்து வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புனே ஆற்றுப் பாலம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு - பலர் மாயம் https://ift.tt/epVO7lB

படம்
புனேவில் உள்ள இந்திரயானி ஆற்றின் மீது இருந்த இரும்புப் பாலம் இடிந்து விழுந்ததில் சுற்றுலா பயணிகள் பலர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. புனேவில் மாவல் தாலுகாவில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான குண்ட்மாலாவில் உள்ள இரும்புப் பாலம் இடிந்து விழுந்த நேரத்தில், பாலத்தில் இருந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் பெருக்கெடுத்து ஓடிய ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சைப்ரஸ், கனடா, குரோஷியாவுக்கு பிரதமர் மோடி பயணம்: வருடாந்திர ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் https://ift.tt/fA6FRTk

படம்
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு செல்கிறார். இதில் கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 15 முதல் 19 வரை சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய 3 நாடுகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இஸ்ரேல் நகரங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: டெல் அவிவ் ராணுவ தலைமையகம் தகர்க்கப்பட்டது - பாதிப்புகள் என்ன?

படம்
டெல் அவிவ்: இஸ்ரேல் ஒரே நாளில் 2 முறை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, அந்நாட்டின் தலைநகர் ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் உட்படபல நகரங்கள் மீது ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், இஸ்ரேல் ராணுவ தலைமையகம் உட்பட பல கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன. ‘ஈரான் 60 சதவீதம் தூய்மையுடன் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்துள்ளது. இதை 90 சதவீதம் செறிவூட்டினால் ஈரான் விரைவில் 9 அணுஆயுதங்களை தயாரித்துவிடும்’ என்று ஐக்கிய நாடுகள் சபையில், சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) கடந்த மே 31-ம் தேதி தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஈரான் பதிலடியின் தாக்கமும், இஸ்ரேல் பிரதமரின் புதிய மிரட்டலும் - நடப்பது என்ன?

படம்
டெல் அவிவ் / தெஹ்ரான்: இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான பதிலடி தாக்குதலை மேற்கொண்ட நிலையில், “ஈரானின் ஒவ்வொரு இலக்கையும் குறிவைத்து தாக்குவோம்” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு புதிய மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “அயதுல்லா ஆட்சியின் கீழ் உள்ள ஈரான் தேசத்தின் ஒவ்வொரு ராணுவத் தளம், அணுசக்தி ஆராய்ச்சி மையம் என அங்குள்ள எங்களது ஒவ்வொரு இலக்கையும் குறிவைத்து தாக்குவோம். இதுவரை அவர்கள் எதிர்கொண்ட தாக்குதலை காட்டிலும் வரும் நாட்களில் ஈரான் மீது நாங்கள் நடத்த உள்ள தாக்குதலை ஒப்பீடு கூட செய்ய முடியாது. அந்த அளவுக்கு எங்களது தாக்குதல் தீவிரமாக இருக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அகமதாபாத் விமான விபத்துக்கு ரூ.2,400 கோடி காப்பீடு தொகை https://ift.tt/QTW1YSU

படம்
அகமதாபாத் விமான விபத்துக்கு ரூ.2,400 கோடி காப்பீடு தொகை கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து காப்பீட்டு துறை நிபுணர்கள் கூறியதாவது: கடந்த வியாழக்கிழமை குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் 241 பேர் உயிரிழந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியை சந்தித்தார் பிரதமர் மோடி https://ift.tt/UtpOQvk

படம்
அகமதாபாத்தில் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் குடும்பத்தினரைச் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தை நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு செய்தார். அப்போது மீட்புப் பணிகள் குறித்து பிரதமருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். பின்னர் அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு சென்ற மோடி, அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். பிரதமருடன் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்