ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு
அல்பாட்டா: கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பிரதமர் நரேந்திர மோடி, 3 நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு கடந்த 15-ம் தேதி சென்றார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து திங்கள்கிழமை மாலை புறப்பட்டார். இந்நிலையில், நேற்று காலை கனடாவுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார்.
கனடாவின் அல்பாட்டா நகரிலுள்ள கால்கரி விமான நிலையத்தில் அந்நாட்டு அரசுத் தரப்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் கனடா நாட்டின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடியைச் சந்தித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக