ட்ரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை: மேல்முறையீட்டு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி பல்வேறு நாடுகள் மீது அதிக வரிகளை விதித்த அதிபர் ட்ரம்பின் உத்தரவுகள் சட்டவிரோதமானவை என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கூடுதல் வரிவிதிப்பை நீக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. ட்ரம்ப் அரசு மேல்முறையீடு செய்ய அக்டோபர் 14-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரிவிதிப்புக் கொள்கையை அமெரிக்கா கடை பிடிக்கும் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். கனடா, மெக்சிகோ உட்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடும் இறக்குமதி வரிகளை விதித்துள்ளார். தனது இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், சீனா மீதான வரியை ட்ரம்ப் பல மடங்கு உயர்த்தினார். பின்னர், சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வரி விகிதத்தை குறைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD