டெல்லியில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு உணவளிக்க உச்ச நீதிமன்றம் தடை - முழு விவரம் https://ift.tt/cNsmCL5

புதுடெல்லி: டெல்லியில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவளிக்க தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், அவற்றைப் பிடித்து காப்பகங்களில் அடைக்கும் உத்தரவையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் தெரு நாய்களால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, குழந்தைகளை நாய்கள் சூழ்ந்து கொண்டு கடித்து குதறும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், வெறிநாய்கள் கடிப்பதால் ரேபிஸ் தொற்று ஏற்பட்டும் பலர் இறக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் குறித்து ஊடகங்களில் அவ்வப்போது வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக