சென்னை உட்பட 5 நகரங்களில் சோதனை: ஆந்திராவில் ரூ.3,500 கோடி மதுபான ஊழல் வழக்கில் நடவடிக்கை https://ift.tt/moE7r1Z

அமராவதி: ஆந்திர மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக நேற்று அமலாக்கத் துறை விசாரணையை தொடங்கியது. முதல் நாளே சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
ஆந்திராவில் கடந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சி காலத்தில் ரூ.3,500 கோடிக்கு மதுபான ஊழல் நடந்ததாக சிறப்பு ஆய்வுக் குழுவின் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக இதுவரை 29 பேரை குற்றவாளியாகவும், 19 நிறுவனங்களுக்கு இதில் தொடர்புடையதாகவும் சிறப்புக் குழு குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக