மணிப்பூரில் துப்பாக்கிச் சூடு: துணை ராணுவ படையினர் இருவர் உயிரிழப்பு https://ift.tt/6GSHcxi

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் துணை ராணுவப் படையின் அசாம் ரைபிள்ஸ் படையினர் பயணித்த வாகனத்தின் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு வீரர்கள் உயிரிழந்தனர்.
வெள்ளிக்கிழமை மாலை 5.50 மணி அளவில் இந்த தாக்குதல் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. அசாம் ரைபிள்ஸ் படையின் 33 வீரர்கள் வாகனத்தில் இம்பாலில் இருந்து பிஷ்ணுபூர் பயணித்துள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத நபர், வீரர்கள் பயணித்த வாகனத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளார். இந்த தாக்குதலில் அசாம் ரைபிள்ஸ் படையினர் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். அருகில் உள்ள மருத்துவமனையில் இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக