ராஜஸ்தான் பேருந்து தீ விபத்தில் உயிரிழப்பு 21-ஆக உயர்வு: விதிகளை மீறி மாற்றங்கள் செய்யப்பட்டது அம்பலம் https://ift.tt/goa7stV

ஜெய்சால்மர்: ராஜஸ்தானில் நேற்று முன்தினம் நடந்த பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21-ஆக அதிகரித்துள்ளது. புத்தம் புதிய அந்த தனியார் பேருந்தில் விதிகளை மீறி மாற்றங்கள் செய்யப்பட்டதே இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது.
ஜெய்சால்மரிலிருந்து நேற்று முன்தினம் பிற்பகலில் 57 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஜோத்பூருக்கு புறப்பட்டு சென்ற தனியார் பேருந்து தையாத் கிராமத்துக்கு அருகே திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில், 21 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தீக்காயமடைந்த 16 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக