நாட்டின் வளர்ச்சிக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்கு அளப்பரியது: கார்கேவுக்கு அமித்ஷா பதிலடி! https://ift.tt/NDHGqua

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடைவிதிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறிய கருத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய அமித்ஷா, “நாட்டை சிறந்த இடமாக மாற்ற என்னைப் போன்ற லட்சக்கணக்கான இளைஞர்களை ஊக்குவித்த அமைப்பு ஆர்எஸ்எஸ் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அது தேசபக்தி மற்றும் ஒழுக்கத்தின் மதிப்புகளை விதைத்துள்ளது. ஆர்எஸ்எஸ் உருவாக்கிய இரண்டு பேர் (அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி) இந்த நாட்டின் பிரதமர்களாகி விட்டதையும் நாம் காண வேண்டும். அவர்கள் இருவரும் இந்த நாட்டின் சிறந்த பிரதமர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக