கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் சஸ்பெண்ட்: பாஜக மேலிடம் நடவடிக்கை https://ift.tt/vuPmJ7C

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங், கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமாக இருந்தவர் ஆர்.கே. சிங். பிஹார் அரசியல் களத்தில் மூத்த அரசியல்வாதியாகத் திகழ்கிறார். அர்ரா தொகுதியின் முன்னாள் எம்.பி.யாக இருக்கிறார். இந்நிலையில் கட்சியிலிருந்து ஆர்.கே.சிங்கை சஸ்பெண்ட் செய்து பாஜக மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதன் காரணமாக அவர் நீக்கப்பட்டுள்ளார் என கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது. பிஹார் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வந்து ஒரு நாள் மட்டுமே ஆனநிலையில் அவர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக