இடுகைகள்

பிப்ரவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் குறைதீர்ப்பாளரை நியமிக்காத மாநிலங்களுக்கு நிதி இல்லை: மத்திய அரசு புதிய கட்டுப்பாடு https://ift.tt/nbtQNdm

படம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தில் குறைதீர்ப்பாளரை நியமிக்காத மாநிலங்களுக்கு நிதி வழங்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் நடைமுறைக்கு வந்தது. 100 நாள் வேலை என்றழைக்கப்படும் இந்த திட்டம் நாடு முழுவதும் அமலில் உள்ளது. இத்திட்டத்தின் விதிகளின்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு குறை தீர்ப்பாளர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் குறை தீர்ப்பாளர் நியமிக்கப்படவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரஷ்யா - உக்ரைன் போர் மட்டுமல்ல... - நடுநிலைமைக்கு மறுபெயர் இந்தியா!

படம்
கடந்த 20-ம் நூற்றாண்டில் வியட்நாம், லாவோஸ், கியூபா, லெபனான், லிபியா, பனாமா உள்ளிட்டபல்வேறு நாடுகளின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. 21-ம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தான், இராக்கை அமெரிக்க ராணுவம் ஆக்கிரமித்து, ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தியது. உலகின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்கா இதுவரை 102 போர்களை நடத்தியுள்ளது. அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளால் எந்தவொரு நாட்டிலும் அமைதி நிலைநாட்டப்பட்டதாக தகவல் இல்லை. இதற்கு நேர்மாறாக இராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களும் தலைதூக்கி உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரஷ்யாவுக்கு எதிராக போரிடும் முன்னாள் ‘மிஸ் உக்ரைன்’

படம்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் வீரர்கள் போரிட்டு வருகின்றனர். பொதுமக்களும் போரில் பங்கேற்க வேண்டும் என்று அந்த நாட்டு அதிபர் ஜெலன்கி அழைப்பு விடுத்துள்ளார். இதை ஏற்று முன்னாள் ‘மிஸ் உக்ரைன்' அனஸ்டாசியா லீனா (31) ஆயுதம் ஏந்தி ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வருகிறார். அதிநவீன துப்பாக்கியுடன் போர்க்கோலம் பூண்டிருக்கும் புகைப்படத்தை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எந்த முன்னேற்றமும் இல்லாத ரஷ்யா - உக்ரைன் பேச்சுவார்த்தை; உயிர் பலி 352 ஆக அதிகரிப்பு

படம்
கீவ்: பெலாரஸ் எல்லைப் பகுதியில் ரஷ்ய, உக்ரைன் பிரதிநிதிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். போரை நிறுத்த வேண்டும், ரஷ்ய படைகள் வெளியேற வேண்டும் என்று உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ரஷ்ய தரப்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தப் பேச்சுவார்த்தை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ரஷ்யாவின் தொடர் தாக்குதலால் உக்ரைனில் இதுவரை 14 குழந்தைகள் உள்பட 352 பேர் உயிழந்தனர் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை உக்ரைனில் இருந்து 5.2 லட்சம் மக்கள் வெளியேறிவிட்டதாக ஐ.நா கூறுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உக்ரைனுக்கு சொந்தமான உலகின் பெரிய சரக்கு விமானத்தை தாக்கி அழித்த ரஷ்யா

படம்
கீவ்: உக்ரைனுக்குச் சொந்தமான உலகின் மிகப்பெரிய விமானத்தை ரஷ்ய ராணுவம் தாக்கி அழித்து உள்ளது. தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்துநடைபெற்று வருகிறது. எல்லையோர நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து குண்டு மழைபொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் தலைநகர் கீவில் பல பகுதிகளில் குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மருத்துவப் படிப்புக்காக மாணவர்கள் ஆயிரக்கணக்கில் உக்ரைன் செல்வது ஏன்?: இந்தியாவில் அதிக அளவில் மருத்துவக் கல்லூரிகள் திறப்பதே தீர்வு என கல்வியாளர்கள் கருத்து https://ift.tt/sjhPzCo

படம்
ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்துவரும் போரில் ஏராளமான மாணவர்கள் உக்ரைனில் சிக்கி நாடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு சிக்கியுள்ள மாணவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவ படிப்புக்காகச் சென்றவர்கள். உக்ரைன் கல்வித்துறை கணக்கின்படி, 18 ஆயிரம் இந்திய மாணவர்கள் அங்கு படிப்பதாகக் கூறப்பட் டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து உக்ரைனில் படிக்கும் மாணவர்களில் 24 சதவீதம் பேர்இந்திய மாணவர்கள் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் பஞ்சாப், டில்லி, ஹரியாணா, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உக்ரைன் சென்று படிக்கின்றனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 5 ஆயிரம் பேர் என்று கூறப்படுகிறது. இதில் 2,500மாணவர்கள் போர் தொடங்கும் முன்பேஇந்தியா திரும்பிவிட்டனர். எஞ்சியுள்ளவர்கள் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் கங்கா' செயல்படுவது எப்படி? - ஒரு பார்வை https://ift.tt/2L0DxVF

படம்
போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணியை ஒருங்கிணைக்க 4 மத்திய அமைச்சர், உக்ரைன் அண்டை நாடுகளுக்கு செல்கின்றனர். உக்ரைன் எல்லையில் நீண்டநாட்களாக படைகளுடன் காத்திருந்த ரஷ்யா, கடந்த 24-ம் தேதி உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதலை தொடங்கியது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட சுமார் 40 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. போர் நடைபெறும் பகுதியில் சிக்கித் தவிக்கும் இவர்களை மீட்க, மத்தியஅரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த மீட்புப் பணிக்கு ‘ஆபரேஷன் கங்கா' என பெயரிடப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஐ.நா. பொதுச்சபையின் அவசரக் கூட்டத்துக்கான வாக்கெடுப்பை புறக்கணித்தது ஏன்? - இந்தியா விளக்கம்

படம்
ஜெனிவா: உக்ரைன் விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பொதுச்சபை அவசரக் கூட்டத்தைக் கூட்டுவது தொடர்பான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அவசரக் கூட்டத்தை நேற்று கூட்ட முடிவு செய்யப்பட்டது. 1950-ம்ஆண்டுக்குப் பின் ஐ.நா. பொதுச் சபையின் அவசரக்கூட்டம் கூட்டப்படுவது இது 11வது முறை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உக்ரைனில் இருந்து 1,500 இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்: 23 மாணவ, மாணவிகள் தமிழகம் வந்து சேர்ந்தனர் https://ift.tt/yYezo7q

படம்
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இச்சூழலில் அங்குள்ள இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய வெளியுறவுத் துறை தொடங்கியது. முதல் கட்டமாக உக்ரைன் எல்லையிலுள்ள ஐரோப்பிய நாடான ருமேனியாவில் இருந்து நேற்று முன்தினம், ஏர் இந்தியாவின் முதல் சிறப்பு விமானம் டெல்லி வந்தது. அதில் வந்த இந்தியர்களை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றார். இவர்களில் பெரும்பாலானவர்கள் உக்ரைனின் புக்வேனியன் மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியில் இந்திய மாணவர்களை வரவேற்ற மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா https://ift.tt/Tnik5s7

படம்
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. அங்கிருக்கும் இந்தியர்கள், இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசுசிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி விமானங்களில் இந்திய மாணவர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில், ருமேனியால் இருந்து 250 இந்திய மாணவர்களுடன் 2-வது விமானம் நேற்றுஅதிகாலை டெல்லி வந்து சேர்ந்தது. அப்போது விமானத்துக்குள் சென்ற மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை வரவேற்றார். அப்போது அவர்களிடையே ஜோதிர் ஆதித்ய சிந்தியா பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உக்ரைனில் மக்களுக்கு உதவும் இஸ்கான் கிருஷ்ணர் கோயில்

படம்
உக்ரைனில் போர் தாக்குதலால் சிக்கிய மக்களுக்கு உதவுவதற்காக தனது கோயில் கதவுகளைஇஸ்கான் கிருஷ்ணர் கோயில் நிர்வாகம் திறந்துவிட்டுள்ளது. இதுகுறித்து கொல்கத்தாவில் உள்ள இஸ்கான் கோயில் துணைத்தலைவர் ராதாராமன் தாஸ் கூறியபோது, ‘‘உக்ரைனில் உள்ள பல்வேறு இஸ்கான் கோயில் வளாகங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திறந்துவிடப்பட்டுள்ளன. ஆபத்தில் சிக்கியுள்ள மக்கள் எந்த நேரத்திலும் கோயில் வளாகத்துக்குச் சென்று உதவியைப் பெறலாம். அங்கு உதவி செய்யபக்தர்களும், கோயில் ஊழியர்களும் காத்திருக்கின்றனர். மக்கள்சேவைக்காக கோயில் கதவுகள்எந்நேரமும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. கீவ் உள்ளிட்ட நகரங்களில் உள்ள இஸ்கான் கோயில்வளாகங்களில் ஏராளமான பக்தர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. செசன்யா போரின்போதுகூட இஸ்கான் கோயில் நிர்வாகங்கள் மக்களுக்கு உதவின’’ என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் இருக்கும் தமிழ் உலகின் பழமையான மொழி: பிரதமர் மோடி பெருமிதம் https://ift.tt/F5lZDpP

படம்
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: பல மொழிகள் உள்ள நாடாக இருப்பதற்கு நாம் பெருமைபட வேண்டும். உலகின் மிகப் பழமையான மொழி தமிழ் இந்தியாவில் இருக்கிறது. அதை நினைத்து நாட்டு மக்கள் பெருமை கொள்ள வேண்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவின் பழங்கால சிலைகள், கலைப் பொருட்கள் மீட்கப்படுகின்றன - அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு https://ift.tt/RsWJPl2

படம்
‘‘அனைத்து துறைகளிலும் பெண்கள் தலைமையேற்று வருகின்றனர். வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட இந்தியாவின் அரிய கலைப் பொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றன’’ என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். வானொலியில் 86-வது ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் நேற்று உரையாற்றியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிராக புகார் மனு - அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஒப்புதல்: தங்கள் வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க பல்வேறு நாடுகள் தடை

படம்
போர் தீவிரமடைந்துள்ள சூழலில் பெலாரஸின் கோமெல் நகரில் ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக் கொண்டிருக்கிறது. இதனிடையே, சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் அரசு புகார் மனு அளித்துள்ளது. கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. தலைநகர் கீவ் உட்பட முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தெலங்கானா மாநிலத்தில் பயிற்சி விமானம் நொறுங்கி விழுந்து விபத்து - சென்னையை சேர்ந்த பெண் பயிற்சி பைலட் உயிரிழப்பு https://ift.tt/jmrSc34

படம்
பயிற்சி விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் சென்னையைச் சேர்ந்த பெண் பயிற்சி பைலட் உயிரிழந்தார். தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், துங்கதுர்த்தி கிராமத்தில் நேற்று காலை 10.50 மணியளவில் பயங்கர சத்தத்துடன் பயிற்சி விமானம் ஒன்று வானில் பறந்து கொண்டிருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹிஜாப் வழக்கின் நீதிபதியை விமர்சித்த நடிகருக்கு ஜாமீன் https://ift.tt/FD8P302

படம்
கர்நாடக கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதற்கு கன்னட நடிகர் சேத்தன் குமார் அஹிம்சா எதிர்ப்பு தெரிவித்தார். கர்நாடக அரசையும், வழக்கை விசாரிக்கும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித்தையும் விமர்சித்தார். இதனால் பெங்களூரு சேஷாத்ரிபுரம் போலீஸார் தாமாக முன்வந்து சேத்தன் மீது வழக்குப் பதிவு செய்து 23-ம் தேதி கைது செய்து பெங்களூரு சிறையில் அடைத்தனர். இதையடுத்து சேத்தன் தரப்பில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உலகம் முழுவதும் ஆயுஷ் ஏற்றுக் கொள்ளப்படுகிறது: பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி https://ift.tt/qa4NoGl

படம்
மத்திய பட்ஜெட்டுக்குப் பிறகு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் நேற்று 5-வது வெபினார் ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்தியது. இதில் மத்திய அமைச்சர்கள், சுகாதாரத் துறை நிபுணர்கள், பொது மக்கள், தனியார் நிறுவன பிரதிநிதிகள், செவிலியர்கள், சுகாதார, தொழில்நுட்ப, ஆராய்ச்சி யாளர் கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி யில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டு மக்களின் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது மட்டுமல்லா மல், அனைவருக்கும் அதை சமமானதாக மாற்றுவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். மத்திய அரசு கொண்டு வந்த ஆயுஷ் திட்டம் உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. ஆயுர்வேதா, யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகியவற்றை உலக அளவில் ஏற்றுக் கொண்டு வருகின்றனர். மேலும், சர்வதேச பாரம்பரிய மருத்துவ மையத்தை உலக சுகாதார நிறுவனம் விரைவில் இந்தியாவில் தொடங்க உள்ளது. கரோனா தொற்று பரவிய போது, தொலைதூரத்தில் உள்ளவர்களுக்கும் மருத்துவ உதவி, ஆலோசனைகள் கிடைக்கும் வகையில், டெலி மெடிசின்உட்பட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போது ஆளில்லா ட்ரோன் தொழில்நுட்பத்தை மருத்துவ பயன்பாட்டுக்காக மேம்படுத்த வேண்டும். நாட...

திருக்கோவிலூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த முதியவர் கொலை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது https://ift.tt/KFrOuCv

படம்
மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (64). இவர், மூங்கில்துறைப்பட்டு பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவரிடம் விஏஓ வேலை வாங்கி தருவதாக கூறி இரு ஆண்டுகளுக்கு முன் ரூ.2 லட்சம் பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் சொன்னபடி வேலை வாங்கித் தராமல் ஏழுமலை இழுத்தடித்து வந்துள்ளாராம். இதனால் கோபமடைந்த கோபால் (50), அவரது மனைவி விசாலாட்சி (45), மகன் சிவா (19) ஆகிய மூவரும் கடந்த 23-ம் தேதி,ஏழுமலையின் வீட்டிற்குச் சென்று, பணத்தை கேட்டுள்ளனர். அப்போது, இருதரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் காயமடைந்த ஏழு மலை திருவண்ணாமலை அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் (பிப்.25) ஏழுமலை உயிரிழந்தார். ஏழுமலையின் உறவினர் கொடுத்த புகாரின் பேரில், மணலூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிவா மற்றும் அவரது தந்தை கோபால், தாயார் விசாலாட்சி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். from இந்து தமிழ் திசை : News i...

உ.பி.யில் இன்று 5-ம் கட்ட சட்டப்பேரவை தேர்தல்: முக்கியத்துவம் பெற்றுள்ள மூன்று தொகுதிகள் https://ift.tt/61TVqeM

படம்
உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி10-ல் தொடங்கிய சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை 4 கட்டவாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது. 5-ம் கட்ட வாக்குப் பதிவுஇன்று நடைபெறுகிறது. மொத்தம் 685 பேர் போட்டியிடும்5-ம் கட்ட தேர்தலில் முதல்முறையாக அதிக எண்ணிக்கையில் 90 பெண்கள் களத்தில் உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை புறக்கணித்தது இந்தியா - உக்ரைனில் 3-வது நாளாக ரஷ்யா குண்டுமழை: ரஷ்ய ராணுவ தாக்குதலில் 198 பேர் உயிரிழப்பு - 35 குழந்தைகள் உட்பட 1,115 பேர் படுகாயம்

படம்
உக்ரைன் போர் நேற்று 3-வது நாளாக நீடித்தது. அந்த நாட்டின் மீது குண்டுமழை பொழிந்து வரும் ரஷ்யா, பெரும் பகுதிகளை கைப்பற்றியிருக்கிறது. தலைநகர் கீவில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 198 பேர் உயிரிழந்துள்ளனர். 35 குழந்தைகள் உட்பட 1,115 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் பங்கேற்காமல் இந் தியா புறக்கணித்தது. கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனின் 800 ராணுவ தளங்களை ரஷ்ய ராணுவம் தகர்த்துள்ளது. அந்த நாட்டின் தலைநகர் கீவில் ரஷ்ய படைகள் நுழைந்துள்ளன. கீவ் விமான நிலையம் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. தலைநகரில் இரு நாடுகளின் வீரர்களுக்கு இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் முழுவதும் நேற்று 3-வது நாளாக போர் நீடித்தது. ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வேலூர்: மாணவியை கொன்று இளைஞர் தற்கொலை https://ift.tt/oQ9NiKZ

படம்
வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவியை, கருகம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (22) என்ற இளைஞர் சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இருவரும் உயிரிழந்த நிலையில் இருப்பதை நேற்று மாலை மாணவியின் பெற்றோர் பார்த்துள்ளனர். தகவலின்பேரில் சத்துவாச்சாரி காவல் துறையினர் விரைந்து சென்று இருவரின் உடலையும் மீட்டு விசாரணை செய்தனர். அதில், பள்ளிக்கு புறப்படும் நேரத்தில் வீட்டுக்குச் சென்றுள்ள இளைஞர், தனது காதலை ஏற்காத மாணவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பதாக தெரியவந்தது.இது தொடர்பாக சத்துவாச்சாரி காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

"ஆம்... எனக்கு தீவிரவாதிகள் தொடர்பு உள்ளது" - ஸ்மிருதி இரானி புகாருக்கு பிரியங்கா அதிரடி பதில் https://ift.tt/nTYpxyR

படம்
புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியிடம், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்த புகார் குறித்து கேள்வி கேட்டபோது, ‘ஆம், எனக்கு தீவிரவாதிகள் தொடர்பு உள்ளது’ என அதிரடியாக அவர் கூறிய பதில் தொடர்பான காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேசம் சட்டப்பேரவை தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவில் அமேதியும் இடம் பெற்றுள்ளது. நேற்றுடன் முடிந்த இதற்கானப் பிரச்சாரத்திற்கு, அமேதி தொகுதி எம்பியும், மத்திய ஜவுளித்துறை அமைச்சருமான ஸ்மிருதி இரானி அமேதி வந்திருந்தார். அப்போது, பிரியங்காவிற்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகப் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் ஸ்மிருதி இரானி. இந்நிலையில் இன்று உத்தர பிரதேசத்தில் பிரச்சாரத்திற்கு வந்த பிரியங்காவிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கொடுத்த பிரியங்கா, ‘ஆம், எனக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது. எனது தந்தை ராஜீவ் காந்தி தீவிரவாதிகளால் வெடி வைத்து கொல்லப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai ...

ரஷ்ய தாக்குதலால் உக்ரைனில் நெருக்கடி: கீவ் நகரில் இருந்து தப்பி போலந்து வந்த இந்தியர்கள் https://ift.tt/crEo5XY

படம்
புதுடெல்லி: ஹைதராபாத்தை சேர்ந்த ராகேஷ் வெடகிரே (33) என்பவர் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் பிஸினஸ் அனலிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார். அங்கிருந்து தப்பியது குறித்து ராகேஷ் கூறியதாவது: கீவ் நகர் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் என்பதை அறிந்து கையில் கிடைத்த உடைகள், ஆவணங்கள் மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு நானும் எனது நண்பர்களும் 4 கார்களில், போலந்து எல்லைக்கு அருகில் உள்ள லிவிவ் நகரை நோக்கிப் புறப்பட்டோம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடைசி 3 கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் உ.பி.யில் முக்கியத்துவம் பெறும் கூட்டணி கட்சிகள்: 57 தொகுதிகளால் பாஜக, சமாஜ்வாதிக்கு பலன் https://ift.tt/SUiEJfx

படம்
புதுடெல்லி: உ.பி. தேர்தலில் இன்னும் 3 கட்டவாக்குப் பதிவுகள் நடைபெற உள்ளன. இவை பிப்ரவரி 27, மார்ச் 3 மற்றும் 7-ம் தேதிகளில் நடைபெறுகின்றன. இம்மூன்றிலும் உள்ள 173-ல் 57 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. பாஜக.வில் அப்னா தளம் 17 மற்றும் நிஷாத் கட்சி16 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அகிலேஷ் சிங் யாதவின் சமாஜ்வாதியில், பிற்படுத்தப்பட்ட ஆதரவு கட்சியான சுஹல்தேவ் பாரதிய சமாஜ் (எஸ்பிஎஸ்பி), 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எஸ்பிஎஸ்பி கடந்த முறை பாஜக கூட்டணியில் இருந்தது. இந்த முறை ராஜ்பர் சமாஜ்வாதி கூட்டணியில் இணைந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியர்கள் நாடு திரும்பும் செலவை மத்திய அரசு ஏற்கிறது https://ift.tt/EdnDG6a

படம்
புதுடெல்லி: உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம் கீவ் நோக்கி சென்றது. ஆனால் ரஷ்ய படையெடுப்பை தொடர்ந்து உக்ரைன் தனது வான்வெளியை மூடியதால் அந்த விமானம் பாதி வழியில் திரும்ப நேரிட்டது. இதையடுத்து உக்ரைன் அண்டை நாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வரும் வழிகளை ஆராய்ந்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் கூறியது. இதுகுறித்து ஹங்கேரி, ஸ்லாவேகியா வெளியுறவு அமைச்சர்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசினார். இரு நாடுகளும் மீட்புப் பணிக்கு சம்மதம் தெரிவித்தன. உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் அதன் எல்லைப் பகுதிகளில் முகாமிட்டுள்ள வெளியுறவு அமைச்சக அதிகாரிகளை சென்றடைய வேண்டும். பிறகு அண்டை நாடுகளின் விமான நிலையங்களுக்கு இந்தியர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என் பதே தற்போதைய திட்டமாகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை பாதுகாக்க உத்தரவிடப்படும்: பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் புதின் உறுதி https://ift.tt/ObYilV8

படம்
புதுடெல்லி: உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை பாதுகாக்க தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உறுதி அளித்துள்ளார். உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, அந்த நாட்டின் தலைநகர் கீவ் உட்பட பெரும்பான்மை பகுதிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. உக்ரைனில் சுமார் 24,000 இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மாணவ, மாணவியர் ஆவர். தலைநகர் கீவ் உட்பட பல்வேறு நகரங்களில் அமைந்துள்ள ராணுவ தளங்களை குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தலைநகர் கீவில் உக்ரைன், ரஷ்ய படைகள் கடும் மோதல்; உதவி கோருகிறார் உக்ரைன் அதிபர் - ஆயத்தமாகும் அமெரிக்க படை

படம்
கீவ்: உக்ரைனின் பெரும் பகுதியை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளன. அந்த நாட்டு தலைநகர் கீவில் உக்ரைன், ரஷ்ய படைகள் இடையே நேற்று நீண்ட நேரம் கடுமையான சண்டை நீடித்தது. போர் தீவிரமானதால் பெரும் பதற்றம் எழுந்திருக்கிறது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா நேற்று முன்தினம் போர் தொடுத்தது. ஒரே நாளில் செர்னோபில் அணு உலை உட்பட உக்ரைனின் பெரும்பகுதிகளை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 361 பேரை மீட்க நடவடிக்கை https://ift.tt/1OK9enJ

படம்
பெங்களூரு: உக்ரைனில் சிக்கியுள்ள கர்நாடக மாநிலத்தவர்களை மீட்பது குறித்து நேற்று கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார். பின்னர் முதல்வர் பசவராஜ் கூறுகையில், ‘‘கர்நாடகாவை சேர்ந்த 361 பேரையும் பத்திரமாக மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் இதுகுறித்து வேண்டுகோள் விடுத்துள்ளேன். தற்போது இந்தியதூதரக அதிகாரிகள் பேருந்துகளில் 100 மாணவர்களை மீட்டுள்ளனர். அவர்களில் 10 பேர்கர்நாடகாவை சேர்ந்தவர்கள். உக்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். விமான சேவை தொடங்கப்பட்டதும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் பத்திரமாக அழைத்து வரப்படுவார்கள்’’ என்றார் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உக்ரைனில் ரஷ்யாவின் உக்கிரம் ஏன்?

படம்
லியோ டால்ஸ்டாய் தனது ‘போரும் அமைதியும்’ நாவலை இவ்வாறு தொடங்குகிறார், “நல்லது இளவரசே! ஜெனோவும் லுக்காவும் தற்போது நெப்போலியன் போனபார்ட்டின் குடும்பத்தின் வசமுள்ள நிலப்பரப்புகள் அன்றி வேறில்லை.’’ உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்திலிருந்து 2014-ம் ஆண்டிலிருந்து தன்னாட்சி உரிமை கோரி வரும்டானெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் மாகாணங்களுக்கு சில நாட்களுக்கு முன்பு ரஷ்யா முறையான அங்கீகாரம் அளித்தபோது, எனக்கு ‘போரும் அமைதியும்’ நாவலின் முதல் வரிகள்தான் நினை வுக்கு வந்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேவகோட்டையில் திமுக பெண் கவுன்சிலர் கடத்தல்? https://ift.tt/3A6vRqh

படம்
தேவகோட்டையில் திமுக பெண் கவுன்சிலரை கடத்திச் சென்றதாக அதிமுகவினர் மீது அவரது கணவர் போலீஸில் புகார் கொடுத் துள்ளார். தேவகோட்டை நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில் அதிமுக- 10, காங்கிரஸ்- 6, திமுக- 5, அமமுக- 5, சுயேச்சை- 1 வெற்றி பெற்றுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரஷ்யாவின் தாக்குதலால் விமான போக்குவரத்து நிறுத்தம் - உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப குடும்பத்தினர் பிரார்த்தனை https://ift.tt/jZ0OfFP

படம்
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பால் அந்நாட்டுக்கான விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள இந்திய மாணவர்கள் பத்திரமாக தாயகம் திரும்ப அவர்களின் குடும்பத்தினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை ரஷ்யா தங்கள் பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாக கருதுகிறது. இதனால் உக்ரைன் எல்லையில் படைகளை குவித்து வந்த ரஷ்யா நேற்று உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரஷ்யா-உக்ரைன் விவகாரம்- பாதுகாப்பு அமைச்சரவை குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை https://ift.tt/2ZEOH9W

படம்
ரஷ்யா-உக்ரைன் போர் பதற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காக மத்திய பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உக்ரைன் மீது போர் தொடுத்தது ரஷ்யா: நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு

படம்
மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. அந்த நாட்டின் விமானப்படை, கடற்படை, ராணுவ தளங்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன. ஏவுகணை தாக்குதலும் நடத்தப்படுகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. தலைநகரில் ரஷ்ய போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறப்பதால் அங்கு வசிக்கும் மக்கள் அவசரமாக வெளியேறி வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரஷ்யா மீது ஜி7 நாடுகள் பொருளாதார தடை: உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலை

படம்
வாஷிங்டன்: உக்ரைன் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, ‘‘ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகள் ஓரணியில் திரள வேண்டும். உக்ரைனில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு, அழிவுக்கு ரஷ்யாவே காரணம். நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். ஜி7 நாடுகளின் தலைவர்களுடன் வெள்ளிக்கிழமை (இன்று) ஆலோசனை நடத்தி முக்கிய முடிவு எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 கூட்டமைப்பு சார்பில் ரஷ்யா மீது ஏற்கெனவே பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த நாட்டின் மீது ஜி7 சார்பில் மேலும் பல்வேறு கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று ஜெர்மனி அறிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை- இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை https://ift.tt/nYmAu6f

படம்
கடலூர் மாவட்டம் கோதண்டராமபுரத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார் (31). கூலித்தொழிலாளியான இவர் தனியாக வசித்து வந்துள்ளார். கிடைக்கும் வேலைக்குச் செல்வதோடு அங்குள்ளவர்களிடம் உணவு வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார். கடந்த 21-8-2020 அன்று அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம் அவர் உணவு கேட்டுள்ளார். அச்சிறுமி அவருக்கு உணவு அளித்த போது அவரிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கடலூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நந்தகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் நீதிபதி எழிலரசி நேற்று நந்தகுமாருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சமூகநலத்துறை மூலமாக ரூ.2 லட்சம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உக்ரைனில் சூழும் போர்மேகங்கள்; 20 கி.மீ. தொலைவில் ரஷ்யா படை குவிப்பு: ரஷ்ய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை

படம்
மாஸ்கோ: உக்ரைனில் இருந்து வெறும் 20 கி.மீ. தொலைவில் ரஷ்யா தனது படைகளை குவித்துள்ளது செயற்கைக்கோள் படம் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் உக்ரைனை போர்மேகங்கள் சூழ்ந் துள்ளது உறுதியாகியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையே சமீபகாலமாக போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் உக் ரைன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக் கலாம் என உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வீட்டுப் பணியாளர், உதவியாளர், டிரைவருக்கு ரூ.3.95 கோடி ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி பங்குகள் பரிசு: நிர்வாக இயக்குநர், சிஇஓ வைத்யநாதன் தகவல் https://ift.tt/tDfMbyn

படம்
புதுடெல்லி: தனது கார் டிரைவர், வீட்டுப் பணியாளர் மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கு 9 லட்சம் பங்குகளை பரிசாக அளிப்பதாக ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி வி. வைத்யநாதன் தெரிவித்துள்ளார். தனது பயிற்சியாளருக்கு 3 லட்சம் பங்குகளும், வீட்டுப் பணியாளர் மற்றும் டிரைவருக்கு தலா 2 லட்சம் பங்குகளும், அலுவலக உதவியாளர் மற்றும் வீட்டு உதவியாளருக்கு தலா ஒரு லட்சம் பங்குகளும் பரிசாக அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மொத்தம் 9 லட்சம் பங்குகளை அவர் இவ்விதம் வழங்கியுள்ளதாகசெபி-க்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.3.95 கோடியாகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உலக நாடுகளுக்கு குறைந்த விலையில் கரோனா தடுப்பூசி வழங்கும் இந்திய நிறுவனங்களுக்கு பில்கேட்ஸ் பாராட்டு

படம்
வாஷிங்டன்: கரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகளை தயாரித்து மிகக் குறைந்தவிலையில் உலகம் முழுவதற்கும் விநியோகித்த இந்திய நிறுவனங்களை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பாராட்டியுள்ளார். இந்தியா-அமெரிக்கா இடையிலான சுகாதாரத்துறை உறவு தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட காணொலி கருத்தரங்கில் அவர் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மும்பையில் காணாமல் போன தெரு நாய் திரும்பி வந்ததை கொண்டாடிய மக்கள் https://ift.tt/tW6RKdN

படம்
மும்பை: மும்பை அருகே காணாமல் போன தெரு நாய் திரும்பி வந்ததையடுத்து, அதற்கு ஆரத்தி எடுத்து வரவேற்று கொண்டாடி உள்ளனர் அப்பகுதி பொதுமக்கள். மும்பையின் தாதர் அருகே உள்ள நைகான் பகுதியில் விஸ்கி என்ற நாய் வசித்து வந்தது. அப்பகுதி பொதுமக்கள் விஸ்கிக்கு உணவுப்பொருட்களை வழங்கி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி விஸ்கி காணாமல் போய் உள்ளது. இதையடுத்து, விஸ்கியை தேடும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர். குறிப்பாக, சமூக வலைதளங்களில் விஸ்கி காணாமல் போன தகவலை தெரிவித்து கண்டுபிடித்துத் தர உதவுமாறு கோரிக்கை வைத்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராமர் பாலம் தொடர்பான சுப்பிரமணியன் சுவாமி மனு மீது மார்ச் 9-ம் தேதி விசாரணை: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு https://ift.tt/2puEZBk

படம்
புதுடெல்லி: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி கடந்த 2020-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இதை 3 மாதங்களுக்குப் பின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், "பல மாதங் களாக தனது மனு விசாரணைக்கு வரவில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கோரி நினை வூட்டினேன். ஆனாலும் பலன் இல்லை. முக்கியமான இந்த மனு மீது விரைவில் விசாரணை நடத்த வேண்டும்" என உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உண்டியலில் சேர்த்த சில்லறைகளை கொடுத்து ஸ்கூட்டர் வாங்கிய அசாம் காய்கறி வியாபாரி https://ift.tt/GuvkWLj

படம்
பார்பேட்டா: அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹபிஸூர் அக்ஹாந். காய்கறி வியாபாரம் செய்து வரும் அவருக்கு சொந்தமாக ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. கடந்த ஒராண்டாக அதற்காகபணம் சேகரிக்க ஆரம்பித்தார். அன்றாடம் வரும் வருவாயில் கொஞ்சம் சில்லறைகளை உண்டியலில் போட்டு சேகரித்து வந்தார். ‘சுசூகி ஆக்சஸ் 125’ ஸ்கூட்டரை வாங்க விரும்பிய அக்ஹாந், சுசூகிநிறுவனம் நடத்திய வாகன விற்பனை முகாமுக்குச் சென்று, தனது விருப்பத்தைக் கூறியுள்ளார். இதையடுத்து, அவரது உண்டியல் சேமிப்பு பணம் ஒரு சாக்குப்பையில் கட்டப்பட்டு பார்பேட்டாமாவட்டத்தில் உள்ள சுசூகி ஷோரூமுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத்தியபிரதேச சுரங்கத்தில் செங்கல் சூளை வியாபாரிக்கு கிடைத்த ரூ.1.2 கோடி வைரம் https://ift.tt/PE6MpSB

படம்
போபால்: மத்தியபபிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற வைரச் சுரங்கங்கள் உள்ளன. இந்நிலையில், பன்னா நகரின் கிஷோர்கஞ்ச் பகுதியில் வசிப்பவர் சுஷில் சுக்லா. இவர் வாடகை நிலம் ஒன்றில் சிறிய அளவில் செங்கல் சூளை தொழில்செய்து வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிவகங்கையில் ரிமோட் குண்டு மூலம் நகராட்சி தலைவர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை: சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு https://ift.tt/rAlTkP1

படம்
ரிமோட் குண்டு மூலம் சிவகங்கை நகராட்சித் தலைவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திமுக நிர்வாகி உட்பட அனைவரையும் விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. சிவகங்கை நகராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் மணிமுத்துவுக்கும், திமுகவில் இருந்து பிரிந்துசென்ற முருகனுக்கும் இடையே போட்டி நிலவியது. இதில் முருகன் வெற்றிபெற்று நகராட்சித் தலைவரானார். இந்நிலையில், 2007-ம் ஆண்டு ஜூன் 29-ம் தேதி நகராட்சித் தலைவர் முருகன் நகராட்சி அலுவலகத்தில் இருந்து தனது காரில் வீட்டுக்குப் புறப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடகாவில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலையில் 3 பேர் கைது https://ift.tt/CRFu2ao

படம்
பெங்களூரு: கர்நாடகாவில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கர்நாடகாவின் ஷிமோகாவில் உள்ள சீகேஹ‌ட்டியில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஹர்ஷா (26) கடந்த 20-ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார். ஆத்திரம் அடைந்த இந்துத்துவ அமைப்பினர் ஷிமோகா, பத்ராவதியில் நடத்தியபோராட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகின. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டிஆர்எஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ்? - விரைவில் அறிவிப்பு வெளியாகிறது https://ift.tt/uCnTDSr

படம்
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் சார்பில், மாநிலங்களவை உறுப்பினராக நடிகர் பிரகாஷ்ராஜ் நியமனம் செய்யப்படலாம் என தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திரையுலகில் மட்டுமல்லாது அரசியலிலும் அதிகம் நாட்டமுள்ளவர் பிரகாஷ்ராஜ். இவர் தெலுங்கு திரையுலக நடிகர் சங்க தலைவர் பதவியில் போட்டியிட்டு, நடிகர் மோகன்பாபுவின் மகனான விஷ்ணுவிடம் தோல்வி அடைந்தார். இதனால் தெலுங்கு திரையுலகில் பிரகாஷ் ராஜுக்கென தனி ஆதரவாளர்களும் உண்டு. மேலும், பாஜக வை அதிகம் விமர்சிக்கும் பிரகாஷ் ராஜ் தன்னுடைய கட்சிக்கு வந்தால், மாநிலங்களவையில் பாஜகவை தீவிரமாக விமர்சிக்கலாம் என தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நினைப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத புதிய கூட்டணி; திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை ஏற்பாரா? - அமித் ஷா கேள்வி https://ift.tt/VF4uQXA

படம்
புதுடெல்லி: தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாதபுதிய கூட்டணி பேசப்படுகிறது. இதன் மீதான ஒரு கேள்வியில் அக்கூட்டணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை ஏற்பாரா? என மத்திய அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த பிப்ரவரி 10 முதல் துவங்கி உத்தரபிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தி ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கத் துவங்கி உள்ளார். அதில், தேசிய அளவில் பாஜகவை எதிர்த்து அமைக்க முயலும் புதிய கூட்டணி குறித்தும் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதில், புதிய கூட்டணி அமைக்கும் முயற்சியில் சிவசேனா கட்சியும் இறங்கியுள்ளதே எனக் கேட்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைன் டிக்கெட் இன்று இணையதளத்தில் வெளியீடு https://ift.tt/raFMBmp

படம்
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு கூடுதல் டிக்கெட்களை வழங்குவது என தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. மேலும், மார்ச் மாதம் சுவாமியை சிறப்பு தரிசனம் மற்றும் இலவச தரிசனம் மூலம் தரிசிக்க இன்று (23-ம் தேதி) காலை 9 மணிக்கு இணையதளம் மூலம் ஆன்லைன் டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளது. கரோனா 3-ம் அலை கட்டுப்பாட்டுக்குள் வந்ததால், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கிய பாகிஸ்தான் ராணுவ ஜெனரல்கள் - ‘சுவிஸ் ரகசியங்கள்’ ஆவணத்தில் தகவல்

படம்
சுவிட்ஸர்லாந்தில் உள்ள கிரிடிட் சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கி இருந்த உலகளாவிய அரசியல்வாதிகள், உயர்மட்ட அதிகாரிகள், போதை கடத்தல் தலைவர்கள் அடங்கிய பட்டியல் வெளியாகி உள்ளது. இந்தப் பட்டியலில், பாகிஸ்தானின் முக்கிய அரசியல் தலைவர்கள், ஜெனரல்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவரான ஜெனரல் அக்தர் அப்துர் ரஹ்மான் கான் பெயரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இவர் முஜாஹிதீன் அமைப்பின் உருவாக்கத்தில் மூளையாக கருதப்படுபவர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தான்சானியாவின் யூடியூப் பிரபலம் கிளி பாலுக்கு இந்திய தூதரகம் பாராட்டு https://ift.tt/l4nyTXv

படம்
புதுடெல்லி: தான்சானியாவில் வசிக்கும் யூடியூப் பிரபலமான கிளி பாலுக்கு இந்திய தூதரகம் பாராட்டு தெரிவித்துள்ளது. தான்சானியாவில் வசித்து வருபவர் கிளி பால். இவர் தனியாக யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்தியாவிலிருந்து வெளியாகும் படங்களில் இடம்பெறும் பிரபலமான பாடல்களுக்கு வாயசைத்து அதை யூடியூபில் பதிவேற்றி பிரபலமானவர் கிளி பால். மேலும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் இவர் பிரபலமாக உள்ளார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 20 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். பாலிவுட் பிரபலங்கள் ஆயுஷ்மான் குரானா, குல் பனாக், ரிச்சா சத்தா உள்ளிட்டோர் இவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தனியாக பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான நாடு இந்தியா: விழிப்புணர்வு சுற்றுலா மூலம் கவனம் ஈர்க்கும் இஸ்லாமிய பெண் https://ift.tt/VBjtkU7

படம்
திருவனந்தபுரம்: தனியாகப் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான நாடு இந்தியா என உணர்த்த தனிப் பயணம் மேற்கொண்டுள்ளார் இஸ்லாமியப் பெண் ஒருவர். இந்தியாவின் மாகே யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த, பிரபல பயண வலைப்பதிவர் நஜீரா நவுஷத் (33). தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு இந்தியா பாதுகாப்பானது என்னும் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார். இதற்காக 50 நாட்கள் தனிச் சுற்றுலாவாக பயணம் செய்து வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்