இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இன்னும் 7 ஆண்டுகளில் நானோ ரோபோ உதவியுடன் மனிதர்கள் சாகா வரம் பெறுவர் - கூகுள் முன்னாள் விஞ்ஞானி கணிப்பு

படம்
புதுடெல்லி : இன்னும் 7 ஆண்டுகளில் நானோ ரோபோ உதவியுடன் மனிதர்கள் சாகா வரம் பெறுவர் என கூகுள் நிறுவன முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல் கூறியுள்ளார். கூகுள் நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல்(75). கம்ப்யூட்டர் இன்ஜினீயரான இவர், இதுவரை 147 முன் கணிப்புகளை கூறியுள்ளார். இவற்றில் 86 சதவீதம் சரியாக இருந்துள்ளது. 2000-ம் ஆண்டுக்குள் செஸ் போட்டியில் மனிதர்களை, கம்ப்யூட்டர் வெல்லும் என இவர் கடந்த 1990-ம் ஆண்டே கூறினார். அது சரியாக இருந்தது. அதேபோல் இன்டர்நெட் வளர்ச்சி, வயர்லெஸ் தொழில்நுட்ப மாற்றம் அதிகளவில் இருக்கும் என இவர் கூறிய முன் கணிப்புகளும் மிகச்சரியாக இருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

17 போர்க் கப்பல்கள் வாங்க உள்நாட்டு நிறுவனங்களுடன் ரூ.19,600 கோடிக்கு ஒப்பந்தம் https://ift.tt/eHiw1CU

படம்
புதுடெல்லி : மத்திய பாதுகாப்பு அமைச்சகம், கடற்படைக்கு தேவையான 17 கப்பல்கள் வாங்க உள்நாட்டு கப்பல் கட்டும் நிறுவனங்களுடன் ரூ.19,600 கோடி மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. மத்திய அரசு ராணுவ தள வாடங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்சார்பு இந்தியா, மேக் இன் இந்தியா ஆகிய இலக்குகளை வலுப்படுத்தும் விதமாக இந்திய கடற்படைக்குத் தேவையான 11 நவீன ஆழ்கடல் ரோந்து கப்பல்கள் மற்றும் 6 நவீன ஏவுகணை தாங்கி கப்பல்களை வாங்க உள்நாட்டு கப்பல் கட்டும் நிறுவனங்களுடன் ரூ.19,600 கோடி மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நேற்று முன்தினம் கையெழுத் தானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேற்கு வங்கத்தில் ரம்ஜான் நோன்பு கால சலுகை - முஸ்லிம் அரசு ஊழியர்கள் பிற்பகல் 3.30 மணிக்கு வீடு திரும்ப அனுமதி https://ift.tt/g4d1mK6

படம்
புதுடெல்லி : கடந்த வாரம் துவங்கிய ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்கள் உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் நோன்பு இருப்பது வழக்கம். சூரியன் உதயம் முதல் அஸ்தமனம் வரை கடைபிடிக்கப்படும் நோன்பினால் பலரும் சோர்ந்து விடுவது உண்டு. இதற்காக முஸ்லிம்கள் தங்கள் அன்றாடப் பணியிலிருந்து சற்று முன்னதாக மாலையில் வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில், மேற்கு வங்கத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் மதரஸா கல்வித் துறையின் பொறுப்பை முதல்வர் மம்தா கடந்த மார்ச் 26-ல் ஏற்றார். மறுநாளே முஸ்லிம் அரசு ஊழியர்களுக்காக முதல்வர் மம்தா தனது உத்தரவில், “மேற்கு வங்க அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை வேலை நேரத்திற்கு முன்னதாக பிற்பகல் 3.30 மணிக்கு வீடு திரும்ப அனுமதிக்கலாம்” என்று கூறியுள்ளார். இந்த உத்தரவு மாநில அரசு அலுவலகங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இன்னும் 7 ஆண்டுகளில் நானோ ரோபோ உதவியுடன் மனிதர்கள் சாகா வரம் பெறுவர் - கூகுள் முன்னாள் விஞ்ஞானி கணிப்பு

படம்
புதுடெல்லி : இன்னும் 7 ஆண்டுகளில் நானோ ரோபோ உதவியுடன் மனிதர்கள் சாகா வரம் பெறுவர் என கூகுள் நிறுவன முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல் கூறியுள்ளார். கூகுள் நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல்(75). கம்ப்யூட்டர் இன்ஜினீயரான இவர், இதுவரை 147 முன் கணிப்புகளை கூறியுள்ளார். இவற்றில் 86 சதவீதம் சரியாக இருந்துள்ளது. 2000-ம் ஆண்டுக்குள் செஸ் போட்டியில் மனிதர்களை, கம்ப்யூட்டர் வெல்லும் என இவர் கடந்த 1990-ம் ஆண்டே கூறினார். அது சரியாக இருந்தது. அதேபோல் இன்டர்நெட் வளர்ச்சி, வயர்லெஸ் தொழில்நுட்ப மாற்றம் அதிகளவில் இருக்கும் என இவர் கூறிய முன் கணிப்புகளும் மிகச்சரியாக இருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஏழை சிறுமியின் உயிரை காப்பாற்ற ரூ.7 லட்சம் ஜிஎஸ்டி ரத்து - அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சசி தரூர் புகழாரம் https://ift.tt/QHOV9ZT

படம்
புதுடெல்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஒரு இளம் தம்பதியரின் மகள் நிகாரிகா அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். ரூ.65 லட்சம் மதிப்புள்ள மருந்துகளை செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். சிறுமியின் பெற்றோர் பல்வேறு வகைகளில் போராடி ரூ.65 லட்சத்தை திரட்டி வெளிநாட்டில் இருந்து மருந்துகளை வரவழைத்தனர். அந்த மருந்துகளுக்கு ரூ.7 லட்சம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஏழை தாய், தந்தையால் ஜிஎஸ்டி வரிக்கான பணத்தை திரட்ட முடியவில்லை. அவர்கள் என்னை அணுகினர். இதுதொடர்பாக கடந்த மார்ச் 15-ம் தேதி மத்திய நிதியமைச்சருக்கு கடிதம் எழுதினேன். ஆனால் பதில் கிடைக்கவில்லை. கடந்த மார்ச் 26-ம் தேதி சிறுமியின் பெற்றோர் மீண்டும் என்னை அணுகினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மோடியின் கல்விச் சான்றிதழ் கேட்டு மனு - கேஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் : குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/wqzW6Fs

படம்
அகமதாபாத்: பிரதமர் மோடியின் பட்டப் படிப்புகல்விச் சான்றிதழ் நகல்களை பிரதமர் அலுவலகம் வழங்கத் தேவையில்லை என்று உத்தரவிட்ட குஜராத் உயர் நீதிமன்றம், இது தொடர்பாக மனு தாக்கல் செய்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது. பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன. இந்நிலையில், பிரதமர் மோடியின் பட்டப் படிப்பு சான்றிதழ் நகல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) வழங்க உத்தரவிடக் கோரி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஓசூர் | ‘கஞ்சா சாக்லேட் ’ தயாரித்து விற்ற 4 பேர் கைது https://ift.tt/xlgALJk

படம்
ஓசூர்: ஓசூரில், ‘கஞ்சா சாக்லேட்’ தயாரித்து விற்பனை செய்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். ஓசூரில், ‘கஞ்சா சாக்லேட்’ விற்பனை செய்யப்படுவதாக நகரப் போலீஸாருக்குப் புகார்கள் வந்தன. இதையடுத்து, எஸ்.ஐ. பிரபாகரன் தலைமையிலான போலீஸார் பழைய பெங்களூரு சாலையில் நேற்று முன்தினம் இரவு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் கஞ்சா மற்றும் ‘கஞ்சா சாக்லேட்’கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிலிப்பைன்ஸ் படகு விபத்து 31 பேர் உயிரிழப்பு

படம்
மணிலா: தெற்கு பிலிப்பைன்ஸ் பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு திடீரென தீப்பிடித்ததில் அதில் பயணம் செய்த 31 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து பேசிலன் மாகாணத்தின் ஆளுநர் ஜிம் ஹட்டாமேன் கூறியதாவது. தெற்கு துறைமுக நகரமான ஜாம்போங்காவில் இருந்து சுலு மாகாணத்தில் உள்ள ஜோலோ நகருக்கு 250 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு நள்ளிரவு நேரத்தில் பேசிலன் நகருக்கு அருகே வந்தபோது திடீரென தீப்பிடித்தது. தீயிலிருந்து தப்பிக்க படகிலிருந்து பலர் கடலில் குதித்தனர். இந்த சம்பவத்தில் 31 பேர் உயிரிழந்தனர். 7 பேரை காணவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்க இந்து பல்கலை.க்கு ரூ.8.21 கோடி நன்கொடை https://ift.tt/PwIN9GL

படம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள இந்து பல்கலைக்கழகத்துக்கு, இந்திய - அமெரிக்க தொழிலதிபர் ரமேஷ் புதாடா 1 மில்லியன் டாலர் (ரூ.8.21 கோடி) நன்கொடை வழங்கியுள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமெரிக்க இந்து பல்கலைக்கழகம் கடந்த 1989-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு அங்குள்ள ஸ்டார் பைப் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரமேஷ் புதாடா 1 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கினார். அவருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் பாராட்டு தெரிவித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராகுல் பதவி இழப்பு குறித்து ஜெர்மனி வெளியுறவு துறை கருத்து: காங்கிரஸுக்கு மத்திய சட்ட அமைச்சர் கடும் கண்டனம் https://ift.tt/zEf7HNq

படம்
புதுடெல்லி: இந்திய நீதித் துறையில் அந்நிய சக்திகள் தலையிட முடியாது என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திஎம்பி பதவியை இழந்துள்ளார். இதுகுறித்து ஜெர்மனி வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் நேற்று முன்தினம் கூறும்போது, “ராகுல் காந்தி மீதான தீர்ப்பு,அவர் தகுதியிழப்பு செய்யப்பட்டதை கவனத்தில் கொண்டுள்ளோம். அவர் மேல்முறையீடு செய்ய இருக்கிறார். இந்திய நீதித் துறையின் நேர்மை, இந்தியாவின் ஜனநாயக கொள்கைகள் ராகுல் காந்தியின் வழக்கிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத்திய பிரதேசத்தில் ராமநவமி விழாவில் பரிதாபம்: கோயில் கிணறு சுவர் இடிந்து விழுந்து 13 பக்தர்கள் உயிரிழப்பு https://ift.tt/uYUHRKP

படம்
இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கோயில் கிணற்றின் சுவர் இடிந்து விழுந்ததில் 13 பக்தர்கள் உயிரிழந்தனர். 17 பேர் காயம் அடைந்தனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், படேல் நகரில் பழமையான பாலேஷ்வர் மகாதேவ் கோயில் உள்ளது. இக்கோயிலில் சுமார் 40 அடி ஆழமுள்ள பழங்கால கிணறு உள்ளது. கான்கிரீட் சிலாப் கொண்டு இந்த கிணறு மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று ராமநவமியை முன்னிட்டு இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கிணற்றின் கான்கிரீட் சிலாப் மீது அதிக பக்தர்கள் ஏறியதால் பாரம் தாங்காமல் சிலாப் மற்றும் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதனால், சுமார் 30 பக்தர்கள் கிணற்றில் விழுந்து, இடிபாடுகளில் சிக்கினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் மோடி சர்ப்ரைஸ் விசிட் https://ift.tt/kTmEyah

படம்
புதுடெல்லி: நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி சர்ப்ரைஸ் விசிட் மேற்கொண்டு, பணிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் கவுன்சில் ஹவுஸ் என்று அழைக்கப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடம், வைஸ்ராய் லார்ட் இர்வினால் கட்டப்பட்டது. இது, சுமார் 96 வருடங்களுக்கு முன் ஜனவரி 18-ல் திறக்கப்பட்டு இன்று வரை செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் கூடுதல் வசதிகளுக்காக புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கு கடந்த 2020 டிசம்பரில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நாடாளுமன்ற கட்டிடம் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது: துபாயிலிருந்து சென்னை வந்தபோது பிடிபட்டார் https://ift.tt/doQa08A

படம்
சென்னை: ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துபாலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம், தங்களிடம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் வட்டியாக வழங்கப்படும் என விளம்பரம் செய்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகை திருட்டு வழக்கில் கைதான பணிப்பெண்ணிடம் இருந்து மேலும் 43 பவுன் நகைகள் மீட்பு https://ift.tt/6L1FiU4

படம்
சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருடுபோன வழக்கில் கைது செய்யப்பட்ட பணிப்பெண்ணிடமிருந்து மேலும் 43 பவுன் தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, தனது வீட்டு லாக்கரில் இருந்த தங்கம், வைரம் மற்றும் வெள்ளி என 60 பவுன் நகை திருடப்பட்டு விட்டதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கடந்தமாதம் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் விசாரணை நடத்தினர். ஐஸ்வர்யா வீட்டில் வேலை செய்து வந்த சென்னை மந்தைவெளி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஈஸ்வரி (46), கார் ஓட்டுநர் திருவேற்காடு மனசுரா கார்டனைச் சேர்ந்த வெங்கடேசன் (44) ஆகிய இருவரிடமும் போலீஸார் விசாரித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உக்ரைன், சீனாவில் இருந்து கரோனாவால் திரும்பிய இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் https://ift.tt/zHtgBja

படம்
புதுடெல்லி: கரோனா பரவல் காலத்திலும், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த போதும், சீனா, உக்ரைன், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் மருத்துவம் பயின்ற இந்திய மாணவர்கள் ஏராளமானோர் நாடு திரும்பினர். அவர்கள் மருத்துவ படிப்புகளை தொடர முடியாத சூழல் ஏற்பட்டதால், இங்குள்ள மருத்துவ கல்லூரிகளில் அவர்கள் சேர்ந்து தங்கள் பட்டப் படிப்பை முடிக்க வழி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களின் மருத்துவப் படிப்பும், வாழ்க்கையும் வீணாக கூடாது என்பதை கருத்தில் கொண்ட உச்ச நீதிமன்றம், அவர்கள் மருத்துவப் படிப்பு மற்றும் பயிற்சியை முடித்து மருத்துவத் தொழிலை தொடர மத்திய அரசு மற்றும் தேசிய மருத்துவ ஆணையம் ஆகியவை தீர்வு காண வேண்டும் என கடந்தாண்டு பரிந்துரை செய்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜனநாயகத்தின் தாயாக இருக்கிறது இந்தியா: ஜனநாயக உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம் https://ift.tt/r9h0vfT

படம்
புதுடெல்லி: ஜனநாயகத்தின் இரண்டாவது உச்சி மாநாட்டை தென் கொரியா நடத்தியது. இதில் தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கோஸ்டா ரிகா அதிபர் ரோட்ரிகோ சாவ்ஸ் ரோப்லஸ், ஜாம்பியா அதிபர் ஹகைன்டி, நெதர்லாந்து பிரதமர் மார் ரூட் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். இதில் ‘ஜனநாயகம் வழங்கும் பொருளாதார வளர்ச்சி மற்றும் பகிரப்பட்ட வளம்’ என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு: மே 10-ம் தேதி கர்நாடகா தேர்தல் https://ift.tt/Z5XBjvy

படம்
புதுடெல்லி: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் நேற்று அறிவித்தார். கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் மே 24-ம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில், டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹேக்கர்கள் வசமிருந்து தெற்கு ரயில்வேயின் ஃபேஸ்புக் பக்கம் மீட்பு! https://ift.tt/5fzIVHL

படம்
சென்னை: தெற்கு ரயில்வேயின் ஃபேஸ்புக் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்தனர். இந்நிலையில், இந்தப் பக்கம் தற்போது ஹேக்கர்கள் வசமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயின் சமூக வலைதள பக்கங்களில் ரயில் தொடர்பான முக்கிய அறிவிப்புகள், பயணிகள் மற்றும் பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தெற்கு ரயில்வேயின் ஃபேஸ்புக் பக்கத்தினை மர்ம நபர்கள் ஹேக் செய்தனர். குழந்தை போன்ற கார்ட்டூன் புகைப்படத்தை முகப்புப் படமாகவும் வைத்தனர். அதோடு வியட்நாம் மொழியில் கருத்துகளை பதிவிட்டனர். இந்நிலையில், இந்த பக்கம் மீட்கப்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

லஞ்ச வழக்கில் சிக்கிய கர்நாடக பாஜக எம்எல்ஏ கைது https://ift.tt/C750ybM

படம்
பெங்களூரு : கர்நாடகாவின் சன்னகிரி தொகுதி பாஜக எம்எல்ஏ மதால் விருப்பாக் ஷப்பா. இவர் அரசின் சோப் மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத் தலைவராக உள்ளார். இவரது மகன் பிரஷாந்த் சோப் நிறுவனத்தின் ரூ.3 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்க ரூ.81 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து அந்த நிறுவனத்தினர் கடந்த 3-ம் தேதி முதல்கட்டமாக ரூ.40 லட்சம் லஞ்சமாக கொடுத்தபோது லோக் ஆயுக்தா அதிகாரிகள் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.6 கோடி ரொக்கம் சிக்கியது. இந்த வழக்கில் மாதல் விருப்பாக் ஷப்பா, அவரது மகன் பிரஷாந்த் ஆகியோருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த 7-ம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் அவரை விசாரிக்க அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நடராஜன் இருவரின் ஜாமீனை ரத்துசெய்து உத்தரவிட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சவுதி பேருந்து விபத்தில் 20 யாத்ரீகர்கள் உயிரிழப்பு

படம்
ரியாத் : சவுதி அரேபியாவில் உள்ளபுனிதத் தலங்களான மெக்கா மற்றும் மெதீனாவுக்கு ஆண்டின் அனைத்து நாட்களிலும் முஸ்லிம்கள் உம்ரா புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் சவுதி அரேபியாவின் தெற்கில் உள்ள ஆசிர் மாகாணத்தில் உம்ரா புனித யாத்திரை செல்வோரை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று மெக்காநகரை நோக்கி நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. சவுதி அரேபியா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த யாத்ரீகர்கள் அதில் இருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரசு இல்லத்தில் இருந்து வெளியேற ராகுல் முடிவு - உத்தரவுக்கு கட்டுப்படுவதாக மக்களவை செயலகத்துக்கு பதில் https://ift.tt/h1Lfug4

படம்
புதுடெல்லி: அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு கட்டுப்படுகிறேன் என்று மக்களவை செயலகம் அனுப்பிய நோட்டீஸுக்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2004-ல் அமேதி தொகுதியில் இருந்து மக்களவைக்கு முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டார். மக்களவை எம்.பி. என்ற முறையில் அவருக்கு டெல்லியில் எண் 12, துக்ளக் லேனில் உள்ள அரசு பங்களா கடந்த 2005-ல் ஒதுக்கப்பட்டது. அப்போது முதல் ராகுல் அதில் வசித்து வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சாவர்க்கர் பற்றிய விமர்சனம் - ராகுலுக்கு சரத் பவார் அட்வைஸ் https://ift.tt/BPsoYjX

படம்
புதுடெல்லி : மக்களவை எம்.பி. பதவியை இழந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் “நான் காந்தி, சாவர்க்கர் அல்ல, காந்திகள் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்’’ என்றார். இந்த பேச்சு காங்கிரஸின் கூட்டணி கட்சிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே ராகுலின் சாவர்க்கர் குறித்த பேச்சுக்கு கடுமையாக எதிர்வினை ஆற்றினார். "சாவர்க்கரை இழிவுபடுத்துவதை எப்போதும் சகித்துக் கொள்ள மாட்டோம். சாவர்க்கர் எங்களின் கடவுள். அவரை அவமரியாதை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் போராட தயாராகிக் கொண்டு இருக்கிறோம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னை | கஞ்சா கடத்தல் வழக்கில் பெண்ணுக்கு 5 ஆண்டு கடுங்காவல்: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/7yoADWH

படம்
சென்னை: கஞ்சா கடத்திய வழக்கில் பெண்ணுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்றம் 4 பெண்கள் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பளித்துள்ளது. பெரியமேடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சூளை சைடன்ஹாம் சாலையில் கஞ்சா விற்பனை நடந்துவருவதாக கடந்த 2019 ஆகஸ்ட் 15ம் தேதி (சுதந்திர தினத்தன்று) போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து புளியந்தோப்பிலிருந்து சென்ட்ரல் வரும் சாலையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த ஆட்டோவை மறித்து சோதனை நடத்தியதில் அதில் 3 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் ரூ.2 லட்சத்து 52,260 ரொக்கமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதுவை பாஜக நிர்வாகி கொலையில் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்த 7 பேர் https://ift.tt/R6Ig2v5

படம்
திருச்சி: புதுச்சேரி பாஜக நிர்வாகி கொலை வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் நேற்று 7 பேர் சரணடைந்தனர். புதுச்சேரி வில்லியனூரை அடுத்த கணுவாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமரன்(45). மங்களம் தொகுதி பாஜக பொறுப்பாளரான இவர், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் நாட்டு வெடிகுண்டை வீசியதுடன், கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் செந்தில்குமரனை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.18 கோடியில் 10 பஸ்கள் காணிக்கை https://ift.tt/WqylaEk

படம்
திருமலை : திருப்பதி தேவஸ்தானம் திருமலையில் காற்றில் மாசு கலப்பதை தடுக்கும் விதத்தில் தமது அதிகாரிகளுக்கு எலக்ட்ரிக் கார்களை வழங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று ஹைதராபாத் மேகா இன்ஜினீயரிங் நிறுவனம் ஒரு எலக்ட்ரிக் பஸ் ரூ.1.8 கோடி வீதம் ரூ.18 கோடி செலவில் மொத்தம் 10 எலக்ட்ரிக் சொகுசு பஸ்களை வழங்கியது. அவற்றை திருமலை கோயில் முன்பு வைத்து சிறப்பு பூஜைகள் செய்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி மற்றும் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியிடம் அவற்றுக்கான சாவிகளை மேகா இன்ஜினீயரிங் நிறுவனத்தார் ஒப்படைத்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கைது நடவடிக்கையில் இருந்து பாதுகாப்பு கோரிய கவிதா மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம் https://ift.tt/x2kdzUD

படம்
புதுடெல்லி : டெல்லி மதுபான விற்பனை கொள்கை ஊழல் வழக்கில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், பிஆர்எஸ் கட்சியின் மேல்சபை உறுப்பினரு மான கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இவ்வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறை கவிதாவிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் கைது நடவடிக்கையிலிருந்து பாதுகாக்கவும், அமலாக்கத் துறையின் தொடர் விசாரணையிலிருந்து விலக்குக் கோரியும் கவிதா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருப்பு உடையணிந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் - அமளியால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கம் https://ift.tt/OeTQVWl

படம்
புதுடெல்லி : ராகுல் காந்தி பதவி தகுதி இழப்பு, தொழிலதிபர் அதானி விவகாரம் ஆகியவற்றைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருப்பு உடையணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களின் அமளியால் நாடாளுமன்றத்தின் 2 அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தகுதி நீக்கத்தை அடுத்து அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ் https://ift.tt/H9nzDZ5

படம்
டெல்லி : அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்ற தீர்ப்பையடுத்து வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு ராகுல் காந்தி 2005ம் ஆண்டு முதல் வசித்து வரும் அரசு பங்களாவை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ராகுல் காந்தி 2005ம் ஆண்டு முதல் வசித்துவரும் துக்ளக் லேன் பங்களாவை காலி செய்யும்படி மக்களவை வீட்டுக் குழுவில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அந்த நோட்டீஸ் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று ராகுல் காந்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு - 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி

படம்
டென்னிசி : அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர். டென்னிசி மாகாணத்தின் தலைநகரான நாஷ்வில்லில் உள்ள தொடக்கப் பள்ளியில் மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 3 குழந்தைகள் தவிர பள்ளி ஊழியர்கள் 3 பேரும் உயிரிழந்ததை நாஷ்வில் நகர காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இலங்கை அதிபருடன் இந்திய குழு சந்திப்பு: எரிசக்தித் துறை மேம்பாடு குறித்து கலந்துரையாடல்

படம்
கொழும்பு : இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பில் இந்திய உயர்மட்டக் குழு நேற்று சந்தித்தது. அப்போது எரிசக்தித் துறையில் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து முன்னெடுத்து வரும் பணிகளின் நிலவரம் குறித்து இந்திய குழுவினர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுத்துரைத்தனர். இலங்கையில் இந்திய அரசின் பங்களிப்புடன் எரிசக்தி கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு இலங்கை திரிகோணமலையில் 100 மெகாவாட் சோலார் ஆலை அமைக்க இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், இவ்விரு நாடுகளும் இணைந்து இலங்கையில் எரிபொருள் சேமிப்பு நிறுவனத்தை நடத்திவருகின்றன. இந்நிலையில், எரிசக்தித் துறையில் நடந்த முன்னேற்றங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்திய சிறுமி உயிரிழப்பு - குற்றவாளிக்கு 100 ஆண்டு சிறை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

படம்
வாஷிங்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 வயது சிறுமி உயிரிழப்புக்குக் காரணமான நபருக்கு 100 ஆண்டு சிறைத் தண்டனையை லூசியாணா நீதிமன்றம் வழங்கியுள்ளது. அமெரிக்காவின் லூசியாணா மாகாணம் ஷிரேவ்போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் லீ ஸ்மித் (35). இவர் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் மான்க்ஹவுஸ் ட்ரைவ் என்ற ஓட்டலில் தங்கியிருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் மாநில கட்சிகளை காங். ஆதரிக்க வேண்டும் - அகிலேஷ் யாதவ் வேண்டுகோள் https://ift.tt/qlfHIFZ

படம்
லக்னோ : பாஜகவுக்கு எதிரான போராட்டத் தில் மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத்தின் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இதன்காரணமாக மக்களவை உறுப்பினர் பதவியை அவர் இழந்துள்ளார். அவருக்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு: மத்திய அரசு அரசாணை வெளியீடு https://ift.tt/v5bDiP1

படம்
புதுடெல்லி : மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுவந்த ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. 2023-24 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது. இது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்துகொண்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது. இத்திட்டம் மூலம் நாடு முழுவதும் 5.97 கோடி குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகம் - குஜராத் இடையே நீண்டகால உறவு: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி https://ift.tt/tu8olKf

படம்
புதுடெல்லி : தமிழகம் - குஜராத் இடையே பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பிணைப்பு இருக்கிறது என ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். கடந்த 2014-ல் பிரதமராக பதவியேற்றது முதல், மாதம்தோறும் கடைசி ஞாயிறன்று வானொலியில் ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். 99-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் அவர் நேற்று பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மதுரையில் அமமுக நிர்வாகியை கொலை செய்த மனைவி கைது https://ift.tt/MO3yoBV

படம்
மதுரை : மதுரையில் அமமுக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரின் மனைவியை போலீஸார் கைது செய்தனர். திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சர்க்கரை ( 51). இவரது மனைவி அன்னலட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சர்க்கரை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். மேலும், அம்மா மக்கள் முன் னேற்றக் கழகத்தில் பகுதிச் செயலராகவும் பணியாற்றினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு https://ift.tt/vQNFejT

படம்
புதுடெல்லி : மத்திய பொருளாதார விவகாரங் களுக்கான அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அமைச்சரவை முடிவுகள் குறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முடிவால் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியர்களும் பயனடைவார்கள். இதனால் மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.12,815 கோடி கூடுதல் செலவாகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராகுல் தகுதி இழப்புக்கு அதானி விவகாரம் காரணம் அல்ல - ரவி சங்கர் பிரசாத் விளக்கம் https://ift.tt/CS8VeUx

படம்
புதுடெல்லி: மக்களவைச் செயலகம் தகுதி இழப்பு செய்தது குறித்து நேற்று பேட்டியளித்த ராகுல் காந்தி, ‘‘மக்களவையில் எனது அடுத்த பேச்சு குறித்து பிரதமர் நரேந்திர மோடி பயந்துவிட்டார். அதனால் நான் தகுதி இழப்பு செய்யப்பட்டேன்’’ என கூறினார். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த பாஜக.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது: அதானி குழுமத்தின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பியதால்தான், மக்களவையில் இருந்து என்னை தகுதி இழப்பு செய்துள்ளனர் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது பொய்யானது, அடிப்படை ஆதாரமற்றது. அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்துக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பொய்யான கருத்துகளை தெரிவித்து விஷயத்தை திசை திருப்ப ராகுல் முயற்சிக்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதிய வரி முறையின் கீழ் வருமானம் ரூ.7 லட்சத்தைவிட சற்று கூடுதலாக இருந்தால் நிவாரணம் https://ift.tt/4EuO52F

படம்
புதுடெல்லி: 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில், புதிய வரி முறையின் கீழ் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது. இந்நிலையில், புதிய வரிமுறையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு மத்திய அரசு தற்போது கூடுதல் சலுகையை அறிவித்துள்ளது. தற்போதைய நடைமுறையின் படி, புதிய வரிமுறையை தேர்ந்தெடுப்பவர்களின் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரையில் இருந்தால் அவர்கள் வரி எதுவும் செலுத்தத் தேவையில்லை. அதுவே, அவர்களது வருமானம் ரூ.7,00,100- ஆக இருந்தால், அதாவது ஆண்டு வருவாயில் வெறும் ரூ.100 கூடியிருந்தால், அவர்கள் ரூ.25,010 வரி செலுத்த வேண்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல்? - தேர்தல் ஆணையம் இறுதி முடிவு https://ift.tt/Gw7pdaZ

படம்
புதுடெல்லி: சிறைக்கு செல்ல அஞ்சவில்லை. சிறையில் அடைத்தாலும், தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பேன். வாழ்நாள் முழுவதும் தடை விதித்தாலும், மக்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்புவேன் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். கடந்த 2019 மக்களவை தேர்தலின்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பிரச்சாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. இதன் காரணமாக, கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி எம்.பி. பதவியையும் அவர் இழந்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

'மை பேபி, உன் அன்பு விலை மதிப்பற்றது' - ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு சிறையிலிருந்து காதல் கடிதம் எழுதிய சுகேஷ் https://ift.tt/nLcxXgO

படம்
டெல்லி : டெல்லி திஹார் சிறையில் இருக்கும் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு காதல் கடிதம் எழுதியுள்ளார். 'எனது பேபி ஜாக்குலின் பெர்னாண்டஸ்' எனத் தொடங்கும் அக்கடிதத்தில், ``என் பொம்மா இந்த பிறந்த நாளில் உன்னை ஆயிரம் மடங்கு மிஸ் செய்கிறேன். என்னைச் சுற்றியிருக்கும் உனது எனர்ஜியையும் மிகவும் மிஸ் செய்கிறேன். அதை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. ஆனால், என்மீது உனக்கு இருக்கும் அன்பு ஒருபோதும் முடிவடையாதது என்பது எனக்குத் தெரியும். உங்கள் அழகான இதயத்தில் என்ன இருக்கிறது என்பதையும் நான் அறிவேன். . from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கனடாவில் காந்தி சிலையை சிதைத்த காலிஸ்தான் பிரிவினைவாதிகள்

படம்
டொரண்டோ : காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் தலைமறைவான நிலையில் கனடாவின் ஒன்டோரியோ நகரில் காந்தி சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிதைத்துள்ளனர். வெண்கலத்தால் 6 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த காந்தி சிலையின் முகம் சிதைக்கப்பட்டுள்ளது. மேலும் சிலையின் மீது பெயிண்டை ஊற்றி நாசம் செய்துள்ளனர். மேலும் இந்திய அரசு, பிரதமர் மோடி ஆகியோருக்கு கண்டனமும் தெரிவித்து வாசகங்களை சிலையின் அடிப்பாகத்தில் எழுதியுள்ளனர். காந்தி கையில் உள்ள தடியில் காலிஸ்தான் கொடியை பறக்கவிட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

2025-ம் ஆண்டுக்குள் காசநோய்க்கு முற்றுப்புள்ளி - பிரதமர் நரேந்திர மோடி உறுதி https://ift.tt/A5njt6W

படம்
புதுடெல்லி : உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உலக காசநோய் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: காசநோயை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில், காசநோய்க்கு எதிரான இந்தப் போராட்டத்தில் இந்தியா, ஊட்டச்சத்தை மேம்படுத்துதல், புத்தாக்கத்தின் மூலம் சிகிச்சை, தொழில்நுட்பத்தின் முழுப்பயன்பாடு, ஆரோக்கியம், நோய் தடுப்பு, ஃபிட் இந்தியா, யோகா போன்ற பல முன்னெடுப்பு திட்டங்களை செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜனநாயகத்தை ராகுல் இழிவுப்படுத்தியதால் ‘காந்தி’ பெயர் வைத்த அனைவரையும் குற்றம் சொல்ல முடியாது - கிரண் ரிஜிஜூ கருத்து https://ift.tt/8T2K37m

படம்
புதுடெல்லி: ‘‘இந்திய ஜனநாயகத்தை ராகுல் காந்தி இழிவுப்படுத்தியதால், ‘காந்தி’ என்று பெயர் வைத்தவர்கள் அனைவரையும் குற்றம் சொல்ல முடியாது’’ என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ‘மோடி’ பெயரை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதையடுத்து அவர் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு நேற்றுமுன்தினம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து நேற்று அவர் மக்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் எம்.பி. பதவியிலிருந்து ராகுல் தகுதி நீக்கம் | முழு விவரம் https://ift.tt/OFqIdSi

படம்
புதுடெல்லி : குற்றவியல் வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் டெல்லியில் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?’’ என்று விமர்சித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எனது குடும்பத்தை அவமதித்த பாஜக தலைவர்களுக்கு எந்த நீதிபதியும் தண்டனை விதிக்கவில்லை: பிரியங்கா காந்தி https://ift.tt/pqCE9WP

படம்
புதுடெல்லி : எனது குடும்பத்தை அவமதித்த பாஜக தலைவர்களுக்கு சிறை தண்டனை விதிக்க எந்த நீதிபதியும் உத்தரவிடவில்லை என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தகுதி நீக்கம் தொடர்பாக பேசியுள்ள ப்ரியங்கா காந்தி, "ராகுல் காந்தி, நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அதானி குழுமம் குறித்து கேள்வி எழுப்பியதால் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார். நாங்கள், நாட்டிற்காக தியாகம் செய்தவர்களின் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள், போர்களை கண்டு அஞ்சி தப்பி ஓட மாட்டோம். உங்களுக்கு என்ன தோணுகிறோதோ அதை செய்யுங்கள். ஆனால், காங்கிரஸ், ராகுல் என நாங்கள் அனைவரும் அதை எதிர்த்து போராடுவோம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு https://ift.tt/2DXGKwl

படம்
புதுடெல்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்துவென்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதனை அதிகாரபூர்வமாக மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் செய்தியாளர்களிடம் அறிவித்தார். அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவிகிதத்தில் இருந்து 42 சதவிகிதமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 1ம் தேதி முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. . from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

'ஒவ்வொரு நாளும் உங்களுக்காகக் காத்திருப்பது..' - புற்றுநோயால் அவதிப்படும் நவ்ஜோத் சித்துவின் மனைவி https://ift.tt/hlfQrdb

படம்
பஞ்சாப் : பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சிறையில் இருக்கும் தனது கணவர் குறித்து உருக்கமான குறிப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக, "நவ்ஜோத் சிங் சித்து செய்யாத குற்றத்திற்காக சிறையில் இருக்கிறார். ஒவ்வொரு நாளும் உங்களுக்காகக் காத்திருப்பது உங்களை விட அதிகமாகத் துன்பப்பட வைக்கிறது. வழக்கம் போல் உங்கள் வலியைப் போக்கும் முயற்சியாக இதைப் பகிர்ந்துகொள்கிறேன். இது மோசமானது என்று தெரியும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அதிகரிக்கும் கரோனா பரவல்: முன்னெச்சரிக்கையாக இருக்க பிரதமர் மோடி அலர்ட் https://ift.tt/fVhIHrz

படம்
புதுடெல்லி: கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொது சுகாதார தயார் நிலை மற்றும் சூழ்நிலை குறித்த உயர்நிலை ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பிரதமர் மோடி முன்னெச்சரிக்கையாகவும், விழிப்புடனும் இருக்க அறிவுறுத்தினார். நாடு முழுவதும் கோவிட்-19 மற்றும் இன்ஃப்ளூயன்சா நோய் குறித்த சூழல்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலை குறித்து பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோவிட்-19 தொற்று பரவலை எதிர்கொள்வதற்கான சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள், தடுப்பூசி முகாம்கள், கோவிட்-19 அவசரகால நடவடிக்கைகள் மற்றும் இன்ஃப்ளூயன்சாவை எதிர்கொள்வதற்கான பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கடந்த 2 வாரங்களில் கோவிட்-19 தொற்று பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், இந்த உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பழைய குற்றவாளிகள் தேடுதல் வேட்டை - சென்னையில் உள்ள விடுதிகளில் போலீஸார் சோதனை https://ift.tt/Fv53TVt

படம்
சென்னை: சென்னையில் உள்ள விடுதிகளில் பழைய குற்றவாளிகள், சந்தேக நபர்கள் தங்கி உள்ளனரா, ஆயுதங்கள், போதை பொருட்கள் வைத்துள்ளனரா என்று போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். சென்னையில் குற்றச் செயல்களை குறைக்கவும், தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்யவும், பழைய குற்றவாளிகளை கண்காணித்து குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இரவு நேரங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், இருசக்கர வாகனத்தில் அதிக வேகத்தில் செல்பவர்களை பிடிக்கவும் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தொலைத்தொடர்பு தொழில்நுட்ப ஏற்றுமதியில் இந்தியா பெரிய நாடாக உருவெடுக்கிறது : பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் https://ift.tt/KCWHg4U

படம்
“இந்தியா சில ஆண்டுகளுக்கு முன்புவரை தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன் படுத்தும் நாடாக மட்டுமே இருந் தது. ஆனால், இப்போது அந்தத் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதில் உலகின் பெரிய நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறிவருகிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றிய அலுவலகம் மற்றும் ஆய்வு மையத்தைத் திறந்து வைத்து அவர் பேசியதாவது: 5ஜி தொழில்நுட்பத்தை மிக வேகமாக பயன்பாட்டுக்குக் கொண்டு வந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக திகழ்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்