புதுடெல்லி: கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு 2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 132 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த வைஜெயந்திமாலா, பத்மா சுப்ரமண்யம், விஜயகாந்த், பத்திரப்பன், ஜோஷ்னா சின்னப்பா, ஜோ டி குரூஸ், ஜி. நாச்சியார், சேசம்பட்டி டி.சிவலிங்கம் ஆகியோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் பெண் யானை பராமரிப்பாளர் (பாகன்), தமிழகத்தின் கோவையை சேர்ந்த வள்ளி ஒயில் கும்மி நடன கலைஞர் என பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த விருதுகள் வழங்கப்படும் என தகவல். சிரஞ்சீவி, பத்மா சுப்ரமண்யம், வெங்கய்ய நாயுடு என பெருவாரியான மக்களால் அறியப்படுபவர்களுக்கும் விருதுகள் அறிவிப்பு. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil...