இடுகைகள்

நவம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விவசாயி ஒருவர்கூட உயிரிழக்காதபோது இழப்பீடு பற்றிய பேச்சுக்கே இடமில்லை: மத்திய அரசு திட்டவட்டம் https://ift.tt/3rnnIdM

படம்
வேளாண் சட்டங்களுக்கு எதிரானப் போராட்டத்தில் விவசாயி ஒருவர் கூட உயிரிழக்காதபோது, இழப்பீடு குறித்த கேள்விக்கே இடமில்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்தது. மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து விவசாயிகள் டெல்லியின் புறகநகர் பகுதிகளில் உள்ள சாலையில் அமர்ந்து போாரட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளுடன் 11 சுற்றுப் பேச்சுகளை மத்திய அரசு நடத்தியும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.பி.யில் ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் கசிவு: தேர்வாணையச் செயலர் கைது https://ift.tt/3d2RJHE

படம்
உத்தரப்பிரதேசத்தில் ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் வினாத்தாள் கசிந்ததை அடுத்து மாநில தேர்வாணையச் செயலர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில், தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களை நியமிப்பதற்காக ஆண்டுக்கு ஒருமுறை மாநில அளவிலான தேர்வு நடத்தப்படுகிறது. அவ்வாறு ஞாயிற்றுக்கிழமை இத்தேர்வு நடைபெற இருந்த நிலையில் வினாத்தாள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரேசிலுக்கும் பரவியது ஒமைக்ரான் தொற்று: லத்தீன் அமெரிக்காவின் முதல் பாதிப்பு

படம்
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று பிரேசிலிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே பிரேசிலில் தான் முதன்முதலாக தொற்று உறுதியானது. ஒமைக்ரானால் தென்னாப்பிரிக்காவில் 300% அளவுக்கு கரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஒரு வாரத்துக்குள் போட்ஸ்வானா, பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், இஸ்ரேல், இத்தாலி, செக் குடியரசு, ஹாங்காங், ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளுக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. ஒமைக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தென்னாப்பிரிக்கா உடனான விமான சேவையை பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தடுப்பூசி செலுத்தாதவர்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டால் இலவச சிகிச்சை இல்லை: கேரள முதல்வர் அறிவிப்பு https://ift.tt/3o6kGbY

படம்
கேரளாவில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை வழங்கப்படமாட்டாது என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கரோனா தொற்று முதல் அலையில் கடும் கட்டுப்பாடுகளைக் கடைபிடித்து கரோனாவில் பெரிதாக பாதி்க்கப்படாமல் தப்பித்தது. ஆனால், கரோனா 2-வது அலையில் கேரள மாநிலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் 8,954 பேருக்கு கரோனா: சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழ் குறைந்தது https://ift.tt/31eAD6T

படம்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,954 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 267 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மூச்சுவிட முடியல..டெல்லியில் கடும் காற்றுமாசு: 25 லட்சம் மருத்துவக் காப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் https://ift.tt/318Jwzn

படம்
டெல்லியில் நிலவும் மோசமான காற்று மாசால் மூச்சு விடமுடியவில்லை. இதற்கு டெல்லி அரசு மக்களுக்கு இழப்பீடும், மருத்துவக் காப்பீடும் வழங்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை வழக்கறிஞர் ஷிவம் பாண்டே தாக்கல் செய்துள்ளார், இந்த மனு வரும் 6ம் தேதி விசாரணைக்கு வருகிறது. டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே கடும் காற்று மாசு நிலவுகிறது. ஹரியானா, பஞ்சாப், உ.பி. மேற்குப்பகுதியில் உள்ள விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிப்பதாலும், வாகனங்களின் கடும் புகை, கட்டிடப்பணிகள், தொழிற்சாலைகள் போன்றவற்றால் காற்று மாசு மோசமாக இருந்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குதுப்மினார் மசூதியில் சிலை வைத்து இந்துக்கள் வழிபட வழக்கு: மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம் https://ift.tt/3EeyYgq

படம்
குதுப்மினார் உள்ளே அமைந்த மசூதியில் சிலை வைத்து இந்துக்கள் வழிபட உரிமை கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியின் மெஹரோலியில் வரலாற்றுச் சுற்றுலா தலமாக அமைந்திருப்பது குதுப்மினார். இது, டெல்லி சுல்தான் வம்சத்தின் முதல் மன்னரான குத்புதீன் ஐபக்கால் 1198 இல் கட்டப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அட்மிரல் கரம்பீர் சிங் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்: கடற்படை புதிய தளபதி ஹரி குமார் பொறுப்பேற்பு https://ift.tt/3d479ev

படம்
இந்திய கடற்படையின் புதிய தளபதியாக அட்மிரல் ஆர். ஹரி குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் கரம்பீர் சிங் பதவிக்காலம் முடிவுறுவதை அடுத்து துணை அட்மிரல் ஹரிகுமார் புதிய தளபதியாக நியமனம் செய்யப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 மாநிலங்களவை எம்.பி.க்கள்: நாடாளுமன்ற வளாகத்தில் இன்று முதல் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு https://ift.tt/3rnGPEE

படம்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் ஆன 12 எம்.பி.க்கள் இன்று முதல் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். நாடாளுமன்றக் மழைக்கால கூட்டத் தொடரின்போது மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. மேஜையின் மீது ஏறி அவர்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக ஆகஸ்ட் 11-ம் தேதி மாநிலங்களவையில் பேசிய அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக மறுநாள் அவையில் கண்ணீர் விட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனாவால் உயிரிழந்த இருவரின் சடலம் 16 மாதங்களுக்கு பின் கண்டெடுப்பு https://ift.tt/3d8v8t2

படம்
பெங்களூரு: பெங்களூரு ராஜாஜி நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையின் பிணவறையை தூய்மைப்படுத்தும் பணியில் ஊழியர்கள் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளிர்ப்பதன கிடங்கை பார்த்தபோது 2 சடலங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கரோனா தொற்றினால் உயிரிழந்த இரு நோயாளிகளின் சடலங்கள் தகனம் செய்யப்படாதது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மருத்துவமனை அதிகாரிகள் பிணவறையை ஆய்வு செய்தனர். அதில் சாம்ராஜ்பேட்டையைச் சேர்ந்த துர்கா (40), கே.பி.அக்ரஹாராவைச் சேர்ந்த முனி ராஜு(35) ஆகிய இருவரின் சடல‌ங்கள் என தெரியவந்தது. இதையடுத்து இருவரின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று இருவரின் உடல்களும் தகனம் செய்யப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடகாவில் மேலும் 33 மாணவர்களுக்கு கரோனா https://ift.tt/3d5Bbi3

படம்
கர்நாடகாவில் கடந்த ஒரு வாரத்தில் தார்வாட் மருத்துவக்கல்லூரி, மைசூரு நர்சிங் கல்லூரி, பெங் களூருவில் நர்சிங் கல்லூரி மற்றும் சர்வதேச உறைவிடப் பள்ளி ஆகியவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பரவியது. இதில் பாதிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஹாசன் மாவட்டம் குமரனஹள்ளியில் உள்ள மொரார்ஜி தேசாய் விடுதியில் தங்கியிருந்த பள்ளி மாணவர்கள் 26 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, 26 மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட 500 பேருக்கு நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒமைக்ரான் வைரஸ் பரவுவது நன்மையா? - சர்வதேச சுகாதார துறை வல்லுநர்கள் விளக்கம் https://ift.tt/3IbUNzi

படம்
கரோனாவின் ஒமைக்ரான் வைரஸ் பரவுவது நன்மை பயக்கும் என்று சர்வதேச சுகாதார துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது கரோனாவின் டெல்டா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில்தென்னாப்பிரிக்காவில் புதிய வகைகரோனா வைரஸ் பரவுவது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு ஒமைக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட மரபணு மாற்றங்கள் காணப்படுகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஏழை தலித் மாணவிக்காக ரூ.15 ஆயிரம் கல்லூரி கட்டணம் செலுத்த முன்வந்த நீதிபதி https://ift.tt/3I8NHM8

படம்
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சன்ஸ்கிரிதி ரஞ்சன் (17) என்ற மாணவி உயர் கல்விநிறுவனங்களில் சேர்வதற்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் வெற்றி பெற்றார். தலித் மாணவியான இவர் அந்தபிரிவினருக்கான பட்டியலில் 1,469-வது இடம் பிடித்தார். இவருக்கு வாரணாசியில் உள்ள ஐஐடி-பிஎச்யுவில் (பனாரஸ் இந்து யுனிவர்சிட்டி) இடம் கிடைத்தது. ஆனால்குறிப்பிட்ட காலக்கெடுவுக் குள் கல்லூரிக்கான அடிப்படை கட்டணம் ரூ.15 ஆயிரத்தை செலுத்த முடியவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி பாஜக சுவரொட்டிகளில் எழுத்தாளர் பெருமாள் முருகன் படம்: சர்ச்சையில் முடிந்த ‘குடிசைவாசிகளை மதிக்கும் யாத்திரை’ https://ift.tt/2ZL1ZBm

படம்
டெல்லியில் மாநகராட்சி தேர்தல்சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஆம் ஆத்மிகட்சியை வீழ்த்த பாஜகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இங்கு மாநகராட்சிகளின் முக்கிய வாக்காளர்களாக குடிசைவாசிகள் கருதப்படுகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உலகை அச்சுறுத்தும் புதிய வகை ஒமைக்ரான் கரோனா வைரஸை ஆர்டிபிசிஆர் பரிசோதனை மூலம் கண்டறியலாம்: பரிசோதனைகளை அதிகரிக்க மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை உத்தரவு https://ift.tt/3xG5XaH

படம்
கரோனாவின் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் நேற்று உயர்நிலை ஆலோசனை நடத்தினார். ஆர்டிபிசிஆர் பரிசோதனை, விரைவு பரிசோதனை (ஆர்ஏடி) மூலம் ஒமைக்ரான் வைரஸை கண்டறியலாம். எனவே அனைத்து மாநில அரசுகளும் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டிச.15 வரை கரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு; கேரளாவுக்கு இன்று முதல் அரசு பேருந்துகள் இயக்கம்: பொதுப் போக்குவரத்துக்கு முதல்வர் அனுமதி https://ift.tt/3o8VJwB

படம்
கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் டிச.15-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் கேரளாவுக்கு பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள தைத் தொடர்ந்து இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டது: இஸ்ரேலின் அதிநவீன உளவு விமானம் https://ift.tt/32NKP7f

படம்
இஸ்ரேலின் அதிநவீன ஹெரோன் உளவு விமானங்கள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு உள்ளன. ஆளில்லா உளவு விமானங்களை தயாரிப்பதில் அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னோடிகளாக உள்ளன. இந்திய ராணுவத்தில் இஸ்ரேலின் ஹெரோன் உளவு விமானங்கள் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளன. இவை லடாக் எல்லையில் உளவு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; விஜய் மல்லையா இந்தியா வரும்வரை காத்திருக்கப் போவதில்லை: ஜனவரி 22-ல் தீர்ப்பு என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு https://ift.tt/3G1AUt8

படம்
இந்திய வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் லண்டன் தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வரும்வரை அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்க காத்திருக்கப் போவதில்லை எனஉச்ச நீதிமன்றம் தெரிவித் துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான கூட்டமைப்பு விஜய் மல்லையா மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தது. அதில் டியாகோபிஎல்சி நிறுவனத்திடமிருந்து பெற்ற 4 கோடி டாலரை தனது வாரிசுக்கு விஜய் மல்லையா மாற்றிவிட்டதாகவும், இது தொடர்பாக கடன் அளித்த வங்கிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும் கூறியிருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

12 எம்.பி.க்கள் இடைநீக்க விவகாரம்; நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு https://ift.tt/31aOwmz

படம்
12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் அத்துமீறி நடந்து கொண்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் இந்த குளிர்காலக் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடிக்குப் பின்னால் ஏதோ சக்தி ஆட்டுவிக்கிறது; நோக்கத்தில் சந்தேகமிருக்கிறது: ராகுல் காந்தி https://ift.tt/3EaVqHg

படம்
3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் மசோதாக்களை எந்தவிதமான விவாதமும் இன்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதன் மூலம் மத்திய அரசு அச்சமடைந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது. தாங்கள் தவறு செய்துவிட்டோம் எனத் தெரிந்துகொண்டார்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கடந்த ஓராண்டாக விவசாயிகள் நடத்திய தீவிரப் போராட்டம் காரணமாக அந்தச் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெறுவதாக அறிவித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.பி.யில் திருமணமான ஓராண்டில் விவாகரத்து கோரி சராசரியாக 1500 வழக்குகள் https://ift.tt/3lkvmlB

படம்
உத்தரப் பிரதேசத்தில் திருமணமான ஓராண்டில் விவாகரத்து கோரி சராசரியாக 1500 வழக்குகள் நீதிமன்றங்களில் குவிகின்றன. இவை, சில நாட்கள் முதல் ஓராண்டுக்குள்ளான இடைவெளியில் நடைபெற்ற திருமணங்கள் ஆகும். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுவதாகவும் அவை, ஏழேழு ஜென்மங்களுக்கான பந்தம் என்றும் கருத்துகள் உண்டு. இந்த நிலை மாறும் வகையிலான சூழல் உ.பி.யில் வேகமாக உருவாவதாகக் கருதப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

12 எம்.பி.க்கள் இடைநீக்கம்; மன்னிப்பு கேட்டால் மறுபரிசீலனை செய்ய தயார்: பிரகலாத் ஜோஷி https://ift.tt/3I5FFDK

படம்
12 எம்.பி.க்களும் சபாநாயகரிடமும், சபையிடமும் தங்களின் தவறான நடத்தைக்காக மன்னிப்புக் கேட்டால், அவர்களின் இடைநீக்க உத்தரவை திறந்த மனதுடன் பரிசீலிக்க அரசு தயாராக உள்ளது என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார். நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் அத்துமீறி நடந்து கொண்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் இந்த குளிர்காலக் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி விவசாயிகள் மீது கருணை காட்டுபவர் அல்ல; வாக்குகளைத் தேடுபவர்தான்: பிரியங்கா காந்தி சாடல் https://ift.tt/3FYEK67

படம்
பிரதமர் மோடி ஒன்றும் விவசாயிகள் மீது கருணை காட்டுபவர் அல்ல, வாக்குகளைத் தேடுபவர்தான் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சாடினார். மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கடந்த ஓராண்டாக விவசாயிகள் நடத்திய தீவிரப் போராட்டம் காரணமாக அந்தச் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெறுவதாக அறிவித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வந்தே பாரத் விமான சேவை: தமிழகத்தை சேர்ந்த 1576213 பேர் பயணம்  https://ift.tt/3199O42

படம்
வந்தே பாரத் இயக்கத்தின் கிழ் 2,17,000-க்கும் அதிகமான விமான சேவைகள் இயக்கப்பட்டன, தமிழகத்தை சேர்ந்த 1576213 பேர் பயணம் செய்துள்ளனர் என விமான போக்குவரத்து இணை அமைச்சர் ஜெனரல் வி கே சிங் கூறினார். மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜன்தன் வங்கிக் கணக்குகள்: எண்ணிக்கை 43.85 கோடியாக உயர்வு https://ift.tt/3EbNzJm

படம்
பிரதமரின் ஜன்தன் திட்ட முதலீடு ரூ.1,48,069 கோடி கையிருப்புடன் கணக்குகளின் எண்ணிக்கையும் 43.85 கோடியாக அதிகரித்துள்ளது. பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் கீழ், கோவிட்-19 ஊரடங்கிற்கு முன்பு 25.03.2020 அன்றைய நிலவரப்படி, 38.33 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டு, ரூ.1,18,434 கோடி முதலீட்டுக் கையிருப்பாக இருந்த நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு, 10.11.2021 நிலவரப்படி, கணக்குகளின் எண்ணிக்கை 43.85 கோடியாகவும், முதலீட்டுக் கையிருப்பு ரூ.1,48,069 கோடியாகவும் அதிகரித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் 6,990 பேருக்கு கரோனா: கடந்த மே மாதத்திற்குப் பிறகு மிகக் குறைந்த அளவில் பாதிப்பு https://ift.tt/32A5KdI

படம்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,990 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 190 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ட்விட்டர் புதிய சிஇஓவின் வயது 37: உலகின் டாப் 500 நிறுவன தலைமைச் செயல் அதிகாரிகளில் மிகவும் இளமையானவர்

படம்
ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வாலுக்கு 37 வயதுதான் ஆகிறது. இதனால், உலகளவில் டாப் 500 நிறுவனங்களின் சிஇஓக்களிலேயே மிகவும் இளைமையானவர் என்ற அந்தஸ்தைப் பராக் அகர்வால் பெற்றுள்ளார். சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரை பிரபலங்கள் பலரும் உலகளவில் பயன்படுத்தி வருகின்றனர். முக்கிய தகவல் பரிமாற்ற தளமாகவும் ட்விட்டர் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ட்விட்டர் சிஇஓ பதவியை ஜேக் டார்ஸி நேற்று ராஜினாமா செய்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

100 கோடி தடுப்பூசிகள் உதவி: ஒமைக்ரான் அச்சத்தால் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனா அனுப்புகிறது

படம்
ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா வைரஸின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து, அதைத் தடுக்கும் வகையில் அங்குள்ள மக்களுக்காக 100 கோடி தடுப்பூசிகளை சீனா அனுப்புகிறது. தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக ஓமைக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரி்ட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தடுப்பூசி செலுத்துவதில் பாஜக ஆளும் மாநிலங்களே முதலிடம்; தமிழகம், காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் முதல் டோஸ் கூட 90 % எட்டவில்லை https://ift.tt/2ZB0aXs

படம்
கரோனா தடுப்பூசி செலுத்துவதில் நாட்டில் பாஜக ஆளும் மாநிலங்களே முதலிடத்தில் உள்ளன. பாஜக ஆளும் மாநிலங்களில் முதல் டோஸை 90 சதவீத மக்களும், 2வது டோஸை 50 சதவீத மக்களும் செலுத்தியுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் முதல் டோஸ் தடுப்பூசிகூட 90 சதவீதத்தை எட்டவில்லை. 2-வது டோஸ் 50 சதவீதத்தைக் கூட தொடவில்லை எனத் தெரியவந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குழந்தைகளுக்கு தடுப்பூசி, நோய் எதிர்ப்பாற்றல் இல்லாதோருக்கு பூஸ்டர் டோஸ்; இன்னும் 2 வாரங்களில் முடிவு: என்.கே.அரோரா https://ift.tt/3DaHR9g

படம்
இந்தியாவில் இதுவரை 130 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. இந்நிலையில், 12 வயது முதல் 17 வயது வரை உள்ள 44 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்தும், நோய் எதிர்ப்பாற்றல் இல்லாதோருக்கு பூஸ்டர் டோஸ் போடுவது குறித்து இன்னும் இரண்டு வாரங்களில் கொள்கை முடிவு வகுக்கப்படும் என தடுப்பூசி திட்டத்திற்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் மருத்துவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில தொலைக்காட்சிக்கு மருத்துவர் என்.கே.அரோரா அளித்த பேட்டியின் விவரம் வருமாறு: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியா உதவிக்கரம் : ஒமைக்ரான் பாதிப்பு ஆப்பிரிக்க நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்கத் தயார் https://ift.tt/3o1RjaK

படம்
இந்தியாவில் தயாரி்க்கப்பட்ட தடுப்பூசிகள், உயிர் காக்கும் மருந்துகள், பரிசோதனைக் கருவிகள், கையுறைகள், பிபிஇ கிட், வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்கதயாராக இருப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக ஓமைக்ரான் வகை ைவரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரி்ட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடகாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவவில்லை: முதல்வர் பசவராஜ் பொம்மை தகவல் https://ift.tt/32KituB

படம்
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை தாக்கியுள்ள வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வகையை சேர்ந்தது அல்ல. டெல்டா வைரஸில் இருந்து வேற்றுருவம் அடைந்த வைரஸாக இருக்கலாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை கர்நாடகாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிறுவர்களுடன் ஹெலிகாப்டரில் சென்ற பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி https://ift.tt/32Kg9nn

படம்
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி சிறுவர்களை மகிழ்விப்பதற்காக அவர்களுடன் ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார். இதுவரை விமானப் பயணம் மேற்கொள்ளாத சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னிக்கு யோசனை தோன்றியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கியான்வாபி மசூதியில் கிருஷ்ணர் சிலை வைக்கப்போவதாக மிரட்டல்; உ.பி. மதுரா நகரில் 144 தடை உத்தரவு அமல்: இந்து அமைப்புகளின் 3 நிர்வாகிகள் கைது https://ift.tt/31d4psA

படம்
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில்உள்ள கியான்வாபி மசூதியில்கிருஷ்ணர் சிலை வைக்கப்போவதாக இந்து அமைப்புகள் மிரட்டியதால் அந்நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ஊர்வலம் நடத்த முயன்ற 3 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தின் மதுரா நகரில் கிருஷ்ண ஜென்ம பூமி எனும் கோயில் உள்ளது. இது, கடவுள் கிருஷ்ணர் பிறந்த இடமாக இந்துக்கள் மத்தியில் நம்பிக்கை நிலவுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்கள்; 2022 மார்ச் மாதம் வரை நீட்டிப்பு: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு https://ift.tt/3G26g2u

படம்
ஏழைகளுக்கு ரேஷனில் இலவச உணவு தானியங்கள் வழங்கும் பிரதமரின் கரீப் கல்யாண் திட்டம்அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றுபிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். கடந்த 2020 மார்ச் மாதம்கரோனா வைரஸ் தொற்று பரவல் தொடங்கிய நிலையில், முழுமையான பொது முடக்கம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏழை மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு சிரமப்படக் கூடாது என்று மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி, பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா என்னும் ஏழைகளுக்கான நலத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதிலும் உள்ள 80 கோடி ரேஷன் அட்டை தாரர்களுக்கு, ரேஷனில் இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.பி.க்கு வாக்குறுதி தருவதை விட்டுவிட்டு ராஜஸ்தானில் வேலையை ஏற்படுத்திக் கொடுங்கள்: காங்கிரஸுக்கு இளைஞர்கள் எதிர்ப்பு https://ift.tt/3xDVIE8

படம்
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என்று ராஜஸ்தானில் தேர்தலுக்கு முன் காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. ஆனால், வேலை வாய்ப்புக்கு காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி ஜெய்ப்பூரில் இளைஞர் சங்கம் சார்பில் 47 நாட்களாக போராட்டம் நடத்தப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த நடன இயக்குநர் சிவசங்கர் உடல் தகனம் https://ift.tt/3ln6qKd

படம்
தமிழ், தெலுங்கு என மொத்தம் 10 மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு நடனஇயக்குநராக பணியாற்றியவர் சிவசங்கர் மாஸ்டர் (72). சென்னையில் கடந்த 1948-ம் ஆண்டில் பிறந்த இவருக்கு சுகன்யா என்கிற மனைவியும், விஜய், அஜய் என்கிற மகன்களும் உள்ளனர். தமிழில் 1996-ம் ஆண்டு வெளிவந்த பூவே உனக்காக, விஷ்வதுளசி (2003), வரலாறு (2006),உளியின் ஓசை (2008) ஆகியபடங்களில் பணியாற்றியதற் காக தமிழக அரசு சிறந்த நடன இயக்குநர் விருதை இவருக்கு வழங்கி கவுரவித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிறுவர்களிடையே அதிகரிக்கும் உடல் பருமன் பிரச்சினை: தேசிய குடும்ப நல ஆய்வில் தகவல் https://ift.tt/3o75L1k

படம்
பல்வேறு மாநிலங்கள், யூனியன்பிரதேசங்களில் தேசிய குடும்பநல ஆய்வு-5 (என்எஃப்எச்எஸ்) நடத்தப்பட்டது. சிறார், பெரியவர்களிடையே உடல் பருமன் பிரச்சினை அதிகரித்துள்ளதாக அந்தஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கடந்த முறை நடைபெற்ற என்எஃப்எச்எஸ்-4 ஆய்வில் 2.1% சிறுவர்கள் உடல் பருமனாக இருந்தனர். தற்போது நடைபெற்ற ஆய்வில் அது 3.4% ஆக அதிகரித்துள்ளது. சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களிடத்திலும் இந்த உடல் பருமன் பிரச்சினை உள்ளது. கடந்த ஆய்வில் 20.6%ஆக இருந்த உடல் பருமனான பெண்களின் எண்ணிக்கை தற்போது 24% ஆக உயர்ந்துள்ளது. இதுபோல ஆண்களின் எண்ணிக்கை 18.9 சதவீதத்தில் இருந்து 22.9% ஆக அதிகரித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நீரிழிவு நோயாளிகளுக்கு அரசின் ஆதரவு, மானியம் தேவை: தலைமை நீதிபதி ரமணா வலியுறுத்தல் https://ift.tt/3rpIbyH

படம்
நீரிழிவு நோயாளிகளுக்கு அரசின் ஆதரவும் மானியமும் தேவை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வலியுறுத்தி உள்ளார். நீரிழிவு நோய் குறித்த அஹுஜா-பஜாஜ் கருத்தரங்கு டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருப்பதி கோயில் தேவஸ்தான அதிகாரி டாலர் சேஷாத்ரி மாரடைப்பால் காலமானார்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இரங்கல் https://ift.tt/31g1fEJ

படம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும், நாட்டில் உள்ள அனைத்து விவிஐபி மற்றும் விஐபிபக்தர்களுக்கும் மிகவும் பழக்கமானவர் ‘டாலர்’ சேஷாத்ரி (73).திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கடந்த 43 ஆண்டுகளாக பணியாற்றி வந்த இவர், நேற்று அதிகாலை விசாகப்பட்டினத்தில் மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்கு துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு, உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உட்பட பல்வேறு மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், அமைச்சர்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆர்எஸ்எஸ் ராணுவ அமைப்பு அல்ல; குடும்பச் சூழல் கொண்ட குழு: மோகன் பாகவத் பேச்சு https://ift.tt/3lgzqDj

படம்
ஆர்எஸ்எஸ் ராணுவ அமைப்பு அல்ல. ஆனால், குடும்பச் சூழல் கொண்ட குழுவைக் கொண்டது என்று அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார். மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் நகரில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் இசைக் கருவிகளின் சங்கம விழா கடந்த 4 நாட்களாக நடந்தது. இதில் கடைசி நாளான நேற்று ஆர்எஸ்எஸ்அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா; மக்களவையில் நிறைவேறியது: எம்.பி.க்கள் கரவொலி https://ift.tt/3E4V7xo

படம்
3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கரவொலியுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடந்த ஓராண்டாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதிய வகை கரோனா; மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: பிரதமர் மோடி எச்சரிக்கை https://ift.tt/317QQuQ

படம்
புதிய வகை உருமாறிய கரோனா குறித்து நாம் அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடனும், விழிபுணர்வுடனும் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதையாட்டி அவை நடவடிக்கைளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று காலை நாடாளுமன்றம் வந்தார். அப்போது நாடாளுமன்ற வளாகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீனாவில் நாள்தோறும் 6.30 லட்சம் பேருக்குத் தொற்று ஏற்படலாம்; கரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டாம்: ஆய்வில் எச்சரிக்கை

படம்
சீனா தற்போது கடைப்பிடித்து வரும் கடும் கரோனா கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும், ஏதேனும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, சர்வதேச விமானப் போக்குவரத்தை அனுமதித்தால் நாள்தோறும் 6.30 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்படலாம் என ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. பெக்கிங் கணிதப் பல்கலைக்கழகம் சீனாவின் கரோனா தொற்று குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “சீனா தற்போது கடைப்பிடித்துவரும் கடும் கட்டுப்பாடுகள் தொடர வேண்டும். ஒருவேளை சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு அனுமதித்தால், கரோனா தடுப்பு முறைகளைத் தளர்த்தினால், மிகப்பெரிய அளவில் கரோனா பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். அதிகபட்சமாக நாள்தோறும் 6.30 லட்சம்வரை பாதிக்கப்படலாம். நாட்டின் மருத்துவத்துறைக்குத் தாங்க முடியாத சுமை ஏற்படலாம்” என எச்சரித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முதல் நாளிலேயே கடும் அமளி: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம்; மக்களவை 12 மணிவரை ஒத்திவைப்பு https://ift.tt/3153V7Y

படம்
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் முதல் நாளிலேயே மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், முதல்நாளிலேயே மக்களவையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகவே அனைத்து எம்.பி.க்களையும் முதல்நாளில் வர வேண்டும் என்று பாஜக கொறடாமூலம் உத்தரவிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர்: எதிர்க்கட்சிகள் கூட்டாக ஆலோசனை https://ift.tt/311RsSZ

படம்
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கும் நிலையில் இரு அவைகளிலும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்று கூட்டாக ஆலோசனை நடத்தின. நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், முதல்நாளிலேயே மக்களவையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகவே அனைத்து எம்.பி.க்களையும் முதல்நாளில் வர வேண்டும் என்று பாஜக கொறடாமூலம் உத்தரவிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் புதிதாக மேலும் 8,309​​​​​​​ பேருக்கு கரோனா: 236 பேர் உயிரிழப்பு https://ift.tt/313aLvd

படம்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,309 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 236 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

 தடுப்பூசியை எதிர்க்கும் தன்மை கொண்டது ஓமைக்ரான்: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை https://ift.tt/3xvBe0d

படம்
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸின் ஸ்பைக் புரதம் 30 முறை உருமாறியுள்ளதால், தடுப்பூசியை எதிர்க்கும் திறன் கொண்டதாக தகவல் கிடைத்திருக்கிறது என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக ஓமைக்ரான் வகை ைவரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரி்ட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஓமைக்ரான் ஆபத்தானதா? உலக சுகாதார அமைப்பு பகிர்ந்துள்ள ஐந்து முக்கியத் தகவல்கள்

படம்
ஓமைக்ரான் வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு 5 முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கரோனா பரவல் குறைந்துகொண்டிருக்கும் வேளையில், தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கரோனா வேற்றுருவம் (Variant) கண்டறியப்பட்டுள்ளது. ‘ஒமைக்ரான்’ (Omicron) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸின் மரபணு வரிசையில் ‘B.1.1.529’ எனும் புதிய பிறழ்வு (Mutation) ஏற்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இன்று குளிர்காலக் கூட்டத்தொடர் : முதல் நாளிலேயே மக்களவையில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் மசோதா தாக்கல் https://ift.tt/3p8KR0T

படம்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மக்களவையில் இந்த மசோதா நிறைவேறியவுடன் மாநிலங்களவையும் உடனடியாக இந்த மசோதாவை எடுத்துக்கொண்டு நிறைவேற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்