இடுகைகள்

ஏப்ரல், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வெறுப்பு அரசியல் விமர்சனம் செய்தவர்களுக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு முன்னாள் நீதிபதிகள் ஆதரவு கடிதம் https://ift.tt/A3Q0vFJ

படம்
புதுடெல்லி: ‘வெறுப்பு அரசியல்’ நடைபெறுவ தாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முன்னாள் அதிகாரிகள் குழுவினருக்கு, முன்னாள் நீதிபதிகள், முன்னாள் உயர் அதிகாரிகள் அடங்கிய மற்றொரு குழு தங்கள்கடிதம் மூலம் மறுப்பு தெரிவித் துள்ளது. முன்னாள் அரசு உயர் அதிகாரி கள் 108 பேர் ஒன்றிணைந்து அரசியலமைப்பு நடத்தை குழு (சிசிஜி) என்ற சங்கத்தை உரு வாக்கினர். இந்த அமைப்பினர் பிரதமர் மோடிக்கு சமீபத்தில் கடிதம் அனுப்பினர். அதில் பாஜக ஆளும் மாநிலங்களில் வெறுப்பு அரசியல் நடைபெறுவதாகவும், அதற்கு முடிவு கட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

போலி ஜோதிடராக மாறிவிட்டார் ராகுல்: மத்திய அமைச்சர் பிரகலாத் குற்றச்சாட்டு https://ift.tt/j6vIDrt

படம்
புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போலி ஜோதிடராக மாறிவிட்டார் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி குற்றம்சாட்டி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் தனது முகநூல் பக்கத்தில், “கடந்த ஏப்ரல் 20-ம் தேதி, தங்களுக்கு பிடிக்காதவர்களின் வீடுகளை புல்டோசர்கள் மூலம் இடிப்பதை நிறுத்திவிட்டு மின் உற்பத்தி நிலையங்களை தொடங்க வேண்டும் என மோடி அரசை கேட்டுக் கொண்டேன். இப்போது, நாட்டில் நிலக்கரி பற்றாக்குறையால் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். மின் தட்டுப்பாட்டால் சிறுதொழில் நிறுவனங்கள் இயங்காத நிலை ஏற்பட்டு வேலையின்மை அதிகரிக்கும்” என பதிவிட்டிருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்பு https://ift.tt/xKkZqi1

படம்
புதுடெல்லி: ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே நேற்று ஓய்வு பெற்றார். இதை யடுத்து 29-வது ராணுவத் தலைமை தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே நேற்று பொறுப்பேற்றார். இதற்கு முன், ஜெனரல் மனோஜ் பாண்டே துணை தளபதியாக இருந்தார். இவர் ராணுவத்தின் இன்ஜினீயர்ஸ் படை் பிரிவில் இருந்து ராணுவ தளபதியாக பொறுப்பேற்ற முதல் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ராணுவத்தின் கிழக்கு கட்டுப்பாட்டு மையம், அந்தமான் மற்றும் நிகோபார் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றிலும் தலைமை அதிகாரியாக பணியாற்றினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தீர்ப்புகளை சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகள்: பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல் https://ift.tt/NRkHrxn

படம்
புதுடெல்லி: தீர்ப்புகளை சாமானிய மக்களும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகள் பயன்படுத்தப்படுவதை ஊக்கவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். மாநில முதல்வர்கள், உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் பங்கேற்ற தேசியக் கருத்தரங்கம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. 6 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முஸ்லிம் ஓட்டல் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை: கேரள மூத்த அரசியல் தலைவர் பி.சி.ஜார்ஜ் குற்றச்சாட்டு https://ift.tt/b0T2tg3

படம்
திருவனந்தபுரம்: முஸ்லிம்கள் நடத்தும் ஓட்டல்களில் பரிமாறப்படும் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது. இதனால் ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என்று கேரளாவின் மூத்த அரசியல் தலைவர் பி.சி. ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரளாவின் கோட்டயம் மாவட்டம், பூஞ்சார் பகுதியை சேர்ந்தவர் பி.சி. ஜார்ஜ் (70). காங்கிரஸில் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய அவர் பல்வேறு கட்சிகளுக்கு மாறினார். 2019-ல் கேரள ஜனபக்சம்என்ற கட்சியை தொடங்கி, கடந்தமக்களவைத் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டார். பூஞ்சார் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து 7 முறைஎம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் கேரளாவின் மூத்த அரசியல் தலைவராக உள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

40 ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்திய ‘உக்ரைன் போர் நாயகனுக்கு’ உயரிய விருது: வீர மரணத்துக்கு பிறகு அரசு வழங்கியது

படம்
லண்டன்: ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைன் நாட்டின்பல்வேறு நகரங்கள் உருக்குலைந்துள்ளன. என்றாலும் ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்து வரு கிறது. இந்நிலையில் போரின் முதல்நாளிலேயே ரஷ்யாவின் 10 விமானங்களை உக்ரைன் விமானி ஒருவர் சுட்டு வீழ்த்தினார். இதனால் உலகம் முழுவதும் பிரபலமான அந்த விமானி ‘கோஸ்ட் ஆஃப் கீவ்’ (கீவ் நகரின் பேய்) என அழைக்கப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா பொருளாதாரம் பாதிப்பு: இந்தியா மீள்வதற்கு 12 ஆண்டுகள் ஆகும் - இந்திய ரிசர்வ் வங்கி குழு அறிக்கை https://ift.tt/OfHGJA4

படம்
மும்பை: கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து இந்தியா மீள்வதற்கு 12 ஆண்டுகள் ஆகும் என்றுரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கரோனா ஊரடங்கு நடவடிக்கைகள், அதனால் ஏற்பட்ட பொருளாதார நடவடிக்கை குறித்து பெருந்தொற்று ஏற்படுத்திய வடுக்கள் மற்றும் பணம் மற்றும் நிதி நிலைகுறித்த அறிக்கையை (2021-22)ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: 2020-21 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் பொருளாதார மீட்சி ஏற்பட்டது. ஆனால் 2021-22 நிதிஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்தில் 2-வது அலையால்பொருளாதார வளர்ச்சி பாதிப்புக்குள்ளானது. அதேபோல 3-வது அலை ஜன.2022-ல் ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வானத்திலிருந்து தரையிறங்கும் தேவதை: இணையத்தில் வைரலாகும் வெள்ளை மயில் வீடியோ

படம்
சிலை ஒன்றின் மீது இருந்து புல் தரையை நோக்கி வெள்ளை மயில் ஒன்று பறந்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகின் மிக அழகான பறவைகளில் ஒன்று மயில், அதன் வண்ணம், விசிறி போன்ற வால், நீண்ட வடிவான இறகுகள், இணையைக் கவர அவைகள் ஆடும் அற்புத நடனம் என பார்ப்பவர்களை எப்போதும் பிரம்மிக்க வைக்கின்றன. இதில் வெள்ளை நிற மயில் என்றால் இன்னும் சிறப்பு. அப்படி பட்ட வெள்ளை நிற மயில் ஒன்று சிலையின் உச்சியில் இருந்து பறந்து வந்து தரையிரங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவி நீக்கம் செய்ய அதிபர் ஒப்புதல்: முன்னாள் அதிபர் சிறிசேனா தகவல்

படம்
கொழும்பு: இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபட்ச, அவரது மூத்த சகோதரர் பிரதமர் மகிந்த ராஜபட்ச பதவி விலகக் கோரி நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. அரசுக்கு எதிராக 1,000 தொழிற்சங்கங்கள் இணைந்து நேற்று முன்தினம் முழுஅடைப்பு போராட்டம் நடத்தின. அதிபர் கோத்தபயராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்சபதவி விலக வேண்டும். இல்லையெனில் மே 6-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு: பாஜக பெண் நிர்வாகி திவ்யா கைது https://ift.tt/df5EAuB

படம்
பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த அக்டோ‍பரில் 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் 54 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில்முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் குறித்து சிஐடி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் க‌டந்த வாரம் தேர்வில் 2-ம் இடம் பிடித்த சேத்தன், 7-ம் இடம் பிடித்த வீரேஷ், 9-ம் இடம் பிடித்த பிரவீன்குமார் உட்பட 12 பேர், 10 போலீஸார் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் குல்பர்கா மாவட்டத்தில் உள்ள பாஜக பிரமுகர் திவ்யாவுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீஸார் திவ்யா, அவரது கணவர் ராஜேஷ் ஆகியோரை தேடி வந்தனர். இதனிடையே காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பிரியங்க் கார்கே, பாஜக அரசு திவ்யாவை காப்பாற்ற முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டினார். இந்நிலையில் புனேவில் தலைமறைவாக இருந்த திவ்யா, ராஜேஷ் ஆகிய இருவரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவ...

சீனாவில் கல்வியை தொடர முடியாத இந்திய மாணவர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்க முடிவு

படம்
பெய்ஜிங்: கரோனா தொற்று பரவல் காரணமாக சீனா விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக அங்கு மீண்டும் செல்ல முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்களை மீண்டும் அனுமதிக்க சீனா முடிவு செய்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியமாணவர்கள் சீனாவில் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு கல்விகளை படித்து வந்தனர். இவர்களில் பெரும்பாலோர் மருத்துவ மாணவர்கள். கரோனா வைரஸ்தொற்று பரவல் காரணமாகஇந்திய மாணவர்கள் சீனாவில் இருந்து 2 ஆண்டுகளுக்கு முன் இந்தியா திரும்பினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வாட்டி வதைக்கும் வெப்பம், அடுத்த 5 நாட்களுக்கு குறைய வாய்ப்பில்லை: இந்திய வானிலை ஆய்வுத்துறை தகவல் https://ift.tt/UzjEof9

படம்
புதுடெல்லி: நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை குறைய வாய்ப்பில்லை என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. நாட்டில் கரோனா வைரஸ் ஒருபுறம் அச்சுறுத்தி வரும் வேளையில், மறுபுறம் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நாட்டின் பெரும்பாலான இடங்களில் நேற்று முன்தினம் வெப்ப நிலை 45 டிகிரியை கடந்ததால் கடும் அனல் காற்று வீசியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

செமி கண்டக்டர் தொழிலை அரசு ஊக்குவிக்கும்: பெங்களூருவில் ‘செமிகான்’ மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி https://ift.tt/TGODW5l

படம்
புதுடெல்லி: செமி கண்டக்டர் தொழிலை ஊக்குவிக்கும் அரசாக இந்த அரசு திகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். கர்நாடக மாநிலம் பெங்களூரு வில் ``செமிகான் - 2022’’ மாநாடு நேற்று தொடங்கியது. மூன்று நாள் நடைபெறும் இந்த மாநாட்டை காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: "முந்தைய அரசானது மூடிய கதவாக செயல்பட்டது. ஆனால் இந்த அரசு தொழில்துறைக்கான கதவை திறந்துள்ளது. தொழில் துறையினர் தங்களது துறையை முன்னேற்ற கடுமையாக பாடு படும்போது, அதை ஊக்குவிக்க இந்த அரசு அதைவிட கடுமையாக பாடுபடும். அரசுடன் பேச்சு வார்த்தையை தொழில்துறையினர் எப்போதும் நடத்தலாம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் உள்ள அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியை விரைந்து கொண்டு செல்ல 42 ரயில்கள் ரத்து https://ift.tt/RIvtQ97

படம்
புதுடெல்லி: அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி வண்டிகள் விரைந்து செல்வதற்கு ஏதுவாக நாடு முழுவதும் 42 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் சுமார் 70 சதவீதம் அனல் மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு விரைவாக தீர்ந்து வருகிறது. கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது. ஆனால் நிலக்கரி பற்றாக்குறையால் மின்னுற்பத்தி குறைந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான மின்தடை ஏற்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பட்டியாலா வன்முறை: காலை வரை  ஊரடங்கு அமல் - நடந்தது என்ன? https://ift.tt/BXKFWD1

படம்
பட்டியாலா (பஞ்சாப்): பட்டியாலாவில் நடந்த காலிஸ்தான் எதிர்ப்பு பேரணியின் போது இரு பிரிவினர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக நகரில் காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோதல் தொடர்பாக ஹரிஷ் சிங்லா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த காலிஸ்தான் எதிர்ப்பு அணிவகுப்பின் போது இரண்டு பிரிவினர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பட்டியாலா நகரத்தில் உள்ள காளி கோயிலுக்கு வெளியே இரண்டு குழுக்களுக்கு இடையில் இந்த மோதல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். மோதல் காரணமாக நகரில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராஜஸ்தான், உ.பி., டெல்லி, ஹரியாணா, ஒடிசாவில் 5 நாட்கள் அனல் காற்று வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை https://ift.tt/V4YSNx8

படம்
புதுடெல்லி: ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும். பெரும்பாலான பகுதிகளில் அனல் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதுகுறித்து வானிலை மைய விஞ்ஞானி ஆர்.கே.ஜெனமணி நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: "ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி, ஹரியாணா, ஒடிசா ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும். தற்போதே இந்த மாநிலங்களில் 45 டிகிரி செல்சியஸ் (113 டிகிரி பாரன்ஹீட்) அளவை தாண்டி வெயில் பதிவாகி உள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு வடமேற்கு மாநிலங்களில் கூடுதலாக 2 டிகிரி செல்சியஸ் வெயில் இருக்கும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அனல் காற்று வீசும். இந்த நிலை மே முதல் வாரம் வரை நீடிக்கும். அதன்பிறகு மழை அதிகரிக்கும்போது வெப்ப நிலை குறையும். தற்போது மத்திய பிரதேசம், உத்தர பிரதேசத்தில் 45 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி வருகிறது. டெல்லியில் 43 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை உள்ளது. டெல்லியில் இன்று (வெள் ளிக்கிழமை) 44 டிகிரி செல்சியஸ் பதிவாகும்" இவ்வாறு அவர் கூற...

இந்தியாவில் ஒரே நாளில் 3,303 பேருக்கு தொற்று: கரோனா வைரஸ் 4-வது அலை அச்சம் https://ift.tt/Rd1Yutp

படம்
புதுடெல்லி: நாட்டில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ளது. புதிதாக 3,303 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரேநாளில் 39 பேர் உயிரிழந்தனர். தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் 4-வது அலை பரவுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. கரோனா வைரஸ் பரவல் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரம்: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,303 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள் ளது. ஒரே நாளில் 39 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 5,23,693 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை முந்தைய தினத்தைவிட 701 அதிகரித்து 16,980 ஆக உள்ளது. இது மொத்த நோயாளிகளில் 0.04 சதவீதம் ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் 2,563 பேர் குண மடைந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எனது இறுதி ஆண்டுகளை நான் ஆரோக்கியத்திற்காக செலவிடுகிறேன் - ரத்தன் டாடா https://ift.tt/VxCsGLX

படம்
புதுடெல்லி: அஸ்ஸாம் மாநில அரசு மற்றும் டாடா அறக்கட்டளைகள் சார்பில் கட்டப்பட்டிருக்கும புற்றுநோய் மருத்துவமனைகளைத் திறந்து வைப்பதற்கான நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் தொழிலதிபர் ரத்தன் டாடாவும் கலந்து கொண்டார். அஸ்ஸாம் மாநிலத்தில், மாநில அரசு ரத்தன் டாடா அறக்கட்டளைகள் சார்பில் 17 புற்றுநோய் மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன. அவைகளில் கட்டி முடிக்கப்பட்ட ஏழு அதிநவீன புற்றுநோய் மருத்துவமனைகளை பிரதமர் மோடி வியாழக்கிழமை திறந்து வைத்தார். அந்த நிகழ்வில் பிரதமருடன் தொழிலதிபர் ரத்தன் டாடாவும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது," எனது இறுதி ஆண்டுகளை நான் ஆரோக்கித்திற்காக அற்பணிக்கிறேன். அஸ்ஸாம் அரசாங்கம், அஸ்ஸாமை அனைவரும் மதிக்கும் மாநிலமாக மாற்ற வேண்டும்" என்று தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மஹாராஷ்டிரா | சரியான நேரத்திற்கு மாப்பிள்ளை வராததால் உறவுக்காரரை மணந்த பெண் https://ift.tt/csBDkQC

படம்
புல்தானா(மஹாராஷ்டிரா): திருமணத்திற்கு மாப்பிள்ளை சரியான நேரத்திற்கு வராததால், அதே முகூர்த்தத்தில், தனது பெண்ணை வேறு ஒரு உறவுக்கார பையனுக்கு மணப்பெண்ணின் தந்தை திருமணம் செய்து வைத்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள மல்காபூர் பங்கரா என்ற கிராமத்தில் ஏப்ரல் 22ம் தேதி திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. திருமணத்திற்கான சுபநிகழ்ச்சிகள் மாலை 4 மணிக்கு நடைபெற ஏற்பாடாகியிருந்தது. அன்று மாலை மணமகள் மற்றும் உறவினர்கள் மணமகனின் வருகைக்காக காத்திருந்தனர். இரவு 8 மணி வரை மணமகன் திருமண நிகழ்ச்சிக்கு வரவில்லை. இந்த நிலையில், மணமகன் அவரது நண்பர்களுடன் குடித்து விட்டு தொடர்ந்து நடனமாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

14 மாநிலங்களில் மே 2ம் தேதி வரை வெப்ப அலை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் https://ift.tt/XT1LZe9

படம்
புதுடெல்லி: அடுத்த மூன்று நாட்களுக்கு வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை சுமார் 2 டிகிரி வரை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப அலை: இந்தியா முழுவதும் வழக்கத்தை விட கோடை வெப்பம் அதிகமாகவே தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. விதர்பா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கும், உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், கங்கை நதி, மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவின் உள்பகுதி போன்றவைகளில் ஏப்ரல் 30 வரையிலும், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி ஆகிய பகுதிகளில் மே 1ம் தேதி வரையிலும், பிகாரில் ஏப்.29ம் தேதி வரையிலும், சத்தீஸ்கர் பகுதிகளில் 30ம் தேதி வரையில் வெப்ப அலை நீடிக்கும். தலைநகர் டெல்லியில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸைத் தொடும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தான் உடனான அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை - மத்திய அரசு தகவல்

படம்
புதுடெல்லி: பயங்கரவாதம் இல்லாத சூழல் நிலவும் போது மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்ற இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வியாழக்கிழமை கூறியதாவது, "கராச்சியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரே நிலைப்பாட்டை எடுக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளது. எல்லாவகையான பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு உறுதியாகவும் நிலையானதாகவும் இருக்கிறது என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பதவிக்காலம் முடிவதால் 3 மாத இடைவெளியில் 3 தலைமை நீதிபதிகளை சந்திக்கும் உச்ச நீதிமன்றம் https://ift.tt/Vm1dSvq

படம்
புதுடெல்லி : மூன்று மாத இடைவெளியில் உச்சநீதிமன்றம் மூன்று தலைமை நீதிபதிகளை சந்திக்கவிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி பதவியில் இருந்து ஓய்வுபெற உள்ளார். அவரையடுத்து தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள யு.யு.லலித் நவம்பர் 8-ம் தேதி ஓய்வுபெற உள்ளார். அவருக்கு அடுத்து தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள டி.ஒய்.சந்திரசூட் 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை பொறுப்பில் இருப்பார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருப்பதியை அடுத்து விசாகப்பட்டினத்திலும் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அத்துமீறல் https://ift.tt/EwcC9Rq

படம்
விசாகப்பட்டினம் : திருப்பதி ருய்யா அரசு மருத்துவமனையில் உடல் நலம் குன்றி உயிரிழந்த ஜோஷ்வா (10) எனும் சிறுவனின் சடலத்தை அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அங்குள்ள தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ரூ.10,000 கேட்டனர். அங்கு வந்த இலவச ஆம்புலன்சையும் அவர்கள் திருப்பி அனுப்பினர். இதனால் ஜோஷ்வாவின் சடலத்தை தோளில் சுமந்தபடி 90 கி.மீ தூரம் வரை அவரது தந்தை நேற்றுமுன்தினம் கொண்டு சென்றார். இச்சம்பவம் தொடர்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், விசாகப்பட்டினம் கேஜிஎச் அரசு மருத்துவமனையில் மனோஜ் என்பவரின் மனைவிக்கு குழந்தை பிறந்தது. அவர்களை தனது சொந்த காரில், மனோஜ் அழைத்து சென்றார். அப்போது, தனியார் ஆம்புலன்ஸ் கும்பல், மனோஜ் காரை மறித்து தாக்கியுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மியான்மரில் ஆங் சான் சூகிக்கு 5 ஆண்டு சிறை - ஊழல் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

படம்
பாங்காக் : மியான்மரில் தொடரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர் ஆங் சான் சூகி. இவருடைய தேசிய ஜனநாயக பேரவை கட்சி 2015-ல் ஆட்சியைப் பிடித்தது. எனினும், சட்ட ரீதியாக அவர் அதிபர் பதவியை ஏற்க முடியவில்லை. பிரதமருக்கு இணையான ஆலோசகர் பதவியில் நீடித்தார். பின்னர் 2020-ல் நடந்த தேர்தலிலும் அவரது கட்சி வெற்றி பெற்றது. எனினும் தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி, கடந்த 2021 பிப்ரவரி மாதம் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் மீண்டும் கைப்பற்றியது. சூகி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘ஆளுநர் பதவியே தேவையில்லை’ - தெலங்கானா முதல்வர் குற்றச்சாட்டு https://ift.tt/DyNfrGQ

படம்
ஹைதராபாத் : ஹைதராபாத்தில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் மாநாடு நேற்று நடந்தது. இதில் முதல்வர் சந்திரசேகர ராவ் பேசியதாவது: ஆளுநர் பதவியால் மறைந்த முதல்வர் என்.டி.ராமாராவ் பதவி இழந்தார். பின்னர் மீண்டும் மக்கள் அவரை முதல்வராக தேர்ந்தெடுத்தனர். அப்படிப்பட்ட என்.டி.ராமாராவுக்கே ஆளுநர் பதவி சினிமா காட்டி விட்டது. ஆளுநர் பதவியை சிலர் சுய நலத்திற்காக பயன்படுத்துகின்றனர். மகாராஷ்டிராவில் மாநில முதல்வர் 12 எம்எல்சிக்களை ஆளுநருக்கு சிபாரிசு செய்துள்ளார். இதனை மாநில ஆளுநர் கண்டுகொள்ளாமல் உள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தாஜ்மகாலுக்கு வந்த அயோத்தி மடத்தின் துறவி: பிரம்மதண்டத்துடன் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் சர்ச்சை https://ift.tt/tCUL5D3

படம்
புதுடெல்லி : ஆக்ராவின் தாஜ்மகாலுக்கு அயோத்தி மடத்தின் தலைவர் துறவி பரமஹன்ஸ் தாஸ் தனது சீடர்களுடன் வந்திருந்தார். பிரம்மதண்டத்துடன் உள்ளே செல்ல மத்திய பாதுகாப்பு போலீஸார் அனுமதி மறுத்தது சர்ச்சையாகிவிட்டது. முகலாய மன்னர் ஷாஜஹான் தனது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டியது தாஜ்மகால். உலகின் ஏழாவது அதிசயமான தாஜ்மகாலை பல்வேறு தரப்பினர் பல காரணங்களுக்காகக் காண விரும்புவது உண்டு. இந்தவகையில் அயோத்தி ராம் ஜானகி மடத்தின் தலைவரான துறவி பரமஹன்ஸ் தாஸ் தனது இரண்டு சீடர்களுடன் நேற்று முன்தினம் மாலை ஆக்ரா வந்திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா முதல் அலையில் ரூ.11,000 கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒதுக்கீடு https://ift.tt/3HZRjO7

படம்
புதுடெல்லி : கரோனா முதல் அலையின் போது புலம்பெயர் தொழிலாளருக்காக மாநிலங்களுக்கு ரூ.11,092 கோடி நிதி அளிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 2020-21-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கனடா நாட்டில் வசிப்பவரிடம் பெண் குரலில் பேசி ரூ.1.35 கோடி மோசடி செய்தவர் கைது https://ift.tt/SlcIsWD

படம்
சென்னை: ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (42). கனடாவில் மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விவாகரத்து கோரி வழக்குத் தொடர்ந்தனர். இந்நிலையில், பச்சையப்பன் மறுமணம் செய்ய முடிவு செய்தார். அதற்காக, இணையதளம் மூலம்திருமண தகவல் மையத்தில் பதிவுசெய்தார். இதையடுத்து, சென்னைபெரம்பூர் வெங்கட்ராமன் தெருவைச் சேர்ந்த செந்தில்பிரகாஷ் (42), பச்சையப்பனை தொடர்பு கொண்டு, “எனது தங்கைகணவரை இழந்துள்ளார். உங்களை அவருக்கு மிகவும் பிடித்துள்ளது. எனவே, உங்களை மறுமணம் செய்துகொள்ள விரும்புகிறார். உங்களுக்கு விருப்பமா?” என்று கேட்டுள்ளார். மேலும், தங்கையின் புகைப்படத்தையும், செல்போன் எண்ணையும் அனுப்பி வைத்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாமல்லபுரம் | பணம் தர மறுத்ததால் மாமியாரை கொலை செய்த மருமகள், 2 சிறுவர் கைது https://ift.tt/KEklMvm

படம்
மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றத்தில் வீட்டில் தனியாக இருந்த மாமியாரை, பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 2 சிறுவர்களின் உதவியோடு கொலை செய்த மருமகளை போலீஸார் நேற்று கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் மேட்டுத் தெருவில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பத்தேசந்த்(77). அவரது மனைவி பிரேங்கவர்(72) ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.பி.யில் ஒலிபெருக்கி ஓசையை கட்டுப்படுத்திய மசூதி, கோயில்கள் https://ift.tt/EbPNABt

படம்
புதுடெல்லி : முஸ்லிம்களின் ஐந்து வேளை தொழுகைக்கான மசூதிகளின் ‘அஸான்’ எனும் பாங்கு முழக்கம், ஒலிபெருக்கிகளில் ஒலிப்பது சர்ச்சையானது. இந்துத்துவா அரசியலை கொள்கையாகக் கொண்ட கட்சியினரால், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் இது பிரச்சினையாக்கப்பட்டது. இதையடுத்து பாஜக ஆளும் உ.பி.யிலும் இப்பிரச்சினை கிளம்பியது. இதனால் உருவான பதற்றத்தை தொடக்கத்திலேயே தணிக்கும் பொருட்டு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நம்பிக்கை இழந்த 45 கோடி பேர்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு https://ift.tt/f2HZTck

படம்
புதுடெல்லி : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு குடும்பத்திலும் வேலையின்மை என்பதே புதிய இந்தியாவின் புதிய முழக்கமாக உள்ளது. பிரதமர் மோடியின் அதிரடி முடிவுகளால் நாட்டில் 45 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துள்ளனர். 75 ஆண்டுகளில், இவ்வளவு பேரின் நம்பிக்கை இழப்புக்கு காரணமான, நாட்டின் முதல் பிரதமர் மோடி ஆவார்” என்று கூறியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆம்புலன்ஸுக்கு அதிக பணம் கேட்டதால் 10 வயது மகனின் சடலத்தை பைக்கில் கொண்டு சென்ற தந்தை https://ift.tt/7oGIZ5u

படம்
திருப்பதி : ஆந்திர மாநிலம் அன்னமைய்யா மாவட்டம், சிட்வேல் கிராமத்தைச் சேர்ந்த ஜோஷ்வா (10) இரைப்பை மற்றும் சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டார். இவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பதி ருய்யா அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜோஷ்வா நேற்று முன்தினம் உயிரிழந்தார். மகனின் சடலத்தை சொந்த கிராமத்துக்கு எடுத்துச் செல்ல, தனியார் ஆம்புலன்ஸ் சங்கத்தினர் ரூ.10 ஆயிரம் கேட்டனர். இதனால் இலவச ஆம்புலன்ஸ் உதவியை நாடினர். ஆனால், அந்த ஆம்புலன்ஸை தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் திருப்பி அனுப்பினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாராயண குருவின் போதனைகளை பின்பற்றினால் இந்தியர்களிடம் பிரிவினையை ஏற்படுத்த முடியாது: பிரதமர் மோடி கருத்து https://ift.tt/KDPyoTa

படம்
புதுடெல்லி : நாராயண குருவின் போதனைகளை பின்பற்றினால் உலகின் எந்த சக்தியாலும் இந்தியர்களிடம் பிரிவினையை ஏற்படுத்த முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கேரளாவை சேர்ந்த ஆன்மிக தலைவர் நாராயண குரு கடந்த 1856-ம் ஆண்டு முதல் 1928-ம் ஆண்டு வரை வாழ்ந்தார். சாதி பாகுபாட்டுக்கு எதிராக தீவிரமாக போராடிய அவர் கடந்த 1903-ம்ஆண்டில் தர்ம சங்கம் என்ற அமைப்பை நிறுவினார். பின்னர் கேரளாவின் வற்கலை ஊரில் சிவகிரி மலை மீது மடத்தை ஏற்படுத்தினார். நாராயண குருவின் வழிகாட்டுதலின்படி பிரம்ம வித்யாலயா தொடங்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சட்டவிரோத குடியிருப்புகளால் நகர்ப்புறங்களுக்கு அச்சுறுத்தல் - உச்ச நீதிமன்றம் கருத்து https://ift.tt/G3M6v9o

படம்
புதுடெல்லி : சமூக ஆர்வலர் ஜுவ்வாதி சாகர் ராவ் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார். அதில், “தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ரியல் எஸ்டேட் துறையினர் சட்டவிரோதமாக நிறுவிய குடியிருப்புகளால் மழைக்காலங்ளில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதுடன், முறையற்ற வளர்ச்சி, போக்குவரத்து நெரிசல் உட்பட பல பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்கின்றனர். இதைப் பொருட்படுத்தாத அதிகாரிகள், சட்டவிரோத குடியிருப்புகளை முறைப்படுத்தும் திட்டத்தை அமல்படுத்துகின்றனர். இது சட்டத்துக்கு புறம்பானது. இதுகுறித்து முறையான உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மீண்டும் பிரான்ஸ் அதிபரானார் இமானுவல் மேக்ரான் - பிரதமர் நரேந்திர மோடி உட்பட தலைவர்கள் வாழ்த்து

படம்
பாரிஸ் : பிரான்ஸ் அதிபராக 2-வது முறை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் இமானுவல் மேக்ரான் (44). பிரான்ஸில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் லா ரிபப்ளிக் என் மார்ச் கட்சி வெற்றி பெற்றது. கட்சி தலைவர் இமானுவல் மேக்ரான் (அப்போது 39), இளம் வயதில் அதிபராகி சாதனை படைத்தார். அவரது பதவிக் காலம் அடுத்த மாதம் முடியவுள்ள நிலையில், அங்கு அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், அதிபர் மேக்ரான், நேஷனல் ரேலி கட்சித் தலைவர் மரின் லீ பென் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். யாருக்கும் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் கிடைக்கவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெய்ஜிங்கிலும் கரோனா அதிகரிப்பதால் ஊரடங்கு அச்சம் - சீனாவில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு

படம்
பெய்ஜிங் : கரோனா ஊரடங்கு அச்சம் காரணமாக சீன தலைநகர் பெய்ஜிங்கில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், சீனாவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நேதாஜி அஸ்தியை இந்தியா கொண்டு வர மருமகன் கோரிக்கை https://ift.tt/7g5xSHB

படம்
புதுடெல்லி : நேதாஜியின் மருமகன் சந்திரகுமார் போஸ் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம்தேதி விமான விபத்தில் காலமானார். அவரது அஸ்தி ஜப்பானில் உள்ள ரங்கோஜி கோயிலில் உள்ளது. அவரது அஸ்தியை இந்தியா கொண்டு வர வேண்டும். வெற்றி பெற்ற ராணுவத்தின் தலைவராக சுதந்திர இந்தியாவுக்கு திரும்ப நேதாஜி விரும்பினார். ஜப்பானில் உள்ள அவரது அஸ்தியை இந்தியா கொண்டு வந்து, நேதாஜியின் மகள் அனிதா போஸ் இறுதிச் சடங்குகள் செய்ய அனுமதிக்க வேண்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத்தில் 250 கிலோ ஹெராயின் கடத்த முயன்ற 9 பாகிஸ்தானியர் கைது https://ift.tt/7I5lKku

படம்
அகமதாபாத் : குஜராத்தில் இந்திய கடல் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த அல் ஹஜ் என்ற படகு ஒன்று அத்துமீறி நுழைந்தது. அரபிக் கடலில் நுழைந்த அந்த படகை கடலோர காவல் படையும், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் மடக்கிப் பிடித்தனர். பாகிஸ்தான் படகில் 250 கிலோவுக்கும் அதிகமான ஹெராயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பாகிஸ்தான் படகில் இருந்த அந்நாட்டைச் சேர்ந்த 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். படகும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 9 பாகிஸ்தானியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்திவர முயன்றது தெரியவந்தது. அவர்களிடம் மேலும் விசாரணை நடத்துவதற்காக கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜகாவு துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் போதைப் பொருளின் சந்தை மதிப்பு ரூ.280 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் இதேபோல் குஜராத்தின் கண்ட்லா துறைமுகத்தில் கன்டெய்னர் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1,500 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. from இந்து தமிழ் திசை : News in Tam...

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு: ஜூலையில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை https://ift.tt/l3yfuKv

படம்
புதுடெல்லி : காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் மீதான விசாரணையை ஜூலையில் தொடங்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370-வது சட்டப்பிரிவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதன்மூலம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சுமார் 20-க்கும்மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜம்முவின் சஞ்சுவான் பகுதியில் நடந்த தாக்குதல் வழக்கில் தீவிரவாதிகளுக்கு உதவியதாக 2 பேர் கைது https://ift.tt/ZQYN80h

படம்
ஜம்மு: ஜம்முவின் சஞ்சுவான் பகுதியில் நடந்த தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு உதவியதாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். தேசிய உள்ளாட்சி அமைப்பு தினத்தையொட்டி பிரதமரின் வருகையால் ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. எல்லை பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. இதேபோல கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆதரவற்றவர்களுக்கு உதவி வரும் பஹ்ரைன் நன்கொடையாளரை ஆச்சரியப்படுத்திய டிவி நிகழ்ச்சி

படம்
கெய்ரோ: பஹ்ரைனைச் சேர்ந்த காலில் அல் டேலாமி கட்டிடக்கலை நிபுணர். ஆதரவற்றவர்களுக்கு உதவி வரும் இவரது கார் போக்குவரத்து சிக்னலில் நிற்கிறது. ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த அவர் சீட் பெல்ட் அணிந்திருந்தார். உடனடியாக அவரது கார் முன்பு தோன்றிய சிலர், ‘கவனியுங்கள் உங்கள் முன்பு ஒரு ஹீரோ உள்ளார்’ என அரபு மொழியில் எழுதப்பட்ட பதாகைகளை காண்பிக்கின்றனர். ‘காலில் அல் டேலாமி, உங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்’ எனவும் எழுதப்பட்டிருந்தது. மேலும் அப்பகுதியில் நின்றிருந்த லாரியில் ‘காலில் அல் டேலாமி ஹீரோ’ என பெரிதாக எழுதப்பட்டிருந்தது. கார் ஜன்னல் ஓரம் நின்றிருந்தவர்கள் டேலாமியின் புகைப்படத்தைக் காண்பித்தனர். ‘நீங்கள் மிகச்சிறந்த மனிதர்’ என கோஷமிட்டனர். இதை எல்லாம் பார்த்த அவர் ஆச்சரியப்படுகிறார். காரிலிருந்து கீழே இறங்கிய அவர், “உங்கள் பாராட்டைப் பெற நான் தகுதியானவன் அல்ல. இதற்கு அல்லா தான் காரணம்” என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cin...

அப்பளம், வெல்லம், சாக்லேட் உள்ளிட்ட 143 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்கிறது: மாநில அரசுகளிடம் கருத்துக்கேட்பு https://ift.tt/OY0qcR1

படம்
புதுடெல்லி: அப்பளம், வெல்லம், சாக்லேட் உள்ளிட்ட மக்களின் அன்றாட பயன்பாட்டில் இருக்கும் 143 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை உயர்த்த மத்திய அரசுமுடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகளிடம்ஜிஎஸ்டி கவுன்சில் கருத்து கேட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிப்பு முறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, கடந்த 2017 ஜூலையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகாராஷ்டிராவில் கைதான நவ்நீத் ராணா அவரது கணவர் ரவி ராணாவுக்கு 14 நாள் காவல் https://ift.tt/AaTZKHV

படம்
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் வீடு முன் ஹனுமன் சாலீசா என்ற மந்திரத்தை கூறப்போவதாக அறிவித்த பெண் எம்.பி. நவ்நீத் ராணா மற்றும் அவரது கணவர் ரவி ராணா ஆகியோர் 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கபட்டனர். மகாராஷ்டிராவில் அமராவதி தொகுதி சுயேச்சை பெண் எம்பி நவ்நீத் ராணா. இவரது கணவரும் பட்னேரா தொகுதி சுயேச்சை எம்எல்ஏவுமான ரவி ராணாவும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவோடு தேர்தலில் வெற்றி பெற்றவர்கள். சமீபகாலமாக பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே வீடு முன் அனுமன் சாலீசா என்ற மந்திரத்தை பாடப்போவதாக நவ்னீத் ராணாவும் ரவி ராணாவும் அறிவித்தனர். இதற்கு சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜம்மு காஷ்மீரில் சூரிய சக்தி மின் நிலையம் உட்பட ரூ.20 ஆயிரம் கோடியில் புதிய திட்டங்கள்: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் https://ift.tt/T9GlwKJ

படம்
பாலி (சம்பா): சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக ஜம்மு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு சூரிய சக்தி மின் நிலையம் உட்பட ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தேசிய பஞ்சாயத்து ராஜ் தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஜம்மு காஷ்மீர் சென்றார். கடந்த 2019-ம் ஆண்டு சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக ஜம்மு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இலங்கை பொருளாதார நெருக்கடி | பிரதமர் மகிந்த ராஜபக்ச வீட்டை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்

படம்
கொழும்பு: இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகக் கோரி ஆயிரக்கணக்கான மாணவர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆளும் அரசு பதவி விலக வேண்டும் எனக் கூறி மக்கள் பல்வேறு போரட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை0 ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகக்கோரி அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மதுரை | ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தலைமை ஆசிரியர் கைது https://ift.tt/L9o0MOk

படம்
மதுரை: உடன் பணியாற்றிய ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தலைமை ஆசிரியர் ஒருவர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை கீரைத்துறை பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் ஜெயசீலன்(55). அப்பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார். சில மாதத்திற்கு முன்பு இந்த பள்ளிக்கு வேறொரு அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து பணிநிரவல் மூலம் இரண்டு ஆசிரியைகள் மாறுதலாகி வந்தனர். அவர்கள் பள்ளி அலுவல், மாணவர்களுக்கான தேவை தொடர்பாக தலைமை ஆசிரியரை அணுகிய போது, அவர்களிடம் தவறான வகையில் பழக ஜெயசீலன் முயற்சித்ததாக கூறப்படுகிறது. அதனை இரண்டு ஆசிரியைகளும் கண்டித்து, அவரை எச்சரித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வன்முறையை தூண்டும் தகவலை பரப்ப வேண்டாம்: சேனல்களுக்கு மத்திய அரசு உத்தரவு https://ift.tt/CW0pq51

படம்
புதுடெல்லி : ஆதாரமற்ற, வன்முறையை தூண்டும் தகவல்களை பரப்ப வேண்டாம் என தொலைக்காட்சி சேனல்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முஸ்லிம் அரசுகளின் எழுச்சி பற்றிய பாடங்களை நீக்கியது சிபிஎஸ்இ https://ift.tt/4CTrvJ0

படம்
புதுடெல்லி : சிபிஎஸ்இ கல்வி வாரியம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சிபிஎஸ்இ 11, 12-ம் வகுப்புக்கான வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத் திட்டத்திலிருந்து பனிப்போர் யுகம், ஆப்ரிக்க-ஆசியாவில் இஸ்லாமிய பேரரசுகளின் எழுச்சி, முகலாய நீதிமன்றங்களின் வரலாறு, தொழிற்புரட்சி ஆகியப் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜம்மு-காஷ்மீரில் இன்று பஞ்சாயத்து ராஜ் தின விழாவில் பிரதமர் பங்கேற்பு: ரூ.20,000 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார் https://ift.tt/eHwDobf

படம்
புதுடெல்லி : ஜம்மு-காஷ்மீரின் சம்பா பகுதியில் இன்று நடைபெறும் பஞ்சாயத்து ராஜ் தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார். அப்போது பல்வேறு நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டம், பாலி கிராமத்தில் இன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த விழாவில் 30,000-க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்த திட்டம் https://ift.tt/ziDRp9E

படம்
புதுடெல்லி : அயோத்தியில் ராமர் கோயில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் நடைமுறைக்கு தடை, பொது சிவில் சட்டம் ஆகியவற்றை பாஜக கொள்கையாக கொண்டுள்ளது. தொடக்கம் முதல் அனைத்து தேர்தல் அறிக்கையிலும் இந்த விஷயங்கள் தவறாமல் இடம் பெற்றன. இவற்றில் முதல் மூன்றும் அமலாக்கப்பட்டுவிட, மீதம் இருப்பது, பொது சிவில் சட்டம் மட்டுமே. இதுவும், விரைவில் அமலாக்க முயற்சிக்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்