இடுகைகள்

ஜூன், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அம்மாவின் பெயரில் மரக்கன்று நடுங்கள்: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அழைப்பு https://ift.tt/s0ZSwXv

படம்
புதுடெல்லி: நாட்டு மக்கள் அனைவரும் தங்களது அம்மா பெயரில் ஒரு மரக்கன்றை கட்டாயம் நடவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 2014 மே மாதம் முதல்முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி, அதே ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி அகில இந்திய வானொலி, தூர்தர்ஷனில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் உரையாற்றினார். அதுமுதல் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

துணை முதல்வர் பதவி கேட்டு 3 பேர் போர்க்கொடி: கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடும் நெருக்கடி https://ift.tt/ynQlMBO

படம்
பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. முதல்வராக சித்தராமையாவையும் துணை முதல்வராக டி.கே.சிவகுமாரையும் காங்கிரஸ் மேலிடம் நியமித்தது. அப்போதே சில மூத்த தலைவர்கள் முதல்வர், துணை முதல்வர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், ஒக்கலிகா பிரிவை சேர்ந்த டி.கே.சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவியை வழங்கியதைப் போல, லிங்காயத்து மற்றும் பட்டியலினத்தை சேர்ந்தவருக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்ற கோஷம் வலுத்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

2028-ல் போலவரம் அணை கட்டும் பணி நிறைவடையும்: ஆந்திர அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் https://ift.tt/yqfFAMC

படம்
அமராவதி: ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம்ஆந்திரா, தெலங்கானா என பிரிவினை செய்யப்பட்ட பின்னர், புதிய ஆந்திர மாநிலத்தில் கோதாவரிநதிகளுக்கிடையே போலவரம் என்ற பெயரில் பிரம்மாண்டமான அணை கட்ட சந்திரபாபு நாயுடு அரசு 2014-ல் முடிவு செய்தது. இதற்கு மாநில பிரிவினை சட்டத்தின் கீழ் மத்திய அரசு சிறப்பு நிதியை ஒதுக்கியது. அதன்படி 2014 முதல் 2019 வரை சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது 72 சதவீத பணிகள் முடிவடைந்திருந்தன. இந்நிலையில், 2019-ல் ஜெகன் முதல்வர் ஆனார். ஆனால், அவர் இத்திட்டம் மீது நாட்டம் காட்ட வில்லை எனும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹரியாணா அரசு பள்ளிகளில் 4 லட்சம் போலி மாணவர்கள்: சிபிஐ விசாரணை தொடக்கம் https://ift.tt/2z5HRJa

படம்
சண்டிகர்: கடந்த 2016-ல் ஹரியாணா அரசுப்பள்ளிகளில் 4 லட்சம் போலி மாணவர் சேர்க்கை மூலம் நிதி மோசடி செய்த விவகாரம் குறித்து சிபிஐ நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்றம் கடந்த 2019 நவம்பரில் உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தை அணுகிய சிபிஐ“விசாரணைக்கு பெரும் மனிதவளம் தேவைப்படும் என்பதால் விசாரணையை மாநில காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கோரியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியில் கனமழைக்கு இதுவரை 8 பேர் உயிரிழப்பு https://ift.tt/t7wQMjm

படம்
புதுடெல்லி: டெல்லியில் 88 ஆண்டுகளுக்குப் பிறகு கனமழை பெய்து வருகிறது. டெல்லியில் கடந்த 1936-ம் ஆண்டில் 234 மில்லிமீட்டர் மழை பெய்தது. அதற்குப் பிறகு தற்போது ஜூன் மாதத்தில் 228 மில்லிமீட்டர் மழை டெல்லியில் பதிவாகியுள்ளது. 88 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் கனமழை பெய்துள்ளதால் டெல்லியின் முக்கிய பகுதிகள், சந்திப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், தெற்கு டெல்லியின் வசந்த்விஹார் பகுதியில் புதிதாக கட்டப்படும் கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நீட் தேர்வு விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் அமளி https://ift.tt/FubnsMr

படம்
புதுடெல்லி: நீட் தேர்வு விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று கடும் அமளி ஏற்பட்டது. நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த 27-ம் தேதி உரையாற்றினார். இதைத் தொடர்ந்து, மக்களவை, மாநிலங்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற விண்கலத்தில் எரிபொருள் கசிவு: சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் சிக்கல்

படம்
ஃபுளோரிடா: சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஹீலியம் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதால், அதை சரிசெய்வதில் 2 வாரத்துக்கு மேல் தாமதம் ஏற்பட்டுள்ளது. விண்கலத்தை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் முயற்சி ஜூலை 2-ம் தேதிக்குபின் மேற்கொள்ளப்படும் நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்வெளி வீரர்களைஅனுப்ப ‘ஸ்டார்லைனர்’ என்றகேப்சூல் விண்கலத்தை போயிங்நிறுவனம் தயாரித்தது. பரிசோதனை முயற்சியாக இந்த ஸ்டார்லைனர் விண்கலம் அட்லஸ் 5 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து கடந்த 5-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பப்பட்டது. இதில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு பலமுறை சென்று வந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் அனுப்பப்பட்டனர். 25 மணி நேர பயணத்துக்குப்பின் சர்வதேச விண்வெளி மையம் சுற்றிக் கொண்டிருக்கும் சுற்றுப்பாதையை ஸ்டார்லைனர் விண்கலம் சென்றடைந்தது. விண்வெளி மையத்தை, விண்கலம் சென்றடைந்ததும், அதிலிருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று அங்கு ஏற...

நாடு முழுவதும் மேலும் 3 கோடி வீடுகள் கட்டித் தரப்படும்: நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை https://ift.tt/co7hwTa

படம்
புதுடெல்லி: நாடு முழுவதும் ‘பிஎம் ஆவாஸ் யோஜனா’ திட்டத்தில் மேலும் 3 கோடிவீடுகள் கட்டித் தரப்படும் என்று குடியரசுத் தலைவர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18-வது மக்களவையின் முதல் கூட்டம் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. முதல் 2 நாட்களில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாலத்தீவு அதிபருக்கு பில்லி, சூனியம் வைத்ததாக இரு அமைச்சர்கள் கைது

படம்
மாலே : மாலத்தீவில் அதிபர் முகமது முய்சுவுக்கு பில்லி,சூனியம் வைத்ததாக இரண்டு அமைச்சர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். மாலத்தீவு நாட்டில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவு வகித்து வருபவர் ஷாம்னாஸ் சலீம். இவரது கணவர் ஆதம் ரமீஸ். இவரும் அதிபர் அலுவலகத்தில் அமைச்சராக இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுக்கு பில்லி, சூனியம் வைத்ததாக கூறி மாலத்தீவு போலீஸார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பகலில் கடிக்கும் கொசுக்களால் புனே மருத்துவர், மகளுக்கு ஜிகா வைரஸ் தொற்று https://ift.tt/BqSzLji

படம்
மும்பை: மகாராஷ்டிராவில் புனே நகரை சேர்ந்த 46 வயது மருத்துவர் மற்றும்அவரது மகளுக்கு ஜிகா வைரஸ்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்றாலும் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஜிகா வைரஸ் நோய் என்பது ஏடிஎஸ் வகை கொசுக்களால் பரவும் நோயாகும். மனிதர்களை பகலில் கடிக்கும் இந்த வகை கொசு டெங்கு, சிக்குன்குனியா, போன்ற நோய்களையும் பரப்பும் தன்மை கொண்டவை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜிகாவைரஸ் முதன்முதலில் உகாண்டாவில் கடந்த 1947-ல் கண்டுபிடிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராமர் கோயில் இறுதி பணி 2025 மார்ச்சில் முடியும்: நிருபேந்திர மிஸ்ரா தகவல் https://ift.tt/BuqMLhR

படம்
அயோத்தி: அயோத்தியில் பிரம்மாண்ட ராமர்கோயில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோயிலின் தரைத்தள கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மூலவரான குழந்தை ராமரின் சிலை கருவறையில் கடந்தஜனவரியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது தொடர்பான பிராணபிரதிஷ்டை விழா கடந்த ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் ராமர் கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறியதாவது: கோயிலின் முதல் தள கட்டுமானப் பணி அடுத்த மாதம் நிறைவுபெறும். இதையடுத்து இரண்டாவது தளத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, இந்தஆண்டு டிசம்பருக்குள் முடிக்கப்படும். கோயில் வளாகத்தின் ஒட்டுமொத்த கட்டுமானப் பணிகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இவ்வாறு நிருபேந்திர மிஸ்ரா கூறினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

2-வது முறையாக மக்களவை தலைவரானார் ஓம் பிர்லா: குரல் வாக்கெடுப்பு மூலம் பாஜக அணி வெற்றி https://ift.tt/XJVHlWR

படம்
புதுடெல்லி: நாடாளுமன்ற 18-வது மக்களவையின் தலைவராக ஓம் பிர்லா குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டார். பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 18-வது மக்களவை கூட்டத்தொடர் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பர்த்ருஹரி மஹதாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சனாதனம் குறித்த சர்ச்சை பேச்சு: பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் உதயநிதிக்கு ஜாமீன் https://ift.tt/RHDX0zI

படம்
பெங்களூரு: சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் கடந்த 2023 செப்டம்பரில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில், “டெங்கு, மலேரியா, கரோனாபோல சனாதனத்தை ஒழிக்க வேண்டும்” என்று தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக பல்வேறு மாநிலங்களிலும் வழக்கு தொடரப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிறையில் கேஜ்ரிவாலிடம் சிபிஐ விசாரணை: மத்திய அரசின் சதி என ஆம் ஆத்மி குற்றச்சாட்டு https://ift.tt/nstMrOD

படம்
புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அர்விந்த் கேஜ்ரிவாலை ஏற்கெனவே அமலாக்கத்துறை கைது செய்திருந்த நிலையில், தற்போது சிபிஐ-யும் அவரை கைது செய்யலாம் என்று கூறப்படுகிறது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது திகார் சிறையில் இருக்கும் அவரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு: காங்கிரஸ் அறிவிப்பு https://ift.tt/s1NKq9W

படம்
புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வீட்டில் இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனையின் முடிவில் ராகுல் காந்தி மக்களவை எதிர்கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜூன் 27-ல் கூட்டு கூட்டம்: குடியரசு தலைவர் முர்மு உரையாற்றுகிறார் https://ift.tt/Pwft834

படம்
புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் ஜூன் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். மக்களவை தலைவர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. 18-வது மக்களவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதையொட்டி, புதிய எம்.பி.க்கள் பதவியேற்புக்காக மக்களவையின் தற்காலிக தலைவராக பாஜக எம்.பி. பர்த்ருஹரி மஹதாப் கடந்த சில நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், தற்காலிக மக்களவை தலைவர் பர்த்ருஹரி மஹதாப்புக்கு குடியரசுத் தலைவர் முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கியது: முதல் நாளில் 280 எம்.பி.க்கள் பதவியேற்பு https://ift.tt/sQolvjL

படம்
புதுடெல்லி: நாடாளுமன்ற 18-வது மக்களவையின் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் மோடி, அமைச்சர்கள் உள்ளிட்ட புதிய எம்.பி.க்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஜனநாயகத்துக்கு கரும்புள்ளியாக அமைந்த அவசரநிலை மீண்டும் நிகழக் கூடாது என்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். 18-வது மக்களவை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று, தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை தக்கவைத்தது. 3-வது முறை பிரதமராக நரேந்திர மோடி கடந்த 9-ம் தேதி பதவியேற்றார். அவருடன் மத்திய அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து, புதிய மக்களவையின் முதல் கூட்டம் ஜூன் 24-ம் தேதி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘கேரளம்’ ஆகிறது கேரளா: சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்! https://ift.tt/z1YR9sL

படம்
கொச்சி: கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் இன்று இரண்டாவது முறையாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரள சட்டப்பேரவையில் அலுவல் நடத்தை விதிகள் 118-ன் கீழ் இதற்கான தீர்மானத்தை முதல்வர் பினராயி விஜயன் தாக்கல் செய்தார். எனினும் சில தொழில்நுட்ப காரணங்களால் இந்த தீர்மானம் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரான்ஸில் 20 ஆண்டாக வேலை தராமலேயே சம்பளம் தரும் நிறுவனம் மீது பெண் ஊழியர் வழக்கு

படம்
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லாரன்ஸ் வான் என்ற பெண் கடந்த1993-ம் ஆண்டு டெலிகாம் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.பகுதி பக்கவாதம் மற்றும் வலிப்புநோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு ஏற்ற பணி தொடக்கத்தில் வழங்கப்பட்டது. கடந்த 2002-ம் ஆண்டு, வேறுபகுதிக்கு பணியிடம் மாற்றம் பெற்று சென்றார். அங்கு அவருக்குஏற்ப வேலை வழங்கவில்லை. இதனிடையே 2013-ல் இந்நிறுவனம் ஆரஞ்ச் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. லாரன்ஸ்வானுக்கு எந்த பணியையும் வழங்கவில்லை. இது தொடர்பாக வாசன்ஹோவ் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் நடக்க இருந்த முதுநிலை நீட் தேர்வு திடீர் தள்ளிவைப்பு https://ift.tt/bjAnlm5

படம்
புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று நடக்க இருந்த முதுநிலை நீட் தேர்வு திடீரென தள்ளிவைக்கப்பட்டதால் மாணவர்கள் அவதியடைந்தனர். மருத்துவ பட்ட மேற்படிப்புகளான எம்டி, எம்எஸ்,முதுநிலை டிப்ளமா படிப்புகளில் மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் இத்தேர்வு நேற்று (ஜூன் 23) காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடக்க இருந்தது. தமிழகத்தில் 30 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் எம்பிபிஎஸ் படித்து முடித்த 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். தொலைவில் உள்ளவர்கள் முந்தைய நாளான 22-ம் தேதி இரவே தங்கள் ஊர்களில் இருந்து புறப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நெட் தேர்வு முறைகேடு: பிஹாரில் விசாரிக்கச் சென்ற சிபிஐ அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல்; 4 பேர் கைது https://ift.tt/KF6V1Ny

படம்
பாட்னா : பிஹார் மாநிலத்தில் நெட் தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரிக்கச் சென்ற சிபிஐ அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பான 4 பேரை போலீஸார் கைது செய்தனர். யுஜிசி-நெட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரத்தை சிபிஐ விசாரிக்கும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது சிபிஐ. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

போட்டி தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை, ரூ.1 கோடி அபராதம் https://ift.tt/1Q9CuRM

படம்
புதுடெல்லி: நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுதல், வினாத்தாளை கசியவிடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு ரூ.1 கோடி அபராதம், 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்க வழிவகை செய்யும் சட்டத்தை மத்தியஅரசு அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்தது மாணவர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதேபோல் அண்மையில் நடைபெற்ற நெட் தேர்விலும் வினாத்தாள் கசிந்து முறைகேடு நடைபெற்றதாகத் தெரியவந்தது. இதையடுத்து அந்தத் தேர்வை மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முதுநிலை ‘நீட்’ தேர்வு ஒத்திவைப்பு: மத்திய அரசு திடீர் அறிவிப்பு https://ift.tt/uzKgjVZ

படம்
புதுடெல்லி: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு நாளை (ஜூன் 23, ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் இன்று (சனிக்கிழமை) சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வை தேசிய தேர்வு வாரியம் நடத்துகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நீட், நெட் முறைகேடு விவகாரம்: தேசிய தேர்வு முகமை தலைவர் அதிரடி நீக்கம் https://ift.tt/H4kBXpS

படம்
புதுடெல்லி: தேசிய தேர்வு முகமையின் (NTA) தலைவராக இருந்த சுபோத் குமாரை அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது மத்திய அரசு. இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் பிரதீப் சிங் கரோலாவுக்கு கூடுதல் பொறுப்பாக தேசிய தேர்வு முகமையின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை நடத்திய நடப்பு ஆண்டுக்கான நீட் மற்றும் நெட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த சூழலில் இந்த மாற்றத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

யுஜிசி நெட் தேர்வு நடப்பதற்கு முன் வினாத்தாள் ரூ.6 லட்சத்துக்கு விற்பனை https://ift.tt/w2Gozyf

படம்
புதுடெல்லி: கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணி மற்றும் ஆய்வுப் படிப்பு உதவித் தொகைக்கான தகுதியை தீர்மானிக்க யுஜிசி – நெட் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்துகிறது. இந்தஆண்டு யுஜிசி – நெட் தேர்வு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இத்தேர்வில் முறைகேடுகள் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக தேசிய சைபர் கிரைம் அளித்த தகவலின் அடிப்படையில் மறுநாள் இத்தேர்வை மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது. மேலும் இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சர்வதேச அளவில் 4-ல் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு

படம்
நியூயார்க்: அன்றாடம் சத்தான உணவு வகைகள் கிடைக்காத குழந்தைகளின் நிலையை ‘குழந்தை உணவு வறுமை’ என்று யுனிசெப் மற்றும் உலக சுகாதார அமைப்பு இணைந்து வரையறுத்துள்ளன. இந்நிலையில், குழந்தை உணவு வறுமையால் தெற்காசிய நாடுகள் மற்றும் துணை சஹாரா ஆப்பிரிக்க பிராந்தியங்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் 18 கோடியே 10 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து போதாமையால் அவர்களது உயரம், உடல் உள்ளிட்ட ஒட்டுமொத்த வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த 18. 1 கோடிபாதிக்கப்பட்ட குழந்தைகளில் 65 சதவீதத்தினர் இந்தியா, கினியா, ஆப்கானிஸ்தான், புர்க்கினா பாசோ, எத்தியோப்பியா உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்தவர்கள். தெற்காசிய நாடுகளில் மட்டும் 6கோடியே 40 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து மிக்க உணவு இன்றி வாடிக் கொண்டிருக்கின்றனர். அந்த பட்டியலில் சோமாலியா நாடு முதலிடத்தில் உள்ளது. கரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய காலத்தில் பொருளாதார சிக்கல்களில் இருந்து ஓரளவு மீண்டாலும் உணவு பண்டங்கள் உட்பட அனைத்து விதமான பொருட்களின் விலைவாசியும் அதிகரித்திருப்பதே அவலநிலைக்கான காரணம் என்று இந்த அற...

இந்துஜா குடும்பத்தினருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை: சுவிட்சர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு

படம்
ஜெனிவா: வீட்டுப் பணியாளர்களை துன்புறுத்திய வழக்கில் இந்துஜா குடும்பத்தினருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சுவிட்சர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அசோக் லேலண்ட், இன்டஸ்இண்ட் பேங்க் என இந்தியாவில் இந்துஜா குழுமம் ஆட்டோமொபைல், வங்கி, ஐடி, சுகாதாரம், பொழுதுபோக்கு, ரியல் எஸ்டேட் என பல துறைகளில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றுகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மும்பை அடல் சேது பாலத்தில் விரிசலா? - காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு மகாராஷ்டிர அரசு விளக்கம் https://ift.tt/uhl7o4J

படம்
மும்பை: பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த் அடல் சேது பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு மகாராஷ்டிர அரசு விளக்கமளித்துள்ளது. மும்பை மற்றும் நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ. தூரத்துக்கு அடல் சேது என்ற பிரம்மாண்ட கடல் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிக நீளமான கடல்வழி பாலம் என்ற சிறப்பை பெற்றுள்ள இந்த பாலம், மும்பை சிவ்ரி பகுதியில் தொடங்கி நவிமும்பை புறநகரான சிர்லேவில் முடிவடைகிறது. 2018ஆம் தொடங்கிய இப்பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

யுஜிசி நெட் தேர்வு ரத்து: சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு பரிந்துரை https://ift.tt/P6EDiet

படம்
புதுடெல்லி: இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணியில் சேர்வதற்கும் இளநிலை ஆராய்ச்சிக்கான நிதியுதவி பெறுவதற்கான தகுதியைத் தீர்மானிப்பதற்காக தேசிய தேர்வு முகமை சார்பில் யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படுகிறது. இவ்வாண்டுக்கான தேர்வு கடந்த செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாக கணினி வழியாகநடைபெற்ற நெட் தேர்வு இம்முறை ஓஎம்ஆர் சீட் முறையில் நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அடுக்குமாடி தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.12.5 லட்சம் நிவாரணம்: குவைத் அரசு முடிவு

படம்
புதுடெல்லி: குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயில் இறந்ததொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.12.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று குவைத் அரசு அறிவித்துள்ளது. குவைத் நாட்டின் மங்கப் பகுதியில் 7 மாடி கட்டிடம் ஒன்றில் வெளிநாட்டு தொழிலாளர்கள் 196 பேர் தங்கியிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அந்தக்கட்டிடத்தின் தரைதளத்தில் பாதுகாவலர் அறையில் கடந்த 12-ம் தேதி மின் கசிவு காரணமாக தீப்பிடித்தது. அதிகாலை என்பதால் தொழிலாளர்கள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். தீமளமளவென கட்டிடத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவியது. இதில் உறங்கி கொண்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த தீ விபத்தில்இந்தியர்கள் 46 பேர், பிலிப்பைன்ஸை சேர்ந்த 3 பேர் மற்றும்அடையாளம் தெரியாத ஒருவர்என 50 பேர் உயிரிழந்தனர். இதில்தமிழகத்தைச் சேர்ந்த 7 பேரும் அடங்குவர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஹாரில் ரூ.1,749 கோடி செலவில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் https://ift.tt/knEa2AO

படம்
ராஜ்கிர்: பிஹார் மாநிலத்தில் ரூ.1,749 கோடிசெலவில் கட்டப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பிஹார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள ராஜ்கிர் நகரில் கடந்த 2014-ம் ஆண்டு நாளந்தா பல்கலைக்கழகம் தற்காலிக இடத்தில் 14 மாணவர்களுடன் செயல்படதொடங்கியது. பழங்காலத்தில் இதே நகரில் அமைந்திருந்த உலகப்புகழ் பெற்ற நாளந்தா பல்கலைக் கழகத்தின் மறுவடிவம்தான் இது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

2018-ம் ஆண்டு காஷ்மீர் தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானின் ஓய்வு பெற்ற பிரிகேடியர் சுட்டுக் கொலை

படம்
புதுடெல்லி: காஷ்மீரில் உள்ள சுன்ஜ்வான் ராணுவ முகாம் மீது கடந்த 2018-ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 6 வீரர்கள் உயிரிழந்தனர், 12-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் மூளையாக செயல்பட்டவர், பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றிய பிரிகேடியர் அமிர் ஹம்சா. இவர் பாகிஸ்தான் உளவுப்பிரிவு (ஐஎஸ்ஐ) நடவடிக்கைகளை திட்டமிடும் பிரிவில் பணியாற்றினார். பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும் இவர் எமர்ஜென்சி சர்வீசஸ் அகாடமியின் தலைமை இயக்குனராக பணியாற்றினார். இந்நிலையில் இவர் பாகிஸ்தான் பஞ்சாப் பகுதியில் உள்ள ஜீலம் மாவட்டத்துக்கு, கடந்த திங்கள்கிழமை காரில் சென்றார். உடன் அவரது மனைவியும், மகளும் இருந்தனர். அமிர் ஹம்சாவின் சகோதரர் அயுப் என்பவர் அவர்களின் காரின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். லீலா இன்டர்சேன்ஜ் என்ற இடத்தில் அமிர் ஹம்சாவின் காரை இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 4 நபர்கள் நெருங்கினர். மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்தவர்கள் அமிர் ஹம்சா மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் அமிர் ஹம்சா அந்த இ...

நீட் தேர்வில் 0.001 சதவீதம்கூட அலட்சியம் இருக்க கூடாது: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை https://ift.tt/4F8fe0y

படம்
புதுடெல்லி: நீட் தேர்வில் 0.001% அலட்சியம் இருந்தால்கூட அதை ஒப்புக்கொண்டு அதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு (என்டிஏ) உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. நீட் தேர்வு குளறுபடிகள் தொடர்பாக மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், எஸ்.வி.பாட்டி அடங்கிய விடுமுறைக் கால அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு மற்றும் என்டிஏ சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

9.26 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி: வாராணசியில் பிரதமர் மோடி வழங்கினார் https://ift.tt/YOIu03A

படம்
வாராணசி: 'பிஎம் கிசான் சம்மான் நிதி' திட்டத்தில் 17-வது தவணையாக 9.26 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியை பிரதமர் மோடி வாராணசியில் நேற்று வழங்கினார். சமீபத்தில் நடந்து முடிந்த 18-வதுமக்களவை தேர்தலில், உத்தர பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி 3-வது முறையாக போட்டியிட்டார். அந்த தொகுதியில் அவர் 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த9-ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3-வது முறையாக மத்தியில் ஆட்சிஅமைத்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரேபரேலி எம்.பி. பதவியை தக்க வைக்கிறார் ராகுல் காந்தி: வயநாட்டில் பிரியங்கா போட்டியிடுவதாக அறிவிப்பு https://ift.tt/5jxtPmU

படம்
புதுடெல்லி: வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு ரேபரேலி தொகுதியை தக்கவைத்துக் கொள்ள ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய 2 தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் ஏதாவது ஒரு எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். எந்த தொகுதியை ராகுல் தக்கவைத்துக் கொள்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதுகுறித்து முடிவு செய்ய இன்றுதான் கடைசி நாள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேற்கு வங்கத்தில் சிக்னல் பழுதானதால் பயங்கரம்: ரயில்கள் மோதி 9 பயணிகள் பரிதாப உயிரிழப்பு https://ift.tt/VdZbSFu

படம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சிக்னல் பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது, பின்னால் வந்த சரக்கு ரயில் பலத்த வேகத்தில் மோதியதில் பல பெட்டிகள் தடம்புரண்டன. இந்த பயங்கர விபத்தில் சரக்கு ரயிலின் லோகோ பைலட், அவரது உதவியாளர், எக்ஸ்பிரஸ் ரயிலின் கார்டு உட்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. திரிபுரா தலைநகர் அகர்தலாவில் இருந்து அசாம் வழியாக மேற்கு வங்கத்தின் சீல்டா நகருக்கு கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று காலை 9 மணி அளவில் மேற்கு வங்கத்தின் நியூஜல்பைகுரியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள ரங்கப்பானி ரயில் நிலையம் அருகே நின்றிருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத் சூரத் விமான நிலையத்தில் துபாய் பயணியிடம் ரூ.2 கோடி வைரம் பறிமுதல் https://ift.tt/ruZ8AUT

படம்
சூரத்: குஜராத்தின் சூரத் விமான நிலையத்தில், துபாய் செல்ல முயன்ற பயணி ஒருவரிடம் ரூ.2.19 கோடி மதிப்புள்ள பட்டை தீட்டப்படாத வைரம் பறிமுதல் செய்யப்பட்டது. குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள எஸ்எச்ஏ சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளிடம் வழக்கமான பரிசோதனை நேற்று முன்தினம் காலை மேற்கொள்ளப்பட்டது. அப்போது துபாய் செல்லும் இண்டிகோ விமான நிலையத்தில் ஏறுவதற்காக சஞ்சய்பாய் மொரோ தியா என்பவர் வந்தார். அவரிடம் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) காவலர் சோதனை நடத்தினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜம்மு - காஷ்மீரில் தொடரும் தீவிரவாத தாக்குதல்: உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை https://ift.tt/HWuIYCL

படம்
புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து நடந்து வரும் தீவிரவாத தாக்குதல்களை கட்டுப்படுத்துவது குறித்து மாநில துணைநிலை ஆளுநர், ராணுவ தலைமை தளபதி மற்றும் உயர்அதிகாரிகளுடன் மத்திய உள்துறைஅமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பு படைகள் ஒன்றிணைந்து செயல்பட்டு, தீவிரவாதத்தை வேரோடு களைய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். காஷ்மீரியின் ரியாசி மாவட்டத்தில் சிவ்கோரி கோயிலுக்கு பேருந்தில் சென்ற பக்தர்களை குறிவைத்துதீவிரவாதிகள் கடந்த 9-ம் தேதிதாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 40 பேர் படுகாயமடைந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உத்தராகண்டில் வேன் கவிழ்ந்து 14 பேர் உயிரிழப்பு, 12 பேர் காயம்: குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல் https://ift.tt/3Urv0ZD

படம்
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள ரிஷிகேஷ் - பத்ரிநாத் நெடுஞ்சாலையில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்தனர், 12 பேர் காயம் அடைந்தனர். டெல்லியிருந்து ஒரு டெம்போ வேனில் சுற்றுலா பயணிகள் 26 பேர், உத்தராகண்ட்டுக்கு கடந்த வெள்ளிக் கிழமை இரவு புறப்பட்டனர். அந்த வேன் உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபியாக் மாவட்டத்தில் உள்ள ரிஷிகேஷ் - பத்ரிநாத் நெடுஞ்சாலையில், நேற்று காலை சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியது. ராய்தொலி என்ற இடத்தில் அந்த வேன் கட்டுப் பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழந்து, அருகில் உள்ள அலக்நந்தா ஆற்றங்கரையில் நொறுங்கி கிடந்தது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 14 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயம் அடைந்தனர். இதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வயலுக்குள் தவறுதலாக நுழைந்த ஒட்டகத்தின் காலை துண்டித்த 5 பேர் கைது @ பாகிஸ்தான்

படம்
கராச்சி: பாகிஸ்தானில் வயல்வெளியில் தவறுதலாக நுழைந்து பயிர்களை மேய்ந்த ஒட்டகத்தின் காலை வெட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள சங்கார் மாவட்டத்தில் முந்த் ஜாம்ரோ என்ற கிராமத்தில் சூமர் கான் என்பவருக்குச் சொந்தமான ஒட்டகம் ஒன்று மேய்ச்சலுக்கு செல்லும்போது, வேறு ஒருவருக்கு சொந்தமான வயல்வெளிக்குள் நுழைந்து பயிர்களை மேய்ந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆந்திர அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு: துணை முதல்வர் ஆனார் பவன் கல்யாண் https://ift.tt/72vcBLn

படம்
அமராவதி: ஆந்திர மாநிலத்தில் 164 தொகுதிகளை கைப்பற்றி தெலுங்குதேசம் கட்சி கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வராக பதவியேற்றார். இவரது அமைச்சரவையில் மொத்தம் 24 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில், சந்திரபாபு நாயுடு அமைச்சர்கள் அனைவருக்கும் நேற்று துறைகளை ஒதுக்கினார். இதில் முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு பொது நிர்வாகம், சட்டம்-ஒழுங்கு, பொது நிறுவனங்கள் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத்தில் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் முஸ்லிம் பெண்ணுக்கு வீடு ஒதுக்கியதற்கு கடும் எதிர்ப்பு https://ift.tt/vmApKHl

படம்
வதோதரா: குஜராத்தில் முதல்வர் வீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வதோதராவின் ஹர்னி பகுதியில் உள்ள மோத்நாத் ரெஸிடென்சி கூட்டுறவு ஹவுசிங் சொசைட்டியில் தொழில்முனைவு மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சக பிரிவில் பணியாற்றும் 44 வயது முஸ்லிம் பெண் ஒருவர் வீடு ஒதுக்கீடு பெற்றார். அந்த குடியிருப்பில் வசிக்கும் அனைவருமே இந்துக்கள். இவர்கள் அங்கு முஸ்லிம் பெண்ணுக்கு வீடு ஒதுக்கியதை ரத்து செய்ய வேண்டும் எனவும், அவருக்கு மற்றொரு வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு வழங்க வேண்டும் எனவும் கடந்த 2020-ம் ஆண்டு முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

போர்க் கப்பல்களுக்காக 26 ரஃபேல் விமானம் வாங்க இந்தியா - பிரான்ஸ் பேச்சு

படம்
புதுடெல்லி: இந்திய கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் பயன்படுத்துவதற்காக, 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது குறித்து இந்தியா - பிரான்ஸ் அதிகாரிகள் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்திய விமானப்படைக்கு பிரான்ஸிடமிருந்து ஏற்கெனவே ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடற்படையில் உள்ள ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் பயன்படுத்தப்படும் மிக் 29 ரக போர் விமானங்களுக்கு மாற்றாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உட்பட 41 இந்தியர்களின் உடலை கொண்டுவர குவைத் விரைந்தது ராணுவ விமானம் https://ift.tt/EulgC3b

படம்
புதுடெல்லி/ குவைத் சிட்டி: குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 தமிழர்கள் உட்பட 41 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்களின் உடல்களை தாயகம்கொண்டுவர விமானப் படை விமானம் குவைத் விரைந்துள்ளது. வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள மங்காஃப் நகரில் 7 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டு தொழிலாளர்கள் 196 பேர் தங்கியிருந்தனர். ஒரே நிறுவனத்தை சேர்ந்த இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜம்மு - காஷ்மீரில் அனைத்து பள்ளிகளிலும் தேசிய கீதம் கட்டாயம்: புதிய உத்தரவு அமல் https://ift.tt/6Y83TA2

படம்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தேசிய கீதத்துடன் காலை வகுப்புகளை தொடங்குமாறு அம்மாநில பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் அலோக் குமார் மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடாளுமன்ற முதல் கூட்டம் ஜூன் 24-ல் தொடக்கம்: புதிய எம்.பி.க்கள் பதவியேற்கின்றனர் https://ift.tt/zSKsMc3

படம்
புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஜூன் 24-ம்தேதி முதல் ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இந்த கூட்டத் தொடரில், மக்களவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் பதவியேற்பார்கள். இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்துகிறார். மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து 3-வது முறையாக மோடி கடந்த 9-ம் தேதி பிரதமராக பதவியேற்றார். அவருடன் 30 கேபினட் அமைச்சர்கள், 5 இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு), 36 இணைஅமைச்சர்கள் என மொத்தம் 71 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். இதைத் தொடர்ந்து, அவர்களுக்கான இலாகாக்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு: பவன் கல்யாண் உட்பட 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர் https://ift.tt/dPaKr6N

படம்
விஜயவாடா: ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். அவருடன் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் உட்பட 23 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 25 மக்களவை தொகுதிகளில் இக்கூட்டணி 21 இடங்களை கைப்பற்றியது. இதுபோல, மொத்தம் உள்ள 175 பேரவை தொகுதிகளில் இக்கூட்டணி 164 இடங்களை கைப்பற்றியது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மட்டும் 135 இடங்களை கைப்பற்றி தனி பெரும்பான்மை பெற்றுள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜனசேனா 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குவைத் தீ விபத்து | உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரணம் அறிவிப்பு https://ift.tt/KbAGj1a

படம்
புதுடெல்லி: குவைத் நாட்டில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நிவாரண நிதி அறிவித்துள்ளார். குவைத்தின் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களின் பலர் இந்தியர்கள் என்று அஞ்சப்படுகிறது. 43 பேர் காயமடைந்துள்ள நிலையில், இவர்களில் 30 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; மருத்துவ கலந்தாய்வுக்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/ERWzPs5

படம்
புதுடெல்லி: வினாத்தாள் கசிவு, மதிப்பெண் முரண்பாடு போன்றவற்றால் நீட்தேர்வின் புனிதத் தன்மை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது என்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக பதில்அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. எனினும், மருத்துவ கலந்தாய்வை நடத்த தடை இல்லை என்று அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சில மாநிலங்களில் நீட் தேர்வு நடப்பதற்குமுன்னதாகவே வினாத்தாள் வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒடிசா முதல்வராக மோகன் மாஜி தேர்வு: 2 பேருக்கு துணை முதல்வர் பதவி https://ift.tt/jeCVSTA

படம்
புவனேஸ்வர்: ஒடிசா பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், மாநில முதல்வராக மோகன் சரண் மாஜி (52)தேர்வு செய்யப்பட்டார். துணை முதல்வர்களாக கே.வி.சிங் தியோ,பிரபதி பரிடா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஒடிசாவில் மக்களவை தேர்தலோடு, சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த மாநிலத்தில் 147 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. கடந்த மே 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த 4-ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்