இடுகைகள்

ஜூலை, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவின் மிக மேம்பட்ட கல்பாக்கம் புதிய அணு உலை திட்டத்துக்கு அனுமதி https://ift.tt/zg8Oft2

படம்
புதுடெல்லி: தமிழகத்தின் கல்பாக்கத்தில் அமைக்கப் பட்டுள்ள நாட்டின் மிக மேம்பட்ட அணு உலை திட்ட செயல்பாட்டுக்கு அணு சக்தி ஒழுங்குமுறை வாரியம் (ஏஇஆர்பி) ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து ஏஇஆர்பி வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் அணு சக்தி திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியாக தமிழகத்தின் கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள 500 எம்டபிள்யூஇ சோடியம் - குளிரூட்டப்பட்ட முன்மாதிரி வேகப் பெருக்கி உலையை (பிஎப்பிஆர்) இயக்கும் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரேன்சம்வேர் தாக்குதல்: நாடு முழுவதும் 300+ கூட்டுறவு வங்கி சேவை பாதிப்பு https://ift.tt/Yd3WMuB

படம்
புதுடெல்லி: நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட கூட்டுறவு மற்றும் மண்டல ஊரக வங்கிகள், இணையதளங்கள் ஆகியவை ரேன்சம்வேர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சிறிய வங்கிகளுக்கு தொழில்நுட்ப அமைப்புகளை வழங்கும் சி-எட்ஜ் டெக்னாலஜிஸ் என்ற மென்பொருள் நிறுவனம் இந்த தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியில் கனமழை: நாடாளுமன்ற வளாகத்துக்குள் புகுந்த மழைநீர் https://ift.tt/bzuWy78

படம்
புதுடெல்லி: டெல்லியில் இன்று பெய்த கனமழையால் நாடாளுமன்ற வளாகத்தில் தண்ணீர் புகுந்தது. மேலும் மூன்று மாணவர்கள் உயிரிழந்த பழைய ராஜிந்தர் நகர் பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. டெல்லியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி நொய்டா எக்ஸ்பிரஸ் சாலை, மதுரா சாலை உள்ளிட்ட பல முக்கிய சாலைகளில் தண்ணீர் முட்டியளவு தேங்கி நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரள மாநிலம் வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 120+ பேர் பரிதாப உயிரிழப்பு https://ift.tt/Si52Kao

படம்
வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் மண்ணில் புதைந்து குழந்தைகள், பெண்கள் உட்பட 120 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அடைமழை, வெள்ளம் காரணமாக பல்வேறு சாலைகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் பலரது நிலைமை என்னவென்று தெரியாததால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், விமானப் படையினர், தீயணைப்பு வீரர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என பல்வேறு குழுவினர் மீட்பு, நிவாரண, மருத்துவப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கொட்டி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேற்கு வங்க காங். தலைவர் பதவியிலிருந்து நீக்கம்: கட்சி தலைமை மீது ஆதிர் ரஞ்சன் அதிருப்தி https://ift.tt/LXItS7p

படம்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கார்கே காங்கிரஸ் தலைவரான பிறகு கட்சியில் உள்ள அனைத்து பதவிகளும் தற்காலிகமாகி விட்டதாக தெரிவித்தார். கடந்த ஜூன் 21-ம் தேதி அன்று கொல்கத்தாவில் மேற்கு வங்க காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் அகமது மிர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி உட்பட செயற்குழுவை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடகாவில் தொடரும் கனமழை: 5 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’  https://ift.tt/SztHjC9

படம்
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், அங்கு ஐந்து மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஜூலை மாதத்தில் மட்டும் அம்மாநிலத்தில் 371 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும் கடலோரப் பகுதிகளில் வழக்கத்தை விட 55 சதவீதம் அதிக மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பட்ஜெட் மூலமாக நடுத்தர வர்க்கத்தின் நெஞ்சிலும், முதுகிலும் குத்திவிட்டது பாஜக: மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு https://ift.tt/r0IeivL

படம்
புதுடெல்லி: மத்தியில் ஆளும் பாஜக அரசு, மத்திய பட்ஜெட் மூலம் நடுத்தர வர்க்கத்தின் நெஞ்சிலும், முதுகிலும் குத்திவிட்டது என்று மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. மக்களவையில் பட்ஜெட் தொடர்பான தனது கருத்துகளை முன்வைத்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடந்த 5 ஆண்டில் வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் 633 பேர் உயிரிழப்பு: மத்திய அமைச்சர் கீர்த்தி வர்தன் தகவல் https://ift.tt/BvR81WE

படம்
புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: கடந்த 5 ஆண்டுகளில் இயற்கை, விபத்து மற்றும் உடல்நலக்குறைவு உள்ளிட்ட பல்வேறுகாரணங்களால் வெளிநாடுகளில் தங்கி படித்து வந்த இந்தியமாணவர்களில் 633 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கனடாவில் 172, அமெரிக்காவில் 108, பிரிட்டனில் 58, ஆஸ்திரேலியாவில் 57, ரஷ்யாவில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உக்ரைனில் 18, ஜெர்மனியில் 24, ஜார்ஜியா, கிர்கிஸ்தான் மற்றும் சைப்ரஸ் நாடுகளில் தலா 12 பேர்,சீனாவில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரசு திட்டங்களை விரைந்து அமல்படுத்த வேண்டும்: பாஜக முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல் https://ift.tt/YyENHJw

படம்
புதுடெல்லி: அரசின் நலத்திட்டங்களை விரைவாக அமல்படுத்த வேண்டும் என பாஜக முதல்வர்கள், துணை முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று தொடர்ந்து 3-வது முறையாக மத்தியில் ஆட்சி அமைந்த பிறகு, முதல் முறையாக பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் கூட்டம் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்றுநடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியில் திடீர் வெள்ளத்தில் சிக்கி 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம்: ஐஏஎஸ் பயிற்சி மைய உரிமையாளர் கைது https://ift.tt/FBNWRPn

படம்
புதுடெல்லி: டெல்லியில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்தில் வெள்ளம் புகுந்ததில், நீரில் மூழ்கி 2 மாணவிகள், ஒரு மாணவர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை கண்டித்து மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. மாணவர்களின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்ததாக, பயிற்சி மையத்தின் உரிமையாளர் அபிஷேக் குப்தா, ஒருங்கிணைப்பாளர் தேஷ்பால் சிங் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு டெல்லி பகுதியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்கான பயிற்சிமையங்கள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில்,ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையம் பழைய ராஜேந்திரா நகர் பகுதியில் உள்ளது. இங்கு, கேரளா,உத்தர பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் குடிமைப் பணி தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு https://ift.tt/PMIg9bc

படம்
புதுடெல்லி: மாநில அரசுகள் மத்திய அரசோடு ஒருங்கிணைந்து செயல்பட்டு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நிதி ஆயோக்கின் 9-வது நிர்வாகக் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு, திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ் சாய், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மா உட்பட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகாராஷ்டிரா ஆளுநராக சி.பி ராதாகிருஷ்ணன் மாற்றம்: புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமனம் https://ift.tt/A71dfmN

படம்
புதுடெல்லி: ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமன உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டார். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் ஆளுநராக செயல்பட்டு வந்த பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து பஞ்சாப் மாநில புதிய ஆளுநராக குலாம் சந்த் கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் யூனியன் பிரதேசமான சண்டிகரின் ஆட்சிப் பொறுப்பாளராகவும் செயல்படுவார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி மழை: யுபிஎஸ்சி பயிற்சி மையத்தில் வெள்ளம் - 2 மாணவிகள் உயிரிழப்பு https://ift.tt/HIFB2Sf

படம்
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் சனிக்கிழமை கனமழை பொழிந்தது. இந்நிலையில், அங்குள்ள பிரபல தனியார் யுபிஎஸ்சி பயிற்சி மையத்தின் தரைக்கு கீழ்த்தளத்தில் (பேஸ்மெண்ட்) வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கி மாணவிகள் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் மாயமானார். சனிக்கிழமை மாலை டெல்லியில் பரவலாக மழை பதிவானது. இந்த சூழலில் 7 மணி அளவில் டெல்லி தீயணைப்பு துறைக்கு மத்திய டெல்லியின் பழைய ராஜிந்தர் நகர் பகுதியில் அமைந்துள்ள யுபிஎஸ்சி பயிற்சி மையத்தில் நீர் தேங்கியது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரசியலைவிட நாட்டின் நலன் முக்கியமானது: கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி  https://ift.tt/dBSZeux

படம்
திராஸ்: கார்கில் வெற்றி தினத்தையொட்டி, காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். நாட்டின் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில் ஒருபோதும் அரசியல் ஆதாயம் தேடக்கூடாது. அரசியலைவிட நம் நாட்டின் நலன் முக்கியமானது என்று அவர் தெரிவித்தார். கடந்த 1999-ம் ஆண்டு தொடக்கத்தில் காஷ்மீரின் லடாக் பிராந்தியம், கார்கில் மலைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், தீவிரவாதிகள் அத்துமீறி ஊடுருவினர். அவர்களது நடமாட்டத்தை அப்பகுதி கிராம மக்கள் கண்காணித்து இந்திய ராணுவத்துக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, 1999 மே முதல் ஜூலை வரை கார்கில் பகுதியில் இந்தியா - பாகிஸ்தான் ராணுவம் இடையே கடும் போர் நடைபெற்றது. இதில் இந்திய ராணுவம் வெற்றிவாகை சூடியது. இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி ‘விஜய் திவஸ்’ என்ற பெயரில் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை” - பட்ஜெட் குறித்த விமர்சனங்களுக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம் https://ift.tt/NBOoV9v

படம்
புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த விமர்சனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது: “கடந்த காலங்களைப் போன்றே அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை. ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்தின் அடிப்படையில் அம்மாநிலம் தனது தலைநகரை கட்டமைக்கவும், பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்தவும் மத்திய அரசின் ஆதரவு தேவை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா போட்டி

படம்
கொழும்பு: கடந்த 2019-ம் ஆண்டில் இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார். கடந்த 2022-ம் ஆண்டில் இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதற்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து இருவரும் பதவி விலகினர். இதைத் தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டில் நாடாளுமன்ற எம்.பி.க்களின் கருத்தொற்றுமை அடிப்படையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கவும், பிரதமராக தினேஷ் குணவர்த்தனவும் பதவியேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சுரங்கங்கள், கனிம நிலங்கள், குவாரிகளுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு https://ift.tt/GqP6Qvl

படம்
புதுடெல்லி: சுரங்கங்கள், கனிம நிலங்கள், குவாரிகளுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. சுரங்கம் மற்றும் கனிம நிலங்களை குத்தகைக்கு எடுப்பவர்கள், அரசுக்கு செலுத்தும் ராயல்டி தொகை என்பது வரி அல்ல. அது குத்தகை கட்டணம்தான் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள சுரங்கத்தை இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்தது. அதற்காக, தமிழக அரசுக்கு அந்த நிறுவனம் ராயல்டி (உரிமைத் தொகை) வழங்கியது. ஆனால், அத்துடன் சேர்த்து தமிழக அரசு ‘செஸ்’ வரியும் விதித்தது. இதையடுத்து, ‘சுரங்கங்கள், கனிம நிலங்கள் மீது வரி விதிக்க மாநில அரசுக்கு உரிமை இல்லை. எனவே, தமிழகஅரசு விதித்த வரியை திரும்ப பெற வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. தங்கள் பகுதிக்கு உட்பட்ட கனிம நிலத்தை பயன்படுத்த வரி விதிக்கும் அதிகாரம் தங்களுக்கு உண்டு என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Lat...

நிதி ஆயோக் கூட்டத்தை காங்கிரஸ் முதல்வர்கள் புறக்கணிப்பார்கள்: கே.சி.வேணுகோபால் அறிவிப்பு https://ift.tt/zeYIfc0

படம்
புதுடெல்லி: பாரபட்சமான, கூட்டாட்சி தத்துவத்துக்கு விரோதமான மத்திய பட்ஜெட்டை கண்டித்து, காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். மக்களவையில் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 23-ம் தேதி தாக்கல் செய்தார். இதில், ஆந்திராவுக்கு ரூ.15 ஆயிரம் கோடி, பிஹாருக்கு ரூ.26 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் ஆட்சியில் உள்ளது. அதேபோல, பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சியில் உள்ளது. எனவே, இது கூட்டணி கட்சிகளுக்கான பட்ஜெட் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நேபாள விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு: புறப்பட்ட சிறிது நேரத்தில் ஓடுபாதையில் சறுக்கி விழுந்தது

படம்
காத்மாண்டு: நேபாளத்தில் நேற்று நடந்த விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஓடுபாதையில் இருந்து சறுக்கி விழுந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது. நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சவுர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 19 பயணிகளுடன் நேற்று காலை பொக்காரா நகருக்கு புறப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வருமான வரி புதிய விகிதத்தில் ரூ.7.75 லட்சம் வரை வரி செலுத்த தேவையில்லை: மூத்த ஆடிட்டர்கள் தகவல் https://ift.tt/VK4YzL5

படம்
புதுடெல்லி: தனிநபர் வருமான வரி முறையில் பழைய வரி விகிதத்தில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 2.5 லட்சமாக நீடிக்கிறது. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 5 % வரி, ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20% வரி, ரூ.10 லட்சத்துக்கு மேல் 30% வரி என்ற விகித முறை அப்படியே தொடர்கிறது. புதிய வரி விகிதம்: த ற்போதைய நடைமுறையின் படி புதிய வரி விகிதத்தில் வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உள்ளது. ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை 5% வரி, ரூ.6 லட்சம் முதல் ரூ.9லட்சம் வரை 10% வரி, ரூ.9லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15% வரி, ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20% வரி, ரூ.15 லட்சத்துக்கு மேல் 30% வரி விதிக்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும்” - பட்ஜெட் குறித்து எஸ்பிஐ தலைவர் பாராட்டு https://ift.tt/da8L0fE

படம்
புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளால் இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என்று எஸ்பிஐ தலைவர் தினேஷ் குமார் காரா பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர் கூறியிருப்பதாவது: “பிரதமரின் வீடு கட்டும் திட்டம் குறித்து பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளின் மூலம் வங்கிகள் பலனடையும். அனைத்தையும் உள்ளடக்கிய இந்த பட்ஜெட் கிராமப் புறங்களின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்துகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆர்எஸ்எஸ்-ல் அரசு ஊழியர்கள் சேர விதிக்கப்பட்ட தடை நீக்கம்: பாஜக வரவேற்பு; காங்கிரஸ் எதிர்ப்பு https://ift.tt/auhyP1t

படம்
புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர அரசு ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு நீக்கி உள்ளது. இதை பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் வரவேற்றுள்ள நிலையில், காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்வு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் கடந்த 9-ம் தேதி பிறப்பித்த அலுவலக குறிப்பாணையில் கூறப்பட்டுள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி தீர்மானம்: கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்! https://ift.tt/QqT21sG

படம்
பெங்களூரு: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை இன்று (ஜூலை 22) கூடியது. இந்த அமைச்சரவையில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு எதிரான இந்த மசோதாவில், நீட் தேர்வுக்கு பதில் பொது நுழைவுத் தேர்வின் (CET) அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குகிறது: பொருளாதார ஆய்வறிக்கை இன்று தாக்கல் https://ift.tt/71SGEIN

படம்
புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில், பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். நாளை தொடர்ந்து 7-வது முறையாக மத்திய பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்ய உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார். புதிய அரசில் நிர்மலா சீதாராமனுக்கு மீண்டும் நிதி அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கமலா ஹாரிஸை வீழ்த்துவது எளிது: பைடன் விலகிய நிலையில் ட்ரம்ப் கருத்து

படம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகி உள்ளார் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அமெரிக்க அதிபருமான ஜோ பைடன். தேர்தலில் அவருக்கு மாற்றாக கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் வீழ்த்துவது எளிது என குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இம்முறை ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸுக்கு தனது முழு ஆதரவை வழங்க விரும்புவதாக போட்டியில் இருந்து விலகிய அதிபர் தெரிவித்தார். இது குறித்து அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப், செய்தி நிறுவனத்திடம் தனது கருத்தை தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடன் விலகல்!

படம்
வாஷிங்டன்: எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் அவர் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 81 வயதான அதிபர் பைடன், தனது பிரச்சாரத்தில் தடுமாற்றத்துடன் பேசி வந்தார். குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் உடனான முதல் நேரடி விவாதத்தின் போதும் தடுமாறினார். இது அவரது சொந்த கட்சியை சேர்ந்தவர்களையே அதிருப்தி அடைய செய்தது. அதன் காரணமாக அவர் அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலக வேண்டுமென சொல்லப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“இந்திய அரசியலில் மிகப்பெரிய ஊழல்வாதி சரத் பவார்” - அமித் ஷா @ புனே https://ift.tt/9Ve6GR8

படம்
புனே: எதிர்வரும் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று புனேவில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் எதிர்க்கட்சி கூட்டணியான மகா விகாஸ் அகாடியை கடுமையாக அவர் விமர்சித்தார். சரத் பவார், உத்தவ் தாக்கரே மற்றும் ராகுல் காந்தியை அவர் விமர்சித்தார். “1993 குண்டுவெடிப்புக்கு கருணை கோரியவர்களுடன் உத்தவ் தாக்கரே இணைந்துள்ளார். மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் தோல்வியை தழுவிய பிறகும் அதை கொண்டாடுவதை முதல் முறையாக நான் பார்க்கிறேன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வங்கதேச கலவரத்தில் 115 பேர் உயிரிழப்பு: 1,000 இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்

படம்
டாக்கா: வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்களின் தொடர் கலவரத்தில் இதுவரை 115 பேர் உயிரிழந்துள்ளர். பாதுகாப்பு கருதி இந்திய மாணவர்கள் சுமார் 1,000 பேர் அங்கிருந்து நாடு திரும்பினர். வங்கதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமலில் இருந்தது. மாணவர்களின் போராட்டம் காரணமாக கடந்த 2018-ல் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் அந்த 30 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் அறிவிப்பை வங்கதேச அரசு அண்மையில் அறிவித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து நகரங்கள், மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு https://ift.tt/1wTZnDP

படம்
சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நீட் நுழைவுத் தேர்வு எழுதிய 23 லட்சம் மாணவர்களின் முடிவுகளை நகரங்கள் மற்றும் மையங்கள் வாரியாக என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. நம்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சுற்றுலா பயணிகளை வெளியேற சொல்லும் ஸ்பெயின் மக்கள்: வீதிகளில் போராட்டம் தீவிரம்!

படம்
பார்சிலோனா: ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 13.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்த நாட்டின் ஐஎன்இ என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் வெளிநாடுகளை சேர்ந்த சுமார் 3.30 கோடி சுற்றுலா பயணிகள் அங்கு வருகை தந்துள்ளனர். சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உள்நாட்டு மக்களை சோர்வடைய செய்துள்ளது. மேலும், அதற்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் அங்காடிகள் நிறைந்த வீதியான La Rambla-வில் மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது சுற்றுலா பயணிகளை நோக்கி இங்கு வர வேண்டாம் என்றும் கோஷங்கள் எழுப்பினர். கூடவே தண்ணீர் பீய்ச்சும் விளையாட்டுத் துப்பாக்கியை கொண்டு தண்ணீரை வெளியேற்றி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கம்போடியாவில் மோசடி கும்பலிடம் சிக்கிய 14 இந்தியர்கள் மீட்பு

படம்
சென்னை: கம்போடிய நாட்டில் மோசடி கும்பலிடம் சிக்கிய 14 இந்தியர்களை அந்த நாட்டு போலீஸார் மீட்டுள்ளனர். தற்போது அங்குள்ள தன்னார்வல அமைப்பின் அரவணைப்பில் அவர்கள் உள்ளனர். இந்த சூழலில் இந்திய தூதரகத்தின் உதவியை அவர்கள் நாடியுள்ளனர். அதோடு நாடு திரும்ப தங்களுக்கு உதவி வேண்டுமென்றும் கோரியுள்ளனர். இவர்கள் 14 பேரும் உத்தர பிரதேசம் மற்றும் பிஹார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாவோயிஸ்ட்டுகள் பற்றி தகவல் அளித்தவருக்கு ரூ.86 லட்சம் பரிசு https://ift.tt/2g8RHWa

படம்
நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி பகுதியில் ‘மக்கள் விடுதலை கொரில்லா படையைச் சேர்ந்த தேடப்படும் மாவோயிஸ்ட்டுகள் 12 பேரை கடந்த புதன்கிழமை என்கவுன்ட்டரில் கமாண்டோக்கள் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில், மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்ட கமாண்டோ பிரிவினருக்கு ரூ.51 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று அறிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் உலகம் முழுவதும் வர்த்தகம் கடும் பாதிப்பு

படம்
புதுடெல்லி: மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் உலகம் முழுவதும் வர்த்தகம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் முடங்கியுள்ளன. அலுவலகங்கள் ஸ்தம்பித்துள்ளன. அமெரிக்காவை சேர்ந்த ‘கிரவுட்ஸ்டிரைக்’ என்ற நிறுவனம், பல்வேறு முன்னணி மென்பொருள் நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வருகிறது. மைக்ரோசாப்ட், கூகுள் உட்பட 23,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளராக உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை நாளை வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம் https://ift.tt/ZB1AOls

படம்
புதுடெல்லி: நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக நாளை மதியம் 12 மணிக்குள் இணையதளத்தில் நீட் தேர்வு மதிப்பெண் பட்டியலை வெளியிடுமாறு தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை மீண்டும் ஜூலை 22-ம் தேதி நடைபெற உள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்ததால், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பலர் மனு தாக்கல் செய்தனர். நீட் தேர்வை ரத்துசெய்ய கூடாது என்று கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி டு சான்பிரான்சிஸ்கோ ‘ஏர் இந்தியா’ விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரஷ்யாவுக்கு திருப்பிவிடப்பட்டது

படம்
புதுடெல்லி: டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ‘ஏஐ-183’ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரஷ்யாவுக்கு திருப்பிவிடப்பட்டது. இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளதாவது. “டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோவிற்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானம் ஏஐ-183 தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரஷ்யாவில் உள்ள க்ராஸ்னோயர்ஸ்க் சர்வதேச விமான நிலையத்தூக்கு (UNKL) திருப்பி விடப்பட்டுள்ளது. விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்திய பின்னணி குரல் கொடுப்போரின் திறன் மேம்பாட்டுக்கான ‘தி வாய்ஸ் பாக்ஸ்’ திட்டம்! https://ift.tt/2wPhGXV

படம்
புதுடெல்லி: மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு உட்பட்ட பொதுத்துறை நிறுவனமான தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், இந்தியாவில் உள்ள பின்னணி குரல் கொடுப்போரின் திறன் மேம்பாட்டுக்கான ‘தி வாய்ஸ் பாக்ஸ்’ என்ற திட்டத்தை நெட்பிளிக்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தவுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வலது காதில் பேண்டேஜ் அணிந்து ட்ரம்புக்கு நம்பிக்கை தெரிவிக்கும் ஆதரவாளர்கள்!

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடகாவில் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே வேலைவாய்ப்பு: எதிர்ப்பால் மசோதா நிறுத்திவைப்பு https://ift.tt/taeu5YH

படம்
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் 100% கன்னடர்களுக்கே வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியான நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் செயல்படும் அனைத்து தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு 100 சதவீத கட்டாய‌ இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கன்னட அமைப்பினர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக கர்நாடக அரசு தனி சட்டம் கொண்டுவர வேண்டும் என முதல்வர் சித்தராமையாவை சந்தித்து மனு அளித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஓமன் கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்து 9 பேரை மீட்ட இந்திய கடற்படை

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுக்கான மசோதாவை ‘நிறுத்திவைத்தது’ கர்நாடக அரசு! https://ift.tt/ezuqwl0

படம்
பெங்களூரு: பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த கடுமையான எதிர்ப்புகளின் எதிரொலியாக, கர்நாடகாவில் தனியார் நிறுவனங்கள் நிர்வாகப் பொறுப்புகளில் 50 சதவீதமும், நிர்வாகமற்ற பொறுப்புகளில் 70 சதவீதமும் கன்னடர்களுக்கு ஒதுக்குவதை உறுதிப்படுத்துவதற்கான மசோதாவை நிறைவேற்றும் முடிவை கர்நாடக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பாக, கர்நாடக முதல்வர் சித்தராமையா புதன்கிழமை வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா இன்னும் தயாரிப்பு நிலையில்தான் உள்ளது. விரிவாக ஆலோசிக்கப்பட்ட பிறகு, அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பதற்கான வழிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம் https://ift.tt/qNQ6tZH

படம்
புதுடெல்லி: தேர்தல் முடிவில் அதிருப்தி தெரிவிக்கும் வேட்பாளர்கள் விரும்பும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பதிவுகளை சரிபார்ப்பதற்கான நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை (எஸ்ஓபி) தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியிடப்பட்டது. அதிருப்தி வேட்பாளர்கள், உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு தங்கள் தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பதற்கும் வழிவகை உள்ளது. மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவுகளை சரிபார்க்க 8 வேட்பாளர்களும், சட்டப்பேரவை தேர்தல் முடிவு களை சரிபார்க்க 3 வேட்பாளர்களும் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.20,000 அபராதம் விதிக்கப்படும்: மணல் கடத்தல் விவகாரத்தில் தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை https://ift.tt/gY6ynFT

படம்
புதுடெல்லி: மணல் கடத்தல் தொடர்பான மனுவுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் பதில் அளிக்கத் தவறினால் தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. அரசுகள் சட்ட விதிமுறைகளைக் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த தவறுவதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மணல் கடத்தல் அத்துமீறி நிகழ்ந்து வருவதாகக் கடந்த 2018-ம் ஆண்டில் மனுதாரர் அழகிரிசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்தமனு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணின் உதவியாளர் வழக்கறிஞர் பிரணவ் சச்தேவ் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பத்திரங்களாக மாறும் கோயில் தங்க நகைகள்: தெலங்கானா அரசு முடிவு https://ift.tt/NVdpPf2

படம்
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் உள்ள கோயில்களின் உண்டியல்களில் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். தங்கத்தை மும்பை மிண்ட் பகுதியில் உருக்கி, அதனை வங்கிகளில் டெபாசிட் செய்து, அதற்கு தகுந்த பத்திரங்களை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் வட்டியை கோயிலின் வளர்ச்சி பணிகளுக்கு உபயோகிப்பது என மாநில இந்து சமய அறநிலைய துறை முடிவெடுத்துள்ளது. இந்த திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஓமன் கடலில் கவிழ்ந்த எண்ணெய் டேங்கர்: 13 இந்தியர்கள் உட்பட 16 மாயம்

படம்
மஸ்கட்: ஓமன் கடலில் எண்ணெய் டேங்கர் கவிழ்ந்துள்ளது. அதன் பணியாளர்கள் 16 பேர் மாயமாகி உள்ளனர்.. இதில் 13 பேர் இந்தியர்கள். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல். இதனை ஓமன் கடல் பாதுகாப்பு மையம் உறுதி செய்துள்ளது. ‘பிரெஸ்டீஜ் பால்கன்’ எனும் இந்த டேங்கரில் இலங்கையை சேர்ந்த 3 பேர் மற்றும் இந்தியாவை சேர்ந்த 13 பேர் பணியாற்றி உள்ளனர். திங்கட்கிழமை அன்று ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே சுமார் 25 கடல் மைல் தொலைவில் ஓமனின் டுக்ம் துறைமுகத்துக்கு அருகே கப்பல் கவிழ்ந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்காவுக்காக மார்பில் குண்டை ஏற்றுக் கொண்டார் ட்ரம்ப்: இடதுசாரிகளை விமர்சித்த கங்கனா ரனாவத் https://ift.tt/Wof18Kq

படம்
புதுடெல்லி: குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவுக்காக மார்பில் துப்பாக்கி குண்டை ஏற்றுக் கொண்டார் என்று பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், பட்லர் நகரில் நேற்று முன்தினம் டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அவரது வலது காதை துப்பாக்கி குண்டு துளைத்த நிலையில் நூலிழையில் அவர் உயிர்தப்பினார். இதுதொடர்பாக பாஜக எம்பியும் நடிகையுமான கங்கனா ரனாவத் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பழங்குடியினர் ஆணைய ஊழல் விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கடி https://ift.tt/pgsBVMq

படம்
பெங்களூரு: கர்நாடக வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தில் நடந்த ஊழல் விவகாரத்தில், மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி வலியுறுத்தியுள்ளார். கர்நாடக வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தில் ரூ.187.3 கோடி ஊழல் நடந்ததாக அதன் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் குற்றம்சாட்டினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்துக்கு காவிரியில் 8,000 கனஅடி நீர் திறப்பு: கர்நாடக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு https://ift.tt/WnIldqN

படம்
பெங்களூரு: காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு விநாடிக்கு 8,000 கனஅடி நீரை திறக்க கர்நாடக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 11-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், ஜூலை 31-ம் தேதிக்குள் தமிழகத்துக்கு 1 டிஎம்சி காவிரி நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும். பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் தினமும் வினாடிக்கு 11,500 கனஅடி நீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: பிரதமர் மோடி கண்டனம்

படம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் 50 ஆயிரம் பேர் திரண்டிருந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதில் குண்டு பாய்ந்த நிலையில் நூலிழையில் அவர் உயிர் தப்பினார். இத்தாக்குதலில் அவரது ஆதரவாளர் உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் (78) போட்டியிட உள்ளார். இதற்காக இப்போதே அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜகவினர் தீவிர களப்பணி ஆற்ற வேண்டும்: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தல் https://ift.tt/SIeij8R

படம்
லக்னோ: 2024 நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தில் அதீத நம்பிக்கை வைத்ததன் காரணமாக பாஜக எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியாமல் போனது என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை அன்று உத்தரப் பிரதேச மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், எம்.எல்.ஏக்கள், ஊராட்சி தலைவர்கள், மேயர்கள், பாஜக உறுப்பினர்கள் பங்கேற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசி இருந்தார். அப்போது அவர் தெரிவித்தது. இதில் பாஜக தலைவர் நட்டா பங்கேற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்துக்கு காவிரி நீரை திறப்பது குறித்து முடிவெடுக்க கர்நாடகாவில் இன்று அனைத்து கட்சி கூட்டம் https://ift.tt/pzoNQwE

படம்
பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுவது குறித்து முடிவெடுக்க கர்நாடகாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை அந்த மாநில முதல்வர் சித்தராமையா கூட்டியிருக்கிறார். இதில் ஒழுங்காற்று குழு பரிந்துரையின்படி, தமிழகத்துக்கு 1 டிஎம்சி நீரை திறந்துவிடுவது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது. டெல்லியில் கடந்த 11-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், “தமிழகத்துக்கு கர்நாடக அரசு 1 டிஎம்சி காவிரி நீரை ஜூலை 31-ம் தேதிக்குள் திறந்துவிட வேண்டும். தினமும் வினாடிக்கு 11,500 கன அடி நீர் பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் செல்வதை உறுதி செய்ய வேண்டும்” என பரிந்துரை செய்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்