இடுகைகள்

அக்டோபர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கனமழை காரணமாக வெள்ளக்காடான ஸ்பெயின்: 150-க்கும் மேற்பட்டோர் பலி - மீட்புப் பணிகள் தீவிரம்

படம்
பார்சிலோனா: ஸ்பெயின் நாட்டில் பதிவான கனமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணியை ஸ்பெயின் முடுக்கிவிட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் மோசமான இயற்கை பேரிடர் பாதிப்புகளில் இது ஒன்று எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகள் மற்றும் கார்களில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உள்ளனவா என தேடும் சவாலநிலை அங்கு நிலவுகிறது. அந்த நாட்டின் கிழக்கு வலேன்சியா பகுதியில் மட்டும் 155 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுனாமி பேரலைகள் ஏற்படுத்தும் பாதிப்பை காட்டிலும் இது அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

BPL நிறுவனர் டிபிஜி நம்பியார் காலமானார் https://ift.tt/1ojqmJ8

படம்
பெங்களூரு: பிபிஎல் நிறுவனத்தின் நிறுவனரும் தொழிலதிபருமான டிபி கோபாலன் நம்பியார், வியாழக்கிழமை (அக்.31) காலமானார். அவருக்கு வயது 94. அவரது மறைவுக்கு அவரின் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த 1963-ல் கேரள மாநிலம் பாலக்காட்டில் பிபிஎல் நிறுவனத்தை நிறுவினார். பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் பணியாற்றிய அனுபவம் கொண்ட டிபிஜி நம்பியார், இந்தியாவின் தரமான எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நோக்கில் பிபிஎல் நிறுவனத்தை தொடங்கினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“கமலா, ஜோ பைடன் இந்துக்களை புறக்கணித்து விட்டனர்” - டிரம்ப் குற்றச்சாட்டு

படம்
வாஷிங்டன்: கமலா ஹாரிஸும், ஜோ பைடனும் அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள இந்துக்களை நிராகரித்து விட்டனர். எனது நிர்வாகத்தின் கீழ், இந்தியாவுடனும் எனது நல்ல நண்பருமான பிரதமர் மோடியுடனான நமது சிறந்த கூட்டாண்மையையும் வலுப்படுத்துவோம என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “வங்கதேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இன்னபிற சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் கொள்ளை சம்பவங்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அந்த நாட்டில் இன்னும் ஒரு குழப்பமான நிலை நீடிக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மோசமான ரயில் கழிப்பறை: பயணிக்கு ரூ.25 ஆயிரம் அளிக்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு https://ift.tt/HQh3pIm

படம்
மோசமான ரயில் கழிப்பறை விவகாரம் தொடர்பாக பயணிக்கு ரூ.25 ஆயிரம் அளிக்குமாறு விசாகப்பட்டினம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி தனது குடும்பத்தாருடன் திருமலா எக்ஸ்பிரஸ் ரயிலில் திருப்பதியிலிருந்து புறப்பட்டு விசாகப்பட்டினம் வந்து கொண்டிருந்தார். இவர் 3-வது ஏ.சி.வகுப்பில் பயணம் செய்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பணம் பறிக்கவே சல்மான் கானுக்கு மிரட்டல்: கைதான இளைஞர் வாக்குமூலம் https://ift.tt/nkGTCWg

படம்
மும்பை: கடந்த அக்டோபர் 12-ம் தேதி தசரா கொண்டாட்டத்தின்போது, பாலிவுட் நடிகர் சல்மான் கானின் நெருங்கிய நண்பரும், மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது. சல்மான் கான் மற்றும் தாவூத் இப்ராஹிம் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததன் காரணமாகவே பாபா சித்திக்கை கொலை செய்துள்ளோம் என்று அக்கும்பல் தெரிவித்தது. இந்நிகழ்வைத் தொடர்ந்து சல்மான் கானுக்கும் கொலை மிரட்டல் வரத் தொடங்கியது. கடந்த வாரம் சல்மான் கானுக்கும் பாபா சித்திக்கின் மகன் ஜீஷன் சித்திக்குக்கும் மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்தார். அவ்விருவரையும் கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்றும் இதற்கு பின்னால் யார் இருக்கிறார் என்பது தனக்குத் தெரியும் என்றும் மெசேஜ் அனுப்பியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸுக்கு ஓராண்டு தடை: தெலங்கானா அரசு உத்தரவு https://ift.tt/DLbQdq8

படம்
ஹைதராபாத்: சமீபகாலமாக பல்வேறு உடல் உபாதைகள் குறித்த புகார்கள் எழுந்த நிலையில் முட்டையிலிருந்து செய்யப்படும் மையோனைஸுக்கு தெலங்கானா அரசு ஓராண்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. புதன்கிழமை (அக்.30) முதல் அமலுக்கு வரும் இந்த தடை உத்தரவு ஒரு ஆண்டுகாலத்துக்கு நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு உணவு வகையான மையோனைஸ் பிரதானமாக சாண்ட்விச், ஷவர்மா, பர்கர் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. முட்டையின் வெள்ளை கருவுடன் எண்ணெய் சேர்த்து உருவாக்கப்படும் இது பாட்டில்களிலும், பாக்கெட்டுகளிலும் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. இது தற்போது சைவப் பிரியர்களுக்காக முட்டை கலக்காமலும் செய்யப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

500 ஆண்டுகளுக்குப் பிறகு ராமருக்கு இது சிறப்பான தீபாவளி: பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி https://ift.tt/xf91thN

படம்
புதுடெல்லி: 500 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தீபவாளி ராமருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த தீபாவளியாக அமைய உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று மேலும் கூறியதாவது: தந்திராஸ் பண்டிகை கொண்டாடும் அனைத்து குடிமக்களுக்கும் என்னுடைய மனம் கனிந்த நல்வாழ்த்துகள். தீபாவளி பண்டிகையை கொண்டாட இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இந்த தீபாவளி ராமருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. 500 ஆண்டுகளுக்குப் பிறகு கடவுள் ராமர் அயோத்தியில் வீற்றிருக்கிறார். அங்கிருந்து முதல் முறையாக அவர் இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளார். எனவே, இந்த தீபாவளி பண்டிகை நாம் அனைவருக்கும் பிரம்மாண்டமானதாகவும், சிறப்பு வாய்ந்தாகவும் இருக்கும். இதனை காணும் நாம் அனைவரும் அதிஷ்டசாலிகள். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகாராஷ்டிர பேரவைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிந்தது: கடைசி நாளிலும் கட்சிகளிடையே நீடித்த குழப்பம் https://ift.tt/qRInO53

படம்
மும்பை: மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளிலும் அரசியல் கட்சிகளிடையே குழப்பம் நீடித்தது. மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் நவம்பர் 20-ம் தேதி பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று (அக்டோபர் 29) கடைசி நாளாகும். இந்தத் தேர்தலில் மாநிலத்தை ஆண்டு வரும் மகா யுதி கூட்டணியில் (சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்), பாஜக) உள்ள கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

3 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் விலையை குறைக்க வலியுறுத்தல் https://ift.tt/2pNOvon

படம்
புதுடெல்லி: 3 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசு அதன் தயாரிப்பு நிறுவனங்களிடம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (என்பிபிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பொதுமக்களின் உயிர்காக்கும் முக்கிய மருந்துகள் குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. அந்த வகையில், புற்றுநோய்க்கு எதிரான டிராஸ்டுஸுமாப், ஓசிமெர்டினிப் மற்றும் துர்வலுமப் ஆகிய 3 மருந்துகளின் விலையை குறைக்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ரூ.120 கோடியை இழந்த இந்தியர்கள்: அரசு புள்ளிவிவரங்களில் தகவல் https://ift.tt/b1EThJV

படம்
டிஜிட்டல் அரெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு வகையான இணையவழி மோசடிகள் குறித்து பிரதமர் மோடி மன்கிபாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசினார். இதிலிருந்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகளின் மூலமாக இந்தியர்கள் ரூ.120 கோடி வரை இழந்துள்ளது அரசு புள்ளிவிவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சைபர்கிரைம் ஒருங்கிணைப்பு அமைப்பின் தலைமை நிர்வாகி (ஐ4சி) ராஜேஷ் குமார் கூறியுள்ளதாவது: கடந்த 2023-ம் ஆண்டில் பல்வேறு இணையவழி மோசடிகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 15 லட்சம் புகார்கள் பெறப்பட்டன. இந்த நிலையில், நடப்பாண்டில் ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30 வரை முதல் நான்கு மாதங்களில் மட்டும் 7.4 லட்சம் புகார்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை 2022-ல் 9.60 லட்சமாக இருந்தது. இது, 2021-ல் பதிவான புகார்களை காட்டிலும் 4.5 லட்சம் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online...

100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்திய ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி https://ift.tt/2RnjDTJ

படம்
புதுடெல்லி: உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா தற்போது ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்கிறது. இவற்றில் அமெரிக்கா, பிரான்ஸ், அர்மேனியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன. உள்நாட்டு மற்றும் சர்வதேச ராணுவத் தளவாட தேவைகளை ஈடுசெய்யும் அளவுக்கு உள்நாட்டில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஊக்குவித்து வருகிறது. தேஜஸ் இலகு ரக போர் விமானங்கள், விமானம் தாங்கி போர்க்கப்பல்கள், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், தனுஷ் பீரங்கி, எம்பிடி அர்ஜூன் டாங்க், இலகு ரக பீரங்கிகள், ராணுவத் தளவாடங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், ரேடார்கள், ராணுவத் தளவாட மென்பொருட்கள், ஆகாஸ் ஏவுகணைகள் ஆகியவை உள்நாட்டில் அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் தனியார் துறையின் பங்களிப்பு 21 சதவீதம். இது குறித்து இத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நாட்டின் ராணுவத் தளவாட தொழிற்சாலை விரிவடைந்து கொண்டே இருக்கிறது. ராணுவத் தளவாடத் தயாரிப்பில் தற்போது 16 பொதுத்துறை நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. 430 நிறுவனங்கள் உரிமங்கள் பெற்று ராணுவத் தளவாடப் பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றன. from ...

பிரபல இசைக் கச்சேரிகளின் டிக்கெட் விற்பனையில் முறைகேடு: 5 மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை https://ift.tt/SHrECWL

படம்
புதுடெல்லி: பிரபல இசைக்கச்சேரிகளின் டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது, போலி டிக்கெட்டுகளின் விற்பனை போன்றவற்றை தடுப்பதற்காக டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர், சண்டிகர் மற்றும் பெங்களூரில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. டெல்லியில் நேற்று பாடகர் தில்ஜித் டொசான்ஜ் இசைக் கச்சேரி நடைபெற்றது. அதேபோல் லண்டனைச் சேர்ந்த ‘கோல்ட்ப்ளே’ ராக் இசைக் குழுவின் கச்சேரி மும்பையில் ஜனவரி 18 மற்றும் 19-ம் தேதிகளில் நடைபெறவுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒடிசாவில் பிறந்த 10 குழந்தைகளுக்கு ‘டானா’ என பெயர் சூட்டல் https://ift.tt/oYwB2Tp

படம்
புவனேஸ்வர்: வங்கக் கடலில் உருவான டானா புயல் கரையை கடந்த தினத்தில் ஒடிசாவில் பிறந்த 10 குழந்தைகளுக்கு டானா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான டானா புயல், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கடந்த 25-ம் தேதி அதிகாலை கரையை கடந்தது. இதை முன்னிட்டு மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க அஜித் பவார் முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு https://ift.tt/QpoPxMO

படம்
மும்பை: “எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் இருவரை தன்னுடைய தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பதற்காக அஜித் பவார் கோடிக்கணக்கில் பேரம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன” என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது மகாராஷ்டிராவில் பாஜக - ஏக்நாத் ஷிண்டே தலைமையினா சிவ சேனா - அஜித் பவார் தலைவர் என்சிபி கூட்டணி ஆட்சியில் உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அகமதாபாத்தில் போலி ஆவணங்களுடன் வங்கதேசத்தினர் 50 பேர் கைது https://ift.tt/N3UAjYu

படம்
அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத் நகரில் போலி ஆவணங்களுடன் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்து வருகிறது. வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் நாட்டின் பல பகுதிகளில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு போலி ஆதார் அட்டைகள், பான் அட்டைகளை ஒரு கும்பல் வழங்கி வருகிறது. இவ்வாறு போலி ஆவணங்களுடன் இந்தியாவில் பல இடங்களில் தங்கியிருக்கும் வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். புனே அருகில் உள்ள ரஞ்சன்கான் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 21 பேரை புனே போலீஸார் சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். இவர்களில் 15 பேர் ஆண்கள், 4 பேர் பெண்கள், 2 பேர் திருநங்கைகள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை தொடங்குகிறார் பிரதமர் https://ift.tt/gTNRrSv

படம்
புதுடெல்லி: எழுபது வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்துக்கான பெயர் பதிவு அடுத்த வாரம் தொடங்குகிறது. இந்த நடைமுறைகளை பிரதமர் நரேந்திர மோடி வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எழுபது வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் அவர்களின் வருமானத்தை பொருட்படுத்தாமல் மருத்துவக் காப்பீடு அளிக்கும் 'ஆயுஷ்மான் பாரத் - பிரதமர் ஜன ஆரோக்கிய யோஜனா' திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான தயார் நிலையை மதிப்பிடுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சோதனை திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் இத்திட்டத்துக்கான பெயர் பதிவு தேசிய அளவில் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இந்த நடைமுறையை பிரதமர் நரேந்திர மோடி வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“பாலுறவும் ஆபாசமும் எப்போதும் சமம் அல்ல” - சுங்கத் துறை அதிகாரிகளுக்கு மும்பை ஐகோர்ட் அறிவுரை https://ift.tt/5sryCce

படம்
மும்பை: ஆபாசம் என்ற பெயரில் பறிமுதல் செய்யப்பட்ட உலகப் புகழ் பெற்ற ஓவியர்களான எப்.என்.சோஸா மற்றும் அக்பர் படாம்ஸீ ஆகியோரின் ஓவியங்களை உடனடியாக விடுவிக்குமாறு சுங்கத் துறை அதிகாரிகளுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த முஸ்தஃபா கராச்சிவாலா என்ற நபர் உலகப் புகழ் பெற்ற ஓவியர்களான எப்.என்.சோஸா மற்றும் அக்பர் படாம்ஸீ ஆகியோரின் சில ஓவியங்களை லண்டனில் நடந்த ஏலத்தில் ரூ.8.33 லட்சத்துக்கு வாங்கியிருந்தார். இதனை அங்கிருந்து மும்பைக்கு விமானம் மூலம் கொண்டு வந்தபோது விமான நிலையத்தில் இருந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவை ஆபாசமாக இருப்பதாக பறிமுதல் செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜார்க்கண்டில் 1.50 லட்சம் வேலைவாய்ப்பு: பாஜக வாக்குறுதி https://ift.tt/d1glYNb

படம்
ஜாம்ஷெட்பூர்: ஜார்க்கண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பாஜக கூட்டணி சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேசியதாவது: ஜார்க்கண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இந்துக்கள், ஆதிவாசிகள் மற்றும் ஏழைகளை பிரதிநிதித்துவம் செய்யும் அரசு அமைக்கப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அக்.28-க்குள் கனடா பிரதமர் பதவி விலக கெடு: ஆளும் கட்சியின் 24 எம்பிக்கள் போர்க்கொடி

படம்
ஒட்டாவா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வரும் 28-ம் தேதிக்குள் பதவி விலக வேண்டும் என்று அவரது கட்சி எம்பிக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டி வருகிறார். இதன்காரணமாக இரு நாடுகள் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமனம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல் https://ift.tt/Jj6pqaR

படம்
புதுடெல்லி : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமனம் செய்யப்பட்டதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள டி.ஒய்.சந்திரசூட்டின் பதவிக் காலம் வரும் நவம்பர் 10-ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இந்நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவின் பெயரை சந்திரசூட் சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பேச்சுவார்த்தையை ஆதரிக்கிறோம்; போரை அல்ல! - ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் திட்டவட்டம் https://ift.tt/ZahCbA7

படம்
மாஸ்கோ: 'பேச்சுவார்த்தையையும் ராஜதந்திரத்தையும் இந்தியா ஆதரிக்கும், போரை ஆதரிக்காது' என்று பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் திட்டவட்டமாக தெரிவித்தார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய ‘பிரிக்ஸ்’ அமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ரஷ்யாவின் கசான் நகருக்கு சென்றார். அன்று மாலை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது, உக்ரைன் போருக்கு சுமுக தீர்வு காண அனைத்து வகையிலும் உதவ இந்தியா தயாராக இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘குட் டச், பேட் டச்’ மூலம் அம்பலமான பாலியல் சீண்டல் விவகாரம்: உ.பி.யில் பள்ளி ஆசிரியர் கைது https://ift.tt/5ESG1CZ

படம்
லக்னோ: பள்ளி ஒன்றில் சிறுமிகளுக்கு அவர்களுக்கு தெரியாமலேயே பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ‘குட் டச், பேட் டச்’ விழிப்புணர்வின் மூலம் மற்றொரு ஆசிரியர் இதனை கண்டுபிடித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தின் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஆசிரியர் ஒருவர் ஒன்றாம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு ‘நல்ல தொடுதல் எது? கெட்ட தொடுதல் எது? என்பது குறித்து விளக்கியுள்ளார். கெட்ட தொடுதல் குறித்து விளக்கிக் கொண்டிருந்த போது அந்த ஆசிரியர் மாணவிகளிடம் ‘அப்படி யாரேனும் உங்களை தொட்டிருக்கிறார்களா? என்று கேட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உக்ரைன் போரை நிறுத்த எல்லா வகையிலும் உதவ தயார்: ரஷ்யாவில் அதிபர் புதினிடம் மோடி உறுதி https://ift.tt/eSANwjG

படம்
புதுடெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று ரஷ்யா சென்றார். அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை அவர் சந்தித்து பேசினார். உக்ரைன் போருக்கு சுமுக தீர்வு காண அனைத்து வகையிலும் உதவ இந்தியா தயாராக இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார். கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி பிரிக் (BRIC) அமைப்பு தொடங்கப்பட்டது. முதலில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் உறுப்பினராக இருந்தன. ஓராண்டுக்கு பிறகு தென்ஆப்பிரிக்கா இணைந்தது. இதன்பிறகு இந்த அமைப்பு பிரிக்ஸ் (BRICS) என்று அழைக்கப்பட்டது. கடந்த ஆண்டு எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை பிரிக்ஸ் அமைப்பில் புதிய உறுப்பினர்களாக இணைந்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உக்ரைன் போரை நிறுத்த எல்லா வகையிலும் உதவ தயார்: ரஷ்யாவில் அதிபர் புதினிடம் மோடி உறுதி

படம்
புதுடெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று ரஷ்யா சென்றார். அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை அவர் சந்தித்து பேசினார். உக்ரைன் போருக்கு சுமுக தீர்வு காண அனைத்து வகையிலும் உதவ இந்தியா தயாராக இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார். கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி பிரிக் (BRIC) அமைப்பு தொடங்கப்பட்டது. முதலில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் உறுப்பினராக இருந்தன. ஓராண்டுக்கு பிறகு தென்ஆப்பிரிக்கா இணைந்தது. இதன்பிறகு இந்த அமைப்பு பிரிக்ஸ் (BRICS) என்று அழைக்கப்பட்டது. கடந்த ஆண்டு எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை பிரிக்ஸ் அமைப்பில் புதிய உறுப்பினர்களாக இணைந்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெங்களூருவில் கனமழையால் சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்: 3 பேர் சடலமாக மீட்பு https://ift.tt/BfOihZb

படம்
பெங்களூரு : பெங்களூருவில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த அடுக்குமாடி கட்டிடம் ஒன்று கனமழை காரணமாக இடிந்து விழுந்தது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. நகரின் பல்வேறு முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக யெலஹங்கா பகுதியில் 157 மி.மீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல்: வயநாட்டில் பிரியங்கா காந்தி நாளை வேட்புமனு தாக்கல் https://ift.tt/vrpJB9F

படம்
புதுடெல்லி: கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதையொட்டி நடத்தப்படும் பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரும் பங்கேற்கின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். அமேதியில் தோல்வியடைந்த நிலையில், வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றுஎம்.பி. ஆனார். 2024 மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இரண்டிலும் வெற்றி பெற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“ஏன் இன்னும் கடினமாக உழைக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்” - பிரதமர் மோடி  https://ift.tt/jg0qLXU

படம்
புதுடெல்லி: “கடந்த 10 ஆண்டுகளில் 12 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 16 கோடி வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது மட்டும் போதுமா? என்னுடைய பதில் இல்லை என்பதுதான்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார். தனியார் ஆங்கில ஊடகம் நடத்திய சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியவதாவது: “நான் சந்திக்கும் மக்களில் பலரும் என்னிடம் பேசும்போது, ‘இந்தியா தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறிவிட்டது. எத்தனையோ மைல்கற்களை கடந்தாகிவிட்டது. சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. ஆனாலும் ஏன் இன்னும் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்கிறார்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சர்வதேச விண்வெளி ஆய்வு மாநாடு:  கட்டுரைகள் சமர்ப்பிக்க யுஜிசி அழைப்பு https://ift.tt/Dp9m2NG

படம்
சென்னை: இந்தியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மாநாட்டுக்கு கட்டுரைகளை அனுப்பலாம் என்று விஞ்ஞானிகள், கல்வியாளர்களுக்கு யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: சர்வதேச விண்வெளி கூட்டமைப்பு (ஐஏஎப்) அதன் உறுப்பு நிறுவனங்களுடன் இணைந்து, விண்வெளி குறித்த சர்வதேச மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாடு டெல்லியில் அடுத்த ஆண்டு மே 7 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பொறியாளர்கள், விஞ்ஞானிகள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள் பங்கேற்று விவாதிக்கவும், ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கவும் முன்வரலாம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தண்ணீர் பாட்டில், மிதிவண்டிகளுக்கு ஜிஎஸ்டி குறைகிறது: வரி மறுசீரமைப்பு குறித்து அமைச்சர்கள் குழு விரிவான ஆலோசனை https://ift.tt/AEG29Mr

படம்
புதுடெல்லி: 20 லிட்டர் தண்ணீர் பாட்டில், மிதிவண்டிகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) 5 சதவீதமாக குறைக்க அமைச்சர்கள் குழு (ஜிஓஎம்) கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையில் ஜிஎஸ்டிக்கான அமைச்சர்கள் குழு கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்றது. இதில், பொருட்கள் மற்றும் சேவை களுக்கான வரியை மறுசீரமைப்பு செய்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒரு வாரத்தில் 50 விமானங்களை தரையிறக்கி சோதனை: விமானத்துக்கு குண்டு மிரட்டல் விடுத்தால் ஆயுள் https://ift.tt/MoiPIYv

படம்
புதுடெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, குண்டு மிரட்டல் விடுப்போருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டங்களை கடுமையாக்குவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. கடந்த 13-ம் தேதி முதல் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களுக்கும், உள்நாட்டில் பயணிக்கும் விமானங்களுக்கும் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு இதுபோன்ற மிரட்டல் விடுக்கப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘அமெரிக்காவை விட சிறந்த சாலை கட்டமைப்பை இந்தியா கொண்டிருக்கும்’ - நிதின் கட்கரி https://ift.tt/6iNhuD5

படம்
போபால்: அமெரிக்காவை விட சிறந்த சாலை கட்டமைப்பை இந்தியா கொண்டிருக்கும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சிறந்த சாலை வசதி, நீர்வழித் தடம் மற்றும் ரயில்வே ஆகியவை தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என அவர் பேசியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற சாலை மற்றும் பாலம் கட்டுமானம், தொழில்நுட்பம் கருத்தரங்கை சனிக்கிழமை அவர் தொடங்கி வைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வயநாடு இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக நவ்யா ஹரிதாஸ் போட்டி! https://ift.tt/lSrVDEe

படம்
புதுடெல்லி: எதிர்வரும் நவம்பர் 13-ம் தேதி நடைபெற உள்ள வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகிறார். இந்த அறிவிப்பை பாஜக தலைமை அறிவித்துள்ளது. 39 வயதான அவர், பாஜக மகிளா மோர்ச்சா மாநில பொதுச் செயலாளராக உள்ளார். இடைத்தேர்தலில் இதே தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி மற்றும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) கூட்டணி சார்பில் சத்யன் போட்டியிடுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியா, பாகிஸ்தான் உறவில் புதிய அத்தியாயம் தொடக்கம்: முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கருத்து

படம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த 15, 16 ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபின் அண்ணனும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப், இந்திய நிருபர்களுக்கு இஸ்லாமாபாத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அவரது வருகை நல்ல தொடக்கம் ஆகும். இங்கிருந்தே இரு நாடுகளும் முன்னேறி செல்ல வேண்டும். இந்தியா, பாகிஸ்தான் இடையே புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தற்காப்பு கலை என்ற பெயரில் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி: உள்நாட்டு கலகம் செய்ய பிஎப்ஐ சதி https://ift.tt/8h9aFVr

படம்
புதுடெல்லி: உள்நாட்டு கலகம் மூலம் அமைதியை சீர்குலைக்க பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பு சதித் திட்டம் தீட்டியிருந்தது என்று அமலாக்கத் துறை குற்றம் சாட்டி உள்ளது. கடந்த 2006-ம் ஆண்டில் கேரளாவில் பிஎப்ஐ அமைப்பு தொடங்கப்பட்டது. கேரளா, தமிழகம், கர்நாடகாவை சேர்ந்த பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் பிஎப்ஐ உடன் இணைந்தன. இந்த அமைப்புக்கு 22 மாநிலங்களில் கிளைகள் இருந்தன. டெல்லி ஷாகின் பாக் போராட்டம், பெங்களூரு கலவரம், உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ், சஹ்ரான்பூர் கலவரம் ஆகியவற்றில் பிஎப்ஐ மீது குற்றம் சாட்டப்பட்டது. கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் மதரீதியாக நடைபெறும் கொலைகளிலும் இந்த அமைப்பின் நிர்வாகிகள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

யஹ்யா சின்வர் உயிரிழப்பு: ஹமாஸ் அமைப்பின் அடுத்த தலைவர் யார்? 

படம்
காசாவில் இஸ்ரேல் படைகளால் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் கொல்லப்பட்டதை ஹமாஸ் வெள்ளிக்கிழமை (அக்.18) உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் தங்கள் தலைவரின் இறப்புக்கு துக்கம் அனுசரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யஹ்யா சின்வர் மரணம் ஹமாஸ் அமைப்பின் தலைமையில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் தொடர்ந்து உத்வேகத்துடன் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தை தொடர்வோம் என்று ஹமாஸ் உறுதியேற்றுள்ளது. கடந்த ஜூலையில் அப்போதைய ஹமாஸ் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே ஈரானில் இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து புதிய தலைவராக பொறுப்பேற்றார் சின்வர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

2-வது முறையாக ஹரியானா முதல்வரானார் நயாப் சிங் சைனி: 13 பேர் அமைச்சராக பதவியேற்றனர் https://ift.tt/3aoJx1m

படம்
சண்டிகர்: ஹரியானா முதல்வராக நயாப் சிங் சைனி நேற்று 2-வது முறையாக பதவியேற்றார். இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், தே.ஜ. கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர். ஹரியானாவில் கடந்த 5-ம் தேதிநடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், மொத்தம் உள்ள 90 இடங்களில் 48 இடங்களில் பாஜக வெற்றி பெற்று, 3-வது முறையாக ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் 37 இடங்களை கைப்பற்றியது. சண்டிகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள்கூட்டத்தில், ஹரியானா சட்டப்பேரவை பாஜக தலைவராக முதல்வர் நயாப் சிங் சைனி (54) மீண்டும்தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யஹ்யா உயிரிழப்பு - டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி

படம்
டெல்அவிவ் : காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் உயிரிழந்தது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. காசாவில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக வியாழக்கிழமை (அக்.17) மூன்று முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வரும் ஒருவராக இருக்கலாம் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியிருந்தது. கொல்லப்பட்ட மூவரின் உடல்களும் டிஎன்ஏ பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிவுகள் கிடைத்தபிறகே பயங்கரவாதிகள் குறித்த தகவல்களை உறுதி செய்ய முடியும் என்று கூறியிருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை https://ift.tt/dkIRW7C

படம்
குவாஹாட்டி: பண மோசடியில் தொடர்புடையதாக கூறப்படும் செயலி விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். HPZ டோக்கன் எனப்படும் செயலி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதாக தமன்னாவுக்கு அந்த செயலி நிறுவனம் தொகை ஒன்றை செலுத்தியுள்ளது. HPZ டோக்கன் செயலி மூலம் பல்வேறு முதலீட்டார்களை ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹரியானா முதல்வராக நயாப் சிங் இன்று பதவியேற்பு: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு https://ift.tt/pR6hfMb

படம்
சண்டிகர்: ஹரியானா முதல்வராக நயாப் சிங்சைனி இன்று பதவியேற்கவுள்ளார். ஹரியானா முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டார் பதவி விலகியதை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் நயாப் சிங் சைனி முதல்வராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து, இந்த மாதம் ஹரியாணாவில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 48 இடங்களில் வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. 37 இடங்களை வென்ற காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளது. இந்நிலையில், ஹரியாணா சட்டப்பேரவையின் பாஜக தலைவரை தேர்வு செய்யும் கூட்டம், சண்டிகரில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்றுநடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஹரியானா சட்டப் பேரவை பாஜகதலைவராக நயாப் சிங் சைனி ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.கூட்டத்துக்குப் பின்னர் மத்திய அமைச்சர் அமித் ஷா கூறுகையில், “பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஒருமனதாக ஒரு முன்மொழிவு பெறப்பட்டது. கிரிஷன்பேடி மற்றும் அனில் விஜ் ஆகியோர் இதனை முன்மொழிந்தனர். from இந்து தமிழ் திசை : News in Ta...

3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நண்பனை சிக்கவைக்க திட்டமிட்ட சத்தீஸ்கர் சிறுவன் கைது https://ift.tt/vkW4Ub8

படம்
ராய்ப்பூர்: மூன்று விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சத்தீஸ்கரைச் சேர்ந்த சிறுவனை மும்பை போலீஸார் கைது செய்தனர். நண்பன் பெயரில் போலி கணக்கு தொடங்கி அந்த சிறுவன் இந்த மிரட்டல்களை விடுத்தது தெரியவந்தது. கடந்த திங்கள் கிழமை (அக்.14) அன்று எக்ஸ் சமூகவலைதள கணக்கு ஒன்றில் மர்ம நபர் ஒருவர் வெவ்வேறு ஏர்லைன்களுக்கு சொந்தமான மூன்று விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பதிவுகளை வெளியிட்டு வந்தார். அந்த பக்கத்தில் பலரும் மும்பை போலீஸாரை டேக் செய்து கவனத்துக்கு கொண்டு வந்தனர். இந்த மிரட்டல்கள் காரணமாக இரண்டு விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. அதில் மும்பையில் இருந்து நியூயார்க் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று புதுடெல்லிக்கு திருப்பிவிடப்பட்டது. மற்றொரு விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாபா சித்திக் கொலை வழக்கில் 4-வது நபர் கைது https://ift.tt/SY7BCDj

படம்
மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் கடந்த சனிக்கிழமை இரவு மும்பை பாந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை சுட்டுக் கொன்ற 2 பேர் உட்பட 3 பேரை மும்பை போலீஸ் நேற்று முன்தினம் கைது செய்தது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு கைதானவர்கள் உத்தர பிரதேசத்தை சேர்ந்த குர்மைல் பல்ஜித் சிங் (23), ஹரியானாவை சேர்ந்த தர்மராஜ் ராஜேஷ் காஷ்யப் (19) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து, பாபா சித்திக்கை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக புனேவைச் சேர்ந்த பிரவின் லொங்கார் என்பவரும் மூன்றாவதாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக உத்தர பிரதேசம் பஹ்ரைச் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ்குமார் பலகிராம் (23) என்பவரையும் சொந்த ஊரில் வைத்து மும்பை போலீஸார் நேற்று கைது செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு எவ்வித உரிமையும் இல்லை: ஐ.நா.வுக்கான இந்திய தூதர் திட்டவட்டம் https://ift.tt/XgvimJd

படம்
புதுடெல்லி: இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று ஐ.நா.வுக்கான இந்திய தூதர் எல்டோஸ் மேத்யூ புன்னூஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஐ,நா. அவையில் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது: பாகிஸ்தான் கூறும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிராகரிக்கப்படக்கூடியவை. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்குப் பதிலாக பாகிஸ்தான் அதன் உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு எவ்விதமான தார்மீக உரிமையும் கிடையாது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு எவ்வித உரிமையும் இல்லை: ஐ.நா.வுக்கான இந்திய தூதர் திட்டவட்டம்

படம்
புதுடெல்லி: இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று ஐ.நா.வுக்கான இந்திய தூதர் எல்டோஸ் மேத்யூ புன்னூஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஐ,நா. அவையில் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது: பாகிஸ்தான் கூறும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிராகரிக்கப்படக்கூடியவை. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்குப் பதிலாக பாகிஸ்தான் அதன் உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு எவ்விதமான தார்மீக உரிமையும் கிடையாது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மசூதிக்குள் ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிடுவது மத உணர்வுகளை புண்படுத்தாது: கர்நாடக உயர் நீதிமன்றம் https://ift.tt/PYI3gh1

படம்
பெங்களூரு: மசூதிக்குள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடுவது மத உணர்வுகளை புண்படுத்துவது ஆகாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கர்நாடகாவின் தக்‌ஷின கன்னடா மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றில் இரவு நேரத்தில் நுழைந்த இரண்டு நபர்கள் ’ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிட்டதாகவும், மதரீதியாக அச்சுறுத்தம் வகையில் பேசியதாகவும் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மத உணர்வுகளை புண்படுத்துதல், அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் மசூதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ்: உமர் அப்துல்லா தலைமையில் புதிய ஆட்சி https://ift.tt/mBNbxZq

படம்
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து உமர் அப்துல்லா தலைமையில் புதிய அரசு நாளை அமைய உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு நீக்கியது. இதையடுத்து 2019 அக்.31 முதல் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குளிர் காலத்தில் காற்று மாசுபடுவதை தடுக்க டெல்லியில் பட்டாசு வெடிக்க முழு தடை https://ift.tt/DMcpLU6

படம்
புதுடெல்லி: குளிர் காலத்தில் காற்று மாசுபடுவதை தடுக்க தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் அனைத்து வகை பட்டாசுகளையும் வெடிக்க டெல்லி அரசு முழு தடை விதித்துள்ளது. இதுகுறித்து டெல்லி சுற்றுச்சூழல் துறையின் கீழ் செயல்படும் மாசு கட்டுப்பாட்டு கமிட்டி நேற்றுவெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: டெல்லி தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் வரும் 2025,ஜனவரி 1-ம் தேதி வரை அனைத்துவகை பட்டாசுகள் வெடிக்க முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. மேலும் பட்டாசு உற்பத்தி, சேமித்து வைத்தல், விற்பனை, ஆன்லைன் மார்க்கெட்டிங் தளங்கள் மூலம் டெலிவரி ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இஸ்ரேலுக்கு அதிநவீன ‘தாட்' வான் பாதுகாப்பு கவசம்: அமெரிக்க ராணுவம் வழங்குகிறது

படம்
டெல் அவிவ்: ஈரானின் அச்சுறுத்தலை சமாளிக்க இஸ்ரேலுக்கு அதிநவீன ‘தாட்' வான் பாதுகாப்பு கவசத்தை அமெ ரிக்க ராணுவம் வழங்க உள்ளது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள், லெபனானின் ஹிஸ் புல்லா தீவிரவாதிகள், ஏமனை சேர்ந்த ஹவுதி தீவிரவாதிகள், சிரியா, ஜோர்டானை சேர்ந்த தீவிரவாதிகள் என பல்வேறு முனைகளில் இஸ்ரேல் ராணுவம் போரிட்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலையில் நடந்தது என்ன? - மும்பையை அச்சுறுத்தும் கூலிப்படை https://ift.tt/j8OqVY5

படம்
மும்பை: மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் (66) மும்பையில் நேற்று முன்தினம் இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். பிஹார் தலைநகர் பாட்னாவை சேர்ந்தவர் பாபா சித்திக். இவர் சிறுவனாக இருக்கும்போது இவரது குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. கடந்த 1977-ம் ஆண்டு மும்பை யில் உள்ள கல்லூரியில் படித்த போது காங்கிரஸின் மாணவர் அமைப்பில் இணைந்தார். கடந்த 1998-ம் ஆண்டில் மும்பை இளைஞர் காங்கிரஸ் தலைவராக பதவி யேற்றார். கடந்த 1993-ம் ஆண்டில் மும்பை மாநகராட்சி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மும்பை பாந்த்ராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பாபா சித்திக் சுட்டுக் கொலை https://ift.tt/Ykph6Nq

படம்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை - பாந்த்ரா கிழக்கு பகுதியில் சனிக்கிழமை (அக்.12) அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாபா சித்திக் சுட்டுக் கொலை. “பாபா சித்திக் கொல்லப்பட்ட செய்தி மிகுந்த வருத்தத்தை தருகிறது. இந்த குற்றச் செயலை செய்தவர்களுக்கு தகுந்த தண்டனை தரப்பட வேண்டும். அவர்களை விட்டு விடக்கூடாது. இந்த கடினமான சூழலில் பாபா சித்திக் குடும்பத்துக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும்” என தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் அணியின் பிரபுல் படேல் தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஹாரில் துர்கா பூஜை பந்தல்களில் வாள் வழங்கிய பாஜக எம்எல்ஏ: ஆதரவும் எதிர்ப்பும் https://ift.tt/SVPuC0e

படம்
பாட்னா: விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு பிஹார் மாநிலத்தில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினரான மிதிலேஷ் குமார், தனது சீதாமரி தொகுதியில் பெண் பிள்ளைகளுக்கு வாள் வழங்கி உள்ளார். அவரது இந்த செயல் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் இதை ஆதரிக்கும் வகையில் சனாதன நடைமுறை என பாஜக சொல்லியுள்ளது. துர்கா பூஜை கொண்டாட்டத்தில் பெண் பிள்ளைகளுக்கு வாள் மற்றும் ராமாயணத்தை அவர் வழங்கியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்