பிரிக்ஸ் மாநாட்டுக்கு செல்லும் வழியில் 5 நாடுகளில் பிரதமர் மோடி இன்று முதல் பயணம் https://ift.tt/aXk7BhH
புதுடெல்லி: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்லும் வழியில் கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று முதல் 9-ம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறார். பிரேசிலில் உச்சி மாநாட்டு பிரகடனத்தில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா தலைவர்களுடன் வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் சுகாதாரம் உட்பட பல துறைகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து பிரதமர் மோடி ஆலோசிக்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்