இடுகைகள்

டிசம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரே நாளில் 841 பேருக்கு கரோனா பாதிப்பு https://ift.tt/eKugT0f

படம்
புதுடெல்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 841 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா அதிவேகமாக வளர்கிறது - ஜெ.பி.நட்டா பெருமிதம் https://ift.tt/72YA6xz

படம்
லக்னோ: பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமையின் கீழ், இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். லக்னோவில் நடைபெற்ற “நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்” யாத்திரையில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது: சமூகத்துக்கு அநீதி இழைக்க அனைத்து முயற்சிகளையும் செய்தவர்கள் இன்று நியாய யாத்திரை என்ற பெயரில் கற்பனை செய்து கொண்டிருக்கின்றனர். இளைஞர்கள், பெண்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் வளர்ச்சியடையும்போது தான் நாடு வளர்ச்சி அடைகிறது என்பது எங்கள் கற்பனை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“நாட்டின் கலாச்சார அடையாளத்தை பாதுகாப்பது மத்திய அரசின் பொறுப்பு” - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் https://ift.tt/DqovAya

படம்
டேஸ்பூர் : நாட்டின் எல்லைகளை மட்டுமல்லாமல், பாரதத்தின் கலாச்சார அடையாளத்தையும் பாதுகாப்பது மத்திய அரசின் பொறுப்பு என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜாந்த் சிங் தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் உள்ள டேஸ்பூர் பல்கலைக்கழகத்தின் 21வது பட்டமளிப்பு விழா இன்று (டிச.31) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: 2014ஆம் ஆண்டுக்கு முன், இந்தியா அதிக பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்யும் நாடாக இருந்தது. ஆனால் இப்போது இந்த நாடு உலகின் முன்னணி 23 பாதுகாப்பு உபகரண ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹமாஸ் சுரங்கப்பாதையை அழித்தது இஸ்ரேல்: கடந்த 24 மணி நேரத்தில் 200 பேர் உயிரிழப்பு

படம்
ஜெருசலேம்: இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7-ம் தேதி காசா முனையில் செயல்படும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் தீவிரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த1,200 பேர் உயிரிழந்தனர்.மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்தி சென்றனர். இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்து தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இதுவரை நடந்த இஸ்ரேல் ஹமாஸ் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில்மட்டும் 1,200 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு பதிலடியாக காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 20 ஆயிரத்து 424 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காசா முனையில் தரைவழி தாக்குதலின்போது ஹமாஸ் ஆயுதக்குழுவுடன் நடந்த மோதலில் இதுவரை இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 157 பேர்உயிரிழந்துள்ளனர்.அதேவேளையில், பாலஸ்தீனத்தின் மேற்குகரையிலும் வன்முறை வெடித்துள்ளது. காசா மேற்கு கரையில் இதுவரை 303 பேர் உயிரிழந்துள்ளனர் from இந்து தமிழ் திசை : News in Tamil, L...

ராகுல் யாத்திரையில் அருணாச்சலை நீக்கியது ஏன்? - காங்கிரஸுக்கு மகேஷ் ஜெத்மலானி 10 கேள்விகள் https://ift.tt/J1KS8EM

படம்
புதுடெல்லி: அருணாச்சல பிரதேச மாநிலத்தை ராகுல் காந்தியின் யாத்திரையில் இருந்து நீக்கியது ஏன் என காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் மகேஷ் ஜெத்மலானி கேள்வி எழுப்பி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை(தெற்கு முதல் வடக்கு) பாரத்ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். இரண்டாம் கட்டமாக அருணாச்சல பிரதேசத்திலிருந்து போர்பந்தர் (குஜராத்) வரையாத்திரை மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முதல்வர் சோரனுக்கு 7-வது முறையாக சம்மன் https://ift.tt/qFAk0YZ

படம்
புதுடெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற நிலமோசடி தொடர்பான வழக்கில் முதல்வர் ஹேமந்த் சோரன் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ஹேமந்த் சோரனுக்கு கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அமலாக்கத் துறை சம்மன்அனுப்பியது. ஆனால், மாநிலத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் தொடர்பான பணிகளில் இருப்பதால் ஆஜராக முடியாது என்று சோரன் கூறிவிட்டார். அதன்பிறகு, ஆகஸ்ட் 24, செப். 9, செப். 23-ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால்,சோரன் விசாரணைக்கு வரவில்லை. இதற்கிடையில், தனக்குஎதிராக அனுப்பப்பட்ட சம்மன்களை வாபஸ் பெறாவிட்டால், மத்திய அரசுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்என்று சோரன் எச்சரித்தார். அதன்பிறகு 2 சம்மன்கள் அனுப்பப்பட்டன. கடைசியாக டிசம்பர் 12-ம் தேதி ஆஜராக வேண்டும்என்று சம்மன் அனுப்பப்பட்டது. அப்போதும் அவர் ஆஜராகவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின்போது140 கோடி இந்தியர்களும் தீபம் ஏற்ற வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள் https://ift.tt/N6a7pHP

படம்
அயோத்தி: அயோத்தியில் ரூ.15,700 கோடி மதிப்பிலான திட்டங்களை நேற்று தொடங்கிவைத்த பிரதமர் மோடி, ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின்போது 140 கோடி இந்தியர்களும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜன. 22-ம் தேதிநடைபெறுகிறது. இதையொட்டி, அயோத்தியில் சர்வதேச விமானநிலையம், ரயில் நிலையம் எனரூ.15,700 கோடி மதிப்பிலான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றைத் தொடங்கிவைப்பதற்காக நேற்று அயோத்தி சென்ற பிரதமர் மோடியை உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.15,000 கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைக்க அயோத்திக்கு பிரதமர் மோடி இன்று வருகை https://ift.tt/ZomQk9j

படம்
அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்திக்கு பிரதமர் மோடி இன்று வருகை தரவுள்ளார். ரூ.15,000 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களைத் பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார். இதுகுறித்து லக்னோ மண்டலத்தின் கூடுதல் காவல்துறை இயக்குநர் பியூஷ் மோர்டியா கூறியதாவது: பிரதமரின் வருகைக்கு முன்னதாக பிரதமரின் பாதுகாப்புக்காக உயர்மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தீவிரவாத எதிர்ப்பு படை (ஏடிஎஸ்), தேசிய பாதுகாப்பு படையினர் (என்எஸ்ஜி) மற்றும் பிறபாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ட்ரோன்கள் மூலம் அனைத்து பகுதிகளையும் கண்காணித்து வருகிறோம். போக்குவரத்து அமைப்பை மேம்படுத்த,போக்குவரத்து திசை திருப்பும் திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூடுதல் காவல் துறை இயக்குநர் பியூஷ் மோர்டியா கூறினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோளில் 4.6 ஆக பதிவு

படம்
இம்பால்: மியான்மர் நாட்டில் 4.6 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு 10.01 மணி அளவில் இந்த நிலநடுக்கம் அங்கு ஏற்பட்டது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மணிப்பூர் மாநிலத்தின் உக்ருல் பகுதியில் இருந்து சுமார் 208 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை நில அதிர்வுக்கான தேசிய மையம் உறுதி செய்துள்ளது. கடந்த 26-ம் தேதி சத்தீஸ்கர் மற்றும் 27-ம் தேதி அசாம் மாநிலத்தில் நில அதிர்வு உணரப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாலியல் வழக்கில் நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சானே குற்றவாளி: நீதிமன்றம்

படம்
காத்மாண்டு: பாலியல் வழக்கில் நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சானே குற்றவாளி என காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவரது தண்டனை விவரம் விரைவில் வெளிவரும் என தெரிகிறது. 23 வயதான சந்தீப் லாமிச்சானே மீது கடந்த ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. 17 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்தார் என்பது தான் அவர் மீதான குற்றச்சாட்டு. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த விவகாரம் தொடர்பாக அவரை கைது செய்வதற்கான வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. நேபாள கிரிக்கெட் சங்கம் அவரை இடைநீக்கம் செய்தது. கடந்த ஜனவரியில் அவர் பிணையில் வெளிவந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“AI தொழில்நுட்பத்தால் பணியிழப்பு கவலை வேண்டாம்” - நிர்மலா சீதாராமன் https://ift.tt/Th9tHws

படம்
சென்னை: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தால் பணியிழப்பு ஏற்படும் என்ற கவலை வேண்டாம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை - மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் அவர் இதனை தெரிவித்துள்ளார். “1980-களில் வங்கிகளில் கம்ப்யூட்டர் அறிமுகமானபோது ஊழியர்களுக்கு மாற்றாக கம்ப்யூட்டர் இருக்குமோ என்ற சந்தேகம் தொழிற்சங்கங்களுக்கு எழுந்தது. இப்போது நாடு எப்படி வளர்ச்சி கண்டுள்ளது என பாருங்கள். இன்று நமது இல்லங்கள் தொடங்கி அனைத்து இடங்களிலும் கம்ப்யூட்டர்கள் உள்ளன. அது வேலைவாய்ப்பை ஏற்படுத்தி உள்ளதா அல்லது பறித்து கொண்டதா என்பதை நாம் கவனிக்க வேண்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காசி தமிழ் சங்கமம்-2 | நாவல், இலக்கியத்தை இந்தியில் மொழி பெயர்க்க வேண்டும்: எழுத்தாளர்கள் கலந்துரையாடலில் கருத்து https://ift.tt/WViCuh1

படம்
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் வாராணசியில் காசி தமிழ் சங்கமம் - 2 நடைபெறுகிறது. கங்கை நதியின் நமோ கரையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழர்கள் மற்றும் உத்தர பிரதேச மக்களின் சந்திப்புகள் நிகழ்கின்றன. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் 210 தமிழ் எழுத்தாளர்கள், உத்தர பிரதேச எழுத்தாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது. ‘தமிழ் மற்றும் இந்தி மொழி இலக்கியத்தில் முற்போக்கான சிந்தனைகள்’ எனும் தலைப்பில் இரு மொழிகளின் எழுத்தாளர்களும் கலந்துரையாடினர். நீரஜா மாதவ், உதவி இயக்குநர்(ஓய்வு), அகில இந்திய வானொலி நிலையம் பேசும்போது, ‘அக்காலங்களில் அரசவைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்த திருநங்கைகள் பற்றிய கதைகள் எழுதப்பட்டன. இது தற்போது குறைந்துள்ளது. திருநங்கைகள் பற்றி அதிகமாக எழுதப்பட வேண்டும். காஷ்மீர் உட்பட நமது நாட்டின் எல்லை பிரச்சினைகள் பற்றி தேச சிந்தனைகளுடன் எழுத வேண்டும்’ எனத் தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கின் குற்றப்பத்திரிகையில் பிரியங்கா பெயர்: அமலாக்கத் துறை நடவடிக்கை https://ift.tt/pGdhx4K

படம்
புதுடெல்லி: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கின் குற்றப் பத்திரிகையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது. கேரளாவை பூர்விகமாகக் கொண்டவர் சி.சி.தம்பி. தொழிலதிபரான அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கிறார். கடந்த 2005-2008-ம் ஆண்டில் ஹரியாணாவின் பரிதாபாத் அருகேயுள்ள அமீர்பூர் கிராமத்தில் 486 ஏக்கர் நிலத்தை சி.சி.தம்பி வாங்கினார். டெல்லியை சேர்ந்த எச்.எல். பாவா ரியல் எஸ்டேட் நிறுவனம் மூலம் அந்த இடத்தை அவர் வாங்கினார். கடந்த 2005-ம் ஆண்டில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, ஹரியாணாவின் அமீர்பூர் கிராமத்தில் 40 ஏக்கர் விவசாய நிலத்தை எச்.எல். பாவா ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் இருந்து வாங்கினார். கடந்த 2005-ம் ஆண்டில் அதே பகுதியில் அதே நிறுவனத்திடம் இருந்து பிரியங்கா காந்தியும் 5 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத்திய பிரதேசத்தில் லாரி மீது பேருந்து மோதி தீப்பிடித்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு https://ift.tt/FNO5ygm

படம்
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் குனா பகுதியில் லாரி மீது பேருந்து மோதி விபத்தில் சிக்கி உள்ளது. இதன் காரணமாக அந்தப் பேருந்து தீப்பிடித்துள்ளது. இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். லாரி மீது பேருந்து மோதி கவிழ்ந்துள்ளது. தொடர்ந்து பேருந்தில் தீப்பிடித்துள்ளது. குனா மாவட்ட ஆட்சியர் விபத்தினை உறுதி செய்துள்ளார். காயமடைந்த 17 பேர் குனா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு வருவதாக தகவல். இந்த விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அகமதாபாத்தில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு https://ift.tt/GlxKInt

படம்
சென்னை: பயணிகள் நெருக்கடியை குறைக்கும் வகையில், குஜராத் மாநிலம்அகமதாபாத்தில் இருந்து சென்னை வழியாக திருச்சிராப்பள்ளிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து டிச.28, ஜன.4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (09419) புறப்பட்டு, சென்னை எழும்பூர் வழியாக திருச்சிராப்பள்ளியை அடையும். மறுமார்க்கமாக, திருச்சிராப்பள்ளியில் இருந்து டிச.31, ஜன.7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் அதிகாலை 5.40 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (09420) புறப்பட்டு, சென்னை எழும்பூர் வழியாக அகமதாபாத்தை அடையும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அயோத்தி விமான நிலையம், ரயில் நிலையம் 30-ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி https://ift.tt/PV0pF1i

படம்
புதுடெல்லி: அயோத்தியில் கட்டப்பட்டுள்ள விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 30-ம் தேதி திறந்து வைக்க உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கிஉள்ளது.இக்கோயில் வரும் ஜனவரி 22-ம் தேதி திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இக்கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அயோத்தியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக குழுவை ஏற்க முடியாது” - சஞ்சய் சிங் https://ift.tt/5AoG4mn

படம்
புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்துள்ள தற்காலிக குழுவை ஏற்க முடியாது என மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் சில விளக்கத்தையும் கொடுத்துள்ளார். “என்னால் இந்த தற்காலிக குழுவை ஏற்க முடியாது. ஏனெனில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தன்னாட்சி அமைப்பாகும். அதனால் எனது அனுமதியின்றி இது போன்ற முடிவை எடுக்க முடியாது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசிடம் நான் பேசுவேன். இதற்கு தீர்வு எட்டப்படவில்லை என்றால் நீதிமன்றத்தில் சட்டப்படி வழக்கு தொடருவேன். நான் தலைவராக நியமிக்கப்படவில்லை ஜனநாயக முறைப்படி நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றேன்” என சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உள்நாட்டில் தயாரான ஏவுகணை அழிப்பு கப்பல் ‘ஐஎன்எஸ் இம்பால்’ நாட்டுக்கு அர்ப்பணிப்பு https://ift.tt/PcVSLBG

படம்
மும்பை: வடகிழக்கு நகரம் ஒன்றின் (மணிப்பூர் தலைநகர்) பெயர் சூட்டப்படும் இந்தியாவின் முதல் போர்க் கப்பலான ‘ஐஎன்எஸ் இம்பால்’ நேற்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அதிநவீன ஏவுகணை அழிப்புகப்பலான ஐஎன்எஸ் இம்பால், இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பிரிவால் வடிவமைக்கப்பட்டது. டிஆர்டிஓ உள்ளிட்ட பொதுத் துறை மற்றும்தனியார் துறை பங்களிப்புடன் மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்டது. விசாகப்பட்டினம் வகை ஏவுகணை அழிப்பு கப்பலில் இது மூன்றாவது கப்பலாகும். இக்கப்பல் 163 மீட்டர் நீளமும், 7,400 டன் எடையும் கொண்டது. மணிக்கு 56 கி.மீ. வேகத்தில் பயணிக்க கூடியது. இதன் 75 சதவீத பாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

யூடியூப் சேனலில் 2 கோடி பின்தொடர்வோரை கொண்ட முதல் உலக தலைவர் பிரதமர் மோடி https://ift.tt/O6tVFTE

படம்
புதுடெல்லி: யூடியூப் சேனலில் 2 கோடி பின்தொடர்வோரை கொண்ட முதல் உலகத் தலைவர் என்ற பெருமை பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்துள்ளது. உலகத் தலைவர்கள் பலருக்கும் யூடியூப் சேனல் உள்ளது. இதில் அவர்கள் பற்றிய செய்திகள் மற்றும் வீடியோக்கள் இடம் பெறும். இதை உலகம் முழுவதும் பலர் பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடியின் யூடியூப் சேனலை பின்தொடர்வோரின் எண்ணிக்கை நேற்று 2 கோடி என்ற இலக்கை கடந்துள்ளது. இந்த இலக்கை எட்டிய முதல் உலகத் தலைவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடத்தில் பிரேசில் அதிபர் ஜேர் பல்சனரோ உள்ளார். இவரது யூடியூப் சேனலை 64 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். 3-வது இடத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளார். இவரது யூடியூப் சேனலை 11 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். 4-வது இடத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளார். இவரது யூடியூப் சேனலை 7 லட்சத்து 94 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மதுரை அதிகாரி அங்கித் கைது விசாரணையை டெல்லிக்கு மாற்றியது அமலாக்கத் துறை https://ift.tt/ks1dmMV

படம்
புதுடெல்லி: லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி மீதான வழக்கு விசாரணையை டெல்லி தலைமையகத்துக்கு அமலாக்கத் துறை மாற்றம் செய்துள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் சுரேஷ்பாபு மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்காமல் இருக்க, மதுரை அமலாக்கத் துறை அங்கித் திவாரி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கடந்த 1-ம் தேதி கைது செய்யப்பட்டார். பிறகு, மதுரையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் புதிய வகை கரோனா பரவுல்: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,054 ஆக அதிகரிப்பு https://ift.tt/95vKpfd

படம்
புதுடெல்லி/ சென்னை: நாடு முழுவதும் நேற்று 628 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,054 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 4 பேருக்கு புதிய வகை தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 2020 அக்டோபரில் முதல் கரோனா அலை உச்சத்தில் இருந்தது. 2021 ஏப்ரலில் 2-வது அலை உச்சத்தை தொட்டது. 2022 ஜனவரியில் 3-வது கரோனா அலை ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது இந்தியா உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜேஎன்1 என்ற புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த புதியவகை வைரஸ் பரவலை தடுக்க மாநிலஅரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

3 புதிய குற்றவியல் தடுப்பு சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல்! https://ift.tt/ASnqUap

படம்
புதுடெல்லி: பழைய குற்றவியல் சட்டங்களை மறுசீரமைக்கும் விதமாக மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களும் மக்களவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பாரதிய சாக்‌ஷியா ஆகிய 3 மசோதாக்களையும் மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 12-ம் தேதி அறிமுகம் செய்தார். இதன் மீதான விவாதம் மக்களவையில் கடந்த வாரம் நடந்தது. தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காங்கிரஸ் கட்சியில் மாற்றங்கள் அறிவிப்பு: உ.பி.பொறுப்பாளர் பதவியில் இருந்து பிரியங்கா விடுவிப்பு https://ift.tt/20xKrwM

படம்
புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக சச்சின் பைலட் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதைமுன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகளில் மிகப்பெரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பதவியிலிருந்து பிரியங்கா காந்தி வதேரா விடுவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து தற்போது சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக சச்சின் பைலட்டை நியமித்து அக்கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தி பேசும் உ.பி., பிஹார் மக்களை தயாநிதி மாறன் இழிவுபடுத்தி பேசுவதா? - ராஷ்ட்ரிய ஜனதா தளம், பாஜக கண்டனம் https://ift.tt/UJ5MP2T

படம்
‘‘உத்தர பிரதேசம், பிஹாரில் இந்தியை மட்டும் கற்றவர்கள் தமிழ்நாட்டுக்கு கட்டிடங்கள் கட்டவும், கழிவறைகளை சுத்தம் செய்யவும்தான் வருகின்றனர்’’ என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் கூறியதற்கு பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சனாதனம் குறித்து திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன்பிறகு, 3 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது குறித்து நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த திமுக எம்.பி. செந்தில்குமார், ‘பசு கோமிய’ மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். பின்னர் அவர் மன்னிப்பு கேட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீரில் மர்ம முறையில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு இழப்பீடு, வேலை https://ift.tt/jgDohiv

படம்
ஜம்மு: மர்மமான முறையில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கப்படும் என காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது. காஷ்மீர் யூனியன் பிரதேசம் பூஞ்ச் மாவட்டம் பபியாஸ் கிராமத்தில் கடந்த 21-ம் தேதி ஒரு வளைவில் சென்று கொண்டிருந்த 2 ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர். 2 பேர் காயமடைந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்களவை தேர்தலுக்கான மாநில பொறுப்பாளர்களை நியமித்தது காங்கிரஸ்: பிரியங்கா காந்தி விடுவிப்பு https://ift.tt/2AQszKi

படம்
புதுடெல்லி: 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான மாநில பொறுப்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதில் உத்தரபிரதேச மாநிலத்தின் பொறுப்பாளராக இருந்து வந்த பிரியங்கா காந்தி தற்போது அதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 4 மாநிலங்களில் தோல்வி அடைந்தது. தெலங்கானாவில் மட்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கான பணிகளில், காங்கிரஸ் தலைமை தற்போது தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்து கோயிலில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்: அமெரிக்கா கடும் கண்டனம்

படம்
நெவார்க்: கலிபோர்னியா மாகாணத்தில் இந்து கோயில் ஒன்றின் சுவரில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டது தொடர்பாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. கலிபோர்னியாவின் நெவார்க் நகரில் சுவாமிநாராயண் கோயில் உள்ளது. அதில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாக ஸ்பிரே பெயிண்ட் மூலம் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியாவுக்கு எதிரான வெறுப்பு வாசகங்களும் எழுதப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தனியார் மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து: பெரும் உயிர்ச் சேதம் தவிர்ப்பு @ ஹைதராபாத் https://ift.tt/PqlwQr6

படம்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறை உடனடியாக செயல்பட்டதால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது. ஹைதராபாத்தின் மெஹ்திபட்டினம் அருகே உள்ள ஜோதிநகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று (டிச. 23) மாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மாடியில் ஏற்பட்ட தீ மளமளவென மற்ற தளங்களிலும் பரவத் தொடங்கியதால் காவல்துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நடிகை ஜாக்குலினுக்கு எதிரான ஆதாரங்களை வெளியிடுவேன்: சிறையில் இருந்தபடி இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கடிதம் https://ift.tt/Ue2NilK

படம்
புதுடெல்லி: இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூருவை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் உள்ளார். அவர் சிறையிலிருந்தபடியே டெல்லியை சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ.200 கோடியை மோசடியாக பெற்றதாக மீண்டும் கைதாகியுள்ளார். இந்நிலையில் பண மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸிடம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விசாரணை நடத்தப்பட்டது. சுகேஷும் ஜாக்குலினும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. சிறையில் இருந்து கொண்டே ஜாக்குலினுக்கு ரூ.10 கோடி வரை பரிசுப் பொருட்களை சுகேஷ் வாங்கிக் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீனாவுடன் இந்தியாவை ஒப்பிட வேண்டாம்: பிரதமர் நரேந்திர மோடி கருத்து https://ift.tt/OVknMH5

படம்
புதுடெல்லி: தனியார் ஊடகத்துக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது. நாடு முழுவதும் மக்களின் பங்களிப்போடு தூய்மை இந்தியா திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உலக நாடுகள் ஒன்றை, ஒன்று சார்ந்து செயல்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை நாட்டின் நலனை முன்னிறுத்தி வெளியுறவு கொள்கைகளை கடைப்பிடிக்கிறோம். இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவு வலுவடைந்து வருகிறது. போரினால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்தின் காசா பகுதி மக்களுக்கு முழு அளவில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். இரு நாடுகள் திட்டத்தின் மூலம் பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. அந்த பிராந்திய தலைவர்களுடன் தொடர்பில் உள்ளேன். பாலஸ்தீனத்தில் அமைதியை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வோம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு https://ift.tt/H57uOap

படம்
புதுடெல்லி: குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்படும். இதில் தலைமை விருந்தினராக பங்கேற்க நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம். அடுத்தாண்டு ஜனவரி மாதம் 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு முதலில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர் ஜனவரியில் இந்தியா வர இயலாது என தெரிவித்துவிட்டார். இதையடுத்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு, குடியரசு தினவிழாவில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரான்ஸில் விமானம் அவசர தரையிறக்கம்: பயணிகளில் இந்தியர்கள் அதிகம்

படம்
பாரிஸ்: துபாயில் இருந்து நிகரகுவா நாட்டுக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப காரணங்களுக்காக பிரான்ஸ் நாட்டு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. சுமார் 300 பயணிகள் பயணிக்கும் இந்த விமானத்தில் இந்தியர்கள் அதிகம் இருப்பதாக தகவல். இதனை பிரான்ஸ் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்களவை அத்துமீறல் வழக்கில் கர்நாடக முன்னாள் போலீஸ் அதிகாரி மகன் உட்பட 2 பேர் கைது https://ift.tt/4h1poIQ

படம்
பெங்களூரு / புதுடெல்லி: மக்களவை அத்துமீறல் வழக்கில் கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் டிஎஸ்பி ஒருவரின் மகன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 13-ம் தேதி நாடாளுமன்றத்தின் மக்களவையில் விவாதம் நடைபெற்ற போது பார்வையாளர் மாடத்தில் இருந்து சிலர் கீழே குதித்து அத்து மீறல் சம்பவத்தில் ஈடுபட்டனர். அப்போது லக்னோவை சேர்ந்த சாகர் ஷர்மா, மைசூருவை சேர்ந்த பொறியியல் பட்டதாரி மனோ ரஞ்சன் வண்ண‌ புகை குப்பிகளை வீசினர். இவர்களை ஆதரித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே கோஷமிட்ட ஹரியாணாவைச் சேர்ந்த நீலம் தேவி, அமோல் ஷிண்டே ஆகியோர் முழக்கம் எழுப்பினர். இந்த நால்வரையும் டெல்லி போலீஸார் கைது செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்களவையில் மேலும் 3 எம்.பி.க்கள் இடைநீக்கம்: பிரதமர் மோடி மீது கார்கே புகார் https://ift.tt/hy95GKA

படம்
புதுடெல்லி: நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடிஆகியோர் அவையில் விளக்கம் அளிக்கக் கோரி இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனர். இதைகண்டித்து இண்டியா கூட்டணிஎம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருந்து விஜய்சவுக் வரை நேற்று பேரணி நடத்தினர். இந்த பேரணிக்குப் பின் பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் கார்கே கூறுகையில், ‘‘ நாடாளுமன்ற அத்துமீறல் குறித்துவாராணசி, அகமதாபாத் மற்றும் டி.வி.யில் பிரதமர் மோடி பேசுகிறார். ஆனால் நாடாளுமன்றத்தில் அவர் பேசுவதில்லை. நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி அவமதித்துவிட்டார்’’ என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷாவை பிக்பாக்கெட் என விமர்சித்த ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: டெல்லி உயர் நீதிமன்றம் https://ift.tt/VAhmaXN

படம்
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை பிக்பாக்கெட் என விமர்சித்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொழிலதிபர் கவுதம் அதானி ஆகியோரை பிக்பாக்கெட் என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார். இதுதொடர்பான விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு டெல்லிஉயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அவரின் இந்த பேச்சு நல்லபண்புடன் இல்லை என்று கூறியநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க எட்டு வாரங்கள் அவகாசம் வழங்கியுள்ளது. இந்த விஷயத்தை இனிமேலும் நிலுவையில் வைத்திருக்கவிரும்பவில்லை என்றும்,இதற்கு விரைவாக தீர்வு காண வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘தேசிய மொழி இந்தியை கற்றுக் கொள்ளுங்கள்’: டி.ஆர்.பாலுவுக்கு அறிவுரை கூறிய நிதிஷ்குமார் | இண்டியா கூட்டணி கூட்டத்தில் சலசலப்பு https://ift.tt/4bUNrDd

படம்
புதுடெல்லி: ‘‘இந்தி நமது தேசிய மொழி. நம் அனைவருக்கும் அந்த மொழி நன்கு தெரிந்திருக்க வேண்டும். எனவே, நீங்கள் இந்தி கற்றுக் கொள்ளுங்கள்’’ என்று, டெல்லியில் நடந்த இண்டியா கூட்டணி கூட்டத்தில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலுவிடம் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியது சலசலப்பை ஏற்படுத்திஉள்ளது. பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள ‘இண்டியா’ கூட்டணியின் 4-வது ஆலோசனை கூட்டம் டெல்லியில் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. 3 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார், அர்விந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா உத்தவ் அணி தலைவர் உத்தவ் தாக்கரே உட்பட 28 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil...

குற்றவியல் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்: நன்கு சரிபார்த்ததாக அமித் ஷா தகவல் https://ift.tt/sXlEarA

படம்
புதுடெல்லி: பழைய குற்றவியல் சட்டங்களை மறுசீரமைக்கும் விதமாக மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களும் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. பழைய காலனித்துவ கால இந்திய தண்டனைச் சட்டங்களை மாற்றும் வகையிலும், நவீன காலத்துக்கு ஏற்ற வகையிலும் மத்திய அரசு 3 புதிய குற்றவியல் மசோதாக்களை உருவாக்கியுள்ளது. அதன்படி, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷாசன்ஹிதா, பாரதிய சாக்‌ஷியா ஆகிய 3 மசோதாக்களையும் மக்களவையில் மத்திய உள்துறைஅமைச்சர் அமித் ஷா கடந்த 12-ம்தேதி அறிமுகம் செய்தார். இதன் மீதான விவாதம் மக்களவையில் நேற்று நடந்தது. அப்போது, அமித் ஷா பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க மத்திய அமைச்சரவைக் குழு முடிவை ரத்து செய்க: எம்.பி டி.ரவிகுமார் https://ift.tt/St9T6xE

படம்
புதுடெல்லி: சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என மக்களவையில் திமுக எம்பி டி.ரவிகுமார் வலியுறுத்தினார். இதற்காக, கடந்த 1965-ல் மத்திய அமைச்சரவைக் குழு எடுத்த முடிவை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். இது குறித்து இன்று (டிச.20, புதன்கிழமை) நாடாளுமன்ற மக்களவையில் விதி 377-இன் கீழ் பின்வரும் கோரிக்கையை திமுகவின் எம்பியான டி.ரவிக்குமார் பேசியதாவது: கடந்த பிப்ரவரி 9, 2023 அன்று மாநிலங்களவையில் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய சட்ட அமைச்சர், ‘உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழி தொடர்பான முன்மொழிவுகளுக்கு இந்திய தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெறவேண்டும்’ என கடந்த மே 21, 1965 அன்று அமைச்சரவைக் குழு எடுத்த முடிவைத் தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடாளுமன்ற அத்துமீறலை எதிர்க்கட்சிகள் ஆதரிப்பது கவலை அளிக்கிறது: பிரதமர் மோடி https://ift.tt/8lWwebJ

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘இண்டியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ஆக கார்கே மறுப்பு https://ift.tt/rLQCu9w

படம்
புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற ‘இண்டியா’ கூட்டணியின் 4-வது கூட்டத்தில், பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெயரை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன் மொழிந்தார். ஆனால், இதற்கு கார்கே மறுப்பு தெரிவித்து விட்டார். இண்டியா கூட்டணியின் 4-வது கூட்டம் டெல்லி அசோகாஓட்டலில் நேற்று மாலை நடை பெற்றது. இதில் முதல்வர்கள் மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார், மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா உத்தவ் அணி தலைவர் உத்தவ் தாக்கரே உட்பட 28 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வடமேற்கு சீனாவில் 6.2 ரிக்டரில் நிலநடுக்கம்: சுமார் 100 பேர் உயிரிழப்பு, பலர் காயம்

படம்
பீஜிங்: சீனாவின் வடமேற்கு பகுதியில் 6.2 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். கன்சு மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. கிங்காய் மாகாணத்தில் சுமார் 11 பேர் உயிரிழந்து உள்ளதாக கள தகவல். திங்கட்கிழமை இரவு நிலநடுக்கம் அங்கு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. இதனால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், வீடுகளில் விரிசல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்ட காரணத்தினால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த மாகாணத்தில் உள்ள சில கிராமங்களில் மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் இன்று காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான உத்தரவை அதிபர் ஜி ஜின்பிங் பிறப்பித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லிக்கு 2-வது வந்தே பாரத் ரயில் சேவை; வாரணாசியில் பிரம்மாண்ட தியான மண்டபம் - பிரதமர் மோடி திறந்து வைத்தார் https://ift.tt/yJlkx24

படம்
வாரணாசி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உலகின் மிகப்பெரிய தியான மண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான உத்தர பிரதேச மாநிலம் வாரணாசிக்கு 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்றார். முதல் நாளில் காசி தமிழ் சங்கமத்தின் 2-ம் ஆண்டு நிகழ்ச்சியை நமோ படித்துறையில் தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மானுடர்களுக்கு செவ்வாய் கிரகத்தில் நகரங்கள் இருக்க வேண்டும்: எலான் மஸ்க்

படம்
சான் பிரான்சிஸ்கோ: மானுடர்களுக்கு செவ்வாய் கிரகத்தில் நகரங்கள் இருக்க வேண்டும் என எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மனிதர்கள் செவ்வாய் கிரகத்துக்கு செல்வது குறித்து பல்வேறு தருணங்களில் மஸ்க் பேசி உள்ளார். இந்நிலையில், தற்போது மீண்டும் எக்ஸ் தளத்தில் அது குறித்து ட்வீட் செய்துள்ளார். பூமியை கடந்து பிற கோள்களில் பல்வேறு ஆராய்ச்சி பணிகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் செவ்வாய் கிரகத்தில் பெரும்பாலான நாடுகளுக்கு ஒரு கண் உள்ளது. குறிப்பாக அங்கு மனிதர்கள் உயிர் வாழக்கூடிய சாத்தியம் உள்ளதா என்பது குறித்த ஆராய்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியில் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அதே நேரத்தில் மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் சாத்தியம் குறித்து பேசி வருகிறது எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சமர் வான் பாதுகாப்பு ஏவுகணை சோதனை வெற்றி https://ift.tt/fTLARG4

படம்
புதுடெல்லி: சமர் வான் பாதுகாப்பு ஏவுகணை கருவிகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக இந்திய விமானப் படை (ஐஏஎப்) அறிவித்துள்ளது. இதுகுறித்து ஐஏஎப் அதிகாரிகள் கூறியதாவது: சமீபத்தில் சூர்யலங்கா விமானப் படை தளத்தில் நடைபெற்ற அஸ்ட்ராசக்தி-2023 பயிற்சியின் போது இந்திய விமானப் படை உள்நாட்டில் வடிவமைத்து உருவாக்கிய ‘சமர்’ வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக வெவ்வேறு சூழ்நிலைகளில் குறிப்பிட்ட இலக்குகளை தாக்கி அழிக்கும் நடவடிக்கையை இந்த ஏவுகணை துல்லியமாக நிறைவேற்றியது. இந்த ஏவுகணை அமைப்பு 2 முதல் 2.5 மாக் வேகத்தில் இயங்கும் ஏவுகணைகளின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பை வழங்கும். அச்சுறுத்தல் சூழ்நிலைகளைப் பொருத்து சமர் அமைப்பு இரட்டை ஏவுகணைகளை ஏவுவதற்காக இரண்டு ட்ரட் ஏவுதளங்களைக் கொண்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாக்பூர் ராணுவ தளவாட ஆலையில் பயங்கர வெடி விபத்து: 9 தொழிலாளர்கள் உயிரிழப்பு https://ift.tt/sR0eDlN

படம்
நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அருகே ராணுவ தளவாட ஆலையில் நடந்த பயங்கர வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் கொன்தலிக்கு அருகே பஜர்கான் கிராமத்தில் சோலார் நிறுவனத்தின் ஆலை உள்ளது. ராணுவத்துக்கு தேவையான ட்ரோன்கள், வெடிபொருட்கள், தளவாடங்கள் இங்கு தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த ஆலையின் வார்ப்பு பிரிவில் நேற்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. அப்போது ஆலைக்குள் 12 தொழிலாளர்கள் இருந்ததாக கூறப்படும் நிலையில், 9 பேர்உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். வார்ப்பிரும்பு ஆலையில் பேக்கிங் செய்யும்போது விபத்து நடந்ததாக காவல் துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் போதார் தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வாரணாசியில் 2-வது ஆண்டாக காசி தமிழ் சங்கமம் விழா தொடங்கியது: 15 மொழிகளில் திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் மோடி https://ift.tt/XzFL6eH

படம்
வாரணாசி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் 2-ம் ஆண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, 15 மொழிகளில் திருக்குறளை வெளியிட்டார். பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு நேற்று சென்றார். இங்கு பல வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கிவைத்தார். ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ யாத்திரையையும் தொடங்கிவைத்து, அரசு திட்ட பயனாளிகளுடன் பேசினார். பின்னர், பனாரஸ் ரயில் இன்ஜின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 10 ஆயிரமாவது ரயில்இன்ஜின், வாரணாசி - டெல்லி வந்தே பாரத் ரயில் சேவை, கன்னியாகுமரி முதல் பனாரஸ் வரை செல்லும் காசி தமிழ் சங்கமம் புதியவிரைவு ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“சுகாதார மையங்களுக்கு காவி நிறம் பூசினால் மட்டுமே மத்திய அரசின் நிதி” - மம்தா குற்றச்சாட்டு https://ift.tt/ZGBVOYP

படம்
புதுடெல்லி: பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு மக்கள் நல திட்டத்துக்கு தேவையான நிதியை நிறுத்தியுள்ளதாக மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். இண்டியா கூட்டணியின் கூட்டம் மற்றும் பிரதமர் மோடியை சந்திக்கும் வகையில் தற்போது அவர் டெல்லி வந்துள்ளார். “டிசம்பர் 19-ம் தேதி நடைபெற உள்ள இண்டியா கூட்டணி கூட்டத்தில் நான் பங்கேற்கிறேன். தொடர்ந்து அதற்கு அடுத்த நாள் பிரதமர் மோடியை எங்கள் கட்சியின் எம்.பி-க்களுடன் நான் சந்திக்க உள்ளேன். மத்திய அரசு மேற்கு வங்க மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்துள்ளது. அதை விடுவிக்கும் எண்ணமும் அவர்களுக்கு இல்லை. பல்வேறு மக்கள் நல திட்டங்களுக்கான நிதி இதில் அடங்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரபிக்கடல் பகுதியில் கடத்தப்பட்ட மால்டா சரக்கு கப்பலை மீட்க சுற்றி வளைத்தது இந்திய கடற்படை https://ift.tt/7fPReEI

படம்
புதுடெல்லி: அரபிக் கடல் பகுதியில் கடத்தப்பட்டு சோமாலியா கொண்டு செல்லப்பட்ட மால்டா நாட்டு சரக்கு கப்பலை இந்திய கடற்படை கப்பல் இடைமறித்துள்ளது. அந்த கப்பலை கொள்ளையர்களிடம் இருந்து மீட்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. அரபிக் கடல் பகுதியில் கடந்த வியாழக் கிழமையன்று மால்டா நாட்டு சரக்கு கப்பல் ‘எம்.வி.ரூன்’ 18 பேருடன் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கப்பலை 6 பேர் கும்பல் கடத்தியதாக அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து இந்திய கடற்படையின் கண்காணிப்பு விமானம் அரபிக் கடல் பகுதியில் எம்.வி ரூன் சரக்கு கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டது. நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட கப்பலை கடற்படை விமானம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. எம்.வி.ரூன் கப்பல் சோமாலியாகடல் பகுதியில் புன்ட்லேண்ட் பகுதியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

1971-ல் பாகிஸ்தானுடனான போரில் உயிர்த் தியாகம் செய்தோருக்கு மோடி, முர்மு மரியாதை https://ift.tt/g6SvTs3

படம்
புதுடெல்லி: பாகிஸ்தானுடன் 1971-ல் நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்ற தினம் ஆண்டுதோறும் வெற்றி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு ராணுவ மாளிகையில் நேற்று நடைபெற்ற ‘அட் ஹோம்' வரவேற்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டார். இந்நிலையில் வெற்றி தினத்தைமுன்னிட்டு தனது எக்ஸ் தளத் தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘1971-ல் நடைபெற்ற போரின்போது நமது பாதுகாப்பு படைகள் செய்த தன்னலமற்ற தியாகத்தை தேசம் நன்றியுடன் நினைவு கூர்கிறது. இணையற்ற துணிச்சலை வெளிப்படுத்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற துணிச்சலான நெஞ்சங்களுக்கு விஜய் திவாஸ் (வெற்றி தினம்) தினத்தில் தலை வணங்குகிறேன்’’ என பதிவிட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பாக 6-வது குற்றவாளியும் கைது https://ift.tt/rEoxPRk

படம்
புதுடெல்லி: நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தில் தொடர்புடைய 6-வது குற்றவாளி மகேஷ் குமாவத் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் ஆஜர்படுத்தப்பட்டார். முக்கிய குற்றவாளி லிலித் ஜா, டெல்லியில் இருந்து தப்பிப்பதற்கு இவர் உதவியதாகவும், மற்ற குற்றவாளிகளின் செல்போன்களை அழித்ததாகவும் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவரை விசாரணைக்காக 7 நாள் போலீஸ் காவலில் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மக்களவையில் கடந்த 13-ம் தேதி வண்ண புகை குப்பிகளை வீசி அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட சாகர் சர்மா, மனோரஞ்சன், அமோல் ஷிண்டே, நீலம் தேவி, லலித் ஜா ஆகியோரிடம் டெல்லி போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இவர்கள் அனைவரும் லலித் ஜா உருவாக்கிய பகத் சிங் ரசிகர் மன்றத்தில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். தாங்கள் மத்திய அரசுக்கு தெரிவிக்க விரும்பும் எதிர்ப்பை, மிகுந்த தாக்கத்துடன் எவ்வாறு தெரிவிக்கலாம் என பல திட்டங்களை ஆலோசித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்