கொள்ளையரிடம் இருந்து உயிருடன் மீட்ட கடற்படைக்கு நன்றி - ‘இந்தியா ஜிந்தாபாத்’ கோஷமிட்ட பாகிஸ்தான் மீனவர்கள் https://ift.tt/TUQlobB
புதுடெல்லி: கடற்கொள்ளையர்களிடம் இருந்து உயிருடன் மீட்டவுடன், உணர்ச்சிப் பெருக்கில் இந்திய கடற்படைக்கு நன்றி தெரிவித்து பாகிஸ்தான் மீனவர்கள் ‘‘இந்தியா ஜிந்தாபாத்’’ என்று கோஷமிட்டனர். அரபிக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரானிய மீன்பிடி படகில் 23 பாகிஸ்தானியர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது வழிமறித்த கடற்கொள்ளையர்கள், ஆயுதங்களைக் காட்டி கப்பலை கடத்தினர். தகவலறிந்தவுடன் இந்திய கடற்படை போர்க் கப்பல் ஐஎன்எஸ் சுமேதா, ஐஎன்எஸ் திரிசூல் ஆகியவை கடற்கொள்ளையர்களை துரத்த ஆரம்பித்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்