இடுகைகள்

ஏப்ரல், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஏஐ தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி போலி வீடியோக்களை வெளியிடும் காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு https://ift.tt/zP6dYF1

படம்
மும்பை: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி போலி வீடியோக்களை காங்கிரஸ் வெளியிடுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டி உள்ளார். பாலிவுட் திரை பிரபலங்கள் பாஜகவுக்கு எதிராக பேசுவது போன்ற போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. அதோடு இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுவது போன்ற போலிவீடியோவும் பரவி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விமான நிலையம், மருத்துவமனைகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் https://ift.tt/jtQIpUA

படம்
நாக்பூர்: நாடு முழுவதும் விமான நிலையங்கள், மருத்துவமனைகள் உட்பட பல்வேறு இடங்களுக்கு நேற்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. நாட்டில் உள்ள விமான நிலையங்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) அலுவலகம், கிழக்கு மத்திய ரயில்வே, ஒரு வங்கி, அந்தமானில் உள்ள சுற்றுலா குழுமம், ஒரு வர்த்தக நிறுவனம் மற்றும் சில மருத்துவமனைகளுக்கு ‘666darktriad666@gmail.com’ என்ற இ-மெயில் முகவரியில் இருந்து நேற்று மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திஹார் சிறையில் கேஜ்ரிவாலை சந்தித்த மனைவி https://ift.tt/0HAtFnp

படம்
புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால் மற்றும் டெல்லி கல்வி அமைச்சர் ஆதிஷி இருவரும் சேர்ந்து திஹார் சிறையில் உள்ள அர்விந்த் கேஜ்ரிவாலை நேற்று சந்தித்துப் பேசினர். இதுகுறித்து அமைச்சர் ஆதிஷி நேற்று வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில் கூறியிருப்பதாவது: சிறையிலும் தன்னை பற்றி யோசிக்காமல் 2 கோடி டெல்லி மக்களை பற்றிய கவலையுடனே அர்விந்த் கேஜ்ரிவால் இருந்து வருகிறார். இன்றைய சந்திப்பின்போது டெல்லி அரசு பள்ளிகுழந்தைகளின் கல்வி நிலைகுறித்த தகவல்களை கேட்டறிந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடகாவை உலுக்கிய ஆபாச வீடியோ சர்ச்சை: தேவகவுடாவின் மகன், பேரன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு https://ift.tt/W0siy2k

படம்
பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள‌து. இந்நிலையில் அவரது வீட்டில் வேலை செய்த 48 வயது பெண் அளித்த புகாரின்பேரில், தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா, பேரன் பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கிழக்கு, தென் மாநிலங்களில் வரும் புதன் வரை வெப்ப அலை: வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை https://ift.tt/aME9nWD

படம்
புதுடெல்லி: வெப்ப அலை வீசுவது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசுகிறது. இதனால் தமிழகம், ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பிஹார், உத்தர பிரதேசம் மற்றும்மகாராஷ்டிராவில் பகல் நேரங்களில் வெப்பநிலை 41 டிகிரி முதல்45 டிகிரி செல்சியஸ் வரை செல்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜார்க்கண்ட்டில் பறவைக் காய்ச்சல் பரவுகிறது: 2 மருத்துவர்கள் உட்பட 8 பேரை தனிமைப்படுத்தி சிகிச்சை https://ift.tt/PqSn1Yo

படம்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவுகிறது. பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு சிகிச்சை அளித்த 2 கால்நடை மருத்துவர்கள் உட்பட 8 பேரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக் கப்படுகிறது. கடந்த 1996-ம் ஆண்டு சீனாவின் குவாங்டாங் பகுதியில் பறவைக் காய்ச்சல் (எச்5என்1 வைரஸ்) முதல்முறையாக கண்டறியப்பட்டது. இந்த காய்ச்சல் பரவுவதை தடுக்க உலகம் முழுவதும் இதுவரை 50 கோடி கோழி, பறவை, வாத்துகள் அழிக்கப்பட்டு உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்து அரசர்களை மட்டும் அவதூறாக பேசும் ராகுல் முகலாய மன்னர்களை விமர்சிக்காதது ஏன்? - பிரதமர் மோடி குற்றச்சாட்டு https://ift.tt/OLiRqcr

படம்
பெலகாவி: இந்து அரசர்களை பற்றி மட்டும் அவதூறாக பேசும் ராகுல் காந்தி, முகலாய மன்னர்களை விமர்சிக்காதது ஏன் என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார். கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, ‘‘ஒரு காலத்தில் அரசர்களும், ஆட்சியாளர்களும் மக்களின் நிலங்களை பறித்தனர். இதை காங்கிரஸ் கட்சி தடுத்து நிறுத்தியது. நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்து, ஜனநாயகத்தை காப்பாற்றியது. அரசியலமைப்பு சாசனத்தை வெற்றிகரமாக அமல்படுத்தியது’’ என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்: முக்கிய குற்றவாளியை சென்னைக்கு அழைத்து வந்து என்ஐஏ விசாரணை https://ift.tt/0KtHAma

படம்
சென்னை: பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை சென்னைக்கு அழைத்து வந்து என்ஐஏ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். குற்றவாளி தங்கியிருந்த விடுதி, பாழடைந்த கட்டிடம் உள்ளிட்டவற்றில் அதிகாரிகள் சோதனையும் நடத்தினர். பெங்களூருவில் உள்ள ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகத்தில் கடந்த மார்ச் 1-ம் தேதி குண்டு வெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்ற‌னர். சிசிடிவி கேமரா பதிவு மூலம் முக்கிய குற்றவாளி அடையாளம் காணப்பட்டார். மேலும், குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள கழிப்பிடத்தில் குற்றவாளி தனது தொப்பியை வீசியதும், சென்னையில் உள்ள வணிக வளாகத்தில் அந்த தொப்பி வாங்கப்பட்டதும் தெரியவந்தது. அதனடிப்படையில், கர்நாடகா, தமிழகம், உத்தர பிரதேசத்தில் 18 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இங்கு கிடைத்த முக்கிய தகவலின்படி, கர்நாடக மாநில...

“மக்களை பாதுகாக்கவே பாஜகவுடன் கூட்டணி” - சந்திரபாபு நாயுடு https://ift.tt/y1GmZvT

படம்
அமராவதி: மக்களை பாதுகாக்கவும், எதிர்காலத்தை காக்கவுமே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பதாக ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் சந்திரபாபு நாயுடு கூறியிருப்பதாவது: “ஆந்திராவின் வளர்ச்சியையும், எதிர்காலத்தையும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏற்கெனவே அழித்துவிட்டார். எனவே அதனை பாதுகாப்பதற்கான பொறுப்பு என்னுடையது. மாநிலம் ஒரு ஆழமான பொறியில் சிக்கியுள்ளது. இதற்கு முன்பு எந்தவொரு அரசாங்கமும் இப்படி செய்தது கிடையாது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“என்டிஏ கூட்டணிக்கான மக்கள் ஆதரவு எதிர்க்கட்சிகளை ஏமாற்றப் போகிறது” - பிரதமர் மோடி https://ift.tt/NWL5Ksl

படம்
புதுடெல்லி : மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மிக நன்றாக இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மிக நன்றாக இருந்தது. இன்று வாக்களித்த இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு நன்றி. என்.டி.ஏ.வுக்கு கிடைத்த இணையற்ற ஆதரவு எதிர்க்கட்சிகளை மேலும் ஏமாற்றப் போகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் நல்லாட்சியை வாக்காளர்கள் விரும்புகிறார்கள். இளைஞர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் என்.டி.ஏ.வுவுக்கான ஆதரவை வலுப்படுத்துகின்றனர்." என்று தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிலவரம்: திரிபுராவில் அதிகபட்சம்; உ.பி.யில் குறைவு https://ift.tt/VQdo7ty

படம்
புதுடெல்லி : மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் நேற்று (ஏப்.26) நடைபெற்றது. இரவு 10 மணி நிலவரப்படி 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக திரிபுராவில் 78.53 சதவீதம், மணிப்பூரில் 77.18 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதை தவிர, கேரளாவில் 65.78 சதவீதம், கர்நாடகா 68.26 சதவீதம், அசாம் 71.11 சதவீதம், பிஹார் 55.08 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னையில் நடந்த இதய அறுவை சிகிச்சை: தமிழகத்தில் மறுவாழ்வு பெற்ற பாகிஸ்தான் பெண் https://ift.tt/wYxQCGr

படம்
சென்னை : இதய நோயால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இந்தியர் ஒருவரின் இதய தானம் மூலம் புதிய வாழ்க்கையை பெற்றுள்ளார். அவரின் பெயர் ஆயிஷா ராஷன். அவருக்கு வயது 19. ஆயிஷா கடந்த பத்தாண்டுகளாக இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். 2014ம் ஆண்டே இதற்காக இந்தியா வந்த அவர், இதய செயலிழப்பை தவிர்க்க சிகிச்சை மேற்கொண்டார். அவருக்கு கருவி மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சீக்கிரமாகவே அந்த கருவி செயலிழக்க ஆயிஷா உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத அடிப்படையில் வாக்கு கேட்டதாக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப் பதிவு https://ift.tt/37zav1B

படம்
பெங்களூரு : தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக வேட்பாளரான தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத அடிப்படையில் வாக்கு கேட்டதாக வழக்குப் பதிவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி தனது எக்ஸ் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். அவரின் பதிவில், "மதத்தின் அடிப்படையில் வாக்கு கேட்டதற்காக தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார். பெங்களூரு ஜெயநகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சந்தேஷ்காலி விவகாரத்தில் 5 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு https://ift.tt/7XD5oJT

படம்
புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், நில அபகரிப்பு குற்றங்கள் தொடர்பான வழக்கில் 5 பிரமுகர்கள் மீது சிபிஐ முதல் எப்ஐஆர் பதிவு செய்துள்ளது. கொல்கத்தா அருகில் உள்ளது சந்தேஷ்காலி கிராமம். திரிணமுல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் சிலர் இந்த பகுதியில் உள்ள விளைநிலங்களை அபகரித்து மீன் வளர்ப்புக்குச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாகவும், உள்ளூர் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

2-ம் கட்ட மக்களவை தேர்தல்: கேரளா, கர்நாடகா உட்பட 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு https://ift.tt/yiuUN86

படம்
புதுடெல்லி: மக்களவை தேர்தலில் 2-ம் கட்டமாக கேரளா, கர்நாடகா உட்பட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களை சேர்ந்த 102 தொகுதிகளில் கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதைத் தொடர்ந்து, 2-ம் கட்டமாக கேரளா - 20 , கர்நாடகா- 14, ராஜஸ்தான் - 13, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் - தலா 8, மத்திய பிரதேசம் - 6,பிஹார், அசாம் - தலா 5, மேற்குவங்கம், சத்தீஸ்கர் - தலா 3, ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, மணிப்பூரில் தலா ஒரு தொகுதி என ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜக அரசை பிரிட்டிஷ் ஆட்சியுடன் ஒப்பிட்ட தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி! https://ift.tt/nbUCXqW

படம்
ஹைதராபாத்: மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசை பிரிட்டிஷ் ஆட்சியுடன் ஒப்பிட்டு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து வியாழக்கிழமை அன்று அவர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் தெரிவித்தது. “இந்தியாவை கைப்பற்றுவதற்கு முன்பாக பிரிட்டிஷ் நாட்டவர்கள் சூரத் நகரில் தான் தொழில் தொடங்கினர். அதே பாணியில் சூரத்திலிருந்து தொடங்கி நாட்டை கைப்பற்றினர் பிரதமர் மோடியும், அமித் ஷாவும். அதன் மூலம் மக்கள் பணத்தை கொள்ளையடித்து உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜெகன் மீதான கல்வீச்சு சம்பவம் ஒரு மாபெரும் நாடகம் - சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு https://ift.tt/W2HTN0E

படம்
ஸ்ரீகாகுளம்: ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளத்தில் ஒரு தேசிய ஆங்கில ஊடகத்திற்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த 5 ஆண்டு கால ஜெகனின்ஆட்சி, மக்களை மேலும் புண்படும்படி செய்து விட்டது. இந்த நிலையில் எனது மாநிலத்தையும், எனது மாநில மக்களையும் காப்பாற்றுவதை எனது முதல் கடமையாக கருதுகிறேன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

16 வயது சிறுவனை கைது செய்த பிரான்ஸ் போலீஸார்

படம்
பாரிஸ்: எதிர்வரும் பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி களத்தில் உயிரை துறக்க விரும்புவதாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட 16 வயது சிறுவனை பிரான்ஸ் நாட்டு தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். அதற்கான காரணம் குறித்து விரிவாக பார்ப்போம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்: மக்களவைத் தேர்தல் களத்தில் பேச்சுரிமை பறிக்கப்படுகிறதா? https://ift.tt/jomKguz

படம்
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் முன்பாக நம்முடைய மனதில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. குறிப்பாக, தேர்தலின்போது பேச்சுரிமை உறுதி செய்யப்படுகிறதா அல்லது பறிக்கப்படுகிறா என்ற கேள்வி பிரதானமாக எழுகிறது. ‘‘செல்வங்கள் பகிர்ந்து அளிக்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இதன்மூலம் சிறுபான்மையினர், ஊடுருவல்காரர்கள் பலன் அடைவார்கள்’’ என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் முயற்சித்தது” - பிரதமர் மோடி https://ift.tt/jrJmXuy

படம்
ஜெய்ப்பூர்: “பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை குறைத்து, அதை இஸ்லாமியர்களுக்கு வழங்க காங்கிரஸ் முயற்சி செய்தது” என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். ராஜஸ்தானின் டோங் நகரில் செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "பட்டியலின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை மதத்தின் அடிப்படையில் நிறுத்தவோ, பிரிக்கவோ அனுமதிக்க மாட்டோம் என்று உத்தரவாதம் அளிக்கிறேன். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தனது உரை ஒன்றில், நாட்டின் வளங்களை பெறுவதில் முஸ்லிம்களுக்கே முன்னுரிமை என்று தெரிவித்திருந்தார். இது ஒரு தற்செயல் நிகழ்வு இல்லை. இது வெறும் அறிக்கை மட்டும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தமே வாக்கு வங்கியும், சமரச அரசியலும்தான். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குவைத்தில் முதல்முறையாக இந்தி மொழி வானொலி சேவை

படம்
புதுடெல்லி: குவைத் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில் கூறியிருப்பதாவது. குவைத்தில் முதல்முறையாக இந்தி வானொலி சேவை தொடங்கப்பட்டுள்ளது. குவைத் வானொலியில் எஃப்.எம். 93.3 மற்றும் ஏ.எம். 96.3 ஆகிய அலைவரிசைகளில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப குவைத் தகவல் தொடர்பு அமைச்சகம் முன்னெடுத்த நடவடிக்கையை இந்திய தூதரகம் பாராட்டுகிறது. இதன் பொருட்டு முதல் நிகழ்ச்சி கடந்த 21 ஏப்ரல் அன்று இரவு 8:30 முதல் 9 மணி வரை ஒலி பரப்பு செய்யப்பட்டது. இந்த முன்னெடுப்பு இந்தியா-குவைத் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை பலப்படுத்தும். இவ்வாறு எக்ஸ் பதிவில் குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. . from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் வெப்ப அலை: டெல்லியில் தேர்தல் ஆணையம் அவசர ஆலோசனை https://ift.tt/IlEr1Ct

படம்
புதுடெல்லி: நாடு முழுவதும் வீசி வரும் வெப்ப அலையை சமாளிப்பது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர். நாட்டில் மக்களவை தேர்தல்7 கட்டங்களாக நடந்து வருகிறது. முதல்கட்டமாக, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்னும்6 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறாது; சிஏஏ ரத்து செய்யப்படாது’ - அமித் ஷா https://ift.tt/8JLv3aX

படம்
ராய்ப்பூர்: எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாது, சிஏஏ ரத்து செய்யப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை அன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அவர் இதனை தெரிவித்தார். “நாட்டின் சாமானிய மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் மற்றும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பேசி வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் நடந்து வரும் மக்களவை தேர்தலில் இருந்து எதிர்காலத்துக்கான புதிய பயணம் தொடக்கம்: பிரதமர் மோடி https://ift.tt/FI4YzVq

படம்
புதுடெல்லி: ‘‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. இதில் இருந்து எதிர்காலத்துக்கான புதிய பயணம் தொடங்கும் என நம்புகிறேன்’’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பகவான் மகாவீர் 2,550-வது ஜெயந்தி விழா டெல்லியில் உள்ளபாரத மண்டபத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘அதானி, அம்பானிக்கு தேசத்தின் சொத்துகள் விற்பனை’ - கார்கே காட்டம் https://ift.tt/8NRo5aH

படம்
போபால்: அதானி மற்றும் அம்பானிக்கு தேசத்தின் சொத்துகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார். “நமது நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா வசம் மிகப்பெரிய சலவை இயந்திரம் உள்ளது. முன்பு துணிகளை சலவை செய்ய இயந்திரம் பயன்படுத்துவது குறித்து நான் கேள்விப்பட்டுள்ளேன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய அமைச்சர் உதயநிதியை தண்டிக்க வேண்டும்: தெலங்கானா முதல்வர் கருத்து https://ift.tt/Gn6VoFw

படம்
ஹைதராபாத்: சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசியதற்காக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தண்டிக்க வேண்டும் என தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். தெலங்கானாவில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஆட்சி பீடத்தில் இருந்த பாரத் ராஷ்டிர சமிதி கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தவர் ரேவந்த் ரெட்டி. சட்டப்பேரவைத் தேர்தலின்போது தனது தொகுதி மட்டுமல்லாது மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 24 மணி நேரமும் சூறாவளி பிரச்சாரம் செய்து, காங்கிரஸை தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற அவர் காரணமாக அமைந்தார். அதனால், பல மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் இருந்தும், ரேவந்த் ரெட்டிக்கு, காங்கிரஸ் மேலிடம் முதல்வர் பதவி கொடுத்தது. இதனால், ரேவந்த் ரெட்டிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிறையில் மனைவியின் உணவில் டாய்லெட் க்ளீனர் கலப்பு: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் புகார் 

படம்
இஸ்லாமாபாத்: தனது மனைவிக்கு சிறையில் கொடுக்கப்பட்ட உணவில் டாய்லெட் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் திரவம் கலக்கப்பட்டதாக இம்ரான் கான் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார். அரசு ரகசியங்களை வெளியிட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதே போல பரிசுப்பொருள் தொடர்பான தோஷகானா வழக்கில் அவருக்கும் அவரது மனைவி புஸ்ரா பீவிக்கும் 14 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உத்தர பிரதேச பாஜக வேட்பாளர் உயிரிழப்பு: யோகி ஆதித்யநாத் இரங்கல் https://ift.tt/gcUFd9Y

படம்
லக்னோ : மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் தொகுதி பாஜக வேட்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான குன்வர் சர்வேஷ் சிங் உயிரிழந்தார். உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். நாட்டின் 18-வது மக்களவைக்கான தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று (ஏப்.19) நடந்து முடிந்தது. இதில் தமிழகம், புதுச்சேரி உட்பட ராஜஸ்தான் 12, உத்தர பிரதேசம் 8, மத்திய பிரதேசம் 6, மகாராஷ்டிரா, அசாம், உத்தராகண்ட் தலா 5, பிஹார் 4, மேற்கு வங்கம் 3, மணிப்பூர், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் தலா 2, சத்தீஸ்கர், காஷ்மீர், திரிபுரா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், லட்சத்தீவு, அந்தமானில் தலா ஒரு மக்களவை தொகுதி என நாடு முழுவதும் மொத்தம் 102 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு: வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முயற்சி https://ift.tt/kCrKNxf

படம்
இம்பால்: இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் நேற்று மக்களவை தேர்தலின்போது துப்பாக்கிச்சூடு, வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் முயற்சி, மின்னணு இயந்திரங்கள் உடைப்பு என வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதனால், பல வாக்குச்சாவடிகளில் தேர்தல் நிறுத்தப்பட்டது. மணிப்பூரில் சமவெளி பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் மைதேயி சமூகத்தினருக்கும் மலைப் பகுதிகளில் வசிக்கும் குகி-சோ பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டு, இனக்கலவரமாக வெடித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளை - இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவர் உட்பட 7 பேர் கைது

படம்
புதுடெல்லி: கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் இருந்து ஏர் கனடா விமானம் மூலம் கன்டெய்னர் ஒன்று பியர்சன் சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. அதில், 400 கிலோ தூய தங்க கட்டிகளும், 2.5 மில்லியன் கனடா டாலரும் இருந்தன. விமானநிலையத்தின் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த இந்த கன்டெய்னர் அன்றைய தினமே போலிஆவணம் மூலம் திருடப்பட்டது. இதுதொடர்பாக, காவல் துறை நடத்திய விசாரணையில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘வாக்களித்த அனைவருக்கும் நன்றி’ - முதல்கட்ட வாக்குப்பதிவு குறித்து பிரதமர் மோடி ட்வீட் https://ift.tt/Y03UoBS

படம்
சென்னை: முதல்கட்ட மக்களவைத் தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி என பிரதமர் மோடி, எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளது குறித்து விரிவாக பார்ப்போம். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உட்பட நாடு முழுவதும் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் வெள்ளிக்கிழமை அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் ஆர்வமாக தங்களது வாக்குகளை செலுத்தி இருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீர் கிராமத்தின் வாய்பேச முடியாத 3 சகோதரிகள் முதல்முறை வாக்களிக்க ஆர்வம் https://ift.tt/QIx3uyV

படம்
தோடா: ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள கந்தோ கிராமத்தைச் சேர்ந்த மூன்று வாய்பேச முடியாத சகோதரிகள் இன்று முதல் முறையாக வாக்களிக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். 2024 மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் தொகுதியில் நடைபெறுகிறது. இதில் பாஜக சார்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், முன்னாள் காங்கிரஸ் எம்பி சவுத்ரி லால் சிங், ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி சார்பாக முன்னாள் அமைச்சர் சரூரி உள்ளிட்ட 12 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகம் உட்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - முதல்கட்ட மக்களவைத் தேர்தல் தகவல்கள் https://ift.tt/8qkAOwI

படம்
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றாலும், 6 மணிக்குள் வாக்குச் சாவடிக்கு வந்தவர்கள் அனைவரும் வாக்களிக்கும் வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 18-வது மக்களவைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. தமிழகம், புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நடைபெறும் முதல்கட்ட வாக்குப்பதிவு குறித்த முக்கியத் தகவல்கள்... > இன்று (ஏப்.19) 102 மக்களவைத் தொகுதிகளுக்கு (பொது - 73, எஸ்சி -18, எஸ்டி - 11) பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இத்துடன் அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு 92 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அனைத்துக் கட்டங்களையும் விட அதிகப்பட்சமான தொகுதிகளை முதல் கட்டம் கொண்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடையும் (வாக்குப்பதிவு நிறைவடையும் நேரம் தொகுதிக்கேற்ப மாறுபடலாம்). from இந்து தமிழ் திசை : Ne...

யுத்தத்தின் வேதனையை சுட்டும் புகைப்படத்துக்கு 2024-க்கான ‘வேர்ல்ட் பிரஸ் போட்டோ’ விருது!

படம்
சென்னை: 2024-ம் ஆண்டுக்கான வேர்ல்ட் பிரஸ் போட்டோ விருதை வென்றுள்ளார் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்காக பணியாற்றி வரும் முகமது சலேம். இஸ்ரேல் - ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதலில் உயிரிழந்த 5 வயது குழந்தையின் உடலை கையில் ஏந்தியபடி வருந்தும் பெண்ணின் புகைப்படத்துக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தெற்கு காசாவின் கான் யூனிஸ் என்ற பகுதியில் அமைந்துள்ள நாசர் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது. அப்போது பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது. அந்த தாக்குதலில் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்கள் தேடி திரிந்த துயரமான நேரம் அது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேர்தலில் பாஜக 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கூட்டாக பேட்டி https://ift.tt/cWkwsl7

படம்
காஜியாபாத்: மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட பிரச்சாரம் நேற்று ஓய்ந்தது. கடைசி நாளான நேற்று, இண்டியா கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் பிரச்சாரம் செய்தனர். பின்னர் ராகுல் கூறியதாவது: உத்தரபிரதேசத்தில் இண்டியா கூட்டணி போட்டியிட வேண்டும் என முடிவு செய்தோம். இதற்காக திறந்த மனதுடன் தொகுதி பங்கீடு செய்து கொண்டோம். இந்த விவகாரத்தில் நெகிழ்வுத் தன்மையை காட்ட விரும்பினோம். அதனால்தான் கூட்டணி கட்சிக்கு கூடுதல் இடம் கொடுத்துளோம். இதை காங்கிரஸின் பலவீனமாக பார்க்கக் கூடாது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேர்தல் பத்திரம் குறித்த ட்வீட்டை தேர்தல் ஆணையம் நீக்க சொன்னது ஏன்? - காங்கிரஸ் கேள்வி https://ift.tt/ZvFqYiO

படம்
புதுடெல்லி: தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்ட பதிவினை நீக்கும் முடிவை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது ஏன் என புதன்கிழமை அன்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்த பிரச்சினைகள் அரசு தரப்பை தர்ம சங்கடத்துக்கு ஆழ்த்தியது தான் காரணமா என்றும் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சந்திரபாபு நாயுடு மற்றும் பிஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி ஆகியோரது எக்ஸ் தள பதிவுகளை தேர்தல் ஆணையம் நீக்க சொல்லியதாக எக்ஸ் நிறுவனம் தெரிவித்தது. நடத்தை விதிமுறைகளை மீறிய காரணத்துக்காக இந்த நடவடிக்கை என்றும் விளக்கம் தர சொல்லியுள்ளது. இந்த சூழலில்தான் இது குறித்து பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

28 ஆண்டுகளாக நடந்த வழக்கில் ஜெகன் கட்சி வேட்பாளருக்கு 18 மாதங்கள் சிறை https://ift.tt/vPHK32R

படம்
விசாகப்பட்டினம்: கடந்த 1996-ம் ஆண்டு ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், வெங்கடய்ய பாளையத்தில் 5 தலித்துகள் அவமானப்படுத்தப்பட்டனர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மேலவை உறுப்பினரும், தற்போதைய மண்டபேட்டா தொகுதியின் ஜெகன் கட்சியின் வேட்பாளருமான தோட்டா திருமூர்த்திலு உட்பட மொத்தம் 6 பேர் மீது தலித் வன்கொடுமை பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு கடந்த 28 ஆண்டுகளாக விசாகப்பட்டினம் நீதிமன்றத்தில் நடபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காங்கிரஸ், என்சி, பிடிபி ஆட்சியில் காஷ்மீரில் போலி என்கவுன்ட்டர்கள் நடைபெற்றன: அமித் ஷா குற்றச்சாட்டு https://ift.tt/DlFzwJY

படம்
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், ஜம்மு சம்பா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஜுகல் கிஷோர் ஷர்மாவுக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி (என்சி), மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) ஆகிய மூன்றும் வாரிசு அரசியல் கட்சிகள். அந்தக்கட்சித் தலைவர்கள் தங்கள் மகன்களுக்காகவும் மகள்களுக்காகவுமே உழைக்கிறார்கள். உங்களுக்காக அவர்கள் ஒருபோதும் உழைப்பதில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விவிபாட் இயந்திரத்தின் அனைத்து ஒப்புகை சீட்டுகளையும் எண்ணுவது சாத்தியமற்றது: உச்ச நீதிமன்றம் கருத்து https://ift.tt/oQhyXDr

படம்
புதுடெல்லி: காகித வாக்குச்சீட்டு முறையில் பல குறைபாடுகள் உள்ளன. அனைத்து விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணுவது சாத்தியமற்றது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ‘மீண்டும் காகித வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் அல்லது மின்னணு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்யும்போது வாக்காளருக்கு விவிபாட் இயந்திரம் மூலம் ஒப்புகைச்சீட்டு வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும்’ என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தான் சிறையில் 11 ஆண்டுக்கு முன்பு இந்தியரை அடித்துக் கொன்றவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை

படம்
புதுடெல்லி: பாகிஸ்தான் சிறையில் 11 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியரை அடித்துக் கொன்றவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். பஞ்சாப் மாநிலம் டார்ன் டரன் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள பிகிவின்ட் நகரைச் சேர்ந்தவர் சரப்ஜித் சிங். விவசாயியான இவரை எல்லை தாண்டிச் சென்றதாகக் கூறி பாகிஸ்தான் ராணுவம் கடந்த 1990-ம் ஆண்டு கைது செய்தது. லாகூர் மற்றும் பைசலாபாத்தில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமாக அமைந்த குண்டுவெடிப்பில் சரப்ஜித் சிங்குக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் தீவிர சோதனையில் ரூ.4,658 கோடி பணம், பொருள் பறிமுதல்: தமிழகத்தில் ரூ.460 கோடி பிடிபட்டதாக தகவல் https://ift.tt/Q5Z1wSX

படம்
சென்னை: மக்களவை தேர்தல் விரைவில் தொடங்க உள்ள நிலையில், கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நாடு முழுவதும் ரூ.4,658 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த 75 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், அதிக அளவிலான பணம், தங்கம் போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கியுள்ள 17 இந்தியர்களை சந்திக்க ஈரான் அனுமதி

படம்
புதுடெல்லி: ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் இருந்த 17 இந்தியர்களை சந்திக்க இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, கடந்த சில நாட்களாக போர் பதற்றம் அதிகரித்திருந்த சூழலில், இஸ்ரேலில் இயல்பு நிலை திரும்பத் தொடங்கி உள்ளது. ஈரான் - இஸ்ரேல் இடையே மோதல் முற்றியுள்ள சூழ்நிலையில் இஸ்ரேலுடன் தொடர்புடைய எம்எஸ்சி ஏரீஸ் என்ற சரக்கு கப்பலை ஈரானின் கடற்படையான இஸ்லாமிய புரட்சிக் காவல் படை கடந்த 13-ம் தேதி சிறைபிடித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஈரான் - இஸ்ரேல் மோதலை தணிக்க வேண்டும்: இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர்

படம்
புதுடெல்லி: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலை தணிக்க வேண்டும் என இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்கர்மேன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் என்ன சொல்லியுள்ளார் என்பதை விரிவாக பார்ப்போம். இஸ்ரேல் மீது ஈரான் கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் டரோன் குண்டுகளை வீசியது. சுமார் 5 மணி நேரம் நடந்த இந்த தாக்குதலில் 99 சதவீதத்தை நடுவானில் இடைமறித்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் அழித்தன. இந்த தாக்குதல் 3-ம் உலகம் போருக்கு வழிவகுக்கும் என இணையவாசிகள் பலர் அச்சம் தெரிவித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.42 கோடி பிணையத் தொகையை பெற்றுக்கொண்டு வங்கதேச சரக்கு கப்பலை விடுவித்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்

படம்
மொகதிசு: கடத்தப்பட்ட வங்கதேச சரக்கு கப்பலை, ரூ.42 கோடி பிணையத் தொகையை பெற்றுக் கொண்டு சோமாலிய கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர். வங்கதேசத்தை சேர்ந்த சரக்கு கப்பல் எம்.வி.அப்துல்லா. மொசாம்பிக் நாட்டில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு கடந்த மாதம் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலை சோமாலியா அருகே கடற்கொள்ளையர்கள் கடத்தினர். இந்த கப்பலை விடுவிப்பதற்கு, 5 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.42 கோடி) பேரம் பேசினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெண் ஐஏஎஸ் அதிகாரி அலுவலகத்தில் மகன் குதித்து விளையாடும் காணொலியால் சர்ச்சை https://ift.tt/EBFMN2t

படம்
புதுடெல்லி: பமேளா சத்பதி என்ற ஐஏஎஸ் அதிகாரி கடந்த வியாழன்று காணொலியுடன் கூடிய ஒரு எக்ஸ் பதிவு வெளியிட்டார். அந்த காணொலியில் அவரது மகன் ஐஏஎஸ் அதிகாரியின் அலுவலக அறை மேஜை மீது ஏறிக் குதித்துக் கொண்டிருந்தான். சூப்பர்மேன் டீ ஷர்ட் அணிந்து காட்சியளித்த அந்த சிறுவன் சினிமா கதாநாயகர்களின் பிரபல வசனங்களைப் பேசியபடி விளையாடினான். அப்போது ஐஏஎஸ்அதிகாரி பமேளா சத்பதி தனது பணியைச் செய்து கொண்டிருந்தார். இந்த காணொலியுடன் அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவு: இத்தனை ஆண்டுகள் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பருவகாலம், சிறுவனின் தாயாக ஆனப்பின்னர் உங்களை மிகவும் பயமுறுத்தக்கூடியதாக மாறிப்போகும். அதுதான் கோடை விடுமுறை. இவ்வாறு அவர் கூறினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விஜயவாடா பிரச்சாரத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன் மீது கல்வீச்சு https://ift.tt/ofumRTK

படம்
விஜயவாடா: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பஸ் யாத்திரை செய்து நேற்றிரவு விஜயவாடாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, கூட்டத்தில் இருந்து மர்ம நபர் நடத்திய கல் வீச்சால் அவரது இடது பாகம் நெற்றியில் சிறிய காயம் ஏற்பட்டது. ஆந்திராவில் மே மாதம் 13-ம் தேதி சட்டப்பேரவை மற்றும் மக்களவை தொகுதி களுக்கு ஒரே கட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி தற்போது கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 11 நாட்களாக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ‘நாங்களும் தயார்’ எனும் பெயரில் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தப்படலாம்; இஸ்ரேல், ஈரானுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம்: மத்திய வெளியுறவுத் துறை எச்சரிக்கை https://ift.tt/hv1CaLD

படம்
வாஷிங்டன்: இஸ்ரேல் மீது ஈரான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தும் அச்சம் நிலவுவதால், இந்தியர்கள் யாரும் இஸ்ரேல், ஈரான் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று மத்திய வெளியுறவுத் துறை எச்சரிக்கை விடுத் துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையில் மோதல் நடந்து வரும் நிலையில், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ்சில் உள்ள ஈரான் தூதரக வளாகம் மீது கடந்த 1-ம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஈரான் ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இதற்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஈரான் குற்றம்சாட்டியது. ஆனால் அதனை இஸ்ரேல் மறுத்தது. எனினும், இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசி தாக்குதல்: நெற்றியில் காயம் https://ift.tt/Z34WxYz

படம்
விஜயவாடா: விஜயவாடாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது மர்ம நபர் ஒருவர் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திர முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இன்று (ஏப்.13) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஓக் மரங்கள் வளர்த்த பசுமை புரட்சியாளர் முராரி லால் மறைவு https://ift.tt/ZdVCAMs

படம்
கோபேஸ்வர்: மூத்த சூழலியல் செயற்பாட்டாளர் முராரி லால் (91) வயோதிகம் காரணமாக நேற்று காலமானார். வனப் பாதுகாப்பை முன்னிறுத்தி பழங்குடியின மக்கள் மரங்களை கட்டித்தழுவி வெட்ட விடாமல் போராடிய சிப்கோ இயக்கம்இமயமலை அடிவாரத்தில் 1970களில் தொடங்கப்பட்டது. காடுகள் அழிக்கப்படுவதைத் தடுத்து மரங்களை பாதுகாத்துப் பராமரித்தல் போன்ற நோக்கங்களுடன் இந்த இயக்கத்தை நிறுவியவர் சுந்தர்லால் பகுகுணா. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி https://ift.tt/ElIo7dh

படம்
உதம்பூர்: ஜம்மு-காஷ்மீரில் விரைவில் சட்டப்பேர வைத் தேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மக்கள வைத் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் போட்டி யிடுகிறார். அந்த தொகுதிக்கு வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று உதம்பூரில் பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்