இடுகைகள்

மே, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அரசு நிறுவனங்கள், வங்கிகள் செய்திகள் அனுப்ப புதிய எண் https://ift.tt/5RjGrnZ

படம்
புதுடெல்லி: அரசு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் அழைப்பு விடுக்கவும், செய்திகள் அனுப்பவும் 160 என்ற தொடர் எண்ணை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளதாக மத்திய தொலைத்தொடர்புத் துறை (டிஓடி) தெரிவித்துள்ளது. மேலும், அழைப்புகள் மூலம் ஒரு முறை கடவுச் சொற்களை வழங்குவதற்கும், மார்க்கெட்டிங் அழைப்புகளை வேறுபடுத்திக் காட்டுவதற்கும் இந்த புதிய 160 என்ற தொடர் எண்ணை அறிமுகம் செய்துள்ளதாக டிஓடி தெரிவித்துள்ளது. அதேநேரம், டெலி மார்க்கெடிங் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 140 தொடர் எண்ணிலிருந்து மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர அழைப்புகள் தொடர்ந்து பெறலாம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அன்று நரேந்திர தத்தா...! இன்று நரேந்திர மோடி...! https://ift.tt/Bkr3TX5

படம்
1892-ம் ஆண்டு கன்னியாகுமரி வந்த விவேகானந்தர், கடல் நடுவே 500 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பாறையில் அமர்ந்து டிசம்பர் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை தியானம் செய்தார். பின்னர், அது விவேகானந்தர் பாறை என்று அழைக்கப்பட்டது. இதற்கு அப்போது எதிர்ப்பும் கிளம்பியது. அந்தப் பாறை தங்களுக்கு சொந்தம் என்று ஒரு பிரிவினர் உரிமை கொண்டாடினர். இதனால், சர்ச்சை எழுவதைத் தடுக்க 1963-ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த பக்தவத்சலம் தலைமையிலான தமிழக அரசு சார்பில், ‘இந்தப் பாறை விவேகானந்தர் தியானம் செய்த இடம்’ என்று எழுதப்பட்ட பெயர் பலகை நிறுவப்பட்டது. அதே 1963-ம் ஆண்டுதான் விவேகானந்தரின் நூற்றாண்டு. இதை முன்னிட்டு, அந்த பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கும் எதிர்ப்பு எழுந்தது. இதனால், சச்சரவுகள் ஏற்படும் என்றும் பாறையின் அழகு கெடும் என்றும் அப்போது மத்திய கலாச்சாரத்துறை அமைச்சராக இருந்த ஹுமாயூன் கபீர் கருதினார். அப்போதைய தமிழக அரசும் மண்டபம் எழுப்ப அக்கறை காட்டவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema...

நாடு திரும்பினார் பிரஜ்வல் ரேவண்ணா: விமானத்தில் நிலையத்தில் கைது https://ift.tt/UniKxgF

படம்
பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா இன்று ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்பினார். பெங்களூரு விமான நிலையத்தில் அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து பெங்களூரு திரும்புவதற்கான விமான டிக்கெட்டை பிரஜ்வல் முன்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து நேற்று (மே 30) முனிச் நகரில் இருந்து புறப்பட்ட அவர் இன்று நள்ளிரவில் பெங்களூரு திரும்பினார். கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு விசாரணைக் குழு தடுத்து நிறுத்தி கைது செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“இண்டியா வெல்லப் போகிறது” - காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி உறுதி https://ift.tt/IsT87RK

படம்
புதுடெல்லி: நாளை இறுதிகட்ட தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் நாடு முழுவதும் இறுதி மற்றும் 7-ம் கட்டமாக 57 தொகுதிகளில் நாளை நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று ஓய்ந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“ரஃபா மீதான தாக்குதல் ஆழ்ந்த கவலை அளிக்கிறது” - இந்திய வெளியுறவுத் துறை https://ift.tt/AHuDobq

படம்
புதுடெல்லி: ரஃபாவில் உள்ள தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத் துறை தனது நிலைபாட்டை தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், “ரஃபாவில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாம்கள் மீதான தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் ஆழ்ந்த கவலை அளிக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியில் உச்சபட்சமாக 126 டிகிரி வெப்பம்: பிஹாரில் மயங்கி விழுந்த மாணவர்கள் https://ift.tt/pnhXUjS

படம்
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள முங்கேஷ்புர் பகுதியில் நேற்று மதியம் 2.30 மணிக்கு உச்சபட்சமாக 126.14 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது. நாட்டிலேயே உச்சபட்ச வெப்பஅலை டெல்லியில் வீசி வருவதாக வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிக வெப்பநிலை பதிவானதால், கருவியில் கோளாறு ஏற்பட்டதா என்று ஆய்வு நடத்தி வருவதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். பிஹாரில் 107.6 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பத்துடன் கூடிய அனல் காற்று வீசியது. சில பகுதிகளில் ஆங்காங்கே பள்ளி மாணவர்கள் சுருண்டு, மயங்கி விழுந்தனர். பிறகு மருத்துவமனைகளில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

57 தொகுதிகளில் பிரச்சாரம் இன்று ஓய்கிறது: ஜூன் 1-ல் இறுதிகட்ட தேர்தல் https://ift.tt/4onfMc8

படம்
புதுடெல்லி: நாடு முழுவதும் இறுதி மற்றும் 7-ம் கட்டமாக 57 தொகுதிகளில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று ஓய்கிறது. இதையடுத்து அரசியல் தலைவர்கள் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், 6 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், 7-வதுமற்றும் இறுதி கட்டமாக 7 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள57 தொகுதிகளில் ஜூன் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஊழல் செய்ய வற்புறுத்தியதால் கர்நாடக அதிகாரி தற்கொலை: மூத்த அதிகாரிகள் 3 பேர் மீது வழக்கு https://ift.tt/F7ynaIu

படம்
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள கர்நாடக அரசின் வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தின் கண்காணிப்பாளராக சந்திரசேகரன் (50) பணியாற்றி வந்தார். நேற்றுமுன்தினம் தனது சொந்த ஊரான ஷிமோகாவுக்கு சென்ற இவர்,தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சந்திரசேகரன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் எழுதிய 6 பக்க கடிதத்தை ஷிமோகா பாஜக எம்எல்ஏ எஸ்.என்.சென்னபசப்பா பெங்களூருவில் நேற்று வெளியிட்டார். அதில், “கர்நாடக அரசின் வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தின் பல்வேறு கணக்குகளில் ரூ.187.3 கோடி மானியமாக உள்ளது. அதனை வெவ்வேறு கணக்குகளில் மாற்றி கொள்ளையடிக்க உதவுமாறு ஆணையத்தின் நிர்வாகஇயக்குநர் ஜி.பத்மநாபா, தலைமைகணக்காளர் பரசுராம் வற்புறுத்தி வந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் விவகாரம்: மத்திய அரசின் ஆலோசனை கூட்டம் ரத்து https://ift.tt/GzLAkDO

படம்
புதுடெல்லி: முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் நேற்று முன்தினம் நடக்க இருந்த ஆலோசனை கூட்டத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், எந்த காரணமும் கூறாமல் திடீரென ரத்து செய்துவிட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் கடந்த 1893-ம்ஆண்டு முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டது. கேரள எல்லை பகுதியான இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அணையை தமிழக பொதுப்பணி துறை பராமரித்து வருகிறது. பழமையான இந்த அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா நீண்ட காலமாக கோரி வருகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்குதொடரப்பட்டது. அணை வலுவாக இருப்பதை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று கடந்த 2014-ல் தீர்ப்பளித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரீமல் புயல் பாதிப்பு: வடகிழக்கில் கனமழை, நிலச்சரிவில் 31 பேர் உயிரிழப்பு https://ift.tt/xhFtuKC

படம்
ஐஸ்வால்: மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ரீமல் புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் கிழக்குப் பகுதியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய ரீமல் புயல், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் கடற்கரைகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கரையைக் கடந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே கரையை கடந்தது ‘ரீமல்’ புயல்: கனமழையால் 16 பேர் உயிரிழப்பு https://ift.tt/JzhuHos

படம்
கொல்கத்தா/ தாக்கா: மேற்கு வங்க மாநிலம் மற்றும் அண்டை நாடான வங்கதேசம் இடையே 'ரீமல்' புயல் நேற்று முன்தினம் இரவு கரையை கடந்தது. அப்போது, அதிகபட்சமாக 120 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. கனமழை, வெள்ளத்தால் மேற்கு வங்கத்தில் 6 பேரும், வங்கதேசத்தில் 10 பேரும் உயிரிழந்தனர். வங்கக்கடலில் உருவான 'ரீமல்' புயல் நேற்று முன்தினம் இரவு மேற்கு வங்க மாநிலம் மற்றும் அண்டை நாடான வங்கதேசம் இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. முன்னெச்சரிக்கையாக, மேற்கு வங்கத்தின் கடலோர பகுதிகளில் வசித்த 2 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். கொல்கத்தா சர்வதேச விமான நிலையம் 21 மணி நேரம் மூடப்பட்டது. 394 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் https://ift.tt/V2JKMy8

படம்
புதுடெல்லி: நாட்டின் பெரும்பாலான மானாவாரி விவசாய பகுதிகளை உள்ளடக்கிய பருவமழை மைய மண்டலத்தில் தென்மேற்குப் பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு ஜூன் - செப்டம்பர் மாதங்களுக்கான தென்மேற்கு பருவமழையின் தொலைநோக்கு முன்னறிவிப்பு கண்ணோட்டத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“ஜூன் 1 நடக்கும் இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன்” - மம்தா பானர்ஜி திட்டவட்டம் https://ift.tt/v7pUjru

படம்
கொல்கத்தா: ஜூன் 1ஆம் தேதி நடக்க உள்ள இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் தன்னால் பங்கேற்க இயலாது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். வரும் ஜூன் 1ஆம் தேதி 7வது மற்றும் இறுதிகட்ட மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதன் பிறகு வரும் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை முன்னிட்டு ஜூன் 1 அன்று ஆலோசனை நடத்த கூட்டணி கட்சியினருக்கு இண்டியா கூட்டணி தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதிக்கு கொலை மிரட்டல்: டெல்லி போலீஸில் புகார் https://ift.tt/E1Bm9iG

படம்
புதுடெல்லி: ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் நேற்று வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது: ஆம் ஆத்மி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் திட்டமிட்டு எனக்கு எதிராக தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். இந்த நிலையில், யூடியூபர் துருவ் ரதி ஒளிபரப்பிய எனக்கு எதிரான ஒருதலைப்பட்சமான வீடியோ நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது. எனக்கு எதிராக கொலை, பாலியல் மிரட்டல்கள் தொடர்ந்து அதிகரித்து உள்ளன. நான் கொடுத்த புகாரை வாபஸ் பெற நெருக்கடி கொடுக்க கட்சித் தலைமை முயற்சித்து வருகிறது. யூடியூபர் துருவ் ரதியை தொடர்பு கொண்டு எனது தரப்பு விளக்கத்தை அளிக்க முயற்சித்த போதிலும் அவர் எனது அழைப்புகளையும், செய்திகளையும் புறக்கணித்தது ஏமாற்றமளித்தது. இதுகுறித்து, நான் டெல்லி போலீஸில் புகார் அளிக்கிறேன். அவர்கள் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். எனக்கு ஏதாவது விபரீதம் நடந்தால் அதை தூண்டியது யார் என்பது எங்களுக்கு தெரியும். இவ்வாறு ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thi...

டெல்லி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 7 குழந்தைகள் பரிதாப உயிரிழப்பு https://ift.tt/B9MZjpF

படம்
புதுடெல்லி: டெல்லியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட பயங்கரதீ விபத்தில் 7 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. கிழக்கு டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் ‘நியூ பார்ன்பேபி கேர்’ என்ற குழந்தைகள் மருத்துவமனை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 11.32 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அருகில் இருந்த பொதுமக்களும், ஷகீத் சேவா தளம் என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்களும் மருத்துவமனையின் பின்புறம் வழியாக உள்ளே சென்று பல குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். தகவல் கிடைத்து தீயணைப்பு துறையின் 16 வாகனங்களும் சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வாக்களிப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த 500 கிலோ மாம்பழங்களை கொண்டு மணல் சிற்பம் https://ift.tt/C9ZmlW3

படம்
பூரி: நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. நேற்று 6-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. வரும் ஜூன் 1-ம் தேதி 7-ம் கட்டவாக்குப் பதிவு நடைபெற உள்ளது.4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில் வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 500 கிலோ மாம்பழங்களைக் கொண்டு மணற் சிற்பத்தை சுதர்சன் பட்நாயக் உருவாக்கியுள்ளார். 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ‘உங்கள் வாக்கு உங்கள் குரல்’ என்று எழுதப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இதுவரை இல்லாத அளவில் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார் மோடி: அமெரிக்க நிறுவன சிஇஓ நம்பிக்கை

படம்
நியூயார்க்: இந்திய வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவில் பெரும்பான்மை பெற்று பிரதமர் மோடி ஆட்சி அமைப்பார் என்று அமெரிக்காவின் ‘இண்டியா பர்ஸ்ட் க்ரூப்’ நிறுவனத்தின் சிஇஓ ரான் சோமர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் சார்பில் ஏற்பாடுசெய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்ட ரான் சோமர்ஸ் பேசியதாவது: இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 140 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நாட்டின் தேர்தல்நடைமுறை வியப்பைத் தருகிறது. உலகமே இந்தியாவின் தேர்தலை உற்று நோக்குகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

58 மக்களவை தொகுதிகளுக்கான 6-ம் கட்ட தேர்தலில் 59% வாக்குப்பதிவு https://ift.tt/NqCUuxF

படம்
புதுடெல்லி: ஆறாம் கட்டமாக 58 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் 58.82 சதவீத வாக்குகள் பதிவாகின. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 ஆகிய தேதிகளில் 5 கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன. இதன்படி 428 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

6-வது கட்ட மக்களவை தேர்தல்: டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்களில் 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு https://ift.tt/pRoxVIK

படம்
புதுடெல்லி: நாடு முழுவதும் 6-ம் கட்டமாக 58 தொகுதிகளில் இன்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 ஆகிய தேதிகளில் 5 கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில், 6-வது கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. அதன்படி, உத்தர பிரதேசத்தில் 14, ஹரியாணாவில் 10, மேற்கு வங்கத்தில் 8, பிஹாரில் 8, டெல்லியில் 7, ஒடிசாவில் 6, ஜார்க்கண்டில் 4, காஷ்மீரில் 1 தொகுதி என 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“டெல்லியில் இருந்து ஆம் ஆத்மி தலைவர்கள் பஞ்சாபை கட்டுப்படுத்துகின்றனர்” - பிரதமர் மோடி https://ift.tt/EdnAsvT

படம்
குர்தாஸ்பூர்: டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பஞ்சாப் மாநிலத்தை கட்டுப்படுத்தி வருவதாக வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் நகரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் அவர் தெரிவித்தது. “பஞ்சாப் மாநிலத்தில் ரிமோட் கன்ட்ரோல் ஆட்சி நடந்து வருகிறது. இது துரதிருஷ்டவசம். டெல்லி தர்பாரில் உள்ள ஆம் ஆத்மி தலைவர்கள் அதை செய்து வருகின்றனர். பஞ்சாப் மாநில முதல்வரால் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புனே கார் விபத்து: இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் https://ift.tt/HS3zrs7

படம்
புனே: கடந்த 19-ம் தேதி அதிவேகமாக சொகுசு காரை இயக்கி இருவரது உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவன், தற்போது சிறார் சீர்திருத்த முகாமில் உள்ளார். இந்நிலையில், இந்த வழக்கில் தகுந்த நேரத்தில் விபத்து குறித்த தகவலை கொடுக்க தவறிய காவலர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். புனேவின் கல்யாணி நகர் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காரை இயக்கி, முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது சிறுவன் மோதினார். இதில் ஐடி ஊழியர்களான அனீஷ் அவாதியா (24), அஸ்வினி கோஸ்டா (24) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“பிரஜ்வல் வழக்கில் ஒத்துழைக்கவில்லை” - மத்திய அரசு மீது க‌ர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் புகார் https://ift.tt/Dk7HS1r

படம்
பெங்களூரு: பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என க‌ர்நாடக உள்துறை அமைச்சர் ப‌ரமேஸ்வர் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் ஆபாச‌ வீடியோக்கள் கடந்த 26-ம் தேதி வெளியானது. அவரது வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பேர் பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேஜ்ரிவாலின் வயதான பெற்றோரை அலைக்கழிப்பதா? - மத்திய அரசு மீது டெல்லி அமைச்சர் ஆதிஷி குற்றச்சாட்டு https://ift.tt/be2PQp3

படம்
புதுடெல்லி : ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக அர்விந்த் கேஜ்ரிவாலின் பெற்றோர் மற்றும் மனைவியிடம் டெல்லி போலீஸ் குறுக்கு விசாரணை நடத்துவது பற்றி டெல்லிபோலீஸ் தரப்பு கூறியதாவது: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மலிவால் அளித்த புகாரின் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னதாக தான் கேஜ்ரிவாலின் பெற்றோர் மற்றும் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்ததாக ஸ்வாதி மலிவால் விசாரணையில் தெரிவித்தார். ஆகவேதான் அவர்களிடம் விசாரணை நடத்த டெல்லி போலீஸ் 2 நாள் அவகாசம் கேட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பூத்வாரியாக வாக்குப்பதிவு விவரம் வெளியிட முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் https://ift.tt/AqQ1IGD

படம்
புதுடெல்லி: பூத்வாரியாக முகவர்களுக்கு வழங்கப்படும் வாக்குப்பதிவு விவரம் அடங்கிய 17சி படிவத்தை வெளியிடுவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 17சி படிவ விவரங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்பது தேர்தல் ஆணைய சட்டவிதிகளின் படி கட்டாயம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு விவரங்களில் முரண்பாடு இருப்பதாக கூறி ஏடிஆர், காமன் காஸ் ஆகிய தொண்டு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கில் 2 அமைப்புகளும் புதிதாக ஒரு மனுவை சமீபத்தில் தாக்கல் செய்தன. அதில் கூறப்பட்டுள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜெகன் அரசின் ரூ.1,500 கோடி பாக்கியால் ஆந்திராவில் இலவச மருத்துவ காப்பீடு முடக்கம்: பொதுமக்கள் கடும் அவதி https://ift.tt/EtJm6NO

படம்
அமராவதி: ஆந்திராவில் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வந்த இலவச மருத்துவ காப்பீடு திட்ட சேவைகள் நேற்று முதல் முடங்கின. ஜெகன் அரசு ரூ.1,500 கோடி வரை பாக்கி வைத்துள்ளதால் அரசுடன் நடந்த பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்தது. இதனால், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஆந்திர மாநிலத்தில் முதன் முறையாக ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்தபோது, ’ராஜீவ் ஆரோக்கிய ஸ்ரீ’ எனும் இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்தினார். இதன்மூலம் ஆயிரக்கணக்கான ஏழை,நடுத்தர வர்க்க குடும்பத்தினர் இலவசமாக கார்ப்பரேட் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாலஸ்தீன அரசை அங்கீகரித்த ஐரோப்பிய நாடுகளில் இருந்து தூதரை திரும்ப பெற்றது இஸ்ரேல்

படம்
டெல் அவிவ்: பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக ஐரோப்பிய நாடுகளான அயர்லாந்து, நார்வே,ஸ்பெயின் ஆகியவை அறிவித்துள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடுகளிலிருந்து தனது தூதர்களை திரும்பப் பெறுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல்ராணுவம் கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த இருதரப்பு மோதலில் அப்பாவிகள் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரச்சாரத்தின்போது சாதி, மத பேச்சுகளை தவிர்க்க வேண்டும்: பாஜக, காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் https://ift.tt/Hg9F3MT

படம்
புதுடெல்லி: தேர்தல் பிரச்சாரங்களின்போது சாதி, மதம் குறித்த வெறுப்பு பேச்சுகளை தவிர்க்க வேண்டும் என்று பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் தேர்தல் பாரம்பரியத்தை பாதிக்கக்கூடிய வகையில் பிரச்சாரம் மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தலை 7 கட்டங்களாக நடத்தி முடிக்க திட்டமிட்ட தேர்தல் ஆணையம் இதுதொடர்பான அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. திட்டமிட்டபடி, மக்களவை தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. வரும் 25-ம் தேதி 6-ம் கட்ட வாக்குப்பதிவும், ஜூன் 1-ம் தேதி 7-வது கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புரி ஜெகந்நாதர் குறித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்து 3 நாட்கள் விரதம்: சாம்பித் பத்ரா அறிவிப்பு https://ift.tt/4KVgzB9

படம்
புவனேஸ்வர்: புரி ஜெகந்நாதர் குறித்து தான் வெளியிட்ட கருத்துக்கு வருத்தம் தெரிவித்து 3 நாட்கள் விரதம் இருக்கப் போவதாக பாஜக மூத்த தலைவரும், வேட்பாளருமான சாம்பித் பத்ரா தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் புரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளராக சாம்பித் பத்ரா களமிறங்கியுள்ளார். இதையொட்டி நேற்று முன்தினம் புரி வந்த பிரதமர் மோடி, மிகப்பிரம்மாண்டமான வாகன பேரணியில் கலந்துகொண்டார். வாகனப் பேரணி முடிந்த நிலையில், செய்தியாளர்களிடம் சாம்பித் பத்ரா பேசும்போது புரி ஜெகந்நாதர் பிரதமர் மோடியின் தீவிர பக்தர் என்று தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடந்த தேர்தலைவிட பாஜகவுக்கு கூடுதல் இடம்: தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கணிப்பு https://ift.tt/tRbs1gx

படம்
புதுடெல்லி: தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்கும் நிறுவனத்தை நடத்தி வரும் தேர்தல் வியூக நிபுணரா பிரசாந்த் கிஷோர் நேற்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று நான் கடந்த சில வாரங்களாகவே கூறி வருகிறேன். 2019-ல் பெற்ற இடங்களைப் போலவோ (303 இடங்கள்) அல்லது அதை விட சற்று கூடுதலாகவோ பாஜக பிடிக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அனுமதி பெறாவிட்டால் சிலந்தி ஆற்றில் தடுப்பணை பணியை நிறுத்த வேண்டும்: கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு https://ift.tt/iCgGdcz

படம்
சென்னை: சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு கேரள அரசு உரிய அனுமதி பெற்றுள்ளதா? இல்லாவிட்டால், கட்டுமானப் பணியை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், தேவிகுளம் அருகே உள்ள பெருகுடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசுமேற்கொண்டிருப்பதாக தகவல்வெளியானது. இதன் காரணமாக,திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 55 ஆயிரம் ஏக்கரில் விவசாயபாசனம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், தடுப்பணை கட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கேரள அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தவேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

8 மாநிலங்களில் 49 தொகுதிகளில் நடைபெற்ற 5-ம் கட்ட மக்களவை தேர்தலில் 58% வாக்குப்பதிவு https://ift.tt/yaxH0Sh

படம்
புதுடெல்லி: நாடு முழுவதும் 8 மாநிலங்களில் 49 தொகுதிகளில் நேற்றுநடைபெற்ற 5-ம் கட்ட மக்களவை தேர்தலில் 57.57 சதவீத வாக்குகள் பதிவாகின. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. ஏப்ரல் 19, 26,மே 7, 13 ஆகிய நாட்களில் 4 கட்ட தேர்தல் ஏற்கெனவே முடிந்த நிலையில், 5-வது கட்டதேர்தல் நேற்று நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஈரான் அதிபர் உயிரிழப்பு: இடைக்கால அதிபர் நியமனம் முதல் இஸ்ரேல் மறுப்பு வரை - முழு பின்னணி

படம்
டெஹ்ரான்: ஈரானில் உள்ள மலைப் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானதில், அந்நாட்டு அதிபர் சையது இப்ராஹிம் ரெய்சி (63) உயிரிழந்தார். ஹெலிகாப்டரில் உடன் சென்ற வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்ளிட்ட 8 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர். ஈரான் - அசர்பைஜான் இடையே ஓடும் அராஸ் நதியின் குறுக்கே இரு நாடுகளும் இணைந்து பிரம்மாண்ட அணை கட்டிஉள்ளன. அசர்பைஜானின் கோமர்லு நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற திறப்பு விழாவில், ஈரான் அதிபர் சையது இப்ராஹிம் ரெய்சி, அசர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியெவ் உள்ளிட்டோர் பங்கேற்று அணை மதகுகளை திறந்துவைத்தனர். விழாவை முடித்துக் கொண்டு, ஈரான் அதிபர் ரெய்சி உள்ளிட்டோர் கோமர்லு நகரில் இருந்து ஈரானின் டேப்ரிஸ் நகருக்கு 3 ராணுவ ஹெலிகாப்டர்களில் புறப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“புரி ஜெகந்நாதரே மோடியின் பக்தர்தான்” - சர்ச்சை கருத்துக்குப் பின்  வருத்தம் தெரிவித்த பாஜக சம்பித் பத்ரா  https://ift.tt/B9jRTpg

படம்
புரி: புரி ஜெகந்நாதரே பிரதமர் நரேந்திர மோடியின் பக்தர்தான் என்று பாஜக மூத்த தலைவர் சம்பித் பத்ரா பேசியது சர்ச்சையான நிலையில், தற்போது அதுகுறித்து அவர் மன்னிப்புக் கோரியுள்ளார். ஒடிசாவின் புரி மக்களவை தொகுதிக்கான வாக்குப் பதிவு வரும் மே 25ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு புரியில் இன்று (மே 20) நடைபெற்ற ரோட் ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்றார். முன்னதாக புரி ஜெகந்நாதர் கோயிலில் வழிபாடு நடத்தினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

8 மாநிலங்களில் 5-ம் கட்ட மக்களவை தேர்தல்: 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு https://ift.tt/vnDBGxJ

படம்
புதுடெல்லி: நாடு முழுவதும் 6 மாநிலங்கள்,2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் 5-ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, பியூஷ் கோயல் உட்பட மொத்தம்695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒடிசாவின் 35 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவும் நடக்கிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆம் ஆத்மி பெண் எம்.பி.யை தாக்கிய வழக்கில் கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைது https://ift.tt/dcEMjIN

படம்
புதுடெல்லி: ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் நேற்று கைது செய்யப்பட்டார். கடந்த 13-ம் தேதி டெல்லியில் உள்ள கேஜ்ரிவால் வீட்டுக்கு ஸ்வாதி மாலிவால் சென்றார். அப்போது, கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார், ஸ்வாதியை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் எழுத்துப்பூர்வமாக டெல்லி சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் பிபவ் குமார் மீது கொலை மிரட்டல், மானபங்கம், தாக்குதல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னையிலிருந்து இஸ்ரேலுக்கு சென்ற ஆயுத கப்பலுக்கு ஸ்பெயினில் அனுமதி மறுப்பு

படம்
மேட்ரிட் (ஸ்பெயின்): சென்னையிலிருந்து இஸ்ரேலுக்கு சென்ற ஆயுதக் கப்பல், ஸ்பெயின் துறைமுகத்தில் நின்று செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் 27 டன் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. டென்மார்க்கை சேர்ந்த சரக்கு கப்பல் மரியான் டேனிகா. இந்த கப்பல் சென்னையிலிருந்து கன்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு கடந்த மாதம் 8-ம் தேதி புறப்பட்டு இஸ்ரேலின் ஹைபா துறைமுகத்தை நோக்கி சென்றது. இந்த கப்பலில் சித்தார்த்தா லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனம் கன்டெய்னர்களை அனுப்பியுள்ளது. அந்த கன்டெய்னர்களை இஸ்ரேல் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் (ஐசிஎல்) நிறுவனம் பெறுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“நானும் ராகுலும் போட்டியிட்டால் அது பாஜகவுக்கு சாதகமாக அமையும்” - பிரியங்கா காந்தி https://ift.tt/dSHCDBP

படம்
புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் போட்டியிடாதது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி. இந்த தேர்தலில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சிக்காக தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் அது குறித்து அவர் விளக்கம் தந்துள்ளார். “ரேபரேலி தொகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நான் பரப்புரை மேற்கொண்டு வருகிறேன். எங்கள் குடும்பத்துக்கு ரேபரேலியுடன் இணக்கமான உறவு உண்டு. அதனால் இங்கு நாங்கள் வர வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பார்கள். அவர்களுடன் கலந்து பேச வேண்டும் என்றும் விரும்புவார்கள். இங்கு நடைபெறும் தேர்தலில் எங்களால் ரிமோட் கன்ட்ரோல் வைத்து கொண்டுள்ளது போல வெல்ல முடியாது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘கன்னத்தில் அறைந்தார்.. வயிற்றில் உதைத்தார்’ - கேஜ்ரிவாலின் செயலர் குறித்து ஆம் ஆத்மி பெண் எம்.பி. வாக்குமூலம் https://ift.tt/TIo4Yfx

படம்
புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார், தன்னை பலமுறை கன்னத்தில் அறைந்ததாகவும், மார்பு, வயிற்றில் எட்டி உதைத்ததாகவும் ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாஜிஸ்திரேட்டிடம் அவர் ரகசிய வாக்குமூலம் அளித்தார். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். அவரை சந்திக்க ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் கடந்த 13-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கேஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார், ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக கூறப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காங்கிரஸ், சமாஜ்வாதி ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலை இடித்து விடுவார்கள்: பிரதமர் மோடி விமர்சனம் https://ift.tt/pjxTvQm

படம்
பாராபங்கி: ‘‘காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், அயோத்தி ராமர் கோயிலை புல்டோசர் மூலம் இடிப்பார்கள்’’ என்று உத்தர பிரதேச மாநிலம் பாராபங்கியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார். உத்தர பிரதேச மாநிலம் பாராபங்கியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியில் கன்னையா குமார் மீது தாக்குதல்: பாஜக வேட்பாளர் மீது குற்றச்சாட்டு https://ift.tt/OlLr3mJ

படம்
புதுடெல்லி : தேர்தல் பிரச்சாரத்தின் போது தன் மீது பாஜக வேட்பாளர் அனுப்பிய ஆட்கள் தாக்குதல் நடத்தியதாக காங்கிரஸ் வேட்பாளர் கண்ணையா குமார் குற்றம்சாட்டியுள்ளார். வடகிழக்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக களம் காண்கிறார் கன்னையா குமார். டெல்லியில் உள்ள ஏழு மக்களவை தொகுதிகளில் ஒன்றான இதில், பாஜக சார்பில் இரண்டு முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மனோஜ் திவாரி போட்டியிடுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“நான் என்ன நினைக்கிறேனோ அதை பிரதமர் பேசுவார்” - ராகுல் காந்தி கிண்டல் @ ரேபரேலி https://ift.tt/mlN1uE8

படம்
ரேபரேலி (உத்தரப் பிரதேசம்): தான் விரும்பபவற்றை எல்லாம் பிரதமர் மோடியை பேசவைக்க முடியும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் ரேபரேலி தொகுதிக்கு வரும் 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தொகுதியில் இன்று (மே 17) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் பேசியதாவது: நான் என்னவெல்லாம் விரும்புகிறேனோ பிரதமரை அதை என்னால் பேச செய்யமுடியும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சுற்றுலா பயணியின் வாட்சை ஒப்படைத்த இந்திய சிறுவனுக்கு துபாய் காவல் துறை பாராட்டு

படம்
துபாய்: துபாயில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் தொலைந்தபொருட்களை எளிதில் கண்டுபிடிக்க உதவவும் ‘ஸ்மார்ட் காவல்நிலையம்’ என்ற ஆன்லைன் சேவையை காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தனது தந்தையோடு துபாய் வீதிகளில் சிறுவன் முகமது அயன் யூனிஸ் உலாவியபோது விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை வழியில் கண்டான். உடனே ‘ஸ்மார்ட் காவல் நிலையம்’ இணையதளத்தில் இதுகுறித்து பதிவிட்டான். இதையடுத்து, துபாய் காவல் துறை அதிகாரிகள் முகமது அயனிடமிருந்து கைக்கடிகாரத்தைப் பெற்றுக் கொண்டனர். அதனை துபாய்க்குச் சுற்றுலா வந்தபோதுதொலைத்த பயணிக்கு அனுப்பி வைத்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்: காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பரிந்துரை https://ift.tt/QHZgvuU

படம்
பெங்களூரு: காவிரியில் தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் 96-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், குழுவின் செயலாளர் டி.டி.ஷர்மா, உறுப்பினர் கோபால்ராய், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத் துறை அதிகாரிகளும், வானிலை ஆய்வு மைய நிபுணர்களும் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர். கூட்டத்தின் தொடக்கத்தில் 4 மாநிலங்களில் காவிரி பாசனப் பகுதிகளில் அமைந்துள்ள அணைகளின் நீர்மட்டம், நீர்வரத்து, காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பதிவான மழையின் அளவு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சாப்பாட்டுக்கு முன்பும் பின்பும் டீ, காபி குடிப்பதை தவிர்க்கவும்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுரை https://ift.tt/meCz1sl

படம்
புதுடெல்லி : உடலுக்கு இரும்புச் சத்து வேண்டும் என்றால் சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிட்ட பின்பும் குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு டீ, காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுரை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய ஊட்டச்சத்து மையத்துடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உணவுமுறை வழிகாட்டல் தொடர்பாக 17 புதிய விதிமுறைகளை கூறியுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் பல வகை உணவு மற்றும் வழக்கங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. அவற்றில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆசிய அமெரிக்கர் மீதான வெறுப்பு அதிகரிப்பு: அறக்கட்டளை ஆய்வில் தகவல்

படம்
வாஷிங்டன்: ஆசிய பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து அமெரிக்காவில் குடியேறிய ஆசிய அமெரிக்கர்கள் மீது வெறுப்புணர்வு அதிகரித்து வருவது சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆசிய அமெரிக்கன் அறக்கட்டளை ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவில் வாழும் ஆசிய அமெரிக்கர்கள், பூர்வீக ஹவாய் மக்கள் மற்றும் அமெரிக்காவில் உள்ள பசிபிக் தீவுவாசிகள் (ஏஏஎன்எச்பிஐ) நிலை குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் நாடு முழுவதிலுமிருந்து 6,272 பேர் பங்கேற்றனர். அப்போது ஏஏஎன்எச்பிஐ சமூகம் பெரும் பாகுபாடுக்குள்ளானது தெரியவந்தது. அதன்படி, கடந்த 12 மாதங்களில் 32 சதவீத ஆசிய அமெரிக்கர்கள் அவதூறுகளுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் 29 சதவீதம் பேர் துஷ்பிரயோகம் மற்றும் வாய்மொழி துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி போல பாகிஸ்தானுக்கும் வலிமையான தலைவர் தேவை: அமெரிக்கவாழ் பாக். தொழிலதிபர் கருத்து

படம்
வாஷிங்டன்: தற்போதைய சூழலில் பாகிஸ்தானுக்கும் நரேந்திர மோடி போல வலிமையான தலைவர் தேவை என அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தானிய தொழிதிபர் சஜித் தரார் கருத்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பிறந்த சஜித் தரார் 1990-களில் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்து குடியுரிமை பெற்றவர். குடியரசு கட்சியைச் சேர்ந்த அவர் டிரம்ப்பின் ஆதரவாளர். பாகிஸ்தான் ஆளும் கட்சி மற்றும் தொழிலதிபர்களிடையேயும் தராருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தென்மேற்கு பருவமழை எப்போது? - இந்திய வானிலை மையம் அறிவிப்பு https://ift.tt/HaWKXDu

படம்
புதுடெல்லி: தென்மேற்கு பருவமழை வரும் மே 31ம் தேதி கேரளாவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இது மழைக்காலத்தின் தொடக்கத்தைக் குறிப்பதாகவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வந்தது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்து வெயில் சுட்டெரித்தது. வெப்ப அலைகள் தற்போது குறைந்து, ஒருசில பகுதிகளில் மழை தலைகாட்டத் தொடங்கியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வாராணசியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்: 12 மாநில முதல்வர்கள், கூட்டணி தலைவர்களுடன் பேரணி https://ift.tt/QSpebjP

படம்
வாராணசி: மக்களவைத் தேர்தலில் வாராணசி தொகுதியில் போட்டியிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். முன்னதாக கங்கை கரையில் வேத மந்திரங்கள் ஒலிக்க பூஜை செய்த பிரதமர் மோடி, பின்னர் கால பைரவரை வழிபட்டார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடியுடன், 12 மாநில முதல்வர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13 ஆகிய தேதிகளில் 4 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து உள்ளன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் உத்தரபிரதேச மாநிலம் வாராணசி தொகுதியில் 7-வது மற்றும் இறுதி கட்டமாக ஜூன் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

DC vs LSG | 19 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி @ ஐபிஎல் https://ift.tt/8mXlkKI

படம்
புதுடெல்லி: இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 19 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

2 மாதங்களில் விதிமீறல் நடவடிக்கைகள் என்னென்ன? - தேர்தல் ஆணையம் பட்டியல் https://ift.tt/4fsqYJM

படம்
புதுடெல்லி: கடந்த இரண்டு மாதங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் 2-வது அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய இந்த தேர்தல், ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்