இடுகைகள்

ஏப்ரல், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தின் புதிய தலைவராக ‘ரா’ முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி நியமனம் https://ift.tt/skG59YP

படம்
புதுடெல்லி: பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் (என்எஸ்ஏபி) நேற்று மாற்றியமைக்கப்பட்டது. இதன் புதிய தலைவராக ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் (ரா) முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த வாரியத்தில், முப்படைகளில் இருந்து ஓய்வுபெற்ற 3 பேர், 2 ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் இந்திய வெளியுறவு பணியிலிருந்து (ஐஎப்எஸ்) ஓய்வு பெற்ற ஒருவர் என 6 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

36 மணி நேரத்துக்குள் இந்தியா தாக்குதல்: பாகிஸ்தான் அமைச்சர் தகவல்

படம்
இஸ்லாமாபாத்: அடுத்த 24 மணி நேரம் முதல் 36 மணி நேரத்துக்குள் இந்தியா தாக்குதல் நடத்தவிருப்பதாக நம்பகமான உளவுத்துறை தகவல் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்துள்ளார். அவ்வாறு, இந்தியா தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும், இந்தியா விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘அயோத்தி பாபர் மசூதிக்கான முதல் செங்கல்லை நம் வீரர்கள் நாட்டுவார்கள்’ - பாக். மேலவை உறுப்பினர்

படம்
இஸ்லாமாபாத்: பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையிலே பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில், அயோத்தி பாபர் மசூதி குறித்து பாகிஸ்தான் நாட்டின் மேலவை உறுப்பினர் பல்வாஷா முகமது ஜாய் கானின் கருத்து கவனம் பெற்றுள்ளது. இது தொடர்பாக ஆவேசமாக அவர் தெரிவித்த கருத்து வைரலாகி உளள்து. “அயோத்தியில் புதிதாக கட்டப்படும் பாபர் மசூதிக்கான முதல் செங்கல்லை நம் நாட்டு ராணுவ வீரர்கள் நாட்டுவார்கள். முதல் அஸானை (பிரார்த்தனை) பாகிஸ்தான் ராணுவ தலைவர் வழங்குவார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கனடா பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி: மார்க் கார்னேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

படம்
கனடா பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியா - கனடா இடையே பாதிப்படைத்திருந்த உறவு மீண்டும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடாவில் காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு, அங்குள்ள இந்திய தூதர் மீது கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த காலிஸ்தான் தீவிரவாதிகள் மீது, கனடா அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து இருநாட்டு தூதரங்களிலும், ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முப்படைகளுக்கும் முழு சுதந்திரம்: பாதுகாப்புத் துறை ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டது என்ன?  https://ift.tt/gkZyMvA

படம்
புதுடெல்லி : பஹல்​காம் தாக்​குதல் தொடர்​பாக மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங், முப்​படைகளின் தலைமை தளபதி அனில் சவு​கான் மற்​றும் ராணுவம், கடற்​படை, விமானப்​படை தளப​தி​கள், தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் ஆகியோ​ருடன் பிரதமர் மோடி நேற்று முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னார். எப்​போது, எங்​கு, எவ்​வாறு தாக்​குதல் நடத்​து​வது என்​பதை பாது​காப்​புப் படைகளே முடிவு செய்​ய​லாம் என்​றும், முப்​படைகளும் சுதந்​திர​மாக செயல்​படலாம் என்​றும் இக்​கூட்​டத்​தில் பிரதமர் தெரி​வித்​தார். கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்​காம் பகு​தி​யில் பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் 26 சுற்​றுலாப் பயணி​கள் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதலின் பின்​னணி​யில் பாகிஸ்​தான் ராணுவம் மற்​றும் அந்​நாட்டு உளவுத் துறை இருப்​பது தெரிய​வந்​துள்​ளது. இதனால் இரு நாடு​களிடையே போர் பதற்​றம் ஏற்​பட்​டுள்​ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சட்டவிரோதமாக வாக்காளர் அட்டை பெற்ற 2 பாகிஸ்தானியர்கள் சத்தீஸ்கரில் கைது https://ift.tt/FUOzw95

படம்
ரெய்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை கண்டறியும் சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதில் ரெய்கர் மாவட்டத்தில் உள்ள கோபாதாரை என்ற கிராமத்தில் சந்தேகப்படும்படி சிலர் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த மாவட்டத்தில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, யாகூப் ஷேக் என்பவரின் வீட்டில் தங்கியிருந்த இப்திகர் ஷேக் (29) மற்றும் அர்னிஷ் ஷேக் (25) ஆகிய 2 பாகிஸ்தானியர்களை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் போலி ஆவணங்களை கொடுத்து சட்டவிரோதமாக இந்திய வாக்காளர் அட்டை பெற்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவரும் பாகிஸ்தானின் கராச்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடியுடன் ராஜ்நாத் ஆலோசனை: 40 நிமிட சந்திப்பில் பேசியது என்ன? https://ift.tt/Ck1lbYa

படம்
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, காஷ்மீர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முப்படைகளும் உஷார் நிலையில் உள்ளன. இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நீதிபதியை மீண்டும் பயிற்சிக்கு அனுப்பிய அலகாபாத் உயர் நீதிமன்றம் https://ift.tt/wDZsaGg

படம்
பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசத்தில் நீதிபதி ஒருவரை தீர்ப்பு எழுத தகுதி இல்லை எனக் கூறி அலகாபாத் உயர் நீதிமன்றம் மீண்டும் அவரை பயிற்சிக்கு அனுப்பி வைத்த விநோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது. கான்பூர் நகரைச் சேர்ந்தவர் முன்னி தேவி. குத்தகை தொடர்பான இவரது வழக்கு ஒன்றில் கூடுதல் காரணங்களைச் சேர்க்க கோரிய மனுவை கூடுதல் மாவட்ட நீதிபதியான அமித் வர்மா தன்னிச்சையான முறையில் மூன்றே வரி உத்தரவில் தள்ளுபடி செய்தார். அத்துடன் மனு ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதற்கான காரணம் குறித்து அந்த நீதிபதி ஒரு வரி கூட தனது தீர்ப்பில் எழுதவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு மிக கடுமையான தண்டனை: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் உறுதி https://ift.tt/bVEMKDQ

படம்
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் தொடர்புடையவர்கள், சதித் திட்டம் தீட்டியவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் உரையாற்றி வருகிறார். இதன்படி 121-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சுயதொழில் பெருக மத்திய அரசு நடவடிக்கை: 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கி பிரதமர் மோடி பேச்சு https://ift.tt/ywHbuSp

படம்
நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் தொடர்ந்து பெருகுவதை உறுதி செய்ய மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பல்வேறு அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு காணொலி காட்சி மூலம் நியமனக் கடிதங்களை பிரதமர் மோடி நேற்று வழங்கினார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகளை வேட்டையாடுங்கள்: எப்போதும் ஆதரவாக இருப்போம் என அமெரிக்கா உறுதி

படம்
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளை வேட்டையாடுங்கள் என்று அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலால் 26 இந்துக்கள் கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த நேரத்தில் இந்தியாவுக்கு நாங்கள் துணை நிற்போம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய மற்றொரு பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு! https://ift.tt/UKkmRnM

படம்
பஹல்​காம் தாக்​குதலில் தொடர்​புடைய மற்றொரு பயங்கரவாதியின் வீட்டை பாது​காப்​புப் படை​யினர் வெடி​வைத்து தகர்த்​தனர். காஷ்மீரின் பஹல்​காம் பகு​தி​யில் தீவிர​வா​தி​கள் தாக்​குதலில் 28 சுற்​றுலா பயணி​கள் உயி​ரிழந்​தனர். இந்​தத் தாக்​குதலில் பாகிஸ்​தானின் லஷ்கர் பயங்கரவாத இயக்​கத்​தின் 4 தீவிர​வா​தி​கள் சம்​பந்​தப்​பட்​டிருப்​பது தெரிய வந்​துள்​ளது. இவர்களின் புகைப்படங்களையும் இந்திய ராணுவம் வெளியிட்டிருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வக்பு என்பது முஸ்லிம் மத அமைப்பு கிடையாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு - முழு விவரம்! https://ift.tt/F9Mly62

படம்
புதுடெல்லி: வக்பு திருத்த சட்​டத்​துக்கு எதி​ரான வழக்​கில் 1,332 பக்கங்கள் கொண்ட விரி​வான பதில் மனுவை உச்ச நீதி​மன்​றத்​தில் மத்​திய அரசு தாக்​கல் செய்துள்ளது. நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் நிறைவேற்​றப்​பட்ட வக்பு திருத்த சட்​டம், குடியரசுத் தலை​வரின் ஒப்​புதலுக்கு பிறகு கடந்த 8-ம் தேதி அமலுக்கு வந்​தது. இந்த சட்​டத்தை எதிர்த்து காங்​கிரஸ், திமுக, சமாஜ்​வா​தி, ஏஐஎம்​ஐஎம், ஆம் ஆத்​மி உள்​ளிட்ட கட்​சிகள், முஸ்​லிம் அமைப்​பு​கள் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசப்பட்டது என்ன? https://ift.tt/ELCBAxX

படம்
புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு அளிப்பதாக, அனைத்துக் கட்சி கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் உறுதிஅளித்தனர். தீவிரவாத முகாம்களை அழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் -இ-தொய்பா ஆதரவு அமைப்பான டிஆர்எப் பொறுப்பேற்றது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் 2 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசுக்கு முழு ஆதரவு” - அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிறகு ராகுல் காந்தி உறுதி  https://ift.tt/vTDKkSu

படம்
புதுடெல்லி: பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளிக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் வியாழக்கிழமை (ஏப்.24) மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரிண் ரிஜிஜு, மாநிலங்களவை பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருமணமான ஒரே வாரத்தில் பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி https://ift.tt/ylm9obz

படம்
இந்திய கடற்படையில் லெப்டினன்ட் அதிகாரியாக பணியாற்றிய வினய் நர்வால் திருமணமான ஒரே வாரத்தில், காஷ்மீருக்கு தேன்நிலவு சென்றபோது தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடலுக்கு நேற்று கடற்படை சார்பில் இறுதி மரியாதை அளிக்கப்பட்டது. இந்திய கடற்படையில் லெப்டினன்ட்டாக பணியாற்றியவர் வினய் நர்வல் (26). ஹரியானாவைச் சேர்ந்த இவர் கொச்சியில் பணியாற்றுகிறார். இவருக்கும் ஹிமான்சி என்ற பள்ளி ஆசிரியைக்கும் கடந்த 16-ம் தேதிதான் திருமணம் நடைபெற்றது. தேனிலவுக்கு சுவிட்சர்லாந்து செல்ல இவர்கள் திட்டமிட்டிருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்க தலைவர் பயணத்தில் மீண்டும் தாக்குதல்

படம்
கடந்த 2000-ம் ஆண்டு மார்ச்சில் அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருவதற்கு சில மணி நேரத்துக்கு முன் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். மார்ச் 20-ம் தேதி மாலை, அனந்த்நாக் மாவட்டத்தில் சீக்கியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சிட்டிசிங்போரா என்ற தொலைதூர கிராமத்துக்குள் இந்திய ராணுவ சீருடையில் தீவிரவாதிகள் நுழைந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிந்து நதிநீர் பங்கீடு நிறுத்தம் உள்ளிட்ட 5 முடிவுகள்: பஹல்காம் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி! https://ift.tt/iKXMakc

படம்
புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலையடுத்து, பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதி ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படுகிறது. இங்கு நேற்று முன்தினம் சுற்றுலாப் பயணிகள் குதிரை சவாரி செய்தும், ரோட்டோர கடைகளில் சாப்பிட்ட படியும், பைசரன் பள்ளத்தாக்கின் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து உள்ளூர் போலீஸாரின் சீருடையில் வந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். குறிப்பாக ஆண்களிடம் பெயர் மற்றும் மதத்தை கேட்டு தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய கடற்படை அதிகாரி, உளவுத்துறை அதிகாரி, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, La...

‘பாகிஸ்தானியர்கள் நீரின்றி மடிவார்கள்; இது 56 இன்ச் மார்பு’ - பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே https://ift.tt/5GvzoFR

படம்
புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் 1960-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை புதன்கிழமை அன்று ரத்து செய்துள்ளது இந்தியா. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே பாராட்டி உள்ளார். “நோபல் பரிசு பெறுவதற்காக 1960-ல் பாம்புக்கு நீர் கொடுத்தார் நேரு. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் ஹீரோ அவர். பல்வேறு ஆறுகளின் நீரை அவர் பாகிஸ்தானுக்கு வழங்கினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது” - டொனால்டு ட்ரம்ப்

படம்
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். இது குறித்து டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: “காஷ்மீரில் இருந்து வெளியாகும் செய்திகள் ஆழ்ந்த கவலையளிக்கின்றன. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது. உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் மீண்டு வரவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் எங்கள் முழு ஆதரவும் ஆழ்ந்த அனுதாபங்களும் உண்டு. எங்கள் இதயங்கள் உங்கள் அனைவருடனும் உள்ளன” இவ்வாறு ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் பலி - நடந்தது என்ன? https://ift.tt/20jUR37

படம்
பஹல்காம்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதி பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் செவ்வாய்க்கிழமை (ஏப்.22) துப்பாக்கி சூடு நடத்தியதில் 28 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரில் தற்போது கோடைசுற்றுலா தொடங்கியுள்ளதால், அங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்கின்றனர். அங்குள்ள அனந்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகள், தெளிவான நீரோடைகள், பரந்த புல்வெளிகள் இருப்பதால், இது ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படுகிறது. இதனால் பஹல்காம் பிரபல சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்குள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதிக்கு வாகனங்களில் செல்ல முடியாது. கால்நடையாக அல்லது குதிரைகள் மூலமாக மட்டுமே செல்ல முடியும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அறங்காவலர்கள் என கூறி வக்பு கடைகளுக்கு 17 ஆண்டுகளாக வாடகை வசூலித்த 5 பேர் கைது https://ift.tt/qi2PpNn

படம்
அகமதாபாத்: குஜராத்தில் வக்பு நிலத்தில் அமைந்துள்ள கடைகளுக்கு அறங்காவலர்கள் என்று கூறிக்கொண்டு 17 ஆண்டுகளாக வாடகை வசூலித்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வக்பு வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட காஞ்சினி மஸ்ஜித் அறக்கட்டளை மற்றும் ஷா பாதா காசம் அறக்கட்டளைக்கு சொந்தமாக நிலம் உள்ளது. இதில் சிலர் சட்டவிரோதமாக 5 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 100 வீடுகள் மற்றும் கடைகள் கட்டியுள்ளனர். இந்த அறக்கட்டளைகளின் அறங்காவலர்கள் என கூறிக்கொண்டு இவர்கள் கடந்த 2008 முதல் 2025 வரை வாடகை வசூலித்து வந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆன்மிக துணிச்சலின் கலங்கரை விளக்கமாக விளங்கிய போப்: பிரதமர் மோடி இரங்கல் https://ift.tt/ZOBglit

படம்
புதுடெல்லி: இந்தியர்கள் மீது போப் பிரான்சிஸ் வைத்த பாசம் என்றென்றும் போற்றப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது: போப் பிரான்சிஸ் மறைவு செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த சோகமான சூழலில், கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இரக்கம், பணிவு, ஆன்மிக துணிச்சல் ஆகியவற்றின் கலங்கரை விளக்கமாக விளங்கிய போப் பிரான்சிஸ், கோடிக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் நினைவுகூரப்படுவார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கத்தோலிக்க கிறிஸ்தவர்களை சோகத்தில் ஆழ்த்திய போப் பிரான்சிஸ் மறைவு - உலக தலைவர்கள் இரங்கல்

படம்
வாடிகன்: கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் நேற்று காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. போப் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவராக போப் போற்றப்படுகிறார். கடந்த 2013 மார்ச் 13-ம் தேதி 266-வது போப்பாக பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த சில ஆண்டுகளாகவே போல் பிரான்சிஸ் உடல்நலமின்றி இருந்தார். அவ்வப்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். எனினும், தேவாலய பணிகளை தொடர்ந்து செய்து வந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் குடும்பத்தினருக்கு விருந்தளித்த பிரதமர் மோடி! https://ift.tt/ChoyT1I

படம்
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அவரது இந்திய வம்சாவளி மனைவி உஷா சிலுகுரி மற்றும் 3 குழந்தைகள் இந்தியா வந்துள்ளனர். விமான நிலையத்தில் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும், பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா ஷெரட்டன் ஓட்டலில் தங்கிய வான்ஸ் குடும்பத்தினர் திங்கள்கிழமை மாலை பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி கல்யாண் மார்க்கில் உள்ள அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் சந்தித்தனர். அங்கு அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோவா மாநிலத்தில் கோயில் தேங்காயை ரூ.10 லட்சத்துக்கு வாங்கிய பக்தர் https://ift.tt/WasEyzD

படம்
பனாஜி: ஒரு தேங்காய் விலை ரூ.10 லட்சமா? ஆம். கோவா மாநில கோயில் தேங்காயைத்தான் ரூ.10 லட்சத்துக்கு ஏலத்தில் வாங்கி உள்ளார் ஒரு பக்தர். கோவா மாநிலம், வடக்கு கோவா மாவட்டம், பெர்னெம் நகருக்கு அருகே உள்ள கோர்காவ் கிராமத்தில் ஸ்ரீ தேவ் ரகுகோன்ஷெட் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை வருடாந்திர திருவிழா நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்து குழுமத் தலைவர் நிர்மலா எழுதிய ‘தி தமில்ஸ்’ நூல் பற்றி கலந்துரையாடல் https://ift.tt/a7lxoKP

படம்
புதுடெல்லி: ‘தி இந்து’ குழுமத் தலைவர் நிர்மலா லஷ்மண் எழுதிய, ‘தி தமில்ஸ்: எ போர்ட்ரெய்ட் ஆப் எ கம்யூனிட்டி’ (The Tamils: A portrait of a community) நூல் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியை, டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல அலேப் புத்தக நிறுவனம் ஏற்பாடு செய்தது. டெல்லியில் உள்ள இந்தியா இன்டர்நேஷனல் அரங்கத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘தி தமில்ஸ்: எ போர்ட்ரெய்ட் ஆப் எ கம்யூனிட்டி’ என்ற தலைப்பிலான ஆங்கில நூல் மற்றும் நூலாசிரியர் ‘தி இந்து’ குழுமத் தலைவர் நிர்மலா லஷ்மணை அலேப் நிறுவன பங்குதாரர் டேவிட் தாவேதார் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் நூலில் இடம்பெற்றுள்ள விவரங்கள் குறித்து நிர்மலா உரையாற்றினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

26 சதவீத பரஸ்பர வரிவிதிப்புக்கு இடையே அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இன்று இந்தியா வருகை https://ift.tt/Vmsgc18

படம்
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்தினருடன் 4 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். அக்ஷர்தாம் சூரியநாராயணன் கோயில், தாஜ்மஹால், ஜெய்ப்பூர் ஆகிய இடங்களை அவர்கள் பார்வையிடுகின்றனர். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இத்தாலியில் தனது 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இந்தியா வருகிறார். ஜே.டி.வான்ஸ் தனது இந்திய வம்சாவளி மனைவி உஷா சிலுகுரி மற்றும் 3 குழந்தைகளுடன் வருகிறார். அவர்களுடன் அமெரிக்க குழுவினரும் வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: காஷ்மீர், டெல்லியில் அதிர்வு

படம்
ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாகப் பதிவானது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லைப்பகுதியில் 86 கிலோமீட்டர் ஆழத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று பகல் 12.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் அடுத்த மாதம் இந்திய வீரர் சுபான்சு சுக்லா விண்வெளி மையம் செல்கிறார் https://ift.tt/cGAXtIM

படம்
‘‘இந்திய விண்வெளி வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள குரூப் கேப்டன் சுபான்சு சுக்லா, ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அடுத்த மாதம் செல்கிறார்’’ என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இந்திய விமானப்படை பைலட் குரூப் கேப்டன் சுபான்சு சுக்லா உட்பட சிலரை , ககன்யான் திட்டத்தில் விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ தேர்வு செய்தது. அவர்கள் ரஷ்யா சென்று விண்வெளி பயணத்துக்கான பயிற்சிகளை பெற்றனர். இந்நிலையில் ககன்யான் திட்டத்துக்கு முன்பாக இந்திய வீரர்களில் ஒருவரை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் நரேந்திர மோடி ஏப். 22-ல் சவுதி அரேபியா பயணம் https://ift.tt/zlXq8kT

படம்
பிரதமர் நரேந்திர மோடி வரும் 22-ம் தேதி சவுதி அரேபியாவுக்கு செல்கிறார். அப்போது புதிய பொருளாதார வழித்தடம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2016 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியாவுக்கு சென்றார். இதைத் தொடர்ந்து 3-வது முறையாக வரும் 22-ம் தேதி அவர் சவுதி அரேபியாவுக்கு செல்கிறார். இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ம.பி.யில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி 26 நாட்களில் ரூ.2.5 கோடி இழந்த துறவி https://ift.tt/xA7JcoH

படம்
போபால்: மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் அமைந்துள்ளது ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமம். இதன் செயலாளராக இருப்பவர் சுவாமி சுப்ரதீப்தானந்தா. இவருக்கு கடந்த மார்ச் 17-ம் தேதி ஒரு வீடியோ கால் வந்துள்ளது. மறுமுனையில் பேசியவர் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்த காவல் துறை அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்போது அவர், தொழிலதிபர் நரேஷ் கோயல் தொடர்பான வழக்கில் சுவாமி சுப்ரதீப்தானந்தா பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி அவர் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். இதைக் கேட்டு பயந்துபோன சுவாமியிடம், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் அல்லது கடும் சட்ட நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்று அந்த காவல் துறை அதிகாரி சுவாமியை மிரட்டியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடியுடன் எலான் மஸ்க் முக்கிய பேச்சுவார்த்தை https://ift.tt/086d5vk

படம்
பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தொலைபேசியில் நேற்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அவரின் மூத்த ஆலோசகராக தொழிலதிபர் எலான் மஸ்க் செயல்படுகிறார். ட்ரம்புக்கு பதிலாக எலான் மஸ்கே ஆட்சியை நடத்தி வருகிறார் என்று அமெரிக்க ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சத்​தீஸ்​கரில் 22 மாவோ​யிஸ்ட்​கள் கைது: ஜெலட்​டின் குச்சிகள், வெடிபொருட்​கள் பறி​முதல் https://ift.tt/DfPl2Jd

படம்
பீஜப் ​ பூர்: சத்தீஸ்கரில் 22 மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் நிறைந்த பீஜப்பூர் மாவட்டத்தில் சிஆர்பிஎப் அமைப்பின் கமாண்டோ பிரிவினர் மற்றும் மாநில போலீஸார் அடங்கிய கூட்டுப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதில் உசூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டெக்மெட்லா கிராமத்துக்கு அருகே உள்ள வனப்பகுதியில் 7 மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புத்தாண்டை முன்னிட்டு மியான்மரில் அரசியல் கைதிகள் 22 பேர் உட்பட 4,900 பேர் விடுதலை

படம்
நேபிடா: பர்மிய புத்தாண்டை முன்னிட்டு சிறையில் உள்ள அரசியல் கைதிகள் 22 பேர் உட்பட 4,900 பேருக்கு மியான்மர் ராணுவ அரசின் தலைவர் மின் ஆங் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார். மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டிலிருந்து ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூ கி சிறையில் அடைக்கப்பட்டார். மியான்மர் தற்போது உள்நாட்டு போரை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இங்கு கடந்த மாதம் 28-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 3,725 பேர் உயிரிழந்தனர். பாரம்பரிய கட்டிடங்கள் எல்லாம் இடிந்தன. நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் விரைவில் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என ராணுவத் தலைவர் உறுதியளித்துள்ளர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குடியரசு தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது: ஜெகதீப் தன்கர் கருத்து https://ift.tt/4J9T0dY

படம்
குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியாது என குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேசியதாவது: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் 14-ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, ஒரு அறையில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை தீயணைப்பு வீரர்களும் போலீஸாரும் பார்த்துள்ளனர். ஆனால் இது தொடர்பான தகவல் ஒரு வாரத்துக்குப் பிறகுதான் ஊடகங்களில் வெளியானது. இதைப் பார்த்து நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாமதமாக இந்த தகவலை வெளியிட்டது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். நாட்டு மக்களால் மதிக்கப்படும் நீதித் துறை குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

செய்தித்தாள் நிறுவனத்தை ஏடிஎம்-ஆக மாற்றியதாக சோனியா மீது பாஜக புகார் https://ift.tt/Pq2eo61

படம்
புதுடெல்லி: ‘‘வரலாற்று சிறப்பு மிக்க செய்திதாள் நிறுவனத்தை, சோனியா காந்தி குடும்பம் தனியார் தொழிலாகவும், ஏடிஎம்-ஆகவும் மாற்றியுள்ளது’’ என பாஜக குற்றம் சாட்டியுள்ளது. ஆங்கிலத்தில் நேஷனல் ஹெரால்டு, இந்தியில் நவஜீவன், உருது மொழியில் குவாமி ஆவாஸ் என்ற செய்திதாள்களை தொடங்க சுதந்திர போராட்ட வீரர்களிடம் நிதிபெற்று அசோசியேட்டட் ஜேர்னல்ஸ் லிமிடெட் (ஏஜெஎல்) என்ற நிறுவனத்தை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கடந்த 1937-ம் ஆண்டு தொடங்கினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நில மோசடி வழக்கில் சித்தராமையா பதிலளிக்க கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/YQTC9r0

படம்
பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில மோசடி வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு சித்தராமையா, அவரது மனைவி பார்வதி ஆகியோருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம் கடந்த 2016-ம் ஆண்டு கையகப்படுத்தியது. இதற்கு மாற்றாக அவருக்கு மைசூருவின் பிரதான இடத்தில் 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது. கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட இடத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் இதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா லோக் ஆயுக்தா போலீஸில் புகார் அளித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்கு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 3 கேள்விகள் https://ift.tt/UaL8zA0

படம்
புதுடெல்லி: வக்பு (திருத்த) சட்டத்துக்கு எதிரான மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்து மத அறக்கட்டளையில் முஸ்லிம்கள் உறுப்பினராக அனுமதிப்பீர்களா என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது. வக்பு (திருத்த) சட்டம் (ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு) கடந்த 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் மொத்தம் 73 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில், இந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிராக உள்ளது என்றும் இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் சைபர் மோசடி தொடர்பாக 4 பேர் கைது https://ift.tt/ctahUpY

படம்
புதுடெல்லி: சர்வதேச சைபர் மோசடி தொடர்பாக 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க சிபிஐ தரப்பில் 'ஆபரேஷன் சக்ரா' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி அனைத்து மாநில காவல் துறைகள் மற்றும் சர்வதேச காவல் அமைப்பான இன்டர்போல், அமெரிக்காவின் எப்பிஐ, கனடா காவல் துறை, ஆஸ்திரேலிய காவல் துறை, பல்வேறு தனியார் புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து சிபிஐ செயல்பட்டு வருகிறது. 'ஆபரேஷன் சக்ரா' திட்டத்தின் ஒரு பகுதியாக மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்கம் உட்பட பல்வேறு மாநிலங்களில் 12 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தினர். அப்போது சர்வதேச அளவில் சைபர் மோசடிகளில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 2 பேர் மும்பையை சேர்ந்தவர்கள். இதர 2 பேர் உத்தர பிரதேசத்தின் மொராதாபாத்தை சேர்ந்தவர்கள் ஆவர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் https://ift.tt/fhlwt7N

படம்
புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 1937ல் சுதந்திர போராட்ட வீரர்கள் சுமார் 5,000 பேரிடம் இருந்து நிதி பெற்று அவர்களை பங்குதாரர்களாக சேர்த்து அசோசியேட்டட் ஜேர்னல்ஸ் லிமெிடெட்(ஏஜெஎல்) என்ற நிறுவனத்தை ரூ.5 லட்சம் முதலீட்டில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு உருவாக்கினார். கடந்த 2010-ம் ஆண்டு நிலவரப்படி, ஏஜெஎல் நிறுவனத்தில் 1,057 பங்குதாரர்கள் இருந்தனர். அதனால் இந்த நிறுவனம் எந்த தனிநபருக்கும் சொந்தமானது அல்ல. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வக்பு சட்டத்துக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை https://ift.tt/bHLuzJn

படம்
புதுடெல்லி: வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகிறது. கடந்த 2-ம் தேதி மக்களவையில் வக்பு திருத்த மசோதா (ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு) நிறைவேற்றப்பட்டது. அடுத்த நாளில் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. கடந்த 5-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார். கடந்த 8-ம் தேதி வக்பு திருத்த சட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாபா சாஹேப் அம்​பேத்​கர் பிறந்த தினம்: குடியரசுத் தலை​வர் முர்​மு, பிரதமர் மோடி மரி​யாதை https://ift.tt/F8SALnk

படம்
புதுடெல்லி: அம்பேத்கரின் பிறந்த தினத்தை ஒட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். நாடு முழுவதும் நேற்று அம்பேத்கர் பிறந்த தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வைர வியாபாரி மெகுல் சோக்ஸி பெல்ஜியத்தில் சிக்கியது எப்படி? - இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சி தீவிரம் https://ift.tt/Oj8JDxy

படம்
புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று மோசடி செய்த பிரபல இந்திய தொழிலதிபரும், வைர வியாபாரியுமான மெகுல் சோக்ஸி, பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியில் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தியாவை சேர்ந்த தொழிலதிபரும், வைர வியாபாரியுமான மெகுல் சோக்ஸி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்றார். ஆனால், அதை திருப்பி செலுத்தாமல் கடந்த 2018-ம் ஆண்டு வெளிநாட்டுக்கு தப்பினார். இது தொடர்பாக அமலாக்கத் துறை, சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. 65 வயதாகும் மெகுல் சோக்ஸி, வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்ற நீரவ் மோடியின் உறவினர் ஆவார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முர்ஷிதாபாத் வன்முறை: வீடுகளை விட்டு வெளியேறிய 400 இந்துக்கள் - பாஜக குற்றச்சாட்டு https://ift.tt/48VmR1n

படம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்க மாநிலத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், துலியானில் 400-க்கும் மேற்பட்ட இந்துக்கள் உயிருக்கு பயந்து அவர்கள் வசித்து வந்த வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர் என்று பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி நேற்று தெரிவித்தார். இதன் மூலம், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர் மகளின் திருமணத்தில் தாய் மாமனாகி வாக்குறுதி நிறைவேற்றிய ஓம் பிர்லா https://ift.tt/sCxG0ZY

படம்
வாக்குறுதி அளித்தபடி புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவரின் மகள் திருமணத்தில் தாய்மாமனாக பங்கேற்ற மக்களவை தலைவர் ஓம் பிர்லா பரிசுகளை வழங்கினார். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒரே நாடு ஒரே தேர்தலால் பாதிப்பில்லை: வெங்கைய்ய நாயுடு கருத்து https://ift.tt/jdfvBtI

படம்
‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல் படுத்துவதால் மாநில கட்சிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது’’ என முன்னாள் குடியரசு துணைத்தலைவர் வெங்கைய்ய நாயுடு தெரிவித்துள்ளார். திருப்பதிக்கு ஒரு நாள் சுற்றுப்பயணமாக முன்னாள் குடியரசு துணைத்தலைவர் வெங்கைய்ய நாயுடு நேற்று வந்தார். அப்போது அவர் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தின் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது: ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையால் யாருக்கும் எந்த பயமும் அவசியமில்லை. குறிப்பாக மாநில கட்சிகளுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. தற்போதுள்ள தகவல் துறையின் அசுர வளர்ச்சியால் நாடு முழுவதும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது கஷ்டமாக கூட இருக்காது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆளுநர் அனுப்பும் மசோதாக்கள் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் கெடு - முழு விவரம் https://ift.tt/b0xg5aZ

படம்
புதுடெல்லி: ​ மாநில ஆளுநர்​கள் அனுப்பி வைக்​கும் மசோ​தாக்​கள் மீது குடியரசுத் தலை​வர் 3 மாதங்​களுக்​குள் முடிவு எடுக்க வேண்​டும் என்று உச்ச நீதி​மன்​றம் கடந்த 8-ம் தேதி பிறப்பித்த தீர்ப்பில் காலக்​கெடு விதித்து உத்​தர​விட்​டுள்​ளது. தமிழக அரசின் மசோ​தாக்​களுக்கு ஆளுநர் ஒப்​புதல் அளிக்​காமல் கிடப்​பில் போட்​டதை எதிர்த்​தும், மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்க கால​வரம்பு நிர்​ணயம் செய்ய கோரி​யும் உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு சார்​பில் கடந்த 2023-ம் ஆண்​டில் வழக்கு தொடரப்​பட்​டது. இந்த வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள் ஜே.பி.பர்​தி​வாலா, ஆர்​.ம​காதேவன் அமர்வு கடந்த 8-ம் தேதி தீர்ப்பு வழங்​கியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஹாரில் கடும் மழை, சூறாவளிக் காற்று: மின்னல் தாக்கி 58 பேர் உயிரிழப்பு https://ift.tt/IP6AZKr

படம்
பாட்னா: பிஹார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் சூறாவாளிக் காற்று பல இடங்களில் வீசியது. பல நகரங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்ததுள்ளது. இதனிடையே, பிஹார் மாநில முதல்வர் அலுவலகம்(சிஎம்ஓ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பல்வேறு பகுதிகளில் மழை, சூறாவளிக் காற்று, இடி, மின்னல் தாக்குதல், சுவர் இடிந்து விழுதல், மரங்கள் விழுதல் போன்ற சம்பவங்களால் பிஹாரில் 58 பேர் உயிரிழந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இஎல்ஐ திட்டத்தின் நிதி எங்கே போனது? - இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்து பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி https://ift.tt/n2FGQ3p

படம்
புதுடெல்லி : ​காங்​கிரஸ் மூத்த தலை​வரும் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்​தி, தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் நேற்று கூறி​யிருப்​ப​தாவது: நாட்​டில் உள்ள இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு அதி​கரிக்க கடந்த ஆண்டு வேலை​யுடன் கூடிய ஊக்​கத் தொகை (இஎல்ஐ) திட்​டத்தை மத்​திய அரசு அறி​வித்​தது. அதற்​காக ரூ.10,000 கோடி ஒதுக்​கப்​பட்​டது. ஆனால், இது​வரை வேலை​வாய்ப்​பு​கள் அதி​கரிக்​கப்​பட​வில்​லை. ஒதுக்​கப்​பட்ட தொகை எங்கே போனது? நாட்​டில் உள்ள பெரிய நிறு​வனங்​களின் மீது மட்​டுமே பிரதமர் மோடிக்கு கவனம் உள்​ளது. நாட்​டின் வளர்ச்​சி​யில் சிறு, குறு, நடுத்தர நிறு​வனங்​கள்​தான் முக்​கிய பங்கு வகிக்​கின்​றன. அவற்றை மத்​திய அரசு புறக்​கணிக்​கிறது. கடந்த 2024-ம் ஆண்டு மக்​களவை தேர்​தலுக்கு முன்​பு, இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு வழங்க இஎல்ஐ திட்​டம் கொண்டு வரப்​படும் என்று பாஜக அறி​வித்​தது. ஆனால் ஆட்சி பொறுப்​பேற்று ஓராண்​டாகி​யும் அந்த திட்​டம் குறித்து இது​வரை எந்த விளக்​க​மும் தரவில்​லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Th...