இடுகைகள்

டிசம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அவசரக்கால பயன்பாட்டுக்கு பைசர் கரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்தலாம் : உலக சுகாதார அமைப்பு

படம்
பைசர் கரோனா தடுப்பு மருந்தை அவசரக்கால பயன்பாட்டுக்கும் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, ஐரோப்பிய நாடுகள் பைசர் கரோனா தடுப்பு மருந்தை பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றன. இந்த நிலையில் பைசர் கரோனா தடுப்பு மருந்தை அவசரக்கால பயன்பாட்டுக்கு அனுமதிக்குமாறு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஸ்ரீநகர்: பரபரப்பான  மார்க்கெட்டில் நுழைந்து நகைக்கடை அதிபர் சுட்டுக்கொலை: தீவிரவாதிகள் வெறிச்செயல் https://ift.tt/2KPg7BS

படம்
காஷ்மீர் மாநிலத்தின் பரபரப்பான ஸ்ரீநகர் மார்க்கெட்டுக்குள் நேற்று மாலை நுழைந்த தீவிரவாதிகள் நகைக்கடை அதிபரை சுட்டுக்கொன்றதாக போலீஸார் தெரிவித்தனர். ஸ்ரீநகரின் பரபரப்பான சந்தைப் பகுதி சாராய் பாலா. இப்பகுதிக்குள் நேற்று மாலை துப்பாக்கி ஏந்திய அடையாளம் தெரியாத சில தீவிரவாதிகள் நுழைந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியில் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத கடும் குளிர்: பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி https://ift.tt/2MgBoos

படம்
தலைநகர் டெல்லியில் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று கடும் குளிர் நிலவி மிகக்குறைந்த அளவாக 1.1 டிகிரி செல்சியஸ் அளவு பதிவானது. சாலையில் கடும் பனிமூட்டம் நிலவியதால், வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளானார்கள். கடந்த 2006-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி டெல்லியில் மிகக்குறைந்தபட்சமாக 0.2 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவியது. அதன்பின் தற்போது, 1.1. டிகிரி செல்சியஸ் குளிர் நிலவியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தானிடமிருந்து சியாச்சின் பனி மலையை பாதுகாத்த கர்னல் புல் குமார் காலமானார்:  மோடி இரங்கல் https://ift.tt/3aXQhpX

படம்
பாகிஸ்தானிடமிருந்து சியாச்சின் பனி மலையை பாதுகாத்த கர்னல் புல் குமார் வியாழக்கிழமை காலமானார்; மறைந்த ராணுவ வீரருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 1984 ஆம் ஆண்டில் பாகிஸ்தானிய ராணுவம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து இமயமலையின் இன்னொரு அங்கமாகத் திகழும் காரகோரம் மலைத்தொடரில் அமைந்துள்ள பனிபடர்ந்த சியாச்சின் சிகரத்தை கைப்பற்ற முனைந்தது. எனினும் பாகிஸ்தான் நடவடிக்கைகளை முறியடித்து சியாச்சினையும் அதனைச் பனிப்பாறையைப் பகுதிகளையும் தனது போர்த்திறனால் காத்துநின்றவர் கர்னல் (ஓய்வு) நரேந்திர குமார், from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அனைவருக்கும் வீடு திட்டம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார் https://ift.tt/3n05LMx

படம்
அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ளிட்ட மாநிலங்களில் வீடு கட்டும் திட்டத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். சர்வதேச வீட்டுவசதித் தொழில்நுட்பச் சவால் -இந்தியாவின் கீழ் கலங்கரை விளக்கத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

2021 -ம் ஆரோக்கியம், மகிழ்ச்சி, செழிப்பு பெருகட்டும்: குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து https://ift.tt/2KIHLAM

படம்
புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் "இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் அனைத்து மக்களுக்கும் எனது மனப்பூர்வமான புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று குறைகிறது: 24 மணி நேரத்தில் 20,036 பேருக்கு பாதிப்பு https://ift.tt/3pEEvVQ

படம்
இந்தியாவில் கரோனா வைரஸால் 24 மணிநேரத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 20,036 ஆக உள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியில் காற்று மாசு ; மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு https://ift.tt/3n5c9SE

படம்
காற்று மாசைக் கட்டுப்படுத்த செயல்மிகு நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய தலைநகரப் பகுதி மாநிலங்களுக்கு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. டெல்லி - தேசிய தலைநகரப் பகுதிகளில் காற்றின் தரம் மற்றும் வானிலை நிலவரத்தை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 75 லட்சம்: இந்திய செயற்கை மூட்டுக் கருவிகள் உற்பத்தி நிறுவனம் வழங்கியது https://ift.tt/3rHO7AX

படம்
இந்திய செயற்கை மூட்டுக் கருவிகள் உற்பத்தி நிறுவனம், பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 75 லட்சம் வழங்கியது. கோவிட் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் இந்திய செயற்கை மூட்டுக்கருவிகள் உற்பத்தி நிறுவனம், நிறுவனத்தின் சமுதாயப் பொறுப்புக்கான நிதியாக (சிஎஸ்ஆர்) ரூ.75 இலட்சத்தை அவசர சூழ்நிலைக்கான பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதிக்கு (PM CARES நிதி) வழங்கியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தானில் இந்து கோயில் இடிப்பு: 26 பேரை கைது செய்தது போலீஸ் https://ift.tt/3pF5QXT

படம்
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துன்கவா மாகாணம் கரக் மாவட்டம் தெர்ரி என்ற கிராமத்தில் பழமையான கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலை புதுப்பிக்க உள்ளூரைச் சேர்ந்த இந்துக்கள் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றனர். இதை அறிந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மதத் தலைவர் ஒருவர் தலைமையில் ஜாமியாத் உலாமா - இ-இஸ்லாம் என்ற அடிப்படைவாத கட்சியின் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் கோயிலை இடித்து கொளுத்தினர். இதில் கோயில் முற்றிலும் சேதமடைந்தது. இதுதொடர்பாக மனித உரிமை அமைப்புகளும் பாகிஸ்தானில் சிறுபான்மையாக உள்ள இந்துக்களும் கடும் எதிர்ப்பு தெர கோயில் இடித்து தீ வைக்கப்பட்டது தொடர்பாக 26 பேரை கைது செய்துள்ளதாகவும் சம்பந்தப்பட்டவர்களை தொடர்ந்து தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். மத விவகாரங்களுக்கான பாகிஸ்தான் அமைச்சர் நூருல் ஹக் காத்ரி தனது ட்விட்டர் பதிவில், ‘‘கோயில் மீதான தாக்குதல் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கான சதி. சிறுபான்மையினரி்ன் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்துவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. சிறுபான்மையாக உள்ளவர்களின் மத சுதந்திரத்தை பாதுகாப்ப...

அனைத்து மாநிலங்களிலும் நாளை முதல் சோதனை முறையில் கரோனா தடுப்பூசி https://ift.tt/3n5e9uq

படம்
அனைத்து மாநிலங்களிலும் நாளை முதல் சோதனை முறையில் கரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, ‘‘கரோனா தடுப்பூசி போடுவதற்கான திட்டப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அந்த தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும்’’ என்று குறிப்பிட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடகாவில் 10, 12-ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு https://ift.tt/3aXJ4X3

படம்
கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தொடர்ந்து வைரஸ் வேகமாக பரவியதால் ‌2020-21ம் கல்வி ஆண்டுக்காக கடந்த‌ ஜூன் மாதத்தில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவில்லை. கர்நாடகாவில் கரோனா பரவல் சற்று குறைந்ததால் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கடந்த நவம்பர் 18-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன. மாணவர் வருகை குறைந்து காணப்பட்டாலும், தொடர்ந்து வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருப்பதியில் சமூக வலைதளம் மூலம் மனைவியை விற்க முயன்ற கணவன் கைது https://ift.tt/3aZVnSS

படம்
திருப்பதியில் உள்ள தேவஸ்தான கல்லூரி விடுதியில் பணியாற்றுபவர் ரேவந்த் குமார் (29). இவர் தனது தாய், தம்பியுடன் திருப்பதியை அடுத்துள்ள திம்மபாளையத்தில் வசித்து வருகிறார். இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த 21 வயது பெண்ணுக்கும் கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான மூன்றே நாட்களில் வரதட்சனை கேட்டு மனைவியை ரேவந்த் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அந்தப் பெண், கடந்த 5 நாட்களுக்கு முன்பு தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் மனைவியின் அந்தரங்க படங்களை தனது அலுவலக நண்பர்களின் வாட்ஸ்-அப் குழுவில் ரேவந்த் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் தேவைப்படுவோருக்கு மனைவியை விற்கத் தயாராக இருப்பதாக விளம்பரம் செய்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோயிலை சேதப்படுத்தினால் நடவடிக்கை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் எச்சரிக்கை https://ift.tt/3n3Snag

படம்
ஆந்திராவில் சமீப காலமாக கோயில்கள், சிலைகள், தேர் ஆகியவற்றின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பழங்கால தேர் ஒன்று அடையாளம் தெரியாத நபர்களால் இரவோடு இரவாக கொளுத்தப்பட்டது. இந்நிலையில், விஜயநகரம் மாவட்டம், நல்லமர்லு பகுதியில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமதீர்த்தம் கோதண்டராமர் கோயிலில் உள்ள ராமர் சிலையின் தலை சில தினங்களுக்கு முன்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதனிடையே, சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா மற்றும் இந்து அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரயில் பயணிகளுக்கு புத்தாண்டு பரிசு: ஆன்லைன் ரயில் டிக்கெட்:  புதிய இ-டிக்கெட் இணையதளம், கைபேசி செயலி தொடக்கம் https://ift.tt/3hBciwm

படம்
பயணிகளுக்கு புத்தாண்டு பரிசாக, ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு மேம்படுத்தப்பட்ட இ-டிக்கெட் இணையதளம் மற்றும் கைபேசி செயலியை இந்திய ரயில்வே அமைச்சகம் தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வையின்படி, இந்திய ரயில்வே, தனது இ-டிக்கெட் இணையதளம் www.irctc.co.in மற்றும் ஐஆர்சிடிசி ரயில் இணைப்பு கைபேசி செயலி ஆகியவற்றை புதுப்பித்து மேம்படுத்தியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோவிட்-19 தடுப்பூசி; அனைத்து மாநிலங்களிலும் நாளை ஒத்திகை: தயாராகுமாறு மத்திய அரசு வலியுறுத்தல் https://ift.tt/3n3WP95

படம்
நாடு முழுவதும் கோவிட்-19 தடுப்பூசி அறிமுகம் செய்வதற்கான பணிகளை விரைவுபடுத்தும் நோக்கத்துடன், தயார் நிலையை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கோவிட்-19 தடுப்பூசி ஒத்திகை இடங்களில், தயார் நிலை குறித்து சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை நிர்வாகிகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் காணொலிக் காட்சி மூலம் இன்று ஆய்வு நடத்தினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கு ஜன.31 வரை விண்ணப்பிக்கலாம்: எஸ்எஸ்சி அறிவிப்பு https://ift.tt/3n3UpXS

படம்
மத்திய அரசின் ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வுக்கான அறிவிப்பை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் குரூப் பி மற்றும் சி பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுவர். 18 முதல் 32 வயது வரையிலான பட்டதாரித் தேர்வர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீட்டுப் பிரிவின் அடிப்படையில் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம்; அடுத்த ஆண்டில் தொடங்குகிறோம்: பிரதமர் மோடி  https://ift.tt/3rI0BbS

படம்
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை அடுத்த ஆண்டில் தொடங்க நாம் தயாராகி வருகிறோம் என பிரதமர் மோடி கூறினார். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்குப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று அடிக்கல் நாட்டினார். குஜராத் மாநிலத்தின் ஆளுநர், முதல்வர், மத்திய சுகாதார அமைச்சர், இணை அமைச்சர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உருமாறிய கரோனா வைரஸ் தொற்று; இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்வு https://ift.tt/2Jw9hAE

படம்
இந்தியாவில் உருமாறிய கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனின் தெற்கு இங்கிலாந்து பகுதியில் கரோனா வைரஸில் புதிய வகை வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விதித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தென் கொரியாவில் கரோனா பாதிப்பு 60,000-ஐ தாண்டியது

படம்
தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 967 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்கொரிய சுகாதாரத் துறை தரப்பில், “ தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 967 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தென்கொரியாவில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 60,740 ஆக அதிகரித்துள்ளது. நவம்பர் மாதம் 8 ஆம் தேதியிலிருந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை; டெல்லியில் இரவு ஊரடங்கு உத்தரவு https://ift.tt/382ErsV

படம்
டெல்லியில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் காரணமாக அதிக அளவில் கூட்டம் சேர்வதைத் தவிர்க்க இன்று இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி தலைமைச் செயலாளர் பிறப்பித்த உத்தரவின்படி, கோவிட் 19 காரணமாக நகரில் பொதுமக்கள் ஒன்றாகக் கூடுவதைத் தவிர்ப்பதற்காக இன்று இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லி தலைமைச் செயலாளர் விஜய் தேவ் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: கேரளா சட்டப்பேரவையில் தீர்மானம் https://ift.tt/3mZfrXH

படம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த கேரள சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்தார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் குறித்து விவாதித்து, அவற்றுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடரை 23-ம் தேதி (நேற்று) கூட்ட ஆளுநருக்கு அமைச்சரவை பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், ஆளுநர் ஆரிப் முகமது கான் அமைச்சரவையின் பரிந்துரையை மறுத்துவிட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று: 24 மணி நேரத்தில் 21,821 பேருக்கு பாதிப்பு https://ift.tt/3rJUL9C

படம்
இந்தியாவில் கரோனா வைரஸால் 24 மணிநேரத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 21,821 ஆக உள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

4 மாநிலங்களில் பரவும் கருங்காய்ச்சல்:  ஹர்ஷ் வர்தன் ஆய்வு https://ift.tt/37Zfiz9

படம்
உத்தரப்பிரதேசம், பிஹார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள 54 மாவட்டங்களில் கருங்காய்ச்சல் பாதிப்புகள் பரவி வருிறது. இந்த நான்கு மாநிலங்களில் காலா அசார் - கருங்காய்ச்சல் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆய்வு மேற்கொண்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீனாவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான முடிவு இதுவரை எட்டப்படவில்லை: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல் https://ift.tt/2Mm143b

படம்
லடாக் எல்லைப் பிரச்சினை தொடர்பாக சீனாவுடன் தூதரக மற்றும் ராணுவ அளவில் நடந்தபேச்சுவார்த்தைகளில் ஆக்கப்பூர்வமான முடிவு எட்டப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சீனப்படைகள் ஆக்கிரமிக்கத் தொடங்கினர். இது, கடந்த ஜூன் 15-ம்தேதி இரவு இந்திய – சீன வீரர்கள் இடையே கடும் மோதலில் முடிந்தது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இரு நாடுகளும் ராணுவஅளவில் கடைசியாக சுசுல் பகுதியில் கடந்த நவம்பரில் 8-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தின. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுத் தேதிகள் இன்று அறிவிப்பு https://ift.tt/2X0up58

படம்
சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடங்கும் தேதிகளை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ இன்று (டிசம்பர் 31) மாலை ஆறு மணிக்கு அறிவிக்கிறார்.‌ கரோனா வைரஸ் பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிரிவில் 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிக்குச் செல்லாமல், காணொலி மூலமே பாடங்களைக் கற்று வருகின்றனர். கடந்த மாதம் அக்டோபர் 15-ம் தேதிக்குப்பின் சில மாநிலங்களில் மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கலங்கரை விளக்கத் திட்டங்கள்: பிரதமர் மோடி நாளை அடிக்கல்  நாட்டுகிறார் https://ift.tt/3aUgyWn

படம்
சர்வதேச வீட்டுவசதித் தொழில்நுட்பச் சவால் -இந்தியாவின் கீழ் கலங்கரை விளக்கத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார். ஆறு மாநிலங்களில் உள்ள ஆறு நகரங்களில் சர்வதேச வீட்டுவசதித் தொழில்நுட்ப சவால் – இந்தியா திட்டத்தின் கீழ் கலங்கரை விளக்கத் திட்டங்களுக்கான அடிக்கல்லை காணொலி மூலம் 2021 ஜனவரி 1 அன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடக கிராம பஞ்சாயத்து தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலை https://ift.tt/3aZT2XV

படம்
கர்நாடகாவில் உள்ள 226 தாலுகாக்களில் உள்ள 72,616 கிராம பஞ்சாயத்து வார்டுகளுக்கு கடந்த‌டிசம்பர் 22 மற்றும் 27-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 343 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், 8,074 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தேர்தலில் பதிவான 81 சதவீத வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. நேற்று மாலை 7 மணி நிலவரப்படி பாஜக 4,228 இடங்களிலும், காங்கிரஸ் 2,265 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும் 10 ஆயிரத்து 955 இடங்களில் பாஜக ஆதரவு வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றனர். காங்கிரஸ் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் 8,567 இடங்களிலும், மஜத ஆதரவு பெற்றவேட்பாளர்கள் 3,829 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர். பகுஜன் சமாஜ், இடதுசாரிகள் உள்ளிட்ட இதர கட்சியினரும், சுயேச்சைகளும் 3,260 இடங்களில் முன்னிலை வகிக்கிறார்கள். மீதமுள்ள இடங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Onli...

கரோனா வைரஸ் ஊரடங்கால் முடங்கிய இயல்பு வாழ்க்கையை புதுப்பிக்க உதவிய தொழில்நுட்பம்: டிஜிட்டல் இந்தியா விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம் https://ift.tt/3o16D56

படம்
கரோனா வைரஸால் ஏற்பட்ட அச்சுறுத்தலை வெற்றிகரமாக சமாளிக்க தொழில்நுட்ப வளர்ச்சிதான் பெரிதும் உதவியது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டினார். டிஜிட்டல் துறையில் அளப்பரிய பங்காற்றிய நிறுவனங்களுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் ஆண்டுதோறும் டிஜிட்டல் இந்தியா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் https://ift.tt/3htjZ7L

படம்
கரோனா பரவலை கருத்தில்கொண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என மாநிலஅரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. நம் நாட்டில் கரோனா வைரஸ் பரவல் ஓரளவுக்கு கட்டுப்பட்டில் வந்துள்ளது. ஆனால் பிரிட்டனில் இருந்து பரவும் புதிய வகை கரோனா வைரஸால் மீண்டும் அச்சுறுத்தல் எழுந்துள்ளது. இதையடுத்து புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளைமத்திய அரசு விதித்துள்ளது.எனினும், இவற்றை நடை முறைப்படுத்துவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.1,100 கோடி செலவில் ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகி தகவல் https://ift.tt/3pupDt0

படம்
நாக்பூர்: அயோத்தியில் ராமர் கோயிலை கட்டி முடிக்கச் சுமார் ரூ.1,100 கோடி செலவாகும் என  ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த் தேவ் கிரிஜி மகராஜ் தெரிவித்தார். இதுகுறித்து நாக்பூரில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் அவர் கூறியாவது: ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைய மூன்றரை ஆண்டுகள் ஆகும். கோயில் கட்டுமானத்துக்காக ரூ.1,100 கோடி செலவாகும். இதில் கோயிலின் மூலஸ்தான கட்டுமானப் பணிக்கு மட்டும் ரூ.300 கோடி முதல் ரூ.400 கோடி செலவாகும். இதற்காக நாடு முழுவதும் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளோம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்; தமிழகத்துக்கு தங்க விருது: காணொலியில் குடியரசுத் தலைவர் வழங்கினார் https://ift.tt/37ZmGdW

படம்
டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநில பிரிவில் டிஜிட்டல் இந்தியா-2020 தங்க விருதை தமிழகத்துக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காணொலியில் நேற்று வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அறிவியல்பூர்வமற்ற சிகிச்சைகளால் கரோனா வைரஸ் உருமாறுகிறது: ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் தகவல் https://ift.tt/2KS3fLg

படம்
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தலைமை இயக்குநர் டாக்டர் பார்கவா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்துள்ளது. இந்நிலையில் பல்வேறு நாடுகளில் உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க போதுமான நடவடிக்கைகளை ஐசிஎம்ஆர் சார்பில் நமது நாட்டில் எடுத்து வருகிறோம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீரின் பிடிபி தலைவர் வாஹீத் ஹிஸ்புல் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி: தேசிய புலனாய்வு அமைப்பு தகவல் https://ift.tt/3pCXFvi

படம்
ஹிஸ்புல் தீவிரவாத அமைப்புக்கு, காஷ்மீரின் பிடிபி கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் வாஹீத் உர் ரகுமான் பரா நிதியுதவி செய்துள்ளார் என்று தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ஆதரவு ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளுடன், காஷ்மீரின் துணை எஸ்.பி. தேவேந்திர சிங் தொடர்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஹிஸ்புல் தீவிரவாதிகளை காரில் அழைத்து சென்ற போது கடந்த ஜனவரி மாதம் அவர் பிடிப்பட்டார். அவரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், தேவேந்திர சிங் மூலம் ஹிஸ்புல் அமைப்புக்கு மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வாஹீத் உர் ரகுமான் பரா நிதியுதவி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வட மாநிலங்களில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்தலில் போட்டி https://ift.tt/3pzGw5y

படம்
வட மாநிலங்களில் பணியாற்றும் தமிழக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகின்றனர். திராவிடம் மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்களான இவர்கள், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிட விரும்புகின்றனர்.. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணி அதிகாரிகள் அரசியலில் நுழைவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இங்கு ஐஏஎஸ் அதிகாரிகளான வி.எஸ்.சந்திரலேகா, மலைச்சாமி, பி.சிவகாமி, ஐபிஎஸ் அதிகாரிகளில் ஆர்.நட்ராஜ், ஏ.எஸ்.அலெக்ஸாண்டர் என பட்டியல் தொடர்கிறது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஏ.ஜி.மவுர்யா ஐபிஎஸ், ஆர்.ரெங்கராஜன் ஐஏஎஸ், சந்தோஷ்பாபு ஐஏஎஸ் ஆகியோர் இணைந்தனர். பாஜக.வில் இணைந்த கே.அண்ணாமலை ஐபிஎஸ், கட்சியின் துணைத் தலைவராகி உள்ளார். காங்கிரஸிலும் சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் இணைந்துள்ளார். பிரதானக் கட்சியாக இருந்தும் திமுக.வில் தற்போது முதல் முறையாக ஓய்வு பெற்றவரான வி.மகாலிங்கம் ஐஆர்எஸ் இணைந்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஐரோப்பிய யூனியன் அமைப்பிடம் பாஸ்மதி அரிசிக்கு உரிமை கோரி இந்தியா, பாகிஸ்தான் கடும் போட்டி

படம்
பாஸ்மதி அரிசிக்கான புவிசார் உரிமையை இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என ஐரோப்பிய யூனியனில் இந்தியா விண்ணப்பித்துள்ளது. மெல்லிய நீண்ட அளவிலான நறுமணம் கொண்ட அரிசி வகையான பாஸ்மதி, வட மாநிலங்களில் பிரத்தியேகமாக விளைவிக்கப்படுகிறது. எனவே பாஸ்மதி அரிசியின் புவிசார் உரிமையை இந்தியா கோரியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானும் பாஸ்மதி அரிசிக்கான உரிமையை கோரி வருகிறது. பாகிஸ்தான் ஆண்டுக்கு 5 முதல் 7 லட்சம் டன் வரையிலான பாஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்கிறது. அதில் ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டும் 2.5 லட்சம் டன் ஏற்றுமதி செய்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

24 காரட் தங்க பர்கரை தயாரித்து கொலம்பிய உணவகம் புதுமை

படம்
அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் தயாரிக்கப்பட்டுள்ள 24 காரட் தங்கத்திலான ‘பர்கர்’, உணவுப் பிரியர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. துரித உணவுகளின் பட்டியலில் பீட்சாவை அடுத்து மிகவும் பிரபலமான உணவுப்பொருளாக இருப்பது பர்கர். காய்கறிகளைக் கொண்டும், பல வகையான இறைச்சிகளையும் கொண்டும் தயாரிக்கப்படும் இந்த பர்கருக்கு அனைத்து நாடுகளிலும் மவுசு உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜக- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் நெருடல்; தேஜஸ்வியை முதல்வராக்கிவிட்டு தேசிய அரசியலில் கவனம் செலுத்துங்கள்: நிதிஷ் குமாருக்கு ஆர்ஜேடி யோசனை https://ift.tt/3o3xZHN

படம்
பாஜக - ஐக்கிய ஜனதாதளம் இடையிலான உறவில் நெருடல் ஏற்பட்டுள்ள நிலையில், தேஜஸ்வி யாதவை முதல்வராக்கிவிட்டு தேசிய அரசியலில் கவனம் செலுத்த வேண்டும் என்று நிதிஷ் குமாருக்கு ராஷ்ட்ரிய ஜனதள தளம் (ஆர்ஜேடி) யோசனை தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த(ஐஜத) 7 எம்எல்ஏக்களில் 6 பேர்சமீபத்தில் பாஜகவில் இணைந்தனர். இது பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் - பாஜக கூட்டணியில் நெருடலை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவின் நடவடிக்கைக்கு ஐஜத எதிர்ப்பு தெரிவித்தது. முதல்வர் பதவி மீது தனக்கு ஆசை இல்லை என்றும் பிஹார் முதல்வராக பாஜகவைச் சேர்ந்த யாரையாவது தேர்வு செய்யட்டும் என்றும் நிதிஷ் குமார் கூறி இருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கழிவுகள் எரிப்பு, மின்சார அவசர சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசு சம்மதம்; புதிய வேளாண் சட்டங்களை ஆராய குழு: விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மீண்டும் ஜனவரி 4-ல் பேச்சுவார்த்தை https://ift.tt/38127xW

படம்
வேளாண் கழிவுகள் எரிப்பு, மின்சார அவசரச் சட்டம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என விவசாய சங்கங்கள் முன்வைத்த 2 கோரிக் கைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வரும் 4-ம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வர விவசாய சங்கங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில், புதிய வேளாண் சட்டங்களை நீக்க முடியாது என்றும், இந்த சட்டங்களை ஆராய்வதற்கு குழு அமைக்கப்படும் எனவும் விவ சாய அமைப்புகளின் பிரதிநிதி களிடம் மத்திய அரசு உறுதி அளித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவு https://ift.tt/3mYs6u5

படம்
குஜராத்தில் புதன்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை. குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று காலை 9.46 மணிக்கு ஏற்பட்ட இந்நிலநடுக்கம் குறித்து காந்தி நகரை மையமாகக் கொண்ட நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிங்கப்பூரில் தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடக்கம்

படம்
சிங்கப்பூரில் முதன்முதலாக சுகாதாரப் பணியாளர்களுக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “சிங்கப்பூரில் முதன்முதலாக பைசர் கரோனா தடுப்பு மருந்தைச் சுகாதாரப் பணியாளர்களுக்குச் செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தடுப்பு மருந்து பொதுமக்களுக்குச் செலுத்தப்பட உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விவசாயிகளின் வேதனை எங்களின் வேதனை; ராகுல் காந்தியை விட விவசாயம் எனக்கு நன்றாகத் தெரியும்: ராஜ்நாத் சிங் சாடல் https://ift.tt/2MjZQ8A

படம்
நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். என் தந்தையும், தாயும் விவசாயிகள். ஆதலால், ராகுல் காந்தியை விட எனக்கு விவசாயம் நன்றாகத் தெரியும். விவசாயிகளின் வேதனை எங்களின் வேதனை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்தும், அதைத் திரும்பப் பெறக் கோரியும் விவசாயிகள் நடத்தும் போராட்டம் 2-வது மாதத்தை எட்டியுள்ளது. இதுவரை விவசாயிகள், மத்திய அரசுக்கு இடையே 5 கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. இன்று 6-வது கட்டப் பேச்சுவார்த்தை நடக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீரில் தீவிரவாதிகளின் ரகசிய இடங்கள் கண்டுபிடிப்பு: துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் பறிமுதல் https://ift.tt/3rEu868

படம்
காஷ்மீரில் பூஞ்ச் சர்வதேசக் கட்டுப்பாட்டுக் கோடு அமைந்துள்ள எல்லையோர கிராமத்திலிருந்து தீவிரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு அமைந்துள்ள டப்பி கிராமத்தில் ஒரு தீவிரவாதியின் மறைவிடத்திலிருந்து பாதுகாப்புப் படையினர் ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்களை புதன்கிழமை பறிமுதல் செய்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா தடுப்பு மருந்து போட்டுக் கொண்டார் கமலா ஹாரிஸ்

படம்
அமெரிக்க துணை அதிபராக தேந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் கரோனா தடுப்பு மருந்தை பெற்றுக் கொண்டார். வாஷிங்டனில் உள்ள மருத்துவ மையத்தில் கமலா ஹாரிஸுக்கு மாடர்னா கரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

2021-ம் ஆண்டு ஜனவரியில் வங்கிகளுக்கு 16 நாட்கள் விடுமுறை:  தமிழகத்தில் எத்தனை நாள்? ரிசர்வ் வங்கி அறிவிப்பு https://ift.tt/3o1V1P7

படம்
2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு மொத்தம் 16 நாட்கள் விடுமுறை என ரிசர்வ் வங்கியின் விடுமுறைப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள வங்கிகள் மொத்தம் 12 நாட்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வங்கிகளுக்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையும், மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை. தேசிய விடுமுறை நாட்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜக ஆளும் மாநிலங்கள் லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டங்களை இயற்றி அரசியலமைப்புச்சட்டத்தை கேலிக்கூத்தாக்குகின்றன: ஒவைசி சாடல் https://ift.tt/3o3dAlW

படம்
பாஜக ஆளும் மாநிலங்கள் லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டங்களை இயற்றி அரசியலமைப்புச் சட்டத்தையே கேலிக்கூத்தாக்குகின்றன என்று அனைத்து இந்திய மஜ்லிஸ் இ இதிஹாத் உல் முஸ்லிமின்(ஐஏஎம்ஐஎம்) கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி சாடியுள்ளார். திருமணத்துக்காக மதம் மாறுதல், கட்டாய மதமாற்றம், லவ் ஜிகாத் ஆகியவற்றுக்கு எதிராக உத்தரப்பிரதேச அரசு முதலில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது; இதுதான் மோடி அரசு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு https://ift.tt/3mTwCde

படம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாடுமுழுவதும் நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட வேலை இழப்புகள் குறித்த ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளை மேற்கோள் காட்டி முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், "வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், பணவீக்கத்தால் பொதுமக்கள் சித்ரவதை செய்யப்படுகிறார்கள், விவசாயிகள் தங்கள் நண்பர்களின் (மிட்ரா) சட்டத்தால் தாக்கப்படுகிறார்கள், இதுதான் மோடி அரசு. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு ஜனவரி 7-ம் தேதி வரை விமானங்கள் ரத்து https://ift.tt/2KCdNON

படம்
பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு விமானங்கள் வருவதை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் நடவடிக்கையை ஜனவரி 7-ம் தேதி வரை நீட்டித்து மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில் புதிய வகை கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விதித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஸ்ரீநகரில் தீவிரவாதி சுட்டுக்கொலை https://ift.tt/3rxE6WO

படம்
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர். ஸ்ரீநகரில் பரிம்போரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து பாதுகாப்புப் படையினர் நேற்று மாலை அப்பகுதிக்கு விரைந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஓட்டுநர் அருகில் அமரும் பயணி இருக்கைக்கும் காற்றுப்பை கட்டாயம்: கருத்துக்கேட்பு https://ift.tt/37YuI6T

படம்
ஓட்டுlருக்கு அருகில் அமரும் பயணி இருக்கைக்கும் காற்றுப்பை அமைப்பதை கட்டாயமாக்குவது பற்றி பொதுமக்கள் கருத்துக் கோரப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஓட்டுனருக்கு அருகில் முன் இருக்கையில் அமரும் பயணிக்கும் காற்றுப்பை வசதி அளிப்பதை கட்டாயமாக்க சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்