இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

‘‘3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்’’ - மேற்குவங்க  முன்னாள் தலைமைச் செயலாளருக்கு மத்திய அரசு நோட்டீஸ் https://ift.tt/3p7QcoG

படம்
பிரதமர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்தது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என மேற்குவங்க மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் அலபன் பண்டோபாத்யாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. யாஸ் புயல் மற்றும் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். மேற்குவங்கத்தில் விமானம் மூலம் புயல் பாதிப்புகளை பிரதமர் நேரடியாக கண்டறிந்த பிறகு மேற்குவங்க முதல்வர் மற்றும் அதிகாரிகள் பங்குபெறும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

செல்போன் செயலியில் மதுபானங்கள் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே டோர் டெலிவரி: டெல்லி அரசு அறிவிப்பு https://ift.tt/34BOUJa

படம்
மதுபானங்களை மொபைல் செயலி, அரசின் இணையதளம் மூலம் ஆர்டர் செய்தால், வீட்டுக்கே டோர் டெலிவரி செய்யப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு இன்று அறிவித்துள்ளது. டெல்லி சுங்கவிதிகள் 2021ன்படி, எல்-13, எல்-14 உரிமம் வைத்துள்ள மதுக்கடை உரிமையாளர்கள் மட்டும் மொபைல் செயலி, இணையதளம் மூலம் பெறும் ஆர்டர்களை வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே சென்று சப்ளை செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முழு உடல் கவசம், முகக் கவசங்களை இனி மீண்டும் பயன்படுத்தலாம்: கிருமிகளை நீக்கும் வஜ்ரா இயந்திரம் https://ift.tt/3iaU07g

படம்
கரோனா முன்களப் போராளிகள் பயன்படுத்தும் உபகரணங்களில் இருக்கும் தொற்றுக்களை நீக்குவதற்காக வஜ்ரா கவசம் என்ற இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த இந்திரா வாட்டர் தயாரித்துள்ள கிருமி நாசினி இயந்திரம், முழு உடல் கவசம், என் 95 முகக் கவசங்கள், உடைகள், கையுறைகள் போன்றவற்றில் தென்படும் தொற்றின் தடயங்கள் முழுவதையும் நீக்குகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தொடர்ந்து குறையும் கரோனா பாதிப்பு; 50 நாட்களுக்கு பிறகு 1,27,510 ஆக சரிவு  https://ift.tt/3wH7GLa

படம்
இந்தியாவில் கரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,27,510 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது கடந்த ஏப்ரல் 9-ம் தேதிக்கு பிறகு குறைந்த எண்ணிக்கையாகும். கரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. கடந்த 50நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,27,510 ஆக குறைந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸுக்கு இரு புதிய பெயர்கள்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

படம்
இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸுக்கு இந்தியாவின் பெயரை முதலில் வைத்து அழைக்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதற்கு இரு புதிய பெயர்களை உலக சுகாதார அமைப்பு நேற்று அறிவித்துள்ளது. இதன்படி இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய பி.1.617.1 வகை வைரஸுக்கு “கப்பா” (Kappa) என்றும், 2-வதாக கண்டறியப்பட்ட பி.1.617.2 வைரஸுக்கு “டெல்டா” (Delta) என்றும் உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பொருளாதாரத்தை புரட்டி எடுக்கும் கரோனா 2-வது அலை: 1 கோடி பேருக்கு வேலையிழப்பு https://ift.tt/3c7zZed

படம்
கரோனா இரண்டாவது அலையால் நாடுமுழுவதும் ஒரு கோடி பேர் வேலையிழந்துள்ளனர். இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு உலகளவில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. மனிதர்களுக்கு உடல்ரீதியான பாதிப்புகளையும், உயிர்களையும் காவு வாங்கியதோடு மட்டுமல்லாமல் உலகப்பொருாதாரத்தையும் புரட்டிப்போட்டது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள அமெரிக்கா கூட பெரிய அளவில் பொருளாதார பாதிப்புக்கு ஆளானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

லட்சத்தீவு வரைவு சட்டங்கள்; மக்களிடம் கருத்துக் கேட்கப்படும்: அமித் ஷா  https://ift.tt/3wNyQQC

படம்
லட்சத்தீவு தொடர்பான புதிய வரைவு சட்டங்கள், அங்குள்ள மக்களின் கருத்துக்களை கேட்ட பின்பே அமலுக்கு வரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார். லட்சத்தீவு எம்.பி. முகமது பைசல் தெரிவித்துள்ளார். யூனியன் பிரதேசமான லட்சத் தீவு நிர்வாகி பிரபுல் படேல் லட்சத்தீவு மேம்பாடு மற்றும் சமூக விரோத செயல்களுக்கு தடை விதிப்பது தொடர்பான இரு வரைவு சட்டங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராஜஸ்தான் சுரு பகுதியில் 45.5 டிகிரி செல்சியஸ் வெப்பம்; இனியும் அனல் காற்று வீசுமா? https://ift.tt/3wLzRIX

படம்
நாட்டில் எங்கும் அனல் காற்று வீச வாய்ப்பில்லை என தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு இயல்பான அளவு இருக்கும் என முன்கூட்டியே கணிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே இந்த வழக்கத்தை விட முன்கூட்டியே கேரளாவில் 31-ம் தேதியே பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என்று தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்து இருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாபா ராம்தேவை கண்டித்து இன்று கருப்பு தினம் அனுசரிக்க டாக்டர்கள் முடிவு https://ift.tt/34y3FN4

படம்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யோகா குரு பாபா ராம்தேவ், அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது என்று கருத்து தெரிவித்தார். இதற்கு டாக்டர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, ராம்தேவுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கண்டனம் தெரிவித்த பின்னர் ராம்தேவ் மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பினார். எனினும் உத்தராகண்ட் மாநில இந்திய மருத்துவக் கவுன்சில் (ஐஎம்ஏ), ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்நிலையில் பாபா ராம்தேவை கண்டித்து ஜூன் 1-ம் தேதி (இன்று) கருப்பு தினம் அனுசரிக்க டாக்டர் சங்க கூட்டமைப்பு (எப்ஓஆர்டிஏ) முடிவு செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆயுர்வேத கரோனா மருந்துக்கு ஆந்திர அரசு அனுமதி https://ift.tt/2R9DhGt

படம்
ஆந்திராவின் நெல்லூர் கிருஷ்ணப் பட்டினம் அருகே முத்துக்கூறு பகுதியை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தைய்யா, பொதுமக்களுக்கு 3 வகையான கரோனா தடுப்பு மருந்தை இலவசமாக வழங்கி வந்தார். கண்களில் விடும் சொட்டு மருந்தையும் வழங்கி வந்தார். நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருந்துக் காக கிருஷ்ணப்பட்டினத்தில் குவிந்தனர். இதுகுறித்து அறிந்த முதல்வர் ஜெகன் மோகன், கரோனா பரவும் அபாயம் இருப்பதை உணர்ந்து, மருந்து விநியோகத்தை நிறுத்த உத்தரவிட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உத்தரபிரதேசத்தில் கரோனாவால் உயிரிழக்கும் பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் https://ift.tt/3p7Zcdt

படம்
உத்தரபிரதேசத்தில் நேற்று இந்தி மொழி பத்திரிகையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நாளை ஒட்டி உ.பி.யின் அனைத்து இந்திபத்திரிகையாளர்களுக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்துதெரிவித்தார். அப்போது, கரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையாக வழங் கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார். ஆதித்யநாத் வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்தி மொழி பத்திரிகையாளர்கள் நாட்டை முன்னேற்றுவதில் பெரும் பங்கு வகித்துள்ளனர். இவர்களு்க்கு ஆதரவளிப்பது எனது கடமை. தற்போதைய சூழலில் உயிரை பணயம் வைத்து இந்தி மொழிபத்திரிகையாளர்கள் கரோனா தொற்று தொடர்பான செய்திகளை துல்லியமாக அளிப்பது உதவியாக உள்ளது’ எனக் குறிப் பிட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வேதனையில் இருப்பதாக சோனியாவுக்கு கடிதம் அனுப்பிய ரமேஷ் சென்னிதலா: பதவி வழங்காததால் அதிருப்தி; கேரள காங்கிரஸில் அடுத்த குழப்பம் https://ift.tt/3fyHSeB

படம்
கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதனால் கேரளத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் என்னும் நாற்பதாண்டு கால வரலாறும் மாறியிருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா கடிதம் எழுதியுள்ளார். கேரள காங்கிரஸில் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் ஓர் அணியும், ரமேஷ் சென்னிதலா தலைமை யில் ஓர் அணியும் செயல்படுகின்றன. கேரளத்தில் மொத்தமுள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் தலைமையிலான எல்.டி.எப் கூட்டணி 99 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான யூ.டி.எப் கூட்டணி 41 இடங்களிலும் வென்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜூலை மாத இறுதிக்குள் கோவாக்சின் உற்பத்தி 12 கோடியை எட்டும்: டாக்டர் என்.கே. அரோரா தகவல் https://ift.tt/3i88wMX

படம்
கரோனா தடுப்பூசி மருந்து களில் ஒன்றான கோவாக்சின் உற்பத்தி ஜூலை மாத இறுதிக்குள் 25 கோடியை எட்டும் என்றுதேசிய கோவிட் தடுப்பூசி உற்பத்தி குழுவின் ஆலோசனைக் குழு தலைவர் டாக்டர் என்.கே. அரோரா தெரிவித்தார். நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனாதடுப்பூசி போடும் பணிகள்தொடங்கியதால் தடுப்பூசிகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நீண்ட நேர ஆன்லைன் வகுப்பு: பிரதமரிடம் காஷ்மீர் சிறுமி புகார் https://ift.tt/3vD4wIk

படம்
நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுவதாகவும் குழந்தைகளுக்கு அதிக வேலை கொடுப்பதாகவும் காஷ்மீரைச் சேர்ந்த 6 வயது சிறுமி பிரதமர் மோடியிடம் புகார் கூறும் காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கரோனா தொற்று காரணமாகமக்கள் வீடுகளில் முடங்கியிருக்கும் நிலையில், பள்ளிப் பாடங்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் நடத்தப்படுகின்றன. ஆன்லைன் வகுப்புகள் நீண்டநேரம் நடப்பதால் குழந்தைகளுக்கு அதிகவேலை இருப்பதாக காஷ்மீரைச் சேர்ந்த 6 வயது சிறுமி பிரதமர்மோடியிடம் புகார் தெரிவித்துள் ளார். 45 நிமிடங்கள் ஓடும் அந்தக்காட்சியை ஒளரங்கசீப் நக் ஷ் பண்டி என்ற பத்திரிகையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமரிடம் புகார் கூறிசிறுமி பேசும் காட்சி இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சிறுமி கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பம்: இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனம் சாதனை https://ift.tt/3vFQZjd

படம்
கரோனா வைரஸ் தொற்று உலகை பெருமளவில் பாதித்துள்ளது. ஆனாலும் பல்வேறுஉயிர்க்கொல்லி நோய்களால் பலர் உயிரிழப்பது தொடர்கதையாகவே உள்ளது. அதிலும் வலியும், வேதனையை அளிக்கும் நோய்களில் பிரதானமானது புற்றுநோயாகும். புற்றுநோய்க்கு உலகம் முழுவதும் 2020-ல் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு கோடி. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் உயிரிழப்பு 57 லட்சம். உலகம் முழுவதும் மருத்துவத் துறை மேம்பட்ட போதிலும் சிறிய வயதில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக புற்றுநோய்க்கு பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஎஃப் கணக்கில் இருந்து மீண்டும் முன்பணம் எடுக்க அனுமதி https://ift.tt/3p8RMa3

படம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (பிஎஃப்) இருந்து முன்பணம் எடுத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக மத்திய தொழி லாளர், வேலைவாய்ப்புத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா பிரச்சினையை பிரதமர் மோடி சிறப்பாக கையாண்டதாக 63% பேர் ஆதரவு https://ift.tt/3uCx5oa

படம்
கரோனா பிரச்சினையை பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக கையாண்டதாக 63 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி 2-வது முறையாக பதவி யேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந் துள்ளது. இதுதொடர்பாக ஏபிபி தொலைக்காட்சி, சி-வோட்டர் இணைந்து மக்களிடையே கருத் துக் கணிப்பு நடத்தின. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மருத்துவமனைகளுக்கு ரூ. 2 கோடி; கரோனா சிகிச்சை பெற ரூ.5 லட்சம் வரை கடன்: பொதுத்துறை வங்கிகள் அறிவிப்பு https://ift.tt/3i2OKmd

படம்
கரோனா மருத்துவ சிகிச்சைக்கு தனி நபர்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப் படும் என பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன. மாத சம்பளம் பெறுவோர் மற்றும் இதர பிரிவினர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரும் இத்தகைய கடன் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் எவ்வித பிணையும் இல்லாமல் இந்த கடன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா பரவல் அதிகரிப்பு காரண மாக பொருளாதார சூழல் கடுமையாக மாறியுள்ள தாகவும், நாடு முழுவதும் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடிக்கு பணப்புழக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தற்காப்புக் கலை பயிற்சிக்கு வந்த பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: ஜூடோ மாஸ்டர் கைது  https://ift.tt/3fZH3ub

படம்
தற்காப்புக் கலை பயிற்சிக்கு வந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, இளம்பெண் அளித்த புகாரின் பேரில் ஜூடோ மாஸ்டரை போலீஸார் கைது செய்தனர். சென்னையில் பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து இதேபோன்று பாதிக்கப்பட்ட மற்ற பள்ளி மாணவிகள் புகார் அளித்து வருவதைத் தொடர்ந்து மற்றொரு பள்ளியின் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். மற்றுமொரு பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கும்பகோணம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதல்: கணவன் - மனைவி பலி https://ift.tt/2S0Noh3

படம்
கும்பகோணம் அடுத்த கள்ளப்புலியூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே கணவன், மனைவி இருவரும் பலியாகினர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சோமு (60). இவரது மனைவி மீனா (55), இவர்களின் மருமகன் ரமேஷ் (36) ஆகிய மூவரும் கும்பகோணத்தில் உள்ள ஓட்டலில் சமையல் செய்வதற்காக ஒரே இருசக்கர வாகனத்தில், இன்று காலை சென்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

12ஆம் வகுப்புத் தேர்வுகள் குறித்து 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் https://ift.tt/3yRJ3gY

படம்
கரோனா வைரஸ் பரவல்களுக்கு மத்தியில் 12ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து அடுத்த 2 நாட்களில் மத்திய அரசு உரிய முடிவு எடுக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுத் தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டது. வழக்கறிஞர் மம்தா சர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

18- வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 2021 இறுதிக்குள் கரோனா தடுப்பூசி: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு https://ift.tt/3c7Spvj

படம்
நாடுமுழுவதும் 18- வயதுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த இந்திய குடிமக்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் கண்டிப்பாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. நாட்டில் கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்கள், 2-வது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 3-வது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது. ஆனால், கரோனா தடுப்பூசி பற்றாக்குறை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் உட்பட பலர் மத்திய அரசை குறை கூறி வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனாவைக் கையாள்வதில் தோல்வி: பிரேசில் அதிபர் பதவி விலகக் கோரி பிரம்மாண்ட பேரணி

படம்
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா பதவி விலக வலியுறுத்தி போராட்டக்காரர்கள் பல்வேறு நகரங்களில் பேரணிகளை நடத்தினர். இந்தப் பேரணிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். ஜெய்ர் போல்சனோரா கரோனா வைரஸ் விவகாரத்தைச் சரியாகக் கையாளவில்லை என்றும், அவரது அரசியல் அணுகுமுறை காரணமாக பிரேசிலில் லட்சக்கணக்கான மக்கள் கரோனாவுக்குத் தங்கள் உயிரை பலி கொடுத்துள்ளனர் என்றும் பிரேசில் சமூக ஆர்வலர்களும், எதிர்க்கட்சிகளும் கடந்த ஓராண்டுக்கும் மேலாகக் குரல் கொடுத்து வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் https://ift.tt/3yQp9mn

படம்
லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பிரஃபுல் கோட்டா படேலைத் திரும்பப் பெற வேண்டும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கேரள சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. லட்சத்தீவுக்குப் புதிய நிர்வாகியாக குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பிரஃபுல் கோடா படேல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். அப்போது இருந்து அவர் செய்துவரும் பல்வேறு சீர்திருத்தங்கள் லட்சத்தீவில் பூர்வகுடிகளாக வாழ்ந்துவரும் மக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் வகையில் இருப்பதால், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக லட்சத்தீவு மேம்பாட்டு ஆணைய ஒழுங்கு முறை ஆணைய வரைவு மசோதா பெரும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத்திய விஸ்டா திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது; தொடர்ந்து பணிகள் நடக்கலாம்: மனுவைத் தள்ளுபடி செய்து ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது டெல்லி உயர் நீதிமன்றம் https://ift.tt/3c0LnIH

படம்
மத்திய விஸ்டா திட்டத்தை நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், “மத்திய விஸ்டா திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தக் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடக்கலாம்" என்று மனுவைத் தள்ளுபடி செய்து இன்று தீர்ப்பளித்தது. இந்த மனு உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உண்மையான பொதுநல மனு அல்ல என்பதால், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘‘ஒரு தலைபட்சமானது’’- மேற்குவங்க மாநில தலைமைச் செயலாளரை அனுப்ப முடியாது: பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் https://ift.tt/3wHJXL2

படம்
மேற்குவங்க மாநில தலைமைச் செயலாளரை டெல்லிக்கு அழைக்கும் உத்தரவை ஏற்க முடியாது என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசின் முடிவு அதிர்ச்சியளி்ப்பதாகவும், ஒரு தலைபட்சமானது எனவும் விமர்சித்துள்ளார். யாஸ் புயல் மற்றும் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். மேற்குவங்கத்தில் விமானம் மூலம் புயல் பாதிப்புகளை பிரதமர் நேரடியாக கண்டறிந்த பிறகு மேற்குவங்க முதல்வர் மற்றும் அதிகாரிகள் பங்குபெறும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹாட் லீக்ஸ்: தீதிக்கு திகில் கொடுக்குமா பாஜக? https://ift.tt/3p8JsHs

படம்
மேற்கு வங்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள மம்தா பானர்ஜி, தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோற்றுப் போனதால் இப்போது எம்எல்ஏ-வாக இல்லாமலேயே முதல்வராக நீடிக்கிறார். அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவரது பழைய தொகுதியான பவானிபூரில் வென்ற ஷோபன் தேவ் சட்டோபாத்யாய் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அடுத்த ஆறு மாதங்களுக்குள் இங்கே இடைத் தேர்தல் நடத்தப்பட்டு இங்கிருந்து மம்தா எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், வங்கத்தில் எட்டு கட்டமாக நடந்த தேர்தல்களால் தான் கரோனா இரண்டாவது அலை அங்கே தீவிரமாக பரவிவிட்டது என்ற குற்றச்சாட்டு இருப்பதால் உடனடியாக இடைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகாது என்கிறார்கள். தீதிக்கு பாஜக திகில் கொடுக்க நினைத்தால், கரோனாவை காரணம் காட்டி அங்கே இடைத் தேர்தல் நடத்தும் நடவடிக்கைகளையும் கிடப்பில் போடலாம் என்கிறார்கள். மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம் from இந்து தமிழ் திசை : News in Tamil, L...

இந்தியாவில் தொடர்ந்து குறையும் கரோனா பாதிப்பு; 1,52,734 ஆக சரிவு  https://ift.tt/3fAL89f

படம்
இந்தியாவில் கரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,52,734 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. கடந்த 45நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,73,790குறைந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்துக்கு 1808 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் https://ift.tt/3c1v7ag

படம்
ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் தமிழகத்துக்கு 1808 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே பல மாநிலங்களுக்கு இதுவரை 1274க்கும் மேற்பட்ட டேங்கர்களில் 21,392 மெட்ரிக் டன்னுக்கும் மேற்பட்ட மருத்துவ ஆக்சிஜனை விநியோகித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 3-ம் தேதி தொடங்கும்: தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் https://ift.tt/3c1v12o

படம்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 3 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் 1-ம்தேதி தொடங்கும் பருவமழை ஒருநாள் முன்கூட்டியே கேரளாவில் தொடங்குகிறது. நாட்டுக்கு அதிகமான இந்தியாவிற்கு அதிகமான மழைப் பொழிவைக் கொடுக்கும் பருவமழையான தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரை பரவலாக மழை பெய்யும். தென்மேற்குப் பருவமழை வாயிலாகத்தான் நாட்டிற்குத் தேவைப்படும் 75 சதவீத வருடாந்திர மழை ஜூன் முதல் செப்டம்பர் வரை கிடைக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யக் கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை: இரு வாய்ப்புகள் குறித்து சிபிஎஸ்இ ஆலோசனை https://ift.tt/2SFUrMn

படம்
கரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் 12-ம்வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லை அதை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுக்கிறது. அதேசமயம், 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யலாமா அல்லது நடத்தலாமா என்பது குறித்து ஜூன் 1-ம்தேதி(நாளை)க்குள் மத்திய அ ரசு முடிவு எடுக்க இருக்கிறது. இதற்கிடையே சிபிஎஸ்ஸி இரு வாய்ப்புகள் குறித்து ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோவிட் தேசிய தடுப்பூசித் திட்டம்; ஜூன் மாதத்தில் 12 கோடி கரோனா தடுப்பூசி வழங்க மத்திய அரசு இலக்கு  https://ift.tt/3p3tYnQ

படம்
கோவிட் தேசிய தடுப்பூசித் திட்டத்தில் ஜூன் மாதத்திற்கு சுமார் 12 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் மாதம் முழுவதிற்கும் வழங்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தால் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுமென மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: மே 2021 இல் தேசிய கோவிட் தடுப்பூசி திட்டத்திற்கு 7,94,05,200 டோஸ்கள் கிடைத்தன. கோவிட் பரிசோதனை, நோய்க்கண்டறிதல், அதற்கான சிகிச்சை அளித்தல் மற்றும் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் ஆகியவற்றுடன், தடுப்பூசி என்பது கோவிட் வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான மத்திய அரசின் ஒருங்கிணைந்த மற்றும் விரிவான உத்திகள் ஆகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத்திய விஸ்டா திட்டத்தை நிறுத்த உத்தரவிடக் கோரும் வழக்கு: டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு https://ift.tt/3c46Ro7

படம்
டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றம் உள்ளடங்கிய மத்திய விஸ்டா திட்டத்தை நிறுத்தக் கோரி தாக்கல் செய்த மனு மீது டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. இந்த வழக்கில் மனுதாரர், அரசு தரப்பில் வாதங்கள் மு டிந்தநிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்த நிலையில் டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திருபாய் நிரன்பாய் படேல் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு அளிக்க உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

7 ஆண்டுகளில் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக பிரதமர் மோடி மாற்றியுள்ளார்: அமித் ஷா பெருமிதம் https://ift.tt/3fAXZIF

படம்
7 ஆண்டுகளில் பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, தனது வலுவான தலைமையால் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக பிரதமர் மோடி மாற்றியுள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம் சூட்டியுள்ளார். மோடி பிரதமராக பொறுப்பேற்று நேற்றுடன் 7 ஆண்டுகள் நிறை வடைந்தன. இதையொட்டி பாஜகசார்பில் நேற்று ‘சேவை தினம்’ கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் கரோனா 2-வது அலை தீவிரமாக உள்ள நிலையில் பெரிய அளவில் கொண்டாட்டங்கள் நடைபெறவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சைவ பால் தயாரிக்க ‘அமுல்’ நிறுவனத்துக்கு கடிதம்: பால் உற்பத்தியில் கை வைக்க முயற்சிக்கிறது ‘பீட்டா’ https://ift.tt/3c5bttW

படம்
‘‘மாட்டுப் பாலுக்குப் பதில் சோயா பால் உட்பட சைவ பால் உற்பத்திக்கு மாற வேண்டும்’’ என்று இந்தியாவின் மிகப்பெரிய அமுல் நிறுவனத்துக்கு ‘பீட்டா’ அமைப்பு கடிதம் எழுதி உள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பி உள்ளது. விலங்குகள் நல உரிமை அமைப்பான ‘பீட்டா’ அமெரிக்காவின் வெர்ஜினியாவில் உள்ள நார்போல்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இறைச்சிக்காகவும், தோல் ஆடைகளுக்காகவும், ஆய்வுக் கூடங்களில் சோதனை செய்வதற்கும், சர்க்கஸ் போன்ற பொழுது போக்குகளுக்காகவும் விலங்குகள் பயன்படுத்துவதை எதிர்த்து வருகிறது. விலங்குகளை சித்ரவதை செய்ய கூடாது என்று பிரச்சாரம் செய்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 7-ம் ஆண்டு நிறைவு: ஒரு லட்சம் கிராமங்களில் பாஜக தொண்டர்கள் கரோனா சேவை https://ift.tt/3yRF4B5

படம்
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, மே 26-ம் தேதி நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். அதன் பிறகு 2019-ல் நடைபெற்ற தேர்தலிலும் பாஜக அமோக வெற்றி பெற்றதை யடுத்து மோடி மே 30-ம் தேதி 2-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். மோடி பிரதமராக பொறுப்பேற்று நேற்றுடன் 7 ஆண்டுகள் நிறை வடைந்தன. இதையொட்டி பாஜகசார்பில் நேற்று ‘சேவை தினம்’ கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் கரோனா 2-வது அலை தீவிரமாக உள்ள நிலையில் பெரிய அளவில் கொண்டாட்டங்கள் நடைபெறவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உத்தர பிரதேசத்தின் பாரபங்கியை அடுத்து முசாபர் நகரிலும் மசூதி இடிக்கப்பட்டது https://ift.tt/3uCqKZA

படம்
பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், கடந்த மார்ச்சில் ஒரு முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டார். அதில், 2011-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு பிறகு அரசு மற்றும் பொது இடங்களில் ஆக்கிரமித்து கட்டப்படும் அனைத்து மத புனிதத் தலங்கள் அகற்றப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து மாநிலத்தின் 75 மாவட்ட ஆட்சியர் மற்றும் மண்டல ஆணையர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதிலும் துவங்கிய நடவடிக்கையில் இரண்டு மசூதி கள் இடிக்கப்பட்டுள்ளன. இதில், ஒன்று பாரபங்கியில் ராம் ஸனேஹி காட் தாலுக்காவின் 100 வருடம் பழமையானதாகக் கருதப்படும் மசூதி. கடந்த 17-ம் தேதி இந்த மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து முசாபர் நகரின் கத்தோலி தாலுக்காவிலும் ஒரு மசூதி இடிக்கப்பட்டது. இதன் புதானா சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவம் உ.பி. முஸ்லிம் களை அதிர்ச்சியடைய வைத்துள் ளது. இந்த நிலம் சன்னி முஸ்லிம் வஃக்பு வாரியத்திற்கு சொந்தமானதாகக் கருதப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online:...

முஸ்லிம், கிறிஸ்தவருக்கு கல்வி உதவித் தொகை: கேரள அரசுக்கு நீதிமன்றம் புது உத்தரவு https://ift.tt/3fZ82Gf

படம்
கேரளாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் சிறுபான் மையினருக்கான கல்வி உதவித் தொகை முறையே 80:20 என்ற அளவில் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கேரள அரசு ஏற்கெனவே உத்தரவுகள் பிறப்பித்துள்ளது. இந்நிலையில், கல்வி உதவித் தொகை சதவீதம் மக்கள் தொகை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி கேரளாவில் 26.56 சதவீதம் முஸ்லிம்களும் 18.38 சதவீதம் கிறிஸ்துவர்களும் இதர சிறுபான்மையினர் 0.33 சதவீதமும் உள்ளனர். சிறுபான்மையினர் என்ற பிரிவை தனியாக எடுத்துக் கொண்டால் அதில் 58.67 சதவீதம் முஸ்லிம்களும் 40.06 சதவீதம் கிறிஸ்துவர்களும் உள்ளனர். எனவே, அதன் அடிப்படையில் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

1,000 டாக்டர்களை ஆயுர்வேதத்துக்கு மாற்றுவதற்கு பாபா ராம்தேவ் இலக்கு https://ift.tt/3p5CzXg

படம்
அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது என்று சமீபத்தில் பாபா ராம்தேவ் கூறியதற்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது. பின்னர், தனது கருத்துக்கு ராம்தேவ் வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில் ஹரித்வாரில் நடந்த யோகா முகாமில் பாபா ராம்தேவ் பேசியதாவது: அலோபதி மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தி வருவதால் எம்பிபிஎஸ், எம்.டி. படித்த டாக்டர்கள் யோகா மற்றும் ஆயுர்வேதத்தின் பக்கம் திரும்பி நமது முகாமில் கலந்து கொண்டுள்ளனர். சில அலோபதி டாக்டர்கள் தங்கள் தொழிலில் இருந்து விலகி நமது பாதையை பின்பற்ற முடிவு செய்துள்ளனர். அடுத்த ஒரு ஆண்டுக்குள் 1,000 அலோபதி மருத்துவர்களை ஆயுர்வேத மருத்துவர்களாக மாற்ற முடிவு செய்துள்ளேன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கனடா பழங்குடியின பள்ளியில் 215 குழந்தைகளின் எலும்பு கூடுகள் கண்டுபிடிப்பு: இனப் படுகொலை என குற்றச்சாட்டு

படம்
கனடா பழங்குடியின பள்ளி வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த குழந்தைகள் இனப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக பழங்குடியின தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் கடந்த 15-ம் நூற்றாண்டின் இறுதியில் கனடாவில் ஐரோப்பியர்கள் கால்பதித்தனர். ஆரம்பத்தில் பிரான்ஸ் ஆட்சியின் கீழ் இருந்த அந்த நாடு கடந்த 1763-ம்ஆண்டில் பிரிட்டன் கட்டுப்பாட்டில் வந்தது.1982-ல் கனடா தனிநாடாக உதயமானது. தற்போது வரை பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தே கனடாவின் ராணியாகவும் இருக்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா வைரஸ் பரவல் குறைந்தது; 11 நாட்டினருக்கான பயண தடையை நீக்கியது சவுதி அரேபியா

படம்
கரோனா பரவல் குறைந்து வருவதை யடுத்து, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 11 நாட்டினருக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை சவுதி அரேபியா நேற்று விலக்கிக் கொண்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடப்பாண்டு தொடக்கம் முதலே கரோனா 2-ம் அலை வேகமெடுக்க தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா, பாகிஸ்தான், அர்ஜென்டினா, பிரான்ஸ் உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்தவர்கள் சவுதி அரேபியா வருவதற்கு அந்நாடு கடந்த பிப்ரவரி மாதம் தடை விதித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா உறுதியாக வெல்லும்: ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நம்பிக்கை https://ift.tt/3wDB8Sg

படம்
''கரோனாவுக்கு எதிரான முதல் அலையில் நாம் துணிச்சலுடன் போரிட்டோம். இந்த 2-வது அலையில் இந்த தேசம் நடத்திவரும் போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம். பல இயற்கை இடர்ப்பாடுகள் வந்தபோதும், மக்கள் துணிச்சலாக எதிர்கொண்டு, ஒழுக்கத்துடன், பொறுமையுடன் நடந்துகொள்வது பெருமையாக இருக்கிறது. அனைத்து மக்களையும் வணங்குகிறேன்'' என்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியி்ல பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று 77-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மெகுல் சோக்ஸியை அழைத்துவர தனி விமானம்; எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்: டோமினிக்கா அரசிடம் மத்திய அரசு கோரி்க்கை

படம்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி மோசடி செய்து தப்பித்த தொழிலதிபர் மெகுல் சோக்ஸி தற்போது டோமினிக்கா அரசின் வசம் உள்ளார். அவரை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள் என்று இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மெகுல் சோக்ஸியை அழைத்துவரத் தேவையான ஆவணங்களுடன் இந்தியாவிலிருந்து தனி விமானம் டோமினிக்காவுக்கு வந்துள்ளதாக ஆன்டிகுவா பர்படாஸ் பிரதமர் கேஸ்டன் பிரவுன் தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் 2.76 லட்சம் பேர் ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பினர்: 46 நாட்களில் மிகக்குறைவாகப் பதிவான தொற்று https://ift.tt/3hZzUgh

படம்
இந்தியாவில் கடந்த 46 நாட்களில் மிகக்குறைவாக 24 மணி நேரத்தில் 1.65 லட்சம் பேருக்குத் தொற்று ஏற்பட்டது. 2.76 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிளாக் ஃபங்கஸ் தொற்றைக் குணமாக்கும் ஆம்போடெரசின் பி மருந்து 2 லட்சம் டோஸ்கள் இந்தியா வந்தன https://ift.tt/34BNazz

படம்
பிளாக் ஃபங்கஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று நோையக் குணப்படுத்தும் ஆம்போடெரசின்-பி மருந்து 2 லட்சம் டோஸ்கள் இந்று அதிகாலை இந்தியா வந்து சேர்ந்தன. இந்தியாவில் கரோனா தொற்று மெல்லக் குறைந்து வருகிறது. 4 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் படிப்படியாக்க குறைந்து 2 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நட்சத்திர ஹோட்டல்களுடன் இணைந்து தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி முகாம் நடத்தத் தடை: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு https://ift.tt/3i4Pnf8

படம்
தனியார் மருத்துவமனைகள், நட்சத்திர ஹோட்டல்களுடன் இணைந்து தடுப்பூசி முகாம் நடத்துவது தேசிய தடுப்பூசி வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு முரணானது. இதை மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் மனோகர் அகானி மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன், தனது காதலி கேரி சைமண்ட்ஸை மணந்தார்: லண்டனில் எளிமையாக நடந்த திருமணம்

படம்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான் தனது 56 வயதில் தனது காதலியான 33 வயதான கேரி சைமண்ட்ஸை நேற்று திருமணம் செய்தார் என பிரிட்டன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. லண்டனில் உள்ள ரோமன் கத்தாலிக்க வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக முறையில் இருவரின் திருமணமும் நடந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மோடி அரசின் 7-வது ஆண்டுவிழா: ஒரு லட்சம் கிராமங்களில் பாஜக தலைவர்கள் கரோனா நிவாரண நடவடிக்கை https://ift.tt/3fDrnhD

படம்
பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2014ம் ஆண்டு பதவி ஏற்று 7 ஆண்டுகள் நிறைவு செய்ததையடுத்து, நாடுமுழுவதும் ஒரு லட்சம் கிராமங்களில் கரோனா விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகளிலும், நிவாரண நடவடிக்கைகளிலும் பாஜக தலைவர்கள் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இது குறித்து பாஜக மூத்த தலைவரும் எம்.பியுமான அனில் பலூனி கூறுகையில் “ நாட்டில் கரோனா வைரஸ் பரவல் இருப்பதால், மோடி அரசின் 7-வது ஆண்டு விழாவை பாஜக கொண்டாடவில்லை. அதற்குப் பதிலாக மத்திய அமைச்சர்கள் முதல் கிாாமங்களில் பூத் அளவில் இருக்கும் நிர்வாகிகள் வரை கரோனா விழிப்புணர்வு, நிவாரண நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்