இடுகைகள்

அக்டோபர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இடைக்கால ஜாமீனில் சந்திரபாபு நாயுடு விடுதலை https://ift.tt/DdNMyf4

படம்
நிதி ராஜமுந்திரி: வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, நேற்று இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த 2011-ம் ஆண்டு, சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில்திறன் மேம்பாட்டு நிதியில் ரூ.371 கோடி முறைகேடு நடந்ததாக சிஐடிபோலீஸார் கடந்த செப்டம்பர் 9-ம்தேதி அவரை கைது செய்து ராஜமுந்திரி சிறையில் அடைத்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உத்தரபிரதேசம் | சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது: உயிர் சேதம் இல்லை https://ift.tt/RvknTtE

படம்
பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்துக்கு அருகில் சுஹேல்தேவ் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது. செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி அளவில் இந்த அதிவிரைவு ரயிலின் என்ஜின் மற்றும் 2 பெட்டிகள் தடம்புரண்டன. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனை வடக்கு சென்ட்ரல் ரயில்வே பிரிவு உறுதி செய்துள்ளது. “சுஹேல்தேவ் எக்ஸ்பிரஸ் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் என்ஜினின் இரண்டு சக்கரங்கள் தடத்தில் இருந்து வெளியேறியது. இதனால் என்ஜினை அடுத்த இரண்டு பெட்டிகளும் தடம்புரண்டன. இதில் உயிரிழப்பு ஏதும் இல்லை. இந்த தடத்தில் ரயில் சேவை இயல்பு நிலையில் உள்ளது. செவ்வாய்க்கிழமை 9 மணி அளவில் இது நடந்தது. தற்போது இந்த ரயில் புறப்பட உள்ளது. ரயில் தடம்புரண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்” என வடக்கு செனட்ரல் ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி ஹிமான்ஷு சேகர் உபாத்யா தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thi...

“நான் அவன் இல்லை” - தனது AI டீப் ஃபேக் வீடியோ குறித்து ஜோ பைடன்

படம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை நெறிமுறை செய்வதற்கான உத்தரவு ஒன்றை திங்கட்கிழமை அன்று வெளியிட்டார். அமெரிக்க நாட்டில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனை அறிவித்தார். அப்போது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட தனது டீப் ஃபேக் வீடியோவை தான் பார்த்ததாகவும் தெரிவித்தார். “ஏஐ சாதனங்கள் மக்களை ஏமாற்ற பயன்படுத்தப்படுகின்றன. அது சங்கடம் தருகிறது. ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட ஆடியோ மற்றும் வீடியோவை கொண்டு டீப் ஃபேக் மூலமாக ஒருவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும், மோசடி செய்யவும், போலி செய்திகளை பரப்பவும், குற்ற செயலில் ஈடுபடவும் செய்கின்றனர். ஒருவரின் மூன்று நொடி குரல் பதிவே இதற்கு போதும். அண்மையில் எனது டீப் ஃபேக் வீடியோவை நான் பார்த்தேன். ‘நான் எப்போது இதை சொன்னேன்’ என்று தான் அதை பார்த்ததும் நான் நினைத்தேன்” என தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இலக்கியம் மூலம் இந்தியர்களை இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்த நினைத்தேன்: எழுத்தாளர் சிவசங்கரி பேட்டி https://ift.tt/3dsJpIP

படம்
இலக்கியத்தை பயன்படுத்தி இந்தியர்களை இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என நினைத்தேன் என்று எழுத்தாளர் சிவசங்கரி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மனதின் குரல் 106-வது நிகழ்ச்சியில் கடந்த 29-ம் தேதி உரையாற்றினார். அப்போது, தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி இலக்கியம் மூலம் நாட்டை இணைத்து வருவது குறித்து பாராட்டி பேசினார். இதுகுறித்து எழுத்தாளர் சிவசங்கரி அளித்த பேட்டி: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேர்தல் பத்திரம் திட்டத்தில் விதிமீறல் இல்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் https://ift.tt/FgZI2Md

படம்
புதுடெல்லி: தேர்தல் பத்திரம் திட்டம் சட்டப்பூர்வமானது. இந்த திட்டத்தில் எந்தவொரு சட்ட விதிகளும் மீறப்படவில்லை. யாருடைய உரிமையும் மீறப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த 2017-18-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. இதன்படி பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட வங்கி கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். பொதுவாக ஒரு மாதத்தில் 10 நாட்களுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் வழங்கப்படும். எனினும் தேர்தல் காலத்தில் மட்டும் ஒரு மாதத்தில் 30 நாட்கள் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காவிரி ஆற்றிலிருந்து தமிழகத்துக்கு 2,600 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு பரிந்துரை https://ift.tt/IjNMGcm

படம்
புதுடெல்லி/பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரியில் நவம்பர் 15-ம் தேதி வரை விநாடிக்கு 2,600 கன அடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு கர்நாடக அரசும் அந்த மாநில விவசாய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கடந்த 15-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் அக்.30-ம் தேதி வரை தமிழகத்துக்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டது. இதைக் கண்டித்து மண்டியாவில் கன்னட அமைப்பினரும் விவசாய சங்கத்தினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதால் கடந்த 5 தினங்களாக 500 கனஅடி நீர் மட்டுமே திறக்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன்: நவ.2-ல் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு https://ift.tt/Pm2DRVY

படம்
புதுடெல்லி: டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக வரும் நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது சிபிஐ. இருந்தாலும் கடந்த ஆகஸ்ட் மாதம் சிபிஐ தாக்கல் செய்த இந்த வழக்கு தொடர்பான அறிக்கையில் கேஜ்ரிவால் குற்றவாளியாக குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் டெல்லியின் துணை முதல்வராக செயல்பட்ட மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க ‘மேரா யுவ பாரத்’ இணையதளம் தொடக்கம்: பிரதமர் மோடி அறிவிப்பு https://ift.tt/opT5tqK

படம்
புதுடெல்லி: ‘‘நாட்டின் முன்னேற்றத்துக்கான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக நாடு தழுவிய அளவில் ‘மேரா யுவ பாரத்’ இணையதளம் சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த நாளான அக்டோபர் 31-ம் தேதி தொடங்கப்படும்’’ என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றார். அதன்பிறகு அதே ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்ற வானொலி நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். அதன்பின் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மனதின் குரல் நிகழ்ச்சியில் காலை 11 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி தொடர்ந்து உரையாற்றி வருகிறார். அதன்படி, நேற்று வானொலியில் 106-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரளாவின் கொச்சி அடுத்த களமசேரியில் பயங்கரம்: கிறிஸ்தவ ஜெபக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு https://ift.tt/T3okjHm

படம்
கொச்சி: கேரளாவின் கொச்சி அடுத்த களமசேரியில் உள்ள கிறிஸ்தவ ஜெபக் கூட்டத்தில் அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்ததில் 2 பெண்கள் உயிரிழந்தனர். 52-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அடுத்த களமசேரியில் சாம்ரா சர்வதேச மையம் உள்ளது. இங்கு, கிறிஸ்தவர்களின் ஒரு பிரிவான ‘யெகோவாவின் சாட்சிகள்’ சபை சார்பில் 3 நாட்கள் ஜெபக்கூட்டம் நடத்தப்பட்டது. கடந்த 27, 28-ம் தேதிகளில் காலை முதல்மாலை வரை நடைபெற்ற ஜெபக்கூட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிறைவு நாளானநேற்று 2,400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆந்திரா ரயில் விபத்து | 12 ரயில்கள் ரத்து - ரயில்வே தகவல் https://ift.tt/8mkgLlS

படம்
சென்னை: ஆந்திர மாநிலத்தில் நின்றிருந்த பயணிகள் ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் சுமார் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், விபத்தை அடுத்து சம்பந்தப்பட்ட ரயில் தடத்தில் செல்லும் ரயில்களின் இயக்கத்தில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டுள்ளது கிழக்கு கடற்கரை ரயில்வே. இதுகுறித்து கிழக்கு கடற்கரை ரயில்வே செய்தித் தொடர்பாளர் பிஸ்வஜித் சாஹூ தெரிவித்தது. “விபத்தை அடுத்து 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுமார் 15 ரயில்கள் மாற்று தடத்தில் திருப்பி விடப்பட்டுள்ளன. 7 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகள் சம்பவ இடத்தில் சிக்கித் தவிக்காமல் இருக்க பேருந்து ஏற்பாடுகள் செய்துள்ளோம். ரயில் தடங்களை ஓரளவு மீட்டு விட்டோம். முதற்கட்ட தகவலின்படி நின்றிருந்த ரயில் மீது மோதிய மற்றொரு ரயிலுக்கான சிக்னல் சார்ந்த குளறுபடி காரணம் என சொல்லப்படுகிறது. ரயில்வே சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால...

ஆந்திராவில் பயணிகள் ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து: 6 பேர் பலி; 15+ காயம் https://ift.tt/HtnV9Wh

படம்
கண்டகப்பள்ளி: ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் பயணிகள் ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் சுமார் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல். விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா சென்ற பயணிகள் ரயில் (வண்டி எண் 08504) மீது விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா சென்ற ரயில் (வண்டி எண் 08532) மோதிய காரணத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று ரயில் பெட்டிகள் தடம்புரண்டது. கேபிள் பழுது காரணமாக நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் பின்புறமாக மோதி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

51 ஆயிரம் பேருக்கு பணி ஆணை: 37 நகரங்களில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வழங்கினார் https://ift.tt/jb4nc6s

படம்
புதுடெல்லி: நாடு முழுவதும் மத்திய அரசு பணிக்கு தேர்வான 51 பேருக்கு பணி ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வழங்கினார். நாடு முழுவதும் மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ‘ரோஜ்கார் மேளா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தொழிலதிபர் முகேஷ் அம்பானியிடம் ரூ.20 கோடி கேட்டு கொலை மிரட்டல்: மும்பை போலீஸார் வழக்கு பதிவு https://ift.tt/1i30f9o

படம்
மும்பை : ரூ.20 கோடி கேட்டு தொழிலதிபரான முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுதொடர்பாக மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவருக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது. ரூ.20 கோடி கேட்டு கடந்த 27-ம் தேதி சதாப் கான் என்ற பெயரில் இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: எங்களுக்கு ரூ.20 கோடி கொடுக்காவிட்டால் உங்களை (முகேஷ் அம்பானி) கொலை செய்வோம். நாட்டில் சிறந்த துப்பாக்கி சுடும் நபர்கள் எங்களிடம் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அயோத்தி ராமர் கோயில் திறப்பு தொடர்பான விளம்பர பலகை - ம.பி.யில் பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் மோதல் https://ift.tt/Ou3LoFx

படம்
போபால் : அயோத்தியில் ராமர் கோயில் திறப்பது தொடர்பான விளம்பரப் பலகை வைத்தது தொடர்பாக மத்தியபிரதேச மாநில பாஜக, காங்கிரஸ் தலைவர்களிடையே மோதல் வெடித்துள்ளது. அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 22-ம்தேதி திறக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக விளம்பரப் பதாகைகளை மத்திய பிரதேச மாநில பாஜகவினர் வைத்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காசாவில் போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பொது சபையில் தீர்மானம் நிறைவேற்றம்: வாக்கெடுப்பில் பங்கேற்காத இந்தியா

படம்
நியூயார்க்: பாலஸ்தீனத்தின் காசாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்தக் கோரி ஐ.நா. பொது சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இஸ்ரேல் ராணுவம் - ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருவதால் எகிப்தின் ரஃபா எல்லை வழியாக நிவாரண பொருட்களை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாணவர்களுக்கு லேப்டாப்; பசு சாணம் கொள்முதல் - ராஜஸ்தான் காங்கிரஸ் வாக்குறுதி https://ift.tt/fbSRe0p

படம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் 5 வாக்குறுதிகளை முதல்வர் அசோக் கெலாட் முன்வைத்துள்ளார். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் நவம்பர் 25-ம் தேதிசட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தால் 1.05 கோடி குடும்பங்களுக்கு ரூ.500-க்கு சமையல் காஸ் சிலிண்டர் வழங்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குற்றவியல் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்: ஹைதராபாத்தில் அமித் ஷா தகவல் https://ift.tt/CHE3G1w

படம்
ஹைதராபாத்: குற்றவியல் சட்ட திருத்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஒரு நாள் சுற்றுப்பயணமாக ஹைதராபாத் வந்தார். அப்போது அவர் ஹைதராபாத் தேசிய போலீஸ் பயிற்சி அகாடமியில் பயிற்சி முடித்த 175 பேரின் அணிவகுப்பை பார்வையிட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை: கத்தார் நீதிமன்றம் தீர்ப்பு

படம்
புதுடெல்லி: இந்திய கடற்படையில் உயர்பொறுப்பு வகித்து ஓய்வு பெற்ற 8 முன்னாள் அதிகாரிகளை கத்தார்அரசு கடந்த ஆண்டு கைது செய்து சிறையில்அடைத்தது. இந்நிலையில், அவர்கள் அனைவருக்கும் கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக நேற்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கத்தார் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி தருவதாக குறிப்பிட்டுள்ள அமைச்சகம், தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரை தொடர்புகொண்டுள்ளதாகவும், அவர்களை மீட்பது தொடர்பான சட்டப்பூர்வ வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேற்கு வங்கம் | ஊழல் விவகாரம் தொடர்பாக அமைச்சரை கைது செய்தது அமலாக்கத்துறை https://ift.tt/oCfX6Iu

படம்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக்கை ஊழல் விவாகரம் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கைது செய்தது அமலாக்கத்துறை. நேற்று காலை முதல் அவரது வீட்டில் சோதனை நடைபெற்ற நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மாநிலத்தில் ஆட்சி புரிந்து வரும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வனத்துறை அமைச்சராக ஜோதிப்ரியா மல்லிக் இயங்கி வருகிறார். இவர் உணவுத்துறை அமைச்சராக பணியாற்றிய போது ரேஷன் விநியோகத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சட்ட விரோத பண பரிவர்த்தனை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறது அமலாக்கத்துறை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்கு இந்திய பொருளாதார வழித்தட திட்டமே காரணம்: ஜோ பைடன் குற்றச்சாட்டு

படம்
வாஷிங்டன்: இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா பொருளாதார வழித்தட திட்டத்தை தடுக்கவே இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டில் ‘பெல்ட் அன்ட் ரோடு' திட்டத்தை சீனா தொடங்கியது. இதன்படி மத்திய ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளை கடல், ரயில், சாலை வழியாக இணைக்கும் பணிகளை சீன அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தில் 154 நாடுகள் இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் தீவிரமடைந்தால் அமெரிக்கர்களை வெளியேற்றுவது குறித்து ஆய்வு

படம்
வாஷிங்டன்: இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயோன போர் தீவிரமடையும்பட்சத்தில், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கர்களை வெளியேற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்வதற்கு அதிபர் ஜோ பிடன் நிர்வாகம் தயாராகி வருகிறது. அமெரிக்க உயரதிகாரிகளை மேற்கோள் காட்டி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் | இரு தரப்பும் போரை நிறுத்தி, அமைதி பேச்சுக்கு முன்வர வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்

படம்
புதுடெல்லி: ‘இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலானபோர் கவலை அளிக்கிறது. இருதரப்பும் போரை நிறுத்தி, அமைதிபேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்க வேண்டும்’ என்று ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா நகரில் இருந்து செயல்படும் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேலின் தெற்கு பகுதியில் புகுந்து தாக்குதல் நடத்தினர்.ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகளையும் வீசினர். இதற்கு, இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இருதரப்புக்கும் இடையிலான போரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ரூ.22,300 கோடி உர மானியத்துக்கு ஒப்புதல் https://ift.tt/yu1Ga6V

படம்
புதுடெல்லி: ரூ.22,303 கோடி மதிப்பிலான உர மானியத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. 2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் உரமானியத்துக்கு ரூ.1.75 லட்சம் கோடி கடந்த பிப்ரவரியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ரபி பருவ கால விவசாய பணிகளை மேற்கொள்ள ரூ.22,303 கோடி மதிப்பில் உரமானியம் அளிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ரபி பருவமான குளிர்காலத்தில் கோதுமை, பருப்பு, திணைகள், காய்கறிகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை விவசாயிகள் பயிரிடுவர். இது நாட்டின் உணவு தானிய விநியோகத்தில் கிட்டத்தட்ட பாதியளவுக்கு இருக்கும். இந்நிலையில் ரூ.22,303 கோடி மதிப்பிலான உரமானியத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“பொதுமக்களை முன்னிறுத்துகின்றனர் ஹமாஸ் தீவிரவாதிகள்” - இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர்

படம்
புதுடெல்லி: காசா மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டு வரும் நிலையில் ஹமாஸ் தீவிரவாதிகள், பொதுமக்களை முன்னிறுத்தி வருவதாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலன் தெரிவித்துள்ளார். கடந்த 7-ம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தி இருந்தனர். வான் வழியாகவும், தரை வழியாகவும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். பல நூறு பேர் பிணைக் கைதிகளாக சிறை பிடித்தனர் ஹமாஸ் தீவிரவாதிகள். தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் இயங்கி வரும் பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இந்த சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த கருத்தை நவோர் கிலன் தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இஸ்ரேல் - ஹமாஸ் மோதலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: ஜோர்டான் மன்னரிடம் மோடி வலியுறுத்தல்

படம்
புதுடெல்லி: இஸ்ரேல் ராணுவம் - ஹமாஸ் தீவிரவாதிகள் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஜோர்டான் மன்னரை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டுவர சர்வதேச அளவில் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்என்று வலியுறுத்தினார். இதற்கிடையே, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சந்தித்து பேசினார். இஸ்ரேல் எல்லையில் நடத்தி வரும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாலஸ்தீனத்தின் காசா நகரில் இருந்து செயல்படும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் போரை அறிவித்து காசா பகுதிக்குள் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் பேர் அகதிகளாக பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinem...

“தேர்தலை நடத்துங்கள்; அசல் சிவ சேனா யார் என்பதை மக்கள் சொல்வார்கள்” - உத்தவ் தாக்கரே https://ift.tt/36snTGi

படம்
மும்பை: தேர்தலை நடத்துங்கள்; அசல் சிவ சேனா யார் என்பதை மக்கள் சொல்வார்கள் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதனை மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்னாத் ஷிண்டேவுக்கு சவாலாக அவர் விடுத்துள்ளார். சிவ சேனா கட்சி இரண்டாக உடைந்து ஏக்னாத் ஷிண்டே ஒரு அணியாகவும், உத்தவ் தாக்கரே ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான அணியினர் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்துள்ளனர். ஏக்னாத் ஷிண்டே முதல்வராக இருந்து வருகிறார். இந்நிலையில், இதனை உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

'ஜெயிலர்' பட வில்லன் நடிகர் விநாயகன் கேரளாவில் கைது https://ift.tt/1eYfmqx

படம்
எர்ணாகுளம்: ஜெயிலர் பட வில்லன் நடிகர் விநாயகனை கேரள போலீஸார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட காரணத்துக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் விநாயகன் , மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்தில் வில்லனாக விநாயகன் நடித்திருந்தார். வர்மன் என்ற பாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தமிழில் திமிரு, மரியான் போன்ற படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். மலையாளத்தில் வெளியான கம்மாட்டிப்பாடம் படத்துக்காக மாநில அளவில் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சியாச்சின் மலைப்பகுதியில் பணியின்போது உயிரிழந்த அக்னிவீரர்: இந்திய ராணுவம் மரியாதை https://ift.tt/wORkyBx

படம்
சியாச்சின்: உலகின் மிக உயர்ந்த எல்லைப் பாதுகாப்புப் பகுதியான சியாச்சின் மலைப் பகுதியில் பணியாற்றி வந்த அக்னிவீரர் (Agniveer) ப ணியின்போது உயிரிழந்தார். அவருக்கு இந்திய ராணுவம் மரியாதை செலுத்தியுள்ளது. சியாச்சினில் பணியின் போது அக்னிவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லே-வை தலைமையிடமாகக் கொண்ட இந்திய ராணுவத்தின் Fire and Fury படைப்பிரிவு தெரிவித்துள்ளது. அந்த அக்னிவீரரின் பெயர் கவாட் அக்‌ஷய் லக்ஷ்மண், மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது. அவரது மறைவுக்கு ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே மற்றும் அனைத்துப் படை வீரர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் பரிசோதனை வெற்றி https://ift.tt/ukBSwQ4

படம்
ஸ்ரீஹரிகோட்டா: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நேற்று மேற்கொள்ளப்பட்டது. ஆளில்லா விண்கலம் டிவி-டி1 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தி, மீண்டும் பத்திரமாக கடலில் இறக்கப்பட்டது ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தீவிரம் காட்டிவருகிறது. ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் 2025-ம் ஆண்டில் 3 விண்வெளி வீரர்கள் விண்கலம் மூலம் தரையில் இருந்து 400 கி.மீ தூரம் கொண்ட சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பப்பட உள்ளனர். அங்கிருந்தபடியே 3 நாட்கள் ஆய்வு மேற்கொண்டு, பின்னர் மீண்டும் அவர்கள் பூமிக்கு பத்திரமாக திரும்ப அழைத்து வருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிணைக் கைதிகள் விரைந்து திரும்ப வேண்டி டெல் அவிவில் ஒன்றுகூடிய இஸ்ரேல் மக்கள்!

படம்
டெல் அவிவ்: ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்ட மக்கள் விரைந்து நாடு திரும்ப வேண்டி இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஒன்று கூடி ‘Lighting up the Light’ என்ற பிரச்சார இயக்கத்தை மக்கள் முன்னெடுத்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சமூக வலைதள ஃபிட்னஸ் பிரபலம் ரேஷெல் சேஸ் காலமானார்

படம்
வெலிங்டன்: சமூக வலைதள ஃபிட்னஸ் பிரபலமும், பாடி பில்டருமான ரேஷெல் சேஸ் உயிரிழந்தார். 41 வயதான அவரது திடீர் மரணத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவர் உயிரிழந்த தகவலை அவரது மூத்த மகள் உறுதி செய்துள்ளார். உடற்பயிற்சி மற்றும் தன்னந்தனி பெண்ணாக தனது குழந்தைகளை வளர்ப்பது குறித்து உத்வேகம் அளிக்கும் வகையிலான பதிவுகளை ரேஷெல், சமூக வலைதளங்களில் பதிவு செய்வது வழக்கம். அவரை ஃபேஸ்புக் தளத்தில் மட்டுமே சுமார் 1.4 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வந்தனர். கடந்த 2015-ல் ரேஷெல், விவாகரத்து பெற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு மீட்டெடுப்பேன்” - பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சபதம்

படம்
லாகூர்: பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் தலைவரும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாட்டினை வளர்ச்சிப் பாதைக்கு மீட்டெடுப்பேன் என தெரிவித்துள்ளார். பணவீக்கம் காரணமாக பாகிஸ்தான் நாட்டில் உணவுப் பொருட்களின் விலை, வீட்டு வாடகை, மின்சாரம், எரிவாயு மற்றும் போக்குவரத்து சார்ந்த கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த சூழலில் கடந்த 2019-ம் ஆண்டு லண்டன் சென்ற முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் , தற்போது நாடு திரும்பியுள்ளார். வரும் ஜனவரியில் பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அதை கருத்தில் கொண்டு அவர் நாடு திரும்பியுள்ளதாக தெரிகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எகிப்து-காசா எல்லையில் ஐ.நா. பொதுச் செயலாளர்

படம்
ரஃபா: ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணி குத்தேரஸ் நேற்று எகிப்து-காசா எல்லையான ரஃபாவுக்கு சென்றார். அங்குள்ள அல் ஆரிப் விமான நிலையத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திறங்கிய நிவாரண பொருட்கள் அவர் ஆய்வு செய்தார். இந்த நிவாரண பொருட்கள் அடங்கிய 200 லாரிகள் ரஃபா எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து ஐ.நா. செய்தித் தொடர்பாளர் மார்ட்டின் கூறும்போது, “அடுத்த சில நாட்களில் காசா பகுதிக்கு லாரிகளில் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்படும்" என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இரண்டு அமெரிக்க பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்: இஸ்ரேல் உறுதி

படம்
டெல் அவிவ்: இரண்டு அமெரிக்க பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்து உள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 7-ம் தேதி ஏராளமான இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினரை ஹமாஸ் தீவிரவாதிகள் சிறைபிடித்து சென்றனர். இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலை தொடர்ந்து அவர்கள் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரால் சிறை வைக்கப்பட்டிருந்தனர். இந்த சூழலில் பிணைக் கைதிகளில் சிலர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான பேரை இஸ்ரேல் மீட்டது. இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த தாய் மற்றும் மகளை ஹமாஸ் விடுவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடாளுமன்றத்தில் மோடி, அதானிக்கு எதிராக கேள்வி கேட்க திரிணமூல் எம்.பி.க்கு லஞ்சம் கொடுத்தேன்: தொழிலதிபர் ஒப்புதல் https://ift.tt/tPgyzFo

படம்
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மற்றும் அதானிக்கு எதிராக கேள்வி எழுப்புவதற்காக திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ராவுக்கு லஞ்சம் கொடுத்தேன் என்று தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி ஒப்புதல் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு, திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றுள்ளார் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே சில நாட்களுக்கு முன்பு குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கும் அவர் புகார் கடிதம் அனுப்பினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“பாகிஸ்தான் ஜிந்தாபாத்” - பெங்களூருவில் ரசிகரின் முழக்கத்தை தடுத்த காவலர் https://ift.tt/8FgCjoT

படம்
பெங்களூரு: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் விளையாடின. இந்தப் போட்டியை மைதானத்தில் நேரில் பார்த்த ரசிகர் ஒருவர் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என முழக்கமிட்டுள்ளார். அதையடுத்து அவ்வாறு முழக்கமிட வேண்டாம் என மைதானத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் சொன்னதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘நான் ஏன் அப்படி சொல்லக்கூடாது. களத்தில் விளையாடுவது பாகிஸ்தான் அணி. நான் வேறு என்ன சொல்ல வேண்டும்?’ என அந்த ரசிகர் காவலரிடம் தெரிவித்துள்ளார். இது வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்தை சொல்லி வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காசாவின் பழமையான தேவாலய வளாகத்தில் இஸ்ரேல் தாக்குதல்; பலர் பலி - ஹமாஸ் தகவல்

படம்
இஸ்ரேல் ராணுவம் நடத்தியத் தாக்குதலில் காசாவில் உள்ள பழமையான தேவாலய வளாகத்தில் பலர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்திருக்கிறது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு , கடந்த 7-ம் தேதியன்று இஸ்ரேல்மீது திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து, ஹமாஸ் மீது எதிர்த் தாக்குதல் தொடுப்பதாக காசாவில் தொடர்ந்து அதிரடி தாக்குதல் நடத்திவருகிறது இஸ்ரேல். குறிப்பாக காசா இஸ்ரேல் தாக்குதலின் இரையாகி வருகிறது. காரணம் காசா, பாலஸ்தீனத்தின் முக்கியமான நகரமாகக் கருதப்படுகிறது. இங்கு இஸ்லாமியர்கள்தான் அதிகமாக வசிக்கின்றனர். ஹமாஸ் மற்றும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலால் அங்குள்ள அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹமாஸுக்கும், புதினுக்கும் அண்டை நாடுகளை அழிப்பதே வேலை - அமெரிக்க அதிபர் பைடன் குற்றச்சாட்டு

படம்
வாஷிங்டன்: ஹமாஸுக்கும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் அண்டையில் உள்ள ஜனநாயக தேசங்களை அழித்தொழிப்பதே வேலையாக இருக்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் இருந்து தேச மக்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றினார். அந்த உரையில் அவர், "ஹமாஸ் மற்றும் புதினின் தீவிரவாதமும், கொடுங்கோன்மையும் வெவ்வேறு அச்சுறுத்தல்களைக் கொண்டவை ஆனால் இரண்டுக்குமே அண்டை நாடுகளின் ஜனநாயகத்தை அழித்தொழிப்பதே இலக்கு. இதுபோன்ற சர்வதேச ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால் அதனால் ஏற்படும் மோதல்களும், குழப்பங்களும் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும். இதனால் பாதிப்புகள் அதிகமாகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வடகொரிய ஏவுகணைகளை பயன்படுத்தும் ஹமாஸ்: இஸ்ரேல் ராணுவம் தகவல்

படம்
டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள், வடகொரியாவின் எப் - 7 ஏவுகணைகளை பயன்படுத்தி வருவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: வடகொரிய ராணுவத்தில் எப்7 ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஏவுகணைகள் வடகொரியாவில் இருந்து ஈரானுக்கு கடத்தப்படுகின்றன. அங்கிருந்து ஹமாஸ்தீவிரவாதிகளுக்கு ஏவுகணைகள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்திப்பு

படம்
ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஜெருசலேமில் நேற்று சந்தித்து பேசினார். பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் உள்ளிட்டோர் இஸ்ரேலுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்து உள்ளனர். இந்த வரிசையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நேற்று இஸ்ரேலின் ஜெருசலேம் நகருக்கு சென்றார். அங்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒரே நாடு ஒரே அடையாள அட்டை: நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு தனித்துவ எண் https://ift.tt/NpUg1ub

படம்
புதுடெல்லி: நாடு முழுவதும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இது தொடர்பான அறிவிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டது போல நாடு முழுவதும் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவருக்கும் தனித்துவ அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் இந்த திட்டம், கடந்த 2020-ல் மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காசா மருத்துவமனையில் ராக்கெட் குண்டு வீசியதில் 500 பேர் உயிரிழப்பு: ஹமாஸ் தீவிரவாதிகள் மீது குற்றச்சாட்டு

படம்
டெல் அவிவ்: காசா மருத்துவமனை மீது ராக்கெட் குண்டுகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 500 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலை குறிவைத்து ஹமாஸ் தீவிரவாதிகள் வீசிய ராக்கெட்கள் தவறுதலாக விழுந்து வெடித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கான வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது. இஸ்ரேலுக்கு வந்து அந்நாட்டு அதிபர், பிரதமரை சந்தித்து ஆதரவு தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி இஸ்ரேலின் தெற்கு பகுதி மீது ஏவுகணைகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். தரை வழியாகவும் இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்து, ஏராளமானோரை சுட்டுக் கொன்றதுடன், சுமார் 200 இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக சிறைபிடித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒடிசா ஆளுநராக ரகுபர் தாஸ், திரிபுரா ஆளுநராக இந்திரசேனா ரெட்டி நல்லு நியமனம்! https://ift.tt/uW5r81f

படம்
புதுடெல்லி: ஒடிசா ஆளுநராக ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் மற்றும் திரிபுரா ஆளுநராக தெலங்கானாவை சேர்ந்த பாஜக நிர்வாகி இந்திரசேனா ரெட்டி நல்லு நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை புதன்கிழமை (அக்.18) அன்று குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இஸ்ரேல் - லெபனான் எல்லைப் பகுதியில் புகை மூட்டம்!

படம்
டெல் அவிவ்: இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளின் எல்லைப் பகுதியில் புகை மூட்டம் மூண்டுள்ளது. இது தொடர்பாக காணொளி காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இதில் சில இடங்களில் தீ பிடித்து எரிவது போலவும் உள்ளது. காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும் லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதலை தொடங்கி உள்ளது. இஸ்ரேலின் வடக்கு எல்லைப் பகுதிகளை குறிவைத்து ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ஏவுகணை குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டனர். இதனை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்திருந்தது. இந்த தாக்குதல் தொடர்ந்தால் லெபனானை அழிப்போம் என அண்மையில் இஸ்ரேல் ராணுவம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இரு தரப்பிலும் மோதல் தீவிரமடைந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வெறுப்பை பரப்பும் ஆர்எஸ்எஸ்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு https://ift.tt/1AZUr4G

படம்
அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், தலைநகர் அய்ஸ் வாலில் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது: அரசியல் கட்டமைப்பு பாது காப்பு, மதம் மற்றும் கலாச்சார வேறுபாடுகள் இன்றி மக்கள் ஒற்றுமையாகவும், சுதந்திரமா கவும் வாழ்வதை உறுதி செய்வ தன் மூலம் இண்டியா கூட்டணி இந்தியாவின் சித்தாந்தத்தையும், அதன் மதிப்புகளையும் பாது காக்கும் அரணாக விளங்குகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை: நாடாளுமன்றம் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/2rJAXOY

படம்
புதுடெல்லி: தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின்5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தியாவில் ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ள மட்டுமே சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளது. மாறாக ஆணும் - ஆணும், பெண்ணும் - பெண்ணும் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப்பூர்வ அனுமதி கிடையாது. இந்நிலையில் இந்தியாவில் தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காசா மருத்துவமனையில் நடந்த தாக்குதலில் சுமார் 500 பேர் உயிரிழப்பு

படம்
காசா: பாலஸ்தீனத்தின் காசா நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல். இதனை தாக்குதலுக்கு ஆளான மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. காசா சுகாதாரத்துறை அமைச்சகமும் இதனை உறுதி செய்துள்ளது. காசாவில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இஸ்ரேல் விமானப்படை வான்வழியாக தாக்குதல் நடத்தியது இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இருந்தும் இஸ்ரேல் தரப்பில் இது குறித்து எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை. மாறாக ஹமாஸ் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலின் தோல்வி இதற்கு காரணம் என இஸ்ரேல் தரப்பில் சொல்லியுள்ளதாக தகவல். இந்த மருத்துவமனையில் கடந்த ஒரு வார காலமாக காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாலஸ்தீனத்தின் பின்லேடன் - யாயா சின்வார்

படம்
டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் ஒசாமா பின்லேடன் என்று அழைக்கப்படும் யாயா சின்வாரை இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக தேடி வருகிறது. கடந்த 7-ம் தேதி இஸ்ரேலின் தெற்குப் பகுதி நகரங்கள் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர். 3,500-க்கும்மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் யாயா சின்வார் செயல்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதா? - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எதிர்ப்பு

படம்
வாஷிங்டன்: ‘‘இஸ்ரேலில் கொடூர தாக்குதல்களை நடத்திய ஹமாஸ் தீவிரவாதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும். அதேநேரம் பாலஸ்தீன மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமிக்க கூடாது. இது மாபெரும் தவறாகிவிடும்’’ என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 1967-ம் ஆண்டுக்கு முன்பு, பாலஸ்தீனத்தின் காசா பகுதி எகிப்தின்கட்டுப்பாட்டில் இருந்தது. 1967-ம் ஆண்டில்6 நாட்கள் நடந்த போரில், எகிப்திடம் இருந்து காசா பகுதியை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, கடந்த 2005-ம் ஆண்டு வரை இஸ்ரேல் நிர்வாகத்தின்கீழ் காசா இருந்தது. அதன்பிறகு, பாலஸ்தீனத்திடம் ஒப்படைத்துவிட்டு இஸ்ரேல் ராணுவம் வெளியேறியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஹார் | சரக்கு ரயில் தடம்புரண்டது https://ift.tt/4vA2Yga

படம்
பக்சர்: பிஹார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் சரக்கு ரயிலின் பெட்டி ஒன்று தடம்புரண்டது. அந்த மாநிலத்தில் உள்ள தும்ரான் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி தடம் புரண்டுள்ளது. கடந்த வாரம் இதே பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையத்துக்கு அருகே வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சூழலில் அதே மாவட்டத்தில் தற்போது சரக்கு ரயில் பெட்டி தடம் புரண்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்