இடுகைகள்

பிப்ரவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெங்களூருவில் 80-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் ஏரோ இந்தியா விமான கண்காட்சி தொடக்கம் https://ift.tt/52oCVLN

படம்
பெங்களூருவில் 15-வது சர்வதேச விமான கண்காட்சியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி வரும் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. மத்திய பாதுகாப்புத் துறை சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சி நடைபெறுகிறது. அந்த வகையில் 15-வது கண்காட்சி பெங்களூருவில் உள்ள எலஹங்கா விமானப்படை பயிற்சி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இவ்விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் சஞ்சய் சேத், நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் பங்கேற்றனர். இக்கண்காட்சி வரும் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேஜ்ரிவால் ஆடம்பரமாக புதுப்பித்த டெல்லி சீஷ் மகாலில் பாஜக முதல்வர் தங்க மாட்டார்: கட்சி வட்டாரங்கள் தகவல் https://ift.tt/k0e1EQf

படம்
டெல்லியில் பாஜக சார்பில் புதிய முதல்வராக பதவியேற்பவர், முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பயன்படுத்திய ஷீஷ் மகாலில் தங்க மாட்டார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் 70 உறுப்பினர்களை டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்க உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றி அதிபர் ட்ரம்ப் உத்தரவு

படம்
மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். கடந்த 4-ம் தேதி புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "விரைவில் ஒரு மாற்றத்தை அறிவிக்க உள்ளோம். மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என மாற்றப்போகிறோம். ஏனென்றால் அது எங்களுடையது. அமெரிக்க வளைகுடா ஒரு அழகான பெயர். அது மிகச்சரியாக உள்ளது" என்று அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெற்றோர் குறித்த ‘ஆபாச ஜோக்’ சர்ச்சை - பிரபல யூடியூபர் மீது வழக்கு பதிவு https://ift.tt/aHlFuBK

படம்
யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் ஆபாசமாக பேசியதாக பிரபல யூடியூபர்கள் ரன்வீர் அலஹாபாடியா , சமய் ரெய்னா ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். யூடியூபர் சமய் ரெய்னா நடத்தும் பிரபலமான நிகழ்ச்சி ‘இண்டியா’ஸ் காட் லேடன்ட் (India’s Got Latent). இதை லட்சக்கணக்கானோர் பார்த்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் மற்றொரு பிரபல யூடியூபரான ரன்வீர் அலஹாபாடியா அடித்த படு ஆபாசமான கமென்ட் தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி அமெரிக்காவில் இருந்து திரும்பியபின் டெல்லி அரசின் பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டம் https://ift.tt/6XawCRc

படம்
பிரதமர் மோடி அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு, டெல்லி அரசின் பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதற்காக டெல்லி மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி டெல்லியை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதாக அவர் உறுதியளித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகன் திருமணத்தை எளிமையாக நடத்திவிட்டு ரூ.10,000 கோடி நன்கொடை வழங்கிய கவுதம் அதானி https://ift.tt/SKmtXOy

படம்
அகமதாபாத்: தொழில​திபரும் அதானி குழும தலைவருமான கவுதம் அதானி​யின் இளைய மகனும் அதானி ஏர்போர்ட்ஸ் இயக்​குநருமான ஜீத் அதானிக்​கும் வைர வர்த்​தகர் ஜெய்​மின் ஷா மகள் திவாவுக்​கும் அகமதாபாத்​தில் கடந்த 7-ம் தேதி திரு​மணம் நடைபெற்​றது. இதில் மணமக்​களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்​றனர். உலக கோடீஸ்​வரர்கள் பட்டியலில் இடம்​பெற்றுள்ள கவுதம் அதானி, தான் கூறியபடி ஜீத் அதானி​யின் திரு​மணத்தை எளிமையான முறை​யில் நடத்தி உள்ளார். இதில் அரசி​யல்​வா​தி​கள், தொழில​திபர்​கள், அரசு உயர் அதிகாரி​கள், திரை நட்சத்​திரங்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்​க​வில்லை. இதன் மூலம் மிகவும் ஆடம்​பரமான முறை​யில் அதானி மகன் திரு​மணம் நடைபெற உள்ளதாக பரவிய வதந்​திக்கு முற்றுப்புள்ளி வைத்​துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹமாஸ் பிடியில் இருந்தபோது அடையாளம் தெரியாமல் உருமாறிய இஸ்ரேலிய பிணைக் கைதிகள்

படம்
ஜெருசலேம்: கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தெற்கு இஸ்ரேல் பகுதி​யில் நோவா இசைக் கச்சேரி நடைபெற்​றது. அப்போது, திடீரென அந்தப் பகுதி​களில் நுழைந்த ஹமாஸ் தீவிர​வா​திகள் 100-க்​கும் மேற்​பட்​ட​வர்களை ஹமாஸ் பிணைக்கை​தி​களாக பிடித்​துச் சென்​றனர். இந்த நிலை​யில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்​புக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்​கொள்​ளப்​பட்​டதையடுத்து, இரு தரப்​பிலிருந்​தும் பிணைக் கைதிகள் படிப்​படியாக விடுவிக்​கப்​பட்டு வருகின்​றனர். அதன் ஒரு பகுதி​யாக, சிறைப்​பிடிக்​கப்​பட்டு 500 நாட்​களுக்​குப் பிறகு எல் சாராபி, ஓர் லெவி மற்றும் ஒகத் பென் அமி என்ற மூன்று இஸ்ரேலிய பிணைக்கை​திகளை ஹமாஸ் தீவிர​வா​திகள் நேற்று முன்​தினம் இஸ்ரேலிய அதிகாரி​களிடம் ஒப்படைத்​தனர். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அவர்​களின் உடல்​நிலை மோசமாக காணப்​பட்​டது. எலும்​பும், தோலுமாக உருமாறிப்போன அவர்களை கண்டு உறவினர்கள் கடும் அதிர்ச்​சி​யும், கோப​மும் அடைந்​தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்...

அர்விந்த் கேஜ்ரிவால் பணத்தின் பின்னால் செல்ல ஆரம்பித்தார்: அன்னா ஹசாரே சொல்வது என்ன? https://ift.tt/pGU56wb

படம்
‘‘ஆம் ஆத்மி கட்சியின் மதுபான கொள்கை, அர்விந்த் கேஜ்ரிவாலை வீழத்தி விட்டது ’’ என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரான இயக்கத்தை கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கினார். இந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அர்விந்த் கேஜ்ரிவால், அன்னா ஹசாரேவுடன் நெருக்கமானார். மகாராஷ்டிரா மாநிலத்தின் ரலேகான் சித்தி கிராமத்தில், அன்னா ஹசாரேவை அர்விந்த் கேஜ்ரிவால் அடிக்கடி சந்தித்து பேசினார். முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி என்பதால், தனது இயக்கத்தில் முக்கிய நபராக அர்விந்த் கேஜ்ரிவால் செயல்பட அன்னா ஹசாரே அனுமதித்தார். இது அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு திருப்பு முனையாக அமைந்தது. அன்னா ஹசாரே அமைப்பிலிருந்து வெளியேறிய அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லியில் ஆம் ஆத்மி என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்: அர்விந்த் கேஜ்ரிவால் பேட்டி https://ift.tt/asAtkNw

படம்
புதுடெல்லி: மக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாயின. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது. 22 இடங்களில் வென்று ஆம் ஆத்மி கட்சி தோல்வியை தழுவியது. இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து பேட்டியளித்த ஆம் ஆத்மி கட்சி நிறுவனர் கேஜ்ரிவால் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி பேரவை, ஈரோடு கிழக்கில் இன்று வாக்கு எண்ணிக்கை: தேர்தல் முடிவுகள் பிற்பகலில் தெரியும் https://ift.tt/YEKbIXz

படம்
புதுடெல்லி/ ஈரோடு: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் பிற்பகலில் தெரிந்துவிடும். டெல்லியில் அதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சிநடைபெறுகிறது. 70 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், 60.42 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்தபடி, வாக்கு எண்ணிக்கை இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. காலை 8 மணி முதல் முன்னிலை நிலவரம் வெளியாகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பிறப்பு குடியுரிமை ரத்து உத்தரவுக்கு 2 நீதிமன்றங்கள் தடை

படம்
அமெரிக்காவில் பிறப்பு குடியுரிமையை ரத்து செய்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டு உள்ளார். இந்த உத்தரவுக்கு மேரிலேண்ட் மற்றும் சியாட்டில் நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன. கடந்த 1865-ம் ஆண்டில் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. அப்போது அந்த நாட்டில் அடிமைகளாக வசித்த கருப்பின மக்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் கடந்த 1868-ம் ஆண்டில் பிறப்பு குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி அமெரிக்காவில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது. அதாவது சட்டவிரோதமாக குடியேறியவர்கள், கல்வி, வேலைவாய்ப்புக்காக அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள் குழந்தை பெற்றால்கூட அந்த குழந்தைக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற ஜீத் அதானி - திவா ஷா திருமணம்: படங்களை பகிர்ந்த கவுதம் அதானி https://ift.tt/nt9YRZM

படம்
அகமதாபாத்: இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான அதானி குழும தலைவர் கவுதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானி, பாரம்பரிய முறைப்படி சூரத் வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகன் திவா ஷாவை மணந்தார். இந்த திருமணம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தனிப்பட்ட நிகழ்வாக இன்று (பிப்.7) நடைபெற்றது. இந்நிலையில், திருமணத்தின் படங்களை கவுதம் அதானி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். “இறைவனின் ஆசீர்வாதத்துடன், ஜீத்தும் திவாவும் இன்று திருமண பந்தத்தில் இணைந்தனர். இன்று அகமதாபாத்தில் பாரம்பரிய முறைப்படி திருமண சடங்குகள் நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அடுத்த பட்டியல் ரெடி: மேலும் 487 இந்தியர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா! 

படம்
கடந்த மாதம் 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார். முதல்கட்டமாக 15 லட்சம் வெளிநாட்டினர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த 18,000 பேர் உள்ளனர். இதில் முதல் கட்டமாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களை அந்த நாட்டு அரசு ராணுவ விமானத்தில், கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் திருப்பி அனுப்பியது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸில் தரையிறங்கியது. விமானத்தில் வந்த 205 பேரும் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்க என்ஜின் அடுத்த மாதம் வருவதால் தேஜஸ் விமான உற்பத்தியை விரைவுபடுத்த திட்டம் https://ift.tt/0Bg1tvw

படம்
போர் விமான என்ஜின்களை அடுத்த மாதம் முதல் விநியோகிப்பதாக அமெரிக்க நிறுவனம் உறுதியளித்துள்ளதால், தேஜஸ் போர் விமானங்களின் உற்பத்தியை விரைவுபடுத்த எச்ஏஎல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தேஜஸ் போர் விமானங்களை இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் (எச்ஏஎல்) தயாரிக்கிறது. இந்த விமானங்களுக்கான ஜிஇ-404 ரக என்ஜினை அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் விநியோகிக்கிறது. இந்நிறுவனத்திடம் 99 என்ஜின்களை ரூ.5,375 கோடிக்கு வாங்க கடந்த 2021-ம் ஆண்டில் எச்ஏஎல் நிறுவனம் ஆர்டர் கொடுத்தது. ஆனால், இந்த என்ஜின்கள் விநியோகத்தை அமெரிக்க நிறுவனம் 2 ஆண்டுகளுக்கு மேல் தாமதித்து விட்டது. அடுத்த மாதம் முதல் இந்த என்ஜின்கள் விநியோகிக்கப்படும் எனவும், அடுத்தாண்டுக்குள் 12 என்ஜின்கள் வழங்குவதாகவும், அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் 20 என்ஜின்கள் வழங்குவதாகவும் அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உறுதியளித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எச்5என்1 பறவைக் காய்ச்சலுக்கு தடுப்பூசி தயாரிக்க ஐசிஎம்ஆர் திட்டம் https://ift.tt/brP0Lj5

படம்
எச்5என்1 பறவைக் காய்ச்சலுக்கு உள்நாட்டிலேயே தடுப்பூசி தயாரிக்க ஐசிஎம்ஆர் திட்டமிட்டுள்ளது. எச்5என்1 என்பது பறவைக் காய்ச்சல் என அழைக்கப்படுகிறது. இது பறவைகள் மற்றும் பசுக்கள் உள்ளிட்ட பாலூட்டிகளுக்கு பரவுகிறது. அரிதாக மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் தொற்று கடந்த 2021, 2023 மற்றும் 2024-ல் சில மாநிலங்களில் பரவியது. கோழிகள், பறவைகளுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் வெளியேற்றப்படுவது புதிது கிடையாது: அமைச்சர் ஜெய்சங்கர் https://ift.tt/7w8mPM5

படம்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் வெளியேற்றப்படுவது புதிது கிடையாது. கடந்த 16 ஆண்டுகளில் அமெரிக்காவில் இருந்து 15,652 பேர் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். இதில் 19 பெண்கள், 13 சிறார் மற்றும் 4 வயது குழந்தையும் அடங்கும். ராணுவ விமானத்தில் வந்த அவர்கள் நேற்று முன்தினம் பஞ்சாபின் அமர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடந்தாண்டில் 22 லட்சம் பேர் நாய் கடியால் பாதிப்பு: 1 மணி நேரத்தில் 60 குழந்தைகள் மீது தாக்குதல் https://ift.tt/8SfpMjR

படம்
நாட்டில் கடந்தாண்டு சுமார் 22 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டனர் என்றும், சராசரியாக ஒவ்வொரு மணி நேரமும் 60 குழந்தைகளை நாய்கள் கடிப்பதாக அரசு புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாய்கடி பாதிப்பு பற்றி நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய கால்நடை வளர்ப்புத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: கடந்தாண்டில் 21,95,122 பேரை நாய்கள் கடித்துள்ளன. இவர்களில் 37 பேர் இறந்தனர். குரங்கு உட்பட இதர விலங்குகள் 5,04,728 பேரை கடித்துள்ளன என்பது மாநிலங்கள் மற்றும் யனியன் பிரதேசங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. நாய்கடியால் பாதிக்கப்பட்டவர்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள். இவ்வாறு மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடன் தொகைக்கும் கூடுதலான சொத்துகளை விற்றுவிட்டனர்: மல்லையா மனுவுக்கு பதில் அளிக்க உத்தரவு https://ift.tt/q4jdnvx

படம்
தான் பெற்ற கடன் தொகைக்கும் கூடுதலான சொத்துகளை ஏலத்தில் விற்றுவிட்டதாகவும் அது தொடர்பான விவரங்களை வழங்கக் கோரியும் விஜய் மல்லையா தாக்கல் செய்துள்ள மனு மீது பதில் அளிக்குமாறு வங்கிகளுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொழிலதிபர் விஜய் மல்லையா கிங்பிஷர் ஏர்லைன்ஸ், யுனைடெட் ப்ரூவரிஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வந்தார். இந்நிலையில், வங்கிகளில் வாங்கிய ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பிச் செலுத்தவில்லை என அவர் மீது புகார் எழுந்தது. இதன் அடிப்படையில், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதனிடையே, கடந்த 2016-ம் ஆண்டு அவர் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும்: டிரம்ப் அறிவிப்பும், பாலஸ்தீனர்கள் எதிர்ப்பும் - பின்னணி என்ன?

படம்
‘‘காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி சீரமைக்கும். இங்கு வசிக்கும் பாலஸ்தீனர்கள் வேறு நாடுகளில் குடியேற வேண்டும்’’ என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பால் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த அறிவிப்புக்கு பலதரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது. இஸ்ரேல் மீது, காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் ராணுவத்தின் 34 பேர் உட்பட 251 பேரை பிணைக் கைதிகளாக காசாவுக்கு கொண்டு சென்றனர். இந்த தாக்குதலில் இஸ்ரேலியர்கள் 1,195 பேர் இறந்தனர். இஸ்ரேலில் புகுந்த ஹமாஸ் தீவிரவாதிகளை வேட்டையாடிய இஸ்ரேல் ராணுவம், காசா மீது குண்டு மழை பொழிந்தது. அக்டோபர் 27-ம் தேதி காசாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் ஊடுருவி தாக்குதலை தொடங்கியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்ற முகூர்த்த நேரத்துக்காக காத்திருக்கிறீர்களா? - அசாம் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு https://ift.tt/H7p5gwQ

படம்
சட்டவிரோதமாக நமது நாட்டில் குடியேறியவர்களை வெளியேற்றுவதற்காக முகூர்த்த நேரத்துக்காக காத்திருக்கிறீர்களா என்று அசாம் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அசாம் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) முகாமின் அடிப்படையில் அந்த மாநிலத்தில் 63 பேர் வெளிநாட்டினர் எனத் தெரியவந்துள்ளது. அவர்கள் சட்டவிரோதமாக அசாம் மாநிலத்துக்குள் புகுந்து வசித்து வந்துள்ளனர். அவர்களைக் கண்டறிந்த மாநில அரசு, அவர்களைத் தடுப்பு முகாம்களில் வைத்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் உடலை தண்ணீரில் வீசியதாக கூறிய ஜெயா பச்சனை கைது செய்ய விஎச்பி வலியுறுத்தல் https://ift.tt/wsamBl8

படம்
மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் திரிவேணி சங்கமத்தில் வீசப்பட்டதாக கூறிய சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஜெயா பச்சனை கைது செய்ய வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து விஎச்பி ஊடக பொறுப்பாளர் சரத் சர்மா கூறியதாவது: மகா கும்பமேளா என்பது பக்தி மற்றும் நம்பிக்கையின் முதுகெலும்பு. அங்குதான் இந்துக்கள் தர்மா, கர்மா, மோட்சததை அடைகின்றனர். இந்த மாபெரும் சடங்கு கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வோடு இணைக்கப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஸ்வீடன் பள்ளியில் பயங்கர துப்பாக்கிச் சூடு: 10 பேர் உயிரிழப்பு

படம்
ஸ்வீடனில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்வீடனில், ஸ்டாக்ஹோமில் இருந்து சுமார் 200 கி.மீ தொலையில் உள்ள ஓரேப்ரோ என்னும் இடத்தில் ரிஸ்பெர்க்ஸ்கா ஸ்கூல் என்ற கல்வி நிறுவனம் உள்ளது. பள்ளிக் கல்வியை முறையாக முடிக்காத மாணவர்களை உயர்கல்விக்கு தயார்படுத்துகிறது இப்பள்ளி. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிப். 13-ல் பிரதமர் மோடி - அதிபர் ட்ரம்ப் சந்திப்பு: சிறப்பு விருந்து அளிக்க ஏற்பாடு

படம்
புதுடெல்லி: வரும் 13-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச உள்ளார். அப்போது பிரத மர் மோடிக்கு சிறப்பு விருந்து அளிக்கப்படுகிறது. கடந்த மாதம் 20-ம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். கடந்த 27-ம் தேதி இரு தலைவர்களும் தொலைபேசியில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து டொனால்டு ட்ரம்ப் நிருபர்களிடம் கூறும்போது, “அமெரிக்கா, இந்தியா இடையே நல்லுறவு நீடிக்கிறது. பிப்ரவரி மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் மாளிகைக்கு வருவார்’’ என்று தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சவுதி அரேபியாவில் இந்திய தொழிலாளர்கள் எண்ணிக்கை 2023-24-ல் 2 லட்சம் உயர்ந்தது

படம்
சவுதி அரேபியாவில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் (2023-24) இரண்டு லட்சம் உயர்ந்துள்ளது. மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியாவில் கட்டுமானம், உள்கட்டமைப்பு, சேவைகள் போன்ற துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால் பதிவுசெய்யப்பட்ட இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கை 2023-24-ல் 3 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதேவேளையில் அங்கு பணியாற்றும் இந்திய தொழிலாளர் எண்ணிக்கை 2 லட்சம் அதிகரித்து, 26.5 லட்சமாக உயர்ந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அயர்லாந்து கார் விபத்தில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு

படம்
அயர்லாந்தில் நடந்த கார் விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். அயர்லாந்து நாட்டின் கார்லோவ் நகருக்கு அருகில் உள்ள கிரேகுவெனாஸ்பிடோகே என்ற இடத்தில் கருப்பு நிற ஆடி ஏ6 ரக கார் கடந்த வெள்ளிக்கிழமை, மரத்தில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மெக்சிகோ மீதான 25% வரிவிதிப்பு தற்காலிக நிறுத்தம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

படம்
வாஷிங்டன்: மெக்சிகோ மீதான 25 சதவீத வரிவிதிப்பை ஒருமாத காலம் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீதமும், சீனா பொருள்களுக்கு 10 சதவீதமும் வரி விதிப்பு பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார். மெக்சிகோவும் கனடாவும் புலம்பெயர்வு மற்றும் ஃபெண்டனில் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை இந்த நடவடிக்கைத் தொடரும் என்று தெரிவித்திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜக ஆட்சிக்கு வந்தால் குடிசை பகுதி குடியிருப்புகளை காப்பாற்ற முடியாது: கேஜ்ரிவால் குற்றச்சாட்டு https://ift.tt/XewSPEi

படம்
புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, குடிசைவாசி மக்களுக்கு ரூ.3,000 கொடுத்து அவர்களின் வாக்குரிமை பறிக்க மிகப் பெரிய சதி நடைபெறுவதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி சட்டப்பேரவை தேர்தல் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் அர்விந்த் கேஜ்ரிவால் வெளியிட்ட வீடியோ தகவலில் கூறியிருப்பதாவது: டெல்லியில் உள்ள குடிசைவாசிகளிடம் இருந்து எனக்கு பல அழைப்புகள் வந்தன. எதிர்க்கட்சியைச் சேர்ந்த தனிநபர்கள் குடிசை பகுதி மக்களுக்கு ரூ.3,000 கொடுத்து அவர்களை தவறாக வழிநடத்துகின்றனர். தேர்தல் நாளில் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் செய்துள்ளதாக கூறி, அவர்களின் கை விரலில் அழியாத மையை வைத்து செல்கின்றனர். இத்தகவல் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இது மக்களுக்கு எதிரான மிகப் பெரிய சதி. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்க பொருட்களுக்கு 25% வரி: கனடா பிரதமர் ஜஸ்டின் அதிரடி அறிவிப்பு

படம்
அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். கடந்த 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அண்டை நாடான கனடாவை, அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று அவர் கூறி வருகிறார். இதற்கு கனடா அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த சூழலில் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். இந்த நடைமுறை கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்வு: மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் https://ift.tt/KEz8d0t

படம்
புதுடெல்லி: மக்களவையில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இதில், புதிய வருமான வரி விதிப்பு நடைமுறையின் கீழ் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மாத சம்பளதாரர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மக்களவையில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். தொடர்ந்து 8-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதி அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். பட்ஜெட் உரையில் பல்வேறு திட்டங்கள். அறிவிப்புகளை வெளியிட்டு அவர் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஈம சடங்குகள் செய்ய பணமில்லாததால் இறந்துபோன தாயின் சடலத்துடன் 9 நாட்கள் தங்கி இருந்த 2 மகள்கள் https://ift.tt/mEuBC0f

படம்
ஹைதராபாத்: ஈம காரியங்கள் செய்ய பணம் இல்லாததால், தாய் இறந்த துக்கம் தாளாமல் 9 நாட்கள் வரை வீட்டை பூட்டிக்கொண்டு பட்டினியோடு 2 மகள்கள் தங்கி இருந்துள்ளனர். ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தவர் ராஜு. இவருக்கும் லலிதா (45) என்பவருக்கும் கடந்த 26 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரவளிகா (24), யஷ்வதா (22) என்ற 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டில் ராஜுவுக்கும் லலிதாவுக்கும் (45) கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதனை தொடர்ந்து லலிதா தனது வயதான தாய் மற்றும் மகள்களுடன் செகந்திராபாத் புத்தா நகரில் வசித்து வந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்