இடுகைகள்

செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவில் கரோனா பாதிப்பு 63 லட்சத்தைக் கடந்தது: குணமடைந்தோர் 53 லட்சத்தை நெருங்குகின்றனர் https://ift.tt/2Gm2nfA

படம்
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் புதிதாக 86 ஆயிரத்து 821 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 63 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் புதிதாக 86 ஆயிரத்து 821 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63 லட்சத்து 12 ஆயிரத்து 584 ஆக அதிகரித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாட்டை பிளக்க விரும்பியவர்களால் பாபர் மசூதி இடிப்பு பிரச்சினை எழுந்தது: அயோத்தி வழக்கின் முக்கிய மனுதாரர் இக்பால் அன்சாரி கருத்து https://ift.tt/30mBfnI

படம்
நாட்டை இரண்டாகப் பிளக்க விரும்பியவர்களால் பாபர் மசூதி இடிப்பு பிரச்சினை எழுந்ததாக, அயோத்தி வழக்கின் முக்கிய மனுதாரரான இக்பால் அன்சாரி கருத்து கூறியுள்ளார். தனது தந்தை ஹாசிம் அன்சாரியின் இறப்புக்கு பின் அயோத்தி நில வழக்கை தொடர்ந்து வந்த இக்பால், இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்புக்கு சிவசேனா கட்சி வரவேற்பு https://ift.tt/2EOiW3j

படம்
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பினை சிவசேனா வரவேற்றுள்ளது. அயோத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில், பாஜக மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, சிவசேனா முன்னாள் தலைவர் சதீஷ் பிரதான் உட்பட 32 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. நீண்டகாலமாக நடைபெற்று வந்த இவ்வழக்கில், லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு குறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறும்போது, "இந்த வழக்கின் தீர்ப்பினை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உட்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் வரவேற்கிறோம். பாபர் மசூதி இடிக்கப்பட்டதை எங்களால் மறக்க முடியாது. ஒருவேளை, அது இடிக்கப்படாமல் இருந்திருந்தால், தற்போது அங்கு ராமர் கோயில் கட்டுவது சாத்தியமில்லாமல் போயிருக்கும்" என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் ...

விவாதத்தில் நான் தான் ஜெயித்தேன்... பிடனின் ‘அபாயகரமான திட்டம் அம்பலம்’- அதிபர் ட்ரம்ப் முழக்கம்

படம்
அமெரிக்க அதிபர் டோனால்டு ட்ரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் இடையே நேற்று முதல் விவாதம் நடைபெற்றது, இது பெரும்பாலும் கூச்சலும் குழப்பமுமாகவே முடிந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் விவாதத்தில் ‘நான் தான் ஜெயித்தேன்’ என்று அதிபர் ட்ரம்ப் கூறிவருகிறார். மேலும் விவாதத்தில் ட்ரம்பை நோக்கி பிடன் ட்ரம்ப் ஒரு பொய்யர் என்றார், இதற்குப் பதிலடியாக ட்ரம்பும் 47 ஆண்டுகால பொதுவாழ்க்கையின் பொய்களை தான் அம்பலப்படுத்தி விட்டதாகவும் பிடனின் அபாயகரமான திட்டத்தையும் தான் வெளியே கொண்டு வந்து விட்டதாகவும் ட்ரம்ப் கோரினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

32,000 ஊழியர்களை  ‘கட்டாய விடுப்பில்’ அனுப்ப முடிவு:  அமெரிக்காவின் 2 பெரிய விமான சேவை நிறுவனங்களின் முடிவால் அதிர்ச்சி

படம்
அமெரிக்காவின் இரண்டு பெரிய விமான சேவை நிறுவனங்களான அமெரிக்கன் ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் 1600 பைலட்கள் உட்பட 32,000 ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்பும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இவர்கள் பணியிலிருந்து விடுவிக்கும் நடவடிக்கை வியாழக்கிழமையே தொடங்கி விட்டதாக இந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கரோனா வைரஸ் காலக்கட்டத்தில் பல நிறுவனங்கள் செயல்பட முடியாமல் அமெரிக்காவில் நிவாரணத்தை மீறியும் வேலையிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாபர் மசூதி இடிப்பிற்கு பின்பான கலவரத்தில் முஸ்லிம்களுக்காக திறந்த கோயில் கதவுகள் –நினைவுகளை பகிரும் அயோத்திவாசிகள் https://ift.tt/3cIXJ7s

படம்
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில் உருவானக் கலவரம் மீதான நினைவுகளை அயோத்திவாசிகள் ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பகிர்ந்து கொண்டனர். இதில் அவர்கள், முஸ்லிம்களுக்காக கோயில் கதவுகள் திறக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். விஷ்வ இந்து பரிஷத்தால் கடந்த டிசம்பர் 6, 1992 இல் கரசேவைக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் நாடு முழுவதிலும் இருந்து கூடிய கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் அம்னெஸ்டி அமைப்பு மூடல்: அமெரிக்க அரசின் ‘உயர்மட்ட’ கவனத்தை ஈர்த்துள்ளது- அதிகாரி தகவல்

படம்
இந்தியாவில் அடக்குமுறைகளை சந்திப்பதாலும், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாலும் அம்னெஸ்டி மனித உரிமைகள் அமைப்பு இந்தியாவில் தனது செயல்களை நிறுத்திக் கொண்ட விவகாரம் அமெரிக்க அரசின் ‘உயர்மட்ட’ கவனத்தை ஈர்த்துள்ளதாக அமெரிக்க அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தி இந்து (ஆங்கிலம்) நாளேட்டில் வெளியான செய்தி: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாபர் மசூதி வழக்கு: கடந்த வந்த பாதை.. https://ift.tt/2Sb5xW0

படம்
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில், 28 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கு கடந்து வந்த பாதை ஒரு பார்வை: 1528: முகலாய மன்னர் பாபரின் கமாண்டராக இருந்த மிர் பஹி என்பவர் பாபர் மசூதியை கட்டினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அத்வானி பங்களிப்பை மறக்க முடியாது: கர்நாடக முதல்வர் எடியூரப்பா கருத்து https://ift.tt/3cJEZEE

படம்
கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன். இந்த நாள் மிகவும் புனிதமான நாளாக மாறியுள்ளது. ராம ஜென்ம பூமிக்காக போராடிய எல்லா போராளிகளுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. தனிப்பட்ட முறையில் இந்த போராட்டத்தில் நான் தொடர்ந்து பங்கெடுத்துள்ளேன். அந்த நாட்கள் என் வாழ்நாளுக்கு உண்மையான அர்த்தம் அளித்தன. போராளிகளுக்கு ஒவ்வொரு வெற்றியும் புதிய உத்வேகத்தை அளிக்கும். இந்த தீர்ப்பின் மூலம் உண்மை வென்றுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாபர் மசூதி வழக்கு; நீதிமன்றத் தீர்ப்பை முழு மனதோடு வரவேற்கிறேன்: எல்.கே.அத்வானி கருத்து https://ift.tt/33c2Jye

படம்
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 32 பேருக்கு எதிராகப் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி லக்னோ சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன். ஜெய் ஸ்ரீராம் என பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்தார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உட்பட 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இன்றைய தினம் வரலாற்றில் சோகமான நாள்; ஒவைஸி https://ift.tt/34cdfoh

படம்
இன்றைய தினம் வரலாற்றில் சோகமான நாள் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி கூறியுள்ளார். அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி நடந்த கரசேவை நிகழ்ச்சியின்போது பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பாபர் மசூதியை இடிக்கத் தூண்டியதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அப்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங், வினய் கத்தியார், விஹெச்வி தலைவர் அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர் உள்ளிட்ட 21 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹத்ராஸ் சம்பவம்; கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட இளம்பெண் உடல் அதிகாலையில் தகனம்: போலீஸார் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு https://ift.tt/3n2wR72

படம்
உத்தரப் பிரதேசம் ஹத்ராஸ் நகரில் பட்டியலினத்தைச் சேந்த 19 வயது இளம்பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில், அவரின் உடல் இன்று அதிகாலை தகனம் செய்யப்பட்டது. போலீஸாரின் நெருக்கடியால், வலுக்கட்டாயமாக நள்ளிரவில் பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டது என்று பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் குற்றம் சாட்டுகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குவைத் மன்னர் ஷேக் சபா உடல்நலக் குறைவால் காலமானார்

படம்
குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு 91 வயது. “குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத்திற்கு கடந்த ஜூலை மாதம் திடீரென உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து குவைத்திலிருந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று குவைத் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அக். 4-ம் தேதி நடக்கும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வைத் தள்ளிவைக்க முடியாது: உச்ச நீதிமன்றம் மறுப்பு https://ift.tt/2HMoLzv

படம்
கரோனா வைரஸ், மழை வெள்ளத்தைக் காரணம் காட்டி, நாடு முழுவதும் அக்டோபர் 4-ம் தேதி நடக்கும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வைத் தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. அதேசமயம், கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தத் தேர்வை எழுத முடியாமல் போனவர்களுக்கு மற்றொரு வாய்ப்பை வழங்குமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதினின் நாய்க்குட்டி போல் ட்ரம்ப் செயல்படுகிறார்: ஜோ பிடன் விமர்சனம்

படம்
ரஷ்ய அதிபர் புதினின் நாய்க்குட்டி போன்று ட்ரம்ப் செயல்படுவதாக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செவ்வாய்க்கிழமை ஜோ பிடன் கூறும்போது, “அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்யாவுக்கு எதிராகச் செயல்படத் தவறிவிட்டார். ரஷ்ய அதிபர் புதினின் நாய்க்குட்டி போல் ட்ரம்ப் செயல்படுகிறார். நாங்கள் புதினுக்கு ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்கிறோம். நாங்கள் ட்ரம்ப் போல செயல்பட மாட்டோம்” என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘‘வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு; சதிச் செயல் இல்லை என்பது உறுதியானது’’ -  முரளி மனோகர் ஜோஷி மகிழ்ச்சி https://ift.tt/348rBpO

படம்
வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை நீதிமன்றம் அளித்துள்ளது, அயோத்தியில் டிசம்பர் 6-ம் தேதி நடந்த சம்பவத்தில் சதிச் செயல் ஏதும் நடைபெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது என பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார். அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி நடந்த கரசேவை நிகழ்ச்சியின்போது பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பாபர் மசூதியை இடிக்கத் தூண்டியதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அப்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங், வினய் கத்தியார், விஹெச்வி தலைவர் அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர் உள்ளிட்ட 21 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்படவில்லை; எல்.கே.அத்வானி, ஜோஷி உள்பட 32 பேர் விடுவிப்பு: லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு https://ift.tt/2ScB1uQ

படம்
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டில் நடந்த சம்பவத்தின்போது திட்டமிட்டு இடிக்கப்படவில்லை. ஆதலால், பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விடுவித்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி நடந்த கரசேவை நிகழ்ச்சியின்போது பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பாபர் மசூதியை இடிக்கத் தூண்டியதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அப்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங், வினய் கத்தியார், விஹெச்வி தலைவர் அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர் உள்ளிட்ட 21 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வைத் தள்ளிவைத்தால் அடுத்தடுத்த தேர்வுகளுக்குப் பாதிப்பு வரும்: உச்ச நீதிமன்றத்தில் யூபிஎஸ்சி பதில்  https://ift.tt/2G2mmQH

படம்
இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வை ஒத்திவைத்தால் அது சிவில் சர்வீஸ் தேர்வின் சுழற்சி முறையையே பாதிக்கும் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. ஆட்சிப் பணி என அழைக்கப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கு ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்பட்டு 1000-க்கும் குறைவான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்கு முதல் நிலை, முதன்மை, நேரடித் தேர்வு என மூன்று வகைத் தேர்வுகளும் பின்னர் பயிற்சியும் அளிக்கப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாள்தோறும் சராசரியாக 79 பேர் கொலை: 2019-ம் ஆண்டில் கொலைக்குற்றம் சற்றுக் குறைந்தது: என்சிபிஆர் தகவல் https://ift.tt/2GhGfmq

படம்
இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டில் நாள்தோறும் சராசரியாக 79 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2018-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் கொலைக் குற்றங்கள் சற்று குறைந்துள்ளன என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிபிஆர்) தெரிவித்துள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிபிஆர்) வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறப்பட்டு இருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் கரோனாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 52 லட்சத்தை நெருங்கியது; தொற்று 62 லட்சத்தைக் கடந்தது: ஒரு லட்சத்தை நெருங்கும் உயிரிழப்பு https://ift.tt/3jg9tR3

படம்
இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62 லட்சத்தைக் கடந்துள்ளது, அதேநேரம் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 52 லட்சத்தை நெருங்குகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கரோனா தொற்றால் 80 ஆயிரத்து 472 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 62 லட்சத்து 25 ஆயிரத்து 763 ஆக அதிகரித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியா உள்ளிட்ட நாடுகள் கரோனா இறப்பு குறித்த முழு விவரத்தை அளிக்கவில்லை: ட்ரம்ப்

படம்
இந்தியா உள்ளிட்ட நாடுகள் கரோனாவினால் ஏற்பட்ட இறப்புகள் குறித்த முழு விவரத்தை அளிக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து குடியரசுக் கட்சி சார்பாக அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ட்ரம்ப்பும், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பிடனும் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, உமாபாரதி, மனோகர் ஜோஷி நீதிமன்றத்தில் ஆஜராக வாயப்பில்லை https://ift.tt/3jhWw9p

படம்
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க இருக்கும் நிலையில், பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங் ஆகியோர் நேரில் ஆஜராக வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. தொடக்கத்தில் மாநில போலீஸார் விசாரித்து வந்த இந்த வழக்கு, பின்னர் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, உமாபாரதி, மனோகர் ஜோஷி நீதிமன்றத்தில் ஆஜராக வாயப்பில்லை https://ift.tt/3jhWw9p

படம்
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க இருக்கும் நிலையில், பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங் ஆகியோர் நேரில் ஆஜராக வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. தொடக்கத்தில் மாநில போலீஸார் விசாரித்து வந்த இந்த வழக்கு, பின்னர் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாள்தோறும் சராசரியாக 87 பலாத்காரம்: 2019-ல் பெண்களுக்கு எதிரான குற்றம் 7 சதவீதம் அதிகரி்ப்பு: என்சிஆர்பி தகவல் https://ift.tt/2S7E7jU

படம்
கடந்த 2019-ம் ஆண்டில் நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றம் 2018-ம் ஆண்டைவிட 7 சதவீதம் அதிகரித்துள்ளது. நாள்தோறும் சராசரியாக 87 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம்(என்சிஆர்பி)தெரிவித்துள்ளது. 2019-ல் பெண்களுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக 4 லட்சத்து 5 ஆயிரத்து 861 குற்றங்கள் நடந்துள்ளன. சராசரியாக நாள்தோறும் 87 பாலியல் பலாத்காரங்கள் நடந்துள்ளன. இதில் 2019-ல் பெண்களுக்கு எதிரான பலாத்கார சம்பவங்கள் மட்டும் 32 ஆயிரத்து 33 நடந்துள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆகஸ்ட் மாதத்துக்குள் 10 வயதுக்குட்பட்ட அதற்கு மேற்பட்டோரில்  15 பேரில் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் : ஐசிஎம்ஆர் 2-வது செரோ சர்வேயில் தகவல் https://ift.tt/34eUm46

படம்
நாட்டில் 10 வயதுக்குட்பட்ட மற்றும் அதற்கு மேற்பட்டோரில் 15 பேரில் ஒருவர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம், மக்கள் தொகையில் குறிப்பிட்ட அளவிலான மக்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்று இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) நடத்திய தேசிய அளவிலான நோய்க்கிருமித் தொற்று ஆய்வு(செரோ சர்வே)செரோ சர்வேயில் தெரியவந்துள்ளது. தேசிய அளவிலான தேசிய அளவிலான நோய்க்கிருமித் தொற்று ஆய்வு(செரோ சர்வே) முதல் கட்டம் மே மாதம் வரை எடுக்கப்பட்டு கடந்த மாதம் ஐசிஎம்ஆர் வெளியிட்டது. அதில் மே மாதம்வரை இந்தியாவில் 64 லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கில்ஜித் - பல்திஸ்தானுக்கு தேர்தல் அறிவிப்பு: பாகிஸ்தான் நடவடிக்கைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு https://ift.tt/347W6w4

படம்
காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்த கில்ஜித்-பல்திஸ்தான் 1947 முதல் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் கில்ஜித்-பல்திஸ்தான் சட்டப் பேரவைக்கான தேர்தல் நவம்பர் 15-ம் தேதி நடைபெறும் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. தேர்தலைத் தொடர்ந்து அந்த பிராந்தியத்தை தனது 5-வது மாகாணமாக மாற்ற முடிவு செய்துள்ளது. இந்நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிறு விவசாயிகளுக்கு இலவச ஆழ்துளை கிணறுகள்: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு https://ift.tt/36oIShr

படம்
ஆந்திராவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு இலவச மாக ஆழ்துளைக் கிணறுகள் தோண்டி, அதற்கு மோட்டாரும் பொருத்தி தரப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று முன்தினம் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் கள் மற்றும் வேளாண் துறை அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத் தினார். அப்போது அவர் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

போரும் இல்லை; அமைதியும் இல்லை: லடாக் பற்றி விமானப்படை தளபதி கருத்து https://ift.tt/3n2ePSh

படம்
கிழக்கு லடாக் எல்லையில் கடந்த மே மாதம் முதலாகவே இந்தியா – சீனா இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இதனை தணிப்பதற்காக நடைபெற்ற பல சுற்று பேச்சுவார்த்தைகள் பெரிய அளவில் பலனளிக்கவில்லை. தற்போது லடாக் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, அங்கு பதற்றமான சூழல் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் இந்திய விமானப்படை தலைமை தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, "லடாக்கை பொறுத்தவரை, அங்கு ‘போரும் இல்லை; அமைதியும் இல்லை’ என்ற சூழ்நிலையே நிலவி வருகிறது. எதிரிகளின் எந்தவிதமான அச்சுறுத்தலையும் சமாளிக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது. ரபேல், தேஜாஸ் போர் விமானங்களின் இணைப்பு காரணமாக, நமது விமானப் படை பெரும் பலத்துடன் இருக்கிறது. அங்கு எதிரிகளின் ஒவ்வொரு அத்துமீறலுக்கும் இந்திய விமானப் படை தகுந்த பதிலடி கொடுத்துள்ளது" என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema,...

தீவிரமாகும் கிருஷ்ண ஜென்மபூமி விவகாரம்: அகில இந்திய சாதுக்கள் சபை மதுராவில் அக்டோபர் 15-ல் கூடுகிறது https://ift.tt/2HHImke

படம்
உ.பி.யின் பிரயாக்ராஜ் மாவட்டம் அலகாபாத்தில் அகில இந்திய சாதுக்கள் சபை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கூடியது. இதில், 13 முக்கிய சாதுக்கள் சபையின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் அயோத்தியை போல்காசி, மதுராவில் உள்ள மசூதிகளை முஸ்லிம்கள் தாமாக முன்வந்து இந்துக்களுக்கு விட்டுத்தரவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க 13 முக்கிய சாதுக்கள் சபையின் தலைவர்கள் மதுராவில் அக்டோபர் 15-ல் கூடுகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த ஆண்டிலேயே கரோனா தடுப்பு மருந்து: தெலங்கானா ஆளுநர் தமிழிசை நம்பிக்கை https://ift.tt/3n0UFrX

படம்
கரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்தார். கரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் பார்மா நிறுவனம் கோ வேக்ஸின் என்ற மருந்தை தயாரித்து பரிசோதித்து வருகிறது. இந்நிலையில் அந்த நிறுவனத்துக்கு நேற்று சென்ற தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மருந்து தயாரிப்பு பணிகளை பார்வையிட்டார். அப்போது அங்குள்ள நிபுணர்களிடம் கோ வேக்ஸின் தடுப்பு மருந்து குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அத்வானி, ஜோஷி உள்ளிட்ட 32 பேர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ நீதிமன்றம் இன்று தீர்ப்பு https://ift.tt/3jgDNuX

படம்
பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 32 பேர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி யில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர் களால் இடிக்கப்பட்டது. தொடக்கத்தில் மாநில போலீஸார் விசாரித்து வந்த இந்த வழக்கு, பின்னர் சிபிஐ-யிடம் ஒப்படைக் கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டிராக்டரை எரித்து விவசாயிகளை அவமானப்படுத்தும் எதிர்க்கட்சிகள்: பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு https://ift.tt/30jNPUM

படம்
விவசாயிகள் புனிதமாக நினைக்கும் டிராக்டர் உள்ளிட்ட வேளாண் கருவிகளை எரித்து, அவர்களை எதிர்க்கட்சிகள் அவமானப்படுத்துகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கை நதிக்கு புத்துயிரூட்டும் ஒருங்கிணைந்த 6 திட்டங்களை பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இலங்கைக்கு கடத்தவிருந்த 2 டன் விரலி மஞ்சள் பறிமுதல்  https://ift.tt/30hOMx0

படம்
தொண்டி அருகே இலங்கைக்கு கடத்த வைத்திருந்த 2,325 கிலோ விரலி மஞ்சளை கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிகளிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தும், இலங்கையிலிருந்து தங்க கட்டிகள் கடத்தி வருவதும் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விவசாய மசோதாக்கள் வேண்டாம், தேசத்தையே பாதிக்கும் என 3 முறை பிரதமருக்குக் கடிதம் எழுதினேன், பதில் இல்லை:  பஞ்சாப் முதல்வர் வேதனை https://ift.tt/2EH3CFt

படம்
‘புதிய அடக்குமுறை வேளாண் சட்டங்களுக்கு’ எதிராக விவசாயிகள் போராட அனைத்து சட்ட உதவிகள் மட்டுமல்லாது அனைத்து வகையான உதவிகளையும் வழங்குவதாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் விவசாயிகளுக்கு உறுதி அளித்துள்ளார். பஞ்சாப் அரசு இந்த ‘இருண்ட மற்றும் கடினமான காலங்களில் விவசாயிகளுக்கு முழு ஆதரவு அளிக்கும்’ என்று உறுதியளித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினம்; இயற்கை மருத்துவ கருத்தரங்கு https://ift.tt/2S87gLL

படம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இயற்கை மருத்துவத்தை பற்றிய இணையக் கருத்தரங்குகள் நடத்தப்படவிருக்கின்றன. புனேயில் உள்ள ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு இயற்கை மருத்துவத்தை பற்றிய இணையக் கருத்தரங்குகளை நடத்த இருக்கிறது. காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2 முதல் தேசிய இயற்கை மருத்துவ தினமான 2020 நவம்பர் 18 வரை நடத்தப்படவிருக்கும் இந்த இணையக் கருத்தரங்குகள், தற்சார்பு ஆரோக்கியம் மூலம் தற்சார்படைதல் குறித்த காந்தியடிகளின் தத்துவங்கள் மீது கவனம் செலுத்தும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மெஹ்பூபா முப்தி தடுப்புக் காவல் விவகாரம்: மகளின் கோரிக்கைக்கு என்ன பதில்?- காஷ்மீர் நிர்வாகத்தைக் கேட்ட உச்ச நீதிமன்றம்  https://ift.tt/3cGSqVW

படம்
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி ஜம்மு காஷ்மீர் பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து இவரது மகள் இல்திஜா முப்தி மேற்கொண்ட திருத்தப்பட்ட வேண்டுகோளுக்கு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளது. அதாவது எப்போதும் தடுப்புக்காவலிலேயே ஒருவரை வைத்திருக்க முடியாது ஏதாவது வழிவகை இருக்க வேண்டும் என்று மெஹ்பூபா மகள் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் கரோனா தொற்று: குணமடைதல் 83 சதவீதமாக உயர்வு https://ift.tt/36fnICf

படம்
இந்தியாவின் கரோனா தொற்றில் இருந்து குணமடைதல் விகிதம் 83 சதவீதத்தை தாண்டியது. சிகிச்சையில் உள்ள நபர்களை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை 41.5 லட்சம் அதிகமாகும். இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி தேசிய தலைநகர் பகுதியில் ரூ 31,000 கோடி மதிப்புள்ள திட்டங்கள்;  ரூ.15,000 கோடி கடன்  https://ift.tt/30h3QLe

படம்
தேசிய தலைநகர் பகுதி திட்ட வாரியம் ரூ 31,000 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு ரூ 15,000 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. திட்டங்களின் வளர்ச்சியைக் கண்காணிப்பதிலும், கடன்களை நிர்வகிப்பதிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்த டிஜிட்டல், கைபேசி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் திட்ட மேலாண்மை தகவல் அமைப்பு (பி-எம்ஐஎஸ்) ஒரு முக்கிய நடவடிக்கை என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக செயலாளர் துர்கா சங்கர் மிஷ்ரா கூறினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/3jgSNt0

படம்
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் சட்டச்சேவை அதிகாரிகள் அடையாளப்படுத்தும் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்களை அவர்களது அடையாள அட்டைகளைக் கேட்காமல் வழங்க அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் எத்தனை பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை 4 வாரங்களுக்குள் அனைத்து மாநிலங்களும் அளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஐ.நா. பொதுக்கூட்டத்தில் முக்கியப் பிரச்சினைகளை மோடி புறக்கணித்துவிட்டார்: பாகிஸ்தான்

படம்
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்ற இந்தியப் பிரதமர் மோடி காஷ்மீர் மற்றும் பிற உலகளாவியப் பிரச்சினைகளைப் புறக்கணித்துவிட்டார் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கடந்த சனிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் 75-வது பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் இதில் பேசிய இந்தியப் பிரதமர் மோடியை பாகிஸ்தான் விமர்சித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்காவில் 2 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் கரோனாவால் பாதிப்பு

படம்
அமெரிக்காவில் கடந்த மார்ச் மாதம் முதல் சுமார் 2,80,000 குழந்தைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நோய்த் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் கூறும்போது, “அமெரிக்காவில் கரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து மார்ச் மாதம் முதல் சுமார் 2,80,000 குழந்தைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மருத்துவமனைகளில் குழந்தைகள் இறப்பு மற்றும் சேர்க்கை சதவீதம் குறைந்துள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சேர்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தீவிரவாத மையம் என்று கூறி பெங்களூருவையும், அதன் மக்களையும் அவமானப்படுத்துவதா? - பாஜக-வுக்கு குமாரசாமி கண்டனம் https://ift.tt/3n2mxf9

படம்
பெங்களூரு தீவிரவாதிகளின் புகலிடம் என்று கூறிய பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா மீது குமாரசாமி கடும் விமர்சனங்களை முன்வைத்தார். பெங்களூரு ‘பயங்கரவாத நடவடிக்கைகளின் மையம்’ என்று பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா கூறியதற்கு முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவருமான ஹெச்.டி.குமாரசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கங்கை புத்துயிரூட்டல்; உத்தரகாண்டில் 6 மெகா திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் https://ift.tt/36gVpTO

படம்
கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ், உத்தரகாண்டில் ஆறு மெகாத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். 68 ஒரு நாளைக்கு 26 மில்லியன் லிட்டர்கள் (MLD) கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடம் கட்டுவது, ஹரித்துவார் ஜெக்தீப்பூரில் உள்ள ஒரு நாளைக்கு 27 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடத்தை மேம்படுத்துதல், சாரை என்னுமிடத்தில் 18 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடக் கட்டுமானம் உள்ளிட்டவை இத்திட்டங்களில் அடங்கும். 68 எம்எல்டி ஜெக்தீப்பூர் திட்டம், பொதுத்துறை, தனியார் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது கழிவுநீர்த் திட்டத்தின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் பணிகளை நிறுத்திக்கொள்கிறோம்: சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி அறிவிப்பு https://ift.tt/3cRhKZH

படம்
சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இந்தியாவில் பணிகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அம்னெஸ்டி சர்வதேச அமைப்பின் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் அவினாஷ் குமார் கூறும்போது, “ கடந்த இரண்டு ஆண்டுகளாக அம்னெஸ்டி அமைப்பின் மீதான தொடர்ச்சியான அடக்குமுறை, அவ்வமைப்பின் வங்கிக் கணக்குகள் இந்திய அரசால் முடக்கப்படுவது தற்செயலானது அல்ல. அமலாக்கத்துறை உள்ளிட்ட அரசு முகமைகள் தொடர்ந்து எங்களுக்குத் தொல்லை கொடுத்தவண்ணம் இருந்தன. காரணம் அரசு செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தியதுதான். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண் டெல்லியில் மரணம்: யோகி ஆதித்யநாத் அரசு மீது பிரியங்கா காந்தி கடும் விமர்சனம் https://ift.tt/2HGFHY3

படம்
உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹத்ரஸ் மாவட்ட பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் டெல்லி மருத்துவமனையில் பரிதாபமாக இறந்து போனார், இதனையடுத்து பெண்களுக்கு பாதுகாப்புக்கான எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாத மாநிலம் என்றால் அது யோகி ஆதித்யநாத்தின் உத்தரப்பிரதேசம்தான் என்று பிரியங்கா காந்தி சாடியுள்ளார். செப்டம்பர் 14ம் தேதி உ.பி.யின் ஹத்ரஸ் மாவட்டத்தில் 19 வயது தலித் பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்தப் பெண் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒருநாள் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 75 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது; குணமடைந்தோர் விகிதம் 83.01% ஆக அதிகரிப்பு https://ift.tt/339h4LI

படம்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 84 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 51 லட்சத்தை தாண்டியது. மேலும் ஒரே நாளில் 70,589 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 61 லட்சத்தை கடந்தது. 9.47 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 96 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னை உட்பட 3 நகரங்களில் தேசிய விசாரணை முகமையான என்.ஐ.ஏ. அலுவலகம்: உள்துறை அமைச்சகம் ஒப்புதல் https://ift.tt/3kXhPOg

படம்
சென்னையில் என்.ஐ.ஏ., கிளை அலுவலகம் திறக்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. சமீப காலமாக நாட்டின் பல பகுதிகளில் பயங்கரவாத செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இது தொடர்பான வழக்குகளை கையாளும் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் கிளை அலுவலகங்கள் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள ஒன்பது நகரங்களில் இயங்குகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவின் கரோனா வைரஸ் நிலவரம் கவலையளிகக் கூடியதே: டென்மார்க் பிரதமர் https://ift.tt/3n0SC7q

படம்
இந்தியாவின் கரோனா வைரஸ் நோய் நிலவரம் மிகுந்த கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது என்று டென்மார்க் பிரதமர் மெட்டி பிரெடெரிக்சன் தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கு இடையேயும் இருதரப்பு மாநாட்டில் இருநாடுகளும் பலதரப்பட்ட பிரச்சனிகளில் தீவிர கூட்டுறவுக்கு ஒப்புக் கொண்டுள்ளன. எரிசக்தி முதல் கரோனா பெருந்தொற்று வாக்சின் தயாரிப்பு வரை கூட்டுறவுக்கு இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனாவிலிருந்து மீண்ட கர்ப்பிணியை அனுமதிக்க மறுப்பு: இரட்டைக் குழந்தைகள் இறந்த பரிதாபம் https://ift.tt/3cHClPG

படம்
கேரளாவில் கரோனாவிலிருந்து மீண்ட கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனைகல் அனுமதிக்க மறுத்ததால் அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பரிதாபமாக இறந்தன. மலப்புரத்தைச் சேர்ந்தவர் ஷெரீப், கர்ப்பிணியான இவரது மனைவி கரோனா பாதிப்பினால் மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து கடந்த 15ம் தேதியே வீடு திரும்பினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்