இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

டெல்லி பல்கலைகழகத்தின் முக்கிய முடிவு: இரண்டு உறுப்புக் கல்லூரிகளுக்கு வீர் சாவர்கர், சுஷ்மா ஸ்வராஜ் பெயர்கள் https://ift.tt/3GGOH9F

படம்
டெல்லி பல்கலைகழகத்தின் இரண்டு உறுப்புக் கல்லூரிகளுக்கு இந்துத்துவா அரசியலின் முன்னோடி விநாயக் தாமோதர் சாவர்கர், முன்னாள் மத்திய அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் பெயர்களை வைக்கப்பட உள்ளன. டெல்லியில் பல்வேறு பகுதிகளில் அமைந்த உறுப்புக் கல்லூரிகளுடன் இயங்குவது டெல்லி பல்கலைகழகம். மத்திய பல்கலைகழகமான இதன் நிர்வாகக் குழுக் கூட்டம் கடந்த ஆகஸ்டில் நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜி 20 மாநாட்டை புறக்கணித்த ரஷ்ய, சீன தலைவர்கள்: ஜோ பைடன் கடும் கண்டிப்பு

படம்
ஜி 20 காலநிலை மாநாட்டில் நேரில் கலந்து கொள்ளாதற்கு ரஷ்ய மற்றும் சீன நாட்டுத் தலைவர்களை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டித்துள்ளார். இத்தாலியில் உள்ள ரோம் நகரில் ஜி 20 மாநாடு நடந்தது. பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐ.நா. சபை, உலக சுகாதார அமைப்பின் தலைவர்கள், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். எனினும் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தலிபான்கள் இந்தியாவைக் குறிவைத்தால்; வான்வழித் தாக்குதல் நிச்சயம்: யோகி ஆதித்யநாத் https://ift.tt/3w5dvD3

படம்
தலிபான்கள் இந்தியாவைக் குறிவைத்தால்; வான்வழித் தாக்குதல் நிச்சயமாக நடத்தப்படும் என எச்சரித்துள்ளார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். உத்தரப் பிரதேசத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டிக்கொள்ள 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து அங்கு பிரமாண்டமான ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டுவிழாவை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முழுவதும் வரும் 2023ல் நிறைவுபெறும் என தெரிகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் தொடர்ந்து 6வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு https://ift.tt/3CygPt9

படம்
நாடு முழுவதும் தொடர்ந்து 6வது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 106.35 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 102.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிஏஏ, என்ஆர்சி அமலுக்கு வந்தால் நாட்டின் முஸ்லிம்கள் தெருக்களில் இறங்கிப் போராடுவார்கள்: மத்திய அரசிற்கு ஓவைஸி எச்சரிக்கை https://ift.tt/3GAC2oJ

படம்
தேசியக் குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்தினால் முஸ்லிம்கள் தெருக்களில் இறங்கிப் போராடுவார்கள் என அசதுத்தீன் ஓவைஸி எச்சரித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இதை அவர் தெரிவித்தார். உ.பி.,யின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கானப் பிரச்சாரம் தொடங்கி விட்டது. அடுத்த வருடம் தொடக்கத்தில் நடைபெற உள்ள தேர்தலுக்காக அகில இந்திய இத்தஹாதுல் முஸ்லிமின் கட்சியின்(ஏஐஎம்ஐஎம்) தலைவர் அசாதுதீன் ஓவைஸி பிரச்சாரம் செய்து வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா பாதிப்புக்கு மத்தியிலும் ஒன்றரை ஆண்டில் 19 லட்சம் மனுக்களுக்கு மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு: உச்ச நீதிமன்ற நீதிபதி உதித் உமேஷ் லலித் பெருமிதம் https://ift.tt/3BwDTHo

படம்
“இந்தியாவில் கரோனா பாதிப்புக்கு மத்தியிலும் ஒன்றரை ஆண்டில் 19 லட்சம் மனுக்களுக்கு மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டுஉள்ளது” என, உச்ச நீதிமன்ற நீதிபதி உதித் உமேஷ் லலித் தெரிவித்தார். இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தினம், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் 25-வது ஆண்டு விழா ஆகியவற்றை முன்னிட்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து கிராம மக்களுக்கும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தி, பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் புதிய மெகா சட்டசேவை முகாம் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராஜ்குமாரின் இறுதி நிமிடங்கள் எப்படி இருந்தது? - இறுதியாக பரிசோதித்த மருத்துவரின் பேட்டி https://ift.tt/3nImsi5

படம்
கன்னட முன்னணி நடிகர் புனித் ராஜ்குமாரை கடைசியாக பரிசோதித்த மருத்துவர் ரமண ராவ் பெங்களூருவில், 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது: நான் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் குடும்ப மருத்துவர் என்பதால், அப்புவை (புனித்) சிறுவயதில் இருந்தே தெரியும். அவரது தந்தையை அழைப்பதை போலவே என்னையும் 'அப்பாஜி' என்றே அழைப்பார். இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அப்புவும் அவரது மனைவியும் மருத்துவமனைக்கு வந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தாய், தந்தையின் கல்லறைக்கு அருகில் அரசு மரியாதையுடன் நடிகர் புனித் ராஜ்குமார் உடல் நல்லடக்கம்: நெற்றியில் முத்தமிட்டு விடை கொடுத்த கர்நாடக முதல்வர் பசவராஜ் https://ift.tt/3CxgyGx

படம்
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் கர்நாடக அரசின் முழு மரியாதையுடன் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க கண்டீரவா ஸ்டுடியோவில் அவரது தாய், தந்தையின் கல்லறைக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் இளையமகனும், முன்னணி நடிகருமான புனித் ராஜ்குமார் (46) கடந்த 29-ம் தேதி பெங்களூருவில் மாரடைப்பினால் காலமானார். அவரது திடீர் மறைவு கன்னட திரையுலகினரை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கர்நாடக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது இறப்பினை தாங்க முடியாமல் பெலகாவியில் 2 ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழக அரசின் வெளிநாட்டு உறவுகளுக்கான ஒருங்கிணைப்பு பணியில் வெளியுறவுத் துறையின் சென்னை கிளை: இயக்குநர் எம்.வெங்கடாச்சலம் ஐஎப்எஸ் பேட்டி https://ift.tt/3pTJaq1

படம்
தமிழக அரசின் வெளிநாட்டு உறவுகளுக் கான ஒருங்கிணைப்பு பணியில் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கிளை செயலகம் 2007 முதல் சென்னையில் செயல்படுகிறது. இதன் செயல்பாடுகள் குறித்து அதன் இயக்குநரான முனைவர் எம்.வெங்கடாச்சலம், டெல்லி வந்தபோது பேட்டி அளித்தார். சென்னையிலுள்ள குடிபெயர்வோர் பாதுகாவலர் மத்திய அலுவலகத்தின் தலைமைப் பொறுப்பிலும் இவர் உள்ளார். நமது நாளேட்டின் கேள்விகளுக்கு இவர் அளித்த பதில்கள் வருமாறு: மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு மாநிலங்களில் கிளைகள் என்பதே புதிய தகவலாக உள்ளதே? from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீரில் 21-வது நாளாக அடர்ந்த காட்டில் தீவிரவாதிகளை தேடும் பணி தொடர்கிறது: மூடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை திறப்பு https://ift.tt/3pVoSfN

படம்
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் அருகே பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய தீவிரவாதிகளுடன் கடந்த அக்டோபர் 11-ம் தேதி என்கவுன்ட்டர் நடைபெற்றது. அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் சூரன்கோட் அருகே உள்ள அடர்ந்த வனப் பகுதிக்கும் ரஜவுரி மாவட்டம் தானமண்டி பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்கும் தப்பியோடினர். அந்தப் பகுதிகளில் தீவிரவாதி களை தேடும் பணி அன்றைய தினமே முடுக்கி விடப்பட்டது. இதற்கிடையில், பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி ஜம்மு - ரஜவுரி இடையே தேசிய நெடுஞ்சாலை அக்டோபர் 15-ம் தேதி மூடப்பட்டது. தீவிரவாதிகள் மறைந்துள்ள காட்டுப் பகுதி வழியாக இந்த நெடுஞ்சாலை செல்வதால் மூடப்பட்டது. இதற்கிடையில், தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை நேற்று 21-வது நாளாக தொடர்ந்து நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வடகிழக்கு பகுதியில் வங்கி சேவை விழிப்புணர்வு: வங்கியாளர்கள் குழு ஆலோசனை கூட்டத்தில் முடிவு https://ift.tt/3By9mIU

படம்
வடகிழக்கு மாநிலங்களில் வங்கி சேவைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வங்கியாளர்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷண்ராவ் காரத், அசாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குவாஹாட்டி மற்றும் இம்பால் நகரங்களில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பல்வேறு வங்கிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பட்டாசு இறக்குமதிக்கு எதிர்ப்பு: சீனாவுக்கு ரூ.50 ஆயிரம் கோடி நஷ்டம் https://ift.tt/3jTSdU2

படம்
இந்தியாவில் சீன பட்டாசுகளுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதால் அந்நாட்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையின்போது பொதுமக்கள் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு செலவிடுவர். குறிப்பாக சீன பட்டாசுகள் கணிசமாக இறக்குமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின்போது சீன தயாரிப்புகளை புறக்கணிக்க இந்தியர்கள் முடிவு செய்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா வேலை நீக்கம்; விமானங்களை இயக்க ஆளில்லை: நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து

படம்
அமெரிக்காவில் கரோனா காலத்தில் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிய விமான நிறுவனங்கள், தற்போது கூடுதல் விமானங்கள் இயக்க தேவை உள்ள சூழலில் விமானங்களை இயக்க ஆளில்லாமல் தவிக்கின்றன. நூற்றுக்கணக்கான விமானங்கள் கடந்த சில தினங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன. கரோனா தொற்றில் இருந்து உலகம் வேகமாக மீண்டெழுந்து வருகிறது. தடுப்பூசிகள் மற்றும் கட்டுப்பாடுகளை நீக்கியதன் மூலம் பயணத் தேவை அதிகரித்து வருவதால் அதிகமான விமானங்களை இயக்கும் சூழல் உள்ளது. ஆனால் கரோனா காலத்தில் பல விமான நிறுவனங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது. சில நிறுவனங்கள் ஊழியர்களை காத்திருப்பில் வைத்தது. இதனால் அவர்கள் வேறு பணிகளுக்கு செல்லத் தொடங்கி விட்டனர். இந்த நிலையில் தற்போது விமான சேவை அதிகரித்து இருக்கும் நிலையில் விமானங்களை இயக்க பணியாளர் பற்றாக்குறையை விமான நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரளா, மேற்கு வங்கம்: மாநிலங்களவை இடைத்தேர்தல் அறிவிப்பு https://ift.tt/3EAaeyD

படம்
கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலிருந்து மாநிலங்களவைக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மறந்துடாதிங்க..நவம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்குவர இருக்கும் மாற்றங்கள்?  https://ift.tt/3jTIP2P

படம்
நவம்பர் 1-ம் தேதி(நாளை) முதல் வங்கி, சமையல் சிலிண்டர், பென்ஷன்தாரர்கள் பிரிவில் மாற்றங்கள் நடைமுறைக்கு வர இருக்கின்றன. சமையல் கேஸ் சிலிண்டர் விலை from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

லாட்டரியில் 2 பில்லியன் டாலர் பரிசு: கரோனாவில் காத்திருந்து வென்ற அமெரிக்க முதியவர்

படம்
அமெரிக்காவில் கரோனாவுக்கு முன்பு வாங்கிய லாட்டரியில் 2 ஆண்டுகளும் 8 மாதங்களுக்கும் பிறகு நடந்த குலுக்கலில் 65 வயது முதியவர் ஒருவர் 2 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை வென்று ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அமெரிக்காவின் சாலிஸ்பரியைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் இரண்டு லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜகதான் மறைக்கிறது என்றால் நீங்களுமா? -இந்திரா நினைவு நாளில் பஞ்சாப் அரசை சாடிய காங்கிரஸ் https://ift.tt/2XZU3er

படம்
இந்தியாவின் இரும்புப் பெண்மணியை வரலாற்றிலிருந்து பாஜகதான் மறைக்கப் பார்கிறது என்றால் நீங்களுமா? என்று இந்திரா காந்தி நினைவு நாளில் பஞ்சாப் அரசை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது. இன்று மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்திற்குப் பின் இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக 1966ல் பதவியேற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோவிட்-19 தடுப்பூசி : 106.14 கோடியைக் கடந்தது https://ift.tt/3GDtVYj

படம்
இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 106.14 கோடியைக் கடந்தது. இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி; மாவட்ட ஆட்சியர்களுடன் நவம்பர் 3-ல் பிரதமர் மோடி ஆலோசனை https://ift.tt/3pTCoR6

படம்
குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் நவம்பர் 3-அன்று பிரதமர் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். ஜி-20 உச்சிமாநாடு, சிஒபி-26 ஆகியவற்றில் பங்கேற்று நாடு திரும்பியவுடன் பிரதமர் நரேந்திர மோடி, குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டங்களுடன் நவம்பர் 3-அன்று நண்பகல்வாக்கில் காணொலி காட்சி மூலம் ஆய்வுக்கூட்டம் நடத்தவுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘‘முன் எப்போதும் இல்லாத வளர்ச்சி, இலக்குகளை அடைந்த இந்தியா’’- பிரதமர் மோடி பெருமிதம் https://ift.tt/3nGxMeF

படம்
முன் எப்போதும் இல்லாத வளர்ச்சி, சிரமமான இலக்குகளை அடைந்திருப்பது, சர்தார் படேலின் கனவுகள்படி இந்தியா கட்டமைக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி கூறினார். தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

2020-ம் ஆண்டில் ரூ.1.92 லட்சம் கோடிக்கு பயிர் காப்பீடு; விவசாயிகள் பெற்ற இழப்பீடு ரூ.9,570 கோடி: 2019-யை விட 60% குறைவு https://ift.tt/3nNp4v9

படம்
விவசாயிகளின் பயிர்களுக்கு காப்பீடு வழங்கும் பிரதமர் பைசல் பிமா யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த 2020-21ம் ஆண்டில் ரூ.9,570 கோடி மட்டுமே இழப்பீடு பெறப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. இது கடந்த 2019-20ம் ஆண்டைவிட 60 சதவீதம் குறைவாகும். 2019-20ம் ஆண்டில் ரூ.27,398 கோடி இழப்பீடாக விவசாயிகளுக்கு காப்பீடு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்டது அதாவது கடந்த ஆண்டில் பெரும்பாலும் பயிர் இழப்பு நடக்கவில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதுதான் சர்தார் படேலுக்கு உண்மையான அஞ்சலி: ராகுல் காந்தி கருத்து https://ift.tt/3BtKRN9

படம்
சர்தார் வல்லவாய் படேலின் 146-வது பிறந்தநாளைக்கொண்டாடும் இவ்வேளையில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதுதான் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் 146-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. படேலின் பிறந்தநாளை தேசிய ஒற்றுமை நாளாக மத்தியஅரசு அறிவித்து அதைக் கொண்டாடி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தானின் வங்கியில் சைபர் தாக்குதல்: பணத்தை கொள்ளையடிக்க முயற்சி

படம்
நேஷனல் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் சர்வர்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் மத்திய வங்கியான நேஷனல் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் சர்வர்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள், உலகின் எந்த பகுதியில் இருந்தோ இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். பாகிஸ்தான் வங்கியின் பணத்தை பெருமளவில் திருடும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உலகிற்கு 500 கோடி கரோனா தடுப்பூசி வழங்க இந்தியா தயார்: ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி அறிவிப்பு

படம்
கரோனா வைரஸை எதிர்த்துப் போரிடுவதற்காக இந்த உலகிற்கு உதவ அடுத்த ஆண்டு 500 கோடி தடுப்பூசிகளை தயாரித்து வழங்க இந்தியா தயாராக இருக்கிறது என்று ஜி-20 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார். இத்தாலியில் உள்ள ரோம் நகரில் ஜி 20 மாநாடு நடந்து வருகிறது. பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐ.நா. சபை, உலக சுகாதார அமைப்பின் தலைவர்கள், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆப்கானிஸ்தான் அரசை அங்கீகரிக்கத் தவறினால் உலகிற்கே பிரச்சினை ஏற்படும்: அமெரிக்காவுக்கு தலிபான்கள் எச்சரிக்கை

படம்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அரசை அங்கீகரிக்கத் தவறுவதும், வெளிநாடுகளில் ஆப்கானிஸ்தான் நிதியை தொடர்ந்து முடக்குவதும் இந்த பிராந்தியத்தில் அமைதியற்ற நிலையை ஏற்படுத்துவதுடன் உலகிற்கும் பிரச்சினைகளை உருவாக்கி விடும் என்று தலிபான்கள் அமெரிக்காவை எச்சரித்துள்ளனர். ஆப்கனிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின் அந்நாட்டைத் தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டுவந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றிய தலிபான்கள், இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவினர் ஆப்கனின் பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த், அவருக்குத் துணையாக முல்லா அப்துல் கனி பராதரும், மவுளவி அப்துல் சலாம் ஹனாபியும் நியமிக்கப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவி்ல் 24 மணிநேரத்தில் கரோனாவிலிருந்து 14 ஆயிரம் பேர் குணமடைந்தனர்: அதிகரிக்கும் உயிரிழப்பு https://ift.tt/2ZynaWK

படம்
இந்தியாவில் கரோனா தொற்று குறைந்து வரும்நிலையில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 446 பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புனித் ராஜ்குமார் உடல்  முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் https://ift.tt/2ZEZYpF

படம்
புனித் ராஜ்குமாரின் இறுதிச்சடங்குகள் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் இளைய மகனும், முன்னணி நடிகருமான புனித் ராஜ்குமார்(46) நேற்று முன்தினம் பெங்களூருவில் திடீர் மாரடைப்பால் காலமானார். அவரது விருப்பப்படி உடனடியாக கண்கள் தானம்செய்யப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடக இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு https://ift.tt/3CvKSl7

படம்
கர்நாடக சட்டப்பேரவையில் காலியாக உள்ள விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி, ஹாவேரி மாவட்டம் ஹனகல் ஆகிய 2 தொகுதிகளில் நேற்று இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான‌ காங்கிரஸ், மஜத ஆகியவை தனித்தனியாக போட்டியிடுகின்றன. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பசவராஜ் அனைத்து அமைச்சர்களையும் களத்தில் இறக்கினார். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோரும், மஜத வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் பிரதமரும் மஜத தேசிய தலைவருமான தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமியும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தரை இலக்கை தாக்கும் அதிநவீன வெடிகுண்டு பரிசோதனை வெற்றி https://ift.tt/3bxnmbj

படம்
விமானத்தில் இருந்து தொலை தூரத்தில் இருக்கும் தரை இலக்கை தாக்கும் அதிநவீன வெடிகுண்டு பரிசோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (டிஆர்டிஓ) நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது. வானில் இருந்து தரை இலக்குகளை தாக்கவல்ல வெடிகுண்டுகளை ஹைதரா பாத்தில் உள்ள டிஆர்டிஓ-வின் இமாரத் ஆராய்ச்சி மையம் அண்மையில் உருவாக்கியது. இந்த வெடிகுண்டு முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயா ரிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.பி. ஆக்ராவில் இயங்கி வந்த போலி உரத் தொழிற்சாலை: தமிழகத்துக்கும் விநியோகித்ததாக தகவல் https://ift.tt/3mwL5Pv

படம்
பாஜக ஆளும் உ.பி.யில் சமீப காலமாக உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உரம் பெறுவதற் காக பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய கட்டா யம் ஏற்பட்டுள்ளது. உரம் கிடைக்காததால் லலித்பூரில் 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து மாநிலம் முழுவதிலும் உர விநியோகம் மீது தீவிர கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இச்சூழலில், புகாரின் அடிப் படையில் நேற்று ஆக்ராவின் ரஹன்காலா பகுதியில் போலீஸார் உதவியுடன் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி னர். இதில், போலி உரம் தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த இயந்திரங் கள், 30 குவிண்டால் போலி உரம், 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.போலி உரத்தை ரூ.50 செலவில் தயாரித்து ரூ.1,000-க்கு விற்பனை செய்து வந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெட்ரோலில் லாபம் பார்க்கும் தொழிலதிபர்கள்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் குற்றச்சாட்டு https://ift.tt/3jR5IEm

படம்
கோவா சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அம்மாநிலத்தில் ராகுல் காந்தி நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வெல்ஸோ கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் உணவுப் பொருட்கள், பெட்ரோலியப் பொருட்கள், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இன்றைக்கு கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. அப்படி இருந்தும் கூட, பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் அவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பிரதமருக்கு நெருக்கமான 4 முதல் 5 தொழிலதிபர்களே லாபம் அடைகிறார்கள் என்பது தெரியவரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆதார் எண் போல ஒவ்வொரு முகவரிக்கும் தனித்தனியாக மின்னணு முகவரி குறியீடு வழங்க மத்திய அரசு திட்டம்: வர்த்தக நிறுவனங்கள் இணைய வழியில் உறுதிப்படுத்த முடியும் https://ift.tt/3GDYnBK

படம்
ஆதார் எண் போல ஒவ்வொரு முகவரிக்கும் தனித்தனியாக மின்னணு முகவரி குறியீடு (டிஏசி) வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வர்த்தக நிறுவனங்கள் இணைய வழியில் முகவரியை சுலபமாக உறுதிப்படுத்த முடியும். இந்த குறியீட்டை வைத்து சொத்து வரியை சுலபமாக செலுத்துவது முதல் இணையவழியில் பொருட் களை வாங்குவது வரை பயன் படுத்தலாம். இப்போது முகவரிக்கான ஆவணமாக ஆதார் அட்டையை பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் இடம்பெற்றுள்ள முகவரியை மின்னணு முறையில் உறுதிப்படுத்த முடியாது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக நாட்டில் உள்ள அனைத்து முகவரியையும் புவியியல் ரீதியாக மின்னணு முகவரி குறியீடாக உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் எந்த ஒரு முகவரி யையும் இணையதளம் மூலம் உறுதிப்படுத்த முடியும். இந்தக் குறியீடை உருவாக்கும் பணியில் அஞ்சல் துறை ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான வரைவு அறிக்கையை இணையதளத்தில் வெளியிட்டுள்ள அஞ்சல் துறை, பொதுமக்களின் கருத்தை கோரியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீர் தால் ஏரியில் மிதக்கும் திறந்தவெளி திரையரங்கம் தொடக்கம் https://ift.tt/3bouXcb

படம்
காஷ்மீரின் தால் ஏரியில் இருக்கும் படகு வீடுகள் உலகப் புகழ்பெற்றவை. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் படகு வீடுகளில் தங்கி இயற்கை அழகை ரசிக்க தவறுவதில்லை. இந்நிலையில் தால் ஏரியில் உள்ள ஒரு படகு வீட்டில் திறந்தவெளி திரையரங்கை உருவாக்கியுள்ளனர். காஷ்மீரிலேயே முதன் முதலாக அமைக்கப்பட்ட மிதக்கும் திறந்தவெளி திரையரங்கம் இதுதான். ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலர் அருண் குமார் மேத்தா அண்மையில் இதை தொடங்கி வைத்தார். முதல் நாளில் இந்திப் படமான காஷ்மீர் கி காளி திரைப்படம் சுற்றுலாப் பயணிகளுக்காகவும், தால் ஏரி பகுதி மக்களுக்காகவும் திரையிடப்பட்டது. இந்த திரையரங்கம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் என்றும், இங்கு சுற்றுலா மேம்படும் என்று ஜம்மு-காஷ்மீர் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை செயலர் சர்மத் ஹபீஸ் தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புனித் ராஜ்குமாரின் உடலுக்கு லட்சக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது https://ift.tt/3bsRbtU

படம்
மாரடைப்பால் காலமான கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் (46) உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள் உட்பட லட்சக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் இளைய மகனும், முன்னணி நடிகருமான புனித் ராஜ்குமார்(46) நேற்று முன்தினம் பெங்களூருவில் திடீர் மாரடைப்பால் காலமானார். அவரது விருப்பப்படி உடனடியாக கண்கள் தானம்செய்யப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காங்கிரஸின் அலட்சியத்தால் பலம் பெறும் பிரதமர் மோடி: பிரஷாந்த் கிஷோரை அடுத்து எச்சரித்த மம்தா https://ift.tt/3Cvyi5m

படம்
காங்கிரஸின் அலட்சியத்தால் பிரதமர் மோடி பலம் பெறுவதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி கூறியுள்ளார். சமீபத்தில் இதேபோன்ற கருத்தை தேர்தல் பிரச்சாரக நிபுணரான பிரஷாந்த் கிஷோரும் தெரிவித்திருந்தார். அடுத்த வருடம் துவக்கத்தில் கோவாவின் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதன் 40 தொகுதிகளிலும் போட்டியிட மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காங்கிரஸால் பிரதமர் மோடி பலமாகிறார்; பாஜகவின்டிஆர்பி : மம்தா பானர்ஜி கடும் சாடல் https://ift.tt/3ElOQ0a

படம்
காங்கிரஸால் தான் பிரதமர் மோடி இன்னும் பலமாகப் போகிறார், ஏனென்றால் பாஜகவின் டிஆர்பி எனப்படும் தொலைக்காட்சி ரேட்டிங் புள்ளிகள் ஏறுவதே காங்கிரஸால் தான் என மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். கோவா சட்டப் பேரவைக்கு 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த தேர்தலில் சில இடங்கள் வித்தியாசத்தில் ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போன காங்கிரஸ் கட்சி, இம்முறை தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளது. அதேசமயம் அங்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் தனித்துப் போட்டியிடுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஏஒய்.4.2 வைரஸ் 42 நாடுகளில் கண்டறியப்பட்டது: உலக சுகாதார அமைப்பு

படம்
டெல்டா வைரஸிலிருந்து பிரிந்து புதிதாக உருவெடுத்துள்ள ஏஒய்.4.2 வைரஸ் 42 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், “ஏஒய்.4.2 வைரஸ் தொற்றின் வீரியம் குறித்து அறிய தொடர் ஆய்வக முடிவுகள் நடத்தப்படுகின்றன. டெல்டா வைரஸிலிருந்து பிரிந்து புதிதாக உருவெடுத்துள்ள ஏஒய்.4.2 வைரஸ் 42 நாடுகளில் கண்டெறியப்பட்டுள்ளது. இதில் 93% தொற்று பிரிட்டனில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது. டெல்டா வைரஸிலிருந்து பிரிந்து உருவான மற்ற 20 வைரஸ்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். கடந்த வாரத்தில் 4% கரோனா தொற்று உலக அளவில் அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘‘இந்தியாவுக்கு வாருங்கள்’’- போப் பிரான்சிஸை சந்தித்த  பிரதமர் மோடி அழைப்பு https://ift.tt/3CxS1S2

படம்
இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, வாடிகன் நகரில் போப் பிரான்சிஸை சந்தித்து பேசினார். இத்தாலி தலைநகர் ரோமில் ஜி20 அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் மாநாடு இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று நேற்று காலை இத்தாலியின் ரோம் நகருக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘‘இந்தியாவுக்கு வாருங்கள்’’- போப் பிரான்சிஸை சந்தித்த  பிரதமர் மோடி அழைப்பு

படம்
இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, வாடிகன் நகரில் போப் பிரான்சிஸை சந்தித்து பேசினார். இத்தாலி தலைநகர் ரோமில் ஜி20 அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் மாநாடு இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று நேற்று காலை இத்தாலியின் ரோம் நகருக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘‘சமூக நீதிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்’’- பிரதமர் மோடி புகழாரம் https://ift.tt/3pRz7SG

படம்
துணிச்சலும், கனிவான உள்ளமும் கொண்டவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என பிரதமர் மோடி கூறியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா அக்.28 -ல் தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று முன்தினம் யாகசாலை பூஜை மற்றும் லட்சார்ச்சனையுடன் ஆன்மிக விழா தொடங்கியது. இரண்டாவது நாளான நேற்று அரசியல் விழா நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடை: ஈரான் அதிருப்தி

படம்
ஈரான் ராணுவம் மீது அமெரிக்கக் கருவூலத்துறை புதிதாக மீண்டும் பொருளாதாரத் தடை விதித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்கக் கருவூலத்துறை வெளியிட்ட அறிக்கையில், “சவூதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது 2019ஆம் ஆண்டு ஆளில்லா விமானத் தாக்குதலை ஈரான் ராணுவம் நடத்தியது. 2021ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி ஓமன் கடற்கரையில் இஸ்ரேலுக்குச் சொந்தமான நிறுவனத்தால் இயக்கப்படும் மெர்சர் ஸ்ட்ரீட் வணிகக் கப்பலின் மீதும் (இந்தத் தாக்குதலில் கப்பலில் பணியிலிருந்த இருவர் கொல்லப்பட்டனர்) ஈரான் ராணுவம் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜியோவின் அடுத்த அதிரடி அறிமுகம்: புதிய மொபைல் போன் நெக்ஸ்ட்  https://ift.tt/3boUguN

படம்
கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ஜியோ உருவாக்கியுள்ள புதிய மொபைல் போன் தீபாவளி முதல் விற்பனைக்கு வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளை நெருங்குகிறது. தொடங்கும்போதே அதிரடி அறிவிப்புகள் சலுகைகள் என டெலிகாம் சந்தையைக் கைப்பற்றியது. தற்போது டிஜிட்டல் சந்தையின் தொழில் வாய்ப்புகளையெல்லாம் தன் வசம் இழுக்க முயற்சித்து வருகிறது. ரிலையன்ஸ் ஜியோவில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

9 மாதத் தொடர் ஊரடங்குக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பிய ஆஸ்திரேலியா

படம்
சுமார் 9 மாதத் தொடர் ஊரடங்குக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் போன்ற பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஆஸ்திரேலியாவில் இந்த வருடம் தொடக்கம் முதல் டெல்டா வைரஸ் காரணமாக கரோனா தொற்று அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து விக்டோரியா, மெல்போர்ன், நியூ சவுத் வேல்ஸ் போன்ற மாகாணங்களில் கரோனா பரவல் அதிகரித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனாவால் சிவப்புப் பட்டியலில் இருந்த 7 நாடுகள் மீதான தடையை நீக்கிய பிரிட்டன்

படம்
கடும் கரோனா பரவல் காரணமாக சிவப்பு பட்டியலில் வைத்திருந்த 7 நாடுகளை பிரிட்டன் அரசு விடுவித்துள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து அரசு வெளியிட்ட அறிக்கையில், “வரும் திங்கள் முதல் கொலம்பியா, டொமினிகன் குடியரசு, ஈகுவடார், ஹைதி, பனாமா, பெரு, வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் புதிதாக மேலும் 14,313 பேருக்கு கரோனா தொற்று: 549 பேர் பலி https://ift.tt/2ZxpAVx

படம்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,313 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பைவிட 11% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆர்யன் கான் இன்று சிறையில் இருந்து விடுவிப்பு: மகனை அழைத்துவர ஷாருக்கான் நேரில் செல்கிறார் https://ift.tt/3pQUMtW

படம்
மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து மூன்று வாரங்களுக்கும் மேலாக சிறையில் இருந்த ஆர்யன் கான் இன்று ஜாமீனில் விடுவிக்கப்படுகிறார். நேற்று பெயில் பாக்ஸ் சிறைக்கு வெளியில் வைக்கப்பட்டது. அதில் நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவின் அசல் பத்திரம் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதலே மும்பை ஆர்த்தர் ரோடு சிறைச்சாலை அதிகாரிகள் ஆர்யன் கானை ஜாமீனில் விடுவிக்கும் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். இன்னும் ஓரிரு மணி நேரத்தில் ஆர்யான் கான் விடுவிக்கப்படுவார் என ஆர்தர் ரோடு சிறைச்சாலை கண்காணிப்பாளர் நிதின் வாய்ச்சால் தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாநிலங்களுக்கு கடைசி தவணை ரூ.44,000 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு https://ift.tt/3nEx9SU

படம்
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப் பட்டதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புத் தொகையாக 2021-22-ம் நிதி ஆண்டுக்கு ரூ.44 ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. கரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நடைமுறை, பொருளா தார தேக்கம் உள்ளிட்ட கார ணங்களால் ரூ.1.59 லட்சம் கோடி இழப்பீட்டுத் தொகையை அளிப்பதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இந்தத் தொகையை வெளிச்சந்தையில் கடனாக மாநிலங்கள் திரட்டிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் டெல்லி எல்லையில் தடுப்புகள் அகற்றம் https://ift.tt/3vW5YXr

படம்
விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் டெல்லி எல்லை பகுதியில் சாலை தடுப்புகள் நேற்று அகற்றப்பட்டன. கடந்த ஆண்டு செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி முதல் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு தொடர் போராட் டம் நடத்தி வருகின்றனர். விவ சாயிகளின் போராட்டத்தால் டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோவேக்சின் போட்டு கொண்டவர்கள் வெளிநாடு செல்வதற்காக கோவிஷீல்டு செலுத்த உத்தரவிட முடியாது; மக்களின் உயிருடன் விளையாட கூடாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம் https://ift.tt/3CuLwiM

படம்
“எந்தவித மருத்துவ தரவுகளையும் ஆராயாமல், கோவேக் சின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வர்களுக்கு கோவிஷீல்டு தடுப் பூசியை செலுத்த உத்தரவிட முடியாது" என உச்ச நீதிமன்றம் தெரிவித் துள்ளது. இந்தியாவை பொறுத்த வரை, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் கோவிஷீல்டு தடுப் பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியும் மக்களுக்கு செலுத்தப் பட்டு வருகின்றன. இதில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் வழங்கவில்லை. இதன் காரணமாக, இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களை சில நாடுகள் அனுமதிக்க மறுத்து வருகின்றன. இதனால் வெளிநாடுகளில் பயிலும் அல்லது பயில திட்டமிட்டுள்ள மாணவர்கள், வேலை செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.பி.யில் சிறுவனை தலைகீழாக தொங்கவிட்ட தலைமை ஆசிரியர் https://ift.tt/3pU5ksi

படம்
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நேற்று முன்தினம் மதிய உணவு இடைவேளையின்போது, மாணவர்கள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சக மாணவனை கடித்த சோனு யாதவ் என்ற 2-ம் வகுப்பு மாணவனை தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா அழைத்து கண்டித்துள்ளார். பிறகு சக மாணவனிடம் மன்னிப்பு கேட்குமாறு சோனுவிடம் அவர் கூறியுள்ளார். ஆனால் சோனு மன்னிப்பு கேட்காததால் ஆத்திர மடைந்த தலைமை ஆசிரியர் அச்சிறுவனை தரதரவென்று பள்ளி மேல் தளத்துக்கு இழுத்துச் சென்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்