இடுகைகள்

செப்டம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அனைத்துத் தரப்பு மக்களையும் திரைப்படங்கள் இணைக்கின்றன - தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் குடியரசுத் தலைவர் பேச்சு https://ift.tt/WAtQes6

படம்
புதுடெல்லி: டெல்லியில் நேற்று 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், நடிகர்கள் சூர்யா, அஜய் தேவ்கன் ஆகியோருக்கு சிறந்த நடிகர்களுக்கான விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். கடந்த 2020-ம் ஆண்டுக்கான, 68-வது தேசிய திரைப்பட விருதுகள் ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த நடிகர்களாக இந்தி நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சூர்யா ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். மேலும், சிறந்த படம், சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி), சிறந்த பின்னணி இசை (ஜி.வி.பிரகாஷ்), சிறந்த திரைக்கதை (ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதா கொங்கரா) ஆகிய பிரிவுகளில் 'சூரரைப் போற்று' படம் விருதுகளை வென்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடகாவில் ராகுல் காந்தி பாத யாத்திரை https://ift.tt/nLai48q

படம்
பெங்களூரு : காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கர்நாடகாவில் ஒற்றுமைக்கான பாத யாத்திரையை நேற்று தொடங்கினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் கடந்த 7ம் தேதி ஒற்றுமை பாத யாத்திரையை தொடங்கினார். தமிழகம், கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் அவர் நேற்று நுழைந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத் காந்திநகரில் இருந்து மும்பை வரை செல்லும் வந்தே பாரத் ரயில் பயணம் தொடங்கியது - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் https://ift.tt/grYBJMG

படம்
காந்திநகர் : குஜராத் தலைநகர் காந்திநகரில் இருந்து - மும்பைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அதே ரயிலில் அவர் கலுபூர் ரயில் நிலையம் வரை பயணம் செய்தார். குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அங்கு பிரதமர் மோடி கடந்த 2 நாட்களாக பயணம் செய்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவடைந்த சில திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் பொறுப்பேற்பு https://ift.tt/MZfDGLj

படம்
புதுடெல்லி : நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பதவியேற்றார். தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து 9 மாதங்களுக்கும் மேலாக அப்பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் நாட்டின் 2-வது முப்படை தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் கடந்த 28-ம் தேதி நியமிக்கப்பட்டார். அவர் நேற்று டெல்லியில் பொறுப்பேற்றுக் கொண்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முகேஷ் அம்பானிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு https://ift.tt/3PtOQde

படம்
புதுடெல்லி : தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு கடந்த 2013-ம் ஆண்டு முதல் ‘இசட்’ பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அவர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உளவுத்துறை தகவல் அளித்ததையடுத்து, மத்திய அரசு முகேஷ் அம்பானிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன்படி, இனி 40 முதல் 50 கமாண்டோ படை வீரர்கள் முகேஷ் அம்பானியை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவார்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் முதல் அரசு வேலை - பிஹாரின் ஒரு கிராமமே கொண்டாடும் இளைஞன் https://ift.tt/wsZrlez

படம்
பிஹார் : பிஹார் மாநில கிராமம் ஒன்றில் ஒருவருக்கு அரசு வேலை கிடைத்ததை அந்த கிராமமே ஒன்றாக கொண்டாடிவரும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்துபிறகு அந்த கிராமத்தில் இருந்து அரசு வேலைக்கு தேர்வாகியுள்ள முதல் நபர் அவர் என்பதாலேயே கிராமமே சேர்ந்து கொண்டாடுவதன் பின்னணி. பிஹாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள சோஹாக்பூர் கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ராகேஷ் தான் 75 ஆண்டுகளில் முதல் நபராக அரசு வேலைக்கு தேர்ச்சி பெற்றுள்ளார். 25 வயதாகும் ராகேஷ், தனது 19 வயதிலேயே தந்தையை இழந்துள்ளார். என்றாலும், அதன்பின் தனது பள்ளிக்கல்வியை கொண்டு, குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து அந்த வருமானத்தை கொண்டு தனது கல்வியை தொடர்ந்திருக்கிறார். அப்போது அரசு வேலையில் சேர வேண்டும் என லட்சியம் வகுத்துக்கொண்டு அதற்காக உழைக்கத் தொடங்கியுள்ளார் ராகேஷ். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உக்ரைனின் லுஹான்ஸ்க் உட்பட 4 நகரங்கள் ரஷ்யா உடன் இணைப்பு - புதின் அறிவிப்பு

படம்
மாஸ்கோ : உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கைப்பற்றப்பட்ட லுஹான்ஸ்க் உள்ளிட்ட 4 நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவி செய்து வருகின்றன. 6 மாதங்களைத் தாண்டி போர் நடைபெற்று வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோவை | பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது https://ift.tt/1qmip7P

படம்
கோவை ரத்தினபுரியைச் சேர்ந்தவர் மோகன். மண்டல பாஜக தலைவராக உள்ளார். இவருக்கு சொந்தமான, வெல்டிங் உபகரணங்கள் விற்கும் கடையில் பெட்ரோல் குண்டு வீசியதாக வெள்ள கிணறு பெரிய சமத்துவபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முகமது ரபீக்(31) என்பவரை ரத்தினபுரி போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அறிவுஜீவி தேவை இல்லை; ஆக்ஷன் நாயகரே தேவை - சொந்த மாநிலத்திலேயே சசி தரூருக்கு கடும் எதிர்ப்பு https://ift.tt/UkqG2cz

படம்
திருவனந்தபுரம் : அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடக்கிறது. இதில் போட்டியிட காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் வேட்பு மனு பெற்றுள்ளார். ஆனால்சொந்த மாநில காங்கிரஸ் கட்சியினரே சசி தரூருக்கு எதிராக நிற்கின்றனர். ஐ.நா.வில் இருந்து அரசியல் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை; இளைஞருக்கு 14 ஆண்டுகள் சிறை: திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு https://ift.tt/TPgtpCG

படம்
திருவள்ளூர்: சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. திருவள்ளுர் மாவட்டம், ஆவடி அருகே கன்னடபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ்(36). இவர், கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரியில், தன் வீட்டருகே வசித்து வந்த 16 வயது சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கு விசாரணை, திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. முடிவுக்கு வந்த வழக்கு விசாரணையில் ஜெய்கணேஷ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு தொடர்பான தீர்ப்பை திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி சுபத்திராதேவி நேற்று அளித்தார். அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக ஜெய்கணேஷுக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபரா...

காஷ்மீரில் 2 பேருந்துகளில் குண்டுவெடித்து 2 பேர் காயம் https://ift.tt/BuAgyaw

படம்
ஜம்மு : காஷ்மீரின் ஜம்மு பகுதியில் உள்ள உதம்பூரில் இந்துக்கள் பெரும் பான்மையாக வசிக்கின்றனர். அங்கு ராணுவத்தின் வடக்கு பிரிவின் தலைமையகம் செயல்படுகிறது. நகரின் டோமல் சவுக் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே ஏராளமான தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருக்கும். அங்கு நேற்று முன்தினம் இரவு இங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு தனியார் பேருந்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் பேருந்து முற்றிலுமாக உருக்குலைந்தது. பயணிகள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை உதம்பூர் பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் பேருந்துக்கு சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிம் கார்டு வாங்க போலி ஆவணங்களை வழங்கினால் ஓராண்டு சிறை https://ift.tt/SJBoIDC

படம்
புதுடெல்லி : சிம் கார்டு மற்றும் ஓடிடி சேவைகளுக்கு போலி ஆவணங்களை தயாரித்து வழங்கினால் ஓராண்டு சிறை அல்லது ரூ.50,000 அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக விதிக்க இந்திய தொலைத்தொடர்பு வரைவு மசோதா 2022-ன் விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களிடையே ஆன்லைன் மூலமாக மோசடியில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோன்று, சட்டவிரோதமான காரியங்களும் தொலைத்தொடர்பு சேவையை அடிப்படையாக கொண்டே அதிக அளவில் நடைபெறுகின்றன. இதனை கருத்தில் கொண்டு, இதுபோன்ற பல்வேறு மோசடி நிகழ்வுகளிலிருந்து தொலைத்தொடர்பு பயனாளர்களை பாதுகாக்க தொலைத்தொடர்பு வரைவு மசோதாவில் புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில், சிறை தண்டனை விதிப்பதற்கும், அபராதம் வசூலிப்பதற்கும், தொலைத்தொடர்பு இணைப்பை துண்டிப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருமணம் ஆகாத பெண்களுக்கும் பாதுகாப்பான கருக்கலைப்பு செய்துகொள்ள உரிமை உள்ளது - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு முழு விவரம் https://ift.tt/ZmqxLej

படம்
புதுடெல்லி : டெல்லி உயர் நீதிமன்றத்தில், 25 வயதான, திருமணமாகாத பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், ஒருமித்த உறவின் விளைவாக தான் கர்ப்பம் அடைந்ததாகவும், 23 வாரங்கள் மற்றும் 5 நாட்களான கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்குமாறும் கோரினார். ஆனால், அவருக்கு அனுமதி வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கில் டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் கூறியிருப்பதாவது: அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான கருக்கலைப்புக்கு உரிமை உள்ளது. இந்த விஷயத்தில் திருமணமான பெண்கள் மற்றும் திருமணம் ஆகாத பெண்களுக்கு இடையே வேறுபாடு காட்டுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஎஃப்ஐ நிர்வாகிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு தயாரிக்கும் கையேடு கண்டுபிடிப்பு - என்ஐஏ அதிகாரிகள் தகவல் https://ift.tt/5PliBXE

படம்
புதுடெல்லி : பிஎஃப்ஐ நிர்வாகிகளின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த ஆவணங்கள் குறித்து தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் கூறியதாவது: பிஎஃப்ஐ நிர்வாகிகளின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், எளிதில் கிடைக்கும் பொருட்களை கொண்டு சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் செய்வது எப்படி என்ற கையேடுகள், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்காக ஆவணங்கள், தீவிரவாத அமைப்புகளின் சி.டி.க்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருவள்ளூர் | 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; 69 வயது முதியவருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை: மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு https://ift.tt/gCPJrYu

படம்
திருவள்ளூர்: ஆவடியில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 69 வயது முதியவருக்கு 16 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. திருவள்ளுர் மாவட்டம், ஆவடி, காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் பலராம் சிங்(69). இவர், கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தன் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அப்புகாரின் அடிப்படையில், போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், பலராம் சிங், 8 வயது சிறுமியை மட்டுமல்லாமல், அப்பகுதியை சேர்ந்த மேலும் இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து, 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான போக்சோ வழக்கு விசாரணை, திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணையில் பலராம் சிங் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hin...

ஈரோடு பேராசிரியர் மணியின் ‘இன்டர்நேஷனல் எக்னாமிக்ஸ்’ - பொருளாதார மாணவர்களுக்கு புதிய பாடநூல் வெளியீடு https://ift.tt/BsW3MLK

படம்
புதுடெல்லி : ஈரோடு கல்லூரிப் பேராசிரியர் என்.மணியின் ‘இன்டர்நேஷனல் எக்னாமிக்ஸ்’ நூல் டெல்லியில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதை இந்திய சமூக அறிவியல் ஆய்வு கவுன்சில் (ஐசிஎஸ்எஸ்ஆர்) உறுப்பினர் செயலாளர் வி.கே.மல்ஹோத்ரா வெளியிட்டார். புதிய கல்வித் திட்டத்தின்படி, பொருளாதாரம் படிக்கும் இளநிலைமற்றும் முதுநிலை மாணவர்களுக்கு பயன்படும் வகையில் ‘இன்டர்நேஷனல் எக்னாமிக்ஸ்’ எனும் புதிய பாடநூலை ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் என்.மணி எழுதியுள்ளார். சர்வதேச பொருளாதாரம் தொடர்பாக ஆங்கிலத்தில் என்.மணி எழுதியுள்ள மூன்றாவது நூல் இதுவாகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முதல்வர் கெலாட் ஆதரவு அமைச்சர்களுக்கு நோட்டீஸ் https://ift.tt/cuHFEjS

படம்
புதுடெல்லி : காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முடிவெடுத்துள்ளார். அசோக் கெலாட் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டால், ராஜஸ்தான் முதல்வராக சச்சின் பைலட்டை நியமிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. இது தொடர்பாக கருத்து கேட்க, ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தை காங்கிரஸ் கூட்டியது. ஆனால், அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 82 பேர், சச்சின் பைலட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் அளித்தனர். மேலும், காங்கிரஸ் கட்சி கூட்டிய எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், அமைச்சர்கள் சாந்தி தரிவல், மகேஷ் ஜோஷி, தர்மேந்திர ரத்தோர் ஆகியோர் தனியாக கூட்டிய கூட்டத்தில் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.பி | 63 டீஸ்பூன்களை விழுங்கிய நபர்: அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள் https://ift.tt/SVFnuq2

படம்
முசாபர்நகர்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 63 டீஸ்பூன்களை 32 வயது மதிப்பு தக்க நபர் ஒருவர் விழுங்கி உள்ளார். அதனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அவரது வயிற்று பகுதியில் இருந்து அகற்றியுள்ளனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம். அந்த நபரின் பெயர் விஜய் என தெரிகிறது. அவரது சொந்த ஊர் மன்சூர்பூர் பகுதியில் உள்ள பொபாடா கிராமத்தை சேர்ந்தவர் என தெரிகிறது. அவர் போதை பழக்கத்திற்கு அடிமையானவராம். அதன் காரணமாக மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு வயிற்று பகுதியில் வலி இருப்பதாக தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கூடுவாஞ்சேரி அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் பெண் கைது https://ift.tt/veoWmaX

படம்
வண்டலூர்: செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். லாரி வைத்து மண், மணல் வியாபாரம் செய்து வந்தார். மேலும் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளராக இருந்து வந்தார்.‌ இவரை கடந்த 21-ம் தேதி செல்வி நகர் அருகே மர்மநபர்கள் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் கூடுவாஞ்சேரி போஸீஸார் விசாரணை நடத்தினர். இதில் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதற்காக உறவினர் என்றும் பாராமல் செந்தில்குமாரை கொல்ல சென்னை வளசரவாக்கம் கற்பகம் அவன்யூ பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் கூலிப்படையை ஏவியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கூடுவாஞ்சேரி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் குமார் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்த போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை - உடனடி அமல் என மத்திய அரசு அறிவிப்பு https://ift.tt/MHs4S6w

படம்
டெல்லி : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு ஐந்தாண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத செயல்பாடுகள் காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. பல்வேறு கலவரங்கள், படுகொலைகளில் இந்த அமைப்பின் நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதன்பேரில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 22-ம் தேதி திடீர் சோதனை நடத்தினர். அப்போது 45 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. வங்கிகளில் பிஎஃப்ஐ அமைப்பு ரூ.120 கோடி டெபாசிட் செய்திருப்பதும், வளைகுடா நாடுகளில் இருந்து ஹவாலா முறையில் அதிக அளவிலான தொகையை கொண்டு வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீக்கிய ஆசிரியை கட்டாய மதமாற்றம் - பாகிஸ்தானுக்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம்

படம்
புதுடெல்லி : பாகிஸ்தானில் சீக்கிய ஆசிரியை ஒருவர் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார். பாகிஸ்தானில் கைபர் பக்துன்கவா மாகாணம் புனெர் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த இளம் ஆசிரியை ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருப்பதி-திருமலை இடையே 50 பேட்டரி பேருந்து சேவை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் தொடங்கி வைத்தார் https://ift.tt/RJyl6Sw

படம்
திருப்பதி : திருப்பதி - திருமலை இடையே போக்குவரத்து வசதி காலத்துக்கேற்ப பல மாற்றங்களை கண்டுள்ளநிலையில் நேற்று முதல் பேட்டரி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். சுயம்புவாக திருமலையில் குடிகொண்டுள்ள திருமாலை முடியாட்சி காலம் முதல் பக்தர்கள் மலையேறிச் சென்று தரிசித்து வருகின்றனர். முதன்முதலில் திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடைபாதை மட்டுமே இருந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ம.பி.யில் கர்பா நடன நிகழ்ச்சிக்கு வருவோரின் அடையாள அட்டையை பரிசோதிக்க உத்தரவு https://ift.tt/x76hqmY

படம்
போபால் : இந்து பெண்களை, சிறுபான்மையின இளைஞர்கள் காதலித்து, அவர்களை திருமணத்தின்போது மதம் மாற்றுவதாக வலதுசாரி தலைவர்கள் கூறுகின்றனர். இது ‘லவ் ஜிகாத்’ என அழைக்கப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களுக்கு இந்து பண்டிகைகளின் கொண்டாட்டங்கள் வாய்ப்பாக அமைந்துவிடுகின்றன எனவும் அவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் மத்தியப் பிரதேச கலாச்சாரத்துறை அமைச்சர் உஷா தாக்குர் கடந்த 8-ம் தேதி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பேசியபோது, ‘லவ் ஜிகாத்தை’ தடுக்க நவராத்திரி விழாக்களில் கர்பா நடன நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில், அடையாள அட்டைகளை பரிசோதித்தபின் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும். அடையாள அட்டை இல்லாமல் யாரையும் அனுமதிக்க கூடாது’’ என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் 2-வது முறையாக 8 மாநிலங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்களில் என்ஐஏ சோதனை - டெல்லியில் 144 தடை உத்தரவு https://ift.tt/ZIWoDPR

படம்
புதுடெல்லி : நாடு முழுவதும் 2-வது முறையாக 8 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் அலுவலகம், நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் 250-க்கும் மேற்பட்டோர் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரணைநடத்தப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியின் சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. பல்வேறு கலவரங்கள், படுகொலைகளில் இந்த அமைப்பின் நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதன்பேரில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 22-ம் தேதி திடீர் சோதனை நடத்தினர். அப்போது 45 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. வங்கிகளில் பிஎஃப்ஐ அமைப்பு ரூ.120 கோடி டெபாசிட் செய்திருப்பதும், வளைகுடா நாடுகளில் இருந்து ஹவாலா முறையில் அதிக அளவிலான தொகையை கொண்டு வந்திருப்பதும் விசாரணை...

ஹவாலா பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்கு அபுதாபி ஓட்டலை பயன்படுத்திய பிஎஃப்ஐ - அமலாக்கத் துறை தகவல் https://ift.tt/5LYNlRv

படம்
புதுடெல்லி : ஹவாலா நடவடிக்கைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரிலுள்ள ஒரு ஓட்டலை பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா(பிஎஃப்ஐ) பயன்படுத்தியது என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிஎஃப்ஐ, சட்டவிரோத காரியங்களில் ஈடுபட திட்டமிட்டதாக கூறி நாடு முழுவதும் உள்ள அதன் கிளை அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஷின்சோ அபே நினைவு சடங்கில் பங்கேற்க ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி

படம்
புதுடெல்லி : ஜப்பான் முன்னாள் பிரதமர் மறைந்த ஷின்சோ அபேவுக்கு அரசு சார்பில் இன்று நடை பெறவுள்ள நினைவு சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோவுக்கு புறப்பட்டுச் சென்றார். ஜப்பானின் நரா நகரில் கடந்த ஜூலை 8-ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பங்கேற்று பேசினார். அப்போது, அவர் மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.200 கோடி மோசடி வழக்கு - நடிகை ஜாக்குலினுக்கு இடைக்கால ஜாமீன் https://ift.tt/bup60mY

படம்
புதுடெல்லி : ரூ.200 கோடி மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக பெங்களூருவை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். முக்கிய பிரமுகர்களை தெரியும் என்று கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார் சுகேஷ் சந்திரசேகர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உள்நாட்டு தேவைக்கும், ஏற்றுமதிக்கும் தேஜாஸ் போர் விமானங்களின் உற்பத்தி அதிகரிப்பு - பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தகவல் https://ift.tt/xt8ViH2

படம்
புதுடெல்லி : ‘‘உள்நாட்டு பாதுகாப்பு தேவையை நிறைவு செய்யவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், தேஜாஸ் போர் விமானங்களின் உற்பத்தி அதிகரிக்கப்படும்’’ என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய பாதுகாப்புப் படைக்கு தேவையான, விமானங்கள், கப்பல்கள், ஆயுதங்களை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதன்படி, அதிநவீன தேஜாஸ் விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வளர்ந்த நாடுகளிடம் உள்ள போர் விமானங்களுக்கு நிகராக தேஜாஸ் போர் விமானங்கள் இருப்பதும் பல நாடுகளை கவர்ந்துள்ளது. அதற்காக மலேசியா உட்பட பல நாடுகள் தேஜாஸ் விமானங்களை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அத்துடன் சில நாடுகள் ஒப்பந்தமும் மேற்கொண்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எனக்கு கிடைக்கும் ஆதரவு மனு தாக்கலின்போது தெரியும் - காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தகவல் https://ift.tt/NPCjOSe

படம்
பாலக்காடு : காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறுகிறது. இதில் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசிதரூர் போட்டியிடுகிறார். அதற்கான வேட்பு மனுவையும் பெற்றுள்ளார். இந்நிலையில் பாரத ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியை கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் சசிதரூர் நேற்று சந்தித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குடும்பப் பெயருக்கும், ஆசாத் என்ற பெயருக்கும் சம்பந்தமும் இல்லை - புதிய கட்சி குறித்து குலாம் நபி ஆசாத் https://ift.tt/EzJCebI

படம்
ஜம்மு : காங்கிரஸில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், ஜனநாயக ஆசாத் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய குலாம் நபி ஆசாத், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி கட்சியை விட்டு விலகினார். இந்நிலையில் ஜனநாயக ஆசாத் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை அவர் நேற்று தொடங்கினார். இது தொடர்பாக அவர் ஜம்முவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சாலை சீரமைப்பு, கல்வீச்சு சம்பவத்தால் காஷ்மீரில் லாரிகளில் அழுகும் ஆப்பிள்கள் https://ift.tt/gGXmCHF

படம்
ஸ்ரீநகர்: ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் ஆப்பிளை ஏற்றிச் சென்ற லாரிகள் கடந்த ஒரு வாரமாக காத்திருக்கின்றன. இதனால், லாரிகளில் உள்ள ஆப்பிள்கள் அழுகி வருவதாக லாரி ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் ஒரு வாரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில், சமூக விரோத கும்பல்கள் ஆங்காங்கே மீண்டும் கல்வீச்சிலும் ஈடுபட்டு வருகின்றன. அந்தப் பகுதியில் சரக்கு லாரிகள் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஏராளமான ஆப்பிள்களை ஏற்றிக் கொண்டு கிளம்பிய சரக்கு லாரிகள் ஸ்தம்பித்துள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னை சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் | உறவினர்கள் 8 பேருக்கு வாழ்நாள் சிறை - 13 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை https://ift.tt/sqgH6zx

படம்
சென்னை : சென்னையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட காவல் ஆய்வாளர் உட்பட 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், சிறுமியின் உறவினர்கள் 8 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனையும் விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 15 வயது சிறுமி தனக்கு நடந்த தொடர் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வண்ணாரப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2020-ம் ஆண்டு புகார் கொடுத்தார். இதையடுத்து, சிறுமிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்ததாகவும், அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் மதன்குமார், சாயிதாபானு, சந்தியா, செல்வி, கார்த்திக், மகேஸ்வரி, வனிதா, விஜயா, அனிதா என்ற கஸ்தூரி, மாரி, பாஷா, முத்துபாண்டி, மீனா, ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் புகழேந்தி, காமேஸ்வர ராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், வினோபாஜி, கிரிதரன், ராஜாசுந்தர், மாரீஸ்வரன், நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம் என்ற அஜய், கண்ணன் ஆகிய 26 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில் மாரி, பாஷா, முத்துபாண்டி, மீனா ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். விசாரணை கா...

தீவிரவாத தடுப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு: இலங்கையில் அரசுக்கு எதிராக பேரணி நடத்திய 84 பேர் கைது

படம்
கொழும்பு: இலங்கையில் தீவிரவாத தடுப்பு சட்டத்தை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்திய 84 போராட்டக்காரர்களை அந்நாட்டு போலீஸார் கைது செய்தனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. ராஜபக்ச குடும்பத்தினர் பதவி விலகக் கோரி தொடர் போராட்டம் நடைபெற்றதால், அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோர் பதவி விலகினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக நிதி திரட்டி வங்கிகளில் பிஎஃப்ஐ ரூ.120 கோடி டெபாசிட்: விசாரணை அறிக்கையில் அமலாக்கத் துறை தகவல் https://ift.tt/Ms1JLF8

படம்
புதுடெல்லி: நாடு முழுவதும் நடைபெற்ற சோதனையில் பாப்புலர் ஃப்ரன்ட்ஆஃப் இந்தியாவும் (பிஎஃப்ஐ), அது தொடர்பான நிறுவனங்களும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக நிதி திரட்டி வங்கிகளில் ரூ.120 கோடி டெபாசிட் செய்துள்ளது என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிஎஃப்ஐ, சட்டவிரோத காரியங்களில் ஈடுபட திட்டமிட்டதாக கூறி நாடு முழுவதும் உள்ள அதன் கிளை அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் அமலாக்கத் துறையினர் (இடி) இணைந்து சோதனை நடத்தினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சோனியாவுடன் நிதிஷ், லாலு சந்திப்பு https://ift.tt/XlKT9iZ

படம்
புதுடெல்லி: மக்களவைத் தேர்தலை முன்னிட்டுகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் ஆகியோர் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினர். பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸுடன் இணைந்து புதிய கூட்டணி ஆட்சியை அமைத்தார். அணி மாறிய பிறகு, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் நிதிஷ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா, பிரேசில் நாடுகளுக்கு ரஷ்யா ஆதரவு

படம்
வாஷிங்டன்: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா, பிரேசில் நாடுகள் நிரந்தர உறுப்பினராக ஆதரவு அளிப்பதாக ரஷ்யா தெரிவித்ததுள்ளது. ஐ.நா. பொதுச் சபையின் 77-வதுஆண்டுக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

'ஆயுஷ்மான் பாரத்' மருத்துவக் காப்பீடு திட்டம்: தினமும் 10 லட்சம் அட்டைகள் வழங்க இலக்கு - மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல் https://ift.tt/ZaOUge9

படம்
புதுடெல்லி: ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் தினமும் 10 லட்சம் அட்டைகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மத்திய அரசு சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி 'ஆயுஷ்மான் பாரத்' மருத்துவக் காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி, ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சுதந்திரப் போராட்ட வீரர்கள் கனவுகண்ட இந்தியாவை உருவாக்க வேண்டும்: 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பு https://ift.tt/Lw3BWPt

படம்
புதுடில்லி: சண்டிகர் விமான நிலையத்துக்கு பகத் சிங் பெயர் சூட்டப்படும் என்று 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், நாம் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் லட்சியங்களைப் பின்பற்றி, அவர்கள் கனவுகண்ட இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார். ஒவ்வொரு மாதமும் அகில இந்திய வானொலியில் `மனதின் குரல்' என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டுமக்களிடம் உரையாடுகிறார் பிரதமர்நரேந்திர மோடி. இதன்படி, நேற்றைய `மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஏழுமலையானின் அசையா சொத்து மதிப்பு ரூ.85,705 கோடி - திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் ஒய்.வி.சுப்பாரெட்டி தகவல் https://ift.tt/SOdCTaG

படம்
திருமலை : திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.85,705 கோடி மதிப்புள்ள அசையா சொத்து உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் ஒய்.வி. சுப்பாரெட்டி தெரிவித்தார். திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தலைமையில் அறங்காவலர் குழுக்கூட்டம் நடந்தது. இதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் ஒய்.வி.சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாலையில் ஒன்றரை மணி நேரம் செல்போன், டி.வி.யை தவிர்க்கும் கிராமம் https://ift.tt/dFYho4X

படம்
மும்பை : மாலை நேரங்களில் செல்போன், டி.வி. உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை தவிர்க்கும் முறையை மகாராஷ்டிராவிலுள்ள ஒரு கிராமமக்கள் கடைபிடித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மாவட்டத்தில் அமைந்துள்ளது மோஹித்யாஞ்சே வத்காவோன் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் மாலை 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை செல்போன், டி.வி. உள்ளிட்ட அனைத்து விதமான எலக்ட்ரானிக் சாதனங்களையும் அணைத்து வைத்துவிடுகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹிஜாப் விவகாரத்தால் போர்க்களமாக மாறிய ஈரான் - இதுவரை 50 பேர் உயிரிழப்பு; ஆயிரக்கணக்கானோர் கைது

படம்
தெஹ்ரான் : ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து போர்க்களமாக மாறியுள்ளது. போலீஸ் துப்பாக்கிச்சூடு, தடியடியில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானில் 9 வயது சிறுமி முதல் முதிர்வயது பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க 'காஸ்த் எர்ஷாத்' என்ற சிறப்பு பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கீழமை நீதிமன்றத்தில் 30 ஆண்டுக்கும் மேலாக 1 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன https://ift.tt/EmPlvtO

படம்
புதுடெல்லி : தேசிய நீதிசார் தரவுத் தொகுப்பில் இருந்து பெறப்பட்ட புள்ளிவிவரத்தில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் நாடு முழுவதிலும் உள்ள மாவட்ட மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் கிரிமினல் வழக்குகள், 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் சிவில் வழக்குகள் ஆகும். இதில் உத்தரபிரதேசம் 41,210 வழக்குகளுடன் முதலிடத்திலும் மகாராஷ்டிரா 23,483 வழக்குகளுடன் 2-ம் இடத்திலும் உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தங்கள் நாட்டுடன் இணைக்க உக்ரைனின் லுஹான்ஸ்க் உட்பட 4 நகரங்களில் வாக்கெடுப்பு நடத்தும் ரஷ்யா

படம்
மாஸ்கோ : உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், லுஹான்ஸ்க் உள்ளிட்ட 4 நகரங்களை இணைத்துக் கொள்வது தொடர்பாக ரஷ்யா வாக்கெடுப்பு நடத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவி செய்து வருகின்றன. 6 மாதங்களைத் தாண்டி போர் நடைபெற்று வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீனாவில் ராணுவப் புரட்சி | வீட்டுச் சிறையில் அதிபர் ஜி ஜின்பிங்? - சமூக ஊடகங்களில் பரவும் தகவல்

படம்
பெய்ஜிங் : சீன அதிபர் பதவியில் இருந்தும், சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் (பிஎல்ஏ) தலைவர் பதவியில் இருந்தும் ஜி ஜின்பிங் நீக்கப்பட்டுள்ளார் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் உலா வருகின்றன. எனினும், சீன அரசு இதை உறுதி செய்யவில்லை. இந்திய-சீன எல்லையில் இரு தரப்பு ராணுவத்துக்கும் இடையே மோதல் சூழல் ஏற்பட்டு, நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர், முக்கிய நிலைகளில் இருந்து சீன ராணுவம் பின்வாங்கியுள்ளது. இதனால், எல்லையில் பதற்றம் சற்று தணிந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மியான்மர் எல்லையில் ரூ.168 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல் https://ift.tt/q8bwhTA

படம்
ஐஸ்வால் : மிசோரம் மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான ரகசியத் தகவலின் பேரில் சாம்பை மாவட்டத்தின் மெல்புக் கிராமத்தில் மாநில போலீஸாரும் அசாம் ரைபில்ஸ் படையினரும் நேற்று முன்தினம் வாகன சோதனை மேற்கொண்டனர். இதில் ஒரு வாகனத்தில் பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மெத்தாம் பேட்டமைன் என்ற போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். 55.80 கிலோ எடை கொண்ட இந்த மாத்திரைகளின் மதிப்பு ரூ.167.86 கோடியாகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இளம்பெண் கொலை வழக்கில் மகன் கைதானதால் உத்தராகண்ட் பாஜக முன்னாள் அமைச்சர் நீக்கம் https://ift.tt/0P15zil

படம்
டேராடூன் : உத்தராகண்ட் மாநில பாஜக மூத்த தலைவராக இருப்பவர் வினோத் ஆர்யா. இவர் மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஆவார். இவரது மகன் புல்கிட் ஆர்யாவுக்கு ரிஷிகேஷ் அருகே சொகுசு விடுதி ஒன்று உள்ளது. இதில் வரவேற்பாளராக பணியாற்றி வந்த அங்கிதா பண்டாரியை (19) கடந்த 18-ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து அங்கிதாவின் தந்தை, சொகுசு விடுதியின் உரிமையாளர் புல்கிட் ஆர்யா ஆகியோர் போலீஸில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் போலீஸார், அங்கிதாவை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் விசாரணையின்போது வரவேற்பாளர் அங்கிதாவை, புல்கிட் ஆர்யாதான் கொலை செய்தார் என்று தெரியவந்தது. இதையடுத்து புல்கிட் ஆர்யா உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அங்கிதாவின் உடலையும் போலீஸார் மீட்டு விசாரித்து வருகின்றனர். அங்கிதா கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, புல்கிட் ஆர்யாவின் சொகுசு விடுதியை இடித்து தள்ள மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் விடுதி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாகக் கூறி விடுதியின் குறிப்பிட்ட பகுதிகளை அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடித்து தள்ளினர். from இ...

பசுமை வளர்ச்சி, வேலைவாய்ப்பில்தான் தற்போது இந்தியாவின் கவனம் உள்ளது - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு https://ift.tt/eSZL6Qz

படம்
புதுடெல்லி: ‘‘பசுமை வளர்ச்சி, பசுமை வேலைவாய்ப்பை உருவாக்குவதில்தான் தற்போது இந்தியாவின் கவனம் உள்ளது’’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். குஜராத்தின் ஏக்தா நகரில் நடைபெற்ற மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களின் மாநாட்டை தொடங்கி வைத்த அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: மாநிலங்களுக்குள்ளான வட்டாரப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க அனைத்து சுற்றுச்சூழல் அமைச்சர் களும் முடிந்தவரையில் முயற்சி கள் மேற்கொள்ள வேண்டும். பசுமை வளர்ச்சி, பசுமை வேலை வாய்ப்புகளை நோக்கி நாடு நகர்ந்து வருகிறது. திடக்கழிவு மேலாண்மை பிரச்சாரத்தை நாம் வலுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அது, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பிடியிலிருந்து நம்மை விடுவிக்கும். சுற்றுச் சூழல் அமைச்சகங்களின் செயல்பாடு கட்டுப்படுத்தப்பட்ட வரையறைக்குள் இருக்கக் கூடாது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரளாவில் பிஎஃப்ஐ போராட்டத்தில் வன்முறை - உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது https://ift.tt/h4CQlb8

படம்
திருவனந்தபுரம்: நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அலுவலகங்கள், நிர்வாகிகளின் இல்லங்களில் நேற்று முன்தினம் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் கேரளா உட்பட 15 மாநிலங்களை சேர்ந்த 45 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பிஎஃப்ஐ நேற்று 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. எனினும் கேரளாவில் நேற்று அனைத்துக் கடைகளும் திறந்திருந்தன. அரசு பேருந்துகளும், ஆட்டோ, டாக்ஸிகளும் வழக்கம்போல் இயங்கின. பல்வேறு பகுதிகளில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்திய பிஎஃப்ஐ அமைப்பினர் கடைகளை அடைக்க கட்டாயப்படுத்தினர். இதனால் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜகவுக்கு எதிரான கூட்டணி - சோனியாவை சந்திக்க நிதிஷ், லாலு முடிவு https://ift.tt/jLeioqS

படம்
புதுடெல்லி : தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்க திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா முயன்றார். இதுதொடர்பாக பல தலைவர்களைச் சந்தித்து பேசினார். அதைப் போலவே தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா மாநில முதல்வருமான கே. சந்திரசேகர ராவும் இதே முயற்சியை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இதே முயற்சியை பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும், ஆர்ஜேடி தலைவர் லாலுவும் முன்னெடுத்துள்ளனர். இதனிடையே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுவிட்டு அண்மையில் டெல்லி திரும்பி தற்போது ஓய்வெடுத்து வருகிறார். அவரை சந்தித்து பேச பிஹார் முதல்வர் அமைச்சர் நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் நேரம் கேட்டு உள்ளனர். நாளை மாலை இந்த சந்திப்பு நடைபெறும் என்று தெரிகிறது. 6 ஆண்டுகளுக்கு பிறகு சோனியா காந்தியை, நிதிஷ்குமார் சந்தித்து பேச இருப்பது குறிப்பிடத்தக்கது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தீவிரவாத அமைப்புகளுக்கு ஆட்களை சேர்க்க முஸ்லிம் இளைஞர்களை தேர்வு செய்கிறது பிஎஃப்ஐ - டெல்லி நீதிமன்றத்தில் என்ஐஏ தகவல் https://ift.tt/uLZtCr2

படம்
புதுடெல்லி : முஸ்லிம் இளைஞர்களைத் தேர்வுசெய்து தீவிரவாத அமைப்புக்கு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா(பிஎஃப்ஐ) அமைப்பு அனுப்புகிறது என்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) தெரிவித்துள்ளது. டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிஎஃப்ஐ அமைப்புக்கு 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. நாடு முழுவதும் நடைபெற்ற பல்வேறு கலவரங்கள், தாக்குதல்கள், கொலை வழக்குகளில் பிஎஃப்ஐ அமைப்புக்குத் தொடர்பிருப்பதாகப் புகார்கள் எழுந்தன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மட்டும் இந்த அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்