இடுகைகள்

ஜனவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆந்திராவின் புதிய தலைநகரமாகிறது விசாகப்பட்டினம் - முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு https://ift.tt/tC2pdjr

படம்
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் புதிய தலைநகரமாக விசாகப்பட்டினம் ஓரிரு மாதங்களில் அறிவிக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று தெரிவித்துள்ளார். இதற்கு ஆந்திர மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்த விஷயம்தான் தற்போது ஆந்திர மாநிலம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. இதுகுறித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது: மார்ச் மாதம் 3, 4-ம் தேதிகளில் விசாகப்பட்டினம் நகரில் அனைத்து முதலீட்டாளர் களின் மாநாடு நடைபெற உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்காவில் கருப்பின இளைஞரை தாக்கியதால் உயிரிழப்பு - 7 போலீஸார் பணியிடை நீக்கம்

படம்
வாஷிங்டன் : அமெரிக்காவில் கருப்பின இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 7 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், 3 தீயணைப்பு வீரர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். தாக்குதல் நடத்திய போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னசே மாகாணத்தை சேர்ந்த மெம்பிஸ் நகரில் டைரே நிக்கோலஸ்(29) என்ற கருப்பின இளைஞர் கடந்த ஜனவரி 7-ம் தேதி தனது காரை வீட்டிலிருந்து தாறுமாறாக ஓட்டிச்சென்றுள்ளார். அவரது வாகனத்தை வழிமறித்து நிறுத்திய போலீஸார் டைரே நிக்கோலஸை கண்மூடித்தனமாக தாக்கினர். முகத்தில் மிளகு ஸ்பிரே அடித்தனர். வீட்டுக்கு தப்பியோட முயன்ற இளைஞரை போலீஸார் விரட்டிப்பிடித்து, தீயணைப்பு படையினர் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்தனர். 3-வது நாளில் அந்த நபர் இறந்தார். இச்சம்பவத்துக்கு அமெரிக்காவில் கடும் கண்டனம் எழுந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காங்கிரஸ் தலைவர்கள் வரமுடியாததால் நாடாளுமன்றத்தில் தனித்திருந்த சோனியா https://ift.tt/uCFYayN

படம்
புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை பாத யாத்திரை காஷ்மீரில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. அவரது பாத யாத்திரைக்காக காங்கிரஸ் எம்.பி.க்களில் பலர் காஷ்மீரில் முகாமிட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்கள் இன்னும் டெல்லி திரும்பவில்லை. இந்த சூழலில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. அப்போது நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது முக்கிய விஷயங்களை குறிப்பிடும்போது பிரதமர் நரேந்திர மோடி உட்பட பாஜக எம்.பி.க்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். பெரும்பாலான காங்கிரஸ் எம்.பி.க்கள் இல்லாத நிலையில் அந்த கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அவையின் முதல் வரிசையில் தனியாக அமர்ந்திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருவள்ளுவர் வழியில் செல்லும் மோடி அரசு - நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பெருமிதம் https://ift.tt/l6uPkZj

படம்
புதுடெல்லி : பாரம்பரியத்தை ஒருங்கிணைத்து வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கும் பாதையை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. ஆதிசங்கரர், பசவேஸ்வரர், திருவள்ளுவர், குருநானக் தேவ் போன்ற மகான்கள் காட்டிய வழியைப் பின்பற்றும் அதே வேளையில், மறுபுறம் ஹைடெக் அறிவு மையமாக இந்தியாவை மத்திய அரசு மாற்றி வருகிறது என்று நாடாளுமன்ற கூட்டக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முஉரையுடன் கூட்டத் தொடர் தொடங்கியது. குடியரசுத் தலைவராக கடந்த 2022 ஜூலை 25-ம் தேதி பதவியேற்ற அவர், நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் முதல்முறையாக உரையாற்றினார். அவர் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விருத்தாசலம் அருகே பட்டியலினத்தவர் வசிக்கும் பகுதி நீர் தேக்கத் தொட்டியில் அழுகிய நிலையில் இளைஞர் சடலம் https://ift.tt/p3Wcoha

படம்
விருத்தாசலம் : விருத்தாசலத்தை அடுத்த ராஜேந்திரபட்டிணம் ஊராட்சியில் பட்டியலினத்தவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் பட்டதாரி மகன் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த ராஜேந்திரபட்டிணம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் சிவசங்கரன் மகன் சரவணக்குமார். பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த 10 தினங்களுக்கு முன் மாயமாகியுள்ளார். இதையடுத்து அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காதாதல் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜார்க்கண்ட் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - 14 பேர் உயிரிழப்பு; பலர் காயம் https://ift.tt/hVfGXNS

படம்
தன்பாத் : ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள பல அடுக்குமாடி குடியிருப்பில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். இன்னும் பலர் கட்டிடத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முஸ்லிம்களுடன் மீண்டும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சந்திப்பு - காசி, மதுரா மசூதிகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை https://ift.tt/G2aE5w8

படம்
புதுடெல்லி : டெல்லியில் முக்கிய முஸ்லிம் தலைவர்களுடன் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கின்(ஆர்எஸ்எஸ்) தலைவர்கள் மீண்டும் சந்திப்பு நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது. அப்போது காசி, மதுரா மசூதிகள் உள்ளிட்ட பல விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடந்த ஜனவரி 14 -ம் தேதி இக்கூட்டம், டெல்லியின் முன்னாள் துணைநிலை ஆளுநரான நஜீப்ஜங் இல்லத்தில் நடைபெற்றது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாக்வத் அனுமதியின் பேரில் அதன் முக்கிய நிர்வாகிகளான இந்திரேஷ்குமார், ராம் லால் மற்றும் கிருஷ்ண கோபால் தாஸ் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி வழக்கு - ஸ்ரீநகரில் ஹுரியத் மாநாடு அலுவலகம் முடக்கம் https://ift.tt/1DmTphc

படம்
ஸ்ரீநகர் : தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்த வழக்கில் ஹுரியத் மாநாடு அமைப்பின் ஸ்ரீநகர் அலுவலகத்தை தேசிய விசாரணை முகமை (என்ஐஏ) முடக்கியுள்ளது. 23 பிரிவினைவாத அமைப்புகளின் கூட்டமைப்பான ‘அனைத்து கட்சி ஹுரியத் மாநாடு’ கடந்த 1993-ல் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு திரட்டும் நிதியை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக என்ஐஏ தொடர்ந்த வழக்கை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் பகுதியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உயிரே போனாலும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் - நிதிஷ் குமார் திட்டவட்ட பதில் https://ift.tt/HqrLsSk

படம்
பாட்னா : பாஜகவுடன் கூட்டணிக்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, அதைக்காட்டிலும் இறந்து போவது மேலானது என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பட்ஜெட் கூட்டத்தொடர் - அனைத்து கட்சி கூட்டத்தில் தலைவர்கள் பங்கேற்பு https://ift.tt/szHDydr

படம்
புதுடெல்லி : மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று விவாதித்தனர். ஆண்டுதோறும் ஜனவரி மாத இறுதியில் அந்த ஆண்டின் முதல்பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும். அந்த வகையில் இன்று (ஜனவரி 31) இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்துக்குப் பின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார். இந்த அறிக்கையில் 2022-2023-ம் ஆண்டின் திட்டங்கள் குறித்து இடம்பெறும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.பி. கோரக்பூர் கோயில் மீது தாக்குதல் - குற்றவாளிக்கு மரண தண்டனை https://ift.tt/W2eUNvP

படம்
லக்னோ : உத்தர பிரதேசம் கோரக்பூரில் புகழ்பெற்ற கோரக்நாத் கோயில் அமைந்துள்ளது. அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், கோயிலின் மடாதிபதியாக இருக்கிறார். கடந்த ஆண்டு ஏப்ரலில் அவர் கோயிலில் சுற்றுப் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். அவரது பயணத்துக்கு ஒருநாள் முன்னதாக கடந்த ஏப்ரல் 3-ம் தேதி கோரக்நாத் கோயிலுக்குள் ஆயுதத்துடன் நுழைந்த மர்ம நபர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் அனில் குமார் மீது திடீர் தாக்குதல் நடத்தினார். மர்ம நபரை போலீஸார் மடக்கி பிடித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குமரியில் தொடங்கி 3,800 கி.மீ. தூரத்தை கடந்த ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை ஜம்மு காஷ்மீரில் நிறைவடைந்தது https://ift.tt/rTEv7Jt

படம்
ஸ்ரீநகர் : காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் மேற்கொண்ட இந்திய ஒற்றுமை யாத்திரை, ஜம்மு காஷ்மீரில் நேற்று நிறைவடைந்தது. நாட்டின் தாராளவாத, மதச்சார்பற்ற நெறிகளை பாதுகாப்பதே இந்த யாத்திரையின் நோக்கம் என்று அவர் தெரிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்ளும் விதமாக, தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை (‘பாரத் ஜோடோ யாத்திரை’) கடந்த 2022 செப்.7-ம் தேதி தொடங்கினார். தமிழகத்தில் தொடங்கிய இந்த பாதயாத்திரை, கேரளா, கர்நாடகா, ஹரியாணா, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் என பல்வேறு மாநிலங்களை கடந்து ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்களவையில் மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் https://ift.tt/Ux3v98p

படம்
புதுடெல்லி : மக்களவையில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முதல் முறையாக உரையாற்றுகிறார். இந்த உரைக்குப் பிறகு, பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோவை | ரூ.25 லட்சம் தங்க நகைகளுடன் நகைப் பட்டறை தொழிலாளி மாயம் https://ift.tt/xULBP6k

படம்
கோவை: கோவை ஆர்எஸ்புரம் மேற்கு பொன்னுரங்கம் சாலையை சேர்ந்தவர் பியூஸ் ஜெயின்(35). நகைப் பட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் வேலை செய்து வந்தார். பியூஸ் ஜெயின் பட்டறையில் உள்ள நகைகளை ‘லேசர் சாலிடரிங்’ செய்வதற்கு அருகிலுள்ள நகை கடையில் கொடுப்பது வழக்கம். இந்த பணியை சதாம் உசேன் மேற்கொள்வார். கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கம் போல சதாம் உசேனிடம் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 622 கிராம் எடையுள்ள பிரேஸ்லெட், கம்மல் உள்ளிட்ட தங்க நகைகளை கொடுத்தனுப்பினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பனிப்பொழிவு காரணமாக சுவிட்சர்லாந்து போல் காட்சியளிக்கும் அருணாச்சலப் பிரதேசம் https://ift.tt/ROdX2u0

படம்
புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் அங்குள்ள சுற்றுலாத் தலங்களின் படங்களை பேஸ்புக்கில், மாநில முதல்வர் பீமகந்துவெளியிட்டிருந்தார். ‘‘திபாங் மாவட்டத்தின் அனினி பகுதியில்பனிப் பொழிவு ஆரம்பித்துள்ள தால், அப்பகுதி முழுவதும் பனிபடர்ந்து காணப்படுகிறது. பனிமூட்டம், குளிர்காற்றும் வீசுகிறது. இங்குள்ள அழகான சிகு ரிசார்ட்ஸை பார்க்க வாருங்குள்’’ என அவர் கூறியிருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாக்.கில் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.35 உயர்வு

படம்
பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷாக் தார் தொலைக்காட்சியில் நேற்று காலை பேசியதாவது. பெட்ரோல், டீசல் விலையை தலா ரூ.35 உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. மண்ணெண்ணெய் மற்றும் லைட் டீசல் விலையும் தலா ரூ.18 உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு காலை 11 மணியிலிருந்து அமலுக்கு வரும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார். இந்த விலை உயர்வுக்குப் பிறகு பெட்ரோல் லிட்டர் ரூ.249.80-க்கும், ஹை-ஸ்பீட் டீசல் ரூ.262.80-க்கும், மண்ணெண்ணெய் ரூ.189.83-க்கும், லைட் டீசல் ஆயில்லிட்டர் ரூ.187-க்கும் விற்பனை செய்யப்படும். பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு இந்த திடீர் விலை உயர்வு அறிவிப்பு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத் தியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 கோர விபத்து: பேருந்து தீப்பிடித்ததில் 41 பேர் உயிரிழப்பு, படகு விபத்தில் 10 சிறுவர்கள் மூழ்கினர்

படம்
கராச்சி: பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரிலிருந்து சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சிக்கு 43 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஒன்று லாஸ்பேலா மாவட்டத்தில் உள்ள பெல்லா நகரில் மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. பள்ளத்தில் விழுந்த பேருந்து தீப்பற்றி எரிந்தது. இதனால், பேருந்தின் உள்ளே இருந்த பயணிகளில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து பெலாநகர் காவல் துறை உதவி ஆணையர் ஹம்சா நதீம் கூறுகையில், “பெண்கள், குழந்தைகள் உட்பட 40 உடல்கள் கைப்பற்றப்பட்டன. படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட னர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பேருந்து மிக வேகமாக சென்றதால்இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கட்டுப்பாட்டை இழந்தபேருந்து மேம்பால தடுப்பை உடைத்து பள்ளத்தில் விழுந்ததுள்ளது. உடனே தீ பற்றியுள்ளது. இதனால் பயணிகளின் உடல்அடையாளம் தெரியாத வகையில்எரிந்துள்ளது. தற்போது அவர்களது உடல் மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட் டுள்ளது. பரிசோதனை அடிப்படையில் அந்த உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்” என்று...

பட்டதாரி ஆசிரியர் பணிக்கான டெட் 2-ம் தாள் தேர்வு: பிப். 3 முதல் 14 வரை நடைபெறுகிறது https://ift.tt/ql40oAP

படம்
சென்னை: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்துவித பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்த டெட் தேர்வு 2 தாள்களை கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி 2022-ம் ஆண்டுக்கான டெட் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபர் 16 முதல் 19-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 1 லட்சத்து 53,023 பேர் எழுதினர். அதன் முடிவுகள் டிசம்பர் 7-ம் தேதி வெளியிடப்பட்டன. அதில் 21,543 பேர் (14%) மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தொடர்ந்து டெட் 2-ம் தாள் தேர்வு எழுத 4 லட்சத்து 1,886 பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான தேர்வு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரை நடத்தப்படும் என்று டிஆர்பி ஏற்கெனவே அறிவித்திருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

1,200 ஆண்டுகள் பழமையானது; உலகத்தையே வியக்க வைக்கும் தமிழகத்தின் உத்திரமேரூர் கல்வெட்டு: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம் https://ift.tt/cs9Q0bB

படம்
புதுடெல்லி: தமிழ்நாட்டின் உத்திரமேரூரில் உள்ள 1,200 ஆண்டுகள் பழமையான ஒரு கல்வெட்டு, உலகத்தையே வியக்க வைக்கிறது. இந்த கல்வெட்டு ஒரு சிறிய அரசியலமைப்புச் சட்டம் போன்றது என்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் கடந்த 2014 அக்டோபர் முதல் ஒவ்வொரு மாதமும் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெற்றோருக்கு வெளியுலகை காட்டுங்கள் - சிங்கப்பூரில் பணியாற்றும் இளைஞர் வேண்டுகோள்

படம்
சிங்கப்பூர் : வெளிநாடுகளுக்கு செல்வோர், பெற்றோருக்கும் வெளியுலகை காட்ட வேண்டும் என சிங்கப்பூரில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இணையத்தில் சுவாரஸ்ய கதைகள் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன. சிங்கப்பூரில் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றும் தத்தாத்ரே என்ற இளைஞர் தனது தாயுடன் சிங்கப்பூரில் இருக்கும் படத்தை வெளியிட்டு கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் செல்லும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை 3-வது முறை சோதனை https://ift.tt/UXMSxAF

படம்
புதுடெல்லி : ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் செல்லும், உள்நாட்டு ஹைபர்சோனிக் ஏவுகணையை இந்தியா நேற்று முன்தினம் சோதனை செய்தது. இந்திய ராணுவத்திடம் ரேம்ஜெட் இன்ஜின் பொருத்தப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் ஏற்கெனவே உள்ளன. ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா தயாரித்த இந்த ஏவுகணை மேக் 2.8 வேகத்தில் செல்லக் கூடியது. இது செல்லும் தூரமும் 290 கி.மீ-லிருந்து தற்போது 450 கி.மீ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எதிர்க்கட்சி கூட்டணிக்கு காங்கிரஸே ஆணிவேர்: ஜெய்ராம் ரமேஷ் கருத்து https://ift.tt/YM3Niga

படம்
அவந்திபோரா : ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் ராகுல் காந்தியின் பாரத் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற காங் கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது: நாடு முழுவதும் பரவியுள்ள ஒரே தேசிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. எனவே 2024 தேர் தலுக்காக அமைக்கப்படும் எந்தஎதிர்க்கட்சி கூட்டணிக்கும் காங்கிரஸ் மட்டுமே ஆணிவேராக இருக்க முடியும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.பி. திருமண நிகழ்ச்சிகளில் புதிய மாற்றங்கள் - மணமக்கள் வரவேற்பில் இடம்பெறும் வர்ணனையாளர்கள் https://ift.tt/fl78O5B

படம்
புதுடெல்லி : நாட்டின் பெரிய மாநிலங்களில் உ.பி. முக்கிய மாநிலமாக உள்ளது. பாரம்பரியம், கலாச்சாரத்திற்கும் பெயர் பெற்ற இந்த மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிகள் பெரும்பாலும் குளிர்காலத்தில் நடைபெறுகிறது. இதில் ஆண்டுதோறும் மாற்றங்கள் இடம்பெறுவது உண்டு. அந்த வகையில் கடந்த நவம்பரில் தொடங்கிய திருமணக் காலத்தில் வர்ணனையாளர்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கி யுள்ளனர். வழக்கமாக விழா மேடைகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இடம்பெறும் இவர்கள் தற்போது திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் இடம்பெறத் தொடங்கியுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதிதாக சிந்தியுங்கள், முன்னேறுங்கள் - கர்நாடக மாணவர்களுக்கு அமித் ஷா அறிவுரை https://ift.tt/oTPFfqX

படம்
ஹப்பள்ளி : கர்நாடகா வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஹப்பள்ளியில் உள்ள பிவிபி பொறியியல் கல்லூரியில் நடந்த அமிர்த மகோத்சவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களிடம் பேசியதாவது: நமது சுதந்திர போராட்ட வீரர்கள் செய்த உன்னத தியாகங்களை மாணவர்கள் படிக்க வேண்டும். நாட்டுக்காக உங்கள் வாழ்வை தியாகம் செய்ய முடியாது என்றால், நாட்டுக்காக நீங்கள் வாழ்ந்து, நம் நாட்டை உலகின் முதல் நாடாக ஆக்க வேண்டும். இதற்கான அனைத்து வாய்ப்புகளையும் உங்களுக்கு பிரதமர் மோடி வழங்கியுள்ளார். வடக்கு கர்நாடகாவில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அறிவியல் மாணவர்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன. இவற்றை பயன்படுத்தி நீங்கள் புதிதாக சிந்தித்து முன்னேற வேண்டும். 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பிரதமர் நரேந்திர மோடியிடம் உள்ளது. இந்த வாய்ப்புகள் மாணவர்களுக்குதான் உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்திய விமானப் படையின் 2 போர் விமானங்கள் நடுவானில் மோதல் - ஒரு விமானி உயிரிழப்பு; 2 பேர் படுகாயங்களுடன் மீட்பு https://ift.tt/VvurzSj

படம்
புதுடெல்லி : இந்திய விமானப் படையின் 2 போர் விமானங்கள் நடுவானில் மோதியதில் ஒரு விமானி உயிரிழந்தார். 2 விமானிகள் பாராசூட் உதவியுடன் உயிர் தப்பினர். மரங்கள் மீது விழுந்த அவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மத்திய பிரதேசத்தின் குவாலியரில் இந்திய விமானப் படை தளம் உள்ளது. அங்கிருந்து மிராஜ்-2000 ரக போர் விமானமும், சுகோய்-30 ரக போர் விமானமும் நேற்று காலை வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டன. மிராஜ் விமானத்தில் ஒரு விமானியும், சுகோய் விமானத்தில் 2 விமானிகளும் இருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஸ்ரீவில்லிபுத்தூர் | போக்சோ வழக்கில் வனக் காப்பாளர் கைது https://ift.tt/xDFTeHm

படம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 48 வயது வனக்காப்பாளர், தனது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அண்மையில் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி அளித்த ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவுசெய்து, சம்பந்தப்பட்ட வனக் காப்பாளரை கைது செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெண்களின் திருமண வயதை உயர்த்த தனிநபர் சட்டங்கள் - பழங்குடியினர் மரபு பற்றி ஆய்வு https://ift.tt/jmwGEp3

படம்
புதுடெல்லி : கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்ற மக்களவையில், பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக அதிகரிக்க வகை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இந்த மசோதா குறித்து ஆராய நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னை | 10-வது மாடியிலிருந்து குதித்து நடன கலைஞர் தற்கொலை https://ift.tt/nrB6NV4

படம்
சென்னை: சென்னை பெரியமேடு அல்லிகுளம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (42). ‘டிக் டாக்’ இருந்தபோது, தனது நடன வீடியோக்களை வெளியிட்டதன் மூலம் பிரபலமானார். இதையடுத்து அவருக்கு நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் பங்கேற்று நடன திறனை வெளிக்காட்டி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். இந்நிலையில், நேற்று மாலை 4.30 மணி அளவில் புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய கட்டிடத்தின் 10-வது மாடியிலிருந்து குதித்து ரமேஷ் தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து வந்த போலீஸார், ரமேஷ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னை | பெண் எஸ்ஐ-யை தாக்கிய 2 பேர் கைது https://ift.tt/tbV8j9g

படம்
சென்னை: சென்னை அயனாவரம், திருவள்ளுவர் சாலை வழியாக நேற்று முன்தினம் மதியம் சவ ஊர்வலம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட இருவர், இறந்தவர் நினைவாகச் சாலையில் சேவல் சண்டை நடத்தினர். இதனால், அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து அயனாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மீனா, காவலர் திருநாவுக்கரசு ஆகியோர் சேவல் சண்டையை நிறுத்தி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

லடாக் சுற்றுச்சூழலை பாதுகாக்கக் கோரி கடும் குளிரில் சமூக ஆர்வலர் உண்ணாவிரதம் https://ift.tt/v4tpDrQ

படம்
லடாக் : பருவநிலை மாறுபாடு காரணமாக இமயமலைப் பகுதிகளில் பனிச் சிகரங்கள் உருகி, பேரழிவை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நேரத்தில் லடாக்கின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், குடியரசு தின நாளில் 5 நாட்கள் உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளார். கடல் மட்டத்தில் இருந்து 18,000 அடி உயரத்தில் கார்டங் லா பகுதியில் உறைய வைக்கும் மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் குளிரில் அவர் உண்ணாவிரதம் இருக்கிறார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், “லடாக்கின் சுற்றுச் சூழலை பாதுகாக்க நாட்டு மக்களும் உலக மக்களும் உதவ முன்வர வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பழமையான மொழி தமிழ் என்ற கர்வம் வேண்டும் - ‘தேர்வும் தெளிவும்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம் https://ift.tt/UZx1Jz2

படம்
புதுடெல்லி : நாடு முழுவதும் பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுடன் ‘பரிட்சா பே சர்ச்சா’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், ‘‘நமது தமிழ்மொழிதான் உலகின் மிகவும் பழமையான மொழி. இதில் நமக்கு கர்வம் இருக்க வேண்டாமா? இது நம் நாட்டில் இருக்கும் பெரிய சொத்து, கவுரவம்’’ என்று பெருமிதத்துடன் கூறினார். நாடு முழுவதிலும் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கி, அவர்களுக்கு பயனுள்ள அறிவுரைகளை வழங்கும் வகையில் ஆண்டுதோறும் ‘பரிட்சா பே சர்ச்சா'(தேர்வும் தெளிவும்) என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில், 6-வது ‘பரிட்சா பே சர்ச்சா' நிகழ்ச்சி டெல்லி டால்கட்டோரா விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, மாணவ, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். நாடு முழுவதிலும் இருந்து காணொலி வாயிலாகவும் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். from...

நாமக்கல் | வீட்டில் பதுக்கி வைத்திருந்த கைத்துப்பாக்கி பறிமுதல் - வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது https://ift.tt/cRlk8zS

படம்
நாமக்கல் : பள்ளிபாளையம் அருகே வெப்படையில் நாட்டு ரக கைத்துப்பாக்கி வீட்டில் பதுக்கி வைத்திருந்த வட மாநிலத்தை சேர்ந்த இரு வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 8 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பீகாரை சேர்ந்த மணிஷ்குமார் (26). ஜார்கண்டைச் சேர்ந்தவர் சாகர் (19). இருவரும் கடந்த ஒரு மாதத்துக்கு முன், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெப்படை அடுத்த வால் ராஜ்பாளையம் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். அவர்கள் இருவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்களை நூற்பாலைக்கு வேலைக்கு அனுப்பும் ஏஜெண்ட்கள் எனத் தெரிவித்துள்ளனர். எனினும் இருவரின் நடமாட்டம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததால், அதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வெப்படை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குடியரசு தின விழாவில் தெலங்கானா முதல்வர் பங்கேற்கவில்லை - ராஜ்பவனில் ஆளுநர் தமிழிசை தேசிய கொடியேற்றினார் https://ift.tt/chrA6ju

படம்
ஹைதராபாத் : குடியரசு தினத்தையொட்டி தெலங்கானாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், ராஜ்பவன் வளாகத்தில் நேற்று தேசிய கொடியேற்றினார். இதில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மாநில அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. மாநில அரசு சார்பில் தலைமைச் செயலாளரும், டிஜிபியும் கலந்து கொண்டனர். தெலங்கானாவில் ஆளுநருக்கும் - மாநில முதல்வருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்துவருகிறது. குடியரசு தின விழாவிலும் இந்த மோதல் எதிரொலித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முலாயம் சிங் யாதவ், எஸ்.எம். கிருஷ்ணா, கீரவாணி உட்பட 106 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு https://ift.tt/C5VSUsw

படம்
புதுடெல்லி : உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ், கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, கர்நாடக இசைக் கலைஞர் வாணி ஜெயராம் உட்பட 106 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குடியரசு தினத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. 6 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 9 பேருக்கு பத்ம பூஷண் விருதுகளும், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

74-வது குடியரசு தின விழா கோலாகலம் - தலைநகர் டெல்லியில் கண்கவர் அணிவகுப்பு; ஜனாதிபதி தேசியக் கொடியேற்றினார் https://ift.tt/NX3Ph2x

படம்
புதுடெல்லி/சென்னை : நாட்டின் 74-வது குடியரசு தின விழா தலைநகர் டெல்லியில் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்குமாறு, எகிப்து அதிபர் அப்தெல் படாக் எல்-சிசி அழைக்கப்பட்டிருந்தார். அவரை குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து, ராணுவ அணிவகுப்பு நடைபெறும் கடமை பாதைக்கு, குதிரைப்படை வீரர்கள் புடைசூழ குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது வாகனத்தில் அழைத்து வந்தார். குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பின்னர் திரவுபதி முர்மு கலந்துகொள்ளும் முதல் குடியரசு தின விழா இதுவாகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மூக்கு வழியாக செலுத்தும் கரோனா மருந்து - மத்திய அமைச்சர்கள் அறிமுகம் https://ift.tt/YOCaSht

படம்
புதுடெல்லி : மூக்கு வழியாக செலுத்தப்படும், உலகின் முதல் கரோனா தடுப்பு மருந்தை, மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, ஜிதேந்திர சிங் ஆகியோர் டெல்லியில் நேற்று அறிமுகம் செய்துவைத்தனர். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம், கோவேக்சின் என்ற பெயரிலான கரோனா தடுப்பூசியை தயாரித்தது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி, கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு போடப்பட்டது. தற்போது பூஸ்டர் தடுப்பூசியாகவும் இது போடப்பட்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சூரத் | கார் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் https://ift.tt/xMnu1O3

படம்
சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் அமைந்துள்ள கார் ஷோரூம் ஒன்றில் அதிபயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரத் நகரில் உள்ள உத்னா பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டிருந்தாலும், அதனால் ஏற்பட்டுள்ள புகை மூட்டம் மிகத் தீவிரமாக இருப்பதை பார்க்க இது குறித்த வீடியோவில் தெளிவாக பார்க்க முடிகிறது. இந்த விபத்து குறித்து செய்தி முகமை ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத் கலவரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேர் விடுவிப்பு https://ift.tt/0p9fzSt

படம்
கோத்ரா : குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு பெரும் கலவரம் வெடித்தது. பஞ்ச்மஹால் மாவட்டத்தில் திலோல் கிராமத்தில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 ஆண்டுகள் கழித்து முகேஷ் பர்வாத், கில்லோல் ஜானி, அசோக்பாய் படேல், நிரவ்குமார் படேல் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பட்ஜெட்டுக்கு முந்தைய அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது https://ift.tt/x2umDlN

படம்
புதுடெல்லி : மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு வழக்கமாக நடைபெறும் அல்வா தயாரிக்கும் விழா கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவில்லை. தற்போது கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் அல்வா தயாரிக்கும் விழாவை இன்று நடத்த நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது. பட்ஜெட் தயாரிப்பதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதை குறிக்கும் வகையில் இந்த அல்வா தயாரிப்பு விழா நடத்தப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடாயில் அல்வாவை கிளறி சக அமைச்சக பணியாளர்களுக்கு இன்று பரிமாற உள்ளார். நாடாளு மன்றத்தின் நார்த் பிளாக்கில் இந்த அல்வா கிண்டும் நிகழ்வு நடைபெறும். இதனையடுத்து, பட்ஜெட் தொடர்பான அச்சுப் பணிகள் தொடங்கும். பிப்ரவரி 1-ம் தேதி நிதியமைச்சர் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் முழு நிதி யாண்டுக்கான கடைசி பட்ஜெட் இதுவாகும். 2024-ல் தேர்தல் நடைபெறவுள்ளதால், அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்ய முடியும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinem...

குடியரசு தின விழாவை நடத்தியே தீர வேண்டும் - தெலங்கானா அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/TyFMPWU

படம்
ஹைதராபாத் : தெலங்கானாவில் ஆளுநரை தவிர்க்க கரோனா பாதிப்பை காரணம் காட்டி, குடியரசு தின விழாவை மாநில அரசு ரத்து செய்தது. ஆனால் குடியரசு தின விழாவை ஆளுநர் தலைமையில் நடத்தியே தீரவேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் முதல்வர் கே.சந்திரசேகர ராவுக்கும் (கேசிஆர்) இடை யில் கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. தெலங்கானா அரசு சார்பில் ஆண்டுதோறும் குடியரசு தின விழா செகந்திராபாத்தில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் நடைபெறும். ஆளுநரும் முதல்வரும் இதில் பங்கேற்பது வழக்கம்.இந்நிலையில் கடந்த 2022-ல்கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தலைநகரில் வழக்கமான குடியரசு தின விழாவை மாநில அரசு ரத்து செய்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் | அனுமதியின்றி திரையிடும் மாணவர்கள் - அரசியல் ஆயுதமாக்கும் எதிர்க்கட்சிகள் https://ift.tt/fBOcmzu

படம்
புதுடெல்லி : பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரம் குறித்து ‘இந்தியா: மோடி கேள்விகள்’ என்ற ஓர் ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டிருந்தது. குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடிக்கு எதிரான எந்த சாட்சியமும் இல்லை என்று கூறி அவரை குற்றச்சாட்டுக்களில் இருந்தும் உச்ச நீதிமன்றம் விடுவித்தது. இந்நிலையில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் (ஜேஎன்யு) நேற்று முன்தினம் இரவு 9.00 மணிக்கு இந்த ஆவணப்படம் திரையிட இருப்பதாக மாணவர் பேரவை தலைவர் அயிஷா கோஷ் அறிவித்தார். இதற்கு பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடகாவில் பதான் படத்துக்கு எதிர்ப்பு - போராட்டம் நடத்திய 35 பேர் கைது https://ift.tt/WsTUZNb

படம்
பெங்களூரு : பாலிவுட் நடிகர் ஷாருக் கான், தீபிகா படுகோனே நடித்த பதான் திரைப்படம் நேற்று வெளியானது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பேஷாராம் ரங் பாடலில் தீபிகா படுகோனே காவி நிற உடை அணிந்து நடனம் ஆடியதால் அண்மையில் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று கர்நாடகாவில் மங்களூரு, பெலகாவி, கல்புர்கி ஆகிய இடங்களில் பதான் படத்தை திரையிட்ட திரையரங்குகளை இந்துத்துவ அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆக.15-ம் தேதி முதல் தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு https://ift.tt/aHcJ6LO

படம்
புதுடெல்லி : உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தமிழ் உள்ளிட்ட 4 பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்துள்ளார். டெல்லி உயர் நீதிமன்றத்தின் கணினிமயமாக்கப்பட்ட கோப்புகளை ஆய்வு செய்ய அனுமதிக்க வகை செய்யும், இணையவழி ஆய்வு மென்பொருள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிறுமியை கடத்திசென்று திருமணம் செய்த வழக்கில் சென்னை இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை - புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு https://ift.tt/d0XAK1T

படம்
புதுச்சேரி : சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வழக்கில் சென்னை இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையை புதுச்சேரி தலைமை நீதிபதி செல்வநாதன் விதித்தார். புதுச்சேரி, வில்லியனூர் கணுவாபேட்டை புது நகரைச் சேர்ந்த 16 வயது சிறுமியை சென்னை நொச்சிக்குப்பம் விஜி என்ற விஜய் கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் தந்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸார் விஜி என்கிற விஜய், இவரது தாய் லதா ஆகியோர் மீது குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையின்போது கடத்தி செல்லப்பட்ட சிறுமி இரண்டு மாத கர்ப்பமாக இருந்ததால் விஜய் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதானார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உதகையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: வடமாநில இளைஞர்கள் இருவர் கைது https://ift.tt/OGzuAsV

படம்
உதகை: உதகை அருகே தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது 7 வயது மகள், அப்பகுதியிலுள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், வட மாநில இளைஞர்கள் இருவர் நேற்று முன்தினம் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டதால் பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதையடுத்து, இளைஞர்கள் இருவரும் தப்பி விட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஹாரை அடுத்து உ.பி.யிலும் ‘ராம்சரித்மானஸ்’ சர்ச்சை - சமாஜ்வாதி மூத்த தலைவர் மவுரியா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் https://ift.tt/Bws3XP6

படம்
புதுடெல்லி : இந்துக்களின் புனித நூலான ‘ராம்சரித்மானஸ்’ குறித்து பிஹாரை தொடர்ந்து உ.பி.யிலும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்நூலை அவமதித்த சமாஜ்வாதி மூத்த தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சம்ஸ்கிருத அறிஞரும் ராம பக்தருமான துளசிதாசரால் 15-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது ராம்சரித்மானஸ். அவதி மொழியில் கவிதை நடையில் எழுதப்பட்ட இந்தநூலை இந்துக்கள் புனித நூலாகக்கருதி தங்கள் பூஜை அறையில்வைத்து பூஜிக்கின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

துல்லிய தாக்குதலுக்கு ஆதாரம் தேவையில்லை - திக்விஜய் சிங் புகாருக்கு ராகுல் விளக்கம் https://ift.tt/nIekl7H

படம்
ஜம்மு : பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீதான துல்லிய தாக்குதலுக்கு ராணுவம் ஆதாரம் தரத் தேவையில்லை என திக்விஜய் சிங் புகாருக்கு ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். ஜம்முவில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் பேசும்போது, “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியதாகவும் இதில் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாகவும் கூறியது. ஆனால் அதற்கு ஆதாரம் எதுவும் தரவில்லை. மத்திய அரசு பொய்களை கூறி வருகிறது” என்று குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து திக்விஜய் சிங் கூறியது அவரது சொந்த கருத்து என காங்கிரஸ் தரப்பில் நேற்றே விளக்கம் அளிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவண பட திரையிடலுக்கு எதிர்ப்பு - டெல்லி ஜேஎன்யு மாணவர்கள் நள்ளிரவில் போராட்டம் https://ift.tt/0ZxE1ap

படம்
புதுடெல்லி : டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி ஆவண படத்தை திரையிட சில மாணவர்கள் திட்டமிட்டிருந்ததால் மின்சாரம் மற்றும் இணையம் துண்டிக்கப்பட்டது. அதையும் மீறி செல்போன்களில் ஆவண படத்தை பார்த்தவர்கள்மீது கற்கள் வீசப்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் ஏற்பட்டபோது அந்த மாநில முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தார். இந்த கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி கடந்த 17-ம் தேதி ஆவண படம் ஒன்றை வெளியிட்டது. “இந்தியா - மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பிலான அந்த ஆவண படத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருச்சி தொழிலதிபர் வீட்டில் 150 பவுன் நகை, ரூ.5 லட்சம் ரொக்கம் திருட்டு https://ift.tt/8lt56ej

படம்
திருச்சி: திருச்சி தொழிலதிபர் வீட்டில் 150 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் திருடு போனது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி திருவெறும்பூர் ஐஏஎஸ் காலனியைச் சேர்ந்தவர் நேதாஜி(65). பெல் நிறுவனத்தில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற இவர், தனது 3 சகோதரர்களின் குடும்பங்களுடன் இணைந்து கூட்டுகுடும்பமாக வசித்து வருகிறார். மேலும் தனியார் பேருந்துகள், பெட்ரோல் நிலையம், கிரஷர் கம்பெனி, சாலை அமைத்தல், மேம்பாலம் கட்டுதல் உள்ளிட்ட கட்டுமானம் தொடர்புடைய பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்காவில் 3 வெவ்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு: 9 பேர் பலி

படம்
கலிபோர்னியா: அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியா, அயோவா, சான் பிரான்சிஸ்கோ உள்பட 3 இடங்களில் நடந்த வெவ்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 2 மாணவகள் உள்பட 9 பேர் பலியாகினர். பள்ளிக்கூட ஊழியர் ஒருவர் உயிருக்குப் போராடி வருகிறார். இச்சம்பவங்கள் நேற்று ஜனவரி 23 நடந்துள்ளன. முன்னதாக கடந்த சனிக்கிழமை கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மான்டெரி பார்க் நகரில் துப்பாக்கிச் சூடு நடந்தது. ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள இங்கு, ஆயிரக்கணக்கானோர் ஒன்றாகக்கூடி சீன புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருந்தபோது இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்த அதிர்ச்சி விலகுவதற்குள் மீண்டும் 3 வெவ்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்