இடுகைகள்

ஜூலை, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மணிப்பூரில் ஆடையின்றி இழுத்துச் செல்லப்பட்ட 2 பெண்கள் எஸ்ஐடி கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: மத்திய, மாநில அரசுகள் அறிக்கை அளிக்க உத்தரவு https://ift.tt/Ihqck6o

படம்
புதுடெல்லி: மணிப்பூரில் ஆடையின்றி இழுத்துச் செல்லப்பட்ட 2 குகி பழங்குடியினப் பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி இனத்தவர்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க உயர் நீதிமன்றம் பரிந்துரைத்தது. இதை எதிர்த்து குகி மற்றும் நாகா பழங்குடியின மக்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 மாதமாக நடைபெறும் வன்முறையில் இதுவரை 182-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹாங்காங்கில் உயரமான கட்டிடத்தில் ஏறிய பிரான்ஸ் நாட்டின் சாகச வீரர் 68-வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு

படம்
ஹாங்காங்: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரெமி லுசிடி (30), உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள உயரமான கட்டிடங்கள் மற்றும் பாலங்கள் மீது ஏறி சாகசம் செய்து வந்தார். அந்த வகையில் ரெமி கடந்த வாரம் ஹாங்காங்கில் உள்ள 68 மாடிகளைக் கொண்ட ‘ட்ரெகுன்ட்டர்’ என்ற குடியிருப்பு கட்டிடத்துக்கு சென்றுள்ளார். அங்குள்ள பாதுகாவலர்களிடம் 40-வது மாடியில் உள்ள தன்னுடைய நண்பரை பார்க்கப் போவதாகக் கூறி உள்ளே சென்றுள்ளார். இதுபற்றி, நண்பர் என கூறியவரிடம் பாதுகாவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், ரெமியை தனக்கு தெரியாது என அவர் கூறியுள்ளார். இதையடுத்து, பாதுகாவலர் ஒருவர் ரெமியை தேடிச் சென்றுள்ளார். அதற்குள் கட்டிடத்தின் உச்சிக்கு சென்றுள்ளார் ரெமி. அங்கிருந்து சாகசம் செய்தபோது தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றினர். பின்னர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மும்பை ரயிலில் மனநலம் பாதிக்கப்பட்ட ஆர்பிஎஃப் காவலர் தாக்குதல் - எஸ்.ஐ. உட்பட 4 பேர் சுட்டுக் கொலை https://ift.tt/YVd0x8o

படம்
மும்பை: ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படையை (ஆர்பிஎஃப்) சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட காவலர் ஒருவர் தனது உயரதிகாரி உட்பட 4 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்ப முயன்ற காவலரை போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்பு படை (மேற்கு ரயில்வே) ஐ.ஜி. பிரவீன் சின்ஹா கூறியதாவது. ஜெய்ப்பூர் - மும்பை சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (12956) ஜெய்ப்பூரில் இருந்து புறப்பட்டு மும்பை நோக்கி வந்துகொண்டிருந்தது. மும்பை ரயில் நிலையத்தை அடைவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாக, நேற்று (ஜூலை 31) அதிகாலை 5 மணி அளவில் வைதர்னா ரயில் நிலையத்தை கடந்தபோது, பால்கருக்கு அருகே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

6 கேள்விகளுக்கு 24 மணி நேரத்தில் பதில் சொல்லுங்கள் - மணிப்பூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் கெடுபிடி https://ift.tt/VL4pGod

படம்
புதுடெல்லி: மணிப்பூரைப் போல் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளது எனக் கூறுவது ஏற்புடைய வாதமா என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்திடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த மே மாதம் மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இனக்கலவரத்தின்போது பழங்குடியினப் பெண்கள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களின் அடையாளம் வெளியிடப்படக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் திங்கள்கிழமை விசாரணை செய்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மசோதாக்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் மணிஷ் திவாரி சந்தேகம் https://ift.tt/COGW6J3

படம்
புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி நேற்று கூறியது. எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன் மீதான விவாதத்தை திட்டமிடுவதற்கான 10 நாள் அவகாசத்தை மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக பயன்படுத்த முடியாது. அதன் பிறகு நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் அனைத்தும் அரசியலமைப்பு ரீதியாக சந்தேகத்துக்குரியவை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

துபாய் ஷேக்கின் ராட்சத ஹம்மர் கார்

படம்
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஷேக் ஹமத் பின் ஹம்தான் அல் நஹ்யான் வைத்திருக்கும் ஹம்மர் கார் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இது ராட்சத ஹம்மர். இந்த ஹம்மர் காரின் உயரம் 22 அடி, நீளம் 46 அடி, அகலம் 20 அடி. இந்தக் கார் ஹம்மர் ஹெச் 1 எக்ஸ் 3 என்று அழைக்கப்படுகிறது. வழக்கமான ஹெச் 1 மாடல் ஹம்மர் காரின் அளவைவிட மூன்று மடங்கு அதிகம் என்பதால் ‘எக்ஸ் 3’ என்று சேர்க்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராஜீவ் காந்தி இறப்புக்குப் பின் எப்படி சமாளித்தீர்கள்? - சோனியா காந்தியிடம் ஹரியாணா பெண் விவசாயி கேள்வி https://ift.tt/MFxEqfQ

படம்
புதுடெல்லி: ராஜீவ் காந்தி இறப்புக்குப்பின் நிலைமையை எப்படி சமாளித்தீர்கள் என ஹரியாணா பெண் விவசாயி ஒருவர் சோனியா காந்தியிடம் கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டபோது ஹரியாணா மாநில பெண் விவசாயிகளை சந்தித்தார். அப்போது தலைநகர் டெல்லியை பார்க்க வேண்டும் என்ற அந்த பெண்கள் விருப்பம் தெரிவித்தனர். அவர்களின் ஆசையை நிறைவேற்ற அவர்களுக்கு தங்கள் வீட்டில் விருந்தளித்தார் ராகுல். அப்போது, ராகுல்,சோனியா காந்தி, பிரியங்கா ஆகியோர் ஹரியாணா பெண் விவசாயிகளிடம் கலந்துரையாடினர். இந்த வீடியோ காட்சியை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநடே பகிர்ந்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஎஸ்எல்வி-சி56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: சிங்கப்பூரின் 7 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம் https://ift.tt/c7lpTMA

படம்
சென்னை: இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி56 ராக்கெட் மூலம் சிங்கப்பூரின் ‘டிஎஸ்-சார்’ உள்ளிட்ட 7 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. தகவல் தொடர்பு, தொலை உணர்வு மற்றும் வழிகாட்டுதல் செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வணிக ரீதியாகவும் விண்ணில் செலுத்துகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வீடுதோறும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்: சுதந்திர தினத்தையொட்டி ‘என் மண், என் தேசம்’ இயக்கத்தில் பங்கேற்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு https://ift.tt/ypP8sFT

படம்
புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி ‘என் மண், என் தேசம்' இயக்கம் தொடங்கப்படும். இதன்படி, அவரவர் பகுதியில் இந்த தேசத்தின் புனித மண்ணை கையில் ஏந்தி செல்ஃபி புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். நேற்று ஒலிபரப்பான 103-வது ‘மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதுச்சேரி | மருத்துவ கல்வியில் அரசு பள்ளியில் படித்தோருக்கு உள்ஒதுக்கீட்டு ஒப்புதலில் கூடுதல் விவரம் கேட்கும் மத்திய அரசு https://ift.tt/wc6gxqQ

படம்
புதுச்சேரி: புதுச்சேரியில் மருத்துவ சென்டாக் கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மருத்துவக் கல்வியில் அரசு பள்ளியில் படித்தோருக்கு உள்ஒதுக்கீடு தர ஒப்புதல் தர கூடுதல் விவரங்களை மத்திய அரசு கேட்டுள்ளதால் அதற்கான ஆவணங்களை தயார் செய்யும் பணியில் புதுச்சேரி அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கடந்த 24ம் தேதி, முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., (ஆயுர் வேதம்) உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 40 பேர் பலி, 200+ காயம் என தகவல்

படம்
பெஷாவர்: பாகிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் பஜுர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் கட்சி மாநாட்டில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 40 பேர் பலி, 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜமியத் உலமா இஸ்லாம்-ஃபஸ்ல் (JUI-F) என்ற கட்சி சார்பில் கார் தாலுகாவில் நடைபெற்ற இந்த மாநாட்டில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் அந்த காட்சியை சார்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல். மாநாடு நடைபெற்ற பகுதிக்குள் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. தற்கொலை படை மூலம் இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தாய்மொழி கல்வியால் நீதி கிடைத்திருக்கிறது - அகில இந்திய கல்வி மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம் https://ift.tt/gWPvuAs

படம்
புதுடெல்லி : தாய் மொழிக் கல்வியால் மாணவ, மாணவியருக்கு நீதி கிடைத்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புதிய தேசிய கல்வி கொள்கைக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதன் 3-ம் ஆண்டு தினத்தையொட்டி டெல்லியில் நேற்று அகில இந்திய கல்வி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணிப்பூர் வீடியோ விவகார வழக்கில் விசாரணையை தொடங்கியது சிபிஐ https://ift.tt/an04WOV

படம்
புதுடெல்லி : மணிப்பூரில் இரு பெண்கள் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ தொடர்பான வழக்கை, சிபிஐ விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி சமுதாயத்தினர் பழங்குடியினர் அந்தஸ்து கோருகின்றனர். இதற்கு குகி சமுதாயத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த இரு பிரிவினரிடையே கடந்த மே 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இது பின்னர் வன்முறையாக மாறியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வரும் ராகுல் காந்தி நாளை டிஸ்சார்ஜ் https://ift.tt/gZjwr3A

படம்
மலப்புரம் : காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது அவருக்கு முழங்கால் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கேரளாவில் புகழ்பெற்ற கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலையில் கடந்த 21-ம் தேதி ராகுல் காந்தி சிகிச்சைக்காக சேர்ந்தார். மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலரும் தலைமை மருத்துவருமான பி.எம்.வாரியர் அவரை வரவேற்றார். மருத்துவமனையில் ராகுல் காந்தி ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டி

படம்
சிங்கப்பூர் : சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமா. இவரது 6 ஆண்டு பதவிக் காலம் செப்டம்பர் 13-ம் தேதியுடன் முடிவடைகிறது. இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அதிபர் ஹலிமா கடந்த மே மாதம் 29-ம் தேதி அறிவித்தார். இதனால் சிங்கப்பூரின் அடுத்த அதிபருக்கான தேர்தல் செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடுவதற்காக கேபினட் அமைச்சர் பதவியில் இருந்த தர்மன் சண்முகரத்னம் தனது ராஜினாமா அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இமயமலையில் 60 கோடி ஆண்டுக்கு முன்பிருந்த கடல்: இந்திய - ஜப்பான் ஆய்வில் கண்டுபிடிப்பு https://ift.tt/fPty1M3

படம்
பெங்களூரு : பெங்களூருவைச் சேர்ந்த இந்திய அறிவியல் கழகம் மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிகட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இமயமலையின் உச்சியில் ஆய்வு நடத்தி வருகின்றனர். இமயமலையில் உச்சியில் உள்ள படிமங்களை ஆய்வு செய்தபோது, அதில் ஒன்றில் நீர்த் துளி சேகரமாகி இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர். அந்த நீர்த் துளியை ஆய்வுக்கு உட்படுத்திய நிலையில், அது 60 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என்பது தெரியவந்துள்ளது. எனில், அங்கு, 60 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் இருந்திருக்கக்கூடும், அந்தக் கடலிலிருந்து அந்த நீர்த் துளி எஞ்சி இருக்கக்கூடும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தெலங்கானாவில் கன மழையால் 14 பேர் உயிரிழப்பு: ஹைதராபாத் - விஜயவாடா இடையே போக்குவரத்து பாதிப்பு https://ift.tt/Y6f91a0

படம்
ஹைதராபாத் : தெலங்கானா மாநிலத்தில் ஒரு வாரமாக பெய்து வரும் கன மழையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தில் இதுவரை 14 பேர் அடித்து செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டு உள்ளன. கன மழையால் சுமார் 2 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. நூற்றுக்கணக்கான குடிசைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. இந்த குடிசைகளில் வசித்த மக்கள் வீடு, உடைமைகளை இழந்து பரிதவிக்கின்றனர். சுமார் 5.5 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, காய்கறி, பருத்தி ஆகிய பயிர்கள் நாசமாகி உள்ளனர். சுமார் 135 ஏரிகள் உடைந்து, பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உலகில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: ஜி-20 நாடுகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் https://ift.tt/fK60r3d

படம்
சென்னை : உலகில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டுவர பணியாற்றுமாறு ஜி-20 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜி-20 மாநாட்டின் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை குறித்த அமைச்சர்கள் கூட்டம் சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றது. இதில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கூட்டத்தை தொடங்கி வைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிஆர்பிஎப் நிறுவன தினம் பிரதமர் மோடி வாழ்த்து https://ift.tt/zoBIUtD

படம்
புதுடெல்லி : சிஆர்பிஎப் நிறுவன தினத்தையொட்டி அந்த படை வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடந்த 1939-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி சிஆர்பிஎப் படை உருவாக்கப்பட்டது. இந்த படை தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. சுமார் 3.13 லட்சம் வீரர்கள் படையில் பணியாற்றி வருகின்றனர். கலவர தடுப்பு, தீவிரவாத தடுப்பு, முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணியில் சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ரா பதவியில் தொடரலாம்: செப்டம்பர் 15 வரை அனுமதி அளித்தது உச்ச நீதிமன்றம் https://ift.tt/m4VZTic

படம்
புதுடெல்லி : அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா, செப்டம்பர் 15-ம் தேதி வரை பதவியில் தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நாட்டின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. சஞ்சய் மிஸ்ரா அமலாக்கத்துறை இயக்குநராக 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். 2020 நவம்பர் மாதம் அவரது பதவிக்காலம் முடியவும், மீண்டும் அது நீட்டிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராகுல் காந்திக்கு ஆயுர்வேத சிகிச்சை https://ift.tt/NYq9noc

படம்
மலப்புரம் : கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோட்டக்கல் வைத்திய சாலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் நேற்று கூறியது: ராகுல் காந்தி உடல் ஆரோக்கிய பராமரிப்புக்காக கோட்டக்கல் ஆர்ய வைத்ய சாலையில் சிகிச்சை எடுத்து வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திரைப்பட திருட்டுக்கு 3 ஆண்டுகள் சிறை | ஒளிப்பதிவு திருத்த மசோதா 2023 மாநிலங்களவையில் நிறைவேற்றம் https://ift.tt/LDSpowh

படம்
புதுடெல்லி: திரைப்பட திருட்டுக்கு (சினிமா பைரஸி) கடுமையான தண்டனைகள் மற்றும் திரைப்படங்களை வகைப்படுத்த புதிய வயது வகைகளை அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் கொண்ட ஒளிப்பதிவு (திருத்தம்) மசோதா 2023 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக கடந்த வாரம் இந்த மசோதாவை மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். இந்தச் சட்டத்தின் நோக்கம், திரைத்துறைக்கு பேரிழப்பை ஏற்படுத்தும் திருட்டை (பைரஸி) தடுப்பதாகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்காவில் பசியால் வாடும் ஹைதராபாத் மாணவி: மகளை மீட்க அமைச்சருக்கு தாய் கடிதம்

படம்
ஹைதராபாத்: அமெரிக்காவில் மேற்படிப்புக்கு சென்ற மகள், கடந்த 2 மாதங்களாக பசியால் வாடி தெருவில் சுற்றி திரிவதாகவும் அவரை மீட்டுத் தருமாறும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தாய் கடிதம் எழுதியுள்ளார். ஹைதராபாத் மவுலாலி பகுதியை சேர்ந்தவர் சையிதா ஹவாஜ் பாத்திமா. இவரது மகளான சையிதா லுலூ மின்ஹாஜ் குவைதி எம்.எஸ். படிக்க 2021 ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் உள்ள சிகாகோவிற்கு சென்றார். அங்கிருந்து தினமும் தனது தாயிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். லுலூ கடந்த 2 மாதங்களாக தாயை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் கவலை அடைந்த பாத்திமா, தனக்கு தெரிந்த சிலரிடம் அமெரிக்கா சென்று தனது மகள் குறித்து விவரங்களை அறியுமாறு கேட்டுக் கொண்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கார்கில் பகுதியில் முதல் முறையாக மகளிர் காவல் நிலையம் திறப்பு https://ift.tt/F2Vf7Hm

படம்
கார்கில்: லடாக் யூனியன் பிரதேசத்தில் லே-வுக்கு அடுத்தபடியாக உள்ள மிகப் பெரிய நகரம் கார்கில். கார்கில் மாவட்டத்தில் மகளிர் காவல் நிலையம் இல்லாமல் இருந்தது. கார்கில் போர் வெற்றி தினத்தின் 24-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, கார்கில் பகுதியில் முதல் முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தை ஏடிஜிபி சிங் ஜாம்வல் நேற்று தொடங்கி வைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்துக்கு எடுக்க அனுமதி - மக்களவை தலைவர் அறிவிப்பு https://ift.tt/eF32kqV

படம்
புதுடெல்லி : மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதாக மக்களவை தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 4 நாட்களாக இரு அவைகளும் முடங்கின. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் தரவுகள் கசிந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு: மத்திய அமைச்சர் அஷ்வின் தகவல் https://ift.tt/1LUOy2H

படம்
புதுடெல்லி: கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் தரவுகள் கசிந்த விவகாரத்தில் வழக்குப் பதிவாகி உள்ளது. இதனை எம்.பி டி.ரவிகுமார் கேள்விக்கு மக்களவையில் அளித்த பதிலில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தகவல் அளித்துள்ளார். கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் விவரங்கள், அவர்களின் தனிப்பட்ட முக்கியமான தகவல்கள் டெலிகிராம் எனும் சமூகவலைதளத்தில் கசிந்ததாக தகவல் வெளியாகி சர்ச்சையானது. இதன் மீதான விசாரணை குறித்து விழுப்புரம் தொகுதி எம்.பி.,யுமான டி.ரவிகுமார் மக்களவையில் கேள்வி எழுப்பினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத ஊடுருவல் இல்லை: மத்திய அமைச்சர் தகவல் https://ift.tt/GNuqJU9

படம்
புதுடெல்லி: ஜம்மு - காஷ்மீரில் இந்தாண்டின் முதல் 6 மாதத்தில் தீவிரவாத ஊடுருவல் எதுவும் நடைபெறவில்லை என மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச் சர் நித்யானந்த ராய் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத ஊடுருவல் குறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது: இந்தாண்டின் முதல் 6 மாதத்தில் காஷ்மீரில் தீவிரவாத ஊடுருவல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. மத்திய அரசு மேற்கொண்ட அணுகுமுறையால் தீவிரவாத ஊடுருவல் குறைந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணிப்பூரில் நிபந்தனைகளுடன் தரைவழி இணைய சேவைக்கு அனுமதி: செல்போன் இணைய சேவைக்கு தொடரும் தடை https://ift.tt/d41era0

படம்
இம்பால்: கலவரம் நடந்து வரும் மணிப்பூரில் நிபந்தனைகளுடன் பகுதியளவு இணையதள சேவைக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி சமூகத்தை சேர்ந்தவர்கள் சுமார் 53 சதவீதம் பேர் வசித்துவருகின்றனர். அதேபோல் நாகா மற்றும் குகி இனத்தை சேர்ந்தவர்கள் சுமார் 40 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் குகி இனத்தவர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சுற்றுப்பாதை 5-வது முறையாக மாற்றம்: ஆக.1-ல் நிலவை நோக்கி பயணிக்கிறது சந்திரயான்-3 https://ift.tt/tbPcgrs

படம்
சென்னை: சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தூரம் 5-வது முறையாக உயர்த்தப்பட்டு உள்ளது. ஆக.1-ம் தேதி நிலவை நோக்கி சந்திரயான் பயணிக்கிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப் பாதையை நீட்டிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணிப்பூர் விவகாரத்தால் நாடாளுமன்றம் 4-வது நாளாக முடக்கம்: அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் https://ift.tt/NrdzWlD

படம்
புதுடெல்லி : மணிப்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக, பிரதமர் மோடி பதில் அளிக்க கோரி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 4-வது நாளாக நேற்றும் முடங்கியது. இந்நிலையில் பிரதமரை நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க வைக்கும் வியூகமாக, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது பற்றி ‘இண்டியா’ கூட்டணி உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. மணிப்பூரில் 2 பெண்கள் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், மழைக்கால கூட்டத்தொடர் முதல் நாளிலேயே முடங்கியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மதம் மாறிய பின் பாகிஸ்தான் நண்பரை மணந்தார் இந்திய பெண் அஞ்சு

படம்
பெஷாவர் : உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் அஞ்சு, ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் நஸ்ருல்லாவை திருமணம் முடித்துள்ளார். முன்னதாக, தங்களுக்குள் காதல் இல்லை என்று நஸ்ருல்லா தெரிவித்த நிலையில் செவ்வாய் கிழமை இவர்களது திருமணம் நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், அஞ்சு இஸ்லாம் மதத்துக்கு மாறிய பிறகு நஸ்ருல்லாவை திருமணம் செய்துகொண்டார் என்றும், தற்போது பாத்திமா என்ற புதிய பெயரை வைத்துள்ளதாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. இருவரின் திருமணம் பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மேல் திர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் சட்டப்படி திருமணம் செய்துகொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி அரசுக்கு எதிரான அவசர சட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் https://ift.tt/CtYefsx

படம்
டெல்லி : டெல்லி அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. என்றாலும், இந்த மசோதாவை எப்போது தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராஜஸ்தான் பேரவையில் காங்கிரஸார் தாக்குதல்: பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் புகார் https://ift.tt/ckPremX

படம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவையில் கடந்த 21-ம் தேதி மணிப்பூர் வன்முறைக்கு ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ராஜேந்திர சிங் குதா, “நம் மாநிலத்திலும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது. இதுகுறித்து நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டும்” என்றார். அடுத்த சில மணி நேரங்களில் அரசுக்கு எதிராக குறை கூறிய அமைச்சர் குதா பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், நேற்று காலையில் சட்டப்பேரவை கூடுவதற்கு முன்பு, “என்னிடம் உள்ள சிவப்பு டைரியில் சில ரகசியங்கள் உள்ளன. அவற்றை சட்டப்பேரவையில் தெரிவிப்பேன்” என கூறியிருந்தார். பின்னர் அவை கூடியதும், ராஜேந்திர சிங் குதா சிவப்பு டைரியுடன் பேரவைத் தலைவர் சி.பி.ஜோஷி அருகே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தன்னுடைய அறைக்கு வந்து பேசுமாறு ஜோஷி தெரிவித்தார். சிறிது நேரம் கழித்து பேரவை விவகாரத் துறை அமைச்சர் ஷாந்தி தரிவால் அருகே சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & Wo...

அகமதியா முஸ்லிம்கள் விவகாரம் | ஆந்திர வக்ஃபு வாரியத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு - மாநில அரசு தலையிட ஸ்மிருதி இரானி கடிதம் https://ift.tt/2RPWfT5

படம்
புதுடெல்லி: பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டம் காதியானில் 19-ம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் இடையே ‘அகமதியா’ என்ற புதிய பிரிவு தோன்றியது. காதியானி என்றும் அழைக்கப்படும் இப்பிரிவினர் பிற முஸ்லிம்களை போல நபிகள் நாயகத்தை (ஸல்) கடைசி இறைத் தூதராகக் கருதுவதில்லை. மாறாக, தங்கள் பிரிவில் வாழ்ந்த அகமதியாவின் நிறுவனரான மிர்சா குலாம் அகமதுவை கடைசி இறைத் தூதராக ஏற்றுள்ளனர். முஸ்லிம்கள் தங்கள் இறைவனான அல்லாவை தவிர வேறு எவரையும் வழிபடுவதில்லை. ஆனால் அகமதியாக்கள், தாங்கள் கடைசி இறைத் தூதராகக் கருதும் மிர்சா குலாம் அகமதியாவையும் வழிபடுகின்றனர். இதுதவிர மேலும் பல காரணங்களால் உலகின் பெரும்பாலான முஸ்லிம்கள், அகமதியாக்களை தங்கள் சமூகத்தின் பிரிவாகக் கருதி தங்களுடன் சேர்ப்பதில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆம் ஆத்மி உறுப்பினர் இடைநீக்கம்: நள்ளிரவை தாண்டியும் நீளும் எதிர்க்கட்சி எம்பிக்களின் தர்ணா https://ift.tt/O7fmZX5

படம்
புதுடெல்லி : நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தர்ணா போராட்டம் வருகின்றனர். நள்ளிரவை தாண்டியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் மூன்றாவது நாளான திங்கள்கிழமையும் மணிப்பூர் விவகாரத்தால் இரு அவைகளிலும் முடங்கின. முன்னதாக நேற்று அவைத் தலைவரின் உத்தரவுகளை தொடர்ந்து மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் இந்தக் கூட்டத்தொடர் முழுவதுக்கும் இடைநீக்கம் செய்யப்பட்டார். பிற்பகல் 12 மணிக்கு அவை மீண்டும் கூடியபோது, மணிப்பூர் கொடூரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் பேச வேண்டும், அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். அந்த நிலையிலும் அவையில் கேள்வி நேரம் தொடர்ந்தது. அப்போது, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் சிங் அவையின் மையத்துக்கு வந்து முழக்கங்கள் எழுப்பினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேகாலயா முதல்வர் அலுவலகத்தை தாக்கிய கும்பல் - 5 பாதுகாவலர்கள் காயம் https://ift.tt/IEnFpBi

படம்
துரா : மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மாவின் அலுவலகத்தை வன்முறை கும்பல் ஒன்று தாக்கியதில் பாதுகாப்பு படையினர் 5 பேர் காயமடைந்துள்ளனர். மேகாலயாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்வராக கான்ராட் சங்மா உள்ளார். இதனிடையே, அம்மாநிலத்தில் உள்ள காரோ மலைப்பிரதேச பகுதியில் வசிக்கும் மக்கள் மாநிலத்தின் குளிர்கால தலைநகராக துராவை அறிவிக்கக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராணுவ அதிகாரி குறித்து 22 ஆண்டுக்கு முன் அவதூறு செய்தி: ரூ.2 கோடி இழப்பீடு வழங்க தெஹல்கா நிறுவனத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/CNIe86J

படம்
புதுடெல்லி: ராணுவ அதிகாரிக்கு எதிராக 22 ஆண்டுகளுக்கு முன் அவதூறு செய்தி வெளியிட்ட வழக்கில் ரூ.2 கோடி இழப்பீடு வழங்க தெஹல்கா செய்தி நிறுவனத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் தருண் தேஜ்பாலும், அனிருத்தா பஹலும் இணைந்து 1999-ல் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு ‘தெஹல்கா’ செய்தி தளத்தை ஆரம்பித்தனர். புலனாய்வு செய்திகளை தெஹல்கா வெளியிட்டு வந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ட்விட்டர் ‘நீலக் குருவி’ லோகோ விரைவில் மாற்றம்: எலான் மஸ்க் தகவல்

படம்
கலிபோர்னியா: எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். அந்நிறுவனத்தின் சிஇஓ-வாக பொறுப்பேற்ற அவர், பணியாளர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்தார். பணி நடைமுறைகள் சார்ந்து புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தார். பயனாளர்கள் தங்கள் ட்விட்டர் கணக்குகளை அதிகாரப்பூர்வமானதாக மாற்றுவதற்குக் கட்டணம் உட்பட புதிய மாற்றங்களை அவர் அறிவித்தார். இந்நிலையில், ட்விட்டரின் லோகோவை மாற்ற இருப்பதாக தற்போது அறிவித்துள்ளார். சிறந்த லோகோ கிடைக்கும்பட்சத்தில் இன்று இரவே ட்விட்டரின் லோகோ மாற்றப்பட்டுவிடும் என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு https://ift.tt/E9pG26N

படம்
சென்னை: மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 25, 26-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆன்லைன் சூதாட்ட மோசடியில் ரூ.58 கோடியை இழந்த தொழிலதிபர் https://ift.tt/QIEKAWn

படம்
நாக்பூர்: நாக்பூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஆன்லைன் சூதாட்ட மோசடியில் ரூ.58 கோடியை இழந்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்த ஒரு தொழிலதிபரிடம், ‘ஆன்லைன் சூதாட்டம் மூலம் அதிக வருவாய் ஈட்ட முடியும்’ என்று, நவரத்தன் ஜெயின் என்பவர் ஆசை காட்டியுள்ளார். முதலில் தயங்கிய தொழிலதிபர், பிறகு நவரத்தன் கூறியபடி, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி அரசு பணிகளில் ஆம் ஆத்மி கட்சியினர் நியமனம் - நடவடிக்கை எடுக்கத் தயாராகும் பணியாளர் துறை https://ift.tt/GkJbamD

படம்
புதுடெல்லி: டெல்லி அரசுப் பணிகளில் தங்கள் கட்சியினர் உள்ளிட்ட 437 பேரை ஆம் ஆத்மி அரசு அமர்த்தியுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக அரசுப் பணியாளர் துறை நடவடிக்கை எடுக்க உள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்தாலும் உள்துறை, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகப் பொறுப்புகள் மத்திய அரசின் கீழ் உள்ளன. இவற்றை துணைநிலை ஆளுநர் மூலமாக மத்திய அரசு நிர்வகிக்கிறது. இத்துடன், டெல்லியின் குடிமைப்பணி அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்ட பொறுப்பும் மத்திய அரசின் கீழ் உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் ரு.10 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி பறிமுதல் https://ift.tt/J7R2mdb

படம்
புதுடெல்லி: டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் ஒரு விமானம் தயாரானது. அதில் ஏற முற்பட்ட 3 பேரின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது, பைக்குள் இருந்த காலணியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7.2 லட்சம் அமெரிக்க டாலர்கள் மற்றும் 4,66,200 யூரோ ஆகியவற்றை (ரூ.10 கோடி) சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சத்தீஸ்கரில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் - பெண் ஐஏஎஸ் அதிகாரி கைது https://ift.tt/b8QuW3e

படம்
ராய்ப்பூர்: சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பவர் ரானு சாஹு. 2010-ம் ஆண்டில் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று சத்தீஸ்கர் மாநில வேளாண்துறையில் இயக்குநராக பணியாற்றி வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

லண்டனில் ரூ.1,200 கோடிக்கு மாளிகை வாங்கிய இந்தியர்

படம்
லண்டன்: இந்திய கோடீஸ்வரர் ரவி ரூயா, லண்டனில் ரூ.1,200 கோடி மதிப்பில் மாளிகை ஒன்றை வாங்கியுள்ளார். ரஷ்ய முதலீட்டாளர் ஆன்டிரி கோஞ்சரென்கோவிடமிருந்து இந்த மாளிகையை அவர் வாங்கியுள்ளார். சமீப ஆண்டுகளில், லண்டனில் மிகப் பெரும் தொகையில் வாங்கப்பட்ட மாளிகையாக இது பார்க்கப்படுகிறது. லண்டனில் 150 பார்க் சாலையில் ஹனோவர் லாட்ஜ் மாளிகை அமைந்துள்ளது. 1827-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மாளிகை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது. லண்டனில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாளிகையை ரஷ்யரான ஆன்டிரி கோஞ்சரென்கோ 2012-ம் ஆண்டில் 120 மில்லியன் பவுண்டுக்கு வாங்கினார். இவர் ரஷ்ய அரசு நிறுவனமான காஸ்ப்ரோம் இன்வென்ஸ்ட் யூக் நிறுவன முன்னாள் துணை தலைமை நிர்வாக அதிகாரி. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் நெருக்கடிக்கு உள்ளானது அமெரிக்கா - அரிசி வாங்க கடைகளில் குவியும் மக்கள்

படம்
கலிபோர்னியா: கடந்த சில வாரங்களாக பெய்து வந்த கனமழை காரணமாக இந்தியாவில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில் மத்திய அரசு, பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் இருந்து 140 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருப்பதால் சர்வதேச அளவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் 2030-க்குள் மரபு சாரா எரிசக்தி திறனை 50 சதவீதமாக உயர்த்த திட்டம்: ஜி20 கூட்டத்தில் பிரதமர் தகவல் https://ift.tt/oD8O7nQ

படம்
புதுடெல்லி: ஜி20 நாடுகளின் எரிசக்தி துறை அமைச்சர்கள் கூட்டம் கோவாவில் நேற்று நடந்தது. இதில் ஜி20 நாடுகளின் எரிசக்தி துறை அமைச்சர்கள், சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற 9 நாடுகளின் எரிசக்தி அமைச்சர்கள், சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 14 அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கு மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே. சிங்தலைமை வகித்தார். இதில் வீடியோ மூலம் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: எரிசக்தி இன்றி, எதிர்காலம், நிலைத்தன்மை, வளர்ச்சி பற்றிய பேச்சு நிறைவடையாது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியா 3-வது பெரிய பொருளாதார நாடாகும்: ரோஜ்கர் மேளாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி https://ift.tt/9SClLPN

படம்
புதுடெல்லி: உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் உருவெடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரோஜ்கர் மேளா என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கி வைத்தார். இதன்படி நாடு முழுவதும் இதுவரை 4.33 லட்சம் பேருக்கு மத்திய அரசு துறைகளில் வேலை வழங்கப்பட்டு உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணிப்பூர் விவகாரத்தால் அமளி: நாடாளுமன்ற அவைகள் 2-வது நாளாக முடங்கின https://ift.tt/zIYRWyi

படம்
புதுடெல்லி : மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவையில் மணிப்பூர் விவகாரம், அவைக் குறிப்பில் இருந்து வார்த்தைகள் நீக்கம், டெல்லி மசோதா தொடர்பாக அமளி ஏற்பட்டது. இதனால் இரு அவைகளும் 2-வது நாளாக நேற்றும் முடங்கின. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ம்தேதி தொடங்கியது. மணிப்பூர் விவகாரத்தால் அமளிஏற்பட்டதால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணிப்பூர் வீடியோ | "நாட்டைப் பாதுகாத்த என்னால் மனைவியை காப்பாற்ற முடியவில்லை" - கார்கில் போர் ராணுவ வீரர் வேதனை https://ift.tt/bmEso8d

படம்
காங்போக்பி : மணிப்பூரின் காங்போக்பியில் இரண்டு பெண்களை நிர்வாணமாக அணிவகுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ ஒன்று புதன்கிழமை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, அந்த வீடியோவில் காணப்பட்ட பெண்களில் ஒருவரின் கணவர் கார்கில் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இந்திய ராணுவத்தில் அசாம் ரெஜிமென்ட்டின் சுபேதாராக பணியாற்றியவர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஎல்ஐ திட்டத்தில் பலன்பெற 176 எம்எஸ்எம்இ நிறுவனங்கள் தேர்வு - மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம் https://ift.tt/t0Hahs9

படம்
புதுடெல்லி : பிஎல்ஐ என்றழைக்கப்படும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தில் 176 எம் எஸ்எம்இ நிறுவனங்கள் பலன்பெற உள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சரான ஸ்ரீசோம் பிரகாஷ் தகவல் அளித்தார். இதன் மீது நாடாளுமன்ற மாநிலங்களயில் திமுக எம்பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் கேள்வி எழுப்பி இருந்தார். இதன்மீது தனது எழுத்துப்பூர்வ பதிலில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஸ்ரீ சோம் பிரகாஷ் குறிப்பிட்டதாவது: “சுயசார்பு இந்தியாவை உருவாக்கும் நோக்கில் 14 துறைகளுக்கு மத்திய அரசு பிஎல்ஐ திட்டத்தைக் கொண்டுவந்தது. இதற்கு ரூ.1.97 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்