இடுகைகள்

நவம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சராசரி திருமண செலவு ரூ.36.5 லட்சமாக உயர்வு: ‘வெட்மிகுட்’ நிறுவனம் ஆய்வு அறிக்கையில் தகவல் https://ift.tt/t47UomL

படம்
புதுடெல்லி: இந்த ஆண்டில் திருமண செலவு சராசரியாக 7% அதிகரித்து ரூ.36.5 லட்ச​மாகி உள்ளதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. திருமண வைபவம் ஆண்டு​தோறும் புதிய புதிய பரிமாணங்களை எடுத்து வருகிறது. இதனால் இதற்கான செலவும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக ‘வெட்​மிகுட்’ நிறு​வனம் 3,500 தம்ப​தி​களிடம் கருத்துகளை கேட்டு ஒரு ஆய்வு நடத்​தி​யது. இதில் 9% பேர் தங்கள் திரு​மணத்​துக்கு ரூ.1 கோடிக்கு மேல் செலவிட்​டதாக தெரி​வித்​தனர். மேலும் 9% பேர் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை செலவிட்​டதாக தெரி​வித்​தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உடனடி சண்டை நிறுத்தம் தேவை: பாலஸ்தீனத்துக்கு பிரதமர் மோடி கடிதம் https://ift.tt/QnzCbTk

படம்
‘‘பாலஸ்தீனத்தில் உடனடியாக சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும், அனைத்துவித தீவிரவாத நடவடிக்கைகளும் முடிவுக்கு வர வேண்டும், பாலஸ்தீன மக்களுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும்’’ என பாலஸ்தீனத்துக்கு பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் சர்வதேச தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு அரசுக்கு பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பாலஸ்தீன மக்களின் மேம்பாட்டுக்கு இந்தியா தொடர்ந்து தனது ஆதரவை தெரிவிக்கிறது. பாலஸ்தீனத்தில் உடனடியாக சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும். பிணைக் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அனைத்துவிதமான தீவிரவாத நடவடிக்கைகளும் முடிவுக்கு வர வேண்டும். காசாவில் நடைபெறும் சண்டை, உயிரிழப்பு சோகத்தையும், பாலஸ்தீன மக்களுக்கு மிகுந்த கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியா - ரஷ்யா ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை வாங்க 3 நாடுகள் விருப்பம் https://ift.tt/ON86XW4

படம்
புதுடெல்லி: இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து உருவாக்கிய பிரம்மோஸ் சூப்​பர்​சோனிக் ஏவுகணையை வாங்க யுஏஇ, வியட்​நாம், இந்தோ​னேசியா ஆகிய 3 நாடுகள் விருப்பம் தெரி​வித்​துள்ளன. இந்தியா​வும் ரஷ்யா​வும் இணைந்து பிரம்​மோஸ் சூப்​பர்​சோனிக் ஏவுகணையை தயாரித்​துள்ளன. இந்தியா​வின் டிஆர்டிஓ ரஷ்யா​வின் என்பிஓ ஆகியவை இணைந்து இதை தயாரிக்​கின்றன. இந்தியா​வின் பிரம்​மபுத்ரா மற்றும் ரஷ்யா​வின் மோஸ்கா ஆறுகளின் பெயரை தழுவி பிரம்​மோஸ் என பெயரிடப்​பட்​டுள்​ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மலேசிய தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் மறைவு: ரூ.40,000 கோடியை உதறி துறவியான மகன்

படம்
மலேசியாவில் தொலைத்தொடர்பு, செயற்கைக்கோள், ஊடகம், எண்ணெய்-எரிவாயு, ரியல் எஸ்டேட் என ஏகப்பட்ட நிறுவனங்களுக்கு சொந்தக்காரர் "ஏகே" என்று அனைவராலும் அழைக்கப்படும் ஆனந்த கிருஷ்ணன். இலங்கை தமிழரான இவர், மலேசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஃபோர்ப்ஸ் மதிப்பீட்டின்படி ரூ.40,000 கோடி சொத்துகளுக்கு சொந்தக்காரரான ஆனந்த கிருஷ்ணன் தனது 86 வயதில் உடல்நலக்குறைவால் மலேசியாவில் நேற்றுமுன்தினம் (நவ.28) காலமானார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமருக்கு பெண் கமாண்டோ பாதுகாப்பா? - சமூக வலைதளத்​தில் வைரலாகும் புகைப்​படம் https://ift.tt/iDZzMBv

படம்
பிரதமருடன் பெண் கமாண்டோ இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் பிரதமர் மற்றும் அவருக்கான அரசு இல்லத்தில் தங்கி உள்ள குடும்பத்தினர், முன்னாள் பிரதமர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு எஸ்பிஜி, எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையின் கமாண்டோ வீரர்கள் உயரடுக்கு பாதுகாப்பை வழங்கி வருகின்றனர். கடந்த 1985-ம் ஆண்டில் இந்த சிறப்பு பாதுகாப்பு படை அமைக்கப்பட்டது. இந்த படையினர், பிரதமர் பயணமாகும் இடங்களுக்குச் சென்று பாதுகாப்பை வழங்குவர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத்திய அரசுக்கு சுங்க கட்டணம் மூலம் ரூ.1.44 லட்சம் கோடி வருவாய் https://ift.tt/npuIgF2

படம்
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகள் மூலமாக மத்திய அரசுக்கு ரூ.1.44 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: தேசிய நெடுஞ்சாலைகளில் பிபிபி எனப்படும் பொது தனியார் பங்களிப்பு மாடல் கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களிடமிருந்து கட்டணங்கள் வசூல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த மாடல் அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரையில் ரூ.1.44 லட்சம் கோடி சுங்க கட்டணமாக மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெங்களூருவில் தமிழர்கள் அடிமைகளாக இருந்தனர்: கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியின் பேச்சுக்கு எதிர்ப்பு https://ift.tt/9POULzZ

படம்
பெங்களூரு: கர்​நாடக மாநிலம் பெங்​களூரு வழக்​கறிஞர் சங்கத்​தின் சார்​பில் கர்நாடக ராஜ்யோத்சவா தின விழா குடிமை​யியல் நீதி​மன்ற வளாகத்​தில் நேற்று​முன்​தினம் நடைபெற்​றது. இதில் சிறப்பு விருந்​தினராக பங்கேற்ற கர்நாடக உயர் நீதி​மன்ற நீதிபதி எம்.ஐ.அருண் பேசுகை​யில், “பெங்​களூரு கன்டோன்​மென்ட் பகுதி​யில் ஆங்கிலேயர் ஆட்சி செய்த போது தமிழர்கள் அவர்​களுக்கு அடிமை​களாக இருந்​தனர். ஆனால் கன்னடர்கள் ஒருபோதும் அவர்​களுக்கு அடிமையாக இருக்க​வில்லை. மொழி என்பது ஒரு மாநிலத்​தின் எல்லையை தீர்​மானிக்​கும் விஷயமாக இருக்​கிறது. பெங்​களூரு​வில் சில இடங்​களில் பிற மொழி​யினரின் ஆதிக்கம் அதிகமாக இருக்​கிறது. இங்கு வாழும் அனைவரும் கன்னடம் கற்றுக்​கொண்டு, கன்னடத்​திலே பேச வேண்​டும்” என்று பேசினார். இவரது பேச்சு கர்நாடக தமிழர்​களிடையே கடும் அதிருப்​தியை ஏற்படுத்​தி​யுள்​ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா: ஆஸ்திரேலியாவில் நிறைவேற்றம்!

படம்
சிட்னி: 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் புதிய சட்ட மசோதாவை ஆஸ்திரேலியா அரசு வியாழக்கிழமை (நவ.28) நிறைவேற்றியுள்ளது. உலகத்திலேயே முதல் முறையாக 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் இந்த சட்ட மசோதா ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. சிறுவர்கள் லாக் இன் செய்வதை தடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களுக்கு 32 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெங்களூரு காவல் நிலையத்தில் வீட்டு பணியாளர் கொல்லப்பட்ட வழக்கு: 4 காவலர்களை குற்றவாளியாக அறிவித்தது நீதிமன்றம் https://ift.tt/j1XFWoT

படம்
பெங்களூரு: பெங்​களூரு​வில் கடந்த 2016-ம் ஆண்டு மகேந்திர சிங் (42) என்பவர் அவர் பணியாற்றிய வீட்​டில் ரூ.3.5 லட்சம் திருடியதாக ஜீவன் பீமாநகர் போலீ​ஸாரால் கைது செய்​யப்​ப‌ட்​டார். அவரை போலீ​ஸார் காவல் நிலை​யத்​தில் வைத்து கடுமையாக தாக்​கிய​தால் அவர் அங்கேயே உயிரிழந்​தார். இதுதொடர்பான வழக்கு பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றத்​தில் கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்​றது. இந்த வழக்​கில் நீதி​மன்றம் நேற்று பிறப்​பித்த உத்தர​வில் கூறியிருப்பதாவது: மகேந்திர சிங் வழக்​கில் ஜீவன் பீமா நகர் காவல் நிலை​யத்​தின் தலைமை காவலர் அஜாஸ் கான், ​காவலர்கள் கேசவ்மூர்த்தி, மோகன் ராம் மற்றும் சிதப்பா பொம்​மனஹள்ளி ஆகியோர் மீதான கொலை குற்​றச்​சாட்டு நிரூபிக்​கப்​பட்​டு உள்​ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்தம்: பின்னணியும் தாக்கமும் என்ன?

படம்
இஸ்ரேல் - லெபனான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததுள்ளது. இதன் பின்னணி, தாக்கம் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம். பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இஸ்ரேலுக்கும் கடந்த ஆண்டு அக்டோபரில் போர் ஏற்பட்டது. இந்தப் போரில் ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சி அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் இதுவரை சுமார் 3,750 பேர் உயிரிழந்துள்ளனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மேலும், இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரசியலமைப்பை பாதுகாப்போம் பிரச்சாரம்: ராகுல் காந்தி தொடங்கினார் https://ift.tt/MmkRXlp

படம்
அரசியலமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பை பாதுகாப்போம் என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி நேற்று தொடங்கியது. அரசியலமைப்பு சட்ட 75-வது ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசியலமைப்பை பாதுகாப்போம் என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. ஜனவரி 26 வரை 2 மாதங்களுக்கு இப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மெக்சிகோ, சீன பொருட்களின் இறக்குமதிக்கு கூடுதல் வரி: புதிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டம்

படம்
மெக்சிகோ, சீனா, கனடா நாட்டிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்க டொனால்டு டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் அடுத்த அதிபராக வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த நிலையில், மெக்சிகோ மற்றும் கனடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தலா 25 சதவீதமும், சீனாவின் இறக்குமதிக்கு 10 சதவீதமும் கூடுதல் வரி விதிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உத்தர பிரதேச கலவரத்தில் உயிரிழப்பு 5 ஆக உயர்வு: சமாஜ்வாதி எம்.பி., எம்எல்ஏ மகன் மீது வழக்கு பதிவு https://ift.tt/HGkKsOu

படம்
உத்தர பிரதேசத்தில் நடந்த கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக சமாஜ்வாதி எம்.பி. மற்றும் எம்எல்ஏ மகன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் கடந்த 19-ம் தேதி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “சம்பல் மாவட்டம் சந்தவுசி நகரில் ஹரிஹர் கோயில் இருந்தது. முகலாயர் காலத்தில் இந்தக் கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு ஷாஹி ஜமா மசூதி கட்டப்பட்டது. இதுகுறித்து ஆய்வு நடத்த வேண்டும்” என கோரியிருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவின் வாக்கு எண்ணிக்கை நடைமுறைக்கு எலான் மஸ்க் பாராட்டு https://ift.tt/x8CHnKR

படம்
இந்தியாவின் வாக்கு எண்ணிக்கை நடைமுறையை தொழிலதிபர் எலான் மஸ்க் பாராட்டி உள்ளார். அதேநேரம் அமெரிக்க தேர்தல் முறை மீது அதிருப்தி தெரிவித்துள்ளார். ‘இந்தியா 64 கோடி வாக்குகளை ஒரே நாளில் எண்ணி முடித்தது எப்படி’ என்ற ஒரு ஊடக செய்தித் தலைப்பின் ஸ்க்ரீன்ஷாட்டை ஒருவர் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை நேற்று டேக் செய்துள்ள டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க், “இந்தியா 64 கோடி வாக்குகளை ஒரே நாளில் எண்ணி முடித்தது. கலிபோர்னியாவில் வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடர்கிறது” என பதிவிட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘டிஜிட்டல் அரெஸ்ட்’ சூழ்ச்சியில் சிக்கிவிடக் கூடாது: பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை https://ift.tt/ACFkT3V

படம்
சட்டத்தில் 'டிஜிட்டல் அரெஸ்ட்' என்பதே கிடையாது. இந்த சூழ்ச்சியில் யாரும் சிக்கி கொள்ளக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இதன்படி 116-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“ஆசி பெற வருகிறேன் அம்மா” - தாயிடம் மகாராஷ்டிர துணை முதல்வர் பட்னாவிஸ் உருக்கம் https://ift.tt/cZvmAn7

படம்
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. பாஜக தேர்தல் பிரச்சாரத்துக்கு தலைமை வகித்த துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் பட்னாவிஸை செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். தேர்தல் வெற்றியின் காரணமாக அவரது செல்போன் நேற்று முழுவதும் ஒலித்து கொண்டே இருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகாராஷ்டிர பேரவைத் தேர்தல்: மோசமான தோல்வியைச் சந்தித்த சரத் பவார் கட்சி https://ift.tt/gyLz1im

படம்
மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார்) மிக மோசமான தோல்வியைச் சந்தித்து உள்ளது. மிக இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 1978-ல் மகாராஷ்டிர மாநில முதல்வரானவர் சரத் பவார். இதன்மூலம் மகாராஷ்டிராவின் இளம் முதல்வர் (38 வயதில் பதவி) என்ற பெருமையை அவர் பெற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வளர்ச்சி, சிறந்த நிர்வாகத்தால் மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி: பிரதமர் மோடி பெருமிதம் https://ift.tt/sXnhIYq

படம்
புதுடெல்லி: மகாராஷ்டிராவில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் சிறந்த நிர்வாகத்தால் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இங்கு வளர்ச்சியும், சிறந்த நிர்வாகமும் வென்றிருக்கிறது. ஒன்றுபட்டால், நாம் இன்னும் உயர்வோம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லிக்குள் லாரிகள் நுழைவதை தடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/imCxUl3

படம்
புதுடெல்லி: தலைநகர் டெல்லி கடுமையான காற்று மாசால் திணறி வருகிறது. இந்த நிலையில், டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியை சுற்றியுள்ள மாநிலங்களில், மாசு கட்டுப்பாட்டுக்கான "கிராப்" 4 விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்க உச்ச நீதிமன்றம் நவம்பர் 18-ம் தேதி உத்தரவிட்டது. எக்காரணத்தைக் கொண்டும் மறு உத்தரவு வரும் வரை இந்த கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடாது எனவும் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கட்டுப்பாடுகளை மீறி டெல்லி நகருக்குள் லாரிகள் நுழைவதாக புகார் எழுந்தது. இது தொடர்பான விசாரணை நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி நகருக்குள் லாரி அத்துமீறி நுழைவது குறித்து டெல்லி அரசிடம் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அப்போது, டெல்லி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், லாரிகள் நுழைவதற்கான பிரத்யேகமான 13 வழிகள் உட்பட, 113 நுழைவு வாயில்கள் இருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் அமர்விடம் தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India ...

தீவிரவாதிகள் ஊடுருவல் வழக்கு தொடர்பாக ஜம்முவில் 9 இடங்களில் என்ஐஏ சோதனை https://ift.tt/fUIpBsT

படம்
தீவிரவாதிகள் ஊடுருவல் வழக்குகள் தொடர்பாக ஜம்மு பிராந்தியத்தில் 9 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, அவற்றை என்ஐஏ விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக ஜம்மு பிராந்தியத்தில் ரியாசி, உதம்பூர், ராம்பன், தோடா, கிஸ்துவார் உள்ளிட்ட 9 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வக்பு மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின்​ பதவிக்காலத்தை நீட்டிக்க கோரிக்கை https://ift.tt/aLesG7i

படம்
புதுடெல்லி: வக்பு திருத்த மசோதா மீதான நாடாளு​மன்ற கூட்டுக்​குழு​வின் (ஜேபிசி) ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்​றது. அப்போது இதுதான் கடைசி கூட்டம் என்று ஜேபிசி தலைவரும் பாஜக உறுப்​பினருமான ஜெகதாம்​பிகா பால் தெரி​வித்​தார். இதற்கு இக்குழு​வில் இடம்​பெற்றுள்ள எதிர்க்​கட்சி உறுப்​பினர்கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்து போராட்​டத்​தில் ஈடுபட்​டனர். அப்போது ஜேபிசி பதவிக்​காலத்தை நீட்​டிக்க வேண்​டும் என வலியுறுத்​தினர். Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கயானா, டோமினிகா, பார்படோஸ் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உயரிய விருது

படம்
பிரதமர் நரேந்திர மோடிக்கு கயானா, டோமினிகா, பார்படோஸ் நாடுகளின் உயரிய விருதுகள் நேற்று வழங்கப்பட்டன. கரீபியன் பகுதி தீவுகளில் ஒன்றான கயானாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அரசு முறை பயணமாக சென்றார். அந்த நாட்டின் மக்கள் தொகை 8.14 லட்சம் ஆகும். இதில் தமிழர்கள் உட்பட இந்திய வம்சாவளியினர் 3.20 லட்சம் பேர் உள்ளனர். அதாவது கயானாவின் மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர். ஆவர். அந்த நாட்டின் தற்போதைய அதிபர் முகமது இர்ஃபான் அலி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர் உத்தர பிரதேசத்தை பூர்விகமாகக் கொண்டவர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீன பாதுகாப்பு அமைச்சருடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை https://ift.tt/jYRnMiS

படம்
ஆசியான் மாநாட்டில் பங்கேற்க லாவோஸ் சென்றுள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று சீன வெளியுறவு அமைச்சருடன் டோங் ஜுனுடன் பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்தினார். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியானில் புரூனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன. சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 8 நாடுகள் இதன் சிறப்பு உறுப்பினர்களான (பேச்சுவார்த்தை கூட்டாளிகள்) உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியா- கயானா இடையேயான உறவை மேம்படுத்துவோம்: பிரதமர் மோடி நம்பிக்கை

படம்
இந்தியா, கயானா இடையேயான உறவை மேம்படுத்துவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய 3 நாடுகளுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நைஜீரியா அதிபர் போலா அகமது தினுபு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுக்கு அரசுமுறை பயணமாக சென்றார். இதைத் தொடர்ந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு நைஜீரியா சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்திய வசீகரப் பெண் போட்டியில் பட்டம் வென்றார் 22 வயது சட்டக்கல்லூரி மாணவி https://ift.tt/H1AkspZ

படம்
புனேயைச் சேர்ந்த 22 வயது சட்ட மாணவி இவ்வாண்டுக்கான இந்திய வசீகரப் பட்டத்தை வென்றுள்ளார். சிவாங்கி தேசாய் மகாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்தவர். தற்போது புனேயில் உள்ள இந்திய சட்டப் பள்ளியில் இறுதி ஆண்டு பயின்று வருகிறார். மாடலிங்கில் ஆர்வமுள்ள அவர் இந்திய வசீகரப் போட்டியில் கலந்துகொண்டார். இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான இந்திய வசீகரப் பெண் விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

6 அமெரிக்க ஏவுகணைகளை வீசி உக்ரைன் தாக்குதல் - ரஷ்யா குற்றச்சாட்டு

படம்
மாஸ்கோ: நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய அமெரிக்க ஏவுகணைகளைப் பயன்படுத்திக் கொள்ள உக்ரைனுக்கு பைடன் நிர்வாகம் அனுமதி வழங்கியதையடுத்து, ஆறு ஏவுகணைகளை வீசி உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து ரஷ்ய பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவின் ப்ரையான்ஸ்க் பகுதியில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ATACMS ரக ஏவுகணை வீசி உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு ஏவுகணைகளையும் ரஷ்ய ராணுவம் வீழ்த்தியதாகவும், வானில் வெடித்துச் சிதறிய ஏவுகணைகள் குறிப்பிடப்படாத ராணுவ முகாம்கள் அருகே விழுந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஸோமாட்டோ நிறுவனத்தில் பணிபுரியும் குஜராத் பெண்: குழந்தையுடன் பைக்கில் சென்று உணவு விநியோகம் https://ift.tt/k2WQlS8

படம்
அகமதாபாத்: குஜராத்தின் ராஜ்கோட் நகரைச் சேர்ந்த ஸோமாட்டோ பெண் ஊழியர் ஒருவர் தனது குழந்தையை பைக் முன்பு அமரவைத்துஉணவு டெலிவரி செய்யும் வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலானது. ராஜ்கோட் நகரைச் சேர்ந்த அந்த பெண் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்தவர். கல்யாணத்துக்கு பிறகு குடும்ப கஷ்டம் காரணமாக அந்தப் பெண் வேலைக்குசெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், குழந்தையை வைத்துக்கொண்டு அது சாத்தியமில்லை என்பதை உணர்ந்த அவர் ஸோமாட்டோ வேலையை தேர்வு செய்தார். இதற்கு, அவர் இந்த வேலையை குழந்தையுடன் பார்க்கலாம் என்பதுதான். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகம், புதுவை சுற்றுலாத்துறைக்கு ஒதுக்கிய திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் ரத்து: அறங்காவலர் குழுவில் தீர்மானம் https://ift.tt/hcLoj34

படம்
திருமலை: பல்வேறு முறைகேடுகள் நடப்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டதால், தமிழகம், புதுவை உட்பட மேலும் பல்வேறு மாநில சுற்றுலா துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் முறையை ரத்து செய்வதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு கூட்டம் அதன் தலைவர் பிஆர் நாயுடு தலைமையில் முதன்முறையாக திங்கள்கிழமை திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நடந்தது. சுமார் 80 அம்சங்கள் குறித்து இதில் 3 மணி நேரம் வரை விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர், இதில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் குறித்து அறங்காவலர் பிஆர் நாயுடு, தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: செயற்கை நுண்ணறிவு அதாவது ஏஐ தொழில்நுட்பம் உதவியுடன் சுவாமியை தரிசனம் செய்யும் வரிசையில், பக்தர்கள் அதிக நேரம் இருப்பதை கண்டறிந்து, அவர்களை 2 அல்லது 3 மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu...

டைட்டானிக் மீட்பு கேப்டனுக்கு பரிசாக வழங்கப்பட்ட பாக்கெட் கடிகாரம் ரூ.16 கோடிக்கு ஏலம்

படம்
லண்டன்: டைட்டானிக் விபத்தில் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய கேப்டன் ஆர்தர் ரோஸ்ட்ரானுக்கு பரிசாக வழங்கப்பட்ட பாக்கெட் கடிகாரம் ரூ.16 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. டைட்டானிக் நினைவுச் சின்னங்கள் ஏலம் விடப்பட்டதில் மிக அதிக தொகைக்கு வாங்கப்பட்ட கலைப்பொருள் என்ற பெருமையை இந்த பாக்கெட் கடிகாரம் பெற்றுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்தில் காலியாக உள்ள 2,553 மருத்துவ பணியிடங்களுக்கு ஜன. 27-ல் ஆன்லைன் தேர்வு https://ift.tt/ulMze2s

படம்
திருநெல்வேலி: தமிழகத்தில் காலியாக உள்ள 2,553 மருத்துவப் பணியிடங்களுக்கு ஜனவரி 27-ம் தேதி ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்திலேயே முதல்முறையாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர்கள் ,செவிலியர்கள் மற்றும் பெண் பணியாளர்கள் பயன்படுத்தும் வகையில் `பிங்க் சோன்' எனப்படும் 5 தனி ஓய்வறைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, நெல்லையில் ரூ. 72 கோடியில் 450 படுக்கைகள், 10 அறுவைசிகிச்சை அரங்குகள் கட்டும் பணிகள் வரும் மார்ச் மாதத்துக்குள் முடிவடையும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

370-வது பிரிவு குறித்த கார்கே கருத்து: தேசிய மாநாடு கட்சிக்கு மெகபூபா கேள்வி https://ift.tt/olXbhHc

படம்
ஸ்ரீநகர்: மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய மாநாடு கட்சியின் உமர் அப்துல்லா தலைமையிலான அரசு, ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு அதில் கண்டனம் தெரிவிக்கப்படவில்லை. இந்த தீர்மானம் மாநில அந்தஸ்துக்கானது, 370-வது பிரிவுக்கானது அல்ல என்று காங்கிரஸ் கூறியுள்ளது. மேலும் 370-வது பிரிவை மீட்டெடுப்பது குறித்து காங்கிரஸ் ஒருபோதும் பேசவில்லை என்று அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜு கார்கே கூறியுள்ளார். இது மக்கள் மனதில் பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுகுறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு மெகபூபா முப்தி கூறினார். Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்காவில் அரசு வேலை குறைக்கப்படும்: ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய நிர்வாகி விவேக் ராமசாமி தகவல்

படம்
வாஷிங்டன் : அமெரிக்காவில் அரசு வேலை பெருமளவில் குறைக்கப்படும் என, ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய நிர்வாகி விவேக் ராமசாமி கூறியுள்ளார். அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். அவரது பிரச்சார குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்கள் எல்லாம் முக்கிய பதவிகளில் பணியமர்த்தப்படவுள்ளனர். அமெரிக்க அரசு நிர்வாகத்தை மேம்படுத்த அரசு திறன் துறை உருவாக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இத்துறைக்கு பிரபல தொழிலதிபர்கள் எலான் மஸ்க், இந்திய அமெரிக்கர் விவேக் ராமசாமி ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

50 சதவீத மாணவர்களுக்கு கல்வி வழங்க இந்தியாவில் 2,500 பல்கலைக்கழகங்கள் வேண்டும்: நிதி ஆயோக் சிஇஓ தகவல் https://ift.tt/BKw2Wi9

படம்
ஹைதராபாத் : “இந்தியாவில் 50 சதவீத மாணவர்கள் கல்லூரி படிப்பில் சேரவேண்டுமென்றால் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை இருமடங்கு உயர வேண்டும்” என்று நிதி ஆயோக் சிஇஓ சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பல்கலைக்கழக எண்ணிக்கை, டிஜிட்டல் கட்டமைப்பு குறித்து நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) சுப்ரமணியம் நேற்று முன்தினம் பேசுகையில், “இந்தியாவில் தற்போது 1,200 பல்கலைக்கழகங்கள் உள்ளன. 4 கோடி மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை கல்லூரி படிக்கும் வயதினரில் 29 சதவீதம் மட்டுமே. 50 சதவீத பேர் கல்லூரி படிப்பில் இணைய வேண்டுமென்றால், நாட்டின் பல்கலைக்கழக எண்ணிக்கை 2,500 ஆக உயர வேண்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இளைய சகோதரர் மறைவு https://ift.tt/98Xn7aZ

படம்
அமராவதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இளைய சகோதரரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராமமூர்த்தி நாயுடு காலமானார். அவருக்கு வயது 72. ராமமூர்த்தி நாயுடு மாரடைப்பு காரணமாக மூன்று நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (நவ.16) மதியம் அவர் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜார்க்கண்டில் கார் டயரில் மறைத்து ரூ.50 லட்சம் கடத்தல்: வருமான வரி அதிகாரிகள் பறிமுதல் https://ift.tt/fGYEaC9

படம்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 81 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடத்தப்படுகிறது. நவம்பர் 13-ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தது. 2-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20-ல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஓட்டுக்கு பணப்படுவாடா செய்யப்படுவதைத் தடுக்க தேர்தல் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கிரிஹத் மாவட்டத்தில் ஜார்க்கண்ட் - பிஹார் எல்லையில் வருமான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த வாகனம் ஒன்றை சோதனை செய்ததில், அந்த வாகனத்தில் உபரியாக இருந்த டயரில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டயரை கிழித்து அந்தப் பணக்கட்டுகளை அதிகாரிகள் வெளியே எடுத்தனர். 11 கட்டுகளில் மொத்தம் ரூ.50லட்சம் இருந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத்திய அமைச்சர் குமாரசாமி, மாநில அமைச்சர் ஜமீர் இடையே உருவ கேலி மோதல் https://ift.tt/1GI2cNZ

படம்
பெங்களூரு: கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடந்த சென்னபட்டணா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யோகேஷ்வரை ஆதரித்து அம்மாநில அமைச்சர் ஜமீர் அகமது கான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், மத்திய அமைச்சர் குமாரசாமியை ‘கருப்பன்' என விமர்சித்தார். இதற்கு பாஜகவினரும் மஜதவினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஜமீர் அகமது கான் மன்னிப்பு கோரினார். மேலும் குமாரசாமி தன்னை, ‘‘குள்ளன்'' என உருவக்கேலி செய்ததாக குற்றம்சாட்டினார். இதனால் காங்கிரஸார் குமாரசாமியை கடுமையாக விமர்சித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தீபாவளி விருந்தில் அசைவம், மது: இந்துக்களிடம் மன்னிப்புக் கோரியது இங்கிலாந்து பிரதமர் அலுவலகம்

படம்
லண்டன்: தீபாவளி விருந்தில் அசைவம் மற்றும் மது வகைகள் பரிமாறப்பட்டது குறித்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி ஒருவர் அதிருப்தி தெரிவித்ததையடுத்து இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் மன்னிப்புக் கோரியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியையொட்டி இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த அக்.29 அன்று லண்டனில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் தீபாவளி சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விருந்தில் அசைவம் மற்றும் மதுவகைகள் பரிமாறப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கிரிமினல்களுக்கு எதிரான நடவடிக்கை: டெல்லியில் 1,224 பேர் சிக்கினர் https://ift.tt/JH941G7

படம்
புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் உரிமம் இன்றி துப்பாக்கி வைத்திருத்தல், திருட்டு, சட்டவிரோத மதுபானம், போதைப் பொருள் பயன்பாடு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக ‘ஆபரேஷன் கவச்’ என்ற பெயரில் டெல்லி போலீஸார் 24 மணி நேர சோதனை நடத்தினர். டெல்லியில் 874 இடங்களில் நவம்பர் 12 முதல் 13 வரை டெல்லி போலீஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். இதில் 1,224 பேர் சிக்கினர். இவர்களில் 700-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கிரிமினல்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக டெல்லி போலீஸார் அவ்வப்போது இந்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையின் சிறப்பு பிரிவு மற்றும் குற்றப் பிரிவுடன் இணைந்து உள்ளூர் போலீஸார் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காற்று மாசு அதிகரிப்பால் டெல்லியில் கடும் பனி மூட்டம்: 300 விமானங்கள் தாமதம் https://ift.tt/i4AmBna

படம்
புதுடெல்லி: டெல்லியில் கடந்த 2 நாட்களாக காற்று மாசு மிக அதிகமாக இருந்தது. நேற்று மிக மோசமான நிலைக்கு சென்று கடும் பனிமூட்டம் நிலவியது. டெல்லியில் 39 காற்று மாசு கண்காணிப்பு மையங்கள் உள்ளன. இவற்றில் 32 மையங்களில் காற்று மாசு தரக் குறியீடு 400-க்கு மேல் பதிவாகியது. இது மிக மோசமான காற்று மாசு நிலை. நேற்று முன்தினம் 334-ஆக இருந்த காற்று மாசு அளவு நேற்று காலை 9 மணியளவில் 428 ஆக அதிகரித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.100 கோடி மோசடி வழக்கு: அமலாக்கத் துறை அதிகாரிகள் 23 இடங்களில் சோதனை https://ift.tt/MtR8Ehk

படம்
மும்பை: சாமானிய மக்களின் ஆவணங்களைக் கொண்டு வங்கிக் கணக்குத் தொடங்கி ரூ.100 கோடி பண மோசடியில் ஈடுபட்டதாக மாலேகானைச் சேர்ந்த சிராஜ் அகமது ஹாரூன் என்பவர் மீது கடந்த வாரம் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் அவர் தொடர்புடைய 23 இடங்களில் நேற்று அமலாக்கத் துறை சோதனையில் ஈடுபட்டது. சிராஜ் அகமது டீ மற்றும் குளிர்பானம் விற்பனை உள்ளிட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவர். இவர் சாமானிய மக்களின் பான் மற்றும் ஆதார் விவரங்களைப் பெற்று போலியாக வங்கிக் கணக்குத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் ரூ.100 கோடி அளவில் பணம் மோசடி செய்துள்ளதாக இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடும் காற்று மாசு எதிரொலி: ஆன்லைன் வகுப்புக்கு மாறும் டெல்லி பள்ளிகள் https://ift.tt/Q6POfgu

படம்
புதுடெல்லி: டெல்லியின் காற்று மாசு அபாயகட்டத்தை எட்டியதை தொடர்ந்து தரப்படுத்தப்பட்ட செயல் திட்டம் நிலை 3 (GRAP III)-ன் கீழ் மாசுக்கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள டெல்லி முதல்வர் அதிஷி, “அதிகரித்து வரும் காற்று மாசு அளவு காரணமாக, டெல்லியில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளும் மறு உத்தரவு வரும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறுகிறது” என்று தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி 16 முதல் 21-ம் தேதி வரை நைஜீரியா, பிரேசில், கயானாவில் சுற்றுப் பயணம்: ரியோ டி ஜெனிரோ ஜி20 உச்சி மாநாட்டிலும் பங்கேற்கிறார் https://ift.tt/O1ZGUgz

படம்
புதுடெல்லி: நைஜீரியா அதிபர் போலா அகமது தினுபு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 16-ம் தேதி அந்நாட்டுக்கு அரசுமுறை பயணமாக செல்கிறார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு நைஜீரியா செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை இவருக்கு கிடைக்கும். இந்த பயணத்தின் போது அங்கு வசிக்கும் இந்தியர்களை அவர் சந்தித்து பேச உள்ளார். 17-ம் தேதி அந்நாட்டு அதிபர் போலா அகமது தினுபுவை சந்தித்து இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேசவுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

70 வயது முதியவர்களுக்கான ஆயுஷ்மான் காப்பீடுக்கு 5 லட்சம் பேர் முன்பதிவு https://ift.tt/1M4iUIP

படம்
புதுடெல்லி: 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்ததது. இந்த காப்பீட்டு அட்டை வேண்டி இதுவரை 5 லட்சம் பேர் தங்களது விவரங்களை வலைதளத்தில் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து அதிகபட்சமாக 1.66 லட்சம் முதியவர்கள் ஆயுஷ்மான் காப்பீடு அட்டை கோரி விண்ணப்பித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கேரளா உள்ளது. இம்மாநிலத்திலிருந்து 1.28 லட்சம் பேர் காப்பீடு அட்டை கோரி பதிவு செய்துள்ளனர். இந்த மாநிலங்களைத் தொடரந்து, உத்தர பிரதேசத்திலிருந்து 69,044, குஜராத்திலிருந்து 25,491 முதியவர்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஏஐ தொழில்நுட்பத்துக்கு மாறுவதில் இந்தியா முன்னிலை: ஆய்வில் தகவல் https://ift.tt/TpBWXeS

படம்
செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்துக்கு மாறுவதில் இந்தியா உலகளவில் முன்னிலையில் உள்ளதாக போஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் (பிசிஜி) புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ஏஐ தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொண்டு செயல்படுத்துவதில் சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முன்னிலையில் உள்ளது. குறிப்பாக, பின்டெக், சாப்ட்வேர், வங்கி ஆகிய துறைகளின் செயல்பாடுகளில் ஏஐ பயன்பாடு அதிகரித்துள்ளது. சுமார் 30 சதவீத இந்திய நிறுவனங்கள் இதுபோன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு மாறுவதன் மூலம் தங்களின் மதிப்பை அதிகரி்த்துக் கொண்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீனாவில் விளையாட்டு மையத்தில் உடற்பயிற்சி செய்தவர்கள் மீது கார் மோதி 35 பேர் உயிரிழப்பு, 45 பேர் படுகாயம்

படம்
சீனாவில் நேற்றுமுன்தினம் விளையாட்டு மையத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த மக்கள் மீது கார் மோதியதில் 35 பேர் உயிரிழந்தனர். 43 பேர் படுகாயமடைந்தனர். சீனாவில் ஜூஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் மக்கள் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிவேகமாக வந்த கார் ஒன்று உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தவர்கள் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றது. திங்கள் கிழமை இரவு 7 மணி போல் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

14 ஆண்டுகளுக்கு முன்பு உதவிய மத்திய பிரதேச காய்கறி வியாபாரிக்கு டிஎஸ்பி பாராட்டு https://ift.tt/ro1jspz

படம்
மத்தியப் பிரதேசத்தில் 14 ஆண்டுகளுக்கு முன் உதவிய காய்கறி வியாபாரியை, நடுரோட்டில் அடையாளம் கண்ட டிஎஸ்பி ஒருவர் அவரை கட்டியணைத்து நட்பு பாராட்டினார். மத்தியப் பிரதேசம் போபால் நகரில் டிஎஸ்டியாக பணியாற்றுபவர் சந்தோஷ் படேல். இவர் கடந்த சனிக்கிழமை தனது ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் சென்ற நபருக்கு உதட்டில் தழும்பு ஒன்று இருந்தது. அதைப் பார்த்ததும், தான் பொறியியல் கல்லூரி படிக்கும் போது பழகிய காய்கறி வியாபாரி சல்மான் கான் என்பவரின் நினைவு வந்தது. உதட்டு தழும்பை வைத்து அவர் சல்மான் கான் என்பதை உறுதி செய்த சந்தோஷ் படேல், தனது ஜீப்பை விட்டு இறங்கி அந்த நபரை பெயர் சொல்லி அழைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீனியரை விமர்சித்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கேரள ஐஏஎஸ் அதிகாரி: யார் இந்த ‘கலெக்டர் ப்ரோ’? https://ift.tt/mf7jNh0

படம்
கொச்சி: கேரளாவில் ‘கலெக்டர் ப்ரோ’ என்று சமூக வலைதளங்களில் பிரபலமாக அழைக்கப்படும் ஐஏஎஸ் அதிகாரி பிரசாந்த் மற்றொரு மூத்த ஐஏஎஸ் அதிகாரியை ஆன்லைனில் கிண்டல் செய்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கேரள அரசின் விவசாயத் துறை சிறப்பு செயலராக இருப்பவர் என்.பிரசாந்த் ஐஏஎஸ். 2007 பேட்சை சேர்ந்த பிரசாந்த், கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் 2015ஆம் ஆண்டு கோழிக்கோடு மாவட்ட ஆட்சியராக இருந்தபோது சமூக வலைதளங்களில் தன்னுடைய செயல்பாடுகளால் மிகவும் பிரபலமானார். இளைஞர்கள் பலரும் அவரை அன்போடும் உரிமையோடும் ‘கலெக்டர் ப்ரோ’ என்று அழைத்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்காவில் அடைக்கலம் கோரும் இந்தியர்கள் 855% உயர்வு

படம்
அமெரிக்காவில் அடைக்கலம் கோரும் இந்தியர்கள் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 2021-ம் நிதியாண்டில் அமெரிக்க அரசிடம் 4,330 இந்தியர்கள் அடைக்கலம் கோரி விண்ணப்பம் செய்த நிலையில் 2023-ம் நிதியாண்டில் இது 41,330 ஆக, அதாவது 855 சதவீதம் (எட்டைரை மடங்குக்கு மேல்) உயர்ந்துள்ளதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவர்களில் ஏறக்குறைய பாதி பேர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது எப்படியாவது அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்ற இந்தியர்களின் தீராத ஆவலை காட்டுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மும்பை பிராந்தியத்தில் கடந்த 17 ஆண்டுகளில் குடிசைகள் பகுதி 7.3% ஆக குறைந்தது https://ift.tt/qaQAwWv

படம்
மும்பை: மும்பை பிராந்தியத்தில் கடந்த 17 ஆண்டுகளில் குடிசைகள் உள்ள நிலப் பகுதி 8-லிருந்து 7.3% ஆக குறைந்துள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. ஜான் ப்ரீசென் தலைமையிலான குழுவினர் மும்பை பிராந்தியத்தில் உள்ள குடிசைப் பகுதிகள் குறித்து ஒரு ஆய்வு நடத்தினர். உயர் தெளிவுத் திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்கள் மற்றும் பிற தரவுகளை இந்த ஆய்வுக்காக அவர்கள் பயன்படுத்தினர். கடந்த 2005 ஆண்டுக்கும் 2022-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகள் வசிக்கும் குடிசைப் பகுதிகள் அமைந்துள்ள நிலப்பரப்பில் ஏற்பட்ட மாற்றங்களை ஒரு வரைபடமாக்கினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணிப்பூரில் பெண்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு: ஒரு உயிரிழப்பு https://ift.tt/jmZtpwY

படம்
குவாஹாட்டி: மணிப்பூரில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். மணிப்பூர் மாநிலம் விஷ்ணுபூர் மாவட்டம் சைடோன் கிராமத்தில் உள்ள வயலில் சுமார் 20 பெண்கள் நேற்று முன்தினம் நெல் அறுவடை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அந்த பெண்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றதாகக் கூறப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்