இடுகைகள்

பிப்ரவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவருவது வரவேற்கக்கூடியது: தலைமைப் பொருளாதார ஆலோசகர் கருத்து https://ift.tt/3kyU3ZQ

படம்
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவருவதை நான் வரவேற்கிறேன் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்பிரமணியன் கருத்து தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து பெட்ரோல், டீசலை உயர்த்தி வருகின்றன. கடந்த மாதத்தின் இறுதியில் தொடர்ந்து 12 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால், பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைக் கடந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குறையவில்லை கரோனா: புதிதாக 15,510 பேருக்கு தொற்று https://ift.tt/3dWJGxO

படம்
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,510 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,96,731 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நான் புதிய கட்சியைத் தொடங்கப் போவதில்லை: ட்ரம்ப்

படம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற டொனால்ட் ட்ரம்ப், தான் புதிய கட்சியைத் தொடங்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து புளோரிடாவில் நடந்த அரசியல் நிகழ்வு ஒன்றில் ட்ரம்ப் பேசும்போது, “நீங்கள் என்னைத் தேடினீர்களா? நான் புதுக் கட்சியைத் தொடங்கப் போவதில்லை. குடியரசுக் கட்சிக்கு மாற்றாக நான் எந்தக் கட்சியையும் தொடங்கப் போவதில்லை. நாம் இன்று கூடியிருப்பது நமது எதிர்காலத்தையும், நமது நாட்டின் எதிர்காலத்தையும், நமது கட்சியின் எதிர்காலத்தையும் பற்றிப் பேசுவதற்குத்தான். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மியான்மரில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் தாக்குதல்: 18 பேர் பலி

படம்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 18 பேர் பலியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட தரப்பில், “மியான்மரில் ஞாயிற்றுக்கிழமை யாங்கூனில் பெரிய அளவிலான போராட்டத்தை நடத்தினர். இதில் போராட்டக்காரர்கள் ராணுவத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 18 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி என்றுமே தனது சுயத்தை மறைத்ததில்லை: கசிந்துருகிய குலாம் நபி ஆசாத்; கலக்கத்தில் காங்கிரஸ் https://ift.tt/3qa6ug0

படம்
பிரதமர் நரேந்திர மோடி என்றைக்குமே தனது சுயத்தை மறைத்ததில்லை. அவருடைய இந்தப் பண்பை நான் பாராட்டுகிறேன் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் பேசியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட குலாம் நபி ஆசாத் இவ்வாறு பேசினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி பெறுக: கரோனா தடுப்பூசி முதல் டோஸ் பெற்றுக் கொண்டபின் பிரதமர் மோடி அழைப்பு https://ift.tt/3bQ0pzR

படம்
பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 1 ) காலையில் கரோனா தடுப்பூசி முதல் டோஸை பெற்றுக் கொண்டார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் அவருக்கு கரோனா தடுப்பூசியை செலுத்தினர். பின்னர், இது குறித்து பிரதமர் மோடி, "கோவிட் 19 தொற்றுக்கு எதிரான முதல் தவணை தடுப்பூசியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நான் பெற்றுக்கொண்டேன். கரோனாவுக்கு எதிரான சர்வதேச அளவிலான போராட்டத்தை வலுப்படுத்தும் வகையில் எவ்வளவு சீக்கிரம் நமது மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் செயல்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கரோனா தடுப்பூசியைப் பெறத் தகுதியானவர்கள் அனைவரும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இத்தேசத்தை கரோனா இல்லாத தேசமாக உருவாக்குவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராமர் கோயில் கட்டுவதற்கு குவிந்தது ரூ.2,100 கோடி நிதி https://ift.tt/3q2MoUS

படம்
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கோயில் கட்டுவதற்காக நிதி திரட்டும் பணியில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை ஈடுபட்டு வருகிறது. நாடு முழுவதும் நன்கொடை வசூலிக்கப்பட்டது. ராமர் கோயில் கட்டும் திருப் பணிக்கு நன்கொடை திரட்டும் பணி கடந்த ஜனவரி 15-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 27-ம் தேதி வரை நன்கொடை திரட்ட அறக்கட்டளை முடிவு செய்திருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விவசாயிகள் போராட்ட தலைவர் டிகைத்தின் உரையை 4 மொழியில் வெளியிட திட்டம் https://ift.tt/2NH9XWa

படம்
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அமைதியான இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதில் மிகப் பெரிய வன்முறை வெடித்தது. செங்கோட்டையில் அத்துமீறி சீக்கியர்களின் மதக்கொடி ஏற்றப்பட்டது. இதனால் போராட்டம் திசை திரும்பியதால் விவசாயிகள் வீடு திரும்பத் தொடங்கினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருமண தோஷங்களை நீக்குவதாக கூறியதால் மோசடி; கும்பலிடம் ரூ.97 லட்சத்தை பறிகொடுத்த 52 வயது நபர்: குஜராத் போலீஸ் விசாரணை https://ift.tt/2Mz8kJv

படம்
குஜராத் மாநிலம் வதோதராவின் புறநகர் பகுதியான சுபன்பூராவைச் சேர்ந்தவர் மதன் குமார். தொழிலாளர் நலத்துறையில் பணிபுரிந்து வரும் இவருக்கு, 52 வயதை கடந்தபோதிலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் பல ஆண்டுகளாக மன உளைச்சலில் இருந்து வந்த அவர், திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார். இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு திருமணத்துக்கு வரன் தேடும் மேட்ரிமொனியில் தனது பெயர் உள்ளிட்ட விவரங்களை மதன் குமார் பதிவு செய்தார். இந்த சூழலில், சில வாரங்கள் கழித்து அவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அப்போது எதிர்முனையில் பேசியவர், தன்னை அயோத்தி ராமஜென்மபூமியின் ஜோதிடர் என அறிமுகப்படுத்தி இருக்கிறார். பின்னர், மதன் குமாருக்கு பல தோஷங்கள் இருப்பதாக கூறிய அந்த நபர், அவற்றை கழித்துவிட்டால் 35 வயது பெண்ணுடன் அவருக்கு திருமணம் நடக்கும் என்றும் கூறியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி கலவரத்தை நடத்தியது பாஜக: அர்விந்த் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு https://ift.tt/3b0H6Vm

படம்
குடியரசு தினத்தன்று டெல்லியில் நிகழ்ந்த கலவரத்தை பாஜகவினரே திட்டமிட்டு அரங்கேற்றியதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டினார். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு திரட்ட, உ.பி.யின் மீரட்டில் விவசாய சங்கங்கள் சார்பில் நேற்று மகா பஞ்சாயத்துக் கூட்டம் நடைபெற்றது. இதில் அர்விந்த் கேஜ்ரிவால் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த பல்வேறு நாடுகள் விருப்பம் https://ift.tt/3sEGbjk

படம்
டெல்லி பல்கலைக்கழகத்தின் 97-வது பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் பேசியதாவது: நீண்ட விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்ட பிறகுதான் புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் கல்வித் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தம் ஏற்படுவதுடன் மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, மொரீஷியஸ், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள், இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை உலகின் மிகப்பெரிய சீர்திருத்தம் என தெரிவித்துள்ளன. இதுபோன்ற கல்விக் கொள்கையை தங்கள் நாட்டிலும் அமல்படுத்த விரும்புவதாக அந்த நாடுகள் தெரிவித்துள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜெர்மனி பல்கலைக்கழகத்தில் 58 ஆண்டுகள் பழமையான தமிழ்க்கல்வி நிறுவனத்தை மார்ச் 31-ல் மூட முடிவு: தமிழக அரசு உறுதி அளித்தவாறு நிதி வழங்கப்படாததால் சிக்கல்? https://ift.tt/37YCQDU

படம்
உலகின் பல்வேறு பல்கலைக்கழகங் களில் தமிழின் வளர்ச்சிக்காக பல ஆண்டுகளாக தமிழ் போதிக்கப்படு கிறது. ஜெர்மனியிலும் கொலோன் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல், தமிழியல் ஆய்வு நிறுவனம்1963-ல் தொடங்கப்பட்டது. தமிழால் ஈர்க்கப்பட்டு அதைப் பயின்று, தமிழ் அறிஞரான க்ளவுஸ்லுட்விட் ஜெனரட் எனும் ஜெர்மானியர் இதனை நிறுவினார். தற்போது முனைவர் பட்டத்துக்கான 5 படிப்புகள் உட்பட தமிழில் இளங்கலை படிப்புகளிலும் இங்கு மாணவர்கள் பயில்கின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழ்நாட்டில் திமுக, புதுச்சேரி, அசாமில் பாஜக மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி: ஏபிபி, சி-வோட்டர் கருத்து கணிப்பில் தகவல் https://ift.tt/3r5fBjh

படம்
வரும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸும், அசாமில் பாஜகவும், கேரளாவில் இடதுசாரிகளும் ஆட்சியை தக்க வைக்கும் என ஏபிபி, சி-வோட்டர் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. அதேநேரம் தமிழ்நாட்டில் திமுகவும், புதுச்சேரியில் பாஜகவும் ஆட்சியைப் பிடிக் கும் என கருத்து கணிப்பு கூறுகிறது. அசாமில் 3 கட்டங்களா கவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவில் ஒரே கட்டமாகவும் சட்டப் பேரவைத் தேர்தல் நடை பெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி குறித்து பெருமிதம் கொள்கிறேன்: காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் புகழாரம் https://ift.tt/37SAcPZ

படம்
பிரதமர் நரேந்திர மோடி குறித்து பெருமிதம் கொள்கிறேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். கபில் சிபல், சசி தரூர், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 23 பேர், கட்சி தலைமையின் செயல்பாடு குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஜம்முவில் நேற்று முன்தினம் 23 தலைவர்களும் ஒன்றுகூடினர். அப்போது அவர்கள் கூறும்போது, "காங்கிரஸ் பலவீனமாகிவிட்டது, கட்சியை பலப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனு: மார்ச் 5-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை https://ift.tt/3r3FsYR

படம்
தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு கல்வி அரசு வேலைவாய்ப்பில் 69 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மார்ச் 5-ம்தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மோடியைவிட பெரிய எதிரிகளையெல்லாம் மக்கள் தோற்கடித்துள்ளார்கள்: ராகுல் காந்தி சாடல் https://ift.tt/2O64Le7

படம்
நாம் மிகவும் வல்லமைமிக்க எதிரிக்கு எதிராக(மோடி) போரிட்டு வருகிறோம்.ஆனால், மோடியை விட மிக்பெரிய எதிரிகளை எல்லாம் மக்கள் தோற்கடித்துள்ளார்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாடியுள்ளார். தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இரு நாட்கள் பயணமாகக் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வந்துள்ளார். தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ராகுல் காந்தி, பல்வேறு தரப்பு மக்களிடம் உரையாற்றி, குறைகளைக் கேட்டறிந்தார். அதன்பின் நெல்லைக்கு வந்த ராகுல் காந்தி, புகழ்பெற்ற நாசரேத் தேவாலயத்தில் வழிபாடு நடத்தினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் கரோனா தடுப்பூசி; 20 இணை நோய்கள் இருப்போருக்கு முன்னுரிமை: மத்திய அரசு அறிவிப்பு https://ift.tt/3kuLsY5

படம்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், இணை நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கரோனா தடுப்பூசி போடும் முகாம் நாளை (மார்ச்1) முதல் தொடங்குகிறது என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நீரிழிவு நோய்கள், கடந்த ஓராண்டாக இதயக்கோளாறு நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் உள்ளிட்ட 20 இணை நோய்கள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதுவையில் தடை செய்யப்பட்ட பல லட்சம் மதிப்பிலான போதைப் பாக்குகள் பறிமுதல்: ஓட்டுநர் கைது     https://ift.tt/3uGCdIU

படம்
புதுச்சேரியில் 60 மூட்டை போதைப் பாக்குகளைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இவற்றை ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். புதுவையில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், உரிய ரசீதுகள் இன்றி, பணம், நகை, பொருட்கள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இரவு பகலாகப் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்றிரவு பாரதி வீதியில் சோதனை நடத்தப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதுச்சேரியில் அடுத்து பாஜக ஆட்சிதான்; காங்கிரஸ் சிதைந்து வருகிறது: உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு https://ift.tt/3r1ayjS

படம்
புதுச்சேரியில் அடுத்து நடக்கும் தேர்தலில் வெற்றி பெற்று, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்தார். மத்திய உள்துறை அமித் ஷா தேர்தல் கூட்டணி மற்றும் பிரச்சாரத்துக்காகவும் ஒருநாள் பயணமாக நேற்று இரவு சென்னை வந்தடைந்தார். இன்று காலை புதுச்சேரி புறப்பட்டுச் சென்ற அமித் ஷா, காரைக்காலில் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சமூகத்தில் குறிப்பிட்ட சித்தாந்தத்தைப் பரப்பவே தேசிய கல்விக்கொள்கை அறிமுகம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு https://ift.tt/3uN20PZ

படம்
மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் எந்தவிதமான கருத்துகளையும், ஆலோசனைகளையும் கேட்காமல் தேசிய கல்விக்கொள்கையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தைப் பரப்பும் ஆயுதமாக தேசிய கல்விக்கொள்கையைப் பயன்படுத்துகிறார்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இரு நாட்கள் பயணமாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வந்துள்ளார். தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ராகுல் காந்தி, பல்வேறு தரப்பு மக்களிடம் உரையாற்றி, குறைகளைக் கேட்டறிந்தார். அதன்பின் நெல்லைக்கு வந்த ராகுல் காந்தி, புகழ்பெற்ற நாசரேத் தேவாலயத்தில் வழிபாடு நடத்தினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழ் மொழியைக் கற்க முடியாமல் போனது எனக்கு வருத்தம்: மன் கி பாத்தில் பிரதமர் மோடி பேச்சு https://ift.tt/2PkEN7p

படம்
பருவமழைக் காலம் தொடங்கும் முன், நீர்நிலைகளைச் சுத்தம் செய்யவும், மழைநீர் சேகரிக்கவும் 100 நாட்கள் பிரச்சாரம் செய்ய 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று 74-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மோடியை நினைத்து பயமில்லை; நான் படுத்தால் 30 வினாடிகளில் தூங்கிவிடுவேன்; தமிழக முதல்வர் தூங்கிவிடுவாரா?- ராகுல் காந்தி கேள்வி https://ift.tt/3pZbN1p

படம்
பிரதமர் மோடியை நினைத்து எனக்கு பயமில்லை. நான் படுக்கையில் படுத்தால் 30 வினாடிகளில் தூங்கிவிடுவேன். ஆனால், தமிழக முதல்வரால் தூங்க முடியுமா? நேர்மையில்லாத தமிழக முதல்வரால் தூங்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாகச் சாடினார். தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இரு நாட்கள் பயணமாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வந்துள்ளார். தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ராகுல் காந்தி, பல்வேறு தரப்பு மக்களிடம் உரையாற்றி, குறைகளைக் கேட்டறிந்தார். உப்பளத்துக்குச் சென்று உப்பு உற்பத்தி செய்யும் இடங்களைப் பார்வையிட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

19 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட்: செயற்கைக்கோளில் பிரதமர் மோடி படம் https://ift.tt/2ZYIstu

படம்
பிரேசிலின் அமேசேனியா உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களுடன், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவண் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. பிரதமர் மோடியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட சதீஸ் தவண் செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டில் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பும் முதல் ராக்கெட் இதுவாகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன 'சிங்கிள் டோஸ்' கரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா அவசர கால அனுமதி

படம்
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள சிங்கிள் டோஸ் கரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா அவசர கால அனுமதி வழங்கியுள்ளது. உலகம் முழுவதும் ஓராண்டுக்கும் மேலாக பெரும் சவாலாக இருக்கும் கரோனா தொற்றை சமாளிக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் ஆனார் முகேஷ் அம்பானி https://ift.tt/3b0vKkp

படம்
சீனாவின் அலிபாபா நிறுவனத் தலைவர் ஜாக்மாவிடமிருந்து கைப்பற்றிய ஆசியாவின் பெரும் பணக்காரர் இடத்தை தொழிலதிபர் முகேஷ் அம்பானி கடந்த 2 ஆண்டுகளாகத் தக்கவைத்திருந்தார். இந்நிலை யில் கடந்த டிசம்பரில் அம் பானியைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு வந்தார் சீன தொழிலதிபர் சாங் ஷான் ஷன். கடந்த ஒரு வாரமாக சர்வதேச பங்குச் சந்தைகள் மோசமான வர்த்தகத்தை எதிர்கொண்டன. இதில் சீன தொழிலதிபர் சாங் ஷான்ஷனின் நோங்க்ஃபு ஸ்பிரிங் நிறுவனத்தின் மதிப்பு 20 சதவீதம் சரிந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாசிக்கில் 11 ஆண்டுகள் சேவையாற்றிய மோப்ப நாய்க்கு சிறப்பு பிரியாவிடை https://ift.tt/3r1r6rV

படம்
நாசிக் காவல் துறையில் 11 ஆண்டுகள் சேவையாற்றிய ஒரு மோப்ப நாய்க்கு நேற்று வெகு சிறப்பான பிரியாவிடை அளிக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக் காவல் துறையில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழக்கச் செய்தல் பிரிவு செயல்படுகிறது. இப்பிரிவில் 11 ஆண்டுகள் சேவையாற்றிய ‘ஸ்பைக்’ என்ற மோப்ப நாய்க்கு பணி ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த நாய்க்கு நேற்று வெகு சிறப்பான பிரியாவிடை அளிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஸ்டேக் மூலம் கட்டண வசூல் தினமும் ரூ.100 கோடி தாண்டியது; தேசிய நெடுஞ்சாலை துறை தகவல் https://ift.tt/2ObousI

படம்
‘‘நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில், பாஸ்டேக் மூலம் கட்டண வசூல் தினமும் ரூ.100 கோடியை தாண்டியது’’ என்று தேசிய நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் ரொக்கமாக கட்டணம் செலுத்தி செல்வதால் காலத் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதை தவிர்க்க ‘பாஸ்டேக்’ முறை அமல்படுத்தப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தனியார் மருத்துவமனைகளில் ரூ.250-க்கு கரோனா தடுப்பூசி https://ift.tt/37QkBR6

படம்
நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசிகளின் விலையை ரூ.250-ஆக நிர்ணயித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கரோனா பரவலைக் கட்டுப் படுத்துவதற்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தயாரிப் பான கோவிஷீல்டு தடுப்பூசியும், உள்நாட்டு தயாரிப்பான கோவேக்சின் தடுப்பூசியும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழ் வருடப்பிறப்பு முதல் ஆர்ஜித சேவைகளுக்கு பக்தர்கள் அனுமதி: திருப்பதி தேவஸ்தான அறங்காவல் குழு கூட்டத்தில் தீர்மானம் https://ift.tt/3r3H98u

படம்
தமிழ் வருடப்பிறப்பான ஏப்ரல் 14-ம் தேதி முதல் ஆர்ஜித சேவைகளுக்கு பக்தர்களை அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம்நடைபெற்றது. இதில் 2021-21-ம்ஆண்டுக்காக ரூ.2,937.82 கோடிக்கு தேவஸ்தான பட்ஜெட்டுக்கு ஒருமனதாக தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அறங்காவலர் சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எரிசக்தி, சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை பிரதமர் மோடிக்கு சர்வதேச விருது https://ift.tt/2O4HoSm

படம்
பிரதமர் நரேந்திர மோடிக்கு சர்வதேச எரிசக்தி, சுற்றுச்சூழல் தலைமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க, பிரிட்டிஷ் தகவல் சேவை நிறுவனமான ஐஎச்எஸ் மார்கிட் லிமிடெட் சார்பில் ஆண்டுதோறும் எரிசக்தி மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 6,000-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் துறை தலைவர்கள் பங்கேற்பது வழக்கம். இந்த மாநாட்டின்போது சர்வதேச அளவில் எரிசக்தி, சுற்றுச்சூழல் துறையில் சிறந்து விளங்குவோருக்கு விருது வழங்கப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தடுப்பூசி போட்டுக்கொள்ள மூத்த குடிமக்கள் பெயரை பதியலாம்: மத்திய அரசு அறிவிப்பு https://ift.tt/2NPgttL

படம்
கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மூத்த குடிமகக்கள் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இணைய வழிக் கூட்டத்தில் பல் வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சுகாதாரச் செய லர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முன்னாள் தலைமை நீதிபதிக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி மறுப்பு https://ift.tt/37VdNSd

படம்
கடந்த 2018 அக்டோபர் முதல் 2019 நவம்பர் வரை உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பதவி வகித்தார். ரஃபேல், அயோத்தி உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளில் அவரது தலைமையிலான அமர்வு தீர்ப்புகளை வழங்கியுள்ளது. தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக ரஞ்சன் கோகோய் பதவி வகிக்கிறார். தனியார் தொலைக்காட்சிக்கு அண்மையில் அவர் அளித்த பேட்டியில் நீதித் துறைக்கு எதிராக கருத்துகளை கூறியதாக சமூக ஆர்வலர் சாகேத் கோகலே குற்றம் சாட்டியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காசோலை மோசடி வழக்குகளுக்கு கூடுதல் நீதிமன்றங்கள் ஏற்படுத்த தயாரா?- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி https://ift.tt/2Ocbnb6

படம்
வங்கிக் கணக்கில் பணம் இல்லை என காசோலைகள் திரும்பி வருவது அதிகரித்துள்ளதால் இது தொடர்பான வழக்குகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் கடந்த 2020 மார்ச்சில் தாமாக முன்வந்து எடுத்துக் கொண்டு ஒரு வழக்கில் ‘செக் பவுன்ஸ்’ வழக்குகளை விரைவாக முடித்து வைக்க வழிகாட்டுதலை வெளியிடுவது குறித்து ஆராய்ந்து வருகிறது. இவ்வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ 2 மூத்த வழக்கறிஞர்களை நியமித்துள்ளது. இவர்கள் கடந்த அக்டோபரில் அளித்த அறிக்கையில், தேவையான அவசர வழிகாட்டுதல்களை குறிப்பிட்டுள்ளனர். இதில் மேற்கண்ட வழக்குகளுக்கு தனி நீதிமன்றங்கள் ஏற்படுத்தும் பரிந்துரையும் இடம்பெற்றுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்காவின் கடன் 29 லட்சம் கோடி டாலர் இந்தியாவுக்கு தர வேண்டிய கடன் 21,600 கோடி டாலர்

படம்
உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக உள்ள அமெரிக்கா, இந்தியாவுக்குத் தர வேண்டிய கடன் தொகை மட்டும் 21,600 கோடி டாலராகும். அந்நாட்டின் மொத்த கடன் சுமை 29 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் அதிகரித்து வரும் கடன் சுமை மிகப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. சீனா மற்றும் ஜப்பானுக்கு மிக அதிக அளவிலான கடன் தொகையை அமெரிக்கா திரும்ப அளிக்க வேண்டியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காங்கிரஸ்- இடதுசாரி கூட்டணி கொல்கத்தாவில் நாளை பிரமாண்ட பேரணி: பங்கேற்காமல் தவிர்த்த ராகுல், பிரியங்கா https://ift.tt/3bI7D97

படம்
மேற்குவங்க மாநிலத்தில் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ்- இடதுசாரி கட்சிகள் நாளை பிரமாண்ட பேரணி நடத்தவுள்ள நிலையில் அதில் பங்கேற்காமல் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் தவிர்த்துள்ளனர். மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால், ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்துவது கடினம் என்பதால், 8 கட்டங்களாக நடத்தப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நீட் தேர்வு எப்போது?- சமூக வலைதளங்களில் மாணவர்கள் தொடர் கோரிக்கை https://ift.tt/3aZ4gM1

படம்
2021-ம் ஆண்டுக்கான நீட் தேர்வுத் தேதியை மத்தியக் கல்வி அமைச்சகம் விரைந்து அறிவிக்க வேண்டும் என்று மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கிடையே, கரோனா பரவலால் கடந்த ஆண்டு நீட் தேர்வு பலமுறை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் செப். 13-ம் தேதி நடத்தப்பட்டது. எனினும், நடப்பாண்டு நீட் தேர்வுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அனைத்து மதங்களையும், மக்களையும், சாதிகளையும் காங்கிரஸ் சமமாக மதிக்கிறது: ராகுல் காந்திக்கு குலாம்நபி ஆசாத் பதில் https://ift.tt/2PcoYiR

படம்
அனைத்து மதங்களையும், மக்களையும், சாதிகளையும் காங்கிரஸ் கட்சி சமமாக மதிக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ராகுல் காந்திக்கு மறைமுகமாகப் பதில் அளித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மூன்று நாட்கள் தனது சொந்த மாநிலமான ஜம்மு காஷ்மீருக்குச் சென்றுள்ளார். குலாம் நபி ஆசாத்தின் குளோபல் காந்தி அறக்கட்டளை சார்பில் சாந்தி சம்மேளன் எனும் நிகழ்ச்சி ஜம்முவில் இன்று நடந்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் அதிகரிக்கும் கரோனா தொற்று: மத்திய அரசு எச்சரிக்கை https://ift.tt/2NHS89a

படம்
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘‘காங்கிரஸ் பலவீனமாக உள்ளது; குலாம் நபி ஆசாத்துக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படாதது ஏன்’’ - கட்சித் தலைமைக்கு கபில் சிபல் சரமாரி கேள்வி https://ift.tt/2PiFs9p

படம்
குலாம் நபி ஆசாத்தின் அனுபவத்தை காங்கிரஸ் கட்சி ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது எனக்கு புரியவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். காங்கிரஸுக்கு முழுநேர தலைவர் நியமிக்கப்பட வேண்டும், கட்சி அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என வலியறுத்தி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 23 பேர் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இந்த விவகாரம் கட்சியில் பெரும் புயலை கிளப்பியது. இவர்களுக்கு எதிராக கட்சி தலைமை ஆதரவு தலைவர்கள் கடும் விமர்சனங்களை முன் வைத்தனர். அவ்வப்போது அவர்கள் கூடி விவாதித்து வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அசாம் செல்லும் பிரதமர் மோடி; 20 கி.மீ. தொலைவில் உள்ள விவசாயிகளைச் சந்திக்க நேரமில்லை: ப.சிதம்பரம் சாடல் https://ift.tt/3kvnDPG

படம்
அசாம் செல்வதற்குப் பிரதமர் மோடிக்கு நேரம் இருக்கிறது. ஆனால், டெல்லியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளைச் சந்திக்க நேரமில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை மத்திய அரசுடன், விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் 11 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், இதுவரை எந்த இறுதியான தீர்வும் எட்டப்படவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிளாஸ்டிக்கைக் குறைத்து சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்துங்கள்: இந்திய பொம்மை கண்காட்சியில் பிரதமர் வேண்டுகோள் https://ift.tt/37SPVyG

படம்
பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்துங்கள் என்று உற்பத்தியாளர்களுக்கு இந்திய பொம்மை கண்காட்சியில் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் முதல் இந்திய பொம்மை கண்காட்சியைக் காணொலி வாயிலாகப் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்தக் கண்காட்சி இன்று (பிப்ரவரி 27) தொடங்கி மார்ச் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டோரண்டோ தமிழ் இருக்கைக்குத் தமிழக அரசு ரூ.1 கோடி நன்கொடை

படம்
டோரண்டோ தமிழ் இருக்கைக்குத் தமிழக அரசு ரூபாய் 1 கோடி நன்கொடை வழங்கியுள்ளதாக தமிழ் இருக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ் இருக்கை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “உலகத் தாய்மொழி தினம் கொண்டாடும் இந்த நாட்களில் முதல்வரால் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட செய்தி மகிழ்ச்சியூட்டுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரேசிலில் அதிகரிக்கும் கரோனா பலி

படம்
பிரேசிலில் கரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,52,988 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் 1,582 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் கரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2,52,988 ஆக அதிகரித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாணவர்கள் மூலம் கரோனா பரவல்; மகாராஷ்டிரா, கேரளாவை எச்சரிக்கும் கர்நாடகா https://ift.tt/2O73R0Q

படம்
கரோனா பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் நடுவே இருக்கிறோம், அங்கிருந்து இருந்து வரும் மாணவர்களால் கரோனா பரவி வருகிறது என கர்நாடகா புகார் தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் தற்போதுதான் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் கரோனா பாதிப்பு ஒரு கோடியைக் கடந்தது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எட்டு லட்சத்தைக் கடந்தது. அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக கரோனா தொற்று பெரும் அளவில் குறைக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாதந்தோறும் ரூ.12,400: முதுகலைப் படிப்புகளுக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி https://ift.tt/2NBLqln

படம்
முதுகலைப் படிப்புகளுக்கான உதவித்தொகைக்குத் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நாளை (பிப்.28) கடைசித் தேதி ஆகும். கேட் (GATE) அல்லது ஜிபேட் (GPAT) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்க மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை பொறியியல் (எம்.இ.), தொழில்நுட்பம் (எம்.டெக்.), கட்டிடக் கலை (எம்.ஆர்க்.), பார்மசி (எம்.ஃபார்மா) படிப்புகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரேசில் செயற்கைக்கோள் உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது: கவுண்ட் டவுன் தொடங்கியது https://ift.tt/3qVYvUO

படம்
பிரேசில் நாட்டின் செயற்கைக்கோள் உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களைச் சுமந்துகொண்டு ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவண் விண்வெளி நிலையத்திலிருந்து பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது. 2021-ம் ஆண்டில் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பும் முதல் ராக்கெட் இதுவாகும். பிரேசில் நாட்டின் அமேசானியா-1 மிஷன் செயற்கைக்கோளை முதல் முறையாக இஸ்ரோ விண்ணுக்குச் செலுத்துகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘‘மேற்குவங்க தேர்தல்; மே 2-ம் தேதி, எனது கடைசி ட்வீட்; நிறுத்துங்கள்’’- பிரசாந்த் கிஷோர் மீண்டும் பரபரப்பு  https://ift.tt/3syfjS8

படம்
மே 2-ம் தேதி எனது கடைசி ட்வீட் இடுவதை நிறுத்துங்கள் என மேற்குவங்க மாநில வாக்காளர்களுக்கு தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால், ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்துவது கடினம் என்பதால், 8 கட்டங்களாக நடத்தப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 317 மாணவிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்: ஐ.நா.

படம்
நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியிலிருந்து தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில், “நைஜீரியாவில் பள்ளி மாணவிகள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதைக் கண்டு நாங்கள் வருத்தம் அடைந்துள்ளோம். டிசம்பர் மாதத்திலிருந்து இது மூன்றாவது கடத்தல் சம்பவம். இது குழந்தைகள் மீது செலுத்தப்படும் பயங்கரமான வன்முறை. அவர்கள் மனநிலை மிகவும் பாதிக்கப்படக் கூடும். கடத்தப்பட்ட மாணவிகள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் எந்தவிதத் துன்புறுத்தலும் இல்லாமல் விடுவிக்கப்படுவார்கள் என்று நம்புகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் ஒரு மரபணுதான் இருக்கிறது; அது இந்து மட்டும்தான்: ஆர்எஸ்எஸ் தலைவர் தத்தாத்ரேயா பேச்சு https://ift.tt/3uxtkS9

படம்
இந்தியாவில் ஒரு மரபணு மட்டுமதான், அது இந்து மட்டும்தான் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் தத்தாத்ரேயா ஹோசபலே தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசம் லக்னோவில், ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுனில் அம்பேத்கர் எழுதிய நூல் வெளியிட்டு விழா நேற்று நடந்தது. இதில் முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் தத்தாத்ரேயா ஹோசபலே உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்