இடுகைகள்

ஜூலை, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பு: தடுப்பூசி செலுத்தியோர் 47 கோடியைக் கடந்தனர் https://ift.tt/3A1XfDT

படம்
இந்தியாவில் தொடர்ந்து 5-வது நாளாக கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. கடந்த 24மணிநேரத்தில் 41,831 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 541 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகதாாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்களின் வரிப்பணம் ரூ.133 கோடி வீண்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியால் 89 மணிநேரம் விரயம் https://ift.tt/3fhCf4a

படம்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து எதிர்க்கட்சிகள் செய்துவரும் அமளியால் 107 மணிநேரத்தில் 89 மணிநேரம் விரயமானது. வரி செலுத்துவோரின் பணம் ரூ.133 கோடி வீணானது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற மழைக்காலக்கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது, 20 அமர்வுகள் வரை நடத்தவும் திட்டமிடப்பட்டது. ஆனால், நாடாளுமன்றம் தொடங்குவதற்கு முதல்நாள் பெகாசஸ்ஒட்டுக் கேட்பு விவகாரம் எழுந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முஸ்லிம் பெண்கள் உரிமை நாளாக ஆகஸ்ட் 1ம்தேதி அனுசரிப்பு: முத்தலாக் தடை சட்டத்தின் 2-வது ஆண்டு தொடக்கம்: மத்திய அரசு அறிவிப்பு https://ift.tt/3C2t0P2

படம்
முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கும் முத்தலாக் முறையை ஒழிக்க மத்திய அரசால் இயற்றப்பட்ட முத்தலாக் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டு இன்றுடன் 2- ஆண்டுகள் நிறைவடைகிறது . இதனால் ஆகஸ்ட் 1ம்தேதியை முஸ்லிம் பெண்கள் உரிமை நாளாக நாடுமுழுவதும் கடைபிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முஸ்லிம் சமூகத்தில் திருமணமான பெண்களிடம் மூன்றுமுறை தலாக் கூறி விவகாரத்து செய்யும் முறை நடைமுறையில் இருந்துவந்தது. இதை சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. ஆனால், எந்த மாற்றமும் நிகழவில்லை, சிறு காரணங்களுக்காக வாட்ஸ்அப், தொலைப்பேசி மூலம் முத்தலாக் சொல்வது தொடர்ந்து வந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.7 லட்சம் வெகுமதி அறிவிப்புடன் 5 மாநில போலீஸாரால் தேடப்பட்ட கூலிப்படை தலைவனை கைது: செய்து டெல்லி காவல்துறை சாதனை https://ift.tt/2VooZTU

படம்
ஹரியாணா மாநிலத்தின் சோனிபத் மாவட்டம், ஜதேடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் காலா ஜதேடி என்கிற சந்தீப் சவுத்ரி. அப்பகுதியில் கேபிள் டிவி ஆப்பரேட்டராக இருந்த இவர் கடந்த 2009-ல் கொலை வழக்கு ஒன்றில் சிக்கி சிறைக்குச் சென்றார். ஜாமீனில் வெளியே வந்த இவர் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற மாநிலங்களில் ஆட்கடத்தலில் இறங்கினார். பிறகு லாரன்ஸ் பிஷ்னோய் என்பவருடன் இணைந்த இவர், நிழல் உலக தாதாக்களை மிஞ்சும் வகையில் ஒரு கூலிப்படையை அமைத்தார். பணத்துக்காக முக்கிய நபர்களை கடத்துதல், கொலை செய்தல் என குற்றங்களில் ஈடுபடத் தொடங்கினார். ஏ.கே-47 உள் ளிட்ட நவீன ரக துப்பாக்கிகளுடன் செயல்பட்டு வந்த இவரது கூலிப்படையில் தற்போது 200-க்கும் அதிகமானோர் பல்வேறு மாநிலங்களில் உள்ளதாகத் தெரிகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்திய கடற்படை துணைத் தளபதியாக எஸ்.என். கோர்மேட் பொறுப்பேற்பு https://ift.tt/3rSG4Sf

படம்
இந்திய கடற்படையில் 1984-ல் இணைந்த வைஸ் அட்மிரல் எஸ்.என்.கோர்மேட், கடற்படையின் பல்வேறு போர்க் கப்பல்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா, நீர்மூழ்கி மீட்புக் கப்பல் ஐஎன்எஸ் நிரீக்ஷக், கண்ணிவெடிகளை கண்டறியும் ஐஎன்எஸ் ஆலப்புழா ஆகிய கப்பல்களில் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர். இந்நிலையில் கடற்படை துணைத் தளபதியாக அவர் நியமிக்கப்பட்டார். இதையடுத்து டெல்லி சவுத் பிளாக்கிலுள்ள அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற எளிமையான விழாவில் துணைத் தளபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் வைஸ் அட்மிரல் ஜி.அசோக் குமாரிடமிருந்து பொறுப்புகளை எஸ்.என். கோர்மேட் பெற்றுக் கொண்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா தடுப்பூசி முதல் டோஸ் ராகுல் செலுத்திக் கொண்டார் https://ift.tt/2V9iHYK

படம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை சில நாட்களுக்கு முன் செலுத்திக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தடுப்பூசி செலுத்திக் கொண்டபிறகு ராகுல் காந்தி கடந்தவியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகியவற்றில் அவர்எந்த தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்று தெரியவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இரு வேறு தீவிரவாத வழக்குகள்: ஜம்மு காஷ்மீரில் 14 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை https://ift.tt/37a295p

படம்
இரு வேறு வழக்குகள் தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் 14 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். முதல் வழக்கு, ஜம்மு பஸ்நிலையம் அருகே கடந்த பிப்ரவரியில் 7 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பானது ஆகும். 2-வது வழக்கு, லஷ்கர்-இ-முஸ்தபா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹிதாயதுல்லா மாலிக் கைது செய்யப்பட்ட பிறகு வெளியான சதித் திட்டம் தொடர்பானது ஆகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேகேதாட்டு அணை கட்டுவது உறுதி: பசவராஜ் திட்டவட்டம் https://ift.tt/3j8w9nN

படம்
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை டெல்லியில் பிரதமர் மோடி உட்பட கட்சித் தலைவர்களை சந்தித்த பின் நேற்று கூறியதாவது: மேகேதாட்டு திட்டம் என்பது கர்நாடக அரசின் நீண்ட காலம் திட்டமாகும். அதனை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்த போது கர்நாடக அரசின் இந்த திட்டத்துக்கு விரைவில் அனுமதி வழங்கும்படி கோரிக்கை விடுத்தேன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரளா, தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் மீண்டும் கரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை https://ift.tt/3zWBZiS

படம்
கேரளா, தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங் களில் கரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை மோசமாகி விடும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியால் மாநிலங்களவையின் 80% வேலை நேரம் வீண் https://ift.tt/3xhpWuP

படம்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்ட தொடர் தொடங்கி 2 வாரம் நிறைவடைந்துள்ளது. ஆனால் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு, வேளாண் சட்டங்கள் எதிர்ப்பு விவகாரங்களை கையில் எடுத்துக் கொண்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 2 அவைகளிலும் பணிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் தினசரி அவை நடப்பு குறித்து மாநிலங்களவை செயலகம் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பு: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குரலற்றவர்களின் குரலாக சிமோன் பைல்ஸ்

படம்
உலகமே குழந்தைகளுக்கு எதிரானபாலியல் வன்முறையை ஒன்றுபட்டுஎதிர்த்துக் கொண்டிருக்கும்போது, மிக வளர்ந்த நாடு என்று சொல்லப்படும்அமெரிக்காவில் அதுவும் விளையாட்டுத்துறையில் இத்தனை காலமாக நடந்துவந்த குழந்தை பாலியல் வன்புணர்வுகள் மீண்டும் வெளிச்ச வட்டத்துக்கு வந்துள்ளன. தனது இளம் பிராயத்திலிருந்தே ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி எடுத்து ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு அமெரிக்காவிற்கு, தங்கப் பதக்கங்களை வாங்கி குவித்த ஆப்ரிக்க-அமெரிக்க வீராங்கனையான சிமோன் பைல்ஸ், கடந்த புதன்கிழமை அன்று ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக திடீரென அறிவித்தார். இந்த முடிவுக்கு காரணம் தனது மன நல பிரச்சினைகள்தான் என்று அவர் குறிப்பிட... அவரது கடந்த கால துன்பங்கள் பற்றி அமெரிக்கா முழுவதும் மீண்டும் விவாதங்கள் கிளம்பி உள்ளன. ஒலிம்பிக் போட்டிக்கு பல காலம் பயிற்சி எடுத்து அதில் கலந்துகொண்ட முன்னணி வீராங்கனைக்கு அப்படி என்ன மனப் பிரச்னை? பதில் மிக வேதனையானது. அமெரிக்காவில் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டுக்கென உள்ள அமைப்புதான் அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் கழகம் (USAG). 2014-ம் ஆண்டு நடந்த ஒரு பாலியல் புகார் குறித்த வழக்கில் அந்த...

'பெகாசஸ்' பயன்படுத்த சில நாடுகளுக்கு தடை: முறைகேடு புகாரால் இஸ்ரேல் நிறுவனம் நடவடிக்கை

படம்
பெகாசஸ் உளவு மென்பொருளை முறைகேடாக பயன்படுத்துவதாக புகார் எழுந்த நிலையில், அதைப் பயன்படுத்த சில நாடுகளின் அரசு அமைப்புகளுக்கு இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் தடை விதித்துள்ளது. பெகாசஸ் உளவு மென்பொருள்மூலம் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் செல்போன் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டின. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி; வேகப்படுத்த வேண்டும்: வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல் https://ift.tt/3icdYOI

படம்
குழந்தைகளுக்கான கரோனா தடுப்பு மருந்து உருவாக்குவதை துரிதப்படுத்த வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார். ஹைதராபாத்தின் ஜெனோம் வேலி பகுதியில் உள்ள பாரத் பயோடெக் லிமிடெட் நிறுவன ஆலையை பார்வையிட்ட பின்னர் விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்களிடையே பேசிய அவர் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எத்தியோப்பியாவில் கடும் உணவுப் பஞ்சம்: 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு?

படம்
எத்தியோப்பியாவின் டைக்ரே மாகாணத்தில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் அடுத்த ஒரு வருடத்துக்குள் உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம் என்று ஐக்கிய நாடு சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. வெளியிட்ட அறிவிப்பில், “ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்ள வடகிழக்கு மாகாணமான டைக்ரேவில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் அடுத்த 12 மாதங்களில் உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

92.8% ரேஷன் அட்டைகள் ஆதார் எண்ணுடன் இணைப்பு https://ift.tt/3zZAWi9

படம்
நாடு முழுவதும் 92.8 சதவீத ரேஷன் அட்டைகள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாக, மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். அவர் மாநிலங்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜனநாயகம் கண்டிப்பாக நீடிக்க வேண்டும்; 2 மாதத்துக்கு ஒருமுறை டெல்லி வருவேன்: முதல்வர் மம்தா பானர்ஜி மகிழ்ச்சிப் பேட்டி https://ift.tt/3iau3UZ

படம்
ஜனநாயகம் கண்டிப்பாக நீடிக்க வேண்டும். 2 மாதங்களுக்கு ஒருமுறை இனிமேல் டெல்லிக்கு வருவேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டெல்லி பயணத்தை முடித்துவிட்டுச் செல்லும்போது மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக முதல்வரானபின் முதல் முறையாக டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டார். டெல்லியில் 5 நாட்கள் பயணம் மேற்கொண்ட மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரையும் சந்தித்துப் பேசினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரளாவை மிரட்டும் கரோனா: மத்திய குழு ஆய்வை தொடங்கியது https://ift.tt/3rK8FJg

படம்
கேரளாவில் கோவிட்-19 பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில் மத்திய உயர் நிலைக் குழு நேற்று அங்கு சென்று ஆய்வை மேற்கொண்டது. நாட்டில் கடந்த பிப்ரவரி முதல் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக பரவத் தொடங்கியது. பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வந்தது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்தது. அதேநேரத்தில், நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எல்லை மோதல்; அசாம் முதல்வர், போலீஸ் உயர் அதிகாரிகள் மீது கொலை முயற்சி வழக்கு: மிசோரம் போலீஸார் அதிரடி https://ift.tt/3iewHt1

படம்
மிசோரம் மாநிலத்தில் உள்ள கொலாசிப் மாவட்டத்தின் வெய்ரன்ட் கிராமத்தில் நடந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, 4 போலீஸ் உயர் அதிகாரிகள், இரு அதிகாரிகள் மீது மிசோரம் போலீஸார் கிரிமினல் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அசாம் முதல்வர், போலீஸ் உயர் அதிகாரிகள் மீது கொலை முயற்சி வழக்கு, குற்றச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மிசோரம் காவல்துறை தலைவர் ஜான் நேஹாலியா தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ம.பி.யில் மழையால் சிறைக் கட்டிடம் இடிந்தது: 22 கைதிகள் இடிபாடுகளில் சிக்கினர் https://ift.tt/3A8EFKr

படம்
மத்தியப்பிரதேசத்தில் பெய்த மழையால் சிறைச்சாலை கட்டிடம் ஒன்று இன்று இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளில் 22 கைதிகள் சிக்கினர். ம.பி. மாநிலம் பந்தேல்கண்ட் பகுதியில் அமைந்துள்ளது பிந்த் மாவட்டம். இங்கு சில தினங்களாகக் கடும் மழை பெய்ந்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

போக்சோ சட்டத்தின் கீழ் மே மாதம் வரை 50,484 வழக்குகள் நிறைவு: ஸ்மிருதி ஈரானி தகவல் https://ift.tt/3iZyoJK

படம்
போக்சோ சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றங்கள் மூலம், 2021 மே மாதம் வரை நிலுவையில் இருந்த 50,484 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். அவர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் கரோனா தொற்று, உயிரிழப்பு தொடர்ந்து 4-வது நாளாக அதிகரிப்பு https://ift.tt/3C13cT5

படம்
இந்தியாவில் கரோனா தொற்றும், உயிரிழப்பும் தொடர்ந்து 4-வது நாளாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 41,649 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 593 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அவர்கள் நான் இறந்துவிட்டதாக நினைத்தனர்: ஹைதி அதிபரின் மனைவி பேட்டி

படம்
அவர்கள் நான் இறந்துவிட்டதாக நினைத்து என்னை விட்டுவிட்டனர் என்று தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ஹைதி அதிபரின் மனைவி மார்ட்டின் தெரிவித்துள்ளார். கரிபீயன் தீவில் அமைந்துள்ள நாடு ஹைதி. இதன் அதிபர் ஜொவினெல் மொய்சே ஜூலை 7ஆம் தேதி அடையாளம் தெரியாத கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்தத் தாக்குதலில் அவரது மனைவி மார்ட்டினுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பள்ளிகளில் 45 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்: புள்ளிவிவரங்கள் வெளியீடு https://ift.tt/2VaX9uF

படம்
கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் மையமானது (யுடிஐஎஸ்இபிளஸ்) ஆரம்பப் பள்ளிகளில் சேரும் மாணவர் கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்களைப் பதிவு செய்து வைத்துள்ளது. அதன்படி ஆரம்பப் பள்ளிகளில் சேரும் மாணவர்களில் 45 சதவீதத்தினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சே்ரந்தவர்கள், 19 சதவீதத்தினர் தலித் பிரிவை (எஸ்சி) சேர்ந்தவர்கள், 11 சதவீதம் பேர் பழங்குயினர் பிரிவை (எஸ்டி) வகுப்பைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உயிரிழந்த செல்ல பிராணிக்காக கண்ணீர்விட்ட கர்நாடக முதல்வர் பசவராஜ் https://ift.tt/3fenMG1

படம்
கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை கடந்த 28-ம் பதவியேற்றார். இவருக்கு பிராணிகள் வளர்ப்பு, திரைப்படங்கள் பார்ப்பது, புத்தகம் வாசிப்பது உள்ளிட்டவற்றிலும் ஆர்வம் உண்டு. தனது செல்லப்பிராணிகளின் மீதான காதலை க‌டந்த முறை உள்துறை அமைச்சராக இருந்தபோது பணியில் சிறந்து விளங்கிய மோப்ப நாய்களுக்கு பதக்கம் வழங்கும் போது வெளிப்படுத்தினார். இந்நிலையில் பசவராஜ் பொம்மையின் வீட்டில் 14 ஆண்டுகள் செல்லமாக வளர்த்த நாய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்தது. அந்த நாயை வீட்டின் முன்பாக கிடத்தி மாலை அணிவித்து குடும்பத்தோடு பசவராஜ் பொம்மை இறுதி மரியாதைகள் செய்தார். பாதுகாப்பு அதிகாரிகள் முன்னிலையில் இறந்த செல்ல நாயை தடவி கண்ணீர் விட்டு அழுததோடு நெற்றியில் முத்தமிட்டார். அவரைத் தொடர்ந்து மனைவி, மகள், மகனும் செல்ல பிராணிக்கு கண்ணீருடன் முத்தமிட்டு கையெடுத்து கும்பிட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு: விதிகளை பின்பற்ற ராகுல் வேண்டுகோள் https://ift.tt/3rKkdfM

படம்
கேரள மாநிலத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பதிவில், “கேரளாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. கரோனா தொடர்பான அனைத்து பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை அம்மாநிலத்தின் சகோதர சகோதரிகள் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து உங்கள் நலனை கவனித்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாநிலங்களவையில் அமளி: வெங்கய்ய நாயுடு எச்சரிக்கை https://ift.tt/2WEgDZb

படம்
அவையின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று அமளியில் ஈடுபடும் எம்.பி.க்களுக்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு எச்சரிக்கை விடுத்தார். பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட் வருகின்றன. மாநிலங்களவையில் நேற்றும் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆந்திரா இறால் பண்ணையில் 6 ஒடிசா தொழிலாளர்கள் மர்ம மரணம் https://ift.tt/379BIwv

படம்
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், ரேபல்லே மண்டலம், லங்கவாணி திப்பா என்ற கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணை உள்ளது. இங்கு ஒடிசா மாநிலத்தின் ராயகட் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை இவர்கள் தங்கியிருந்த அறையில் 4 பேரும், அறைக்கு வெளியே இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இது குறித்து ரேபல்லே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் குண்டூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷால் குன்னா மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் காவல் கண்காணிப்பாளர் விஷால் குன்னா கூறும்போது, “இறால் பண்ணையில் வெடிவிபத்து எதுவும் நடைபெறவில்லை. ஒடிசா தொழிலாளர்கள் தங்கியிருந்த அறைக்கு வெளியே பிளீச்சிங் பவுடன் கலந்த தண்ணீர் கொட்டிக்கிடக்கிறது. 2 பேர் மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என கருதப்பட்டாலும் இன்னும் முழுமையாக ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இது மர்ம மரணமாகவே போலீஸ் கருதுகிறது. பிரேதப் பரிசோதனைக்கு பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்” என்றார். from இந்து தமிழ் திசை : ...

ஆந்திர மாநிலத்தில் ஆகஸ்ட் 14 வரை இரவு ஊரடங்கு https://ift.tt/3zRh8NO

படம்
கரோனா பரவல் காரணமாக ஆந்திர மாநிலத்தில் தற்போது இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இது இன்றுடன் முடிகிறது. இந்நிலையில், நேற்று அமராவதியில் முதல்வர் ஜெகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கை நீட்டிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கள், போலீஸ் துறையினருக்கு தகவல் அனுப்பப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மருத்துவப் படிப்பில் சேர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உ.பி.யை குறிவைத்து 27 சதவீத இடஒதுக்கீடு?- சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பலனடைய வாய்ப்பு https://ift.tt/3BZ4o9z

படம்
மத்திய அரசின் 27 சதவீத ஒதுக்கீடு அறிவிப்பு உத்தரபிர தேசத்தைகுறிவைத்து மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது. அங்கு அடுத்த ஆண்டு வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும்பாஜகவுக்கு இதனால் பலன்கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் எனமத்திய அரசு நேற்று முன்தினம்அறிவித்தது. மேலும் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடும் அறிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடியுடன் கர்நாடக முதல்வர் சந்திப்பு https://ift.tt/2V1gA9s

படம்
கர்நாடக முதல்வராக பதவியேற்ற பசவராஜ் பொம்மை, நேற்று டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட முக்கியத் தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரை சந்தித்து மாநில அமைச்சரவை குறித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிறு வணிகர், விவசாயிகளுக்கு உதவ ரூ.5,650 கோடியில் திட்டம்: கேரள மாநில அரசு அறிவிப்பு https://ift.tt/3j8mfT6

படம்
கேரளாவில் சிறு வணிகர்கள், விவசாயிகளுக்கு உதவ ரூ.5,650 கோடி நிதி உதவித் திட்டத்தை வகுத்துள்ளதாக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் கே.என். பாலகோபால் தெரிவித்தார். இத்திட்டத்தின்படி சிறு வணிகர்கள் மற்றும் விவசாயி களுக்கு வட்டி மானியத்தில் கடன்கள் வழங்கப்படும். அதிக பட்சம் ரூ. 2 லட்சம் வரையில் கடன் கிடைக்கும். இதற்கு முதல் ஆறு மாதங்களுக்கு 4 சதவீத வட்டி வசூலிக்கப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சர்வதேச விமான போக்குவரத்துக்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தடை நீட்டிப்பு https://ift.tt/3zTPr78

படம்
கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக சர்வதேசபயணிகள் விமானப் போக்குவரத்துக்கான தடை ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்படுவதாக விமானப்போக்குவரத்து பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச்23ம் தேதியிலிருந்து திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. அதேசமயம் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை நாடு கொண்டுவரவும், உள்நாட்டில் சிக்கிய வெளிநாட்டினரை சொந்த நாட்டுக்கு அனுப்பவும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மே மாதத்திலிருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டுவருகின்றன. ஆனாலும் தொடர்ந்து திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு அவ்வப்போது தடை விதிக்கப்பட்டுவருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவின் பகுதிக்குள் சீனா - பாகிஸ்தான் வர்த்தக பாதை அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு https://ift.tt/3fbnzDq

படம்
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷியும், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயும், சீனாவின் செங்குடு நகரில் அண்மையில் சந்தித்துப் பேசினர். இதன் பின் இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ‘‘காஷ்மீரில் நிலைமை மோச மாக உள்ளதை, சீனாவிடம் பாகிஸ்தான் தெரிவித்தது. சீனா-பாகிஸ்தான் இடையே வர்த்தக பாதை அமைக்கப்படும்' என்று கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து மத்திய வெளி யுறவு செய்தி தொடர்பாளர் அரிந் தம் பாக்சி நேற்று கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தலைமை நீதிபதி நியமனத்தை எதிர்த்தவருக்கு அபராதம் https://ift.tt/3iZ2OMc

படம்
கடந்த 2017-ம் ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டதை எதிர்த்து சுவாமி ஓம் மற்றும் முகேஷ் ஜெயின் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். தனக்கு அடுத்து தலைமை நீதிபதியாக வருபவரின் பெயரை குடியரசுத் தலைவருக்கு பதவியில் இருந்து ஓய்வு பெறும் நீதிபதி பரிந்துரைக்கும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும் மனுவில் கூறி யிருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆட்டோ ஏற்றி ஜார்க்கண்ட் நீதிபதி கொலை; உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு: 7 நாளில் தலைமை செயலர் அறிக்கை அளிக்க உத்தரவு https://ift.tt/3fdnHCm

படம்
ஜார்க்கண்ட் மாவட்ட நீதிபதியை ஆட்டோ ஏற்றி கொலை செய்த விவகாரத்தை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், ஒரு வார காலத்துக்குள் முழு அறிக்கை அளிக்க மாநில தலைமை செயலருக்கு உத்தரவிட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நகரில் மாவட்ட மற்றும் கூடுதல் நீதிபதியாக இருந்தவர் உத்தம் ஆனந்த். கடந்த புதன்கிழமை காலை 5 மணியளவில் நடை பயிற்சி சென்ற போது, ஆட்டோ ஏற்றி கொல்லப்பட்டார். ஆனால், அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் இறந்தார் என்று போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையில், திட்டமிட்டு நீதிபதி மீது ஆட்டோ ஏற்றி கொலை செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெகாசஸ் விவகாரம்; பத்திரிகையாளர்கள் தொடர்ந்த வழக்குகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் விசாரணை: உச்ச நீதிமன்றம்  https://ift.tt/3id5qqU

படம்
பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக எழுந்த விவகாரத்தில் நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘‘உங்கள் கருத்து செங்கோட்டையில் எதிரொலிக்கட்டும்’’ - மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் https://ift.tt/3BUl8Pj

படம்
சுதந்திர தினத்தன்று பிரதமர் ஆற்ற இருக்கும் உரையில் இடம் பெறும் வகையில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை அனுப்பலாம் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தினம் ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளுககு ஏற்பாடுகள் செய்து வருகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும் என்று பாஜக எம்.பி.க்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘‘ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை’’- உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் https://ift.tt/3laoXdc

படம்
தமிழகத்தில் தற்போது பற்றாக்குறை இல்லாததால் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து மருத்துவ ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது. இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேசிய சிறுபான்மை ஆணையத்தில் தலைவர் பதவியும், 60% பணியிடங்களும் காலியாக உள்ளன: சு.வெங்கடேசன் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் https://ift.tt/3f8apa7

படம்
தேசிய சிறுபான்மை ஆணையத்தில் தலைவர் பதவியும், 60 சதவீதப் பணியிடங்களும் காலியாக உள்ளன என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கேள்விக்கு மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக, சு.வெங்கடேசன் நேற்று (ஜூலை 29) நாடாளுமன்றத்தில், "தேசிய சிறுபான்மை ஆணையத்தில் மொத்த ஊழியர் பலம் என்ன? ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்கள் பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளனவா? காலியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? டெல்லி உயர் நீதிமன்றம் காலியிடங்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிரப்ப வேண்டுமென்ற ஆணையைப் பிறப்பித்துள்ளனவா? நீதிமன்ற ஆணையை அமலாக்க என்ன முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டேனிஷ் சித்திக்கின் அடையாளம் தெரிந்த பின்னரே தலிபான்கள் கொன்றனர்: அமெரிக்க ஊடகம்

படம்
புலிட்சர் விருது பெற்ற இந்தியப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கின் அடையாளம் தெரிந்த பின்னரே தலிபான்கள் அவரைக் கொலை செய்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில் ஆப்கன் பாதுகாப்புப் படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே நடக்கும் மோதலைப் படமெடுக்க கந்தகாருக்குச் சென்றார் டேனிஷ் சித்திக். அங்கு நடந்த சண்டையில் ஜூலை 16ஆம் தேதியன்று கொல்லப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரூர் மாரியம்மன் கோயிலில் பெண்ணிடம் 5 பவுன் தாலிச் சங்கிலி பறிப்பு https://ift.tt/3rK9i5W

படம்
ஆடி 2-ம் வெள்ளிக்கிழமையையொட்டி கரூர் மாரியம்மன் கோயிலில் வழிபட்ட பெண்ணிடம் 5 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு மர்ம நபர் தப்பியோடினார். சிசிடிவி கேமரா பதிவுகளைப் பார்வையிட்டு கரூர் நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடி 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோயில்களில் பெண்கள் அதிக அளவில் வழிபடக் குவிந்தனர். கரூர் மாரியம்மன் கோயிலில் இன்று (ஜூலை 30) காலை முதலே பெண்கள் அதிக அளவில் குவிந்தனர். கூட்டம் காரணமாக வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிபிஎஸ்இ 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள்: பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு https://ift.tt/3ykh4pC

படம்
சிபிஎஸ்இ 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணியளவி்ல வெளியாகிறது. இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவியதையடுத்து 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை சிபிஎஸ்இ நிர்வாகம் ரத்து செய்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மெல்ல மெல்ல அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில்  44,230 பேருக்கு பாதிப்பு https://ift.tt/3rK5IZy

படம்
இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 44,230 ஆக உள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,05,155 ஆக உள்ளது. கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா பாதிப்பு; தொடர்ந்து இயங்கும் 91 சதவீத குறு, சிறு நிறுவனங்கள்: நாராயண் ரானே தகவல் https://ift.tt/3fuzrAP

படம்
கோவிட்-19 பெருந்தொற்றால் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் 91 சதவீத நிறுவனங்கள் தொடர்ந்து இயங்குவதாக மத்திய அமைச்சர் நாராயண் ரானே தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் நாராயண் ரானே எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரிட்டனில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று: கட்டுப்பாடுகள் தளர்வு எதிரொலி

படம்
பிரிட்டனில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அங்கு தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பிரிட்டனில் 60% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று சற்று குறைந்தன. இதனைத் தொடர்ந்து அங்கு முழுமையாக கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தெலங்கானா மாநிலத்தில் ரூ.1,555 கோடியில் மயானங்கள் https://ift.tt/3j6QsC5

படம்
தெலங்கானாவில் உள்ள அனைத்து கிராமப்புறங்களிலும் மயானங்கள், அதற்கான சாலை,விளக்கு வசதிகளை அம்மாநில அரசு அமைத்து வருகிறது. இது பஞ்சாயத்து துறை சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக புதிதாககட்டி முடிக்கப்பட்ட ஒரு மயானத்தை பஞ்சாயத்து துறை அமைச்சர் தயாகர் ராவ், கல்வித்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி மற்றும் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர். பின்னர் தயாகர் ராவ் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமைச்சர் பதவியை கைப்பற்ற கர்நாடகாவில் கடும் போட்டி: முதல்வர் பசவராஜ் ஆலோசனை https://ift.tt/37b190B

படம்
கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை நேற்று முன்தினம் பதவியேற்றார். அவருடன் 3 துணை முதல்வர்கள் பதவியேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது. மூத்த எம்எல்ஏக்கள் இடையே ஏற்பட்ட கடும் போட்டி காரணமாக துணை முதல்வர்கள் யாரும் பதவியேற்கவில்லை. இதுபோல் அமைச்சர் பதவிக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால் அமைச்சரவை பட்டியல் தயாரிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. லிங்காயத்து வகுப்பை சேர்ந்த பசவராஜ் பொம்மைக்கு முதல்வர் பதவி வழங்கியுள்ளதால் பட்டியல் வகுப்பினர், ஒக்கலிகா, குருபாஉள்ளிட்ட சாதியினர் துணை முதல்வர் பதவி கோரி போர்க்கொடி தூக்கியுள்ளனர். மூத்த தலைவர் ஈஸ்வரப்பாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என குருபா சங்கங்களின் கூட்டமைப்பு கோரியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஓர் எம்.பி., 3 எம்எல்ஏக்கள் மறைவால் ஏற்பட்ட காலியிடம்- மத்தியபிரதேசத்தில் பாஜக, காங்கிரஸுக்கு சவாலாகும் இடைத்தேர்தல் https://ift.tt/3faq4WF

படம்
ம.பி.யில் கடந்த 2018-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஆட்சிக்கு தேவைப்பட்ட சில எம்எல்ஏக்களின் ஆதரவு, சுயேச்சை மற்றும் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளிடம் பெறப்பட்டது. எனினும் அடுத்த சில மாதங்களில் காங்கிரஸை விட்டு வெளியேறிய ஜோதிராதித்ய சிந்தியாவுடன் கட்சியின் ஒரு பகுதி எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். இதனால் காங்கிரஸ் அரசு கவிழ்ந்து, சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆந்திராவில் 3 மாதங்களுக்கு பிறகு நாளை திரையரங்குகள் திறப்பு https://ift.tt/3zOvb6H

படம்
கரோனா 2-ம் அலை பரவலால் கடந்த 3 மாதங்களாக ஆந்திராவில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனிடையே தொற்று குறைந்து வரும் நிலையில், கடந்த ஜூலை 8-ம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்கை இயக்கலாம் என ஆந்திர அரசு அனுமதி வழங்கியது. ஆனால், 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் திரையரங்கிற்கு வந்தால், மிகுந்த நஷ்டம் ஏற்படும் என கூறப்பட்டது. இதனால், திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர் சங்கங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், கடந்த ஜூலை 8-ம் தேதி திரையரங்குகள் திறக்கப்படவில்லை. தற்போது மீண்டும் வரும் 31ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் ‘சி’ சென்டர்களில் உள்ள திரையரங்குகள் திறக்கப்படலாமென அரசு அனுமதி வழங்கியது. மேலும், 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென்றும், முக கவசம், சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டுமென்றும் அரசு வலியுறுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலத்தில் 100 சதவீத பார்வையாளர்களுடன் வரும் ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி முதல் திரையரங்குகள் இயங்க தெலங்கானா அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால், விரைவில் புதிய தெலுங்கு திரைப்படங்கள் திரையரங்குகளி...