இடுகைகள்

நவம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விழிஞ்சம் துறைமுகத் திட்டம் நிறைவேறும்: கேரள மீன் வளத்துறை அமைச்சர் கருத்து https://ift.tt/eAjDGnc

படம்
விழிஞ்சம்: கேரளா தலைநகர் திருவனந்தபுரத்திலிருந்து 20 கிமீ தொலைவில் இருக்கிறது விழிஞ்சம். கடற்கரைப் பகுதியான இங்கு ரூ.7,500 கோடி முதலீட்டில் அரசு - தனியார் கூட்டமைப்பில் துறைமுகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பெரும் பங்கு முதலீட்டை அதானி குழுமம் மேற்கொள்கிறது. இந்தத் துறைமுகத்தால் கடல் அரிப்பு ஏற்படும் என்றும் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்றும் இப்பகுதி மீனவர்களும் சமூக ஆர்வலர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மாநில மீன்வளத் துறை அமைச்சர் அப்துர் ரஹ்மான் பேசுகையில், “இந்தத் துறைமுகத் திட்டம் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகம் உருவாகும். இத்தகைய திட்டம் முடங்க அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இந்தத் திட்டத்தை முடக்க நினைப்பது தேச விரோதம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலுடன் போர் விமானம் இணைப்பு: கடற்படை தளபதி ஹரி குமார் தகவல் https://ift.tt/6cSlBmU

படம்
புனே: ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பல் கடந்த செப்டம்பர் மாதம் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இது முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பல் ஆகும். இந்தக் கப்பலுடன் போர் விமானங்களை ஒருங்கிணைக்கும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள தேசிய ராணுவ பயிற்சி மையத்தில் (என்டிஏ) 143-வது குழு பயிற்சியை முடித்துள்ளது. பயிற்சி முடித்தவர்களை கடற்படை தலைமை தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார் நேற்று சந்தித்தார். பின்னர் அவர் கூறியதாவது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பயங்கரவாத செயலை முன்கூட்டியே தடுக்கும் வகையில் கோவையில் தீவிரவாத தடுப்பு பிரிவு https://ift.tt/GarCD9w

படம்
சென்னை: கோவையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கார் சிலிண்டர் வெடித்தது. இதில், ஜமேஷா முபின் என்ற இளைஞர் உயிரிழந்தார். அவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் அண்மையில் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் தீவிரவாத செயல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுத்து நிறுத்த சிறப்பு பிரிவை உருவாக்குமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜி-20 அமைப்புக்கு இன்று முதல் இந்தியா தலைமை: 100 பாரம்பரிய சின்னங்கள் மின்னொளியில் ஜொலிக்கும் https://ift.tt/vySHZ0C

படம்
புதுடெல்லி: ஜி-20 அமைப்புக்கு இன்று முதல் இந்தியா தலைமை தாங்குவதை முன்னிட்டு, நாடு முழுவதும் சுமார் 100 பாரம்பரிய சின்னங்கள், ஜி-20 அடையாள சின்னத்துடன் மின்னொளியில் ஜொலிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜி-20 அமைப்பில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதிஅரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள், ஜி-20 அமைப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் தலைமை ஏற்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உக்ரைன் போர் முடிவுக்கு வராததால் பொருளாதார நெருக்கடி: இந்தியாவிடம் உதவி கோருகிறது ரஷ்யா

படம்
புதுடெல்லி: ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும்ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில், ரஷ்ய தொழில் நிறுவனங்கள், தங்களின் உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்கள், உதிரிபாகங்கள் இல்லாமல் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. இதனால், கார், விமான தயாரிப்புக்குத் தேவையான முக்கிய உதிரிபாகங்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பொருட்களை ஏற்றுமதிசெய்யுமாறு, இந்தியாவிடம் ரஷ்யா வேண்டுகோள் விடுத்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத்தில் இன்று முதல்கட்ட தேர்தல்: 89 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு https://ift.tt/FcNT4hP

படம்
அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைக்கு முதல்கட்டமாக இன்று 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. சட்டப்பேரவையின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளது. இதையடுத்து, 182 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதுச்சேரி | மணக்குள விநாயகர் கோயில் யானை ‘லட்சுமி’ நடைபயிற்சியில் மயங்கி விழுந்து திடீர் மரணம்: மீளா துயரில் பக்தர்கள் https://ift.tt/DaC3ht5

படம்
புதுச்சேரி: ஓய்வில் இருந்த மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி நடைபயிற்சியின் போது மயங்கி விழுந்து இன்று காலை உயிரிழந்ததால் பக்தர்கள் சோகமடைந்துள்ளனர். புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1996ம் ஆண்டு ஐந்து வயதில் லட்சுமி யானை வந்தது. புதுச்சேரியில் உள்ள பக்தர்களுக்கு மிகவும் நெருக்கமான யானையாக லட்சுமி திகழ்ந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மணக்குள விநாயகர் கோவிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் யானை லட்சுமியை தரிசிக்காமல் சென்றதில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மின் கட்டண மோசடி: ரூ.1.29 லட்சத்தை இழந்த முன்னாள் ராணுவ வீரர் https://ift.tt/ERtHhKS

படம்
பஞ்ச்குலா: ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா நகரத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ கர்னல் குர்கிரத் சிங் (62). இவரது மொபைல் போனுக்கு அக்.16-ம் தேதி குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், கடந்த மாதம் செலுத்த வேண்டிய மின் கட்டணம் இன்னும் செலுத்தப்படவில்லை. உடனடியாக கட்டணத்தை செலுத்தாவிட்டால் இன்றிரவே மின்சாரம் துண்டிக்கப்படும். உடனே இந்த மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து பதற்றமடைந்த குர்கிரத் சிங் குறுஞ்செய்தியில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்டார். எதிர்முனையில் பேசிய நபர் மின்துறை அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். ஏற்கெனவே மின் கட்டணத்தை செலுத்தியதாக கூறிய ராணுவ வீரரிடம் குயிக்கர் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு வழக்கின் குற்றவாளியை கொல்ல சதி: மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு https://ift.tt/WxQKrEZ

படம்
பெங்களூரு: மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு வழக்கின் குற்றவாளி முகமது ஷரீக்கை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19-ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தம் பூஜாரி (37) காயமடைந்தார். அதில் பயணித்த முகமது ஷரீக் (24) பலத்த‌ தீக்காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராவணன் மாதிரி பிரதமர் மோடிக்கு 100 தலையா இருக்கு? - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே https://ift.tt/w27cPHQ

படம்
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ‘‘ராவணன் மாதிரி பிரதமர் மோடிக்கு 100 தலையா இருக்கு?’’ என கிண்டலாக கூறினார். குஜராத் மாநிலத்தில் முதல் கட்ட சட்டப்பேரவை தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் மனித குலத்துக்கு நீடிக்கும் அச்சுறுத்தல்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கருத்து https://ift.tt/KfHNnJM

படம்
புதுடெல்லி: எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் மனித குலத்துக்கு அச்சுறுத்தல் நீடிக்கிறது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். முஸ்லிம் அறிஞர்களின் மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, இந்தோனேசியாவைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட முஸ்லிம் அறிஞர்கள் பங்கேற்றனர். இதில் தீவிரவாதத்தை தடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீன அரசுக்கு எதிராக டேட்டிங் செயலிகள், டெலிகிராம் மூலம் தகவல் பரப்பும் போராட்டக்காரர்கள்

படம்
பெய்ஜிங்: சீனாவில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராடும் மக்கள் டேட்டிங் செயலி, டெலிகிராம் மூலம் தகவல் பரப்புகின்றனர். சீனாவில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஊரடங்கு காரணமாகத்தான், உரும்கி நகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டபோது, 10 பேர் வெளியேற முடியாமல் இறந்தனர் என சமூக ஊடகத்தில் தகவல் பரவியது. இது போராட்டத்தை தீவிரப்படுத்தியது. மக்கள் போராட்டம் தொடர்பான தகவல்கள், வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவுவதை தடுக்க சீன அரசுநடவடிக்கை எடுத்து வருகிறது. சென்சார்கள் மூலம் மக்கள் போராட்டம் தொடர்பான தகவல்களை அரசு அழித்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்கள் போராட்டம் பரவுவதால் நெருக்கடி: சீனாவில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்வு

படம்
பெய்ஜிங்: சீனாவின் பல்வேறு நகரங்களில் பொது முடக்கம் அமலில் இருப்பதை எதிர்த்து மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல்வேறு நகரங்களுக்கும் போராட்டம் பரவுவதால், சீன அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், சீனாவில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. சீனாவில் கடந்த 3 நாட்களாக தினமும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு 39,791 பேர்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அசாம் மாநில பல்கலைக்கழகத்தில் ராகிங் கொடுமை தாங்க முடியாமல் மாடியில் இருந்து குதித்த மாணவன் https://ift.tt/hdY8SNu

படம்
குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் திப்ரூகர் பல்கலைக்கழகம் மிகவும் பிரபலமானது. இங்கு விடுதியில் தங்கிப் படித்து வந்த வணிகவியல் துறை முதலாம் ஆண்டு மாணவர் ஆனந்த் சர்மாவை, சீனியர் மாணவர்கள் நேற்று ராகிங் செய்துள்ளனர். அவர்களின் ராகிங் கொடுமையில் இருந்து தப்பிக்க, பல்கலைக்கழகத்தின் 2-வது மாடியில் இருந்து ஆனந்த் சர்மா கீழே குதித்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த அந்த மாணவரை, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அவர் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கிறார். இதுகுறித்து மாணவரின் தாய் சரிதா சர்மா போலீஸில் புகார் அளித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஷிரத்தாவின் மோதிரத்தை புதிய தோழிக்கு பரிசளித்தார்: அப்தாப் வழக்கில் போலீஸ் தகவல் https://ift.tt/0KzcLAO

படம்
புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஷிரத்தா வாக்கரை கொலை செய்த அப்தாப் அமீன் (28) குறித்து டெல்லி போலீஸார் நேற்று கூறியதாவது. ஷிரத்தாவின் உடல் பாகங்களை போலீஸார் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது மண்டை ஓடு இன்னும் கிடைக்கவில்லை. ஷிரத்தா வாக்கர் அணிந்திருந்த மோதிரத்தை தனது புதிய தோழிக்கு அப்தாப் பரிசாக வழங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கொலீஜியம் நடைமுறை இந்த மண்ணின் சட்டம்: மத்திய அரசு பின்பற்ற உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல் https://ift.tt/xHPyn0F

படம்
புதுடெல்லி: கொலீஜியம் நடைமுறை இந்த மண்ணின் சட்டம் என்றும் இதை மத்திய அரசு பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான குழு (கொலீஜியம்) நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி களை நியமிப்பதற்கான பரிந் துரையை மத்திய அரசுக்கு வழங்குகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னை | ஆங்கில மீடியத்தில் படித்துவிட்டு தமிழ் இலக்கியம் படிப்பில் சேர்ந்த கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை https://ift.tt/VeI703n

படம்
சென்னை: ஆவடியில் தமிழ் இலக்கியம் பயின்றுவந்த கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆவடி அருகே கோயில் பதாகை, மசூதி தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பூபதி (45). இவரது மனைவி மகாலட்சுமி (38). இவர்களுக்கு திவ்யா (17), தீபா (17) ஆகிய இரட்டை மகள்கள் உள்ளனர். இவர்களில் திவ்யா, அம்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் செவிலியர் படிப்பு படித்து வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத்தில் டிச.1-ல் முதல்கட்ட தேர்தல்: இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது https://ift.tt/K1VweYz

படம்
காந்திநகர்: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு டிச.1-ல் நடைபெறும் நிலையில், இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. முதல்கட்டத்தில் 89 தொகுதிகளுக்கும், 2-ம் கட்டத்தில் 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ம.பி. நிதி நிறுவனத்தில் 16 கிலோ தங்கம் கொள்ளை https://ift.tt/FLYHv6Q

படம்
ஜபல்பூர்: மத்திய பிரதேச மாநிலம் கட்னி நகர காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.கே. ஜெயின் கூறியதாவது. கட்னியின் பார்கவான் பகுதியில் தங்கத்தை அடமானம் பெற்று கடன் வழங்கும் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவன கிளைக்குள் காலை 10.30 மணியளவில் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்கள், ஊழியர்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி லாக்கர்களை திறந்து 16 கிலோ தங்க நகைகள் மற்றும் 25 லட்ச ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்து தப்பியுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாரதியார் இல்லத்தை நினைவகமாக மாற்றுவது யார்? உ.பி, அரசு தீவிரம்; தமிழக அரசின் முயற்சிக்கு சிக்கல் https://ift.tt/qj6zrvL

படம்
புது டெல்லி: உத்தர பிரதேசம் வாரணாசியின் ஹனுமர் படித்துறை பகுதியில் பாரதியார் இளம் வயதில் வாழ்ந்த இல்லம் உள்ளது. 'சிவமடம்' என்றழைக்கப்படும் இங்கு பாரதியார் நான்கரை ஆண்டுகள் வாழ்ந்தார். தற்போது இந்த இல்லத்தில் பாரதியாரின் சகோதரி மருமகன் பி.வி.கிருஷ்ணன் (97), அவரது குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த 2014-ம் ஆண்டில் பாஜகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய், பாரதியார் வசித்த இல்லத்தை நினைவகமாக மாற்ற குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்காக முழு வீட்டையும் அரசிடம் ஒப்படைக்க கிருஷ்ணன் மறுத்தார். இந்நிலையில், பாரதியார் குடும்பத்தினரிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது ஒரு சிறிய அறையை மட்டும் நினைவகமாக்க ஒத்துக் கொள்ளப்பட்டது. பாரதியாரின் மார்பளவு சிலையுடன் ஒரு நூலகம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழக அரசு கடந்த ஜுலை 5-ம் தேதி அரசாணை வெளியிட்டது. பாரதி குடும்பத்தாரின் ஒப்புதல் பெற்று ரூ.18 லட்சம் செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில...

லேசான காய்ச்சல் ஏற்படும்போது ஆன்டிபயாடிக் மருந்துகளை தவிருங்கள்: மருத்துவர்களுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல் https://ift.tt/imSDtFB

படம்
புது டெல்லி: உடலில் காய்ச்சல், சளி ஏற்படும்போது மருத்துவர்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரை செய்வது வழக்கம். உலக அளவில் ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகம் உட்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்நிலையில், கணிசமான இந்தியர்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் பலனளிக்காமல் போவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. இதனால், மருத்துவர்கள் லேசான காய்ச்சல் ஏற்படும்போது தேவைக்கு அதிகமாக ஆன்டிபயாடிக் மருந்துகள் பரிந்துரைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது. அதில், தோல் மற்றும் மென்மையான திசு தொற்றுக்கு 5 நாட்களுக்கு மட்டுமே ஆன்டிபயாடிக் பரிந்துரைக்க வேண்டும். கம்யூனிட்டி அக்யூயர்டு நிமோனியாவுக்கு 5 நாட்களுக்கும், ஹாஸ்பிடல் அக்யூயர்டு நிமோனியாவுக்கு 8 நாட்களுக்கும் மட்டுமே ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டும். கண்காணிப்பின் அடிப்படையில் வழங்கப்படும் எம்பரிக் ஆன்டிபயாடிக் சிகிச்சை, தீவிர தொற்று ஏற்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று ஐசிஎம்ஆர் குறிப்பிட...

கடுமையான கரோனா கட்டுப்பாடுகள்: அடுக்குமாடி கட்டிட தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு - சீன அதிபர் ஜின்பிங்குக்கு எதிராக மக்கள் போராட்டம்

படம்
ஷாங்காய்: சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் கரோனா ஊரடங்கு அமலில் இருந்த அடுக்குமாடி கட்டிட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இதனால் கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரும் போராட்டம் சீனா முழுவதும் பரவியது. சீனாவில் கரோனா தொற்று ஓயவில்லை. அங்கு இப்போது கரோனா தொற்று வேகம் எடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் சுமார் 40 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சீனாவின் பல பகுதிகளில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதிமுறைகள் அமலில் உள்ளன. சுமார் 3 ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகளை சந்தித்துள்ள சீன மக்கள், ஆட்சியாளர்கள் மீது வெறுப்படைந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அருவியில் செல்ஃபி எடுத்தபோது கர்நாடக மாணவிகள் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு https://ift.tt/NrVDtjo

படம்
பெலகாவி: அருவியில் செல்ஃபி எடுத்தபோது, கர்நாடக மாணவிகள் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் பெலகாவி நகரில் உள்ள அராபிக் பயிற்சி மையத்தைச் சேர்ந்த 40 மாணவிகள், கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லை அருகேயுள்ள கிட்வட் அருவிக்கு நேற்று முன்தினம் சுற்றுலா சென்றனர். பெலகாவி நகரிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள இந்த அருவி, கோல்காபூர் மாவட்டம் சந்கட் தாலுகாவில் உள்ளது. மாணவிகள் சிலரின் பெற்றோரும் உடன் சென்றிருந்தனர். அருவி நீரில் மாணவிகள் அனைவரும் குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் 5 மாணவிகள் சற்று முன்னேறி, தண்ணீர் விழும் இடத்துக்கு அருகில் சென்று, செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் கால் இடறி, 15 அடி பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் விழுந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உலக நன்மைக்கு வழிகாட்ட நடவடிக்கை எடுப்போம்: ஜி-20 தலைமை இந்தியாவுக்கு பெருமை - 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி https://ift.tt/Q8a2qys

படம்
புதுடெல்லி: ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகிப்பது பெருமை அளிக்கிறது. அதன் மூலம் உலக நன்மைக்கு வழிகாட்ட நடவடிக்கை மேற்கொள்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். வானொலியில் நேற்று ஒலிபரப்பான 95-வது 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது. வரும் டிசம்பர் 1-ம் தேதி ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்கிறது. இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை அளிக்கிறது. ஜி-20 தலைமை இந்தியாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பையும் வழங்கியுள்ளது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உலக நன்மை, ஒற்றுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இந்தியா வழிகாட்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வடபழனியில் போலி நிறுவனம் தொடங்கி வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி https://ift.tt/LzWS9ky

படம்
சென்னை : சென்னை வடபழனியில் போலி நிறுவனம் தொடங்கி வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராமாபுரத்தை சேர்ந்த ஜோஸ்பின் ராயன் என்பவர் அளித்த புகார் மனுவில், ‘அரசின் அனுமதியின்றி போலியான பெயரில் அலுவலகம் நடத்தி படித்த இளைஞர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக, பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை பெற்று ஏமாற்றிய திருவேற்காடு பகுதியை சேர்ந்த ரமேஷ் (38) என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தீவிரவாத இயக்கங்களில் சேராத காஷ்மீரின் 5 மாவட்ட இளைஞர்கள் https://ift.tt/2oE8CrU

படம்
பாரமுல்லா : ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பிறகு, தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தீவிரவாதத்தை கைவிடுபவர்களின் மறுவாழ்வுக்கு திட்டங்கள், தீவிரவாத பின்னணி உள்ளவர்களுக்கு அரசு வேலை மறுப்பு போன்ற பல திட்டங்களுக்கு பலன் கிடைத்து வருகிறது. அதன்படி, தற்போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 10 மாவட்டங்களில் குப்வாரா, கந்தர்பால், பந்திபோரா, பாரமுல்லா, அனந்தநாக் ஆகிய 5 மாவட்டங்களில் இருந்து ஒரு இளைஞர் கூட தீவிரவாத இயக்கங்களில் இந்த ஆண்டு இதுவரை சேரவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அத்துடன், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஜம்மு காஷ்மீரில் குடிபெயர்ந்தால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் இருந்தாலும், இதுவரை 5 லட்சம் புதிய வாக்காளர்கள் ஜம்மு காஷ்மீரில் பெயர் பதிவு செய்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சங்கீத நாடக அகாடமி புரஸ்கார் விருதுக்கு 128 பேர் தேர்வு https://ift.tt/HK3XxEm

படம்
புதுடெல்லி : கடந்த 2019, 2020 மற்றும் 2021-ம்ஆண்டுகளில் இசை, நடனம், நாடகம், பாரம்பரிய இசை/நடனம்/நாடகம், பொம்மை கலை துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பை அளித்த வெற்றியாளர்கள் 128 பேருக்கு அகாடமி புரஸ்கார் விருதுகளை சங்கீத நாடக அகாடமி நேற்று அறிவித்தது. மேலும், கலைத்துறையில் சிறந்து விளங்கிய 10 பிரபலங்களை அகாடமி கலைஞர்களாகவும், சங்கீத நாடக அகாடமியின் பொதுக்குழு அறிவித்துள்ளது. புரஸ்கார் விருது பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும், அகாடமி கலைஞர்களுக்கு ரூ.3 லட்சம் ரொக்கப்பரிசு, தாமிர பத்திரம் அளிக்கப்படும். தவிர விடுதலையின் அமிர்த மகோத்ஸவத்தின் கீழ், 86 கலைஞர்களுக்கு சங்கீத நாடக அகடாமி அம்ரித் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திகார் சிறையில் விருந்தினர்களை சந்தித்த டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் https://ift.tt/Xjk9xQa

படம்
புதுடெல்லி : டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் (57) சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த மே 30-ம் தேதி கைது செய்யப்பட்டு 6 மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் சத்யேந்தர் ஜெயினுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டது, ஒருவர் மசாஜ் செய்வது, ஓட்டல்களில் இருந்து உணவு வகைகள் வழங்கப்படுவது என தனித்தனி வீடியோக்கள் வெளியாகி வைரலானது. அமலாக்கத் துறையும் புகார் தெரிவித்ததால், சிறை கண்காணிப்பாளர் (7) அஜித் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் 12 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த சூழ்நிலையில், கடந்த செப்டம்பர் 12-ம் தேதி இரவு 8 மணிக்கு பதிவான மேலும் ஒரு வீடியோ நேற்று வெளியானது. அந்த வீடியோவில், சிறை அறையில் உள்ள ஜெயினுடன் சாதாரண உடையணிந்த 3 பேர் பேசிக் கொண்டிருக்கின்றனர். அடுத்த சில நிமிடங்களில் இப்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள கண்காணிப்பாளர் அஜித் குமார் அங்கு வருகிறார். இதையடுத்து அங்கிருந்த 3 பேரும் வெளியேறுகின்றனர். பின்னர் குமாரும் ஜெயினும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த வீ...

மும்பை தீவிரவாத தாக்குதல் நினைவு தினம்: உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி https://ift.tt/WcoxVhm

படம்
புதுடெல்லி : அரசியல் சாசன தின நிகழ்ச்சி உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசுகையில், ‘‘மும்பை தீவிரவாத தாக்குதல் நினைவு தினத்தை நாம் அனுசரிக்கிறோம். 14 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசியலமைப்பு மற்றும் பொதுமக்கள் உரிமைகள் தினத்தை நாடு கொண்டாடிக் கொண்டிருந்தபோது, மனிதநேயத்தின் எதிரிகள் இந்தியாவில் மிகப் பெரிய தீவிரவாத தாக்குதலை நடத்தினர். இதில் உயிரிழந்தவர்களுக்கு நான் புகழஞ்சலி செலுத்துகிறேன்’’ என்றார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘‘மும்பை தீவிரவாத தாக்குதல் நினைவு தினத்தில், இத்தாக்குதலில் உயிரிழந்தவர்கள் அனைவரையும் நாடு நன்றியுடன் நினைவுகூர்கிறது. தீவிரவாதிகளை எதிர்த்து வீரத்துடன் போரிட்டு, தங்கள் உயிரை தியாகம் செய்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு நாடு அஞ்சலி செலுத்துகிறது’’ என கூறியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் வெற்றி | 9 செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தியது - பிரதமர் மோடி வாழ்த்து https://ift.tt/eM8Ert3

படம்
சென்னை : பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் மூலம் இஓஎஸ்-06 உள்ளிட்ட 9 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே கணித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவைப்படும் தொலையுணர்வு வகை செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னை | நடிகர் வீட்டில் 200 பவுன் கொள்ளை: 3 பேர் நேபாளத்தில் கைது https://ift.tt/F7PyOpo

படம்
சென்னை: சென்னை நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனியில் வசிப்பவர் நடிகர் ஆர்.கே என்ற ராதாகிருஷ்ணன் (54). ‘எல்லாம் அவன் செயல்’, ‘அவன் இவன்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 10-ம் தேதி வெளியே சென்றிருந்தார். வீட்டில் அவரது மனைவி ராஜி(48) மட்டும் தனியாக இருந்தார். அப்போது, பின்பக்க கதவு வழியாக வீட்டுக்குள் புகுந்த 3 பேர், ராஜியை கட்டிப் போட்டுவிட்டு 200 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆஸி. பெண் கொலையில் தேடப்பட்டவர் டெல்லியில் கைது

படம்
புதுடெல்லி : ஆஸ்திரேலிய பெண் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் டெல்லியில் அண்மையில் கைது செய்யப்பட்டார். இவரைப் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.5.17 கோடி பரிசு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2018-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தைச் சேர்ந்த 24 வயதான தோயா கார்டிங்லி என்ற பெண்ணை, இந்தியாவைச் சேர்ந்த ரஜ்விந்தர் சிங் (38) கொலை செய்தார். ரஜ்விந்தர் சிங், குயின்ஸ்லாந்தில் நர்ஸாக வேலை பார்த்து வந்தார். கொலைக்குப் பிறகு ரஜ்விந்தர் சிங், தனது மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.107 கோடி மோசடி செய்த கேரள மருமகன் - துபாய் தொழிலதிபர் புகார் https://ift.tt/we52EHh

படம்
கொச்சி : துபாயை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர் (என்ஆர்ஐ) அப்துல் லஹிர் ஹாசன். தொழிலதிபரான இவர் தனது மகளை கடந்த 2017-ம் ஆண்டு, கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த முகம்மது ஹபீஸ் என்பவருக்கு திருமணம் செய்துகொடுத்தார். இந்நிலையில் மருமகன் மீது தொழிலதிபர் ஹாசன், எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா காவல் நிலையத்தில் 3 மாதத்துக்கு முன் புகார் அளித்தார். அவர் தனது புகாரில், “எனது மகளுக்கு பரிசாக அளித்த 1,000 பவுன் தங்க நகைகள் தவிர, ரூ.107 கோடிக்கு மேல் எனது மருமகன் என்னை மோசடி செய்துவிட்டார்” என்று கூறியிருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாட்டின் பாரம்பரியத்தில் பெருமை கொள்வோம் - அடிமை மனநிலையை கைவிட பிரதமர் மோடி வலியுறுத்தல் https://ift.tt/a3BjPMg

படம்
புதுடெல்லி : ‘‘அடிமை மனநிலையிலிருந்து வெளியேறி, நாட்டின் வளமான பாரம்பரியம் பற்றி பெருமை கொள்ள வேண்டிய நேரம் இது’’ என பிரதமர் மோடி கூறியுள்ளார். முகாலயர்களை எதிர்த்து போரிட்டு அசாம் கலாச்சாரத்தை காத்த வீரர் லச்சித் போர்புகானின் 400-வது பிறந்த ஆண்டின் நிறைவு விழா நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது. இதில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உட்பட பலர் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஷிரத்தாவின் உடல் உறுப்புகளை அகற்றும்போது ஆதாரங்களை விட்டுவிடாமல் இருக்க அப்தாப் கவனமாக செயல்பட்டுள்ளார் - டெல்லி போலீஸார் https://ift.tt/e27gAEU

படம்
புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த அப்தாப் (28). இவரது காதலி ஷிரத்தா வாக்கர் (26). இவர்கள் இருவரும் டெல்லியில் தனியாக வசித்து வந்துள்ளனர். ஷிரத்தாவை கொலை செய்த அப்தாப், உடல் பாகங்களை 35 துண்டுகளாக வெட்டி தெற்கு டெல்லியில் உள்ள வனப்பகுதியில் வீசியது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த டெல்லி போலீஸார், அப்தாப்பை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால், அப்தாப் குற்றவாளி என நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாமல் போலீஸார் திணறி வருகின்றனர். இதுகுறித்து டெல்லி போலீ ஸார் கூறியதாவது: அப்தாப், ஷிரத்தா வசித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு தெருக்களில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவானவற்றை ஆராய்ந்தோம். அவர்கள் தங்கியிருந்த சத்தர்பூர் பஹாடி பகுதியில் அமைந்துள்ள சுமார் 150 சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் ஆராயப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்தில் கிடைத்த வீடியோ பதிவில் அப்தாப், தனது வீட்டிலிருந்து காலை 4 மணிக்கு வெளியே வருவது தெரிய வந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமி...

பாஜகவின் ‘ஸ்லீப்பர் செல்கள்’ ஊடுருவல் - உத்தராகண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் புகார் https://ift.tt/7aNTUig

படம்
டேராடூன் : பாஜகவின் ‘ஸ்லீப்பர் செல்கள்’ கட்சிக்குள் ஊடுருவியுள்ளன. அவர்கள் எல்லா வகையிலும் கட்சியை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றனர் என்று உத்தராகண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கரண் குற்றம் சாட்டியுள்ளார். உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலத் தலைவர் கரண் மகாரா பேசியதாவது: காங்கிரஸ் கட்சிக்குள் பலரை பாஜக நுழைத்துள்ளது. அவர்கள் பாஜக ஆதரவாளர்கள். காங்கிரஸை வலுப்படுத்த யார் முயன்றாலும் அவர்கள் நிச்சயம் எதிர்ப்பார்கள் அல்லது வலுப்படுத்த முயற்சிப்பவர் மீது களங்கம் சுமத்துவார்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒற்றைப் பெயர் இருந்தால் விசா இல்லை யுஏஇ அறிவிப்பு

படம்
புதுடெல்லி : வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி பாஸ்போர்ட்டில் ஒற்றை பெயர் மட்டும் இருந்தால், அந்த நபருக்கு விசா வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விசா வழங்கப்பட்டிருந்தால் அந்த நபர் அனுமதிக்க முடியாத பயணியாக கருதப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

போலி டெலிபோன் நிறுவனம் நடத்தி மோசடி: சென்னையில் 2 பேர் கைது https://ift.tt/Llh3Dj8

படம்
சென்னை: போலி டெலிபோன் நிறுவனம் நடத்தி வெளிநாட்டு போன் அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி பண மோசடியில் ஈடுபட்டதாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னையில் போலியான டெலிபோன் நிறுவனம் நடத்தி, வெளிநாட்டு போன் அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி பெரிய அளவில்மோசடி நடப்பதாக மத்திய உளவுப்பிரிவு போலீஸார் கண்டுபிடித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இலவச மின்சாரம் பெறுவதற்கு பதில் மின்சாரத்தை விற்று வருவாய் ஈட்ட முடியும் - குஜராத் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் https://ift.tt/2WCFq0J

படம்
காந்திநகர் : அரசிடமிருந்து பொதுமக்கள் மின்சாரத்தை இலவசமாக பெறுவதற்கு பதில் அதிலிருந்து வருவாய் ஈட்ட முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அம்மாநிலத்தின் ஆரவள்ளி மாவட்டம் மொடசா நகரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: குஜராத் மக்கள் மின்சாரத்தை இலவசமாக பெறுவதற்கு பதில் அதிலிருந்து வருவாய் ஈட்ட முடியும். இதற்கான வழி எனக்கு தெரியும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வேலைக்கு வராத மருத்துவர்கள் கருப்புப் பட்டியலில் சேர்ப்பு https://ift.tt/Lfsn2j3

படம்
டேராடூன் : உத்தரகாண்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் சலுகை கட்டணத்தில் படிப்பவர்கள் குறிப்பிட்ட சில ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணி செய்ய வேண்டும். ஆனால், இவ்வாறு அரசு வேலையில் இருக்கும் மருத்துவர்கள் சிலர் முறையான தகவல் இல்லாமல் வேலைக்கு வருவதை நிறுத்திவிட்டு தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து விடுகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக முறையான தகவல் எதுவும் வழங்காமல் தலைமறைவான 109 மருத்துவர்களை சுகாதாரத் துறை தேடி வருகிறது. அவர்கள் பெயரை கருப்புப் பட்டியலில் சேர்க்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த 109 மருத்துவர்கள் கடந்த சில ஆண்டுகளாக பணிக்கு வரவில்லை. தங்களை பற்றிய தற்போதைய விவரங்கள் எதையும் அதிகாரிகளுக்கு அவர்கள் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அவர்களை அரசு வேலையிலிருந்து நீக்க சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. இனி அவர்கள் அரசுத் துறையில் வேலைபெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஷிரத்தா வழக்கில் அப்தாபுக்கு பாலிகிராப் சோதனை https://ift.tt/FzOAveY

படம்
புதுடெல்லி : டெல்லி மஹரவுலி பகுதியில் இளம்பெண் ஷிரத்தாவை அவரது காதலன் அப்தாப் அமீன் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி வனப்பகுதியில் வீசியது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்தாப் வாக்குமூலத்தை அடிக்கடி மாற்றி வருகிறார். குறிப்பாக ஷிரத்தாவின் உடல் பாகங்களை எங்கெல்லாம் வீசினார் என்பது குறித்த தகவல்களை கூற மறுக்கிறார். தலை உள்ளிட்ட முக்கிய பாகங்கள் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது செல்போனை மும்பையில் வீசியதாக அப்தாப் கூறியுள்ளார். அந்த செல்போனும் இதுவரை கிடைக்கவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு சம்பவம் - இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் என்ற இஸ்லாமிய அமைப்பு பொறுப்பேற்பு https://ift.tt/4nMzS8I

படம்
பெங்களூரு : மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதன் பின்னணி குறித்து தனிப்படை போலீஸாரும், என்ஐஏ அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19-ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில், ஓட்டுநர் புருஷோத்தம் பூஜாரியும்(37), அதில் பயணம் செய்த முகமது ஷரீக்கும்(24) காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீனாவில் ஐபோன் தயாரிப்பு ஆலையில் வன்முறை: பின்புலம் என்ன?

படம்
சீனாவில் ஐபோன்களை தயாரிக்கும் உலகின் மிகப்பெரிய பாக்ஸ்கான் ஆலையில் நேற்று திடீரென வன்முறை மூண்டது. ஐபோன் ஆலை பணியாளர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து பாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: ஊதியம் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது தொடர்பாக செங்சோவ் ஆலை பணியாளர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுபோன்ற சூழ்நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க பணியாளர்களுடனும், அரசுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காரைக்குடி | ஆசிரமத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போலி சாமியார் உட்பட இருவர் கைது https://ift.tt/krstEMb

படம்
காரைக்குடி: திருப்பத்தூர் அருகே வேட்டங்குடிப்பட்டியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (50). இவர் மானகிரி பகுதியில் ஆசிரமம் வைத்து குறி சொல்லி வருகிறார். இந்நிலையில், அவரிடம் குடும்ப பிரச்சினைக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் நலப் பணியாளராக பணிபுரியும் 35 வயது பெண் ஒருவர் குறி கேட்கச் சென்றார். அப்போது அந்த பெண்ணுக்கும், சாமியாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து தனது 10 வயது மகனையும், 8 வயது மகளையும் சாமியாரிடம் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் ஆசிரமத்தில் அச்சிறுமிக்கு சாமியார் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தந்தை மாவட்ட எஸ்பி செந்தில்குமாரிடம் புகார் கொடுத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

என்னை கொன்று துண்டு துண்டாக்கி விடுவான் - மகாராஷ்டிராவில் 2 ஆண்டுக்கு முன்பே போலீஸில் புகார் அளித்த ஷிரத்தா வாக்கர் https://ift.tt/dRNBWbj

படம்
மும்பை : மகாராஷ்டிராவை சேர்ந்த அப்தாப் அமீன் பூனாவாலா (28) என்ற இளைஞரும் ஷிரத்தா வாக்கர் (26) என்ற பெண்ணும் டெல்லியில் ஒன்றாக வசித்து வந்தனர். கடந்த மே 18-ம் தேதி ஷிரத்தாவை அப்தாப் கொலை செய்தார். பிறகு அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி அருகில் வனப் பகுதியில் வீசினார். இந்த வழக்கில் அப்தாபை டெல்லி போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஷிரத்தா, மகாராஷ்டிராவில் உள்ள தனது சொந்த ஊரான வசாய் நகரின் திலுஞ்ச் என்ற இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் அளித்த புகாரில், “அவன் என்னை கொன்று விடுவான், துண்டு துண்டாக வெட்டி விடுவான்” என்று புகார் தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்காவின் விர்ஜினியாவில் வால்மார்ட் அங்காடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழப்பு

படம்
செசபீக் : அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ளது செசபீக் நகரம். இங்குள்ள சாம்ஸ் சர்க்கிள் என்ற பகுதியில் அமெரிக்காவின் மிகப்பெரிய சில்லரை வர்த்தக நிறுவனம் வால்மார்ட் அங்காடி உள்ளது. இங்கு கடந்த செவ்வாய்க் கிழமை இரவு 10 மணிக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்திருந்தனர். வரும் சனிக்கிழமை அமெரிக்காவில் ‘தேங்க்ஸ்கிவிங்’ என்றழைக்கப் படும் நன்றியளித்தல் விடுமுறை கொண்டாடப்படுகிறது. அதற்கான பொருட்களை வாங்குவதற்கு அங்காடிக்கு வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மங்களூரு குண்டு வெடிப்பு வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைக்க கர்நாடகா முடிவு https://ift.tt/cQVS6is

படம்
பெங்களூரு : கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19-ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தம் பூஜாரி (37) காயமடைந்தார். குக்கர் குண்டுடன் ஆட்டோவில் பயணித்த முகமது ஷரீக் (24) தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். ஷரீக் தனது மத அடையாளத்தை மறைத்து செயல்பட்டது, போலி ஆதார் அட்டை மூலம் சிம் கார்டுவாங்கியது, ஷிமோகாவில் குண்டை வெடிக்க செய்து ஒத்திகையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மங்களூரு போலீஸார் 7 தனிப்படைகளை அமைத்து மைசூரு, ஷிமோகா, தமிழகத்தில் கோவை, நாகர்கோவில், கேரளாவில் கோழிக்கோடு, கொச்சி உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காசி விஸ்வநாதர் கோயிலில் தமிழர்கள் இசைக்க வேண்டும் - அறக்கட்டளையின் முதல் தமிழர் கே.வெங்கட்ரமண கனபாடிகள் விருப்பம் https://ift.tt/3zhOwHS

படம்
புதுடெல்லி : உ.பி. வாரணாசியில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயில் அறக்கட்டளைக்கு தலைவர் மற்றும் 4 செயற்குழு உறுப்பினர்கள் என 5 நிர்வாகிகள் உள்ளனர். மூன்று வருட கால இப்பதவியில் முதல்முறையாக கே.வெங்கட்ரமண கனபாடிகள் எனும் தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார். தனது நியமனம் குறித்து, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் வெங்கட்ரமண கனபாடிகள் கூறியதாவது: காசி விஸ்வநாதரை தரிசனம்செய்ய வருவோருக்கு உரியவசதிகளை செய்து தருவது, வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளுதல் எங்கள் பணியாகும். காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும் போது என்னை நியமனம் செய்த உ.பி. முதல்வர் யோகிக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தலைமை தேர்தல் ஆணையர் அரசியல் சார்பற்றவராக இருக்க வேண்டும் - உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கருத்து https://ift.tt/JtYv6aI

படம்
புதுடெல்லி : தலைமை தேர்தல் ஆணையர் அரசியல் சார்பற்றவராக இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையர்கள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்க இப்போது கடைபிடிக்கப்படும் நடைமுறையில் மாற்றம்செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜக போட்டி வேட்பாளர்கள் 12 பேர் குஜராத்தில் சஸ்பெண்ட் https://ift.tt/jtEpuJx

படம்
அகமதாபாத் : குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் பாஜக பிரமுகர்கள் 12 பேர் அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் 2 கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இரண்டு கட்ட தேர்தலுக்கான மனு தாக்கல், பரிசீலனை, மனு திரும்பப் பெறுதல் ஆகியவை முடிந்துள்ளன. முதல்கட்ட தேர்தலுக்கு இன்னும் 1 வாரமே உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்