இடுகைகள்

மார்ச், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஏப்ரல் 4 முதல் உச்ச நீதிமன்றத்தில் முழு அளவில் நேரடி விசாரணை: தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவிப்பு https://ift.tt/Z2RS53K

படம்
புதுடெல்லி: கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதால் உச்ச நீதிமன்றம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கியது. பிறகு பாதிப்பு சற்று குறைந்ததால் 17 மாதங்களுக்குப் பிறகு சில வழக்குகளை மட்டும் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி முதல் நேரடியாக விசாரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் ஏப்ரல் 4 முதல்உச்ச நீதிமன்றத்தில் முழு அளவில் நேரடி விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி என்.வி.ரமணாஅறிவித்துள்ளார். இதனால் 742 நாட்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம்அதன் வழக்கமான செயல்பாட்டுக்குத் திரும்ப உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாநிலங்களவையில் காலியாகும் 13 இடங்களுக்கான தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி தலா 5 இடங்களில் வெற்றி https://ift.tt/pNeBEjv

படம்
புதுடெல்லி: மாநிலங்களவையில் விரைவில் காலியாக உள்ள 13 இடங்களுக்கான தேர்தலில், பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளைச் சேர்ந்த தலா 5 பேர் வெற்றி பெற்றுள்ளனர். கேரளாவில் இடது முன்னணிக்கு 2 இடமும் காங்கிரஸ் கட்சிக்கு ஓரிடமும் கிடைத்துள்ளது. பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, கேரளா, அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் விரைவில் காலியாக உள்ள 13 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் பஞ்சாபிலிருந்து ஆம் ஆத்மி கட்சியின் 5 பேர், நாகாலாந்து, இமாச்சலப் பிரதேசத்திலிருந்து பாஜகவைச் சேர்ந்த தலா 1 உறுப்பினர் என 7 பேர் போட்டியின்றி தேர்வாகினர். மீதமுள்ள 7 இடங்களுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆவணப்படம், குறும்படம் தயாரிப்பு உட்பட நான்கு திரைப்பட அமைப்புகள் என்எப்டிசி உடன் இணைப்பு https://ift.tt/sPOCNEd

படம்
புதுடெல்லி: நான்கு திரைப்பட அமைப்புகள் தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்துடன் (என்எப்டிசி) இணைக்கப்பட்டுள்ளன. ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்களைத் தயாரிப்பது, திரைப்பட விழாக்கள் நடத்துவது,படங்களைப் பாதுகாப்பது போன்றவற்றை தனித்தனி அமைப்புகள் செயல்படுத்துகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமைதி பேச்சுவார்த்தை தொடரும்: ரஷ்யா, உக்ரைன் பிரதிநிதிகள் அறிவிப்பு

படம்
கீவ்: ரஷ்யா, உக்ரைன் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை தொடரும்என்று இரு நாடுகளும் அறிவித்துள்ளன. கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகளிடையே போர் தீவிரமடைந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி முயற்சி செய்து வருகிறது. துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ரஷ்யா, உக்ரைன் பிரதிநிதிகள் அண்மையில் சந்தித்துப் பேசினர். அப்போது தலைநகர் கீவ், செர்னிஹிவ் நகரங்களில் படைகளை குறைக்க ரஷ்யா ஒப்புக் கொண்டது. இதன் ஒரு பகுதியாக மேரிபோல் நகரில் ரஷ்ய ராணுவம் நேற்று சண்டை நிறுத்தத்தை அமல் செய்தது. அந்த நகரில் சிக்கித் தவித்த பலர் பாதுகாப்பாக வெளியேறினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

என் பதவியை பறிக்க அமெரிக்கா சதி செய்கிறது: இம்ரான் கான் குற்றச்சாட்டு

படம்
இஸ்லாமாபாத்: எனக்கு எதிராக அமெரிக்கா சதி செய்கிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தானில் பணவீக்கம் உயர்ந்து, கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சி கள் சார்பில் கடந்த 28-ம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை யில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் கரோனா கட்டுப்பாடுகள் ரத்து | ‘முகக்கவசம் கட்டாயமல்ல’ - மகாராஷ்டிர அரசு அறிவிப்பு; டெல்லியில் இனி அபராதம் இல்லை https://ift.tt/yEnJ4Oh

படம்
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 2020தொடக்கத்தில் கரோனா வைரஸ்பரவத் தொடங்கியது. இதையடுத்து, முழுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது. அந்த ஆண்டின் இறுதியில், தொற்று பரவல் குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதே நேரத்தில் கரோனா 2-வது மற்றும் 3-வது அலையால் பாதிப்பு அதிகரித்தது. அதனால், இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழுமையான ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை பல்வேறு மாநில அரசுகள் அமல்படுத்தின. பின்னர், அந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மார்ச் 31-ம் தேதியுடன் கெடு முடிந்தது; ஆதார்-பான் இணைக்காதவருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்: வருமான வரித்துறை அறிவிப்பு https://ift.tt/T1He4Ah

படம்
புதுடெல்லி: வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும். இதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மார்ச் 31-ம் தேதி ஆகும். இவ்விதம் இணைக்காதவர்களுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இவ்விதம் இணைக்காத நிரந்தர கணக்கு எண் (பான்) ஓராண்டுக்கு செல்லுபடியாகும். இதன் மூலம் மார்ச் 2023 வரை வருமான வரி ரிட்டர்னை தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரள பெண்ணுக்கு தொல்லை; போலி சினிமா தயாரிப்பாளர் பிடிபட்டார்: ஆன்லைனில் புகாரளித்த சிறிது நேரத்தில் நடவடிக்கை https://ift.tt/qx0fdBJ

படம்
சென்னை: கேரள பெண்ணுக்கு தொல்லை கொடுத்த போலி சினிமா தயாரிப்பாளர் சென்னையில் பிடிபட்டார். கேரள பெண் அங்கிருந்தவாறே ஆன்லைன் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல் ஆணையர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார். போலீஸாரின் துரித நடவடிக்கைக்கு அந்த பெண் நன்றி தெரிவித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று சென்னை காவல் ஆணையருக்கு ஆன்லைனில் புகார் ஒன்றை அளித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹைட்ரஜன் காரில் நாடாளுமன்றம் வந்தார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி https://ift.tt/s7LjSN3

படம்
புதுடெல்லி: ஹைட்ரஜன் வாயுவை எரிபொருளாக பயன்படுத்தி இயங்கும் காரில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று நாடாளுமன்றத்துக்கு வந்தார். பெட்ரோல், டீசல் எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மாற்று எரிபொருள் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். சமீபத்தில் ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் கார் உற்பத்தி திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிலையில், முதல்முறையாக ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் எலக்ட்ரிக் காரில் நாடாளுமன்றக் கூட்டத்துக்கு அமைச்சர்நிதின் கட்கரி நேற்று வந்தார். இந்தக் கார்சுற்றுச் சூழல் மாசை ஏற்படுத்தாது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 845 கி.மீ. தூரம் செல்ல முடியும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமைச்சரவையிலிருந்து முக்கிய கூட்டணி கட்சி விலகல்; பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு கவிழ்கிறது: ஏப்ரல் 3-ல் நம்பிக்கையில்லா தீர்மானம்

படம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஆளும் கூட்டணிக் கட்சி, அமைச்சரவையிலிருந்து விலகி உள்ளது. இதனால் இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெரீக்-இ-இன்சாப் கட்சி (பிடிஐ) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து பிற கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான் கான் பிரதமரானார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடும் எதிர்ப்பையும் மீறி சார்டர்ட் அக்கவுன்டன்ட் மசோதா மக்களவையில் நிறைவேற்றம் https://ift.tt/VMOTmFc

படம்
புதுடெல்லி: கடும் எதிர்ப்பையும் மீறி சார்டர்ட் அக்கவுன்டன்ட் மசோதா மக்களவையில் நிறைவேறியது. சார்டர்ட் அக்கவுன்டன்ட் சட்டம் 1949, காஸ்ட் அண்ட் வொர்க் அக்கவுன்டன்ட் சட்டம் 1959 மற்றும் நிறுவன செயலர் சட்டம் 1980 ஆகிய மூன்றிலும் திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய மசோதாவை நிறுவன விவகாரத்துறை இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித்சிங் மக்களவையில் தாக்கல் செய்தார். இதில் ஐசிஏஐ அமைப்பின் ஒழுங்குமுறை கமிட்டியில் ஐந்து உறுப்பினர்கள் இடம்பெறுவர் என்றும் அவர்களில் மூன்று பேர் பட்டய தணிக்கையாளர் அல்லாத உறுப்பினர்கள் இடம்பெறுவர் என திருத்தம் செய்யப்பட்டதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததோடு இதை தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பலாம் என வலியுறுத்தினர். ஒழுங்குமுறை குழுவின் தலைவராக நிறுவன விவகாரத்துறை அமைச்சகத்தின் செயலர் தலைவராக இருப்பார் என்ற விதி மாற்றத்துக்கு அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

துருக்கி பேச்சுவார்த்தையில் உடன்பாடு: உக்ரைனில் படையை குறைக்கிறது ரஷ்யா

படம்
இஸ்தான்புல்: ரஷ்யா, உக்ரைன் இடையே துருக்கியில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது சில விவகாரங்களில் உடன்பாடு எட்டப்பட்டது. இதன்படி உக்ரைன் தலைநகர் கீவ், செர்னிஹிவ் நகரில் படை களை குறைக்க ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆப்கனில் தொடரும் சர்ச்சை உத்தரவுகள்

படம்
காபூல்: ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்தனர். கடந்த முறை ஆட்சி செய்தது போல் அல்லாமல் பெண்களுக்கு அவர்களது உரிமைகளை அளிப்போம் என தொடக்கத்தில் உறுதி அளித்தனர். ஆனால் தலிபான்கள் ஆட்சிக்குவந்தது முதல் பெரும்பாலான பகுதிகளில் பெண் குழந்தைகள் 6-ம் வகுப்புக்கு மேல் படிக்க தடை விதிக்கப்பட்டது. புதிய கல்வியாண்டு கடந்த புதன்கிழமை தொடங்கியது. அப்போது இத்தடை விலக்கிக் கொள்ளப்படும் என பலரும் எதிர்பார்த்தனர். இதற்கு மாறாக பெண் குழந்தைகள் 6-வகுப்புக்கு மேல் படிப்பதற்கான தடையை தலிபான்கள் நீட்டித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

'ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0' - போதைப் பொருள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் டிஜிபி உத்தரவின் பின்னணி என்ன? https://ift.tt/vHg3sZl

படம்
சென்னை: தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க,‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’என்ற சிறப்பு நடவடிக்கை ஒருமாதத்துக்கு தொடங்கப்பட்டுள் ளது. தமிழகத்தில் அண்மைக் காலமாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து போதைப் பொருட்களின் விற்பனை, பதுக்கலைத் தடுத்து நிறுத்தும் வகையில், அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பி உள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்காவின் பெடெக்ஸ் சிஇஓ-வாக இந்தியர் நியமனம் https://ift.tt/2F8VAUt

படம்
நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேசஅளவில் பிரபலமான சரக்கு போக்குவரத்து நிறுவனமான பெடெக்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) ராஜ்சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள் ளார். இதுவரை இப்பதவியில் இருந்த நிறுவனர் பிரெட் ஸ்மித், பொறுப்பிலிருந்து விலகியதைத் தொடர்ந்து இவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். சமீப காலமாக அமெரிக்கவாழ் இந்தியர்கள் அமெரிக்க நிறுவனங்களில் உயர் பதவியில் நியமிக்கப்படுவது தொடர்கிறது. அந்த வரிசையில் தற்போது ராஜ் சுப்ரமணியமும் இடம்பெற்றுள் ளார். திருவனந்தபுரத்தில் பிறந்து ஐஐடி மும்பையில் பயின்றவர் ராஜ். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

3 மின் திட்டப் பணிகளில் இந்தியாவுடன் இலங்கை அரசு ஒப்பந்தம்: சீன நிறுவனத்துக்கு வழங்கிய பணிகள் ரத்து

படம்
கொழும்பு: இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள 3 தீவுகளில் மரபுசாரா மின்னுற்பத்தி திட்டங்கள் மேற்கொள்ள சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் அதனை ரத்து செய்த இலங்கை அரசு, அப்பணிகளை இந்திய நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் முன்னிலையில் கையெழுத் தாகின. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வெளிநாடுகளுடன் மருத்துவ சுற்றுலா ஒப்பந்தம் செய்ய தயார்: வங்கதேச சுதந்திர தின விழாவில் தமிழக அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு https://ift.tt/kHinGMb

படம்
சென்னை: வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளுடன் மருத்துவச் சுற்றுலா ஒப்பந்தங்கள் செய்துகொள்ள தமிழகம் தயாராக உள்ளது என தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் கூறினார். இந்தியா - வங்கதேசம் இடையே மொழி, கலாச்சாரம் என பல வகையிலும் நெருங்கியத் தொடர்பு உள்ளது. வங்கதேசத்தின் துணைத் தூதரகம் தென்னிந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கப்பட்டது. இதன் சார்பில் அந்நாட்டின் 51-வது சுதந்திர தின விழா முதன்முறையாக நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருவள்ளூர்: பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது https://ift.tt/1sOuBvt

படம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், வெங்கல்அருகே உள்ள பண்டிகாவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவர், திருநின்றவூர் அருகே மேலகொண்டையார் பகுதியில் உள்ள தன் குடும்பத்துக்கு சொந்தமான நிலத்தின் பட்டாவில்தன் தந்தையின் பெயருக்கு பதிலாக தன் பெயரை போடவிரும்பினார். ஆகவே, பட்டாபெயர் மாற்றம் செய்வதற்காகசமீபத்தில் வருவாய்த் துறையினரிடம் விண்ணப்பித்துள்ளார். அவ்விண்ணப்பத்தை பரிசீலனை செய்து, மேல் நடவடிக்கைக்கு அனுப்புவதற்காக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என, மேலகொண்டையார் கிராம நிர்வாக அலுவலர் சர்வேஸ்வரி, வாசுதேவனிடம் தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கல்யாண் சிங், நடிகர் விக்டர் பானர்ஜி உட்பட 74 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கினார் குடியரசு தலைவர் https://ift.tt/yCswLz9

படம்
புதுடெல்லி: பாஜக முன்னாள் தலைவர் கல்யாண் சிங், நடிகர் விக்டர் பானர்ஜி உள்ளிட்ட 74 பிரபலங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று பத்ம விருதுகளை வழங்கினார். நாட்டின் மிக உயரிய பத்ம விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படுகின்றன. பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடகாவில் இருந்து பக்தருடன் 600 கி.மீ. தூரம் ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் செல்ல பிராணி https://ift.tt/h1iOw0E

படம்
பெங்களூரு: கர்நாடகாவில் பக்தர் ஒருவருடன்அவரது செல்ல நாயும் ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலத்துக்கு 600கி.மீ. தூரம் நடந்து சென்று வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் வசித்து வருபவர் அடஹள்ளி சங்கரய்யா மடபதி(50). இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் உள்ள மல்லிகார்ஜுன் கோயிலுக்கு நடந்து சென்று வழிபாடு செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுக‌ளுக்கு முன்பு சங்கரய்யா மடபதி தனது வருடாந்திர யாத்திரைக்கு புறப்பட்டபோது, ​​​​அவரது செல்ல நாய் அவருடன் நடந்து சென்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

யுபிஏ ஆட்சியில் வாராக் கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்கவில்லை: நிர்மலா சீதாராமன் https://ift.tt/ibF2sjP

படம்
புதுடெல்லி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) ஆட்சியின்போது வங்கிகளின் வாராக் கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்கவேயில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார். மக்களவையில் திமுக தலைவர் டி.ஆர். பாலு எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலமாக அளித்த பதிலில் நிதி அமைச்சர் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள கோயிலில் உகாதி பண்டிகையன்று ஏழுமலையானை வழிபடும் முஸ்லிம்கள் https://ift.tt/Tk0S7ZX

படம்
கடப்பா: இரண்டாம் நூற்றாண்டில் ரோமானிய பயணி டாலமி என்பவர் திருப்பதியை அடுத்துள்ள ஊருக்குவந்தார். அவர் இந்த ஊருக்கு ‘கரிபே-கரிகே’ என பெயர் சூட்டினார். இதுவே மருவி ‘கடப்பா’ வாக மாறியதாகக் கூறப்படுகிறது. இந்த ஊரில் இருக்கும் லட்சுமி பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ‘தேவுண்ணி கடப்பா’ என்றபகுதியில் கோயில் அமைந்துள்ளது. தேவுண்ணி கடப்பா என்றால் கடவுளின் வாசற்படி என்று பொருளாகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடகா | ஹிஜாப் அணிந்த தேர்வு பார்வையாளர் சஸ்பெண்ட்: 100+ மாணவிகள் எஸ்எஸ்எல்சி தேர்வு புறக்கணிப்பு https://ift.tt/Q8REF24

படம்
பெங்களூரு: கர்நாடகாவில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு பணியின் போது ஹிஜாப் அணிந்திருந்ததாக பார் வையாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். கர்நாடகாவில் ஹிஜாப் தடைக்கு பிறகு, நேற்று எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. எட்டு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்நிலையில் நேற்று ஷிமோகாவில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுந்த வந்த முஸ்லிம் மாணவிகளை, ஹிஜாபை அகற்றுமாறு பள்ளி நிர்வாகம் வலியு றுத்தியது. இதனை ஏற்று பெரும் பாலான மாணவிகள் ஹிஜாபை அகற்றிய நிலையில் 8 மாணவிகள் தேர்வை புறக்கணித்து விட்டு வீடுகளுக்கு திரும்பினர். இதே போல பாகல்கோட்டை, பீஜாப்பூர், சிக்கமகளூரு, கோலார், உடுப்பிஉள்ளிட்ட இடங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் ஹிஜாப்அணிய அனுமதி மறுத்ததால் எஸ்எஸ்எல்சி தேர்வை புறக்கணித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு https://ift.tt/ZsAVTzn

படம்
புதுடெல்லி: பெட்ரோல் விலை உயர்வு குறித்துவிவாதிக்க அனுமதி மறுத்ததால்எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதனால் மாநிலங் களவை ஒத்திவைக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக்கூடாது, பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தொழிற்சங்கங்கள், நேற்றுகாலை 6 மணி முதல் மார்ச் 30-ம் தேதி காலை 6 மணி வரை (திங்கள், செவ்வாய்) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்திய தயாரிப்புகளுக்கான தேவை அதிகரிப்பு: பிரதமர் மோடி பெருமிதம் https://ift.tt/D4V9tfI

படம்
புதுடெல்லி: இந்திய தயாரிப்புகளுக்கான தேவை உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித் துள்ளார். ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில், வானொலியில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மக்களுடன் உரையாடி வருகிறார். நேற்று இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியா கடந்த வாரத்தில் 400 பில்லியன் டாலர் (30 லட்சம் கோடி ரூபாய்) ஏற்றுமதி இலக்கை எட்டியிருக்கிறது. ஒரு காலத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 200 பில்லியன் டாலருக்குள்ளாகவே இருந்தது. தற்போது ஏற்றுமதி 400 பில்லியன் டாலரை எட்டி சாதனைப் படைத்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான தேவை உலகெங்கிலும் அதிகரித் திருக்கிறது என்பதையும் தேசத்தின் விநியோகச் சங்கிலி பலமடைந்து வருகிறது என்பதையும் இது உணர்த்துகிறது. இந்த சாதனைக்கு, நமது விவசாயிகள், நெசவாளர்கள், சிறு குறு தொழில்முனைவோர்கள் ஆகியோரின் கடின உழைப்புதான் காராணம். அவர்களால்தான் உள்ளூர் தயாரிப்புகள் இப்போது உலக அளவில் செல்கின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu...

தொடங்கியது 2 நாள் பொது வேலைநிறுத்தம்: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பேருந்து சேவை பாதிப்பு https://ift.tt/oslWX1O

படம்
புதுடெல்லி: மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் நடத்தும் இரண்டு நாள் பொது வேலைநிறுத்தம் இன்று தொடங்கியது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும், மத்திய அரசு அலுவலகங்களில் 8.75 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் இன்றும், நாளையும் (மார்ச் 28, 29) நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதில் மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அகில இந்திய அமைப்புகள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா https://ift.tt/60QN3dA

படம்
புதுடெல்லி: தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணையை இந்திய ராணுவம் நேற்று வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(டிஆர்டிஓ) நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் நடுத்தர ரக ஏவுகணை ஒடிசா மாநிலம் பலாசோரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்திலிருந்து காலை 10.30 மணி அளவில்சோதனை முறையில் ஏவப்பட்டது. இது திட்டமிட்டபடி வான் பகுதியில் தொலைதூரத்தில் இருந்த இலக்கை நேரடியாக தாக்கி அழித்தது” என கூறப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை ஏற்கெனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவ்வப்போது, சோதித்துப் பார்ப்பது வழக்கமான செயல்தான் என்றும் டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்தனர். - பிடிஐ from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜக தொண்டர்களை தாக்கிய வழக்கு: திக்விஜய் சிங் உட்பட 6 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை https://ift.tt/TzlVLex

படம்
இந்தூர்: பாஜக தொண்டர்களை தாக்கிய வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் உட்பட 6 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஜூலை 17-ம் தேதி மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியில் ஓட்டல் ஒன்றின் திறப்பு விழாவுக்கு திக்விஜய் சிங் சென்றார். அவருக்கு எதிராக பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர்கள் கருப்பு கொடி காட்டினர். அப்போது பாஜக தொண்டர்களுக்கும் காங் கிரஸாருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் நீதிபதி முகேஷ் நாத் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், முன்னாள் எம்.பி. பிரேம்சந்த் குட்டு உட்பட 6 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் தலா ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். பின்னர் குற்றவாளிகள் 6 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதுகுறித்து திக்விஜய் சிங் கூறும்போது, "முதல் தகவல் அறிக்கையில் எனது பெயர் கிடையாது. அரசியல் அழுத்தம் காரணமாக எனது பெயர் சேர்க் கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்...

எஸ்எஸ்எல்சி தேர்வு தொடக்கம் - ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை: கர்நாடக அரசு https://ift.tt/RJ3P0Bj

படம்
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்துவர மாநில அரசு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று எஸ்எஸ்எல்சி தேர்வு தொடங்க உள்ளது. இதையடுத்து மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதுவதற்கு அனுமதி கிடையாது என்று கர்நாடக அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார். நீதிமன்றம் உறுதி அவர் மேலும் கூறியதாவது: எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுகள் நாளை (இன்று) தொடங்கவுள்ளன. எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு எழுத வருபவர் களும் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும். ஹிஜாப் அணிந்து வந்து தேர்வு எழுத தடை விதித்து கர்நாடக மாநில பள்ளி கல்வித்துறை நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதை நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோவா முதல்வராக இன்று பிரமோத் சாவந்த் பதவியேற்பு https://ift.tt/inLgDNB

படம்
பனாஜி: கோவாவின் 40 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆளும் பாஜக 20 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 11, சுயேச்சைகள் 3, ஆம் ஆத்மி 2, மகாராஷ்டிரவாதி கோமந்தக் 2, கோவா பார்வர்டு 1, புரட்சிகர கோன்ஸ் கட்சி ஓரிடத்தில் வெற்றி பெற்றன. ஆட்சியமைக்க 21 எம்எல்ஏக் களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜகவுக்கு ஒரு எம்எல்ஏவின் ஆதரவு தேவைப் பட்டது. இந்த சூழலில் 3 சுயேச் சைகள், 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ஆகியவை பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து கடந்த 21-ம் தேதி நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தற் போதைய முதல்வர் பிரமோத் சாவந்த், மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அன்றைய தினம் ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளையை சந்தித்த சாவந்த் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் 25 எம்எல்ஏக்களின் பட்டியலையும் அளித்தார். இந்நிலையில், கோவா தலைநகர் பனாஜியில் அமைந்துள்ள ஷியாம பிரசாத் முகர்ஜி மைதானத்தில் இன்று காலை 11 மணிக்கு புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்க உ...

திருப்பதி அருகே பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து பத்திரிகையாளர் உட்பட 8 பேர் உயிரிழப்பு https://ift.tt/pYmqCDL

படம்
அனந்தபூர்: திருப்பதி அருகே நிச்சயதார்த்தத்துக்கு சென்றவர்களின் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பத்திரிகையாளர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்மாவரத்தைச் சேர்ந்தவர்கள், திருச்சானூரில் நடக்கவிருந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் மாலை தனியார் பேருந்தில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். மணமகனின் தந்தை, உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பேருந்தில் இருந்தனர். இரவு 11 மணி அளவில் திருப்பதி - பீலேர் சாலையில் சென்று கொண்டிருந்த போது பாகராபேட்டை மலைப்பகுதியில் உள்ள ஒரு திருப்பத்தில் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. பேருந்தில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத்திய அரசை கண்டித்து இன்று முதல் நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் 2 நாள் பொது வேலைநிறுத்தம்: வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கும் https://ift.tt/KbAhDla

படம்
சென்னை: மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்றும், நாளையும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. இதில் வங்கி ஊழியர்களும் பங்கேற்கின்றனர். வார இறுதியில் 2 நாட்கள் விடுமுறை வருவதால் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்க வாய்ப்புள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களில் 8.75 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் இன்றும், நாளையும் (மார்ச் 28, 29) நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதில் மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அகில இந்திய அமைப்புகள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருப்பத்தூரில் வியாபாரியை கத்தியால் குத்திவிட்டு பிடிக்க சென்ற போலீஸாரை மிரட்டிய இளைஞர் கைது https://ift.tt/BbuvXLf

படம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சீதளி வடகரையைச் சேர்ந்தவர் யாசின் முகமது (44). அண்ணா சிலை அருகே இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் இரவு அக்னி பஜாரில் உள்ள சாலையோரக் கடையில் சாப்பிட்டார். மதுபோதையில் அங்கு வந்த ரியாஸ்கான் (22) அப்பகுதியில் ரகளையில் ஈடுபட்டார். இதை யாசின் முகமது தட்டிக் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ரியாஸ்கான், யாசின் முகமதுவை கத்தியால் குத்தினார். காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்து கொடுக்க கமிஷன் ஆம்பூரில் சிக்கிய கும்பலிடம் 23 ஏடிஎம் கார்டுகள், ரூ.2 லட்சம் பறிமுதல்: சென்னை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு https://ift.tt/LkH52xK

படம்
ஆம்பூரில் ஏடிஎம் மையங்களில் கமிஷனுக்கு பணம் எடுத்து கொடுக்கும் கும்பலை சேர்ந்த 4 பேர் சிக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து 23 ஏடிஎம் கார்டுகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் 4 பேரையும் விசாரணைக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை அழைத்துச் செல்லப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில் சந்தேகிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த இரண்டு பேர் தொடர்ந்து பணம் எடுத்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்த ரகசிய தகவலின்பேரில் திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சிலம்பரசன் தலைமையிலான குழுவினர் அவர்களைப் பிடித்து விசாரித்தனர். அவர்கள் ஆம்பூர் வாத்திமனை பகுதியைச் சேர்ந்த முகமது கான் (32) மற்றும் குபா மசூதி இரண்டாவது தெருவைச் சேர்ந்த சையத் மொய்தீன் (30) என்பது தெரியவந்தது. அவர்களை சோதனை செய்ததில் 23 ஏடிஎம் கார்டுகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் இருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil T...

போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் 2021-ல் நாடு முழுவதும் ரூ.1,898 கோடி அபராதம் வசூல் https://ift.tt/8lWrYhC

படம்
நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டில் ரூ.1898.73 கோடிஅபராதம் வசூல் செய்யப்பட் டுள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்நிதின் கட்கரி எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்ப தாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அணு ஆயுத போட்டியை தூண்டும் ரஷ்யா: தோஹா கூட்டத்தில் உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு

படம்
அணு ஆயுதங்களைப் பற்றிய ரஷ்யாவின் தற்பெருமை, ஆபத்தான ஆயுதப் போட்டியைத் தூண்டுகிறது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டி உள் ளார். கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஒரு மாதத்துக்கு மேலாகத் தொடர்கிறது. அதேநேரம் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைன் விவகாரம் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதுவரை எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடியுடன் பயணித்தவர்கள், சந்தித்தவர்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள இணையதளம் தொடக்கம் https://ift.tt/YvbM28x

படம்
பிரதமர் மோடியுடன் பயணித்தவர்கள், சந்தித்தவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மோடி ஸ்டோரி (modistory.in) என்ற அந்தஇணையதளத்தில், முன்னாள் பாட்மிண்டன் சாம்பியன் புல்லேலா கோபிசந்த், ஒலிம்பிக்போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ்சோப்ரா உள்ளிட்டோர் பிரதமர் மோடியுடனான தங்களது சந்திப்பு அனுபவங்கள் குறித்துதங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். மேலும், பிரதமர் மோடியின் ஏராளமான புகைப்படங்களும், அவரை சந்தித்தவர்களின் அனுபவங்களும் பகிரப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சத்தீஸ்கரில் அரசு மருத்துவமனை நிர்வாகம் அமரர் ஊர்தி வழங்காததால் மகளின் சடலத்தை 10 கி.மீ. தோளில் சுமந்து சென்ற தந்தை https://ift.tt/oiLDHSh

படம்
சத்தீஸ்கரில் அமரர் ஊர்தி வசதி செய்து தரப்படாததால் 7 வயது மகளின் சடலத்தை அவரது தந்தை10 கி.மீ. தொலைவுக்கு தோளில் சுமந்து சென்றுள்ளார். சத்தீஸ்கரின் சர்குஜா மாவட்டம், லகன்பூர் வட்டம், அம்டாலா கிராமத்தைச் சேர்ந்த ஏழை தொழிலாளிஈஸ்வர் தாஸ். அவர் கடும் காய்ச்சலால் அவதிப்பட்ட தனது மகளைலகன்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு நேற்று முன்தினம் காலை சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். மகளின் சடலத்தை வீட்டுக்குஎடுத்துச் செல்ல அமரர் ஊர்தி வசதிசெய்து தருமாறு அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் ஈஸ்வர்தாஸ் முறையிட்டார். ஆனால் மருத்துவமனை அலுவலர்கள் அலட்சியமாக இருந்ததால் மகளின் சடலத்தை தோளில் சுமந்தபடி 10 கி.மீ. தொலைவில் உள்ள தனது வீட்டுக்கு நடந்தே சென்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உத்தர பிரதேச மாநில அரசியலில் துறவியின் புரட்சி: 2-வது முறை முதல்வராக பதவி ஏற்ற ஆதித்யநாத்தின் நீளும் சாதனை பட்டியல் https://ift.tt/YPO50Kk

படம்
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிந்த உத்தராகண்டின் மலைப் பிரதேசத்தின் கர்வால் மாவட்டத்தின் பஞ்சூரில் ஜூன் 5, 1972-ல் பிறந்தவர் அஜய்சிங் பிஷ்த். வன இலாகா அதிகாரியான அனந்த்சிங் பிஷ்த் மற்றும்சாவித்ரி தேவியின் மகனாகப் பிறந்த அஜய்சிங் தற்போது யோகி ஆதித்யநாத் என்றழைக் கப்படுகிறார். தான் பிறந்த பவுரி மற்றும் ரிஷிகேஷில் பள்ளிப் படிப்பை முடித்தார். உத்தராகண்டின் பிரபலமான எச்.என்.பகுகுணா கர்வால் பல்கலை.யில் பிஎஸ்சி கணிதப் பிரிவில் பட்டம் பெற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

2 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் மீண்டும் இந்திய - சீன அமைச்சர்கள் பேச்சுவார்த்தை https://ift.tt/jHGq5r7

படம்
புதுடெல்லி: இரு நாட்டு எல்லை பிரச்சினைகள் குறித்து இந்திய - சீன வெளியுறவுத் துறை அமைச்சர்கள் 2 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல்,மே மாதங்களில் லடாக் எல்லைப் பகுதிகளில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். இதன்காரணமாக கடந்த 2020 மே 5-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆர்எஸ்எஸ் அமைப்பில் விரைவில் முஸ்லிம், கிறிஸ்தவர்களும் இணைவார்கள்: கர்நாடக சட்டப்பேரவையில் அமைச்சர் பேச்சு https://ift.tt/9ohz5eX

படம்
பெங்களூரு: ஆர்எஸ்எஸ் அமைப்பில் விரைவில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இணைவார்கள் என கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா சட்டப்பேரவையில் பேசியதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. க‌ர்நாடக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று பேசுகையில், "அரசியலில் ஒருவர் எந்த சித்தாந்தத்தை பின்பற்றினாலும் மற்ற‌வருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். ஆர்எஸ்எஸ், பாஜக,காங்கிரஸ் என‌ எந்த அமைப்பைசேர்ந்தவர்களாக இருந்தாலும் மற்ற அமைப்பினரை தரக்குறைவாக பேசக் கூடாது''என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆந்திராவில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பார்க்க பைக்கில் சென்ற 3 பேர் விபத்தில் உயிரிழப்பு https://ift.tt/SgkoJAf

படம்
திருப்பதி: பிரபல இயக்குநர் ராஜமவுலி இயக்கி, ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்து பெரும் எதிர்ப்பார்ப்பை உண்டாக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் நேற்று உலகமெங்கும் வெளியானது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரசிகர்களுக்கு நேற்று அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. இந்நிலையில் சித்தூர் மாவட்டம், குப்பம் அருகே, வி. கோட்டா - பேரணாம்பட்டு சாலையில் உள்ள பாப்பைய காரி பள்ளி எனும் இடத்தில் நேற்று முன்தினம் இரவு எதிரெதிரே வேகமாக வந்த இருமோட்டார் பைக்குகள் மோதிக் கொண்டன. இதில் யுகந்தர், கங்காதர், துர்கா ஆகிய 3 பேர் அதே இடத்தில் உயிரிந்தனர். மேலும் ஒருவர்படுகாயம் அடைந்தார். இவர்கள் குப்பத்தில் ஆர்.ஆர்.ஆர் திரைப் படத்தை காண சென்ற போது டிக்கெட் கிடைக்காததால் வீடு திரும்பும்போது, விபத்தில் சிக்கியுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உக்ரைனில் சிங்கம், ஓநாயை காப்பாற்றிய வீரர்

படம்
கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரால் மக்கள் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை, பதுங்கு குழிகள், கட்டிடங்களின் அடித்தளங்களில் தஞ்சம் அடைந் துள்ளனர். போரால் மக்கள் மட்டு மின்றி விலங்குகளும் பாதிக்கப் பட்டுள்ளன. உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு போதுமான உணவுகள் கிடைக்கவில்லை. இதனிடையே, தென்கிழக்கு உக்ரைனின் ஜிபோரிஜியாவில் உள்ள ஒரு உயிரியல் பூங்கா வில் சிம்பா என்ற சிங்கம் பராமரிக்கப்பட்டு வந்தது. போர் காரணமாக சிங்கத்தை ருமேனியாவுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. அதேபோல் அகேலா என்று பெயரிடப்பட்ட ஓநாயையும் கொண்டு செல்லும் ஏற்பாடுகளை விலங்குகள் உரிமை குழு மேற்கொண்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.பி.யில் மீண்டும் முதல்வரானார் யோகி ஆதித்யநாத்: 2 துணை முதல்வர்கள் உட்பட 52 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு https://ift.tt/fWckbpI

படம்
புதுடெல்லி: லக்னோவில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் உத்தர பிரதேசத்தின் முதல்வராக யோகி ஆதித்ய நாத் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 2 துணை முதல்வர்கள் உட்பட 52 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். உத்தர பிரதேசத்தின் 403 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆளும் பாஜக கூட்டணி 273 இடங்களை கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து லக்னோவின் அடல் பிஹாரி வாஜ்பாய் எகானா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று பிரம்மாண்ட பதவி ஏற்பு விழா நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம்: சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/ez18UQW

படம்
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் ராம்புராட் பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் பாதுஷேக் என்பவர் கடந்த திங்கட்கிழமை இரவு கொல்லப்பட்டார். இதையடுத்து, ஏற்பட்ட கலவரத்தில் போக்டுய் என்ற கிராமத்தில் வீடுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் 3 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாநிலங்களவையில் கதறி அழுத ரூபா கங்குலி https://ift.tt/mRx45SU

படம்
மேற்குவங்க கொலை தொடர்பாக மாநிலங்களவையில் நேற்று பாஜக எம்.பி.யும் நடிகையுமான ரூபா கங்குலி பேசினார். அவர் பேசும்போது ‘‘மேற்குவங்கத்தில் மக்கள் கொத்து கொத்தாக கொலை செய்யப்படுவது சாதாரணமாகி விட்டது. வாழ முடியாத மாநிலமாக மேற்குவங்கம் மாறிவிட்டது. அச்சம் காரணமாக மக்கள் வெளியேறுகிறார்கள். மக்கள் பேசவே முடியாத நிலை உள்ளது. மக்களைக் கொல்லும் அரசு வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. குற்றவாளிகளை மாநில அரசு பாதுகாக்கிறது. மேற்குவங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். நாம் எல்லாரும் மனிதர்கள். கல்மனம் கொண்ட அரசியலை நாம் நடத்தவில்லை’’ என்றார். உணர்ச்சிபூர்வமாகப் பேசிய அவர் திடீரென கதறி அழுதார். இது அவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.பி. முதல்வராக இன்று பதவியேற்கிறார் யோகி: பிரதமர் நரேந்திர மோடி உட்பட 50 ஆயிரம் பேர் பங்கேற்பு https://ift.tt/mJSlFh7

படம்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் முதல்வர்யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு இன்று பதவியேற்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட 50 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். உத்தர பிரதேசத்தின் 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக கூட்டணி 273 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உக்ரைன் மீதான ரஷ்ய போர் தொடர்பாக நேட்டோ நாடுகளின் தலைவர்கள் ஆலோசனை

படம்
பிரஸல்ஸ்: உக்ரைன் மீதான ரஷ்ய போர் தொடர்பாக நேட்டோ நாடுகளின் தலைவர்கள், பிரஸல்ஸில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர். ரஷ்யா, உக்ரைன் இடையே நேற்று 29-வது நாளாக போர் நீடித்தது. உக்ரைன் தலைநகர் கீவ், மேரிபோல் உள்ளிட்ட நகரங்கள் மீதுரஷ்ய ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஐபிசி, சிஆர்பிசி சட்டங்களில் திருத்தம் செய்கிறது மத்திய அரசு: மாநில அரசுகளிடம் ஆலோசனை கேட்பு https://ift.tt/Smv47ac

படம்
புதுடெல்லி: இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்வதற்கான நடைமுறையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா நேற்று எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

படுக்கையறை, சமையலறை, கழிவறை வசதிகளுடன் உலகின் மிகப் பெரிய 22 அடி உயர ஹம்மர் கார்

படம்
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஷேக் ஹமத் பின் ஹம்தான் அல் நஹ்யான் வைத்திருக்கும் ஹம்மர் கார் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ராட்சத கார் போல் தோற்றமளிக்கும் இந்த ஹம்மர் காரின் உயரம் 22 அடி, நீளம் 46 அடி, அகலம் 20 அடி ஆகும். இந்தக் கார் ஹம்மர் ஹெச் 1 எக்ஸ் 3 என்று அழைக்கப்படுகிறது. வழக்கமான ஹெச் 1 மாடல் ஹம்மர் காரின் அளவைவிட மூன்று மடங்கு அதிகம் என்பதால் ‘எக்ஸ் 3’ என்று சேர்க்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்