இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விமான துறை பாதுகாப்பாக உள்ளது: விமான போக்குவரத்து இயக்குநரகம் உறுதி https://ift.tt/xSZKBVp

படம்
புதுடெல்லி: இந்திய விமானத் துறை முற்றிலும் பாதுகாப்பாகவே உள்ளது என்றும் பயப்படத் தேவையில்லை என்றும் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் தலைவர் அருண் குமார் தெரிவித்துள்ளார். சமீபமாக, இந்திய விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதி வழியிலே தரையிறக்கப்படும் நிகழ்வு தொடர்ச்சியாகியுள்ளது. இது விமானப் பயணங்களின் பாதுகாப்பு குறித்து மக்களிடையே கூடுதல் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய விமானத் துறை பாதுகாப்பாக உள்ளது என்றும் அனைத்து பாதுகாப்பு விதிகளும் முறையாக பின்பற்றப்படுவதாகவும் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் தலைவர் அருண் குமார் தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த புகாரில் ஆம்பூர் பொறியியல் கல்லூரி மாணவர் கைது https://ift.tt/23GBEmO

படம்
ஆம்பூர்: தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த புகாரில் ஆம்பூரைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லை மசூதி தெருவைச் சேர்ந்தவர் மீர் அனாஸ் அலி (22). இவர், ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரளாவில் குரங்கு அம்மைக்கு ஒருவர் உயிரிழப்பு: ஆந்திரா, கர்நாடகாவில் தலா ஒருவருக்கு சிகிச்சை https://ift.tt/j6aKJX0

படம்
திருவனந்தபுரம்: உலகம் முழுவதும் 75 நாடுகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்புஏற்பட்டுள்ளது. குரங்கு அம்மையானது ஆர்த்தோபாக்ஸ் வைரஸ்குடும்பத்தைச் சேர்ந்தது. ஒருவகையில் இது 1980-களில் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பெரியம்மை நோயை ஏற்படுத்தும் ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் உடன் இணைந்த பண்புகளைக் கொண்ட தாகும். இந்நிலையில், குரங்கு அம்மை நோய்க்கு இதுவரை கேரளாவில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப் பட்டிருந்தது. கேரளாவில் இதுவரை குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவருமே வெளிநாட்டில் இருந்துஇந்தியாவுக்குத் திரும்பியவர் கள்தான். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேற்கு வங்கத்தில் ரூ.48 லட்சத்துடன் பிடிபட்ட ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேர் கைது https://ift.tt/GwaRn7t

படம்
ஹவுரா: மேற்கு வங்கத்தின் ஹவுரா மாவட்டத்தில் ரூ.48 லட்சம் பணத்துடன் பிடிபட்ட ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்சப், நமன் விசால் கொங்காரி ஆகிய மூன்று பேரும் , மேற்குவங்கத்தில் உள்ள ஹவுராவுக்கு காரில் சென்றனர். காரில் அதிகளவு பணம் எடுத்துச் செல்லப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, ராணிஹாதி என்ற இடத்தில் போலீஸார் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தினர்.அப்போது ஜார்க்கண்ட் எம்எல்ஏ.,க்கள் வந்த வாகனத்தில் ரூ.48 லட்சம்பணம் இருந்தது. இவ்வளவு பணம்எதற்காக கொண்டு செல்லப்படுகிறது என்ற கேள்விக்கு, எம்.எல்.ஏ.க்கள் அளித்த பதில் திருப்தி அளிக்கவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை: திருவேற்காட்டில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை https://ift.tt/bQjx2qK

படம்
பூந்தமல்லி: திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு- மாதிராவேடு சாலை பகுதியில் தனியார் செவிலியர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி கட்டடத்தின் கீழ் தளத்தில் கல்லூரியும், மேல் தளத்தில் விடுதியும் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 2-ம் ஆண்டு பயின்று வந்த மாணவி ஒருவர் நேற்று முன்தினம் வகுப்பு முடிந்த பிறகு வழக்கம் போல் மதிய உணவுக்காக விடுதிக்கு வந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத் உட்பட 6 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: சேலத்தில் இளைஞர் கைது https://ift.tt/p4857Xj

படம்
புதுடெல்லி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை கண்டறிய 6 மாநிலங்களில் தேசியப்புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். பிஹாரில் செயல்பட்ட தீவிரவாத குழுவினர், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு பாட்னாவில் ஆயுத பயிற்சி வழங்கி உள்ளனர். இந்தஆயுத பயிற்சியில் பங்கேற்றவர்களை கண்டறிய தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் நாடு முழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சமூக ஊடக முகப்பு புகைப்படமாக தேசிய கொடி: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அழைப்பு https://ift.tt/MV6kb5P

படம்
புதுடெல்லி: நாட்டின் 75-வது சுதந்திர தின நிறைவையொட்டி ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் சமூக ஊடக முகப்பு புகைப்படமாக தேசிய கொடியை பதிவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை, ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி வானொலியில் உரையாற்றி வருகிறார். அதன்படி, 91-வது ‘மனதின்குரல்' நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு நல்ல பலன் - அமைச்சர் அமித் ஷா பெருமிதம் https://ift.tt/6kOawS1

படம்
சண்டிகர் : ‘போதைப் பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு’ பற்றிய 2 நாள் கருத்தரங்கை சண்டிகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: கடந்த 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமர் ஆனபோது, போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் கொள்கையை மத்திய அரசு பின்பற்றியது. போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை விரைவாகவும், சரியான திசையிலும் மேற்கொள்ளப்படுகிறது. இது நல்ல பலன் அளிக்கத் தொடங்கியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆளுநர் தமிழிசையுடன் இஸ்ரோ விஞ்ஞானி ஆலோசனை https://ift.tt/G7HbV0P

படம்
புதுச்சேரி : பெங்களூரு இந்திய விண்வெளி ஆராய்ச்சி (இஸ்ரோ) மையத்தின் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை நேற்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 75-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களையொட்டி இஸ்ரோ நிறுவனம் மாணவர்கள் உருவாக்கிய 75 சிறு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இருக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாட்டில் மதத்தின் பெயரால் சிலர் பிரிவினையை தூண்டுகின்றனர் - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் குற்றச்சாட்டு https://ift.tt/fLXFJsB

படம்
புதுடெல்லி : நாட்டில் மதத்தின் பெயரால் சிலர் பிரிவினையைத் தூண்டுகின்றனர் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் நேற்று சர்வமத தலைவர்களின் மாநாடு நடைபெற்றது. இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் உட்பட பல்வேறு மதங்களை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வங்கதேசத்தில் பஸ் மீது ரயில் மோதி 11 பேர் உயிரிழப்பு

படம்
சிட்டகாங் : வங்கதேசத்தில் பஸ் மீது ரயில் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். வங்கதேசத்தின் சிட்டகாங் மாவட்டம் மிர்ஷாராய் உபாசிலா பகுதியிலிருந்து நேற்று முன்தினம் மாணவர்கள் மற்றும் பயிற்சி மையத்தின் ஆசிரியர்களை மினி பஸ் ஒன்று ஏற்றிச் சென்றது. இந்தபஸ், டாக்கா நோக்கிச் செல்லும்போது வழியில் ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்றுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.5,200 கோடி மதிப்பில் பசுமை ஆற்றல் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் - சோலார் பேனல் தொடர்பான இணையதளமும் அறிமுகம் https://ift.tt/MaFeXir

படம்
புதுடெல்லி : மத்திய அரசின் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ரூ.5,200 கோடி மதிப்பிலான பசுமை ஆற்றல் திட்டங்களுக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். மேலும், மின் துறையின் செயல்பாடுகளையும் நிதி நிலைமையையும் மேம்படுத்தும் நோக்கில் ‘புதுப்பிக்கப்பட்ட விநியோக துறை திட்ட’த்தை அவர் தொடங்கி வைத்தார். இந்தத்திட்டத்தின் கீழ், மின் துறையை நவீனப்படுத்தவும், அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் 2025-26 நிதி ஆண்டு வரை ரூ.3 லட்சம் கோடி செலவிடப்பட உள்ளது. பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகான கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் மின்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை எடுத்துக்காட்டும் விதமாக ‘ஒளிமயமான இந்தியா, பிரகாசமான எதிர்காலம் @2047’ என்ற நிகழ்ச்சி ஜூலை 25-ல் தொடங்கியது. நேற்றோடு இந்த நிகழ்ச்சி முடிவடைந்தது. நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்று பிரதமர் மோடி காணொலி வாயிலாக பல்வேறு பசுமை ஆற்றல் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தம...

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவ இந்தியா உறுதியுடன் உள்ளது - அதிபர் ரணிலுக்கு குடியரசு தலைவர் கடிதம்

படம்
புதுடெல்லி : இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவ இந்தியா உறுதியுடன் உள்ளது என இலங்கை அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார். நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றதற்கு, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து கடிதம் அனுப்பியிருந்தார். அதில் இரு நாடுகள் இடையேயான சுமுக உறவு மேலும் வலுப்பட உங்கள் தலைமை புதிய உத்வேகம் அளிக்கிறது. உங்களுடன் இணைந்து செயல்பட ஆவலுடன் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து திரவுபதி முர்மு அனுப்பியுள்ள பதில் கடிதம்: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பஞ்சாப் மருத்துவமனை டீன் விவகாரம்: சுகாதார அமைச்சர் செயலுக்காக மன்னிப்புக் கேட்ட சக அமைச்சர் https://ift.tt/vhXjZAM

படம்
சண்டிகர்: அழுக்கான மருத்துவமனை படுக்கையில் டீனை படுக்கவைத்த பஞ்சாப் அமைச்சர் சேத்தன் சிங் ஜோரம்ஜா பதவி விலகக் கோரி எழுந்துள்ள சர்ச்சை, எதிர்கட்சிகளின் தாக்குதலைத் தொடர்ந்து அமைச்சரின் செயலுக்கு அமைச்சரவையின் மற்றொரு அமைச்சரான ஃபவுஜா சிங் சராரி மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அமைச்சர் ஃபவுஜா சிங் சராரி கூறுகையில், அமைச்சர்கள் மரியாதை செலுத்துவதற்கு தான் இருக்கிறார்கள், அதிகாரம் செலுத்துவதற்கு இல்லை. அரசியல் தலைவர்கள் அதிகாரிகள் மீது ஆதிக்கம் செலுத்தவோ, அழுத்தம் தரவோ கூடாது. அமைச்சர் சார்பில் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வங்கதேச தீவிரவாத குழுவைச் சேர்ந்த 12 பேர் அசாம் மாநிலத்தில் கைது https://ift.tt/q4QRGwt

படம்
குவாஹாட்டி : அன்சாருல் இஸ்லாம் என்ற பெயரில் வங்கதேச தீவிரவாதக் குழு அந்நாட்டில் இயங்கி வருகிறது. இந்தக் குழுவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் இந்தியாவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் அந்தக் குழுவைச் சேர்ந்த 12 பேரை (ஜிஹாதிகள்) கைது செய்ததாக குவாஹாட்டி போலீஸ் எஸ்.பி. அமிதாப் சின்ஹா நேற்று தெரிவித்தார். தேசிய அளவிலான ஒத்துழைப்புடன் இந்த தீவிரவாத தேடுதல் வேட்டை நடந்ததாக அசாம் முதல்வர் ஹிமந்தா விஸ்வ சர்மா தெரிவித்தார். கைது செய்யப்பட்ட முப்தி முஸ்தபா என்பவர், மோய்ராபரி போலீஸ் சரகத்துக்குள்பட்ட சோருசோலா கிராமத்தில் மதரஸா பள்ளி நடத்தி வந்துள்ளார். அங்கிருந்தபடி தீவிரவாத செயல்களில் அவர் ஈடுபட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் முஸ்தபாவின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அவமதிப்பு விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியது - எம்பிக்கள் உண்ணாவிரதம் நிறைவு https://ift.tt/TNXxcKP

படம்
புதுடெல்லி : குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அவமதித்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று முடங்கின. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குடியரசுத் தலைவரிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பி உள்ளார். மேற்குவங்கத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடந்த 27-ம் தேதி டெல்லியில் பேட்டியளித்தபோது, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குடியரசுத் தலைவருடன் அமைச்சர்கள் சந்திப்பு https://ift.tt/gnvtuEm

படம்
புதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அவரது மாளிகையில் நேற்று சந்தித்து பேசினார். குடியரசுத் தலைவர் அழைப்பின் பேரில் சந்தித்ததாக அவர் கூறியுள்ளார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்துப் பேசினார். குடியரசுத் தலைவர் அழைப்பின்பேரில் அவரை சந்தித்தாக இரானியும் குறிப்பிட்டுள்ளார். ஒரே நாளில் 2 மத்திய அமைச்சர்கள் அடுத்தடுத்து குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்துள்ளது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரசுத் துறை பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கும் திட்டம் எதுவும் இல்லை: மத்திய அரசு https://ift.tt/SVEbtZ5

படம்
புதுடெல்லி: “அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை” என்று விழுப்புரம் எம்.பி. ரவிக்குமாரின் கேள்விக்கு அளித்த பதிலில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவையில் தெரிவித்துள்ளார். இது குறித்து விழுப்புரம் மக்களவை தொகுதி எம்.பியான டி.ரவிகுமார் மக்களவையில் எழுப்பிய கேள்வியில், ''மாதவிடாய் சலுகைகள் மசோதா, 2018-இல் வழங்கப்பட்ட மாதவிடாய் விடுப்பு போன்ற விதிகளை அரசாங்கம் செயல்படுத்துகிறதா? தனியார் அலுவலகங்களில் இந்தக் கொள்கைகள் செயல்படுத்தப்படுவதை அரசாங்கம் சோதிக்கிறதா? from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குடியரசுத் தலைவர் குறித்து சர்ச்சை கருத்து: கடிதம் மூலம் மன்னிப்பு கோரினார் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி https://ift.tt/AmYjWlN

படம்
புது டெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, எழுத்துப்பூர்வமாக கடிதம் மூலம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். குடியரசுத் தலைவர் குறித்து அவர் தெரிவித்த சர்ச்சை கருத்தால் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் பாஜக எம்.பிக்கள் கண்டன குரல் எழுப்பினர். குறிப்பாக இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என தெரிவித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரளாவில் கனமழை நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன: மத்திய அரசு தகவல் https://ift.tt/TVibOgj

படம்
கேரளாவில் கனமழை நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் இணையமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த தகவலை தெரிவித்தார். இதுதொடர்பாக மேலும் பேசுகையில், 2001-2021 காலகட்டத்திற்கான தரவின்படி தென்மேற்கு பருவமழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) கேரளாவில் கனமழை பெய்வது அதிகரித்திருப்பதாகத் தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மதுரை | குடிப்பழக்கத்துக்கு அடிமையான மகனை கொலை செய்த பெற்றோர் https://ift.tt/B8kC4eS

படம்
மதுரை சொக்கலிங்க நகரைச் சேர்ந்தவர் நாக ராஜன்(56), இவரது மனைவி குருவம்மாள்(50). இவர் கள் வடைக்கடை வைத்திருந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் திருமணம் முடிந்து வடைக்கடையில் வேலை செய்கிறார். 2-வது மகன் மாரிச்செல்வம்( 26) குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் அவர் வீட்டி லிருந்து அடிக்கடி பணத்தைத் திருடி குடிப்பதும், தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரை தாக்கி துன்புறுத்தியும் வந்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

17+ வயதினர் இனி முன்கூட்டியே வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு https://ift.tt/wT7DvAi

படம்
புதுடெல்லி: 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் தற்போது முன்னதாகவே வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் தற்போது முன்னதாகவே வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க முடியும். முன்பு இருந்தது போல், 18 வயதை அடைபவர்கள் ஜனவரி முதல் தேதியை கணக்கில் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. இது தொடர்பாக, உரிய தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அனுப் சந்த்ரா பாண்டே ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நிதி மோசடி வழக்குகளில் கைது செய்ய அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது - உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் https://ift.tt/zWFURxu

படம்
புதுடெல்லி : நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சம்மன் அனுப்புதல் மற்றும் கைது செய்யும் அமலாக்கத்துறையின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் சம்மன், கைது, பறிமுதல் மற்றும் விசாரணை நடவடிக்கைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிஆர்பிஎப் எழுச்சி தினம் - வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து https://ift.tt/EuKZ2UP

படம்
புதுடெல்லி : மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎப்) எழுச்சி தினத்தை முன்னிட்டு அதன் வீரர்களுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கடந்த 1939-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி சிஆர்பி (கிரவுன் ரெப்ரசன்டேடிவ் போலீஸ்) என்ற பெயரில் தொடங்கப்பட்ட படையே, நாடு விடுதலைக்குப் பிறகு சிஆர்பிஎப் என மாற்றப்பட்டது. நாட்டின் மிகப்பெரிய மத்திய போலீஸ் படையாக உள்ள சிஆர்பிஎப் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு - கேரள மாநில பேராயரிடம் விசாரணை https://ift.tt/RXTbYGf

படம்
திருவனந்தபுரம் : மாணவர் சேர்க்கையில் அதிக அளவு பணம் பெறப்பட்டதாக எழுந்துள்ள புகாரில் அமலாக்கத்துறை அதிகாரிகள், கேரள பேராயர் தர்மராஜ ரசலத்திடம் விசாரணை நடத்தினர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் டாக்டர் சோமர்வெல் மெமோரியல் சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்நிலையில் இந்த மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையின்போது அதிக அளவில் பணம் பெறப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“நீங்கள் தான் மோடி ஜி, நீங்கள் தான் தினமும் டிவியில் வருவீர்கள்” - பிரதமரை சிரிக்க வைத்த 5 வயது சிறுமி https://ift.tt/3wn7vr1

படம்
புதுடெல்லி : பிரதமர் மோடியின் அலுவலகத்தில் அவருக்கும் ஐந்து வயது சிறுமிக்கும் இடையே நடந்த உரையாடல் கவனம் பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் தொகுதியின் பாஜக எம்பி அனில் ஃபிரோஜியாவின் குடும்பத்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு இப்போது இணையங்களில் வைரலாகி வருகிறது. காரணம், எம்பி அனில் ஃபிரோஜியாவின் 5 வயது மகள் அஹானா. பிரதமருக்கும் அஹானாவுக்கும் இடையே நடந்த வேடிக்கையான உரையாடலே சந்திப்பு பேசப்படுவதற்கு காரணம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேற்குவங்க ஆசிரியர் நியமன ஊழல் | நடிகை அர்பிதா முகர்ஜி வீட்டில் மீண்டும் ரெய்டு - ரூ.15 கோடி ரொக்கம் சிக்கியது https://ift.tt/mwEbT5G

படம்
கொல்கத்தா : மேற்குவங்க கல்வித் துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான குடியிருப்பு ஒன்றில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதில் 15 கோடி ரூபாய் ரொக்கமாக மீட்கப்பட்டுள்ளது. அதேபோல், தங்க நகைகள், தங்க கட்டிகளும் மீட்கப்பட்டுள்ளன. கொல்கத்தாவின் பெல்காரியா பகுதியில் உள்ள குடியிருப்பில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. அப்போது கைப்பற்றப்பட்ட பணத்தை வங்கி அதிகாரிகள் அந்த இடத்திலேயே நோட்டு எண்ணும் இயந்திரம் மூலம் பணத்தை எண்ணினர். மேலும், அலமாரியில் இருந்து சில குறிப்புகளையும் அமலாக்கத்துறை கைப்பற்றியதாக சொல்லப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரள மருத்துவக் கல்லூரி முறைகேடு - பிரிட்டன் செல்ல முயன்ற பேராயர் தடுத்து நிறுத்தம் https://ift.tt/fmjYs9v

படம்
திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் டாக்டர் சோமர்வெல் மெமோரியல் சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி காரகோணம் மருத்துவக் கல்லூரி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையின்போது அதிக அளவில் பணம் பெறப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கல்லூரியின் நிர்வாகியாகவும், தலைவராகவும் செயல்பட்டு வரும் பேராயர் ஏ.தர்மராஜ் ரசலம் நேற்று திருவனந்தபுரம் விமானநிலையத்திலிருந்து பிரிட்டன் செல்ல புறப்பட்டார். அப்போது அமலாக்கத் துறை கோரிக்கையின் பேரில் அவரை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர் பிரிட்டன் செல்லாமல் கல்லூரிக்குத் திரும்பினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீன எல்லையில் ரூ.15,500 கோடியில் புதிதாக சாலை https://ift.tt/xf5swzD

படம்
புதுடெல்லி : இந்திய எல்லைப் பகுதி கட்டமைப்பு தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் மாநிலங்களவையில் கூறியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா - சீனா எல்லையில் 2,088 கிமீ நீளத்துக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆன மொத்த செலவு ரூ.15,447 கோடி ஆகும். பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் ஆகிய இந்திய எல்லைப் பகுதிகளையும் உள்ளடக்கி கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தமாக 3,595 கிமீ நீளத்துக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆன செலவு ரூ.20,767 கோடி. பாகிஸ்தான் எல்லையில் 1,337 கி.மீ., மியான்மர் எல்லையில் 151 கி.மீ., வங்கதேச எல்லையில் 19 கி.மீ. நீளத்துக்கும் சாலை அமைக்கப்பட்டுள்ளது என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேற்குவங்க ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் அமைச்சரிடம் தீவிர விசாரணை https://ift.tt/urK3xQb

படம்
கொல்கத்தா : மேற்குவங்க ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக கடந்த 22-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், தலைநகர் கொல்கத்தாவில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது மாநில அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து ரூ.21 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, நடிகை அர்பிதா முகர்ஜி கடந்த 23-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இருவரையும் 10 நாட்கள் காவலில் விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விஷ சாராயம் குடித்த 28 பேர் உயிரிழப்பு - குஜராத்தில் மேலும் 30 பேர் கவலைக்கிடம் https://ift.tt/zKtVFIo

படம்
அகமதாபாத் : பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் விஷ சாராயம் குடித்து 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலங்களில் குஜராத்தும் ஒன்றாகும். இம்மாநிலத்தில் மது அருந்தவும் மது விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும் தடையை மீறி கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக அடிக்கடி புகார்கள் எழுகின்றன. இதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும் கூட கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க முடியவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேர்தல் ‘இலவச’ அறிவிப்பை தடுப்பது எப்படி? - வழிமுறைகளை ஆராய உச்ச நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/ik1soEj

படம்
புதுடெல்லி : தேர்தலின்போது இலவச திட்டங்கள் அறிவிப்பை தடுப்பது எப்படி என்பது தொடர்பான வழிமுறைகளை ஆராயுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும்போது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களை கவர்வதற்காகவும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவும் இலவசத் திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீர் கிரிக்கெட் சங்க நிதி முறைகேடு: பரூக் அப்துல்லா மீது குற்றப்பத்திரிகை https://ift.tt/bM56S7L

படம்
புதுடெல்லி : ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் நிதி முறைகேடாக எடுக்கப்பட்டு நிர்வாகிகளின் வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறையும் விசாரணையை தொடங்கியது. ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க தலைவர் பதவியை, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா (84) தவறாக பயன்படுத்தி சில நியமனங்களை செய்ததாக அமலாக்கத்துறை குற்றம் சுமத்தியது. இது தொடர்பாக பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை பல முறை விசாரணை நடத்தியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா - பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு https://ift.tt/8gQP3Vh

படம்
திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பங்கேற்புடன் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. செப்டம்பர் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. அக்டோபர் 5-ம் தேதி வரை நடைபெற உள்ள விழாவின்போது மாட வீதிகளில் காலையும், மாலையும் வாகன சேவை நடைபெறும். குறிப்பாக 27-ம் தேதி கொடியேற்றமும், அன்றிரவு பெரிய சேஷ வாகன சேவையும் நடைபெறும். 5-ம் நாளான அக்டோபர் 1-ம் தேதி 3-வது புரட்டாசி சனிக்கிழமை இரவு கருட சேவை நடைபெறும். இந்நிலையில் மாட வீதிகளின் பாதுகாப்பு குறித்து திருப்பதி நகர எஸ்பி பரமேஸ்வர் ரெட்டி, தேவஸ்தான தலைமை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர் ஆகியோர் தலைமையில் நேற்று ஆய்வு நடத்தப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“மக்களின் கண்களும் செவிகளும் பத்திரிகையாளர்களே” - தலைமை நீதிபதி என்வி ரமணா https://ift.tt/KTrjeQM

படம்
புதுடெல்லி : "ஜனநாயகத்தின் முதுகெலும்பாக சுதந்திர ஊடகங்கள் உள்ளன" என்று இந்திய தலைமை நீதிபதி என்வி ரமணா பேசியுள்ளார். டெல்லியில், ராஜஸ்தான் பத்திரிகையின் ஆசிரியர் ஸ்ரீ குலாப் சந்த் கோத்தாரி எழுதிய "கீதா விஜ்ஞான உபநிஷத்" என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று நடந்தது. இதில் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டு பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா ஊடகங்கள் குறித்து பேசினார். "ஜனநாயகத்தின் முதுகெலும்பாக சுதந்திர ஊடகங்கள் உள்ளன. பத்திரிகையாளர்களே மக்களின் கண்களாக, காதுகளாக அறியப்படுகிறார்கள். இந்தியாவில் நிலவும் சமூக சூழ்நிலையில் உண்மைகளை முன்வைப்பது என்பது ஓவ்வொரு ஊடக நிறுவனங்களின் கடமையாகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திரவுபதி முர்முவுக்கு சீன, இலங்கை அதிபர்கள் வாழ்த்து

படம்
புதுடெல்லி : இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக நேற்று பதவியேற்ற திரவுபதி முர்முவுக்கு ரஷ்ய, சீன, இலங்கை அதிபர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “இந்தியாவும் சீனாவும் ஒன்றுக்கொன்று முக்கியமான அண்டை நாடுகள். திரவுபதி முர்முவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். கருத்து வேறுபாடுகளை பேசி தீர்க்கவும் விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக பெங்களூருவில் இளைஞர் கைது https://ift.tt/5aBNInG

படம்
பெங்களூரு : பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூறியதாவது: அசாம் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட அக்தர் ஹுசைன் லஷ்கர் (23) பெங்களூருவில் உள்ள திலக் நகரில் கடந்த ஓராண்டாக வசித்து வந்தார். அங்கு உணவுப்பொருள் விநியோகம் செய்பவராக பணியாற்றி வந்த இவர் டெலிகிராம் ஆப் மூலம் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பினருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். விரைவில் அந்த அமைப்பினரை சந்திக்கவும் திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவின் சிறப்பு புலனாய்வு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு அக்தர் ஹுசைன் லஷ்கரை கைது செய்தனர். மேலும் அவரது அறையில் தங்கியிருந்த 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே திலக்நகர் போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, 5 பேரிடமும் விசாரணை நடத்தி வருவதை உறுதி செய்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குவைத்தில் இருந்து ஹைதராபாத் வந்தவருக்கு குரங்கு அம்மை அறிகுறி https://ift.tt/aKDNfbu

படம்
ஹைதராபாத் : கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குரங்கு அம்மை நோய் ஐரோப்பா, வட அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பரவியது. இந்நிலையில், கேரளாவில் இந்நோயால் இதுவரை 3 பேர் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே 4-வதாக தற்போது டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரும் அங்குள்ள லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

15-வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார் திரவுபதி முர்மு - பிரதமர் நரேந்திர மோடி, சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு https://ift.tt/TzKwub1

படம்
புதுடெல்லி : நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு (64) பதவியேற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி, மூத்த அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் விழாவில் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

லுடியன்ஸ் பங்களா... ரூ. 2.5 லட்சம் ஓய்வூதியம் - ஓய்வுக்கு பின் ராம்நாத் கோவிந்த் பெறும் சலுகைகள் https://ift.tt/TtRZylb

படம்
புதுடெல்லி : இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன், ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் முடிவுற்றது. குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிந்த பிறகு ராம்நாத் கோவிந்த் பெறவுள்ள சலுகைகள் தான் இந்த கட்டுரை. குடியரசுத் தலைவராக இருக்கும் ஒருவர் மாதம் 5 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார். அதுவே ஓய்வுபெற்ற பிறகு அவருக்கு, மாதம் ரூ.2.5 லட்சம் ஓய்வூதியம் கிடைக்கும். ஓய்வுபெற்ற குடியரசுத் தலைவர் வாழ்நாள் முழுவதும் இந்த தொகையை பெற முடியும். குடியரசுத் தலைவரின் ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியச் சட்டம், 1951 இன் படி, ஓய்வுபெற்ற குடியரசுத் தலைவர் இலவச மருத்துவ சிகிச்சைகள் பெறலாம். மேலும் இந்தியாவில் எந்தப் பகுதிக்கும் விமானம் அல்லது ரயில் உள்ளது எந்த போக்குவரத்தில் மிக உயர்ந்த வகுப்பில் பயணம் செய்ய உரிமை உண்டு. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராஜ்யசபா சீட், கவர்னர் பதவிக்கு 100 கோடி ரூபாய் - மோசடியில் ஈடுபட்ட நால்வரை கைது செய்த சிபிஐ https://ift.tt/zbTjyvk

படம்
புதுடெல்லி : 100 கோடி ரூபாய்க்கு ராஜ்யசபா சீட் மற்றும் கவர்னர் பதவி வாங்கி தருவதாக மோசடி செய்ய இருந்த கும்பலை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ கைது செய்துள்ளது. ராஜ்யசபா சீட், கவர்னர் பதவி போன்ற அரசாங்கத்தில் உயர் பதவிகளை பெற்றுவருவதாக கூறி, அவற்றுக்கு 100 கோடி ரூபாய் பெற முயன்ற நான்கு பேரை சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. பணம் கைமாறுவதற்கு சற்று முன்பு நான்கு பேரை கைது செய்துள்ளனர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த கர்மலகர் பிரேம்குமார் பண்ட்கர், கர்நாடகாவைச் சேர்ந்த ரவீந்திர வித்தல் நாயக் மற்றும் டெல்லியைச் சேர்ந்த மகேந்திர பால் அரோரா மற்றும் அபிஷேக் பூரா ஆகியோர் கைது செய்யப்பட்டவர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி முதல்வர் அரசு நிகழ்ச்சியை பாஜக மாற்றியதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு https://ift.tt/oDaSqZm

படம்
புதுடெல்லி: டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா மற்றும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் அசோலா பாட்டீ மைன்ஸ் என்ற இடத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் ‘வன மகோத்சவ’ விழாவை நேற்று தொடங்கி வைக்க திட்டமிட்டிருந்தனர். இதுகுறித்து டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் கூறியதாவது. வன மகோத்சவ விழா நடைபெறும் இடத்துக்கு டெல்லி போலீஸார் நேற்று முன்தினம் இரவு வந்தனர். அங்கு வன மகோத்சவ் நிகழ்ச்சிக்காக ஆம் ஆத்மி அரசு வைத்திருந்த பேனர்களை கிழித்து போட்டுவிட்டு பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்த பேனர்களை வைத்தனர். இச்சம்பவம் அரவிந்த் கேஜ்ரிவாலை கண்டு பிரதமர் மோடி பயப்படுவதை காட்டுகிறது. ஆத் ஆத்மி அரசை களங்கப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அற்ப குற்றச்சாட்டுகளை கூறி, நிதி மோசடி வழக்கில் டெல்லி மின்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கைது செயயப்பட்டார். தற்போது துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை கைது செய்ய சதி நடக்கிறது. முதல்வர் பங்கேற்கும் சிங்கப்பூர் நிகழ்ச்சியையும் முடக்கினர். இச்சம்பவத்தால் மரம் நடும் நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்பதை முதல்வர் கேஜ்ரி...

ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு: காங்கிரஸ் மூத்த தலைவர் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை https://ift.tt/0GCel41

படம்
புதுடெல்லி: தேர்தல் சீர்திருத்த நடைமுறை யின் ஒரு பகுதியாக, வாக்காளர் விவரத்துடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தை தேர்தல்ஆணையம் கொண்டு வந்தது.இதன் மூலம் போலி வாக்காளர்களையும் அகற்ற முடியும் எனமத்திய அரசு கூறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், இந்த சட்டம் குடிமக்களாக இல்லாதவர்களையும் ஓட்டுப் போட வழிவகுக்கும் என கூறுகின்றன. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில், இந்தசட்ட மசோதாவில் உள்ள குறைகள் குறித்து விவாதம் நடத்தாமல்,24 மணி நேரத்துக்குள் இருஅவைகளிலும் நிறைவேற்றப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜக ஆளும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை https://ift.tt/smLOVRU

படம்
புதுடெல்லி: பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் புபேந்திர யாதவ், கட்சியின் நல்லாட்சிப் பிரிவின் தலைவர் வினய் சஹஸ்ரபுத்தே ஆகியோரும் கலந்து கொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குடியரசுத் தலைவர் முர்முவுக்காக சந்தாலி புடவை, அதிரசம் https://ift.tt/zKwe1VW

படம்
புதுடெல்லி: குடியரசுத் தலைவர் முர்முவுக்காக ஒடிசாவில் இருந்து சந்தாலி புடவை, அதிரசம் ஆகியவற்றை உறவினர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். புதிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் கணவர் ஷியாம் சரண் முர்மு. இத்தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் பிறந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு மூத்த மகன் லஷ்மண் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து இளைய மகன் ஷிபு விபத்தில் காலமானார். கடந்த 2014-ல் கணவர் ஷியாம் சரண் முர்மு மாரடைப்பால் உயிரிழந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

3 காங்கிரஸ் தலைவர்கள் மன்னிப்பு கேட்க ஸ்மிருதி இரானி நோட்டீஸ் https://ift.tt/W3wLayZ

படம்
புதுடெல்லி: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஜோஷி இரானி (18). இவர் கோவாவில் நடத்தும் ஓட்டலில் உள்ள மதுபான விடுதிக்கு இறந்தவரின் பெயரில் உரிமம் பெறப்பட்டுள்ளதாகவும், இதனால் ஸ்மிருதி இரானியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் பவன் கேரா, ஜெய்ராம் ரமேஷ் மற்றும் நேட்டா டிசோஷா ஆகியோர் குற்றம் சாட்டியிருந்தனர். இதையடுத்து தன் மீதும், தனது மகள் மீதும் ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி அவதூறு ஏற்படுத்தியதாக அவர்களுக்கு ஸ்மிருதி இரானி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ‘‘மதுபான விடுதி நடத்த அல்லது எந்த தொழில் செய்யவோ ஜோஷி இரானி விண்ணப்பிக்கவில்லை. எங்களை களங்கப்படுத்தும் நோக்கில் தனிப்பட்ட தாக்குத லில் ஈடுபட்டுள்ளீர்கள். அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு இன்று பதவியேற்பு https://ift.tt/hHspwG9

படம்
புதுடெல்லி: நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு (64) இன்று பதவி ஏற்கிறார். கடந்த 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி: இந்தியாவில் பாதிப்பு 4 ஆக உயர்வு - மத்திய உயர்நிலைக் குழு ஆலோசனை https://ift.tt/5MqvxVz

படம்
புதுடெல்லி: கடந்த மே மாதம் குரங்கு அம்மைநோய் ஐரோப்பா, வட அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பரவியது. இந்தியாவில் கேரளாவில் இதுவரை 3 பேருக்கு குரங்கு அம்மைநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் 34 வயதுள்ள ஒருவருக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அவர் லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரிகளை புணே ஆய்வகத்தில்பரிசோதித்தபோது, குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இவர் வெளி நாட்டுபயணம் எதுவும் மேற் கொள்ளவில்லை என்று தெரிய வந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேதியின் சிறப்பு: தொடர்ச்சியாக ஜூலை 25-ல் பதவியேற்கும் 10-வது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு https://ift.tt/R6jq5vz

படம்
புது டெல்லி: இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக பதவி ஏற்க உள்ளார் திரவுபதி முர்மு. அவர் பதவி ஏற்க உள்ள ஜூலை 25-ம் (இன்று) தேதியான அதே தேதியில் இதற்கு முன்னர் குடியரசுத் தலைவராக பதவி வகித்த ஒன்பது பேர் பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர். அந்த வரிசையில் இப்போது பத்தாவது குடியரசுத் தலைவராக இணைகிறார் திரவுபதி முர்மு. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார் திரவுபதி முர்மு. 64 சதவீத வாக்குகளை இந்தத் தேர்தலில் பெற்றிருந்தார் அவர். அவரது வெற்றிக்கு பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் குடியரசுத் தலைவர், பழங்குடியினத்தை சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர், இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என அறியப்படுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பள்ளி ஆசிரியர் நியமனங்களில் முறைகேடு - மே.வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, நடிகை கைது https://ift.tt/euJVyAi

படம்
கொல்கத்தா : பள்ளி ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி (70), அவருக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டில் மேற்கு வங்க கல்வித் துறையில் 13,000 ஆசிரியர்கள், ஊழியர்களை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தப் பணி நியமனத்தில் சில ஆயிரம் பேர் முறைகேடாக நியமிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஏராளமானோர் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்