திருப்பூர் | சரக்கு வாகனம் மீது பைக் மோதி இளைஞர் உயிரிழப்பு https://ift.tt/oYbCJ6h
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம்சவுடாம்பிகை நகரை சேர்ந்தவர் பாலமுரளி. இவரது மகன் அமிர்தவாசன் (19), கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். காங்கயம் - திருப்பூர் சாலையில் நேற்று முன்தினம் இருசக்கரவாகனத்தில் அமிர்தவாசன் சென்றபோது, நீலக்காட்டுப்புதூர் பிரிவுஅருகே சாலையில் திரும்பியசரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திலேயே அமிர்தவாசன், உயிரிழந்தார். இதுகுறித்து காங்கயம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்